பின்பற்றுபவர்கள்

16 ஆகஸ்ட், 2006

சர்சைக்குறிய பதிவுகளுக்கு பின்னூட்டம் !

வலைப்பதிவுகளில் குழுக்கள் அதிகமாகிவிட்டதால் புழுக்கம் அதிகமாகிவிட்டது. யாரை எவ்வாறு கவிழ்ப்பது என்ற போட்டியில், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன. இதில் தமிழை தமிழிலேயே எழுதி வசைபாடுபவர்கள், சாதி சார்ந்த குழுக்கள், நமீத ரசிகர்மன்றம் இன்னும் எத்தனையோ அடக்கம்.

விவாதங்கள் ஆரோக்கியமானதாக செல்வதும், அறிவுப் பூர்வமாக இருப்பது அவசியம். சில வலைப்பதிவாளர்கள் எழுத்தில் எதிராளிகளே வியக்கும் வண்ணம் அழகாக சுவைபட எழுதுகிறார்கள். எதிராளிகளை தங்களின் நிலைப்பாடுகளினால் உள்ளுக்குள் பாராட்டினாலும் வெளிப்படைய பாராட்டமுடியாமல் பலர் தவிர்கின்றனர். எதிராளிகளின் கட்டுரைகளில் வைக்கப்படும் சில 'பஞ்ச்' நகைச்சுவையாகவோ அல்லது நச் என்றோ இருக்கும். கட்டுரை முழுவதிற்கும் நாம் எதிர்நிலையில் இருந்தாலும் சில 'பஞ்ச்' ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவோ, ரசிக்கக் கூடியதாகவோ இருக்கும்.

எதிர்நிலையில் எழுதுவர் என்பதால் நாம் அவர்களை பாராட்டாமல் இருந்துவிடுவதும் உண்டு. எதிராளி என்பதால் நாம் பாராட்டமுடியாமல் போவதற்குக் காரணம் நாம் ஒரு குழுவை சார்ந்து இருப்பதுதான். 'நம்ம ஆளுங்க இதுக்கு பின்னூட்டம் போட்ட என்ன நெனச்சிக்குவாங்களோ' என்ற ஒரு தவறான நினைப்புதான் தயக்கத்திற்குக் காரணம். குழுக்களில் உறுப்பினர்களுக்குள் அவ்வாறு நினைப்பதும் இயற்க்கை தான். இதையெல்லாம் மீறி நாம் எதிராளிகளை எவ்வாறு பாராட்டுவது ?

கவலையை விடுங்கள். உங்கள் எதிராளி எழுதும் கட்டுரையில் உங்களுக்கு பிடித்த சர்சையில் சிக்காத வரிகளை தனியே எடுத்துப் போடுங்கள். உதாரணத்திற்கு

இதே கட்டுரையில் மேலே கண்டதை எடுத்து இங்கே போட்டுக்காட்டுகிறேன், அதற்கான பின்னூட்டத்தை எப்படி எழுதுவது (ஒரு சாம்பிள்) என்று காட்டுகிறேன்

******************************************
//எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன //

கோவி.கண்ணன் அவர்களே ! எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் அமரரான தலைவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன் ! பாராட்டுக்கள் !!

பின்குறிப்பு : எனது இந்த பின்னூட்டம் மேற்கண்ட வரிகளுக்குதான் ... முழுக்கட்டுரைக்கான கருத்து அல்ல!

******************************************

இப்படி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டால் எதிராளி முதலில் உங்கள் பாராட்டும் குணத்திற்காக சந்தோசப்பட்டு இணக்கம் ஏற்படும். அதன்மூலம் நல்லதொரு புரிந்துணர்வு வளர வழிசெய்யும். அதே சமயத்தில் உங்கள் குழுவில் இருக்கும் மற்ற உறுப்பினர்களும் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறி உங்களுக்கு அவசர தனிமடலும் அனுப்பமாட்டார்கள். இதை சரியாக நாம் செய்யும் போது போலிப் பதிவர்கள் பக்கத்திற்குக் கூட சென்று நம்மால் பின்னூட்டம் இடமுடியும்

பின்குறிப்பு : வலைப்பதிவாளர்கள் நினைவு கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று, உங்கள் கட்டுரைக்கு யாராவது பின்னூட்டம் போட்டார்கள் என்றால் அவர்கள் உங்கள் முழுக்கட்டுரையையும் ஆதரிக்கிறார்கள் என்று தவறாக எண்ணி விடாதிர்கள். அது ஒரு தவறான புரிதல்.

