பின்பற்றுபவர்கள்

15 ஜூலை, 2010

மதப் பித்து !

பொதுவாக சாதி மதம் பிடிக்காதவங்க தான் அது பற்றி மிகுதியாகப் பேசுவதாகக் குற்றச் சாட்டுகள் உண்டு, அது 100 விழுக்காடு உண்மையே. சட்டையில் தெறித்த சந்தனம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, சாக்கடை தெறித்தால் அதுபற்றிக் கவலைப்படக் கூடாது என்பதாகத்தான் அக்கருத்தைக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதாவது சாதி மதத்தை சமூக ஜவ்வாதாக நினைப்பவர்கள் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். சாக்கடையாக நினைப்பவர்கள் தூப்புரவு செய்ய வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

*****

சிங்கத்தின் சொர்கம் என்னவாக இருக்கும் ? கொளுத்த மான்கள் நிறைந்திருக்கும் இருக்கும் ஒரு காடு, பன்றிக்கு ? சொல்லத் தேவை இல்லை. கொசுக்களின் சொர்கம் கூவம் ஆறு. மனிதர்களின் சுவர்க்கக் கனவுகள் கூட இப்படித்தான், நாம் எதை மகிழ்வாக நினைக்கிறோமோ அதைத்தாண்டி நம் சிந்தனைகள் செல்லாது, மதங்கள் காட்டும் சுவர்கங்கள் அனைத்துமே மனித மன சிந்தனை அடிப்படையில் எழுந்தவையே. அவதார் படம் படைப்புத் திறனின் உச்சம், அங்கு புற உலகில் வாழும் மனிதர்கள் துன்பமற்றவர்களாக இருக்கிறார்கள், அங்கும் கொடிய விலங்குகள் உண்டு என்றாலும் ஒன்றை ஒன்று வேட்டையாடுதல் என்பது கிடையாது, ஒன்றை ஒன்று சார்ந்து உதவி வாழ்ந்துவந்ததாகக் காட்டப்பட்டது, மனித சிந்தனைக்கு முரணற்றக் காட்சிகள் அவை, விதவிதமான விலங்குகள் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சி என்ற சூழல் இருப்பதாக நேரடியாகச் சொல்ல முடியாமல் அவை ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்வதில்லை, அதாவது அமைதியான சூழலே மகிழ்ச்சியானவை என்பதாக அந்த இயக்குனர் காட்சிகளை அமைத்திருந்தார், அந்த சூழல் நரகம் ஆகுவது மனிதப் படையெடுப்புகளால் என்பதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும், மற்றபடி அந்த நிலத்தில் நரகம் என்று ஒன்று இருப்பதாகவும், மகிழ்ச்சி நிறைந்த உலகமாகவோ காட்டப்படவில்லை, மாறாக அமைதி நிறைந்த உலகமாகக் காட்டப்பட்டது, அந்தப் படத்தின் கற்பனையில் எனக்கு பிடித்திருந்த காட்சிகளே அங்கிருந்த சூழலை மிக அழகாக கவித்துவமாக காட்சி படுத்தி இருந்தவை.

மனித கற்பனையின் சுவர்கங்கள் இப்படிப்பட்டதாக இருந்தால் கூட என்னால் ஏற்க முடியும். ஆனால் மதங்கள் காட்டும் சுவர்கங்கள் இப்படியா ? இந்திரபுரியாகட்டும், ஆப்ரகாமிய மதங்கள் காட்டும் சுவர்கங்கள் ஆகட்டும் அவை அனைத்தும் பெண்களை மையப்படுத்திய மகிழ்ச்சி அங்கு நிலைத்திருப்பதாகவே சொல்லுகின்றன. துவக்கம் முதலே ஆணுக்கு இருக்கும் பெண்களின் மீதான அளவிட முடியாத ஆசை ஆண்கள் படைத்த மதங்களின் சுவர்க்க கனவுகளிலும் பதிக்கப்பட்டு இருக்கின்றன. எந்த ஒரு மதத்தையும் பெண்கள் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஒருவேளை பெண்கள் அமைக்கும் மதமாக இருந்திருந்தால் நல்லக் கணவன் அங்கு கிடைப்பன் என்பாதாக சொல்லப்பட்டு இருக்குமோ, ஆசை அல்லது ஏக்கம் ஆகியவை உளவியல் வழியான விருப்பங்கள் ஆண்கள் படைத்த சுவர்கங்களின் பலன்களாகக் காட்டப்படுவது என்பதைத் தவிர்த்து மதக் கற்பனைச் சுவர்கங்களில் வேறொன்றும் இல்லை. அல்லது மதங்களின் சுவர்கம் என்பது அம்மதங்களை ஏற்றுக் கொண்டவர்களின் மாபெரும் கனவுலகம் எனலாம்.

