பின்பற்றுபவர்கள்
9 ஜூலை, 2006
ஒரு தொடர் தேடல் ...!
கர்ணனுடன் பிறந்த
கவச குண்டலம் போல்
பிறப்புடன் எனக்கு கிடைத்த வரம்
ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன்.
என்ன தொலைத்தோம் ?
என்ற தொடர்ச்சியான
கேள்விகளில்
தூக்கத்தை தொலைத்தேன் !
தேடலின் சோர்வில்
சிறிது தூங்கினாலும்
கனவிலும் தொலைத்தின்
ஏக்கம் துறத்துயது !
தொலைந்தது எது என்றே
தெரியாமல் தொலைத்ததை
நினைத்து கவலைப்படுவதில்
ஞாயம் இல்லை என்று
உள்மனது சொல்வதை
பொருட்படுத்தாத,
ஆழ்ந்த சிந்தனையை,
ஒருநாள் பேருந்து பயணத்தின் போது
ஒரு தாயின் கையில் உள்ள
சின்ன குழந்தையின் முகத்தில்
என்னைப் பார்த்து பூத்த
'கள்ளமும்', 'கபடமும்' அற்ற
உள்ளச் சிரிப்பு கலைத்தது !
ஒரு வேளை அந்த குழந்தைக்கு
தெரிந்திருக்குமோ ?
நான் தொலைத்ததும்,
தேடுவதும் எது என்பது !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
13 கருத்துகள்:
தேடலை நிறுத்துங்கள்!
தேடியது கிடைக்கும்!
//நாமக்கல் சிபி @15516963 said...
தேடலை நிறுத்துங்கள்!
தேடியது கிடைக்கும்!
//
தேடியது அங்கேயே இருக்கிறது !
//என்ன தொலைத்தோம் ?
என்ற தொடர்ச்சியான
கேள்விகளில்
துக்கத்தை தொலைத்தேன் !//
துக்கத்தை தொலைத்துமா இன்னமும் துக்க படுகிறீர்...:-)
அது "தூக்கம்"னு தெரியும் சும்மா ஒரு இடி...
//நன்மனம் said...
துக்கத்தை தொலைத்துமா இன்னமும் துக்க படுகிறீர்...:-)
அது "தூக்கம்"னு தெரியும் சும்மா ஒரு இடி... //
நன்மனம் அவர்களே, துணைக் காலையும் சேர்த்தே தொலைத்துவிட்டேன் என்று நினைவுபடுத்தியதற்கு நன்றி. கண்டு கொண்டேன்
வாழ்வில் ஒவ்வொருவம் எதை தொலைத்தோம் என்று தேடுவதிலே நம் வாழ்வை தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம்.
ஒரு பொருள் அல்லது நம்பிக்கையின் அருமை தொலைத்தபோது தான் தெரிய வரும். இருக்கும்போது தெரியாது. எனவே, தொலைத்துவிட்டுப் பின் தேடுவது என்பது ஒரு சரியான அணுகுமுறை.
;-)
குழப்பவாதி
பச்சோந்தி
பல நேரங்களில் தேடியது கிட்டினாலும் அதை அறியாமல் நம் தேடலைத் தொடர்கிறோம் :)
//At 4:37 PM, Chameleon - பச்சோந்தி said…
ஒரு பொருள் அல்லது நம்பிக்கையின் அருமை தொலைத்தபோது தான் தெரிய வரும். இருக்கும்போது தெரியாது. எனவே, தொலைத்துவிட்டுப் பின் தேடுவது என்பது ஒரு சரியான அணுகுமுறை.
//
'கள்ளமும்', 'கபடமும்' அற்ற
உள்ளம் - இது தான் தேடுவதும் தொலைத்ததும் - இதை நேரிடையாக சொன்னால் உட்பொருள் உடைந்துவிடும்
குழப்பம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்
//நாகை சிவா said...
வாழ்வில் ஒவ்வொருவம் எதை தொலைத்தோம் என்று தேடுவதிலே நம் வாழ்வை தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம்.
//
எனக்கு தெளிவாக தெரிகிறது எல்லோரும் எதைத் தொலைத்தோம் என்பது. கவிதையிலேயே விடை இருக்கிறது. இது என்பதே மறந்து போனதால் எதைத் தொலைத்தோம் என்று தேடுகிறோம் :)
//கப்பி பய said...
பல நேரங்களில் தேடியது கிட்டினாலும் அதை அறியாமல் நம் தேடலைத் தொடர்கிறோம் :)
//
கப்பி, எதைத் தொலைத்தோம் என்பதே தெரியாமல் தேடுவதுதான் நான் சொல்லவருவது.நன்றி
தொலைத்தது என்னவெனத்
தெரியும் முன்னரே
தொலைந்தது நம்
கபடின்மை.[innocence]
கள்ளம் புகுந்து
காரியத்தைக் கெடுத்தது
காரணம் யாரெனத்
தெரியாமலேயே...
காலமும் ஓடியது
கண்ணியமும் குலைந்தது!
//தொலைத்தது என்னவெனத்
தெரியும் முன்னரே
தொலைந்தது நம்//
கள்ளம் கபடமற்ற உள்ளத்தை தொலைத்தால் .... அதுதான் தொலைந்தது என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மனசு பால் பட்டு போய்விடும் ... அதுதான் சொல்லவந்தது
///ஒரு வேளை அந்த குழந்தைக்கு
தெரிந்திருக்குமோ ?///
நல்ல சிந்தனை...:)
கருத்துரையிடுக