அனைவரும் அர்சகராகலாம் என்ற திட்டத்தை கேள்விப்பட்ட நம்ம கைப்புள்ள, அண்ணன் பார்த்திக்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்ள சரியான இடம் கோவில்தான் என்று எப்படியோ அர்சகர் ஆகிவிட்டார். அறனிலைய துறை அதிகாரியான பார்த்தி ஒரு நாள் சாமி கும்பிட வருகிறார். உடம்பு முழுவதும் பட்டை அடித்துக் கொண்டு பக்திப் பழமாக இருக்கும் கைப்புள்ள அவரைப் பார்த்துவிடுகிறார்
தனக்குள்
கைப்பு : 'அடி ஆத்தி... இவனுக்கு பயந்துக்கிட்டுதான் இங்கிட்டு வந்தோம் ... இங்கிட்டும் வந்துப்புட்டானே ....
என்று தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டார்
பார்த்தி : சாமி ... இங்க பாருங்கோ ... இத எடுத்துட்டுப் போய் அர்சனைப் பண்ணி எடுத்துட்டுவாங்கோ
கைப்பு : ஆகட்டும் பா ... ஆகட்டும் ... வொடனே செஞ்சுடுவோம் ... அதுக்குத் தானே இருக்கோம்
பார்த்தி : இந்த குரல எங்கேயே கேட்ட மாதிரி இருக்கே ... சாமி கொஞ்சம் பாருங்க ...
கைப்பு : சாமி இன்னெக்கு மவுன விரதம்... பேசக் படாது ...
பார்த்தி : மவுன விரதம் ... வாயத்தானே மூடனும் ... நீங்க தலைய மூடியிருக்கிங்க ... சரி சாமி ... நீங்க பேச வேனாம் ... முகத்தையாவது இப்படி காட்டுங்க ...
கைப்பு : மண்ணிக்கனும் சாமி மண்ணிக்கனும் ... தலையில வவ்வா உச்சா போயிடுச்சி ...
பார்த்தி :ஹூம் ... அதான் இந்த நாத்தம் நாறுதா ? ... பராவியில்ல விடுங்க சாமி ... பால் வடியும் மொகத்தை கொஞ்சம் காட்டுவிங்கன்னு பார்த்தேன், சரி வவ்வா வடிச்ச தலையை யாவது காட்டுங்கள்
கைப்பு மனதுக்குள் ... விடமாட்டான் போலப்பு .... ஆகா மாட்டிக்கிட்டேனே என்று தலையில் மறைத்த துண்டை விலக்குகிறார்
கைப்பு : அப்பு அப்பு வேணாப்பு ... உனக்கு பயந்துக்கிட்டுதான் இங்க வந்து சேந்திருக்கேன் கெடுத்துடாதே ... ஒனக்கு என்ன வேணும் எடுத்துக்க ... தேங்கா ... பழம் ... பூ என்று உளர ஆரம்பிக்கிறார்
அவரை ஏற இறங்க பார்த்த பார்த்தி ...
பார்த்தி : ஓ ... எலி அம்மனமா இங்க வந்து ஒளிஞ்சிக்கிச்சா
கைப்பு : எலின்னாலும் ஞ்சொல்லு கிலின்னாலும் ஞ்சொல்லு விட்டுடுப்பா ... கையெடுத்து கும்புடுகிறார்
பார்த்தி : சரி விடுரேன் ... ஆனா இங்க என்ன பண்ணுற தெரிஞ்சாகனும் ?
கைப்பு : ம் .. பாத்தா தெரியலப்பா ... மணியடிச்சு பூஜை செய்றேன் ... பூஜை
பார்த்தி : பூஜை செய்யுறியா ... உனக்கு தேவாரம் எல்லாம் தெரியுமா ?
கைப்பு : அது தெரியாமல இங்க வந்துருக்கேன் ... இன்ட்ர்வுயூ பண்ணாங்கப்பு
பார்த்தி : ஒன்ன அவுங்க இன்டர்வுயூ பண்ணினாங்களா ?
