சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்

பின்பற்றுபவர்கள்

15 ஜூன், 2012

விருந்தும், மருந்தும் !


விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு, இங்கு விருந்து என்பது விருந்தினர்களையும் மருந்து என்பது நோய்களுக்கான மருந்து, இவையெல்லாம் வந்து உடனே செல்லும் அளவில் இருப்பதே நல்லது என்ற பொருளில் தான் சொல்லப்படுகிறது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு மோப்பக் குழையும் அனிச்சம், நோக்கக் குழையும் விருந்து என்ற குறளில் முகம் காட்டுவது விருந்தினர்களையும் அவர்களது உறவையும் கெடுத்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு, அவர் காலத்தில் விருந்தினர்கள் தொலைவில் இருந்து வந்தவர்களாக இருந்திருக்கக் கூடும், தவிர அவர்களுக்கான பணிவிடை என்பது உணவும் உறைவிடமும் கொடுத்து உதவுவது என்ற அளவில் தான் இருந்திருக்கும். பின்னர் நூற்றாண்டுகளின் மாற்றங்களில் விருந்தினர்கள் மூன்று நாளைக்கு மேல் தங்குவது தொல்லை தான் என்றே உணர்ந்து பழமொழி வடிவெடுத்திருக்கிறது.

*****

அந்தக் காலம் போல் இந்தக் காலம் இல்லை என்று சிலர் மனிதர்களையும் அவர்கள் தம் சமூக வாழ்வியலை ஒப்பிட்டு அலுத்துக் கொள்வது உண்டு, எந்த காலத்திலும் மனிதர்களின் மனம் பெரிய அளவில் மாறுபடுவது கிடையாது, அப்படியே ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பவை இன்றைய வாழ்க்கைச் சூழல் ஏற்றியிருக்கும் சுமைகளின் அழுதத்தினால் தான் மாறி இருக்கின்றன. இதைத் திறந்த மனத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளத்தான் வேண்டும். எந்த காலத்திலும் மனிதனின் பொருளாசைகள், பேராசைகள் தான் நாடுகளின் எல்லைகளை விரித்திருக்கிறது, ஆட்சிப்பிடிக்குள் கொண்டு வந்திருக்கிறது, இதைத்தாண்டி உலக மக்களுக்கு நன்மைச் செய்யப் போகிறேன் என்று கூறி அரசை விரிவு படுத்தியவர்கள் எவரும் இல்லை, அதே போன்று மனிதனின், குறிப்பாக ஆண்களின் காம இச்சைகளும் எல்லாக் காலத்திலும் மிதமிஞ்சியதாகவே தான் இருந்திருக்கிறது , இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு பல மனைவிகளை மணந்து கொண்டார்கள், பின்னர் பொருளாதார வசதிக் குறைவால் சின்னவீடு என்ற அளவுக்குச் சுறுக்கிக் கொண்டனர், தற்போது கள்ள உறவுகள் மூலம் அவற்றைத் தொடர்கிறார்கள், அனைவரையும் இப்படிச் சொல்லமுடியாவிட்டாலும், அதில் ஈடுபடுவர்களின் செயல் முறைகள் தான் மாறி இருக்கின்றதே அன்றி எங்க காலத்து ஆளுங்க 'அதில்' கில்லாடிகள் என்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. மனிதனுக்கு பசியும் தூக்கமும் பொதுவானதாகவே இருந்துவருகிறது என்னும் போது மற்றத் தேவைகளின் ஒப்பீடுகளிலும் பெரிய மாற்றங்கள் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கென்னடிக்கு மர்லின் மன்றோ கிடைத்தது போல் கிளின்டனுக்கு ஒரு மோனிகா. இன்றைய தேதிக்கு சட்டச்சிக்கல் என்பதால் ஒரே மனைவியை மட்டும் மணந்து கொண்டிருப்பவர்கள் அனைவரையும் நாம் உத்தமர் என்று பட்டம் சூட்டிவிட முடியாது, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், அவர்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும் போது இன்றைய ஆண்கள் உத்தமர்கள் என்றோ அந்த காலத்தவர் 'அதில்' கில்லாடிகள் என்றோ நாம் ஒப்புக் கொள்வோம்.