எதிராளிகளாக இருந்தால் என்ன ? எதோ ஒரு நல்ல செயலுக்காக நிச்சயம் பாராட்டலாம் !

50 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன //

கோவி.கண்ணன் அவர்களே ! எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் அமரரான தலைவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ரசிக்கும்படி இல்லை! இது நகைச்சுவை விஷயமும் இல்லை!!

பின்குறிப்பு : எனது இந்த பின்னூட்டம் மேற்கண்ட வரிகளுக்குதான் ... முழுக்கட்டுரைக்கான கருத்து அல்ல!

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி.கண்ணன் அவர்களே ! எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் அமரரான தலைவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ரசிக்கும்படி இல்லை! இது நகைச்சுவை விஷயமும் இல்லை!!//
இன்னிக்கு முதல் போணி பரமபிதாவா ! வாழ்க வளர்க !
வி.க பதிவில் தான் தலைகாட்டுவீர்கள்.. எப்படியோ நம் பக்கமும் வந்து எட்டிப் பார்த்ததற்கு நான் தன்யன் ஆனேன் :))

பெயரில்லா சொன்னது…

//எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன //

கோவி.கண்ணன் அவர்களே! எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் அமரரான பெரியார் போன்ற தலைவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன்! பாராட்டுக்கள்!!

பின்குறிப்பு : எனது இந்த பின்னூட்டம் மேற்கண்ட வரிகளுக்குதான் ...

முழுக்கட்டுரைக்கான கருத்து அல்ல!

பெயரில்லா சொன்னது…

ஒரு பதிவோ அல்லது சொல்லவந்த கருத்தோ எப்படிங்க எல்லோருக்குமே பிடிச்சதா
இருக்க முடியும்?

ஒவ்வொருவருக்கும் அவுங்க சொந்தக் கருத்துன்னு ஒண்ணு ஒவ்வொரு விஷயத்தைப் பத்தியும்
இருக்கும்தானே?

முடிஞ்சா ரெண்டுவரி பாராட்டோ, கண்டனமோ சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
கருத்துச் சுதந்திரம் வேணுமில்லே?

பெயரில்லா சொன்னது…

கல்லரையான : கல்லறையான
நமீத : நமீதா (என்று நினைக்கிறேன்)
இயற்க்கை : இயற்கை

பெயரில்லா சொன்னது…

பிடித்திருந்தால் பிடித்திருந்தது என்று சொல்ல தயக்கம் ஏன்?பிடிக்காவிட்டால் பிடிக்கவில்லை என்று சொல்ல தயக்கம் ஏன்?

எதற்கு இதில் டிஸ்கி எல்லாம்?வெட்டு ஒண்ணு,துண்டு ரெண்டு.இவ்வளவுதான் விஷயம்.

யாரோ என்னவோ நினைத்தால் என்ன?எதற்கு பயப்பட வேண்டும்?

Take care of freedom and truth will take care of itself

நன்றி,

செல்வன்

பெயரில்லா சொன்னது…

அதுக்குத்தாங்க சுதந்திரம் பெற்றோம்
எப்படி வேணுமுன்னாலும் பேச யார வேணும்னாலும் பேச ஜல்லிஅடிக்க கண்டதை கதைக்க

பெயரில்லா சொன்னது…

GK,

என்னங்க டெக்னிக்கை எல்லாம் வெளியே சொல்லிக் கொடுக்கிறீங்க..

சரி நல்ல யோசனைதான்..