எனக்கு எதாவது ஒரு மதத்தில் நல்ல பிடிப்பு இருந்தால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் வேற்று மதத்தினராக இருக்கும் சூழலில் என் நண்பன் குறித்து நான் நினைப்பது 'இறைவன் நாடினால் (விரும்பினால்) இவனும் ஒரு நாளைக்கு நம் மதத்தை ஏற்றுக் கொள்வான், இவனும் என்னுடன் சுவர்கத்தில் இருப்பான்' இணை பிரியாத நண்பர்கள் எனும் போது இப்படி நினைப்பது வியப்பொன்றும் இல்லை. பிற மதத்தைச் சேர்ந்த நெருக்கமான நண்பர்களை உடைய மதப்பாற்றாளர்கள் எவரேனும் இப்படி நினைக்காமல் இருப்பது உண்டா ? இல்லை என்றே நான் நினைக்கிறேன். அப்படி இருப்பவர் எவரும் உண்மையான நெருக்கம் கொண்ட நண்பராக இருக்கவும் முடியாது. இவற்றை எதற்குச் சொல்கிறேன் என்றால் நம்முடைய நம்பிக்கையும் நம்முடைய சூழலும் சேர்ந்தே பயன்(ண)ப்பட வேண்டும் என்று நாம் நினைப்போம், அந்த அளவுக்கு மனித மன மத நம்பிக்கை மனிதனை மாற்றிவிடும். ஆனாலும் இப்படியான மன உணர்வுகள் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியானவை அல்லது இது போன்ற மத நம்பிக்கைகள் ஒரு வேளை பொய்யானதாகக் கூட இருக்கலாம் என்பதை மட்டும் ஏற்க மறுப்பர்.

19 கருத்துகள்:

Karthick Chidambaram சொன்னது…

மதம் பற்றிய தங்கள் கருத்துக்களை முழுமையாக ஏற்கிறேன். அவர் அவர் மதம் அவர் அவர் உயர்வு.

Robin சொன்னது…

//ஆப்ரகாமிய மதங்கள் காட்டும் சுவர்கங்கள் ஆகட்டும் அவை அனைத்தும் பெண்களை மையப்படுத்திய மகிழ்ச்சி அங்கு நிலைத்திருப்பதாகவே சொல்லுகின்றன. // பெண்களை மையப்படுத்திய மகிழ்ச்சி இஸ்லாமிய மதத்தில் மட்டுமே உண்டு, வேறு எந்த ஆப்ரகாமிய மதத்திலும் கிடையாது.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/சாக்கடையாக நினைப்பவர்கள் தூப்புரவு செய்ய வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொண்டே தான் இருப்பார்கள்./

துப்புரவு செய்வதாகச் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் கதையைத் தமிழ் நாட்டில் அறுபது வருடங்களாகப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்?

அதெப்படி உங்களால் இப்படி ஒரு சீரியசான காமெடியை அலுப்பில்லாமல் தொடர்ந்து செய்ய முடிகிறது?

கோவி.கண்ணன் சொன்னது…

//துப்புரவு செய்வதாகச் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் கதையைத் தமிழ் நாட்டில் அறுபது வருடங்களாகப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்?