இப்பொழுதெல்லாம் உறவினர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை, அவர்கள் எப்பொழுது கிளம்புவார்கள் என்று முள்மேல் நிற்கும் மனநிலையே உள்ளது என்று பதிவர் பெரியவர் பழனி கந்தசாமி மாறுவது மனமா ? காலமா ? எழுதி இருக்கிறார். மனிதர்கள் பணத்தை தேடி அலைகிறார்கள் என்று எழுதி இருக்கிறார். உண்மை தான், பிதுங்கும் மக்கள் தொகையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மேலே வருவதே பெரும் அறைகூவல் என்னும் நிலைக்குச் சென்ற பிறகு இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது ? இந்த நிலைக்குக் காரணம் என்ன ? பொறுப்பற்ற முறையில் பெருகிய மக்கள் தொகை தானே ? இவற்றைக் கட்டுப்படுத்துவதில் சமூகம் அக்கரைக் கொண்டிருந்தால் பொருளியல் ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையே நமக்கு வந்திருக்காது, கடவுள் கொடுக்கிறான் என்று 10 குழந்தைகள் வரை பெற்றுப் போட்டு 80 ஆண்டுகளில் 30 கோடியில் இருந்து 100 கோடியை அடைந்துவிட்டு நாம் புலம்புவதால் என்ன பயன் ? இன்றைய தம்பதிகளுக்கு மட்டும் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆசையே இல்லையா ?, பெற்றெடுக்கும் அவஸ்தை என்பதை ஒப்பிட்டு பெண்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும் குடும்பத் 'தலைவன்' என்கிற அந்தஸ்தில் 100 குழந்தைகளுக்குக் கூட தந்தையாகும் ஆசை ஆணுக்கு உண்டு, ஆனால் ஒன்று இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு அவற்றிற்கு தேவையான படிப்பும் வசதியும் செய்து வளர்த்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் தான் ஆண்கள் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவதை நினைத்துப் பார்க்கவே தவிர்த்துவருகின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகள் ஆண்களின் மீது இன்றைய போட்டி நிலைச் சமூகம் ஏற்படுத்தி உள்ளவை தான்.

இன்றைய தேதிக்கு இளைஞர்களின் (ஆண் / பெண் தம்பதிகளின்) இலக்கே தனக்கென ஒரு சொந்த வீடு கட்டிக் கொள்வது, 55 வயதை நெருங்கும் எவரும் கடந்த கால பொருளியல் நிலைமை, குறைவான ஊதியம் என்ற நிலையில் கிட்டதட்ட ஓய்வு பெரும் நிலையில் சொந்த வீட்டைக் கட்டும் நிலைக்கு வந்திருக்கிறார்கள், தற்பொழுது சொந்த வீட்டுக் கனவு 30 - 35க்குள் கை கூடிவிடுகிறது, 'அப்பன்காரன் சம்பாதித்து வைத்திருந்தால்' ஒரு வீடுகட்ட நான் நாயாகப்படும் நிலை வந்திருக்காது' என்கிற இளைஞர்களின் மனக் குரலை எங்கும் கேட்கமுடிகிறது, முனிசிபல் பள்ளியில், அரசு இலவசக் கல்வியில், முயற்சிகளில் ஓரளவு படித்து வெளியே வந்தவர்களுக்கு முதலில் இருக்க நல்ல வீடு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அதற்காக கடுமையாக உழைக்கும் மனநிலையில் வேலைக்கும் போகும் பெண் தான் வேண்டும் என்று கூறி திருமணமும் செய்து கொள்கின்றனர், பின்னர் ஓய்வில்லாத உழைப்பு, இதில் உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் உபசரிக்கவும் நேரம் இருக்குமா ? மாமனார் மாமியார் வந்தாலே எப்போ கிளம்புவாங்க என்று இருக்கும் சூழலில் பிற உறவினர்களுக்கு ஊட்டிவிடுவது என்பது நினைத்துப் பார்க்கக் கூடாத ஒன்று. போட்டித் தன்மை மிக்க உலகில் தனியார் நிறுவனங்களில் பார்க்கும் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் போராட்டம், அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வது, கூடவே வாரிசுகளுக்கு நல்ல கல்வி அளிக்க, நல்ல பள்ளிகளை தேர்ந்தெடுப்பது, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்றெல்லாம் உட்கார நேரம் இல்லாத வாழ்க்கைச் சூழலில் உறவினர்களை கண்டு கொள்வதற்கான நேரம் ?