முயற்சிக்கிறேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி.கண்ணன் அவர்களே! எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் அமரரான பெரியார் போன்ற தலைவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன்! பாராட்டுக்கள்!!//

வி.க...!
வந்து படித்து கருத்துக் கூறியதற்கு பாராட்டுக்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு பதிவோ அல்லது சொல்லவந்த கருத்தோ எப்படிங்க எல்லோருக்குமே பிடிச்சதா
இருக்க முடியும்? //

துளசியக்க ... பின்னூட்டம் போடுவதை சொ.செ.சூ என்ற கருத்து வழுத்துவருகிறது. அதை தவிர்க்கலாம் என்று நினைத்துத்தான் எழுதினேன். ஒரு முழுப்பதிவு எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லவில்லை. எப்போதாவது நல்ல 'பஞ்ச்' சிக்குவதும் உண்டு அதைத் தான் சொன்னேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//செல்வன் said...
பிடித்திருந்தால் பிடித்திருந்தது என்று சொல்ல தயக்கம் ஏன்?பிடிக்காவிட்டால் பிடிக்கவில்லை என்று சொல்ல தயக்கம் ஏன்?
//
செல்வன் ... !

இருக்கு இருக்கு ! ஏன் அவனுக்கு பின்னூட்டம் போட்ட என்று போலிகளின் தொல்லைகள் .. !
இங்கு பயப்படவேண்டும் என்று சொல்லவில்லை. அதே சமயத்தில் கட்டுரையாளர்களும் முழுப்பதிவுக்கு ஆதராவானதாக எடுத்துக் கொள்கிறார்கள் .. அதைத் தான் குறிப்பிட்டேன் :))

கோவி.கண்ணன் சொன்னது…

// Sivabalan said...
GK,

என்னங்க டெக்னிக்கை எல்லாம் வெளியே சொல்லிக் கொடுக்கிறீங்க..

சரி நல்ல யோசனைதான்..

முயற்சிக்கிறேன்.. //
சிபா ... ! நான் பயன்படுத்தும் டெக்னிக் தான் நல்லா ஒர்க் அவுட் ஆகுது ! அதனால் தான்.. உங்களுக்கும் 'சிபா'ரிசு செய்தேன் !
:))

பெயரில்லா சொன்னது…

சைக்கிள் கேப்ல சிக்ஸர் அடிக்கிறதுன்னு சொல்லுவாங்கல்ல...ஹி..ஹி...அது உங்களுக்கு நல்லாவே வருது...அசத்துங்க...அசத்துங்க....

பெயரில்லா சொன்னது…

நமீதா ரசிகர்மன்றம் இன்னும் எத்தனையோ அடக்கம்.
/./

இந்த வரி
அருமை

சர்சைக்குறிய பதிவு::))))

பெயரில்லா சொன்னது…

//துளசியக்க ... பின்னூட்டம் போடுவதை சொ.செ.சூ என்ற .//

ஆஹா........... இப்படி ஒரு உ.கு. இருக்கோ?

அப்பப் படிச்சுட்டுப் பேசாம ஓசைப்படாமப் போறதுதான் நல்லது.
இப்பவே பல பதிவுகளுக்கு இப்படித்தான் நடக்குது.:-)))

பெயரில்லா சொன்னது…

ஏங்க சிங்கப்பூர் கோவி.கண்ணன், அவனவன் மூளையை கசக்கி, பிழிஞ்சு கவித, கட்டுரன்னு தேன்கூடு போட்டிக்கு அலைபாய்ஞ்சுகிட்டு இருக்கான்.. இங்க என்னடான்னா எப்படி பின்னூட்டம் போடறதுன்னு நீங்க கிளாஸ் எடுத்துக்கினு இருக்கீங்க :-)

***

இருந்தாலும் பின்னூட்டம் பற்றிய உங்க விளக்கம் மிகச்சரியானதே.. இதனால உங்க பதிவை நான் ஆதரிக்கறதா நினைச்சுக்காதீங்க :-)))

கோவி.கண்ணன் சொன்னது…

//At August 16, 2006 11:45 AM, சதயம் said…

சைக்கிள் கேப்ல சிக்ஸர் அடிக்கிறதுன்னு சொல்லுவாங்கல்ல...ஹி..ஹி...அது உங்களுக்கு நல்லாவே வருது...அசத்துங்க...அசத்துங்க....
//

சிக்ஸர் நிறையபேர் அடிக்கிறாங்க ! சிக்ஸர் அடிப்பதை எல்லைக் கோட்டுக்கு அருகில் நின்று லபக்க வேண்டும் ! நமக்குத் தேவை விக்கெட்டு ! நன்றி சதயம் !

