பின்பற்றுபவர்கள்

29 ஜூலை, 2010

தேர்தல் வருது தேர்தல் வருது !

தமிழ்நாட்டில் தேர்தலுக்கான முன்னூட்டங்கள் துவங்கிவிட்டன, கொடை நாடு தோட்டத்தில் ஓய்வெடுத்த ஜெ, போயாஸ் தோட்டத்திற்கு இடம் பெயர்ந்து நாளொரு அறிக்கையும் பொழுதொரு போராட்ட அறிவிப்புக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். கூடவே காங் உட்பட பல்வேறு கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

சாதனை செய்தோம் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதியின் திமுக அரசு ஜெவின் அறிக்கைகளுக்கு பதில் சொல்வதாக நாகரீகம் தாழ்ந்து பேசி அறிக்கை கொடுக்கிறார்கள். இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த ஜெ வழக்குகளுக்கு புத்துயிர் கொடுத்து முடுக்கி விடப்படும் வேலையும் நடக்கிறது. தீர்ப்பு வெளிவர ஸ்டாலின் தலைமையில் ஆர்பாட்டம் நடத்தப்படுமாம். என்ன கேலிக் கூத்து ? அதை ஏன் இவ்வளவு நாள் காத்திருந்து செய்யனும் ? அதே போன்ற ஆர்பாட்டங்களை சங்கர இராமன் படுகொலைக்காக நடக்கும் வழக்குகளுக்கும் ஸ்டாலின் செய்ய வேண்டியது தானே ? கருணாநிதி ஆட்சியில் தான் பெரியவா நிம்மதியாக இருக்கிறாராம். :) வரும் தேர்தலை கருத்தில் கொண்டே மதுவிலக்கு கொண்டுவர திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது, சமூக விரோத குற்றச் செயல்கள் குக் கிராமங்களில் நடந்தாலும் அவையெல்லாம் தடுக்கப்படுவதாக (தமிழகம் அமைதி பூங்காவாக மாறுதாம்) திமுக சார்பு செய்தி ஊடகங்களில் செய்தியாகக் காட்டப்படுகிறது.

60 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு, ஜெ நேர்மையாளர் என்று சொல்லவரவில்லை, அரசியல்வாதிகள் தான் எதையுமே சட்டப்படி சந்திப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் ஆகிற்றே, ஸ்பெக்டரம் ஊழல் 1000ம் கோடிகளில் சொல்லப்படுகிறது, அதை ஒப்பிடும் போது 60 கோடி ஒரு தொகுதிக்கு அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணத்தைவிட குறைவு. திமுகவிற்கு வாழ்வா சாவா என்கிற நிலை தற்போது காங்கிரசின் கைகளில் இருப்பதாக காங்கும், திமுகவும் நினைக்கிறது.

திமுகவை விட்டால் காங்கிரசுக்கு மாற்று வழி இருந்தாலும் திமுகவிற்கு காங்கிரசை விட்டால் மாற்று வழி இல்லை. இதைத் தெரிந்து கொண்டே காங்கிரசு இளங்கோவன் உள்ளிட்டோர் ஒரு ரூபாய் அரிசி மற்றும் மருத்துவக் காப்பீடுகள் மத்திய அரசின் நிதி உதவியால் நடைபெறுவதாகச் சொல்லி பதில் அறிக்கை வரவழைக்கச் செக் வைக்கிறார்கள், அதற்கு நேரடியாக பதில் சொல்லாத கருணாநிதி அமைச்சர்களை விட்டு மென்மையான மறுப்பு கொடுக்கச் சொல்லுகிறார், அதாவது இந்தத் திட்டங்கள் தமிழக அரசின் நிதியில் தான் நடைபெறுகிறதாம்.

நிலமை இப்படியே போனால், காங்கிரசின் நாற்பது ஆண்டு கனவாக, திமுகவிடம் (மிரட்டியே) பேசி சட்டமன்ற தொகுதிகளில் 60 விழுக்காடு இடங்களைக் கூடப் பெற்று காங்கிரசு தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் திட்டம் கூட இருக்கலாம்,

எதிர்தரப்பில் கம்யூனிஸ்டுகள், தேமுதிக மற்றும் உதிரி கட்சிகளுடன் அதிமுக கூட்டணி இடம் பெற்றால் வெற்றிபெறாவிட்டாலும் மாற்றுத்தரப்பு சிறுபான்மை அரசாகவே அமையும்.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழக அரசியலில் மிகுதியாக ஊழல் செய்த கட்சிகள் ஆட்சியில் தொடர்ந்தது இல்லை.