எனது வீட்டுக்கு அருகே, மூன்று பேருந்து நிறுத்தம் தள்ளி குடி இருக்கும் நண்பரை குடும்பத்துடன் வீட்டுக்கு வரச் சொன்னோம், அவருடைய மனைவி  'உங்க மகளுக்கு தொடக்க நிலைக் கல்வியின் இறுதி ஆண்டு படிப்பு நடக்கிறது, நீங்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவருகிறீர்கள், நிறைய வேலை இருக்கும், எப்போதும் ஓடிக் கொண்டி இருப்பீர்கள் என்பது தெரியும், தேர்வெல்லாம் முடியட்டும் என்று கூறி அழைப்பை மறுத்தார்' தேர்வு முடிய இன்னும் ஆறுமாத காலம் இருக்கிறது என்றாலும், அவர்கள் சொல்வது சரிதான் என்று தோன்றியது, அதையே தான் அவர்களும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள், நாம் நிலைமை புரியாமல் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது அவர்கள் திட்டமிட்ட வேலைகள் எல்லாமும் தடையாகிப் போகும் போது 'இவர்களை யார் அழைத்தது ?' என்று நினைக்கத்தான் செய்வார்கள்,  குடும்பங்கள் சுறுங்கி, நேரங்கள் திட்டமிட்டவையாக மாறிவிட்டப் பிறகு உபரி நேரங்கள் கிடைப்பதே தற்காலிக ஓய்விற்கானது. குடும்பத்திற்கானது என்ற நிலையில் விருந்தினர்களை முன்பு போல் பல நாள் தங்கிச் செல்லவதை மகிழ்ச்சியான மனநிலையுடன் கொண்டாட முடியுமா ? நம்மால் ஒழுங்காக கவனிக்க முடியாத சூழலில், பணிவிடை செய்ய முடியாத சூழலில், விருந்தினரை அவமானப்படுவதை தவிர்க்க, உறவினர்கள் வந்தாலும் உடனே கிளம்பிடுவது தான் நல்லது என்றே நினைக்கின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு குடி இருப்பவர்களுடன் அருகே வீட்டு உரிமையாளரும் குடி இருந்தால் வீட்டு விருந்தினரை 'எப்போ கிளம்புவீர்கள் ?' என்று வீட்டு உரிமையாளரே கேட்பார். காரணம் இடம் குறித்து அல்ல, தண்ணீர். இது போல் நிறைய இடற்கள் உண்டு, இன்னிக்கு அடுப்பங்கரைக்கு ஓய்வு, சமைக்க வேண்டாம் மதியம் சரவண பவனுக்குச் செல்வோம் என்று திட்டம் போட்டிருக்கும் போது 'இந்த பக்கமாக வந்தேன் அப்படியே பாத்துட்டுப் போவலாம்னு வந்தேன்' என்று ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தால், கேட்கும் நமக்கு நெருப்பில் உட்கார்ந்திருப்பது போல் இல்லாவிட்டாலும், 'தினமும் உங்க சாப்பாட்டை மனுசன் சாப்பிடுவானா ?' என்று மகிழ்வோடு வெளியே இருந்த குழந்தைகள் கணைத் தொடுப்பார்கள். முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு பார்க்கப் போனால் யாரும் அதைக் குறை காண்பது இல்லை.

