பின்பற்றுபவர்கள்

11 ஜூலை, 2011

ஆந்திராவை பிரித்து கொடுங்கள் !

பிரிவினை என்பதை எதோ செய்வினைச் சொல்லாக்கி, கசப்பு உணர்வுடன் பார்ப்பதற்கு அவை தேவையற்ற பாலபாடமாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளதே காரணம். குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்க்களின் அடிப்படை கூட்டமைப்பு அல்லது அவர்களின் உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நிலப்பரப்புகள் மொழி வாரி மாநிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டு இந்திய தேசிய நீரோடையில் கலந்தன. குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்கள் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் என்ற அடிப்படையில் தான் தமிழ் அடையாளப் பெயர்களை தாங்கிய தமிழர் வாழ்ந்த நிலங்கள் கூட அண்டை மாநிலங்களுக்கு சென்றது, திருப்பதி, பாலக்காடு போன்றவை இந்த வகையே, அதே போல் ஹொசூர், ஊட்டி போன்றவை தமிழகத்தில் இருந்தாலும் அந்தப் பெயர்களுக்கான பொருள் கன்னடம் சார்ந்தது. ஊட்டி மற்றும் ஹொசூர் (ஓசூர்) தமது மாநிலத்தைச் சேர்ந்தவை என்பதை கர்நாடகத்தவர்களும் கூறி வருகிறார்கள். விடுதலைக்குப் பிறகு மாநிலங்கள் நில எல்லைக்குள் பல்வேறு கருத்து மோதல்கள் இருந்தாலும் இந்தியர் என்ற ஒற்றைச் சொல் அனைவரையும் ஒன்றிணைப்பதாக பாடத் திட்டங்களில் சொல்லுகிறார்கள், இவை ஏட்டளவே ஏனெனில் தண்ணீர் உள்ளிட்ட பொதுவான வளங்களில் பகிர்ந்தளிப்பதில் ஒற்றுமை என்பது அவை மீந்து போகும் போது மட்டும் தான் என்ற அளவில் இருக்கிறது. தெலுங்கான - ஆந்திரா பிரச்சனை என்பது அண்டைமாநில பிரச்சனை அல்ல, உள் மாநில பிரச்சனையே.

தெலுங்கான ஆந்திராவின் ஏனைய பகுதிகளைவிட வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது என்பதே குற்றச்சாட்டாகவும், அதை சரி செய்யும் நோக்கில் தனிமாநிலமாக அப்பகுதி அமையவேண்டும் என்பதே பெரும்பான்மை தெலுங்கானவாசிகளின் கோரிக்கை. இவை உண்மை எனும் போது ஆந்திர அரசு தெலுங்கான பகுதிகளை முன்னேற்ற முன்வந்து பிரச்சனைகளை களைந்திருக்க வேண்டும், தென்னிந்திய மாநில ஆட்சியாளர்களின் போக்கே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளப் பாடுபட்டால் போதும் என்ற நிலையில் இருந்து கொண்டு ஒட்டு மொத்த மாநில நலனை புறக்கணித்தே வருகின்றனர். ஆந்திராவில் எந்த ஒரு ஆளும் கட்சியும் தனித் தெலுங்கான கோரிக்கையை ஆதரித்து நடவடிக்கை மேற்கொண்டது போல் தெரியவில்லை, 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயசாந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து தனி தெலுங்கான மாநிலம் அமைய வேண்டும் என்று கோரிவருகிறார்கள். ஆந்திராவின் ஆட்சி மாற்றங்களுக்கு ஆளும் முறையவிட தெலுங்கான ஆதரவு என்ற ஒற்றைச் சொல்லின் மீதான ஆதரவே அவற்றை ஏற்படுத்திவருகிறது, தெலுங்கான உறுதி என்று கூறிய காங்கிரஸ் இதுவரை அவற்றில் முனைந்து செயல்பட்டது இல்லை. அவ்வப்போது பரிசீலிக்கிறோம் என்று கூறியே வந்தனர். ஆனாலும் தெலுங்கான அமைவதற்கான சூழலுக்கு அவர்கள் முயலவில்லை, எதோ தெலுங்கான கமிட்டியெல்லாம் அமைத்தும் அவர்களது பரிந்துரை குவிஸுக்கு வகை வினாக்களுக்கு கொடுக்ப்படும் பல்வேறு விடை போன்றே சிறுபிள்ளைத்தனமான பரிந்துரையாகவே இருந்தது. இது மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது, இந்த முறை தெலுங்கான அமைவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது.



