அண்மையில் சென்னைக்கு வந்த பிரணாப் முகர்ஜி முன்னாள் முதல்வர் கருணாநிதிய அவரது அலுவலகமான அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முன்னாள் தமிழக முதல்வர் திரு மு.கருணாநிதியே அடுத்த பிரதமர் பதவிக்கு பொருத்தமானவராக தெரிவதாகவும், மன்மோகன் தலைமையில் காங்கிரஸ் பல சிக்கல்களை குறிப்பாக ஸ்பெக்டரம் உள்ளிட்டவற்றில் பாஜகவை சமாளிக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்து, தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் புதிய பிரதமராக இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பை திரு கருணாநிதிக்கு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களையும் தமிழர்களையும் தாம் மிகவும் நேசிப்பதாலாயே அவர்களின் பாசத் தலைவர் திரு மு கருணாநிதிக்கு பிரதமர் பதவிக்கு தாம் பரிந்துரைப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் திமுக அரசின் பல சாதனைகளை பட்டியல் இட்டு திரு மு.கருணாநிதியிடம் பேசிய முகர்ஜி, அத்தகைய திட்டங்களை இந்தியா எங்கும் விரிவுபடுத்த கருணாநிதியே சரியான தேர்வு என்பதையும் தெரிவித்துள்ளார். முகர்ஜி சந்திப்பின் போது பக்கத்தில் இருந்த பேரன்களின் ஒருவர் 'தாத்தா எனக்கு ஹிந்திப் படம் எடுத்து வட இந்திய கலைத் துறைக்கு தொண்டு ஆற்ற ஆவல் எழுந்துள்ளது', எனவே பிரதமர் பதவிக்கான தேடிவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்ல, நெகிழுந்து போனாராம் முகர்ஜி, காரணம் தென்னிந்தியர்களுக்கு தேசிய உணர்வு குறைவு என்று நினைந்திருந்ததற்கு கருணாநிதியின் பேரனின் இ(ஹி)ந்திய தேசிய பற்று சாட்டையடி கொடுத்துள்ளதாம்.
முகர்ஜியின் வேண்டுகோளை ஏற்கத் தயங்கிய திரு கருணாநிதி, தம் மகள் மற்றும் ராசா திகார் சிறையில் இருக்க என்னைப் பிரதமர் ஆக்குவது சர்சை ஆகாதா ? என்று ஐயம் கேட்டுள்ளார், அதற்கு பதிலளித்த முகர்ஜி 'இவை எல்லாம் வட இந்திய ஆரிய பத்திரிக்கைகள் சூடான செய்திக்காக கிளப்பிவிடப்பட்ட ஆறிப்போன வதந்தி, நீதிமன்றம் அவற்றை தற்காலிகமாகத்தான் நம்பியுள்ளது, குற்றச் சாட்டுகள் ஆதரமற்றவை விரைவில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என்று தேறுதல் கூறினாராம், இருந்தாலும் முதுமையையும் கவனத்தில் கொள்ளச் சொன்ன கருணாநிதியை அங்கிருந்து இடைமறித்த திரு முக அழகிரி இந்தியாவின் 21ஆவது பிரதமரும், 22 ஆவது பிரதமரும் நீங்கள் தான் இதில் மாற்றம் எதுவும் இப்போது வேண்டாம் என்றும் தமிழக திமுகவின் தலைமைப் பதவியை இதற்காக விடத் தேவை இல்லை தொடரலாம் என்று கூறி உள்ளார்.
