பின்பற்றுபவர்கள்

28 ஜூலை, 2010

அரசு ஊழியன்களின் கய(ட)மை உணர்ச்சியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி !

இலவச பேருந்து அட்டை எடுத்துவராத மாணவி அரசு பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட அந்த மாணவி அவமான உணர்ச்சியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.

ஒருவேளை நுழைவு அனுமதி அட்டை வழியில் தொலைந்தாலோ, யாரோ திருடிக் கொண்டாலோ, பள்ளி மாணவி என்பதை நிருபனம் செய்யும் சீருடைத் தவிர்த்து அவளை பேருந்தில் அனுமதிக்க வேறு என்ன ஆவணம் இலவச பேருந்துகளுக்கு தேவைப்படும் என்பது தெரியவில்லை.

அரசு ஊழியர்களில் 75 விழுக்காடு வரை இரக்கமட்டவர்களாகவே நடந்து கொள்கிறார்கள், 'ரூல்ஸ்' பேசுவது என்பது இயலாதவர்களிடம் மிகவும் கடுமையான நடைமுறையாகவே பின்பற்றுகிறார்கள். ஒரு அரசு ஊழியன் வேலை நிறுத்தம் செய்வது கூட சட்டபடி குற்றம் தான் என்றாலும் தொழிற்சங்கம் என்ற பெயரில் அத்தகைய சட்ட மீறல்களை செய்யும் போது இவர்களது மனசாட்சியும் ரூல்ஸும் என்ன ஆனது என்று தெரியவில்லை. பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களின் (குடும்பம் தவிர்த்த) நெருங்கிய உறவினர்கள் யாரும் அந்த ஓட்டுனர் பணி செய்யும் பேருந்தில் இலவச பயணம் தான், அப்போதெல்லாம் ரூல்ஸ் பேசுவது கிடையாது. பேருந்தில் அனுமதிக்கப்படும் அளவை விட கூடுதலாக லக்கேஜ் ஏற்றி கையூட்டுப் பெரும் போதும் இவர்களுக்கு ரூல்ஸ் கிடையாது.

அரசியல்வாதிகளாலும், அவர்களின் அரசு விழாக்கள், பாராட்டு திருவிழாக்கள் என்ற பெயரில் பொதுமக்களின் வரிப்பணம் கோடிக்கணக்காக இறைக்கப்படும் நாட்டில் சீருடைகளுடன் வரும், பள்ளி மாணவிகளை, குழந்தைகளை எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லாமல் இலவசமாகக் கூட்டிச் சென்றால் என்ன இழவு நிகழ்ந்துவிடப் போகிறது ?

முந்தைய பதிவு :

அரசு ஊழியன் என்னும் கிங்கரகர்கள் !

படம் / செய்தி : நன்றி தினமலர்

8 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

KUTHTHUNGA MUTHALALI KUTHTHUNGA

அரசு ஊழியர்களில் பலர் வேலை செய்ய விருப்பமே இல்லாதவர்கள் போலவே செய்கிறார்கள் , பார்க்கும் போதே கோவம் வரும்

priyamudanprabu சொன்னது…

FOR FOLLOWUP

Karthick Chidambaram சொன்னது…

வருத்தத்திற்கு உரிய செய்தி

Unknown சொன்னது…

இலவச பேருந்து அட்டை மாணவர்களால் அவர்களுக்கு அந்த ’டிரிப் கலெக்சன் பேட்டா’ குறைகிறதே என்ற வயத்தெரிச்சல்தான். இவர்களைக் கண்டால் நிறுத்தாமல் போவது, அப்படியே ஏற்றிக்கொண்டாலும் இழிவாக நடத்துவது என்று இவர்களின் செய்கைகளை மாற்றுவதற்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.

வால்பையன் சொன்னது…

//குழந்தைகளை எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லாமல் இலவசமாகக் கூட்டிச் சென்றால் என்ன இழவு நிகழ்ந்துவிடப் போகிறது?//


அரசு பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் சலுகை என்று நினைக்கிறேன், தனியார் பள்ளி குழந்தைகள் ஆட்டோ, வேன், தனியார் பஸ் என்று தான் பயணிக்கிறார்கள்!. தனியார் போலவே அரசும், அரசு பள்ளிகளுக்கு தனி பஸ் விட்டால் என்ன!?

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//அரசு ஊழியர்களில் 75 விழுக்காடு வரை இரக்கமட்டவர்களாகவே நடந்து கொள்கிறார்கள்,//


ம்ம்ம் என்னத்த சொல்ல?

Kovilpatti Anandhan சொன்னது…

ஊர அடிச்சி பிடுங்கும் கொலைகார கும்பல் தான் அரசு ஊழியர்

Unknown சொன்னது…

அரசு ஊழியர்களின் அடாவடித்தனம் ஊரே அறிந்ததுதான்.

இவர்களை சுலபமாக திருத்த ஒரே வழி இவர்களது குடும்பத்தில் கை வைப்பதுதான்.

இவர்கள் செய்யும் தவறுக்கு இவர்களது குடும்பம் என்ன செய்யும் என்று கேட்காதீர்கள்!!?

அரசு ஊழியர்களின் அராஜகத்திற்க்கு அதிகமான நேரங்களில் அவர்கள்து குடும்பமும் துணை. குடும்பத்தினரது அதிகளவு ஆசையே ஊழலுக்கும் காரணமாகிறது.

அடாவடித்தனம் பண்ணும் ஊழியரின் குடும்பத்தை ஒரு முறை மிரட்டிப் பாருங்கள், மறுநாளிலிருந்து அவர் எவ்வளவு கவனமாக,நேர்மையாக வேலை செய்கிறார் என்று புரியும்.

இது இந்தியாவில் இருக்கும் எனது
நண்பர் ஒருவரின் டெக்னிக். ஒரு தாசில்தாரே இதற்க்கு பயந்து மாறினார்.

நான் எனது நண்பரிடம் கேட்டேன் "நீ மிரட்டுவது பொய் என்று தெரிந்துவிட்டால் உனது வித்தை பலிக்காதே" என்று, அதற்க்கு அவன் "யார் சொன்னது, ஓங்கி ஒரு அறை அவன் பொண்டாட்டிக்கு வச்சு பாரு ஒழுங்கா வேலை செய்யுறானா இல்லையான்னு தெரியும்"

இந்த வழி முறை தப்பு என்பது தெரியும். ஆனால் சில வேளைகளில் தப்புதான் தவறைத் திருத்தும் மருந்து.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்