கைப்பு : அட ஆமாப்பு, சாமிக்கு மணியடிக்கிற சோலி பண்ண ... எல்லாரும் போறாங்களே, என்னான்னு கேட்டா, தேவராம் தெரியனும் சொன்னாகப்பு ... ஆக நமக்கு தெரியாத தேவாரமான்னு கேட்டுபுட்டு ... போனேன்... எல்லாரையும் கேட்டுட்டு ... கோட்டவா உட்டுக்கிட்டே எங்கிட்டயும் கேட்டகப்பு ... நல்ல தெரியும்னு சொன்னதால தானப்பு இங்க அனுப்பிச்சாங்கெ
பார்த்தி கையெடுத்து கும்பிட்டு ...
பார்த்தி : கைப்புள்ள நீ அவ்வளவு பெரிய ஆளா, ஒனக்கு தேவாரம் தெரியுமா ?
கைப்பு : என்ன அப்புடி கேட்டுப்புட்ட ... சின்ன பசங்களுக்கு தெரிஞ்ச சின்ன விசயம் எனக்கு தெரியாதா... ஐஜியா இருந்தவர தெரியாம இருக்குமா ... வீரப்பன புடிச்சாருல்ல ... அவுர தெரியாதுன்ன எப்படிப்பு .... சின்னப்புள்ள தனமால்ல இருக்கு
பார்த்தி அதிர்ச்சி அடைந்து விடுகிறார்.
பார்த்தி : வேண்டாம்னு பார்த்தேன் ... இல்ல நீ மாட்டிக்கிட்ட
கோபமாகிய கைப்பு,
கைப்பு : சாமிய கும்புட்டமா, துன்னூற பூசிக்கிட்டமான்னு போவனும், இப்டி நோண்டப் படாது ...
பார்த்தி : நான் நோண்டாமல் வேர ஒங்கப்பனா வந்து ...
கைப்பு : ஏன்பா ... நீ யாரு ... நீ எதுக்கு நோண்டனும் ... கைப்புத் தேன் ... பைப்பு இல்லப்பா ... வேணாம் விட்டுடு
பார்த்தி : அறநிலைய அதிகாரி நான் கேட்காம வேற எந்த கேனயன் வந்து கேட்பான்
கைப்பு பயந்து மென்று முழுங்குகிறார்.
கைப்பு : அப்பா அப்பா தெரியாம சொல்லிட்டன்ப்பு ... தேவரம் சரியாத் தானப்பு சொன்னேனப்பு பார்த்தி : அடே மடயா ... தேவரங்கிறது ... பக்திப் பாட்டு ...
கைப்பு தெம்பாகிறார்
கைப்பு : பூ ... இவ்வளவு தானா .... பாடுறேன் கேட்டுக்க ..... 'கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை'
பார்த்தி : நிறுத்து ... இது தேவாரம்னு ஒனக்கு எந்த மடையன் சொன்னான்
கைப்பு : யாரு சொன்னா என்னப்பு ... சாமிபாட்டு ... நான்ந்தே பாடினேன் ...
பார்த்தி : சீர்காழி பாட்ட உம் பாட்டுன்னு சொல்றியா
கைப்பு : சீர்காழியோ ... டிம் எஸ்சோ இருந்தா என்னப்பா ... தேவர் படத்துல தானப்பா வந்துச்சி ... அப்ப தேவரம் இல்லையா ?
தலையில் அடித்துக் கொண்டே,
பார்த்தி : மடையா மடையான்னு திட்டியே ... நான் மடையான் ஆயிடுவன் போல இருக்கே... தேவரங்கிறது அப்பர் சாமி பாடினது.
பயந்தபடி ...
