பின்பற்றுபவர்கள்

21 ஜூலை, 2010

நீங்களும் செய்யலாம் !

எல்லோரும் ஏழை எளியோருக்கு உதவம் மனப்பான்மை நிறையவே உள்ளது, கேட்டால் செய்யலாம் என்ற மனநிலையில் இருப்பது வழக்கம், நமக்கும் செலவினங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பதும் உண்மையே. நம் பொருளீட்டலின் சிறு அளவிலான தொகையையேனும் வறியோர்களுக்கு அளிப்பது நம் வாழும் சமூகத்திற்கு செய்வது நம் நல்வாழ்க்கையின் ஒர் பகுதியாகும். மதங்களின் வழியாக பின்பற்றோர்வோர் அனைவருக்கும் இத்தகைய அறிவுறுத்தல்கள் இருந்தாலும் அவ்வமைப்புகள் மூலம் செய்வது தற்கால சூழலில் ஏழை எளியோரை முழுமையாக சென்று அடைவதில்லை மாறாக மதம் சார்ந்த நிறுவனங்கள் அவற்றைப் பெற்றுக் கொண்டு மனிதர்களுக்கிடையே பிரிவினையைத்தான் வளர்க்க அவ்வுதவியை முறைகேடாக பயன்படுத்துகின்றன, ஏழை எளியோர் பயன் அடைவதில்லை. இதற்கு மாற்றாக நேரிடையாகவே செயல்பட்டு தேவைப்படுவர்களுக்கு உதவுவது நல்ல பயனை அளிக்கும்

*****

நேற்று பதிவர் நண்பர் திரு குமரன் அவர்களின் இடுகையைப் பார்த்தேன், அவர் தமிழகம் செல்லும் முன் வலைச்சரம் சீனா ஐயாவைத் தொடர்பு கொண்டு 100க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு சீருடை வழங்க ஏற்பாடு செய்து செய்தும் முடித்துள்ளார். அதையும் மிகவும் சீனா ஐயா மற்றும் சீனா ஐயாவின் துணைவியார் திருமதி செல்விஷங்கர் அவர்களும் குறிப்பிட்ட பள்ளிக்கே சென்று உதவி தேவைப்படும் மாணவ மாணவியரின் உடை அளவுகளை எடுத்து அளவுக்கேற்ற உடைகளை தைத்து வைத்திருக்க, நண்பர் குமரன் இல்லத்தினருடன் சென்று மாணவ மாணவியருக்கு உடைகளை வழங்கி மாணவர்களுக்கு எதிர்கால நம்பிக்கை ஊட்டும் வண்ணம் ஒரு சில நற்சொற்களைக் கூறி வந்திருக்கிறார்கள். குமரன் இதுபற்றி பதிவில் எழுதாவிட்டால் இப்படியெல்லாம் கூட நம்மால் உதவ முடியுமா என்று தெரிந்திருக்காது. சிங்கையில் வசிக்கும் நண்பர் திரு பாரி.அரசுவும் கூட தனது திருமணத்தின் போது இவ்வாறான உதவிகள் செய்திருக்கிறார், தொடர்ந்தும் செய்துவருகிறார். ஆனால் நெருங்கியவர்கள் தவிர்த்து யாருக்கும் தெரியாது. வெளியில் சொல்லாமல் உதவிகள் செய்வது மன நிலையைப் பொருத்தது என்றாலும் வெளியில் சொல்லுவது பலரையும் அவ்வாற உதவிகளைச் செய்யத் தூண்டும் என்பது தவிர்த்து வேறொன்றும் இல்லை.

வெளிநாடுகளில் பிறந்த இந்திய குழந்தைகளுக்கு ஏழ்மையின் தாக்கம் தெரியாது, அதனால் உதவி செய்யும் மனப்பான்மை இயற்கையாக ஏற்படாது, ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்யும் போது அந்தக் குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் கைகளினால் அந்த உதவிகளை வழங்கும் போது, அவர்கள் ஓரளவு நல்ல ப்ழக்க வழக்கம், உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வர். என் மகளுக்கு அடிக்கடிச் சொல்லுவேன், எத்தனையோ குழந்தைகள் ஒருவேளை உணவுக்கு தவிக்கிறார்கள், நீ சோற்றை வீணடிக்காதே, சாப்பிடும் போது சுற்றிலும் சிந்தாதே அன்று அடிக்கடிச் சொல்வது உண்டு. இருந்தாலும் அத்தகைய குழந்தைகளைப் பார்க்காத வரையில் அப்பா சொல்வது உண்மை என்று உணரவே மாட்டாள்.

நண்பர் குமரன் சீருடைகளை தன்னுடைய மகன் கையினால் வழங்கச் செய்ய வைத்ததன் மூலம், அவனுக்கு நாம ஏன் அவர்களுக்கு உடை வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி காரணங்களைத் தெரிந்து கொண்டிருப்பான். கேட்டதும் கிடைக்க வேண்டும் என்கிற மன நிலை, பிடிவாதம் குறையும், அதைவிட நாமும் பெரியவனாக வளர்ந்து இது போல் பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்கிற மன நிலை துளிர்த்திருக்கும்.