அதெப்படி உங்களால் இப்படி ஒரு சீரியசான காமெடியை அலுப்பில்லாமல் தொடர்ந்து செய்ய முடிகிறது?//

என்ன பார்திங்க ? போய் வடமாநிலங்களில் பார்த்துவாருங்கள் வேறுபாடு தெரியும். இருந்தாலும் மோடி அளவுக்கு மலம் அள்ளுவதை கடமையாகச் செய்தால் முக்தி பெறலாம் என்று சொல்லும் துணிவு யாருக்கும் கிடையாதுன்னு நீங்க வெளிப்படையாகச் சொல்லலாம்

உமர் | Umar சொன்னது…

//மதங்கள் காட்டும் சுவர்கங்கள் அனைத்துமே மனித மன சிந்தனை அடிப்படையில் எழுந்தவையே.//

என்ன நீங்க, இப்படி சொல்லிட்டீங்க? அவங்கள்ள ஒருத்தரு ஒரே இரவுல விண்வெளி பயணம் போயி சொர்க்கத்தை, மோசஸை எல்லாம் பாத்துட்டு வந்திருக்காராம். பாத்துட்டு வந்தவரே சொன்னதுக்கு அப்புறமும் நம்பாம இருக்க அவங்க என்ன சிந்திக்கத் தெரியாதவங்களா?

ஒரு இரவுல எப்படி விண்வெளி பயணம் போக முடியும்ன்னு மட்டும் மறந்தும் சிந்திச்சிற மாட்டாங்க.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

வடமாநிலம் போய்ப் பார்ப்பது இருக்கட்டும்! சொந்த மண்ணிலேயே நீதிக் கட்சி தொடங்கி, திகவாகி திமுகவாகி ஆனதெல்லாம் நான்கைந்துமுறை பிளவுபட்டு "நாந்தேன் ஒரிஜினல் மத்ததெல்லாம் டூப்புன்னு" சீர் திருத்தச் செம்மல் அவதாரம் எடுத்து அறுபது ஆண்டுகளாகத் தொண்டு செய்த பிறகும் கூட, சாதீயப் பிடிமானங்கள் இந்த சீர்திருத்தவாதிகளுடைய கூடாரங்களிலேயே வலுவாகியிருப்பதை முதலில் பாருங்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

// கிருஷ்ணமூர்த்தி said...

வடமாநிலம் போய்ப் பார்ப்பது இருக்கட்டும்! //


ஏன் இருக்கட்டும், அவற்றையும் தெரிந்து பேசினால் தானே தமிழகத்தில் மாற்றம் நடந்திருக்கிறதா, ஏமாற்றம் நடந்தி இருக்கிறது என்று தெரியும் ?

//சொந்த மண்ணிலேயே நீதிக் கட்சி தொடங்கி, திகவாகி திமுகவாகி ஆனதெல்லாம் நான்கைந்துமுறை பிளவுபட்டு "நாந்தேன் ஒரிஜினல் மத்ததெல்லாம் டூப்புன்னு" சீர் திருத்தச் செம்மல் அவதாரம் எடுத்து அறுபது ஆண்டுகளாகத் தொண்டு செய்த பிறகும் கூட, சாதீயப் பிடிமானங்கள் இந்த சீர்திருத்தவாதிகளுடைய கூடாரங்களிலேயே வலுவாகியிருப்பதை முதலில் பாருங்கள்!//

இதற்கு பதிலாக தினமலர் திருந்தியதா, துக்ளக் திருந்தியதான்னு இல்லை 'நாங்கள் தான்' திருந்தினோமான்னு மார்தட்டி இருக்கலாம்

THE UFO சொன்னது…

அன்பின் கோவி...
//அவை அனைத்தும் பெண்களை மையப்படுத்திய மகிழ்ச்சி அங்கு நிலைத்திருப்பதாகவே சொல்லுகின்றன.// --இதுமட்டுமல்ல...
இன்ன்ன்ன்ன்ன்னும் நிரய்ய்ய்ய்ய்ய்ய்ய இருக்கின்றன. படித்து அறிந்து கொள்ளுங்கள்.

வால்பையன் போன்றோரின் ஒருவரி (நித்தியகண்ணி) கமெண்டை படித்துவிட்டு அந்த புரிதலில் அறிவு போதுமென்று மனநிறைவுற்று ஆபிரகாமிய மதங்கள் அனைத்தையும் கரைத்து குடித்துவிட்டதுபோல பதிவிட வேண்டாம்.

