பின்பற்றுபவர்கள்

18 ஜூலை, 2006

கருடா சவுக்கியமா ?


நல்ல பாம்புகள் என்றாலும்
நாக்கில் இருப்பது விசமல்லவா ?
நடராஜனின் கழுத்தை சுற்றிக் கொண்டு
நடமாடும் இந்த பாம்புகள்,
நஞ்சு மட்டுமா கக்குகின்றன கூடவே
நஞ்சை விடக் கொடும் விசமத்தையும் தான் !
நச்சுப் பாம்பை அடிக்கலாமா ? கூடாது !
நடராஜனிடம் இருக்கும் போது
நாடவேண்டாம் தெய்வ நிந்தனை !
நம்மைப் போலவே நடராஜனைத்தான் இந்த
நல்ல பாம்புகளும் நம்பியிருக்கின்றன !
நம்பினார் கெடுவதில்லை ! என்ற
நான்கு மறை தீர்ப்பு பொய்துவிடும் !
நஞ்சு தீண்டப்பட்ட நான் என்ன செய்யட்டும் ?
நல்லப் பாம்பை நமஸ்காரம் பண்ணட்டுமா ?
நஞ்சுண்ட நாதனை நாமும் பின்பற்றி
நல்லப் பாம்பிற்கும் நல்லதையே நினைப்போம், ஆனால்
நாளை நம்மை மீண்டும் கடித்தாலும் கடிக்கும், எனவே
நச்சுப் பல்லைப் பிடிங்கினால் போதும், மற்றதை
நடராஜன் பார்த்துக் கொல்வான் !

பிகு: பாம்புகள் எல்லாமே விசம் உள்ளது பாம்புகளை கொல்லவேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, புற்றில் 'சிவனே' என்று படுத்துறங்கும் பாம்புகளும் உண்டு, விஷ(ம)ம் அற்ற பாம்புகளும் உண்டு. அவைகளை நாம் போற்றலாம், கோவில் பாதுகாப்பில், கோவிலில் நாம் ஊற்றும் பாலை குடித்துவிட்டு, முட்டையும் கேட்கும் பாம்புகள், நாம் தெய்வத்தை கும்பிட வருவதை தெரிந்தும் சீறி கடித்தால் மட்டுமே இந்த உபாயம்.

29 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் சார்,

என்னமோ சொல்ல வரகிறீர்கள்..

ஆனால் என்னனுதான் எனக்கு புரியவில்லை..

பெயரில்லா சொன்னது…

//நடராஜன் பார்த்துக் கொல்வான் ! //

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// சிறில் Alex said...
//நடராஜன் பார்த்துக் கொல்வான் ! //

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.
//
உங்களுக்கு பாம்பு கண் :)))

கோவி.கண்ணன் சொன்னது…

// Sivabalan said...
கோவி.கண்ணன் சார்,

என்னமோ சொல்ல வரகிறீர்கள்..

ஆனால் என்னனுதான் எனக்கு புரியவில்லை..
//
ஜீவ காருண்யம் பற்றி சொல்கிறேன். பஜகோவிந்தம் படிப்பதிலிருந்து மாறிவருகிறேன். பூனையைப் பற்றி எழுதியிருந்தேன் பார்த்தீர்கள் தானே :)

பெயரில்லா சொன்னது…

நல்ல உள்குத்து.

சிவபாலன் இன்னுமா உங்களுக்கு புரியவில்லை. தில்லை ஆடுவர்களை பற்றி தான்>>>

கண்ணன், உங்களின் திண்ணை கவிதையை என் பக்கத்தில் இணைத்து உள்ளேன். தவறாக எண்ண மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்

பெயரில்லா சொன்னது…

நச்சுப் பல்லின்
அச்சுத் தீரப் பிடுங்கிட வேண்டும்
அதற்கு ஆவன செய்திடல் வேண்டும்.

அடுத்தவன் சொத்தை எடுத்தாலே
படுத்தவன் படுத்தவந்தான்
சிவன் சொத்தை விழுங்கியவன்?

நிச்சயம் நியாயம் பிறக்கும். நல்லது நடக்கும்.

தெய்வம் நிச்சயம் நின்று கொல்லும்.

சிதம்பரத்தவர்கள் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும். இதுதான் எனது கோரிக்கை.

பெயரில்லா சொன்னது…

பஜகோவிந்தம் படித்து இவ்வளவு நெருங்கிவந்த நீங்கள்
திருப்புகழையும் படித்து, அந்த நச்சுப்பல்லைப் பிடுங்கும் வேலையையும்
நடராஜனிடமே விட்டுவிடுங்கள்!
அவன் நிச்சயம்........... பார்க்காமலே கொல்வான்!

தெய்வம் நின்று கொல்லும்!