ஹைதராபாத் தெலுங்கானாவுக்கா ? ஆந்திராவுக்கா ? என்ற நிலையில் ஆந்திர பகுதிவாசிகள் முற்றிலுமாக தெலுங்கான கோரிக்கையை எதிர்த்துவருகிறார்கள். அளவுக்கு மிகுதியான மொழிப்பற்றும் ஒரு காரணம், எங்கே பிரிந்துவிட்டால் தெலுங்கு பேசும் மக்கள் பிரிந்துவிடுவார்களோ என்கிற தேவையற்ற அச்சம் பிரிவினைக்கு எதிராக நிற்கிறது. வெறும் மொழிப் பற்று ஒட்டுமொத்த அம்மாநிலத்தின் நலனையும் பிரதிபலிக்கவில்லையே. வெறும் மொழிபற்று மட்டுமே இருக்கிறது, ஆனால் அவை மாநிலத்தின் பிற பகுதி மக்களை ஒன்றாகப் பார்க்கவில்லை என்பது தான் தெலுங்கானவாசிகளின் குற்றச் சாட்டும் ஆகும். இங்கு தமிழ்நாட்டுக்குள்ளேயே தனிமாநிலம் (புதுவை மாநிலங்கள்) செயல்படுகிறது, தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்று யாரும் அச்சப்பட்டது போல், அது பற்றி சிந்தித்து போல் தெரியவில்லை. தனித் தெலுங்கானவும், ஆந்திராவும் தெலுங்கர்களுக்கு அமைந்தால் அவை தெலுங்கர்களுக்கு பெருமையே, ஏனெனில் ஒரே மொழியைப் பேசும் பெரிய இரு மாநிலங்கள் என்ற தகுதி இந்தியாவில் வெறெந்த மாநிலத்திற்கும் கிடைக்காத பெருமை. தேவையற்ற உணர்ச்சி கொந்தளிப்புகளை விட்டுவிட்டு தனிதெலுங்கான அமைய ஆந்திர தெலுங்கர்கள் ஒத்துழைப்பதே ஒட்டுமொத்த தெலுங்கு சமுகத்திற்கும் நன்மை பயக்கும்.

வரும்கால தெலுங்கான மாநிலத்திற்கு முன்கூட்டிய நல்வாழ்த்துகள்.

6 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

தெலங்கானா மாநிலக் கோரிக்கை 1946-1951 காலகட்டத்தில் இருந்ததற்கும், இப்போதிருக்கும் நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன கோவி! தெலங்கானா பிரிந்தாலும், பிரிக்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாலும் சீரழிவுதான் மிச்சம்! அந்த அளவுக்குக் காங்கிரஸ் பிரச்சினையைக் குழப்பி வைத்திருக்கிறது!

ஊருக்கு முன்னால்,தெலங்கானா பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் எம் எல் ஏக்களும் எம்பிக்களும் ராஜினாமா செய்தது, குலாம் நபி ஆசாத் வந்து ஒரு செயற்கையான சமாதானம் செய்தது, ஊறுப்பினர்கள் ராஜினாமா குறித்து இன்னமும் நாடாளுமன்ற சபாநாயகரும், ஆந்திர சட்டசபை சபாநாயகரும் முடிவெடுக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே போவது எல்லாம் காங்கிரஸ் நடத்துகிற நாடகமாகவே தெரிகிறது!

அத்வானி சொன்னது போல காஷ்மீர் பிரச்சினை நேரு விட்டுச் சென்ற சீதனம்! சாதனை! இந்திரா காந்தியின் சாதனை, ஜனநாயகத்தின் அத்தனை அமைப்புக்களையும் முடமாக்கியது! இத்தாலிய மருமகளின் சாதனை எல்லாவற்றையும் மிஞ்சிக் கொண்டிருக்கிறது!வேறென்ன சொல்ல?

தமிழ்மலர் சொன்னது…

// காஷ்மீர் பிரச்சினை நேரு விட்டுச் சென்ற சீதனம்! சாதனை! இந்திரா காந்தியின் சாதனை, ஜனநாயகத்தின் அத்தனை அமைப்புக்களையும் முடமாக்கியது! இத்தாலிய மருமகளின் சாதனை எல்லாவற்றையும் மிஞ்சிக் கொண்டிருக்கிறது!வேறென்ன சொல்ல?//

அதே அதே அதே...

இந்திய ஒற்றுமையை பற்றி பேசுபவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படை தத்துவத்தை மறந்துவிடுகின்றனர். ஒவ்வொரு மொழி, வட்டார வாழ்க்கையையும் பாதுகாக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆட்சி என்ற போர்வையில் சிறுசிறு வாழ்க்கைமுறைகளை அழிக்கக்கூடாது என்பதை யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை.