கைப்பு : அப்பு எனக்கு அப்பர் சாமியும் தெரியாது ... அப்பா சாமியையும் தெரியாது ... வயுத்துப் பொழப்புக்காக வந்துட்டேன் ... பொழப்புல மண்ணப் போட்டுடாதப்பு ... பொண்டாட்டி புள்ளெங்களெல்லாம் பட்டினியா கெடக்கும் ... பாவம் அப்பு விட்டுடு ... அவ்வ்வ்வ்
பார்த்தி : அடச்சீ நிறுத்து ... ஒன்ன மாதிரி மாங்க மடையனை அர்சகரா வெச்சிருந்தா, என் பொழப்பு தான் நாறிப் போய்டும்
கைப்பு : வேணாப்பு ... ஒன் சோளிய கெடுத்த பாவம் எனக்கு வேணாம் ... நீயே பாத்து ... நம்ம கைப்புள்ள கஸ்டப் படப்படாதுன்னு ...இங்கேயே ஓரமா ஏதோ ஒரு சோளி போட்டுக் குடு
பார்த்தி மனம் இறங்குகிறார்
பார்த்தி : ம் .... ஒனக்கு என்ன வேலை கொடுக்கிறது ... ஆங் ... அங்க யானை நிக்குது பார்
கைப்பு : யானைக்கு சோறு வடிச்சி போடனும் சொல்ற ... ம் விதியாரா வுட்டுச்சி ... செய்யிறேன் அப்பு செய்றேன்
பார்த்தி : யானைக்கு சோறு போட ஆளு இருக்கு ... நீ என்ன பண்ணுற இந்த லத்தி இருக்கு பாரு லத்தி அதை அள்ளிக் கொட்டுற ? என்னது ? லத்தி அதாவது யானை சாணி
கைப்பு : வேணாப்பு ... வேண்டாம் யானைக்கு சாணியள்ளிக் கொட்டுற சோலியெல்லாம் சரிப்பட்டு வராது ... கைப்புவ பாத்தா பாவமா இல்லையா ?
பார்த்தி : ஏற்கனவே வவ்வா உச்சாப் போயி ... கிட்ட வந்த நாத்தம் தாங்க முடியலை ... இந்த வேலைக்கு அனுப்பிச்ச ... யானையே ஒடினாலு ஓடிடும் ... வேற என்ன செய்யலாம் ...
யோசனை செய்து கொண்டிருக்கும் போது கோவில் மணி அடித்து ...
பார்த்தி : நினைச்சேன் ... மணி அடிக்குது ...
கைப்பு : பாத்திய பாத்தியா அந்த சாமிக்கே கைப்பு சாணி அள்ளுறது புடிக்கல
பார்த்தி : ஆமா ஆமா எனக்கும் புடிக்கல ... அதுனால கோவில் மணிய இனிமே நீ தான் அடிக்கிற ... புரிஞ்சுதா ?
கைப்பு : அடிக்கிறம்பா அடிக்கிறேன் ... நங்கு நங்குன்னு நச்சின்னு அடிக்க மாட்டேனா ?
பார்த்தி : அடிக்கலைன்னா ... அப்புறம் உன் மணியை கட் பண்ணிவிடுவேன்
கைப்பு அவசரமாக கையை எங்கோ வைத்து பொத்துகிறார்.
பார்த்தி : அடச்சே யாருக்கு வேணும் அது ... நான் சொன்னது M O N E Y உன் சம்பளத்தை
கைப்பு : உசிரு போயி ... உசிரு வந்துச்சி ஓ.. அந்த மணிய செல்லுறியாப்பு நீயீ
பார்த்தி சென்றவுடன் கைப்பு புலம்புகிறார்
கைப்பு : ஆகா ஆட்ட வெச்சுட்டான்டா... ஆட்ட வெச்சுட்டான் ... சின்ன மணியா அடிச்சு, அங்கனுக்குள்ளேயே நின்னு நாளு பொம்பள புள்ளெங்கள பாத்தோமா இருந்தோமன்னு இருந்த என்ன இப்படி பெரிய மணியா அடிக்க வெச்சுட்டானே ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
31 கருத்துகள்:
:-)))))))))))))))))))))))))))))))))
:-))))))))))))))))))))))))))))))))
:-))))))))))))))))))))))))))))))))
//குமரன் (Kumaran) said...
:-)))))))))))))))))))))))))))))))))
//
குமரன் நீங்கள் தான் இன்னிக்கு முதல் போனி ! :))
நானும் :)))))))))))
// கப்பி பய said...
நானும் :)))))))))))
//
வாங்க கப்பி :)))
கொவி.கண்ணன் சார்,
கலகிட்டீங்க..
:)))))))))))))))))))))))))
:-))))))))))))))))))))))))
:-}
:-]
))))))))))))))))))))))))))))
::::::::::::::::::::::::::::
))))))))))))))))))))))))))))
ஒவ்வொரு வரியும் சிரிப்புதான்!
, கோவியாரே!
நகைச்சுவை தூக்கல்.
பி.கு: இது கடைசியில் இருந்து மேலே 4வதுக்கு மட்டும் :-))
//sivabalan said...
கொவி.கண்ணன் சார்,
கலகிட்டீங்க..
//
சிபா ! நன்றி மீண்டும் வருக ! நல் ஆதரவு தருக :))
//நாமக்கல் சிபி @15516963 said...