கோவி.கண்ணன் சொன்னது…

மின்னுது மின்னல் said...
நமீதா ரசிகர்மன்றம் இன்னும் எத்தனையோ அடக்கம்.
/./

இந்த வரி
அருமை

சர்சைக்குறிய பதிவு::))))
//
மின்னுது மின்னல்,
சத்தம் போடாதிங்க ! நான் தான் அதன் தலைவர் ! :) :)

பெயரில்லா சொன்னது…

கோவி, எந்த ஒரு கருத்தையும் நாகரீகமாக எதிர்க்க முடியும். முடிந்த வரையில் அந்த வழியைப் பின்பற்ற வேண்டும். நான் அதைத்தான் செய்ய முயல்கிறேன்.

ஆனால் ஒன்று, தீவிர எதிர்ப்பாளர்களுக்கு மேற்குறிப்பிட்ட எதிர்பு முறை புரிவதில்லையோ என்று ஒரு ஐயம் சில நாட்களாக.

பெயரில்லா சொன்னது…

//உங்கள் கட்டுரைக்கு யாராவது பின்னூட்டம் போட்டார்கள் என்றால் அவர்கள் உங்கள் முழுக்கட்டுரையையும் ஆதரிக்கிறார்கள் என்று தவறாக எண்ணி விடாதிர்கள். அது ஒரு தவறான புரிதல். //

சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க!
அது சரி.. இந்தப் பின்னூட்டம் உங்களின் மொத்தப் பதிவுக்குமா..? இல்லை இந்த வரிகளுக்கு மட்டுமா எனக்குப் புரியவில்லை..!! :)))))

அன்புடன்...
சரவணன்.

பெயரில்லா சொன்னது…

//எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன //

கோவி.கண்ணன் அவர்களே ! எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் அமரரான தலைவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன் ! பாராட்டுக்கள் !!

பின்குறிப்பு : எனது இந்த பின்னூட்டம் மேற்கண்ட மேற்கண்ட வரிகளை தவிற முழு கட்டுரைக்கும் கருத்து :)

பெயரில்லா சொன்னது…

//எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன
கோவி.கண்ணன் அவர்களே ! எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் அமரரான தலைவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன் ! பாராட்டுக்கள் !!//

பின்குறிப்பு : எனது இந்த பின்னூட்டம் மேற்கண்ட மேற்கண்ட வரிகளை தவிற முழு கட்டுரைக்கும் கருத்து :)

இப்படித்தான் போன பின்னூட்டம் இருந்திருக்க மேண்டும் ஜஸ்ட் மிஸ் :))

கோவி.கண்ணன் சொன்னது…

// G.Ragavan said...
கோவி, எந்த ஒரு கருத்தையும் நாகரீகமாக எதிர்க்க முடியும். முடிந்த வரையில் அந்த வழியைப் பின்பற்ற வேண்டும். நான் அதைத்தான் செய்ய முயல்கிறேன்.

ஆனால் ஒன்று, தீவிர எதிர்ப்பாளர்களுக்கு மேற்குறிப்பிட்ட எதிர்பு முறை புரிவதில்லையோ என்று ஒரு ஐயம் சில நாட்களாக. //

ஜிரா ... !
இதில் என்ன கூத்து என்றால் நமக்கு வேண்டியவர்கள் என்று அவர்களாகவே தங்களை நினைத்துக் கொண்டு தனிமடலில் சிலர் அன்பாகவும் வேண்டுகோள் வைக்கின்றனர் 'அவனுக்கு பின்னூட்டம் போட்டு அவனை எல்லாம் வளர்த்துவிடுகிறீர்கள் வேண்டாம்' என்று :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//பின்குறிப்பு : எனது இந்த பின்னூட்டம் மேற்கண்ட மேற்கண்ட வரிகளை தவிற முழு கட்டுரைக்கும் கருத்து :)