அதுபோலவே உதவி பெற்ற மாணவர்களில் 100க்கு 5 பேருக்காவது நாமும் நன்றாக படித்து இது போல் வாங்கிக் கொடுக்க வேண்டும், பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு நன்றாக படிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்கும். நாம் வெளிப்படையாக செய்யும் உதவியின் மற்றொரு பலன் பிறரை அவ்வாறு செய்யத் தூண்டுவது, மற்றபடி அதில் கிடைக்கும் புகழ், மெய் சிலிர்ப்பு தற்காலிகமானது என்றாலும், உதவும் நல்லதொரு பொருளியல் நிலையும், அதற்கு ஏற்ற மனமும் நமக்கு அமையப் பெற்றிருக்கிறதே, அதற்கு நம் இல்லத்தினரும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதாக கிடைக்கும் மன நிறைவு என்ன விலை கொடுத்தாலும் பெற முடியாத ஒன்று.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுக்காரன் ஏழ்மையை படம் எடுத்துப் போகிறார்கள் என்பதாக எத்தனையோ முறை வருத்தப்படுகிறோம் ஏழ்மையைப் போக்க நாம் என்ன செய்தோம் என்கிற கேள்வியை என்றாவது நாம் கேட்டிருந்தால் நமக்கும் உதவும் மன நிலை வாய்க்கப் பெரும். நம்மால் முடிந்த அளவுக்கு உதவு முடியும், அதற்கு தேவை பொருள் மட்டுமே இல்லை மனமும் தான். நமக்கு தெரியாதவர்கள் எவ்வளோ பேர் இருந்தாலும் நமக்கு தெரிந்து உதவி தேவைப்படுபவர்களுக்கு நம்மால் ஆனதை செய்ய முடியும்.

108 மாணவ மாணவியருக்கு சீருடைகள் வழங்கிய நண்பர் குமரன் மற்றும் அவர் இல்லத்தினர், அவர்களுக்கு முன்னேற்பாடுகள் செய்து கொடுத்த திரு சீனா ஐயா மற்றும் அவரது துணைவியார் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

23 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

மிக நன்றி - இது மாதிரியான் இடுகைகள் இன்னும் அதிகம் வர வேண்டும். கருத்து - சிந்தனை - அனைத்தும் நன்று

நல்வாழ்த்துகள் கோவி
நட்புடன் சீனா

துளசி கோபால் சொன்னது…

ஆஹா..... அருமை.

மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு.

குமரன் குடும்பம் நல்லா இருக்கணும். உதவிய சீனா & குடும்பமும் நல்லா இருக்கணுமுன்னு மனமார வாழ்த்துகின்றோம்.

VSK சொன்னது…

நண்பர்கள் குமரன், சீனா ஐயாவுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், இப்படி நல்லதொரு பதிவையிட்ட கோவியாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!

கோவி.கண்ணன் சொன்னது…

// VSK said...

நண்பர்கள் குமரன், சீனா ஐயாவுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், இப்படி நல்லதொரு பதிவையிட்ட கோவியாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!//

வீஎஸ்கே,

செய்தவருக்கு அவரது வலைப்பதிலும் பாராட்டுங்கள்.

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger cheena (சீனா) said...

அன்பின் கோவி

மிக நன்றி - இது மாதிரியான் இடுகைகள் இன்னும் அதிகம் வர வேண்டும். கருத்து - சிந்தனை - அனைத்தும் நன்று

நல்வாழ்த்துகள் கோவி
நட்புடன் சீனா//

செயல்படுத்திய உங்களுக்கும், குமரனுக்கும் தான் பாராட்டுகள்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...

ஆஹா..... அருமை.

மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு.

குமரன் குடும்பம் நல்லா இருக்கணும். உதவிய சீனா & குடும்பமும் நல்லா இருக்கணுமுன்னு மனமார வாழ்த்துகின்றோம்.//

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அம்மா, தாங்கள் செய்யும் உதவிகளையும் பலருக்கும் அறிய தந்தால் பலரையும் அவ்வாறு செய்யத் தூண்டும்.

priyamudanprabu சொன்னது…

வெளியில் சொல்லாமல் உதவிகள் செய்வது மன நிலையைப் பொருத்தது என்றாலும் வெளியில் சொல்லுவது பலரையும் அவ்வாற உதவிகளைச் செய்யத் தூண்டும் என்பது தவிர்த்து வேறொன்றும் இல்லை.

///

YES

priyamudanprabu சொன்னது…

108 மாணவ மாணவியருக்கு சீருடைகள் வழங்கிய நண்பர் குமரன் மற்றும் அவர் இல்லத்தினர், அவர்களுக்கு முன்னேற்பாடுகள் செய்து கொடுத்த திரு சீனா ஐயா மற்றும் அவரது துணைவியார் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

அருண்மொழிவர்மன் சொன்னது…

கோவி கண்ணன்,
இது தான் எனது கருத்தும். உதவி செய்ய முயலும் போது அமைப்புகளூடாக செய்யும் உதவிகள் பெருமளவு முறைகேடாகவே நடந்த அனுபவத்ஹ்டில், இயலுமானவரை நேரடியாகவோ அல்லது (வெளி நாட்டில் இருப்போர்) நம்பிக்கைக்குரிய தனி மனிதர்களூடாகவே முன்னெடுக்கும் இது போன்ற முயற்சிகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்மொழிவர்மன் said...