இந்தியா என்றால் வேறுபட்ட பல மக்களின் ஒற்றுமையான அமைப்பு. இந்த அமைப்பில் ஒவ்வொரு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதை பற்றி பேசினால் பிரிவினையை துண்டுகிறார்கள் என்று பட்டம் சூட்டிவிடுகிறார்கள்.

இந்திய இறையான்மை என்ற போர்வைக்குள் பல இன மக்கள் தங்கள் அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துவருகிறார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.

குறும்பன் சொன்னது…

ஐதராபாத் யாருக்கு என்பது தான் பெரும் பிரச்சனை. ஐதராபாத் இல்லாமல் தெலுங்கானா இல்லை என்பது தெலுங்கானா மக்களின் நிலை. . ஐதராபாத் தெலுங்கானாவுக்கா! முடியாது என்பது சீமாந்திராவின் நிலை. இதை இரு மாநிலங்களின் தலைநகராகவும் ஆக்க முடியாது ஏனெனில் ஐதராபாத் இருப்பதோ தெலுங்கானாவின் நடுவில். ஐதராபாத் யாருக்கு என்பதில் தீர்வு ஏற்பட்டால் தெலுங்கானா அமைவதில் உள்ள பெரும் சிக்கல் தீர்ந்துவிடும். நியாமமாக பார்த்தால் ஐதராபாத் தெலுங்கானாவுக்கு தான் செல்லவேண்டும். ஆனால் ஐதராபாத்தை தெலுங்கானாவுக்கு ஒதுக்கினால் சீமாந்திராவில் காங்கிரசு காணாமல் போயிடும். அரசியல் ஆதாயம் வேண்டி இருப்பவர்களுக்கு இது பெரும் பிரச்சனை. தீர்வு மத்தியில் காங்கிரசு அல்லாத அரசு வந்து அது தெலுங்கானா மாநிலத்தை பிரிப்பது தான். காங்கிரசு மத்தியில் இருக்கும் வரை அதனால் தெலுங்கானாவை பிரிக்க முடியாது. எல்லாம் அரசியல்.

ராஜ நடராஜன் சொன்னது…

காங்கிரஸ்க்கு இருக்கும் அத்தனை தலைவலிகளில் தெலுங்கானாவை முன்னிலைப்படுத்துமென்ற நம்பிக்கை தெரியவில்லை.காலம் கடத்தல் கோட்பாட்டை செயல்படுத்தி மீண்டும் மழுங்கிப் போக வைக்கும் முயற்சியாகவே 10 நாட்களாக பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்காமல் நாள் கடத்துகிறது.இருந்தாலும் எந்த நிலைப்பாட்டை எடுக்கிறதென பொறுத்திருந்து பார்க்கலாம்.

தெலுங்கானா அமைவதில் ஒன்றும் கெட்டுப்போகாது.மாறாக இரு மாநிலங்களின் நிர்வாகம் இன்னும் சிறப்பாகவே செயல்படும்.தமிழகம்,பாண்டிச்சேரியை நல்ல உதாரணமாக சொல்லியுள்ளீர்கள்.

சித்தூர்.எஸ்.முருகேசன் சொன்னது…

கோவி!

இதுல எல்லாம் நீங்கள் தலையிடாதீங்க பாஸ். இங்கன தெலுங்கானா பற்றி மூச்சு விட்டாலே குனிய வைத்து பட்டக்ஸ் அடித்து விடுகிறார்கள்.

naren சொன்னது…

பிரிவினை கேட்பதற்கு அளவுகோள் என்ன என்பதை வரையறுத்த முடியாது. அந்த அளவுகோளால் பிரச்சனைகள் அதிகமாகும்.

தமிழ் நாட்டில் காவேரி நதிக்கு தெற்கு இருக்கும் மாவட்டங்கள் பிந்தங்கி உள்ளன என்று சொல்லி தனி மாநிலம் கேட்கும் கோரிக்கையை சில அமைப்புகள் முன்னிறுத்துகின்றன.
அதைப்போல் மற்ற மாநிலங்களில் சில பகுதிகள் தனி மாநிலம் கோரிகின்றன. அதேப் போல் சில பகுதிகள் வேறு காரணங்களுக்கு தனி மாநிலம் கோரும் நிலை உருவாகும்.

தெலுங்கான உருவானால் பிரச்சனைகள் தான் வளரும். ஒரு காரணம் இருந்து அதனால் வன்முறையால் ஒரு தனி மாநிலம் அடையளாம் என்ற சூழ்நிலை உருவாகும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்