இப்படித்தான் போன பின்னூட்டம் இருந்திருக்க மேண்டும் ஜஸ்ட் மிஸ் :)) //

மகி,
ஜஸ்ட் மிஸ்ஸா ?
நான் மிஸ்பண்ணுவதில்லை ... !உங்களுக்கு தொடர்ந்து பின்னூட்டமிடுவதிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் :))

கோவி.கண்ணன் சொன்னது…

// சோம்பேறி பையன் said...
ஏங்க சிங்கப்பூர் கோவி.கண்ணன், அவனவன் மூளையை கசக்கி, பிழிஞ்சு கவித, கட்டுரன்னு தேன்கூடு போட்டிக்கு அலைபாய்ஞ்சுகிட்டு இருக்கான்.. இங்க என்னடான்னா எப்படி பின்னூட்டம் போடறதுன்னு நீங்க கிளாஸ் எடுத்துக்கினு இருக்கீங்க :-)

***

இருந்தாலும் பின்னூட்டம் பற்றிய உங்க விளக்கம் மிகச்சரியானதே.. இதனால உங்க பதிவை நான் ஆதரிக்கறதா நினைச்சுக்காதீங்க :-)))
//

சோம்பேறிப் பையன் அவர்களே ! ... போட்டிக்கு ஏற்கனவே எழுதிப்போட்டு ஆகிவிட்டது. எல்லோரையும் இங்கு ஒன்றாக சந்திக்க வைக்க எடுத்த ஒரு சிறு முயற்ச்சி இது !

கோவி.கண்ணன் சொன்னது…

// உங்கள் நண்பன் said...
சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க!
அது சரி.. இந்தப் பின்னூட்டம் உங்களின் மொத்தப் பதிவுக்குமா..? இல்லை இந்த வரிகளுக்கு மட்டுமா எனக்குப் புரியவில்லை..!! :)))))

அன்புடன்...
சரவணன்.
//

சரா ... !
எனக்கு பின்னூட்டம் போடுவது சொ.செ.சூ எல்லாம் இல்லை... ! தாரளமாக மொத்தப் பதிவுக்கு கூடச் சொல்லலாம் :))

பெயரில்லா சொன்னது…

//மேற்கண்ட வரிகளை தவிற முழு கட்டுரைக்கும் கருத்து //

ஜிகே நல்லா படிச்சீங்களா என்னோட பின்னூட்டத்தை? :))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜிகே நல்லா படிச்சீங்களா என்னோட பின்னூட்டத்தை? :)) //

அதான் நச்சின்னு சொல்லியிருக்கிங்களே ... ! நான் முழுப் பதிவுக்கு தலையாட்டவா சொல்லியிருக்கிறேன் !

நடத்துங்க சாமி ! :) :)

பெயரில்லா சொன்னது…

என்ன ஆச்சி பதிவு எழுதுவதற்கு எதுவும் மேட்டர் கிடைக்க வில்லையா ?
இது போல் சமயங்களில்,
இது போல் நானும் காமடிப் பதிவுகள் எழுதியிருக்கிறேன். யாரும் சீரியசாக எடுத்துக் 'கொல்ல'வில்லை :)))

http://govikannan.blogspot.com/2006/05/1.html

http://govikannan.blogspot.com/2006/07/blog-post_22.html

இந்த பதிவுகளுக்கு சுமாரான பின்னூட்ட விளைச்சல் தான் :))

அனுப்பியவர்கோவி.கண்ணன் [GK]

பெயரில்லா சொன்னது…

// கோவி.கண்ணன் said...
// G.Ragavan said...
கோவி, எந்த ஒரு கருத்தையும் நாகரீகமாக எதிர்க்க முடியும். முடிந்த வரையில் அந்த வழியைப் பின்பற்ற வேண்டும். நான் அதைத்தான் செய்ய முயல்கிறேன்.