@கிருஷ்ணமூர்த்தி...
//சொந்த மண்ணிலேயே நீதிக் கட்சி தொடங்கி, திகவாகி திமுகவாகி ஆனதெல்லாம் நான்கைந்துமுறை பிளவுபட்டு "நாந்தேன் ஒரிஜினல் மத்ததெல்லாம் டூப்புன்னு" சீர் திருத்தச் செம்மல் அவதாரம் எடுத்து அறுபது ஆண்டுகளாகத் தொண்டு செய்த பிறகும் கூட, சாதீயப் பிடிமானங்கள் இந்த சீர்திருத்தவாதிகளுடைய கூடாரங்களிலேயே வலுவாகியிருப்பதை முதலில் பாருங்கள்!//--இதே சாதிய கருத்துக்களை தமிழர்களின் அடிமனத்திலிருந்தே வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிந்திருக்கும் இஸ்லாத்தின் சாதனை பற்றி...?!?

கோவி.கண்ணன் சொன்னது…

// UFO said...

அன்பின் கோவி...
//அவை அனைத்தும் பெண்களை மையப்படுத்திய மகிழ்ச்சி அங்கு நிலைத்திருப்பதாகவே சொல்லுகின்றன.// --இதுமட்டுமல்ல...
இன்ன்ன்ன்ன்ன்னும் நிரய்ய்ய்ய்ய்ய்ய்ய இருக்கின்றன. படித்து அறிந்து கொள்ளுங்கள்.

வால்பையன் போன்றோரின் ஒருவரி (நித்தியகண்ணி) கமெண்டை படித்துவிட்டு அந்த புரிதலில் அறிவு போதுமென்று மனநிறைவுற்று ஆபிரகாமிய மதங்கள் அனைத்தையும் கரைத்து குடித்துவிட்டதுபோல பதிவிட வேண்டாம்.//

உங்கள் தகவலுக்காக, வால்பையனுக்கு இராண்டுக்கும் முன்பே தருமி ஐயா நிறைய எழுதினார். நான் அப்போதிலிருந்தே படிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//--இதே சாதிய கருத்துக்களை தமிழர்களின் அடிமனத்திலிருந்தே வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிந்திருக்கும் இஸ்லாத்தின் சாதனை பற்றி...?!?//

இஸ்லாத்தில் சாதியம் வினவு பதிவு சுட்டி வேண்டுமானால் தருகிறேன். அப்படியே இல்லேன்னு நீங்கள் வைத்துக் கொண்டாலும் இனவேறுபாடுகளைக் களைய இஸ்லாத் என்ன செய்தது ? பாகிஸ்தான் மசூதிக்குள் மனித வெடிகுண்டுகள் வெடிப்பது எதற்காக இஸ்லாமியர்களின் ஆதரவுடன் அகற்றப்பட்ட அழிக்கப்பட்ட ஈராக் (அதிபர்) பற்றியெல்லாம் நான் எதுவும் கேட்கமாட்டேன், ஏனென்றால் நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்

ssk சொன்னது…

கடவுள் சமாச்சாரத்தை எதிர்க்கும் எனக்கு மெத்த படித்த பலர் அவர் தம் அறிவை பயன் படுத்த மாட்டாரா , நாமும் அவர் நண்பர் ஆக மட்டோம என்று நினைக்கும். இருந்தாலும் பலர் நம் கருத்தில் உள்ள நேர்மையை புரிந்து கொள்வர். இருந்தாலும் ஏற்று கொண்டு நடக்க மறுப்பர். முளை சங்கிலி அல்லவா இது.? உலகம் தட்டை என்று சொல்லி கொண்டு வாழ்வதில் ஒன்றும் தவறில்லை. ( கடவுள் தத்துவம் அது போலவே) ஆனால் அதை சொல்லி இன்றும் மக்களின் அடிப்படை சிந்திக்கும் குணத்தை மழுங்கடித்து விட்டு அதை நியபடுத்த மெத்த படித்த பலர் பேசுவது அவலம். பிறப்பிலே உயர்வு தாழ்வு இல்லை என்பதை இந்த அறிவியல் யுகத்தில் ஏற்பார்களா? அதை சொல்லும் கீதையை தவறு என்பார்களா? துப்புரவு செய்தவர்களை அன்றும்,. இன்றும் விட்டார்களா? செய்பனை கூடாது என்பார்கள். செய்தால் சரியாக செய்யவில்லை என்பார்கள். இன்று அனைவரும் படித்து உள்ளனர்.. இது யாரால் வந்தது?.. நாக்கை நீட்டி இருக்க அதில் எழுதியதால் வந்தது அல்ல ... துப்புரவு முழுமை அடையாமல் விட்டதால் இன்னும் செய்ய வேண்டி உள்ளதால் ஜெயேந்திரன், தேவநாதன் ..மற்றும் பலர் இன்னும் திருவிளையாடல்கள் புரிகின்றனர்...

