பின்பற்றுபவர்கள்

18 பிப்ரவரி, 2011

முட்டை சைவமா ?

முதலில் சைவம் / அசைவம் விளக்கம் சொல்லிவிடுகிறேன். வலி உணரக் கூடிய நரம்பு மண்டலங்களை உடைய, உயிருக்கு உலை என்னும் போது எதிர்த்து போராடவோ, விலகி ஓடி தப்பிக்கவோ முயற்சிக்கும் விலங்கினங்களை கொன்று உண்பது அசைவம். இதை சங்ககாலத்தில் புலால் உணவு என்பார்கள். இதற்கு மாற்றாக இடம்பெயராத, வலி உணரக் கூடிய நரம்பு மண்டலம் இல்லாத, எதிர்ப்புக் காட்டாத தாவிரங்களையும் அவற்றின் பகுப்பு பொருள்களை உணவாக உட்கொள்வது சைவம் அல்லது சாத்வீக உணவு எனப்படும். தாவிரங்களை உட்கொள்வது எப்படி சைவம் என்றாகியது ? சைவம் என்பது ஒரு சமயம் அல்லது மதம் தானே ? என்பது பலருக்கு ஐயமாக இருக்கலாம். தன்னைப் போல் அலைந்து திரிந்து, வலி உணரக் கூடிய, வாழும் உரிமையுடைய சக உயிர்களுக்கு தீங்கு விளைவிப்பது தவிர்க்க வேண்டியதே என்ற கொள்கையில் புலால் மறுப்பை கொள்கையாகவே வைத்திருந்தன சமணமும், பவுத்தமும். உயிர்களின் மதிப்பைப் போற்றுபவர்கள் என்பதால் புலால் மறுப்பாளர்களுக்கு சமூகத்தில் 'உயிர்களின் மீதான நல விரும்பிகள்' என்ற நற்பெயர் நீடித்தது. அவர்கள் சொல்வதை மக்கள் காது கொடுத்துக் கேட்டனர். தாம் சொல்வதைப் பிறர் கேட்கவேண்டுமென்றால் தாமும் புலால் மறுத்தலை கொள்கையாகக் கொள்வதே சிறந்த அறமாகும் என்கிற முடிவில் சனாதனப் பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் புலால் மறுத்தலை கொள்கையாகக் கொள்வதற்குத் துவங்கின.

இந்திய சமயங்களில் புலால் மறுப்பு போற்றப்படுவதற்கு அனைத்துப் பிரிவுகளும் அதனை ஏற்றுக் கொண்டதே காரணம். சிவனடியார்கள் உணவு என்பதாக மரக்கறி உணவுகள் ஆறாம் நூற்றாண்டுகளில் சொல்(வது) வழக்காகி, சிவ உணவாகி, சைவ உணவு என்பதாக மருவி. புலால் மறுப்பு என்பது சைவ உணவு என்று பெயர் பெற்றது. மற்றபடி சைவ உணவிற்கும் சைவ சமயத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் எதுமில்லை. சமணர்கள் தாவிர உணவு வகைகளிலும் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை விலக்கிக் கொண்டனர், இவை ஜைன உணவு எனப்படும். வைணவர்கள் சைவ சமயத்தை மறுத்து உருவாகியவர்கள் என்றாலும் சைவ உணவின் பெயரை அப்படியேத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள். வைணவ உணவு என்று சொல்வதில்லை. சைவம் என்பது சமயமாக அறியப்படுவதைக் காட்டிலும் அது ஒரு உணவு வகை என்ற புரிதலை பொதுமக்கள் வைத்திருக்கட்டுமே என்று விட்டுவைத்தார்களோ ! :). ஆறாம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் சனாதனத்தில் இருந்து பிரிந்த சமைய(ல்) வகையல் இன்றைய காலகட்டத்தில் 'இந்து' மதம் என்ற பெயரில் ஐக்கியம் ஆனதால், இன்றைய தேதிக்கு சைவம் என்பது சமயமல்ல அது புலால் மறுத்தல் அல்லது தாவிர வகை உணவின் பெயர் மட்டுமே.

முட்டை சைவமா ?