ஆனால் ஒன்று, தீவிர எதிர்ப்பாளர்களுக்கு மேற்குறிப்பிட்ட எதிர்பு முறை புரிவதில்லையோ என்று ஒரு ஐயம் சில நாட்களாக. //

ஜிரா ... !
இதில் என்ன கூத்து என்றால் நமக்கு வேண்டியவர்கள் என்று அவர்களாகவே தங்களை நினைத்துக் கொண்டு தனிமடலில் சிலர் அன்பாகவும் வேண்டுகோள் வைக்கின்றனர் 'அவனுக்கு பின்னூட்டம் போட்டு அவனை எல்லாம் வளர்த்துவிடுகிறீர்கள் வேண்டாம்' என்று :))) //

அதே அதே சரியாகப் பிடித்தீர்கள். மொத்தத்தில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை என்று மட்டும் புரிகிறது. :-))))))))))))

பெயரில்லா சொன்னது…

பின்னுறீங்க தல!
(பி.கு: இது முழு பதிவுக்குமான பின்னூட்டம் தான்)

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said... இந்த பதிவுகளுக்கு சுமாரான பின்னூட்ட விளைச்சல் தான் :))

அனுப்பியவர்கோவி.கண்ணன் [GK] //

செலக்டிவ் அம்னீசியாவை எல்லாம் ஞாபகப்படுத்தி 'படுத்தினால்' பதிவு எப்படி போடறதாம் ? :)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said... அதே அதே சரியாகப் பிடித்தீர்கள். மொத்தத்தில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை என்று மட்டும் புரிகிறது. :-)))))))))))) //

ஜிரா ... !
ஆமாம் ஆமாம் ! புரிந்துகொள்வதில்லை... ஆனால் புரியாமல் கொல்கிறார்கள் :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//RAAJA said...
பின்னுறீங்க தல!
(பி.கு: இது முழு பதிவுக்குமான பின்னூட்டம் தான்)
//

ராஜா சொல்லிப்புட்டா அது ராங்காப் போவதில்லை !
பதிவு என்றாலும், பின்னூட்டம் என்றாலும் லொள்ளு என் வேலைதான்
:)))

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன்,
//பின்குறிப்பு : எனது இந்த பின்னூட்டம் மேற்கண்ட வரிகளுக்குதான் ... முழுக்கட்டுரைக்கான கருத்து அல்ல!
//
இந்தப் பதிவை பொருத்தவரை, என்னுடைய ஆதரவு இதில் உள்ள எல்லா கருத்துக்களுக்கும் தான், நண்பரே :) நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் "குழு"ப் பிரச்சினை வலையுலகில் இருப்பதும் கண்கூடு !!!! சிக்காமல் இருப்பது நல்லது ;-)
என்றென்றிம் அன்புடன்
பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//nRenRum-anbudan.BALA said...
இந்தப் பதிவை பொருத்தவரை, என்னுடைய ஆதரவு இதில் உள்ள எல்லா கருத்துக்களுக்கும் தான், நண்பரே :) நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் "குழு"ப் பிரச்சினை வலையுலகில் இருப்பதும் கண்கூடு !!!! சிக்காமல் இருப்பது நல்லது ;-)
என்றென்றிம் அன்புடன்
பாலா
//

அன்புடன் பாலா அவர்களே !
உங்கள் வருகைக்கும் பாராட்டுதலும் நெகிழ்ச்சி ... குழுக்களில் சிக்காமல் இருந்தால் தான் சுயமாக எழுதமுடியும் என்றும் நம்புகிறேன் !

நன்றி

ரவி சொன்னது…

பின்னூட்டம் போட்டு போட்டு - குழு அரசியலை வெற்றி பெற ஒரு யோசனையோடு வந்திருக்கீங்க...

இப்போ தெரியுது...நீங்க இதுநாள் வரை இந்த மாதிரி குத்துமதிப்பாத்தான் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கீங்களா ?

ஹி ஹி

கோவி.கண்ணன் சொன்னது…

// செந்தழல் ரவி said...
பின்னூட்டம் போட்டு போட்டு - குழு அரசியலை வெற்றி பெற ஒரு யோசனையோடு வந்திருக்கீங்க...

