அப்துல்கலாம் சொல்லிவிட்டார் அதனால் அணு உலையால் ஆபத்து இல்லை என்பது போல் இரண்டு நாட்களாக பரப்புரை நடைபெறுகிறது, 5 ஆண்டு ஜனாதிபதி பதவி வகித்த அணு விஞ்ஞானியின் கைமாறு அணு உலையில் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடிகிறது, புக்குஷிமா விபத்திற்கு பிறகு அணு உலைகளின் ஆபத்தை உணர்ந்து கொண்டே கூடங்குளம் பொதுமக்கள் அதனை முற்றிலுமாக எதிர்கிறார்கள் என்பதால் நில அதிர்வு, இயற்கை பேரிடர் ஆபத்து சூழல் உள்ள பகுதி இல்லை என்கிற பரப்புரை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் புக்குஷிமா விபத்து உணர்த்துவது வெறும் இயற்கைப் பேரிடர் தொடர்ப்பான எச்சரிக்கை மட்டும் தானா ? உலக நாடுகள் அனைத்துமே இதிலிருந்து படித்துள்ள பாடம் அணு உலைகளை ஏவுகணையால் தாக்கினால் அவை அந்த நாட்டிற்கே பேரிடராக அமையும் என்பது தான், ஆனால் இதனை வசதியாக அணு உலைக்கு ஆதரவானவர்கள் மறந்துள்ளார்கள் / மறைத்துள்ளார்கள்
ஒரு நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதலில் சில ஆயிரம் உயிர்கள் அழிக்கப்படலாம், சில நகரகங்கள் அழியலாம், அவை மீண்டும் சரி செய்வதற்கு சில ஆண்டுகள் பிடிக்கலாம், ஆனால் அணு உலை போன்றவற்றை ஏவு கணைகள் தாக்கும் போது அந்த அழிவுகளும் அதன் சுவடுகளும் அதன் கதிர்வீச்சுகளும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும். ஜப்பானைப் போல் விரைந்து செயலப்பட்டு அந்தத் தடங்களை மாற்றி அமைக்கும் திறன் இருக்கிறதா என்று ஆராய்ந்து பின்னர் அணு உலைகளுக்கு ஆதரவு தெரிவிக்கலாமே.
ஏற்கனவே கல்பாக்கத்தில் செயல்படும் அணு நிலையம் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் போது இரண்டாவதாக கூடங்குளம் என்னும் இலக்கையும் ஆக இரண்டு இலக்குகளை எதிரிகளுக்கு விட்டு வைப்பது (தமிழ்) நாட்டிற்கு நல்லதா ?
இலங்கை - சீனா உறவுகள் இந்திய - இலங்கை உறவை வீட பலமாகக் கூடி வரும் போது, இலங்கை ஏவுகணைச் சோதனைகளை நடத்தினால் அதனை தடுக்க இயலாத ஆதரவு சூழல் தான் இந்தியாவில் உள்ளது, அந்தத் சோதனையில் ஏவுகணை தவறுதலாக கூடங்குளத்தில் விழுந்தால் கைவிரித்து எதிர்பாராது வருந்துகிறோம் என்று இலங்கை அறிவித்துவிடும், ஒப்புக்கு கண்டனம் செய்யும் ஐநா, அப்போதும் இலங்கைக்கு ஆதரவாக குரல்கள் இந்தியாவில் இருந்தே ஒலிக்கலாம், இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டினர் தான்.
அணு உலையால் ஆபத்து இல்லை என்று சொல்லும் மத்திய அரசு அதனைச் சுற்றி மத்திய அரசு அலுவலகங்களை அமைத்து பொது மக்களின் பயம் போக்க முன்வருமா ?
அணு உலை என்பது, அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளும் தாக்குவதற்கு ஒரு நாடு தன்மீதே கட்டிக் கொண்டுள்ள அணுகுண்டு ஆகும்.
மின்சாரம் தேவை இன்றியமையாதது தான், ஆனால் அதன் ஒளியைப் பார்க்க தமிழ்நாட்டினருக்கு கண்கள் இருக்க வேண்டுமே.
ஆயுத போட்டப் போட்டிகள் நிறைந்துள்ள நாடுகளைச் சுற்றிலும் வைத்துள்ள எந்த ஒரு நாட்டிற்கும் அணு உலைகளை அதன் கண்களைக் குத்தும் கைகள் தான். தலைக்கு மேல் தொங்கும் கத்தி எப்போதும் பாதுகாப்பாகத்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா ? அணு உலைக்கு ஆதரவானவர்கள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் ?
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
9 கருத்துகள்:
கோவியாரே ரொம்ப சப்ஜெக்ட்டுக்குள் போகும் அளவுக்கு எனக்கு தெரியாது...இருந்தாலும் அனு உலையின் சுற்றுச்சுவர் 1.50 மீட்டர் கணம் உள்ளது என்று எப்போதோ படித்ததாக எண்ணம், அதை தகர்க்க தொடர்ந்து ஏவுகணைகள் வந்த வண்ணம் இருக்கவேண்டும் இது நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. நம் வாழ்கை முறையில் சவக்குழி தவிர எல்லா இடங்களிலும் அபாயம் இருக்கு.விவரம் தெரிந்த விஞ்ஞானிகளுக்குள்ளேயே அபிப்பிராய பேதம் இருக்கு,சாதாரண மக்களுக்கு அது இன்னும் அதிகமாக இருப்பதாகவே தோனுகிறது.புரியாத ஒன்றை பற்றி விவாதிக்கும் போது இருக்கும் குழப்பம் தான் இது.ரயில்/பேருந்து/கப்பல்/விமானம் மூலம் நடக்கும் விபத்துக்களுக்கு முழுவதுமாக தீர்வு கண்டுவிட்டோமா?