முதலில் உறவுக்காரர்களாக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் மற்றவர் வீட்டுக்குச் செல்ல போதிய காரணம் இருக்க வேண்டும், சும்மா பார்த்துச் செல்ல காதுகுத்தி, திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள் அழைப்புகள் என்று எத்தனையோ குடும்ப நிகழ்ச்சிகள் இருக்கிறது, நான் ஆண்டுக்கு ஒருமுறை தமிழகம் சென்றாலும் எனக்காக விடுமுறை எடுக்காதீர்கள் என்றே என் அக்கா, தங்கையிடம் சொல்வதுண்டு, அன்றைக்கு எதுவும் மற்ற வேலை இருந்தாலும் போய்விட்டு வாருங்கள், பக்கத்தில் எங்காவது சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்வதுண்டு, 'நான் எப்போ ஒருமுறை வருகிறேன், என்னைக் கவனிப்பதைவிட உனக்கு என்ன வேலை ?' என்று நாம் கேட்டால் அவர்களுக்கும் வெளியே சொல்லமுடியாத சங்கடங்களையும் சேர்த்தே கட்டிவிடுகிறோம், தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகள் தவிர்த்து ஒருவரை பிடித்து இழுத்து வைப்பது நாம் சென்ற பிறகு அவர்களுக்கு பிற சங்கடங்களை ஏற்படுத்தி இருக்கும். சீனர்கள் விடுமுறை நாட்களில் எவரையும் வீட்டுக்கு அழைப்பது கிடையாது. நான் சென்று வந்த சீன நண்பர்களின் வீடுகள் அனைத்திற்கும் எதாவது நிகழ்ச்சியின் அழைப்பின் பேரில் மட்டுமே சென்றிருக்கிறேன், அக்கம் பக்கம் சீன வீடுகளில் உறவினர் நடமாட்டங்களும் மிக அரிதாகவே இருக்கும்.

முன்பெல்லாம் உறவுக்காரர்கள் வீட்டுக்குச் செல்ல பலகார மூட்டையும் கூடவே செல்லும், இப்பொழுது பலரும் நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, கூடுதல் எடை என பல்வேறு உடல் நலச் சீர்கேட்டால் இருக்கும் போது, அல்லது உடலை கெடுக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஓரளவு உடல் நலம் பற்றிய அக்கரையில் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவர்கள் நாம் வாங்குவதை திண்பார்களா இல்லையா என்று எதுவும் அறியாமல் வாங்கிச் செல்லும் இனிப்புப் பண்டங்கள் பெரும்பாலும் குப்பைக்குத்தான் செல்கின்றன, என்வீட்டுக்கு வரும் இனிப்புகளில் 80 விழுக்காடு குப்பைக்குத்தான் செல்லும், மாற்றாக பழங்களாக வருபவற்றை நாங்கள் வீணாக்குவது இல்லை, ஒருவர் வீட்டுக்குச் செல்லும் போது குழந்தைகள் இருந்தால் கொஞ்சம் பிஸ்கெட் அல்லது சாக்லெட், பெரியவர்களுக்கு சத்தான பழங்களை வாங்கிச் செல்லலாம், அர்சனா / கிருஷ்ணா / ஆனந்தபவன் ஸ்வீட் வகைகளில் ஒருகிலோ / இரண்டு கிலோ வாங்கிச் சென்றால் தான் அன்பா ? நெய் கலந்த கொழுப்பு மிக்க பண்டகளை தற்காலத்தில் யாரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. ஒருவேளை வாங்கி வந்துவிட்டார்களே வீணாக்காமல் தின்போம் என்று தின்றுவிடுவர்கள் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருந்தால், இரத்ததில் கொழுப்புக் கூட... அதற்கு தனியாக மருத்துவம் பார்க்க வேண்டி இருந்தாலும் இருக்கும். உறவினர் வீட்டுக்கு செல்லும் போது அவர்கள் 'இருங்க காபி எடுத்துவருகிறேன்' என்று சொல்லும் போதும் அல்லது சொல்லாமல் எடுத்துவரும் போதும் உங்களுக்கு இனிப்பு ஆகாது என்றால் அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள், யாரும் அதை சங்கடமாக நினைப்பது இல்லை. உடலுக்கு கெடுதல் என்ற வகையில் இனிப்பு சாப்பிட முடியாதவர்களை யாரும் கட்டாயப்படுத்தி 'திருப்பதி லட்டு, பிரசாதம்' இது சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சொன்னால் அது விசம் கொடுப்பதற்கு ஒப்பானது. உறவினர் / நண்பர் வீட்டுக்குச் சென்று காபி வருமா வராதா என்ற அளவுக்கு அங்கே உட்கார்ந்து பேசும் நிலைக்குச் செல்லும் முன் கிளம்புவது நல்லது. கிளம்புவது போல் பாவனைக்காட்டினாலே அவர்கள் காப்பி தருவார்களா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