இப்போ தெரியுது...நீங்க இதுநாள் வரை இந்த மாதிரி குத்துமதிப்பாத்தான் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கீங்களா ?

ஹி ஹி
//

ஆமாம் ... ரவி !

யாம் போட்ட பின்னூட்டம் போட்டு மகிழ்க பதிவர் உலகம் :))

ரவி சொன்னது…

பதிவின் ஒவ்வொரு வரியும் உள்குத்தாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது...

கோவி.கண்ணன் சொன்னது…

// செந்தழல் ரவி said...
பதிவின் ஒவ்வொரு வரியும் உள்குத்தாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது...
//
இது ரொம்ப ஈசி ... !
ஒரே ஒரு வரியில் ஒரு உ.கு போட்டுவிட்டு திரும்பிப் பார்க்கமல் வந்துடனும் ... அப்பறம் கேட்டால் நல்லா சமாளிக்கலாம் :))

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

கண்ணன்,

இந்த எதிராளிங்கற பதம்தான் எனக்கு புரியமாட்டேங்குது. அதாவது நான் எழுதுவதை எதிர்த்து பின்னூட்டம் இட்டால் அவர் எனக்கு எதிராளியா? ஆதரித்து பின்னூட்டம் இட்டால் நண்பனா?

எந்த கருத்துக்கும் மாற்று கருத்து இருக்கணும். அப்பத்தான் வாழ்க்கையே சுவாரசியமா இருக்கும்.

ஜிரா எழுதறத ஜயராமன் ஒத்துக்கக் கூடாது.. டோண்டு எழுதறத அவரோட போலி ஒத்துக்கக் கூடாது.. ம்யூஸ் எழுதறத செந்தழல் ரவி ஒத்துக்கக் கூடாது லிவிங் ஸ்மைல் எழுதறதயும் ரவி ஒத்துக்கக் கூடாது. நா எழுதறத தருமி ஒத்துக்கக் கூடாது, முத்து(தமிழினி) எழுதறத யாருமே ஒத்துக்கக் கூடாது:)

அப்பத்தான் தமிழ்மணமும் படிக்க சுவாரசியமா இருக்கும்..

இல்லன்னா போரடிச்சிருங்க..

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

கண்ணன்,

பின்னூட்டம் போடறவங்க பேர படிக்க முடியலையே.. ஒரே சுழி, சுழியா தெரியுது? ஒருவேளை என்னோட சிஸ்டத்துல ப்ராப்ளமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//tbr.joseph said...
கண்ணன்,

பின்னூட்டம் போடறவங்க பேர படிக்க முடியலையே.. ஒரே சுழி, சுழியா தெரியுது? ஒருவேளை என்னோட சிஸ்டத்துல ப்ராப்ளமா?
//

ஜோசப் ஐயா !

beta.blogger ஐ முயற்சித்தேன் அப்பறம் எல்லம் சுழியாகிவிட்டது...! என்ன செய்வது என்று தெரியவில்லை... உங்கள் கணனி செயல்பாட்டில் குறை இல்லை. புதிதாக பின்னூட்டம் போடுபவர்களின் பெயர் சரியாக வருகிறது.

இன்னிக்கு ஒரு பதிவு போட்டேன் ... டெம்ளேட் பிரச்சனையால் தமிழ்மணத்தில் ஏறவில்லை... ஆனால் தேன்கூட்டில் வந்தது... தேன்கூட்டையாரும் நாடுவதில்லை போலும்... அந்த இன்றைய பதிவுக்கு பின்னூட்டம் வரவே இல்லை :(

கோவி.கண்ணன் சொன்னது…

// tbr.joseph said...
கண்ணன்,

இந்த எதிராளிங்கற பதம்தான் எனக்கு புரியமாட்டேங்குது. அதாவது நான் எழுதுவதை எதிர்த்து பின்னூட்டம் இட்டால் அவர் எனக்கு எதிராளியா? ஆதரித்து பின்னூட்டம் இட்டால் நண்பனா?