[எ.பி: நளை= நாளை]
எனக்கும் பாம்புக்கண் என்று சொல்ல வேண்டாம்!
:)

பெயரில்லா சொன்னது…

அய்யா

இப்பொழுதுதான் புரிந்தது...

பெரியோரின் வாக்கு இப்பொழுதுதான் புரிந்தர்து...

நன்றி...

கோவி.கண்ணன் சொன்னது…

//At July 19, 2006 2:58 AM, SK said…
அந்த நச்சுப்பல்லைப் பிடுங்கும் வேலையையும்
நடராஜனிடமே விட்டுவிடுங்கள்!
அவன் நிச்சயம்........... பார்க்காமலே கொல்வான்!//
பல்லைப் பிடுங்குவதை பரமனிடம் விட்டுவிடு என்கிறீர்கள்,
பரமன் பக்தர்கள் மூலம் தானே அடியார்க்கு அருளுகின்றான் :))

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
தெய்வம் நிச்சயம் நின்று கொல்லும்.

சிதம்பரத்தவர்கள் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும். இதுதான் எனது கோரிக்கை. //
ஊரவிட்டு ஒதுக்கிவைப்பது, கீழ்சாதிக்காரன் போன்ற கொடுமைகளை நம்மக்கள் அதிகமாகவே உணர்ந்துள்ளனர். நாமும் அந்த கொடுமைகளை மற்றவர்களுக்கு ஏற்படுத்தக் கூடவே கூடாது !

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...

கண்ணன், உங்களின் திண்ணை கவிதையை என் பக்கத்தில் இணைத்து உள்ளேன். தவறாக எண்ண மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் //
உங்கள் பக்கம், என்பக்கம் எந்த பக்கமும் இல்லை எல்லாம் நம்பக்கமே :))))

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
அய்யா

இப்பொழுதுதான் புரிந்தது...

//
அனைந்தும் அறிந்த 'சிவ' பாலன், இதை அறிந்து கொண்டதை நினைத்து வியக்கவில்லை :)))

பெயரில்லா சொன்னது…

//பரமன் பக்தர்கள் மூலம் தானே அடியார்க்கு அருளுகின்றான் :))//



தானே நேரே வந்து ஆட்கொல்லு[ள்ளு]ம் செயலும் உண்டு!
இது அது போன்ற நேரம் என நினக்கிறேன்!

பெயரில்லா சொன்னது…

படுத்தூறங்கும்: படுத்துறங்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//SK said...
தானே நேரே வந்து ஆட்கொல்லு[ள்ளு]ம் செயலும் உண்டு!
இது அது போன்ற நேரம் என நினக்கிறேன்! //

திருப்புகழ் பாடுபவர் சொன்னால்
மறுப்பவரும் உண்டோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//எழுத்துப் பிழை said...
படுத்தூறங்கும்: படுத்துறங்கும்
//
ஆமாங்க எழுத்துப் பிழை, நேற்று உறங்கும் முன் தட்டச்சு செய்தது தூக்கம் கொஞ்சம் 'து'வை இழுத்துக்கொண்டு போயிற்று...:))

பெயரில்லா சொன்னது…

யாரும்( யாவும்) இருக்கும் இடத்திலே இருந்தா சவுக்கியத்துக்கு என்ன குறைச்சல்?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
யாரும்( யாவும்) இருக்கும் இடத்திலே இருந்தா சவுக்கியத்துக்கு என்ன குறைச்சல்?
//
துளசியக்கா, அது
ஆதிசிவன் தலை அமர்ந்த ஆணவமா,
ஆவணம் அவர்களிடம் இருப்பதன் ஆணவமா,
ஆண்டவனுக்கே வெளிச்சம்

பெயரில்லா சொன்னது…

///
நச்சுப் பல்லைப் பிடிங்கினால் போதும், மற்றதை
நடராஜன் பார்த்துக் கொல்வான்
///
///
கோவி.கண்ணன் said...

தமிழ்மணத்தில் இரண்டுநாட்களாக விறுவிறுப்பான பதிவுகள் வரவில்லை
///

என்னப்பு விறுவிறுப்பே இல்லைன்னீக இங்க இம்புட்டு விறுவிறுப்பா ஒரு பதிவை போட்டிருக்கீக

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னப்பு விறுவிறுப்பே இல்லைன்னீக இங்க இம்புட்டு விறுவிறுப்பா ஒரு பதிவை போட்டிருக்கீக //
சிதம்பரத்திலிருந்து மகுடி ஊதும் சத்தம் கேட்டது அதுதான் இது... :))

பெயரில்லா சொன்னது…

என்னமோ நடக்குது உலகத்தில...பிலாகுக்கு ஆப்பு வைச்சிட்ட்டாங்களேப்பா ??