வால்பையன் சொன்னது…

நரகத்தை பத்தி ஒன்னுமே சொல்லாம விட்டுடிங்க!, அந்த பயமும் மத நம்பிக்கையின் காரணம்!

அபிரஹாம மதத்தின் ஆரம்பங்கள், சாத்தன்(நரகம்) பயத்தை மட்டும் ஏற்படுத்தின, அதன் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்ததால் சொர்க்கம் அதிக பலன்களோடு சேர்க்கபட்டது!

மதமும் அரசியலும் ஒன்னு!, ஒப்பொரு நாட்டு அரசியல் சட்டமும், அந்த நாட்டு மக்கள் நல்லா இருக்கனும்னு தான் நிறைவேற்றப்படுது, ஆனால் தேவைபட்டால் அதில் மாற்றமும் செய்து கொள்கிறது, ஆனால் மதம் மாற்றத்தை ஏற்பதில்லை, அதுவே அதன் தோல்விக்கு காரணமாகவும் இருக்கிறது!

இன்று இருக்கும் மதவாதிகளை போலவே அடுத்த சந்ததியினரும் இருக்கபோவதில்லை, நமது கருத்துகளை பதித்து கொண்டே இருப்போம், என்றாவது ஒருநாள் மனிதம் உணரப்பட தான் போகிறது!

வால்பையன் சொன்னது…

மதத்தை கேள்வி கேட்க ஆரம்பித்ததே பெரியார் தான் என்பது போல் சிலர் பேசும் போது தான் பெரியாரின் தாக்கம் உணர முடிகிறது! பாவம் ரொம்பவே படுத்திட்டார் போல!

:)

வால்பையன் சொன்னது…

லூசிபர், இபிலீஸ், அரக்கர்கள்!

இவங்கெல்லாம் காமெடியான கற்பனைகள், ஆனா சூப்பர்மேனையும், ஸ்பைடர்மேனையும் உண்மையென நம்பும் கூட்டம், அதனையும் நம்பும்!

THE UFO சொன்னது…

" www.கோவியாரின் கும்தலக்கா டாட் காம் " என்று ஒரு வெப்சைட்டில் உங்களைப்பற்றி பச்சை பச்சையாக பொய் செய்திகளும், நீங்கள் நீலப்படத்தில் நடித்ததாக முகம் காட்டாத ஆண் ஒருவர் நடித்த(?) யூடியுப் லிங்க்கும், ஆதாரமற்ற உங்களின் ஆபாச சிகப்பு விளக்கு விஜயங்களையும் கலந்துகட்டி இல்லாததும் போல்லாததுமாக உங்களின் யாரோ ஒரு எதிரி அனானியின் கைவரிசையில் அவதூறான ஒரு மஞ்சள் தளம் உருவாகி பதிவுலகில் பிரபல்யமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சும்மா ஒரு பேச்சுக்கு...

பின்னொரு நாளில், வினவின் எதோ ஒரு பதிவில் இப்போது உங்களுக்கும் வினவுக்கும் நடக்கும் எதோ ஒரு காரசாரமான விவாதத்தில் வெள்ளை மனசுள்ள உங்களிடம் விவாதத்துக்கு வேறு எந்த வாதமும் எடுபடாத கையறு நிலையில் கருப்பு வினவு இப்படி வினவுகிறது:- "ரொம்ப சலம்பாதிங்க கோவி, உங்களின் வண்டவாளங்கள் எங்களுக்கு தெரியாதா? அதான், "www.கோவியாரின் கும்தலக்கா டாட் காம்"-இல் எல்லாத்தையும் புட்டு புட்டு வைத்துவிட்டார்களே... வேண்டுமானால் சுட்டி தரட்டுமா...?" ...என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது வினவு பற்றி உங்களின் மனநிலை எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது... //இஸ்லாத்தில் சாதியம் வினவு பதிவு சுட்டி வேண்டுமானால் தருகிறேன்.// --என்று இதை படிக்கும்போது..!