இன்றைக்கு இருவரும் வேலைக்குச் செல்லும் வாழ்க்கைச் சூழலில் ஆணுக்கு ஆசை இருந்தாலும் பெண்ணின் விருப்பம் குறித்த புரிந்துணர்வு இருப்பதால் கணவன் - மனைவி இடையே கட்டாய பாலியல் வல்லுறவுகள் கிடையாது. பெண்ணின் விருப்பம் குறித்தும் கேட்கப்படுகிறது, இன்றைக்கு ஆண் சமூகம் எவ்வளவோ அடக்கப்பட்டுள்ளது, அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளது, அடங்கும் சூழலில் உள்ளது, அதையெல்லாம் ஒப்பிட 60 வயதிற்கு மேலானவர்கள் அதிர்ஷடக்காரர்கள், அவர்களுக்கு தன்னளவில் இழப்பு என்று எதுவுமே இருந்திருக்காது, பெரு நகரச் சூழலில் கணவன் - மனைவி இடையே பாலியல் உறவு கூட திருமணம் ஆன சில ஆண்டுகளில் வாரம் ஒருமுறை பின்னர் மாதம் ஒருமுறை, அதன் பிறகு ஆண்டுக்கு ஒருமுறை என்றே குறைந்துவிட்டது. இவற்றையெல்லாம் யாரும் விரும்பிப் ஏற்படுத்திக் கொள்வது கிடையாது, வாழ்க்கைச் சூழல் அழுதத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள், இவை தனிமனித தவறுகள் இல்லை. இதைப் புரிந்து கொள்பவர்கள் காலத்தை ஒப்பிட்டுப் பேசுவது கிடையாது. 

பெரியவர்கள் மட்டுமல்ல எல்லாக் காலத்திலும் குழந்தைகளும் ஒன்று போல் தான் இருக்கிறார்கள், அவர்களிடம் மாற்றமாக நாம் பார்ப்பது இன்றைய காலத்தில் அவர்களுக்கு கிடைத்த வசதிகளில் கிடைத்த கூடுதல் அறிவுதான், எந்த காலத்திலும் குழந்தைகளிடம் நெருப்பைக் கொண்டு சென்றால் எட்டிப்பிடித்து நெருப்பில் விரலைச் சுட்டுக் கொள்ளத்தான் செய்வார்கள். 

நோய்வாய்ப்பட்டு படுத்தப்படுக்கையாக மருத்துவமனையில் இருந்தபோது தன்னை வந்துப் பார்க்கவில்லை என்று முகம் தூக்கிக் கொள்பவர்களும் தற்பொழுது குறைவு, அவரவருக்கு என்ன வேலையோ என்று நினைத்து மற்றவர்களின் நேரங்களை புரிந்து கொண்டிருக்கிறார்கள். பழைய காலத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், தற்பொழுது பலவற்றை இழந்து தான் வாழ்க்கையையே ஓட்ட வேண்டி இருக்கிறது. இதில் தனிமனிதனையோ, இன்றைய சமூகத்தையோ குறையாகப் பார்க்க ஒன்றும் இல்லை

17 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

கந்தசாமி ஐயா கட்டுரையை வாசித்த வேகத்தில் தடதட என தட்டச்சு செஞ்சுட்டீங்க போல!!!!

எதிர்பாராமல் வரும் விருந்து மட்டுமில்லை வேலை நேரத்தில் வரும் தொலைபேசி அழைப்புகளும் (அவுங்கபாட்டுக்கு பேசிக்கிட்டே போவாங்க......... ) தொல்லைதான்.