:)))))))))))))))))))))))))
:-))))))))))))))))))))))))
:-}
:-]
//
சிபி விதவிதமாக சிரிப்பான் போட்டு இருக்கிங்க ... எனக்கு வெளங்கல :))
// SK said...
))))))))))))))))))))))))))))
::::::::::::::::::::::::::::
))))))))))))))))))))))))))))
ஒவ்வொரு வரியும் சிரிப்புதான்!
, கோவியாரே! //
இந்த காமடி எழுதி ஒரு இரண்டு மாசம் ஆகிவிட்டது. இம்சை வெளியாகி சக்கை போடு போடுவதால் ஒரு உற்சாகத்தில் வலையேற்றிவிட்டேன் :))
காமடி பதிவு எழுதுவதில் ஒரு கஷ்டமும் இருக்கிறது, கொஞ்சம் இடறினால் கிண்டல் ஏளனமாக தெரிந்துவிடும். கத்திமேல் நடப்பதுபோல் கஷ்டமான விசயம் காமடிப் பதிவு :))
//குறும்பன் said...
நகைச்சுவை தூக்கல்.
பி.கு: இது கடைசியில் இருந்து மேலே 4வதுக்கு மட்டும் :-)) //
மணியைத் தானே சொல்கிறீர்கள். எழுதிய பின் சேர்த்த பின் ஒட்டு அது ! :))
//சீர்காழி பாட்ட உம் பாட்டுன்னு சொல்றியா//
இனிய கோவி.கண்ணன்,
நகைச்சுவை நன்றாக இருந்தது. பாராட்டுகள்.
'கோடி மலைகளிலே கொடுக்கும் மலை' பாடலைப் பாடியவர் *மதுரை சோமு* அவர்கள்தானே, நீங்கள் *சீர்காழி* எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
தெய்வம் படத்தில் சீர்காழியவர்கள் டி.எம்.எஸ்ஸுடன் சேர்ந்து பாடியது, 'திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்'.
விளையாட்டிற்குதானே குறிப்பிட்டீர்கள்...சல்தா ஹை!
அன்புடன்
ஆசாத்
//விளையாட்டிற்குதானே குறிப்பிட்டீர்கள்...சல்தா ஹை!
அன்புடன்
ஆசாத் //
திரு ஆசாத் அவர்களே !உண்மையிலேயே அது சீர்காழியார் பாடிய பாடல் என்று தான் நினைத்திருந்தேன். உங்கள் தகவலுக்கும், நகைச்சுவையை பாராட்டியதற்கும் நன்றிகள்
நானும்:-))))))))))))))))))))))))))
நல்ல காமெடிப் பதிவு,
வரிக்கு வரி சிரிப்பு,
அது தானே கோவியின் சிறப்பு...
அன்புடன்...
சரவணன்.
//உங்கள் நண்பன் said...
நானும்:-))))))))))))))))))))))))))
நல்ல காமெடிப் பதிவு,
வரிக்கு வரி சிரிப்பு,
அது தானே கோவியின் சிறப்பு...
அன்புடன்...
சரவணன்.
//
சரா ... வருகைகும் பல்லைக் காட்டியதற்கும் நன்றி ! கோல்கேட் தானே உபயோகப்படுத்துகிறீர்கள் :)
//சரா ... //
ஆஹா! இது கூட நல்லாத் தான் இருக்கு,
//கோல்கேட் தானே உபயோகப்படுத்துகிறீர்கள்//
அதெப்படிங்க பல்லைப் பார்த்து பயன்படுத்தும் பேஸ்ட்-டை கண்டுபிடிக்கிறீங்க..!!!!!
அன்புடன்...
சரவணன்.
//உங்கள் நண்பன் said... அதெப்படிங்க பல்லைப் பார்த்து பயன்படுத்தும் பேஸ்ட்-டை கண்டுபிடிக்கிறீங்க..!!!!!
அன்புடன்...
சரவணன். //
சிம்பிள் .... ஊரில் மாடுகளின் பல்லை பார்த்து வயசு சொல்லுவாங்க.. ச்சே உங்களை அப்படி சொல்லவில்லை :)
நாய்கள் பற்றி பதிவெல்லாம் எழுதுகிறேன் அல்லவா ?