29 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

//ஜெ நேர்மையாளர் என்று சொல்லவரவில்லை//

சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :)

வடுவூர் குமார் சொன்னது…

ஒரு வழியாக இந்த தடவையாவது ஓட்டு போட முடியும் என்று நினைக்கிறேன்.

ஜோ/Joe சொன்னது…

//அதாவது இந்தத் திட்டங்கள் தமிழக அரசின் நிதியில் தான் நடைபெறுகிறதாம்.//

தெரியாமத்தான் கேட்கிறேன் .மத்திய அரசு நிதியிலிருந்து கொடுத்தாலும் என்ன ? அது என்ன இளங்கோவன் பணமா அல்லது காங்கிரஸ் கட்சியின் பணமா ? மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் தான் நிதி கொடுக்கிறது . அவர்களும் இந்த திட்டங்கள் கொடுக்க வேண்டியது தானே .. விட்டா இளங்கோவன் தயவுல தான் ஒரு ரூபா அரிசி திட்டம் செயல்படுத்தப்படுதுண்ணு சொல்வார் போல:)

ஜோ/Joe சொன்னது…

கோவியார் ,
ஏதோ நடுநிலையில் நின்று எழுதுவதாக நீங்கள் ரொம்ப பிரயத்தினப்பட்டாலும் ,அங்கங்கே உங்கள் அடிமன ஆசைகள் வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை :)

யுவகிருஷ்ணா சொன்னது…

நீங்கள் நடுநிலையாளர் என்பதை ஆணித்தரமாக அடித்து பிடித்து நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ/Joe said...

கோவியார் ,
ஏதோ நடுநிலையில் நின்று எழுதுவதாக நீங்கள் ரொம்ப பிரயத்தினப்பட்டாலும் ,அங்கங்கே உங்கள் அடிமன ஆசைகள் வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை :)

4:26 PM, July 29, 2010
Delete
Blogger யுவகிருஷ்ணா said...

நீங்கள் நடுநிலையாளர் என்பதை ஆணித்தரமாக அடித்து பிடித்து நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்!//

நான் கடைநிலை தான், நடுநிலை என்றால் என்ன ? :)

காங்கிரசு தயவினால் தமிழகத்தில் அரசுகள் அமையக் கூடாது என்பதையே விரும்புகிறேன்

தருமி சொன்னது…

//ஜோ/Joe
//ஜெ நேர்மையாளர் என்று சொல்லவரவில்லை//

சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :)//

:))))

//காங்கிரசு தயவினால் தமிழகத்தில் அரசுகள் அமையக் கூடாது என்பதையே விரும்புகிறேன்//

இதில் 'தமிழகத்தில் தி.மு.க. அரசு' என்று ஒரு மாற்றம் செய்தால் சரியாக இருக்குமோ?!

மணிகண்டன் சொன்னது…

கோவி, ஒருவகைல சந்தோசபடுங்க. இந்த முறை தருமி, லக்கி போன்ற உடன்பிறப்புக்கள் மட்டும் தான் வந்து அர்த்தம் கண்டுபிக்கறாங்க :)- இன்னும் சஞ்சய் வரலை !

ராஜரத்தினம் சொன்னது…

//நீங்கள் நடுநிலையாளர் என்பதை ஆணித்தரமாக அடித்து பிடித்து நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்!//

நீங்கள் தான் தூய நடுநிலைமை வாதியாயிற்றே? அதனால்தான் உங்கள் நடுநிலைமை பக்கம் யார்வந்தாலும் உங்களுக்கு புடிக்காது போல. அப்புறம் ஏதாவது கேட்டால் பேதி மூத்திரம் அப்படி இப்படினு உள்றது(Sorry)சாதிக்க, ஆத்திரனு சொல்றீங்களே அதுதான். உங்க நாதஸ்வர கலைஞர் பத்தி அடுத்து ஏதாவது உளறுங்களேன்.