முன்னேற்பாடு செய்து கொண்டுவரும் விருந்தினருக்கு நல்வரவு:-)

Samy Kannan சொன்னது…

excellent article mr.kannan, you have refelected my thoughts.

best regards from
kannan
abu dhabi.
http://samykannan.blogspot.com/

Samy Kannan சொன்னது…

excellent article mr,kannan.

best regards from

kannan
abu dhabi
http://samykannan.blogspot.com/

Jagannath சொன்னது…

அருமையான கட்டுரை. இந்த "அந்த காலம் மாதிரி வருமா" என்கிற புலம்பல் சாக்ரடீஸ் காலத்திலேயே இருந்திருக்கிறது. இது போன்ற ஆசாமிகள் என்ன இருந்தாலும் பழைய பாட்டு மாதிரி இப்பெல்லாம் வரதில்லை என்று புலம்புவார்கள். இப்படிப்பட்ட ஒருவரை உட்கார வைத்து அந்த காலத்தின் பல மொக்கை பாடல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டபோது காட்டினேன். அப்படியும் அவர் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சரியென்று பழைய பாடல்தான் சிறந்தது என்றால் நீங்கள் ஏன் தியாகராஜ பாகவதர், சின்னப்பா பாடல்களைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை என்று கேட்டேன். அவர் பதில் பேசவில்லை. மனிதர்கள் எப்பொழுதும் தங்களுக்கு நாற்பது வயதாகும் வரை என்னென்ன நடந்ததோ அதுவே சிறந்தது என்று கருதுகிறார்கள். இதுதான் இந்த புலம்பலுக்கான அடிப்படைக் காரணம்.

விருந்தினர்களைப் பொறுத்தவரை கிராமத்திலிருந்து வருபவர்கள் பலர் மிகுந்த ஊர் வம்பு பேசுபவர்களாக இருக்கிறார்கள். தன் முடிவுகளை அடுத்தவர் வாழ்க்கை மேல் திணிக்க வேண்டும் என்ற முனைப்பு அவர்களிடம் இருக்கிறது. உடல் நிலை சரியாக இல்லாமலிருந்த என் தந்தையைப் பார்க்க வந்த கிராமத்து விருந்தினர்கள் சிலர் "டாக்டர் சொல்கிறார் என்பதற்காக சாப்பிடுவதைக் குறைத்து கொள்ளாதீர்கள். வேணுங்கிறது சாப்பிடுங்க" என்கிறார்கள். திரும்ப உடல்நிலை சரியில்லை என்றால் இவர்களா வந்து கவனிப்பார்கள்?

சுவனப் பிரியன் சொன்னது…

திரு கோவி கண்ணன்!

சிறந்த பதிவு!

//விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு,//

100 ஆண்டுக்கு முன்பு அல்ல. அதற்கு முன்பே 1400 வருடங்களுக்கு முன்பே முகமது நபி சொன்ன விருந்தோம்பலை பட்டியலிடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

”அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடியவர் தனது விருந்தினருக்குரிய கடமையைச் செய்து அவரைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி(ஸல்) கூறிய போது ”அவருக்குரிய கடமை யாது?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”ஒரு பகல் ஒரு இரவு” என்று விளக்கம் தந்துவிட்டு விருந்து (அதிகபட்சம்) மூன்று நாட்களாகும். அதன் பின்னர் அளிக்கப்படுவது தர்மமாகும் எனவும் கூறினார்கள்.
- அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்


விருந்து மூன்று நாட்களாகும். ஒருவரது உரிமை ஒரு பகல் ஒரு இரவாகும். அதன் பின்னர் செலவு செய்பவை தர்மமாகும். விருந்துக்குச் செல்பவர், விருந்தளிப்பவருக்கு சிரமமளிக்கும் அளவுக்குத் தங்குவது விரும்பத்தக்கது அல்ல.
-அபூஹுரைரா(ரலி) : திர்மிதீ