கோவி கண்ணன்,
இது தான் எனது கருத்தும். உதவி செய்ய முயலும் போது அமைப்புகளூடாக செய்யும் உதவிகள் பெருமளவு முறைகேடாகவே நடந்த அனுபவத்ஹ்டில், இயலுமானவரை நேரடியாகவோ அல்லது (வெளி நாட்டில் இருப்போர்) நம்பிக்கைக்குரிய தனி மனிதர்களூடாகவே முன்னெடுக்கும் இது போன்ற முயற்சிகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்//

நான் உங்கள் பதிவை 'சொல்லுக்கு பொருள் காலத்தால் மாறும்னு' படித்து மேய்ந்து கொண்டிருந்த போது நீங்கள் இங்கே பின்னூட்டம் இட்டு நல்லக் கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
:)

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

உங்களை போன்ற உதவும் உள்ளங்களை நண்பர்களாக பெற்றதன் மூலம் எம் வலையுலக வாழ்க்கை தன்னிறைவடைகிறது. மிக்க மகிழ்ச்சி..

இராகவன் நைஜிரியா சொன்னது…

நண்பர் குமரை நினைத்துப் பார்க்கையில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்களின் மனம் திறந்த பாராட்டு அதை இரண்டு மடங்காக்குகின்றது

Karthick Chidambaram சொன்னது…

திரு குமரன், திரு, பாரி, திரு சீனா ஐயா, திரு கோவி - மற்றும் உதவும் நல்ல உள்ளங்கள் யாவருக்கும் பாராட்டுக்கள். நன்றிகள். வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

சீனா ஐயாவும் குடும்பத்தினரும், குமரனும் அவரது குடும்பத்தினரும் போற்றுதலுக்குரியவர்கள்.

வறுமையான ஒரு குடும்பத்துக்கு ஒரு சிறு தொழில் தொடங்க உதவி, அவர் அடுத்து முறையும் யாரிடமும் கையேந்தாமல் இருக்கச் செய்யும் முயற்சிதான் குழுவாய் சேர்ந்து செய்வதன் நோக்கம். ஒரு ஊரில் வருடத்துக்கு மூன்று நான்கு பேர் இவ்வாறு கைதூக்கி விடப்பட்டால் ஏழ்மையில்லாது போகும் என்பதுதான் திட்டத்தின் நோக்கம். ஆனாலும் நீங்கள் சொல்வது போல் சில நிறுவனங்கள் தம் பெயரை முன்னிறுத்த அவற்றைப் பயன்படுத்துகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நல்ல இடுகை. குறிப்பாக கீழுள்ள வரிகள்
//நம்மால் முடிந்த அளவுக்கு உதவு முடியும், அதற்கு தேவை பொருள் மட்டுமே இல்லை மனமும் தான். நமக்கு தெரியாதவர்கள் எவ்வளோ பேர் இருந்தாலும் நமக்கு தெரிந்து உதவி தேவைப்படுபவர்களுக்கு நம்மால் ஆனதை செய்ய முடியும்//
பாராட்டுகள ஜிகே.
இது போன்ற இடுகைகள் பல பக்கங்களிலும் தொடர்வது, தேய்ந்து கொண்டிருக்கும் மனிதம், வளர வழி வகுக்கலாம்.

வால்பையன் சொன்னது…

வணங்கி கொள்கிறேன்!

என்னால் ஆனதையும் செய்ய முயற்சிக்கிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டம் அளித்து உதவியர்களைப் பாராட்டிய,

பிரபு,
இராகவன்,
சுல்தான் ஐயா,
கார்திக்,
ஸ்வாமி ஓம்கார் மற்றும்
வால்பையன்

ஆகியோருக்கு பெரும் நன்றி!

பெயரில்லா சொன்னது…

நல்ல செயலை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்லதொரு பகிர்வு கோவி அண்ணா

இது பலரையும் சென்றடைய வேண்டிய விசயம்

நாடி நாடி நரசிங்கா! சொன்னது…

Thanks: - great service

rajesh

கோவி.கண்ணன் சொன்னது…

சதீஷ்குமார்,
அக்பர்,
நரசிம்மரின் நாலாயிரம்

ஆகியோருக்கு மிக்க நன்றி !

Test சொன்னது…

புகைபடங்களுக்கும் , தகவல்கலுக்கும் நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நற்செயலை முன்னெடுத்து செய்த குமரன், சீனா, செல்வி மூவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜோ/Joe சொன்னது…

நண்பர்கள் குமரன், சீனா ஐயாவுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், இப்படி நல்லதொரு பதிவையிட்ட கோவியாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்