அபி அப்பா சொன்னது…

\\இளங்கோவன் உள்ளிட்டோர் ஒரு ரூபாய் அரிசி மற்றும் மருத்துவக் காப்பீடுகள் மத்திய அரசின் நிதி உதவியால் நடைபெறுவதாகச் சொல்லி பதில் அறிக்கை வரவழைக்கச் செக் வைக்கிறார்கள், அதற்கு நேரடியாக பதில் சொல்லாத கருணாநிதி அமைச்சர்களை விட்டு மென்மையான மறுப்பு கொடுக்கச் சொல்லுகிறார், அதாவது இந்தத் திட்டங்கள் தமிழக அரசின் நிதியில் தான் நடைபெறுகிறதாம்.\\\


என்ன கொடுமை சாமீ இதல்லாம். கலைஞரே சொந்தமா சொன்னது "மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு எத்தனை சதவீதம் அரிசி ஒதுக்குகின்றதோ அதை தான் தமிழ்நாட்டுக்கும் ஒதுக்குகின்றது. எத்தனை மானியம் மற்ற மாநிலத்துக்கு ஒதுக்குகின்றதோ அதை தான் தமிழ்நாட்டுக்கும் ஒதுக்குகின்றது. ஒரு ரூபாய் அரிசி திட்டத்துக்கு என தனியாக எதையும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் கூட அதே ஒதுக்கீடு, அதே மானியம். வேண்டுமானால் இளங்கோவன் மற்ற காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் ஒரு ரூபாய் அரிசி போட பரிந்துரைக்கலாமே. அடுத்து 108 ஆம்புலன்ஸ் வசதிக்காக உலக வங்கியில் தமிழ்நாடு பணம் பெற்று தான் செயல்படுத்தி வருகின்றது. அதை நடைமுறை பயன்பாட்டுக்குக்கு ஆகும் செலவில் ஒரு பகுதி மத்திய அரசு வழங்குவது மட்டுமே உண்மை. மற்றபடி முழு தொகையும் மத்திய அரசு தரவில்லை"

இப்படி தான் கலைஞர் சொல்லியிருக்கின்றார். மற்ற எந்த அமைச்சரும் பதில் சொல்லவில்லை. மண்டபத்தில் எழுதி கொடுத்து அறிக்கை விட வேண்டிய அவசியமும் கலைஞருக்கு இல்லை.

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல அலசல்... அசத்துங்க..வாழ்த்துக்கள்

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

// வரும் தேர்தலை கருத்தில் கொண்டே மதுவிலக்கு கொண்டுவர திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது //
எப்படியோ மதுவிலக்கு வந்தால் எனக்கு சந்தோசம் தான் .
.....
இன்ஷா அல்லாஹ்
http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post_759.html

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்க நாதஸ்வர கலைஞர் பத்தி அடுத்து ஏதாவது உளறுங்களேன்.// சாதிய ரீதியிலான ஈவிகேஎஸ் இளங்கோவன் பாணி தாக்குதல்களுக்கு உடன்பிறப்புகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டால் கம்பேனிப் பொறுப்பேற்க்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்படி தான் கலைஞர் சொல்லியிருக்கின்றார். மற்ற எந்த அமைச்சரும் பதில் சொல்லவில்லை. மண்டபத்தில் எழுதி கொடுத்து அறிக்கை விட வேண்டிய அவசியமும் கலைஞருக்கு இல்லை.//

அபி அப்பா நீங்க சொல்லும் தகவல் சரியாக இருக்கும், நான் எழுதியது தகவல்பிழை, கருணாநிதி ஐயோ கொல்றாங்களேன்னு டப்பிங் எதுவும் இல்லாமல் சொந்தக் குரலில் தானே பேசினார் அதனால் இதை ஒப்புக் கொள்கிறேன்

sathishsangkavi.blogspot.com சொன்னது…

எப்படியோ தேர்தல் வந்தால் நம்ம மக்களுக்கு ரொம்ப சந்தோசந்தான்.... அதுவும் திருமங்கலம் பாணியில் நடந்தா ரொம்ப சந்தோசம்...

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...

ஒரு வழியாக இந்த தடவையாவது ஓட்டு போட முடியும் என்று நினைக்கிறேன்.//

ஓட்டு போடும் அன்று சாவடிக்கு சீக்கிரமாகப் போங்க எல்லாம் போல கள்ள ஓட்டுகளும் பரிணாமம் அடைஞ்சிருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...

//ஜோ/Joe
//ஜெ நேர்மையாளர் என்று சொல்லவரவில்லை//

சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :)//

:))))

//காங்கிரசு தயவினால் தமிழகத்தில் அரசுகள் அமையக் கூடாது என்பதையே விரும்புகிறேன்//

இதில் 'தமிழகத்தில் தி.மு.க. அரசு' என்று ஒரு மாற்றம் செய்தால் சரியாக இருக்குமோ?!//

நான் பச்சையாக கொள்ளையர்களை பகல் கொள்ளையர் ஆக்குவோம் என்று சொல்ல மாட்டேன். நீங்க வெள்ளந்தி

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிகண்டன் said...