உண்ணத்தக்க தாவிரவகைகளை அல்லது அவற்றின் விதை உணவாக்கிக் கொள்வது தான் சைவ உணவு. அந்த வகையில் பார்த்தால் முட்டை என்பது விலங்குகளின் மறு உற்பத்திக்கான விதை தான். முட்டையில் கரு இருந்தாலும் அவற்றில் நரம்பு மண்டலங்களோ, வலி உணரக் கூடிய மூளைப் பகுதியோ இல்லை. ஒரு முட்டை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எதிர்ப்புக் காட்ட அவற்றில் வளர்ந்த நிலையிலான, அசையக் கூடிய உயிர்த்தன்மை இல்லை, அடைகாக்காத முட்டை என்பது முளைக்கக் காத்திருக்கும் விதை போன்றதே. அவற்றை உணவாகக் கொள்வது அசைவ உணவு என்னும் பகுப்பில் வராது என்றே நினைக்கிறேன். மதவாதிகள் கருத்தடைகளையும், தற்காலிக கருத்தடைகளை ஏற்றுக் கொள்ளும் போது வளராத கரு உடைய முட்டையை சைவம் என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த பவுத்த சைவர்கள் பிற விலங்கின உணவுகளைத் தவிர்த்தாலும் முட்டையை உணவாக்கிக் கொள்கிறார்கள்

இருப்பினும் சைவ உணவு என்பது வெறும் தாவிர உணவு தொடர்புடையது மட்டுமின்றி மன நலன் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதால் வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணர்வு சுரப்பிகளை மிகுதியாகத் தூண்டக் கூடிய உணவுகளையும் சேர்த்தே தவிர்த்தனர் ஜைனர்கள். உணவு உணர்வுகளை தூண்டுமா ? என்ன கோவியாரே உளறுகிறீர்களா ? வெறும் பார்லி தண்ணீர் தான் பியர், பியர் பாட்டலில் சைவ முத்திரை கூட குத்தப்பட்டிருக்கும் அதை அளவுக்கு மிகுதியாக குடித்துவிட்டால் உணர்வுத் தூண்டலில் ஆடும் ஆட்டம் வெளிப்படையானது தானே. வெங்காயம், பூண்டு உணவு வகைகளைப் போன்றே முட்டைக்கும் சுரப்பிகளைத் தூண்டும் ஆற்றல் உண்டு. பெற்றோர் பழக்க வழக்கம் என்னும் வெறும் கொள்கைகாக சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு முட்டை கூட சைவம் தான், உணவாக ஏற்கலாம் என்பது எனது பரிந்துரை. மற்றபடி சாத்வீகம், அமைதி இவற்றின் நலவிரும்பிகளுக்கு வெங்காயம், பூண்டு இவற்றுடன் முட்டை கூட அசைவமே.

17 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

ullen ayya..

priyamudanprabu சொன்னது…

addu kaRi kuda saivamthanungkale...

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...
addu kaRi kuda saivamthanungkale...//

அடுப்புக்கரி கூட சைவம் தான்

Robin சொன்னது…

முட்டையில் உயிர் உள்ளது. எனவே அது அசைவம்தான்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

கோவியானந்தா சொன்னா சரிதான்:))

வேதாத்திரி மகான் முட்டையை சைவத்தில் சேர்த்துக்கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

அசைவத்தை மனதளவில் விடமுடியாதவர்களுக்கு, மனம் சமாதானம் அடைய முட்டை சாப்பிடுவது ஏற்புடையதாகவே இருக்கும்....!!!!

ராவணன் சொன்னது…

நான் எந்த உயிரையும் கொல்வதில்லை.
நான் சாப்பிடுவது அனைத்தும் சைவமே.

பன்னிக்கறி, மாட்டுக்கறி, ஆட்டுக்கறி, கோழி, வாத்து, மீன், தவளைக்கால் அனைத்தும் சைவ உணவே.

பிடித்தால் சாப்பிடலாம்...நம் உடலுக்கு ஒத்துக்கொண்டால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

யாரையும் துன்புறுத்தாத, யார் மனதையும் புண்படுத்தாத எவராவது சைவ உணவைப் பற்றி கூறலாம்.

நமக்கெல்லாம் எதுக்கு?

suvanappiriyan சொன்னது…

//பிடித்தால் சாப்பிடலாம்...நம் உடலுக்கு ஒத்துக்கொண்டால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

யாரையும் துன்புறுத்தாத, யார் மனதையும் புண்படுத்தாத எவராவது சைவ உணவைப் பற்றி கூறலாம்.

நமக்கெல்லாம் எதுக்கு?//

நீங்க யாரையோ குத்திக் காட்டுவது போல எனக்கு படுகிறது. :-)

சரியா......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஜோதி மற்றும் உங்களுடைய வீடியோ ..பார்வைக்கு
http://www.youtube.com/watch?v=4j2INJmLqw8&feature=player_embedded#at=377

கோவி.கண்ணன் சொன்னது…

//முட்டையில் உயிர் உள்ளது. எனவே அது அசைவம்தான்.
//

ஒயிட்லகான் கோழி முட்டையில் அதுவும் இல்லை என்கிறார்களே !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வேதாத்திரி மகான் முட்டையை சைவத்தில் சேர்த்துக்கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
//

முட்டை உருளக்கூடிய தன்மை உடையது சைவம் அசைவம் எங்கு வேண்டுமானாலும் உருண்டு செல்லலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//யாரையும் துன்புறுத்தாத, யார் மனதையும் புண்படுத்தாத எவராவது சைவ உணவைப் பற்றி கூறலாம்.