எந்த கருத்துக்கும் மாற்று கருத்து இருக்கணும். அப்பத்தான் வாழ்க்கையே சுவாரசியமா இருக்கும்.

ஜிரா எழுதறத ஜயராமன் ஒத்துக்கக் கூடாது.. டோண்டு எழுதறத அவரோட போலி ஒத்துக்கக் கூடாது.. ம்யூஸ் எழுதறத செந்தழல் ரவி ஒத்துக்கக் கூடாது லிவிங் ஸ்மைல் எழுதறதயும் ரவி ஒத்துக்கக் கூடாது. நா எழுதறத தருமி ஒத்துக்கக் கூடாது, முத்து(தமிழினி) எழுதறத யாருமே ஒத்துக்கக் கூடாது:)

அப்பத்தான் தமிழ்மணமும் படிக்க சுவாரசியமா இருக்கும்..

இல்லன்னா போரடிச்சிருங்க..
//

ஜோசப் ஐயா ... மத்ததெல்லாம் தெரியும் ... உங்களுக்கும் தருமி ஐயாவுக்கு நடந்தது எதும் தெரியாது ... புதுத்தகவல் :)))

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதை தவறாக புரிந்து கொண்டு குழுக்கள் உருவானதோ தெரியவில்லை. :))

நல்ல விவாதங்கள் நடைபெருகின்றன ஆனால் ஆரோக்கியமான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை. இங்கே நடக்கின்ற பதிவர் மன்ற விவாதத்தில் தீர்ப்புகளே இல்லை. :((

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

இன்னிக்கு ஒரு பதிவு போட்டேன் ... டெம்ளேட் பிரச்சனையால் தமிழ்மணத்தில் ஏறவில்லை... ஆனால் தேன்கூட்டில் வந்தது... தேன்கூட்டையாரும் நாடுவதில்லை போலும்... அந்த இன்றைய பதிவுக்கு பின்னூட்டம் வரவே இல்லை :(//

அப்படியா? தேன்கூட்டை யார் பாக்கறா? என் ப்ளாகுலையும் லிங்க் வச்சிருக்கேன்னுதான் பேரு.. நானே அத யூஸ் பண்றதில்லை.

அதுசரி.. எனக்கு பின்னூட்டம் வருதா என்ன? அதுக்கெல்லாம் கவலைப் படறத விட்டு எவ்வளவோ காலமாயிருச்சி.. ஒங்களுக்காவது இரட்டை எண் பின்னூட்டம் வருதேன்.. என்னுடையத பாருங்க.. பத்தாவது நாள், இருபதாவது நாள்னு போஸ்ட்டர் ஒட்டறாப்பல இது பத்தாவது பின்னூட்டம் இருபதாவது பின்னூட்டம்னு பேனர் போடணும்போல:)

பயந்துராதீங்க.. சும்மா தமாஷ்..

Muthu சொன்னது…

உள்குத்து மேட் ஈஸி புக்கை படிச்சிட்டு சிவபெருமான் தலையிலேயே கை வைத்த பெரியய்யாவை கண்டிக்கிறேன் :))

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

உங்களுக்கும் தருமி ஐயாவுக்கு நடந்தது எதும் தெரியாது ... புதுத்தகவல்//

சும்மா பேச்சுக்கு சொன்னேங்க.. நீங்க வேற.. புதுசா ஏதாச்சும் ஆரம்பிச்சிரப் போகுது:(

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

நல்ல விவாதங்கள் நடைபெருகின்றன ஆனால் ஆரோக்கியமான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை. இங்கே நடக்கின்ற பதிவர் மன்ற விவாதத்தில் தீர்ப்புகளே இல்லை. :(( //

அதென்னவோ உண்மைதான் கண்ணன்.

குமரன் (Kumaran) சொன்னது…

நல்ல பதிவு கோவி.கண்ணன் ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

//Kumaran said...
நல்ல பதிவு கோவி.கண்ணன் ஐயா.
//
குமரன் ... !
உங்களின் பாராட்டு மொழிகளுக்கு
நன்றி ... !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்