அழையாத விருந்து
நபி (ஸல்) அவர்களையும் மற்றும் நால்வரையும் ஒரு மனிதர் விருந்துக்கு அழைத்தார். அவர்களுடன் இன்னொரு மனிதரும் பின்தொடர்ந்து வந்தார். வீட்டு வாசலை நபி (ஸல்) அடைந்ததும் விருந்துக்கு அழைத்தவரிடம், “இவர் எங்களைத் தொடர்ந்து வந்துவிட்டார். நீர் விரும்பினால் இவருக்கு அனுமதியளிக்கலாம். நீர் வரும்பாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதியளிக்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

செல்லவந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகக் கெட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரலி) : புகாரி)

kari kalan சொன்னது…

இன்றைய வாழ்க்கை சூழ்நிலையை மிக ஆழமாக ஆய்ந்த இடுகை.

இப்படி முன் அறிவிப்பு இல்லாம வந்த விருந்தாளிகளால நீங்க ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறீங்க போல இருக்கு :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்படி முன் அறிவிப்பு இல்லாம வந்த விருந்தாளிகளால நீங்க ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறீங்க போல இருக்கு :)))//

அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நாமும் பிறருக்கு உறவுக்காரர்கள் தானே, நாம் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ற மனநிலைகள் மாறுவது இயல்பே என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இந்த மாற்றத்தில் தனிமனித இழப்புகள் ஏற்பட்டுள்ளது ஆனால் அவை தனிமனித தவறு இல்லை

thequickfox சொன்னது…

விருந்தினர்கள் - தொல்லைகள் பற்றி அருமையான விளக்கம்.
//எனது வீட்டுக்கு அருகே மூன்று பேருந்து நிறுத்தம் தள்ளி குடி இருக்கும் நண்பரை குடும்பத்துடன் வீட்டுக்கு வரச் சொன்னோம் அவருடைய மனைவி 'உங்க மகளுக்கு தொடக்க நிலைக் கல்வியின் இறுதி ஆண்டு படிப்பு நடக்கிறது நீங்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவருகிறீர்கள் நிறைய வேலை இருக்கும் எப்போதும் ஓடிக் கொண்டி இருப்பீர்கள் என்பது தெரியும் தேர்வெல்லாம் முடியட்டும் என்று கூறி அழைப்பை மறுத்தார்//
அவர் சிறந்த புரிந்துணர்வுள்ள lady தான்.
//நோய்வாய்ப்பட்டு படுத்தப்படுக்கையாக மருத்துவமனையில் இருந்தபோது தன்னை வந்துப் பார்க்கவில்லை என்று முகம் தூக்கிக் கொள்பவர்களும் தற்பொழுது குறைவு//
ம்... குறைவு போல தான் தெரியுது.

சுவனப் பிரியன் சொன்னது…

திரு கோவி கண்ணன்!

சிறந்த பதிவு!

//விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு,//

100 ஆண்டுக்கு முன்பு அல்ல. அதற்கு முன்பே 1400 வருடங்களுக்கு முன்பே முகமது நபி சொன்ன விருந்தோம்பலை பட்டியலிடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

”அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடியவர் தனது விருந்தினருக்குரிய கடமையைச் செய்து அவரைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி(ஸல்) கூறிய போது ”அவருக்குரிய கடமை யாது?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”ஒரு பகல் ஒரு இரவு” என்று விளக்கம் தந்துவிட்டு விருந்து (அதிகபட்சம்) மூன்று நாட்களாகும். அதன் பின்னர் அளிக்கப்படுவது தர்மமாகும் எனவும் கூறினார்கள்.
- அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்


விருந்து மூன்று நாட்களாகும். ஒருவரது உரிமை ஒரு பகல் ஒரு இரவாகும். அதன் பின்னர் செலவு செய்பவை தர்மமாகும். விருந்துக்குச் செல்பவர், விருந்தளிப்பவருக்கு சிரமமளிக்கும் அளவுக்குத் தங்குவது விரும்பத்தக்கது அல்ல.
-அபூஹுரைரா(ரலி) : திர்மிதீ