நமக்கெல்லாம் எதுக்கு?
//

நீங்கள் உங்களைப் பற்றி எதுவேண்டுமானலும் சொல்லமுடியும், பிறரைச் சேர்த்துக் கொண்டு சொல்ல அவரை அறிந்திருக்கனும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்க யாரையோ குத்திக் காட்டுவது போல எனக்கு படுகிறது. :-)

சரியா......
//

ஒருவேளை அவர் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு, தற்கொலை தாக்குதல் புகழ் 'அமைதி' மார்க்கத்தின் இலக்கணம் தெரிந்தவராக இருக்கலாம்

வடுவூர் குமார் சொன்னது…

அப்பாடி!! இன்னும் சைவமாகத்தான் இருக்கேன். :-)
இதே மாதிரி ஒரு பதிவு- முட்டையை பற்றி பழைய பதிவு ஞாபகத்தில் வருகிறது.

jothi சொன்னது…

//பெற்றோர் பழக்க வழக்கம் என்னும் வெறும் கொள்கைகாக சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு முட்டை கூட சைவம் தான், உணவாக ஏற்கலாம் என்பது எனது பரிந்துரை.//


வழி மொழிகிறேன்,.

காரணம் நாம் சாப்பிடுகிற முட்டைகளில் (ப்ராய்லர்) இருந்து ஒரு கோழி வராது. நீங்கள் முதலில் சொன்னது போல் அது ஒரு அடுத்த தலைமுறையை தராததால் அது ஒரு விதைக்குள் அடங்காது. (ஆனா நாட்டுக்கோழி முட்டை சாப்பிடக்கூடாது,..(ம்ம்மக்கும் ,.. ரொம்ப முக்கியம்)), இதே லாஜிக்தான் ப்ராய்லர் சிக்கனுக்கும்,.அடுத்த தலைமுறையை ப்ராய்லர் சிக்கன் தராததால் தாரளமாக சாப்பிடலாம் (!!!!!!!!!!!),..

அப்படி பார்த்தால் பால் கூட ரத்தத்தில் இருந்து தானே வருகிறது ??

முட்டையில் இருக்கிற மாமிசஅமிலங்களை விட பாலில் இருப்பது அதிகம்,.. முட்டையில் நிறைய ப்ரோட்டின் இருப்பதால் உடம்புக்கு நல்லது,..

இது முழுக்க முழுக்க மனசு சம்பந்த பட்ட மேட்டர்,.. ஒரு விவாதத்தில் முடியாது,..

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

||மற்றபடி சைவ உணவிற்கும் சைவ சமயத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் எதுமில்லை. ||

மிகத் தவறான கூற்று..

சைவம் சிவமொடு சம்பந்தமாவது என்பது திருமந்திரம்..

சைவம் என்ற சொல்லுக்கும் சிவம் என்ற சொல்லுக்கும் வேறுபாடு இல்லை;சிவத்தை வலியுறுத்தியவர்கள் எல்லாம் சைவர்கள் ஆனார்கள்..சிவம் என்ற சொல்லுக்கு அன்பு என்ற பொருளும் உண்டு;ஆகையினால்தான் அன்பே சிவம் என்ற சொலவடையும் உருவாயிற்று..

சைவ உணவு என்ற உணவுப் பழக்கம் எவ்வுயிரையும் உணவின் பொருட்டு கொல்லாமையைக் வலியுறுத்திய ஒரு கருத்தாக்கம்.அந்த கருத்தாக்கம் தோன்றியதன் காரணம் பிற உயிர்களிடத்ததில் அன்பு..

நமது குழந்தையிடத்தில் எவ்வளவு அன்பு வைக்கிறோமோ அதை வகை அன்பை ஆடு,கோழிகளிடமும் வைத்தால் அவற்றை நமது உணவுக்காக கொல்லமாட்டோம்..எனவே அன்பின் வழியாக,அதாவது சிவம்-சைவம் என்ற தொடர்பின் வழியான கொள்கையாளர்களின் உணவு முறை சைவ உணவு முறையானது !


||இன்றைய தேதிக்கு சைவம் என்பது சமயமல்ல அது புலால் மறுத்தல் அல்லது தாவிர வகை உணவின் பெயர் மட்டுமே.||

இது இன்னொரு தவறான கூற்று.

ஆதி நாள் இலக்கியம் தொட்டு சைவம்,வைணவம்,சமணம்,சாக்தம்,கபாலிகம்,காணாதிபத்யம் போன்ற ஆறு சமயப் பிரிவுகள் இருந்தன.

