பின்பற்றுபவர்கள்

9 பிப்ரவரி, 2011

மாயாவதியின் காலணியும் இந்துத்துவமும் !

மாயாவதியின் காலணியை விருது பெற்ற காவலர் துடைப்பதாக படங்களுடன் செய்திகள் வெளி வந்துள்ளன. மாயாவதி ஒரு ஆண் முதல்வராக இருந்தால் இந்த அளவு பெரிதுபடுத்தப்பட்டு இருக்குமா என்பதை அவரவர் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன். இது போன்ற மனிதனை இழிவு படுத்தும் செயல் ஒன்றேயெனினும் அதில் தொடர்புடைய நபர்கள் ஆணா பெண்ணா என்பதால் அது வெளிச்சம் பெருகிறது. ஒரு பெண்ணுக்கு அதுவும் தலித் பெண்ணுக்கு காலணி துடைப்பது எத்தகைய இழி செயல் என்பதைத் தான் அந்த செய்திகள் பரப்ப முற்படுகின்றன. நான் மாயாவதியின் செயல் சரி என்று வாதிட இதை எழுதவில்லை. மாறாக நானும் மனித உரிமை மீறல் என்கிற நிலையில் அதை கண்டிக்கிறேன். ஆனால் இவற்றை விமர்சிப்பவர்களின் நிலை குறிப்பாக தயிர்சாத மற்றும் உயர்சாதியினர் என்று சொல்லிக் கொள்வோரின் வன்கொடுமைகளை கண்டிக்கத் துணிவு இல்லாத செய்தி இதழ்களின் மனித உரிமை கரிசனம் எத்தகையது எதனுடன் தொடர்புடையது என்பதை எண்ணிப் பார்க்க அவர் ஒரு பெண் மேலும் அவர் ஒரு தலித் என்பதால் இவை பரபரப்பாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

தலித்துகள் பொது இடத்தில் காலணி அணிய இன்னும் கூட சில கிராமங்களில் தடை இருக்கின்றன. தோலில் துண்டு போட்டுக் கொள்ள முடியாது, இடுப்பைச் சுற்றி அணிந்து கொள்ள வேண்டும், இரட்டை தம்ளர். அவர்கள் வேலை பார்க்கும் வீட்டின் கழிவறையைக் கூட அவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி இல்லை. குறிப்பிட்ட கோவில்கள், சுடுகாடு, சர்ச்சுகள் எங்கும் அவர்களுக்கு அனுமதி மறுப்பு. ஒரே ஒரு (தலித்) பெண் காலணியைத் துடைக்க வைத்துவிட்டாள் என்று துடிக்கும் இவர்கள் தலித்துகளுக்கு தொடரும் சமூகக் கொடுமைகளைக் களைய என்றாவது முயற்சிக்கிறார்களா ? கர்ம யோக அடிப்படையில் ஒருவன் தன் தொழிலை அதாவது தலையில் மலக் கூடை சுமக்கும் ஒரு தலித் மறுபிறவியில் சுவர்க்கத்தை அடைவான் என்றார் குஜராத்தின் மோடி. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து 'தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைகள்' கூகுளில் தேடினால் அவலங்களையும், அவமானங்களையும் துப்பிக் காட்டுகிறது கூகுள்.

புதிய ஏற்பாட்டு பைபிளில் இருந்து ஏசு நாதர் கூறுவதாக ஒரு குறிப்பு கொஞ்சம் மாற்றத்துடன்,

"உங்களில் யார் தலித் வன்கொடுமையாளர்கள் மற்றும் வன்கொடுமைக்கு ஆதரவானவர்கள் இல்லையோ அவர்கள் மாயாவதி மீது கல்வீசுங்கள்"

இணைப்பு : பாஜகவின் தலித் விரோத பரிசோதனைக்கூடம்(குஜராத்)!

8 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இங்கே
நிறையப்பேருக்கு மறந்து போன ஒரு சம்பவம்!