அழையாத விருந்து
நபி (ஸல்) அவர்களையும் மற்றும் நால்வரையும் ஒரு மனிதர் விருந்துக்கு அழைத்தார். அவர்களுடன் இன்னொரு மனிதரும் பின்தொடர்ந்து வந்தார். வீட்டு வாசலை நபி (ஸல்) அடைந்ததும் விருந்துக்கு அழைத்தவரிடம், “இவர் எங்களைத் தொடர்ந்து வந்துவிட்டார். நீர் விரும்பினால் இவருக்கு அனுமதியளிக்கலாம். நீர் வரும்பாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதியளிக்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

செல்லவந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகக் கெட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரலி) : புகாரி)

Ramani சொன்னது…

இன்றைய யதார்த்த நிலையை எவ்வித பூச்சுகளும் இன்றி
மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
இதனை மிகச் சரியாக புரிந்து கொள்ளுதல்
உறவின் நெருக்கம் கூட்டும்
மனம் கவர்ந்த ப்திவு
தொடர வாழ்த்துக்கள்

thequickfox சொன்னது…

//100 ஆண்டுக்கு முன்பு அல்ல. அதற்கு முன்பே 1400 வருடங்களுக்கு முன்பே முகமது நபி சொன்ன விருந்தோம்பலை பட்டியலிடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்//
ஐயோ ஐயோ வர வர தாங்க முடியல்ல கோவி.

சுவனப் பிரியன் சொன்னது…

Thiru Quickfox!

//ஐயோ ஐயோ வர வர தாங்க முடியல்ல கோவி.//

ரொம்பவும் அலுத்துக்கிற மாதிரி இருக்கு :-)!

நண்பர் கோவி தகவல் சரியாக கிடைக்காமல் ஒரு தகவலை தவறாக பதிந்தால் அதை சுட்டிக் காட்ட வேண்டியது நண்பனின் கடமை அல்லவா! அதைத்தான் செய்தேன். உண்மை சில நேரம் கசக்கத்தான் செய்யும். உடல் நலனுக்காக கசப்பான மருந்தை கண்ணை மூடிக் கொண்டு விழுங்கி விடுகிறோம் அல்லவா! அது போலத்தான் இதுவும்.

Take it easy :-)

thequickfox சொன்னது…

திரு சுவனப் பிரியன், உங்க நண்பருக்கு உங்களுக்கு சொந்தமா தோன்றும் கருத்துகளை எடுத்து விடுங்க.
மருந்து எடுப்பதே மோசமான பழக்கமாக வந்துவிடும்.பலர் தேவையில்லாமலே மருந்து எடுத்து கொண்டிருப்பதாகவே தெரிவிக்கபடுகிறது.
ஒரு நோய்க்கு எடுக்கபடும் மருந்தால் வரும் பக்க விளைவுகள் அந்த நோயைவிட மோசமான வேறு பாதிப்புகளை கொண்டு வரலாம் என்று மருத்துவம் எச்சரிக்கிறது.

Jagannath சொன்னது…

Hi. Why my comment has not been published?

கோவி.கண்ணன் சொன்னது…

//Hi. Why my comment has not been published?//

மன்னிக்கவும், மொபைல் வழியாக வெளியிட்ட போது பின்னூட்டங்கள் வந்திருப்பதை சரியாக பார்க்க முடியவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//100 ஆண்டுக்கு முன்பு அல்ல. அதற்கு முன்பே 1400 வருடங்களுக்கு முன்பே முகமது நபி சொன்ன விருந்தோம்பலை பட்டியலிடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.
//

நண்பர் சுபி,

குசு மேட்டருக்குக் கூட குரானில் தகவல் இருக்கு என்னும் போது விருந்துக்கு தகவல் இருப்பது வியப்பில்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Ramani கூறியது...
இன்றைய யதார்த்த நிலையை எவ்வித பூச்சுகளும் இன்றி
மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
இதனை மிகச் சரியாக புரிந்து கொள்ளுதல்
உறவின் நெருக்கம் கூட்டும்
மனம் கவர்ந்த ப்திவு
தொடர வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்