கோவி, ஒருவகைல சந்தோசபடுங்க. இந்த முறை தருமி, லக்கி போன்ற உடன்பிறப்புக்கள் மட்டும் தான் வந்து அர்த்தம் கண்டுபிக்கறாங்க :)- இன்னும் சஞ்சய் வரலை !//

வருவாரு ஆனா வரமாட்டாரு

கோவி.கண்ணன் சொன்னது…

// tamildigitalcinema said...

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil///

ஏற்கனவே ஏகப்பட்ட திரட்டிகள், நீங்களாக இணைத்துக் கொள்ளலாம், அதற்கு அனுமதி தேவை இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// மதுரை சரவணன் said...

நல்ல அலசல்... அசத்துங்க..வாழ்த்துக்கள்//

நன்றி சரவணன்

கோவி.கண்ணன் சொன்னது…

//இன்ஷா அல்லாஹ்
http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post_759.html//

நியோ நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// Sangkavi said...

எப்படியோ தேர்தல் வந்தால் நம்ம மக்களுக்கு ரொம்ப சந்தோசந்தான்.... அதுவும் திருமங்கலம் பாணியில் நடந்தா ரொம்ப சந்தோசம்...//

அப்படித்தான் நடக்கும் என்று நம்பலாம்
:)

ராஜரத்தினம் சொன்னது…

//சாதிய ரீதியிலான ஈவிகேஎஸ் இளங்கோவன் பாணி தாக்குதல்களுக்கு உடன்பிறப்புகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டால் கம்பேனிப் பொறுப்பேற்க்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

அவர் செய்துள்ள சாதிய விமர்சனத்திற்கு ரத்தத்தின் ரத்தங்கள் கொடுக்க ஆரம்பித்திருந்தால் இன்று அவர் இந்த புன்னூட்டத்தையே போட்டிருக்க முடியாதே?

ஜோதிஜி சொன்னது…

விமர்சனம் எழுத நினைத்து சில புண் ஊட்டத்தைப் பார்த்தால் பயம் வந்து விட்டது.

நிஜமாகவே ராஜா ரத்தினம் தான்.

உங்களுடைய பழைய பதிவில் கூட்டணி குறித்து குறிப்பிட்டது தான் நடக்கும் போலிருக்கு. காரணம் இங்குள்ள எம்பி எம்பி எம்பி கட்டிடம் கட்டிக்கொண்டுருக்கிறார்.

உடன்பிறப்பு சொன்னது…

கோவி! நீங்கள் பல தவறான தகவல்களை அளித்து இருக்கிறீர்கள். கலைஞர் இளங்கோவனின் குற்றச்சாட்டுக்கு நேரடியாகவே முரசொலியில் பதில் அளித்து இருக்கிறார். உங்களைப் போன்ற சீனியர் பதிவரிடம் இருந்து இப்படிப்பட்ட தவறான தகவல்களை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது கட்டாயத்தின் பேரில் இவ்வாறு நடக்கிறீர்களா என்றும் தெரியவில்லை

உடன்பிறப்பு சொன்னது…

ஏதாவது கட்டாயத்தின் பேரில் இவ்வாறு நடக்கிறீர்களா என்றும் தெரியவில்லை

Unknown சொன்னது…

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

ராஜ நடராஜன் சொன்னது…

எந்த ஊரு கிளி ஜோசியம் இது:)

இப்போதைக்கு தேர்தல் இல்லைன்னு தேர்தல் கமிஷனர் அறிக்கை விட்டு விட்டார்!

ARIVUMANI, LISBON சொன்னது…

//ஜெ நேர்மையாளர் என்று சொல்லவரவில்லை//
அதை மட்டும் தான் நீங்க இன்னும் சொல்லவில்லை.

உண்மையில் இது ஒருசார்பு தன்மையோடு எழுதப் பட்டிருக்கிறது.(நடுநிலை அல்ல)

நீங்கள் கூறியது போலவே 'தகவல் பிழை'களும் உள்ளன.

//உங்களைப் போன்ற சீனியர் பதிவரிடம் இருந்து இப்படிப்பட்ட தவறான தகவல்களை எதிர்பார்க்கவில்லை.//
இக்கருத்தை நானும் வழி மொழிகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்