கியானி ஜெயில் சிங் என்று ஒருத்தர்! இந்திரா காண்டி தயவில் இந்த நாட்டின்
ஜனாதிபதியாகவும் ஆகிப் போனார். ஜனாதிபதியாக இருந்து கொண்டே
பகிரங்கமாகவும் சொன்னார்: "மேடம் சொன்னால், அவருடைய
செருப்பைத்துடைக்கவும் நான் தயங்க மாட்டேன்!"

யாரும் செருப்பை துடைக்கச்சொன்னதாகவோ, அவரும் துடைத்ததாகவோ தெரியவில்லை.
இங்கே உத்தரப் பிரதேசத்தில் கூட, மாயாவதி சொல்லாமலே தான் அந்த போலீஸ்
அதிகாரி செருப்பை துடைத்திருக்கிறார். சுதந்திரமான அடிமைகள் என்று கொஞ்ச
நாளைக்கு முன்னால் எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசப் போக அது பெரிய
ரகளையாகிப் போனது. (தேநீர்க் கோப்பையில் புரட்சி வெடிக்கிற
மாதிரித்தான்...!)

ஆதாயம் வேண்டும், கிடைக்குமென்பதனால் தானே அந்த நபர் செருப்பை
துடைத்திருக்கிறார்! அது அவருடைய உரிமை, சுதந்திரம்!

கேள்வி அதுவல்ல! ஆதாயத்துக்காக அடுத்தவர் செருப்பைத் துடைக்கிற
அளவுக்குப் போகும் இந்த மாதிரியான ஆசாமிகள், ஜனங்களை ஏறி மிதிப்பதை எத்தனை நாளைக்கு சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்?

-----------------------
நிறையக் கேள்விகளுடன்....
கிருஷ்ணமூர்த்தி

Unknown சொன்னது…

இந்த் விஷயத்தில் சாதி சாயம் வேண்டாம் ஒவ்வொரு பதவிக்கும் ஒரு டிகினிடி உள்ளது. அதை காப்பாற்றத்தெரியாதவர்கள் அந்த பதவிக்கு தகுதியற்றவர்கள் என்றுதான் கருதமுடியும்.

guna சொன்னது…

இந்த் விஷயத்தில் சாதி சாயம் வேண்டாம்

ராவணன் சொன்னது…

கருணாநிதியை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு இருப்பவர்களும் போலீஸே.அவருக்கு டயப்பர் மாற்றுபவர்களும் போலீஸே. எத்தனை உறவுகள் இருந்தாலும் அதிகார மயக்கத்தில் குண்டி துடைக்க போலீஸை பயன்படுத்தும் கருணாநிதியை எதிர்த்து யாரும் பேசவில்லை.

எங்கிருந்தோ வந்த இத்தாலி அம்மையாருக்கு வணக்கம் கூறுவதைவிட இந்தியப் பெண்ணான மாயாவதியின் செருப்பைத் துடைப்பதில் எந்த தவறும் இல்லை. அந்த போலீஸ் அதிகாரியை நான் பாராட்டுகின்றேன்.

அவர் உண்மையான இந்தியன்.

கோவி.கண்ணன் சொன்னது…

திரு இராவணன் உங்கள் கருத்து சரி என்றாலும் கூட உடல்நிலை சரி இல்லாதவருக்கும், நல்ல உடல் நிலை இருப்பவருக்கும் வேறுபாடு உண்டு. உடல் நிலை முற்றிலும் சரி இல்லாத எந்த வயதினர் ஆயினும் மருத்துவமனயில் அவர்களுக்கு தாதிகள் தானே பணிவிடை செய்கிறார்கள்

arumuga nainar சொன்னது…

please explain the meaning of dalit

கோவி.கண்ணன் சொன்னது…

// arumuga nainar said...
please explain the meaning of dalit//


From Wikipedia, the free encyclopedia

Matra சொன்னது…

Why bring Hindutva into this ?. All the mainstream media like CNN-IBN, NDTV are spreading this news. These news agencies are typically anti Hindu and soft towards the Italian dictator and her gang members/sycophants.

When sometime back, Minister of State for Home Ramesh Bagwe picked up Rahul Gandhi's shoes for cleaning, these people didn't make much noise.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்