பெயரில்லா சொன்னது…

//உங்கள் பக்கம், என்பக்கம் எந்த பக்கமும் இல்லை எல்லாம் நம்பக்கமே :)))) //
ஆஹா,
எல்லாம் நம் பக்கமே!
:))))

பெயரில்லா சொன்னது…

என்னமோ நடக்குது உலகத்தில...பிலாகுக்கு ஆப்பு வைச்சிட்ட்டாங்களேப்பா ?? //

ரவி.. ஒங்க கவல உங்களுக்கு..

பெயரில்லா சொன்னது…

நச்சுப் பல்லைப் பிடிங்கினால் போதும், மற்றதை
நடராஜன் பார்த்துக் கொல்வான் ! //

சிறில் முந்தைய வாக்கியத்தையும் சேர்த்துப் படிக்கும்போது கொல்வான் என்ற வார்த்தை சரியா என்ற சந்தேகம்.

நச்சுப் பல்லை பிடுங்கிவிட்டால் மற்றதை நடராஜர் எதற்கு கொல்ல வேண்டும்?

ஆகவே அவர் மற்றதை பார்த்துக்கொள்வார்என்பதுதான் சரி என்று நினைக்கிறேன்..

என்ன, எழுத்துப்பிழை சார்?

பெயரில்லா சொன்னது…

// At July 19, 2006 9:04 AM, கோவி.கண்ணன் said…

//G.Ragavan said...
தெய்வம் நிச்சயம் நின்று கொல்லும்.

சிதம்பரத்தவர்கள் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும். இதுதான் எனது கோரிக்கை. //
ஊரவிட்டு ஒதுக்கிவைப்பது, கீழ்சாதிக்காரன் போன்ற கொடுமைகளை நம்மக்கள் அதிகமாகவே உணர்ந்துள்ளனர். நாமும் அந்த கொடுமைகளை மற்றவர்களுக்கு ஏற்படுத்தக் கூடவே கூடாது ! //


கோவி, ஒதுக்கி வைப்பது என்றால்...அவர்கள் முடிவை மாற்றிக் கொள்ளும் வரை. முடிவை மாற்றிக் கொண்டால் ஏற்றுக் கொள்ளலாமே. அவர்கள் செய்வது தவறு. அதைத் திருத்துவது எப்படித்தான்? அடுத்தவரை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களை அடுத்தவர் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இவர்களது நடவடிக்கையை எனக்குத் தெரிந்த சில பிராமண நண்பர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

// tbr.joseph said...
நச்சுப் பல்லை பிடுங்கிவிட்டால் மற்றதை நடராஜர் எதற்கு கொல்ல வேண்டும்?//

எஸ்கேவும் சொன்னார் ... நாம் நச்சுப்பல்லைப் பிடுங்கவேண்டாம்...

[sk said...நச்சுப்பல்லைப் பிடுங்கும் வேலையையும்
நடராஜனிடமே விட்டுவிடுங்கள்!]

நடராஜன் பார்க்காமலே கொல்வான் என்று.

எனக்கும் சரி என்று தேன்றியதால் நான் ஆமோதித்தேன்.

நீங்கள் சொல்வதும் சரிதான் :))

கோவி.கண்ணன் சொன்னது…

// G.Ragavan said...
இவர்களது நடவடிக்கையை எனக்குத் தெரிந்த சில பிராமண நண்பர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் உண்மை. //
திரு ராகவன் ....நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

//கோவி, ஒதுக்கி வைப்பது என்றால்...அவர்கள் முடிவை மாற்றிக் கொள்ளும் வரை. முடிவை மாற்றிக் கொண்டால் ஏற்றுக் கொள்ளலாமே. அவர்கள் செய்வது தவறு. அதைத் திருத்துவது எப்படித்தான்? அடுத்தவரை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களை அடுத்தவர் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?//

நீங்கள் சொன்னதன் அர்த்தம் இப்பொழுது புரிகிறது ... நன்றி :))

பெயரில்லா சொன்னது…

ஜோசப் சார்,
'நச்சுப்பல்லை பிடுங்கினால் போதும்' - இது நாம் செய்ய வேண்டியது. (அன்று கொல்வான்)

'நடராஜன் பார்த்துக் கொல்வான்' - இது கடவுள் செய்யவேண்டியது (நின்று கொல்வான்).

இப்படித்தான் கவிதைகளைப் போட்டுத் தாக்கி எப்படி வேண்டுமென்றாலும் 'தெளிவுரை' எழுதுகிறார்கள் போலும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிறில் Alex said...
ஜோசப் சார்,
'நச்சுப்பல்லை பிடுங்கினால் போதும்' - இது நாம் செய்ய வேண்டியது. (அன்று கொல்வான்)

'நடராஜன் பார்த்துக் கொல்வான்' - இது கடவுள் செய்யவேண்டியது (நின்று கொல்வான்).

//

அரசன் அன்று கொல்வான்.... தெய்வம் நின்று கொல்லும் ... சீறில் உங்கள் விளக்கமும் அருமை :)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்