கோல்கேட் என்று சொன்னதற்கு மோப்ப சக்திதான் காரணம் :)
ஹய்யோ ஹைய்யோ
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
அய்யய்யோ :))
கோல்கேட்டை கண்டுபிடித்த கோ.க. வாழ்க..........
//மகேந்திரன்.பெ said...
ஹய்யோ ஹைய்யோ ...
//
மகி,
நான் 'அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகைக் கண்டேன்' என்ற பாட்டையா போட்டிருக்கிறேன் ? :))
//மகேந்திரன்.பெ said...
கோல்கேட்டை கண்டுபிடித்த கோ.க. வாழ்க..........
//
பில்கேட்சை கண்டுபிடிக்க முடியாது, ஒரு கோல்கேட்டையாவது ... :)
//ஊரில் மாடுகளின் பல்லை பார்த்து வயசு சொல்லுவாங்க.. ச்சே உங்களை அப்படி சொல்லவில்லை :)//
இருக்கட்டும்.. இருக்கடும்... ஒரு நாளைக்கு உங்களை முட்டாமல் விடமாட்டேன்...
கோல்கேட்டை கண்டுபிடித்ததால்
இன்று முதல் நீ " கோல்கேட்டை கண்டுபிடித்த கோவி" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்,
அன்புடன்...
சரவணன்.
//
உங்கள் நண்பன் said...
இருக்கட்டும்.. இருக்கடும்... ஒரு நாளைக்கு உங்களை முட்டாமல் விடமாட்டேன்...
எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்,
//
அலைகழிக்கப்படாமல் இருந்தால் சரிதான் :)
... ஏனுங்க சரா ...! சிவா தம்பி என்னிய 'நல்லா' பாத்துக்க சொல்லியிருக்காரா ?
என்னை மறந்ததேன் நெஞ்சமே இங்கு நான் அங்கு நீ......
//மகேந்திரன்.பெ said...
என்னை மறந்ததேன் நெஞ்சமே இங்கு நான் அங்கு நீ......
//
ஹாலோ ! ... யாரோ கேர்ள் பிரண்டுக்கு நீங்கள் போட்ட பின்னூட்டம் இங்கே வந்துவிட்டது ?
:)))
முகவரிகள் தொலைந்து விட்டால் ...:)
//முகவரிகள் தொலைந்து விட்டால் ...:) //
http://paarima.blogspot.com/2006/07/blog-post_31.html
:-))))))))
திரு SK அவர்களின் http://aaththigam.blogspot.com/2006/07/blog-post_31.html
என்ற பதிவில் ,
திரு.கோவி அவர்களுக்கு
"பின்னூட்டக்கவி" என்ற பட்டம் வழங்கப் பட்டுள்ளது, வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்,
இவண்,
பட்டம் வழங்குவோர் சங்கம்(ப.வ.ச)
அன்புடன்...
சரவணன்.
//10 நாளைக்கு விளையாட வருகிறேன் ... அப்பறம் வீட்டுக்கார மேடம் வந்துடுவாங்க //
ஹிம் எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமில்ல :)
//என்னோட பதிவில் பின்னூட்டம் கொட்டே கொட்டுன்னு கொட்டுது//
ஹிம் எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமில்ல :(
//
உங்கள் நண்பன் said...
திரு SK அவர்களின் http://aaththigam.blogspot.com/2006/07/blog-post_31.html
என்ற பதிவில் ,
//
செந்தழல் ரவி அளித்த
பின்னூட்ட நாயகர்
திரு இரா.ஜெகன் மோகன் அளித்த
வித்தக பதிவர்
//At July 28, 2006 10:58 PM, இரா.ஜெகன் மோகன் said…
வித்தகப் பதிவர் கஜினி கண்ணன் அவர்கள் வாழ்க! வாழ்க!
(வித்ததைப் பதிவர் அல்ல)
//
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_28.html
இப்ப உங்கள் நண்பன் வழங்கும்
பின்னூட்டக்கவி !
ஐயோ இந்தப் பட்டத்தையெல்லாம் வாங்கி வைக்க இடமில்லையே !
அன்பு பட்டம் வழங்குவோர் சங்கம்(ப.வ.ச) பட்டத்தை பகிர்ந்து கொடுங்கப்பா ... என்னிய சுத்தி சுத்தி அடிச்ச நா எங்கிட்டு போறது
கருத்துரையிடுக