சைவம் என்பது ஒரு சமயமல்ல என்று கூறுவது சிறிதும் சமய விதயங்கள் அறியாத ஒரு கூற்று.

இந்து என்ற சொல் தமிழர்கள் கண்டு பிடித்ததல்ல;அது அறிவற்ற ஆங்கிலேயர்கள் தென்னகத்தில் நிலவிய 6 வகை சமயங்கள் பற்றிய அறிவில்லாமல், பொதுவாக இந்தியர்கள் அனைவரையும்-அதாவது இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் அல்லாத அனைவரையும் குறிக்க உருவாக்கிய ஒரு சொல்.

தமிழிர்கள் அந்த சொல்லுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்து.

தமிழர்களின் பெருவாரியான சமயம் சைவம் அல்லது வைணவம்.
சாக்தம்,கபாலிகம்,கானாதிபத்யம் மூன்றும் சைவத்தில் அடங்கி விட்டன.சமணம் தேய்ந்து விட்டது..

எனவே சைவம் என்பது சாப்பாட்டைக் குறிக்கும் சொல் அல்ல;அது முழுக்க சமய நெறியைக் குறித்து அதன் வழியே உணவுப் பழக்கத்தையும் குறிக்கின்ற சொல்.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

மற்றபடி முட்டை சைவமா என்பதெல்லாம் அவரவர் நாக்கின் வழி அவரவருக்கு..பெங்காலிகளுக்கு மீன் கூட சைவம்தான்...

:((

கோவி.கண்ணன் சொன்னது…

//சைவ உணவு என்ற உணவுப் பழக்கம் எவ்வுயிரையும் உணவின் பொருட்டு கொல்லாமையைக் வலியுறுத்திய ஒரு கருத்தாக்கம்.அந்த கருத்தாக்கம் தோன்றியதன் காரணம் பிற உயிர்களிடத்ததில் அன்பு..//

சைவ நூல்கள் குறிப்பாக பெரியபுராணத்தில் சைவ உணவு உட்கொள்வதன் வழியுறுத்தல் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

அன்பே சிவம், பண்பே பரமன் என்பதெல்லாம் அலங்காரத்துக்குப் போட்டுக் கொள்வது தான். உங்க கூற்றுபடி நாராயணனுக்கும், நான்முகனுக்கும் அன்பு இல்லையா ?

//நமது குழந்தையிடத்தில் எவ்வளவு அன்பு வைக்கிறோமோ அதை வகை அன்பை ஆடு,கோழிகளிடமும் வைத்தால் அவற்றை நமது உணவுக்காக கொல்லமாட்டோம்..எனவே அன்பின் வழியாக,அதாவது சிவம்-சைவம் என்ற தொடர்பின் வழியான கொள்கையாளர்களின் உணவு முறை சைவ உணவு முறையானது !//

ஆடுகோழியிடம் அன்பு வைத்தால் அதனால் கிடைக்கும் வேறு பலன் என்ன ? நாய் வீட்டைக் காக்கிறது. உங்க கூற்றுபடி யாரும் ஆடுகோழியை வளர்த்தாலும் பலன் இல்லை. இவை ஏன் வீட்டு விலங்குகளாக அறியப்படுகின்றன. அன்போடு கோழிவளர்த்து அன்போடு அடிச்சு சாப்பிட்டால் ஆகாதா ? காசு பணத்துகாக அண்ணன் தம்பியே அடித்துக் கொண்டு சாகிற காலத்தில் கோழியைத் திண்ணா குத்தமா ?
:)

//இது இன்னொரு தவறான கூற்று.

ஆதி நாள் இலக்கியம் தொட்டு சைவம்,வைணவம்,சமணம்,சாக்தம்,கபாலிகம்,காணாதிபத்யம் போன்ற ஆறு சமயப் பிரிவுகள் இருந்தன.

சைவம் என்பது ஒரு சமயமல்ல என்று கூறுவது சிறிதும் சமய விதயங்கள் அறியாத ஒரு கூற்று.

எனவே சைவம் என்பது சாப்பாட்டைக் குறிக்கும் சொல் அல்ல;அது முழுக்க சமய நெறியைக் குறித்து அதன் வழியே உணவுப் பழக்கத்தையும் குறிக்கின்ற சொல்.

//

நான் இன்றைய தேதியில் என்று தானே சொல்லி இருக்கிறேன். ஒரு வைணவரிடம் நீங்கள் சைவமா அசைவா என்று கேட்டுப்பாருங்கள்
:) மறந்தும் அதற்குப் பதிலாக நான் வைணவர் என்று கூறமாட்டார்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்