சரியான கேள்விகள்...
அணு இன்றி ஒன்றும் அசையாதுன்னு சொல்லிட்டே திரிகிறார்...
இவ்வளவு நாள் அதை வைத்து தான் முன்னேரினோமா..?
//அனு உலையின் சுற்றுச்சுவர் 1.50 மீட்டர் கணம் உள்ளது என்று எப்போதோ படித்ததாக எண்ணம், அதை தகர்க்க தொடர்ந்து ஏவுகணைகள் வந்த வண்ணம் இருக்கவேண்டும் இது நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. //
அணு உலையைத் தாக்க அதன் சுற்றுச் சுவரைத் தாக்க வேண்டியதில்லை, கடல் தண்ணீர் உள்ளே புகும் வழியைத் தாக்கி சேதப்படுத்தினாலே போதும், உள்வெப்பம் தாங்காமல் சுற்றுச்சுவர் உருகிவிடும்.
இரயில் விமான விபத்துகளும் அதன் இழப்பும் ஒரு குறிப்பிட்ட இழப்பை ஏற்படுத்தினாலும் அதன் பாதிப்பு நீண்டகாலத்திற்கு தொடராது, ஆனால் அணுக்கதிர்வீச்சு அப்படி அல்ல
//ரெவெரி said...
சரியான கேள்விகள்...
அணு இன்றி ஒன்றும் அசையாதுன்னு சொல்லிட்டே திரிகிறார்...
இவ்வளவு நாள் அதை வைத்து தான் முன்னேரினோமா..?
2:46 AM, November 09, 2011//
இந்தியா இயற்கை வளத்தில் தன்னிறைவு அடைந்த நாட்டு, முதலாளி வர்கத்தின் பேராசைகளால் வெளிநாட்டுக்கம்பெனிகளுக்கு சந்தைத் திறந்துவிடப்பட்டு, அதன் தொழிற்சாலைகளுக்கு போதிய அளவு மின்சாரம் தரமுடியாமல் தடுமாறிவருகிறது, இவையெல்லாம் உள்ளே புகாமல் இருந்தால் நமக்கு கிடைக்கும் நீர் மின்சாரமே விளக்கெறிக்க போதுமானதாகும்
அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்
http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html
அன்பிற்கினிய நண்பர் சிங்கை கோவி. கண்ணன் அவர்களுக்கு அன்புடன் நண்பர் A.S. முஹம்மது அலி எழுதும் மின் மடல். தாங்கள் எனது www.pettagum.blogspot.comபார்த்து தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு நன்றிகள்! தங்களின் பிளாக் பார்வையிட்டேன் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருந்தது. தொடர்ந்து தொடர்பில் இருக்க விழைகின்றேன். அன்புடன் A.S. முஹம்மது அலி
கோவி,
சரியாக சொல்லி இருக்கிங்க,
நம்ம ஆட்களோட பலவீனமே அவனுக்கு ஏற்படாத வரைக்கும் கவலைப்பட மாட்டான்.
அந்த காலத்தில கல்பாக்கம் அணு உலைக்கு சரியா யாருமே எதிர்ப்பு காட்டவில்லை,குறைந்த பட்சம் , தொடர்ந்து மூட சொல்லிப்போராடி இருந்தால் ,கூடன்குளத்துக்கு திட்டமே வந்திருக்காது. எதிர்ப்பே இல்லாத இடம் என்பதால் இங்கே மீண்டும் வந்தார்கள்.போராடுபவர்களும் ஏதேனும் நல்ல இழப்பீடு, வேலை, தொழில்பாதுகாப்பு,இன்ன பிற உத்திரவாதம் கிடைத்தால் கடையை சாத்திவிடுவார்கள்.கல்பாக்கத்தில் இதான் நடந்தது.
நம்ம அரசாங்கம் நல்லா புரிஞ்சு வச்சுக்கிட்டு தான் , நம்ம தலைல மிள்காய் அரைக்குது.
(முன்னர் போட்ட பின்னூட்டத்தில் தெரியாமல் வேற பின்னூட்டங்களும் காபி ஆகிவந்திடுச்சு,எனவே திருத்தி போடுகிறேன்.)
கடலுக்கு அந்த பக்கம் ஆயுதம் கொடுத்து தமிழர்களை கொன்னானுவோ.... இப்ப உள்நாட்டுதமிழினத்தையும் அழிக்க மறைமுக காய்நகர்த்தளோ?
மானங்கெட்டவனொவோ... நாடாளுமன்றத்துக்கு பக்கத்தில் கட்டிக்க வேண்டியதுதானே? (பாகிஸ்தானுக்கும் வசதியா இருக்கும்)
கருத்துரையிடுக