இதையெல்லாம் கேட்டு நெகிழ்ந்த திரு மு.கருணாநிதி முகர்ஜியிடம் 'பிளாட்டின வெண்ணிலவு அன்னை சோனியாவிடம் தாம் பிரதமர் பதவிக்கு இசைந்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்ததாகச் சொல்லவும்' என்று விடை கொடுத்துள்ளார். அதன் பிறகு முரசொலியின் நாளைய பதிப்புக்காக நெகிழ்ச்சி குன்றாமல் உபி களுக்கு கடிதம் எழுதத் துவங்கிய கருணாநிதி
'பார்த்தாயா உடன்பிறப்பே, பதவிகள் என்னும் முள்கிரிடமும், பாராட்டுவிழாக்கள் என்னும் மலர் மாலைகளும் நான் வேண்டாம் என்றாலும் அவை என்னை நோக்கிய தேடி வருகின்றன, அன்னைத் தமிழுக்கு ஆற்றும் அரும் தொண்டாகவே நான் இந்த இடற்களை சுடர்விளாக்காக் கண்டு ஏற்றுக் கொள்கிறேன்,. மைனாரிட்டி அரசு என்று கழக அரசை இகழ்ந்த கொடை நாட்டு தென்குமரி தமிழக நலத்திட்டத்திற்கு பிரதமரிடம் கைநீட்டும் நிலை ஏற்பட்டுள்ளது, இதைத் தான் அண்ணா அன்று சொன்னார் 'ஆணவம் கூடாது அதுவும் ஆட்சியாளர்களுக்கு அறவே கூடாது' என்றார், பிரதமர் ஆனால் தாய் தமிழ்நாட்டை தற்காலிகமாக பிரிந்து செல்கிறோமே என்று வருத்தமே என்னிடம் ஏற்பட்டுள்ளது, அயல்நாடு சென்று உழைக்கும் தமிழர்களுக்கு அன்றாடம் தாய் தந்தையர் மனைவி மக்கள் நினைவு இருப்பதைப் போல் டெல்லி சென்றாலும் என் எண்ணமெல்லாம் எப்போதும் தமிழகம் மற்றும் தமிழர் நலன் சார்ந்தே இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.........
**********
ஏந்திரிங்க மணி ஆச்சு ஆபிஸ் கிளம்பல.........
அட விடியற்காலை கனவா ? இது நடந்துவிட்டால் பின்னர் ஜெ-வை பிரதமர் ஆக்கும் துர்பாக்கிய, திரிசங்கு நிலையில் வெளியில் இருந்து ஓட்டுப் போடாவிட்டாலும் ஆதரவு கேட்க வேண்டி இருக்குமோ ? தமிழகத்துக்குத்தான் சாபக்கேடுகள் தொடரும் என்று நினைத்தேன், இந்தியாவுக்குமா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்
நக்கீரனில் 'மத்திய மந்திரி ஆகிறார் கனிமொழி' என்பதை படித்த பிறகு இந்தமாதிரி கெட்ட கெட்ட கனவாக வருது
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
6 கருத்துகள்:
அன்பின் கோவி - கெட்ட கெட்ட கனவாக வருதா - கனவுகள் பலிக்காமல் இருக்க பிரார்த்தனைகள் - நட்புடன் சீனா
ஹா...ஹா..ஹா...
இது போல் கெட்ட கனவா வந்தா தப்பாச்சே...
நீங்க ஓவரா “தல”ய பத்தியே நெனைக்கறீங்க போல இருக்கு...
நாளைக்கு தூங்கி எழுந்தா, சுத்தி இருக்கற எடம் எல்லாம் கோபாலபுரம் மாதிரியே தெரிய போவுது... பத்திரம்..
தலைப்பை பார்த்து என்னுடைய தூக்கம் கெட்டு போச்சு ...
ஏன் இந்த கொலை வெறி - தலைப்பை பார்த்துட்டு படபடப்பு பி பி எரிபோச்சிப்பா
தலை மாட்டில் செருப்பு, விளக்க மாறு வைத்து படுக்கவும். இந்த மாதிரி கெட்ட கனவுகள் வராமல் தடுக்கலாம்.
அவ்.............................
நான் இந்த ஆட்டத்துக்கு வரேல்ல...
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............
கருத்துரையிடுக