பின்பற்றுபவர்கள்

9 ஜூலை, 2006

பொய் சொல்லும் கவிதை!


உண்மையானவன் என்று
உனக்கு என்
உள்ளத்தில் இடம் கொடுத்தேன் !

நீயோ பொய்யை மெய்யாக்கி
கவிதை புனைபவன்
என்று தெரிந்தது !

உன் பொய்யான கவிதைபோல
நீயும் பொய்யனோ என்ற
அட்சம் எழுகிறது !

உன்னிடம் கேட்பது இதுதான்,
நீ காதலிப்பதற்காக கவிதை கற்றுக்கொண்டாயா ?
கவிதை எழுதுவதற்காக காதலில் விழுந்தாயா ?

காதல் தான் என்றால்
கவிதையை புறக்கணித்துவிட்டுவா !
பொய் சொல்லும் கவிதை வேண்டாம்
மெய் உணரும் காதலே போதும் !

13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் அய்யா,

காதலுடன் சேர்ந்து கவிதை அருமை...

ஆனால் நீங்கள் சொல்லுவது காதல் மற்றும் கவிதையின் புதிய பரிமாணம். வரவேற்கதக்கது.

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
ஆனால் நீங்கள் சொல்லுவது காதல் மற்றும் கவிதையின் புதிய பரிமாணம். வரவேற்கதக்கது.//
திரு சிவபாலன் ... இன்றைக்கு காதல் சொட்ட சொட்ட நிறைய காதல் கவிதைகள் தமிழ்மணத்தில் வந்தது... அதன் எதிர்வினை தான் இது.

கவிதை மூலம் இன்னொரு கவிதையை காயப்படுத்த முடியாது. இது ஒரு கலாய்த்தல் கவிதை :)

பெயரில்லா சொன்னது…

"இதழ்களை மூடு
இமைகளைத் திற
பொய்பேசுவதில்லை
கண்கள்"
எனும் கவிதை நினைவுக்கு வருகிறது என்னை மீண்டும் ஒரு மூன்றாண்டுகள் பின் தள்ளிய கவிதை வேறென்ன எழுத?

பெயரில்லா சொன்னது…

கண்ணன் சார், பின்னிட்டீங்க போங்க...பின்னூட்டத்திற்காகவே ஒரு கவிதையா?!. உங்கள் அசத்தல்கள் தொடரட்டும். அடிக்கடி நம்ம பக்கம் வந்துட்டு போங்க. ஊக்கம் தந்தது மாதிரி இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

##
இது ஒரு கலாய்த்தல் கவிதை :)
##

கலாய்த்தல்னா எனக்கு ரொம்ப புடிக்கும்

:::))))))))

பெயரில்லா சொன்னது…

கவிதையைப் புறக்கணிக்கும் காதல் காதலே அல்ல! பொய் இல்லாது காதலாவது!

நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்வதைத்தானே விரும்புவார்கள்.

உண்மைகள் தெரியவரும்போது காதல் இருப்பதில்லை. காதல் இல்லாத இடத்தில் கவிதைக்கு மட்டும் என்ன வேலை?

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
கவிதையைப் புறக்கணிக்கும் காதல் காதலே அல்ல! பொய் இல்லாது காதலாவது!
//
காதலும் கவிதையும், நாயும் கல்லும் போன்றது. நாயைக் கண்டால் கல்லைக் காணும்

பெயரில்லா சொன்னது…

//காதலும் கவிதையும், நாயும் கல்லும் போன்றது. நாயைக் கண்டால் கல்லைக் காணும்
//

இந்தக் கருத்தோடு நான் முற்றிலும் முரண்படுகிறேன். ஆனால் என் கருத்தை திணிக்க முயற்சிக்க மாட்டேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
இந்தக் கருத்தோடு நான் முற்றிலும் முரண்படுகிறேன். ஆனால் என் கருத்தை திணிக்க முயற்சிக்க மாட்டேன்! //
பெண்கள் மாறிவிட்டார்கள்... பொய்களை அவர்கள் விரும்புவதில்லை :)))))

பெயரில்லா சொன்னது…

//பொய்களை அவர்கள் விரும்புவதில்லை//

இப்படித்தான் ஒருவர் ஒரு பெண்ணிடம் நீ அழகாக இல்லை என்று உண்மையைச் சொன்னார். அந்தப் பெண் அவரை அடிக்க வந்து விட்டார், அவரது கணவருடன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்படித்தான் ஒருவர் ஒரு பெண்ணிடம் நீ அழகாக இல்லை என்று உண்மையைச் சொன்னார். அந்தப் பெண் அவரை அடிக்க வந்து விட்டார், அவரது கணவருடன். //
யாரந்த அப்பாவி கோவைக்காரர் ? :)

பெயரில்லா சொன்னது…

//யாரந்த அப்பாவி கோவைக்காரர் ? :)//

அவர் கோவைக் காரர் அல்ல. கோவைக் காரர் பொய் சொல்லுபவர்.

உண்மையைச் சொல்லுபவர் கோவி காரர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மையைச் சொல்லுபவர் கோவி காரர். //
எந்த உண்மையை அவர் கோவைக்காரர் என்ற உண்மையைத் தானே !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்