பின்பற்றுபவர்கள்

5 ஜூலை, 2006

கிளிப் பேச்சு (கவிதை) ... !

வீட்டு விலங்குகள் பூனை, நாய் மற்றும் பிற தவிற சுதந்திரமாக சுற்றித் திரியும் விலங்கினங்களையோ, பறவை இனங்களையோ அடைப்பட்டு கிடக்கும் போது, பிடிபடும் போது பார்க்கையில் நெஞ்சம் பதைக்கிறது. கூண்டில் அடைப்பட்ட கிளியைப் பார்க்கும் போதெல்லாம் என் எண்ணங்கள் அங்கே சிறைபடுகின்றது.



கிளிப் பேச்சு... !
பச்சை மாநிற மேனி பவளச் செவ்வாயென, ஒரு
பச்சை மரப்பொந்தில் பதுங்கியெதுங்கி வாழ்ந்த நான்,
இச்சை கைகளில் வீழ்ந்ததால், அவையெம் வாழ்வை
துச்சம் ஆக்கி வைக்க, துடித்துதான் போனேன் !

பாடிப்பறந்த பசும் கிளிநான், கொடும்பாவிகள் கண்பட
ஓடி ஒழிந்தாலும், தேடிதேடிப் பிடித்து, எந்தன்
நாடி சிறகறுத்து, சிறுகூண்டில் அடைத்துவைக்க, நிதம்
தேடித்திரியும் என்சோடிக்கு, எவரிடம் தூது சொல்வேன் ?

வீட்டிற் கென விலங்குகள் பூனைநாயிருக்க போதாதென்று
காட்டில் பறந்தயென்னை, கண்ணி வைத்து களவாடியவர்,
கூட்டி லடைத்து ஆசையாய் பேசச்சொல்ல, அவர்களைத்
திட்டிப் பழித்து நான் சொல்வது 'திருடன் திருடன்' !

பஞ்சம் பிழைக்கும் ஏழைகளின் நாடி கிளிசோதிடனின்
நெஞ்சம் நிறைக்க, ஏக்கமுடன் ஏங்கிவரும் ஏழையை
வாஞ்சையுடன் பார்த்து, தேடிதேடிச் சீட்டெடுத்தால் தரும்
கொஞ்சம் நெற்மணியில் நித்தமென் சிறுவயிற்றுப் பிழைப்பு !

ஏழை சோதிடனின் பட்டினி போக்கும் பலசீட்டுப்
பேழையில் எனக்கு மொரு பலன்சீட்டு இருந்தாலும்,
கோழை செய்த கொலையாய் வெட்டபட்ட சிறகுடன்
பிழைபிற் கொருவழி தேடிவேறெங்கு போவேன் நான் ?

பெற்றவள் நான்பதைக்க, என்பிள்ளைகள் இரைக்கு வாய்பிளக்க,
பற்றற்று இருக்க நான் எத்தவமும் அறிந்ததில்லை, அம்பிகை
கொற்றவள் மீனாட்சி யானாலும், தனித்திங்கு அவள்கையில்
ஒற்றை கிளியாய் உட்கார்ந்து இருப்பதில் எனக்கேது பலன்?



7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அம்பிகை
கொற்றவள் மீனாட்சி யானாலும், தனித்திங்கு அவள்கையில்
ஒற்றை கிளியாய் உட்கார்ந்து இருப்பதில் எனக்கேது பலன்?

நெற்றிக்கண் காட்டிலும் குற்றம் குற்றமே என்பது போல இந்த வரிகள் நல்லாக வந்திருக்கின்றன ஆனாலும் முதல் சந்தத்துக்கு ரொம்பவும் கஸ்டப்பட்டிட்டீங்களொ

அன்புடன்
த.அகிலன்

கோவி.கண்ணன் சொன்னது…

திரு அகிலன், இந்த வரிக்காகத் தான் முழுக்கவிதையும் எழுதினேன். வெண்பாக்கள் வடிவில் எழுத வேண்டும் என்று ஆர்வம் உண்டு. தமிழ் படிப்பது +2 வுடன் நின்று போனதால் வெண்பா இலக்கணங்கள் மறந்து போயிற்று. இப்பொழுது நேரம் கிடைக்கும் போது படித்துவருகிறேன். நல்ல இலக்கணத்துடன் ஆசிரியர் பாக்கள் எழுத வேண்டுமென்று ஆவாலாக இருக்கிறது.

உங்கள் கருத்து உற்சாகமளிக்கிறது. நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

பறவைகள் ஒற்றையையாய் எங்கு அடைப்பட்டாலும் பார்பதற்கு கொடுமையாக நினைப்பேன். அதை உட்சகட்டமாக வெளிப்படுத்த வேண்டும் என்றே மீனாட்சியை கவிதையில் வைத்தேன். மீனாட்சிக் கையில் ஒற்றை கிளி இருப்பதும் பார்பதற்கு பாவமாக இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

கோவியாரே!

வெண்பா பற்றி படிக்க வேண்டுமெனில் வெண்பா வாத்தியாரிடம் டியூஷன் சேருங்கள். நான அவரிடம்தான் டியூஷன் படிக்கிறேன். கொத்தனாரும் நன்றாக சொல்லிக் கொடுப்பார்.

வெண்பா வாத்தியாரின் குருகுலம்

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
கோவியாரே!

வெண்பா பற்றி படிக்க வேண்டுமெனில் வெண்பா வாத்தியாரிடம் டியூஷன் சேருங்கள். நான அவரிடம்தான் டியூஷன் படிக்கிறேன். கொத்தனாரும் நன்றாக சொல்லிக் கொடுப்பார்.

//

சிபி... நீங்க சீரியசா சொல்றிங்களான்னு ... தெரியலை ... உண்மையில் ஆர்வமாக இருக்கிறது ... அந்த சுட்டிக்கு சென்று பார்க்கிறேன். நன்றி

பெயரில்லா சொன்னது…

//சிபி... நீங்க சீரியசா சொல்றிங்களான்னு ... தெரியலை ... //

அட! போய் பார்த்துட்டு வந்து சொல்லுமைய்யா!

வெண்பா வாத்தியார் ஜீவாவும், இலவசக் கொத்தனாரும் "வெண்பா வடிக்கலாம் வா" ன்னு எல்லாருக்கும் இலவசமா டியூஷன் எடுத்துகிட்டு இருக்காங்க! தொடர் முழுக்க படிங்க!

நான், பெருசு எல்லாம் அவங்க ஸ்டூடண்ட்ஸ்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//
நாமக்கல் சிபி @15516963 said...
அட! போய் பார்த்துட்டு வந்து சொல்லுமைய்யா! //
இவ்வளவு எடுத்து புரியார்ப்ல் சொல்லியும் கேக்க மாட்டோமா என்ன.. ஒடனே வெச்சத வெச்ச மாதிரி போய் பாத்திட மாட்டோம் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்