வன்னியருக்கு பிறந்தவர் இன்றிலிருந்து அய்யங்காராக முடியுமா?

பாமக பெற்றோருக்கு பிறந்தது முதல் பாமக-வில் இருந்த ஒரு உறுப்பினர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் உருப்பினராக முடியாதா?

அன்பின் கோவி! எதற்கு இந்த சிந்தனை வறட்சி? வினவெல்லாம் உங்களின் கடவுள் ஆயாச்சா? அந்ததளம் என்ன உங்களுக்கு இறைவேதவாக்கா?

அப்புறம்,//தருமி//--'நான் ஏன் மதம் மாறினேன்' என்று சில வருஷத்துக்கு முன்னால் பரபரப்பாக தொடர்பதிவு எழுதி கடைசியில் எந்த மதத்திலும் சேரவில்லை என தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் போய் அசிங்கமாகி அவரின் குட்டு வெளிப்பட்டதே... அந்த தருமி தானே... சரியா போச்சு போங்க..! பெயருக்கேத்தாமாதிரியே சரியான காமடியன் அந்த ஆள்... அவரை எல்லாம் போய்...

என்னாச்சு கோவி உங்களுக்கு? நலமாகத்தானே இருக்கிறீர்கள்?

இந்தியாவில் உள்ள பதினெட்டு கோடி பேருக்கு தங்கள் சாதி மறந்து போச்சாம்... தெரிந்தால் அறிந்தால் முடிந்தால் நியாபகப்படுத்தவும்.


@வால்:
அட..! என்ன ஆளையே காணோம்? அங்கே மர்மயோகியில், பிஞ்ச செருப்பையும் விளக்குமாத்தையும் வச்சிக்கிட்டு நிக்கிராக... தப்பித்தவறி அந்தப்பக்கம் போயிடாதிக...

வால்பையன் சொன்னது…

//@வால்:
அட..! என்ன ஆளையே காணோம்? அங்கே மர்மயோகியில், பிஞ்ச செருப்பையும் விளக்குமாத்தையும் வச்சிக்கிட்டு நிக்கிராக... தப்பித்தவறி அந்தப்பக்கம் போயிடாதிக... //


நட்டு கழண்டவர்களிடம் விவாதிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்!

TBR. JOSPEH சொன்னது…

தினம் ஒரு பதிவு எழுதணும்னு எதையோ, எதையோ பற்றியெல்லாம் சரியா சிந்திக்காம எழுதறீங்களோன்னு தோனுது கண்ணன். I am really sorry. பேத்தல்னு சொல்ல விரும்பவில்லை. ஏன்னா உங்க எழுத்து எனக்கும் மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. இந்த பதிவிலுள்ள பல விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// டி.பி.ஆர் said...

தினம் ஒரு பதிவு எழுதணும்னு எதையோ, எதையோ பற்றியெல்லாம் சரியா சிந்திக்காம எழுதறீங்களோன்னு தோனுது கண்ணன். I am really sorry. பேத்தல்னு சொல்ல விரும்பவில்லை. ஏன்னா உங்க எழுத்து எனக்கும் மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. இந்த பதிவிலுள்ள பல விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை.//

நாளொன்றுக்கெல்லாம் எதுவும் எழுதுவதில்லை, 2 நாளைக்கு ஒன்றே எழுத நேரம் கிடைப்பது இல்லை. இந்தப் பதிவில் கூறப்பட்டவை மதத்திற்கு ஒரு சொர்கம் என்றோ, சொர்கம் என்றோ எதுவும் தனியாகக் கிடையாது என்பது பற்றி, அப்படி இருக்கும், இருக்கலாம் என்று நம்பினால் நான் தடுக்கவில்லை, எனது கருத்துக்களைச் சொல்லும் கருத்துரிமை எழுத்துலகில் எனக்கு உண்டு என்றே நம்பிச் சொல்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//வன்னியருக்கு பிறந்தவர் இன்றிலிருந்து அய்யங்காராக முடியுமா?

பாமக பெற்றோருக்கு பிறந்தது முதல் பாமக-வில் இருந்த ஒரு உறுப்பினர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் உருப்பினராக முடியாதா?
//

ஐயங்காருகளுக்கு கொம்பா முளைச்சிருக்கு ?

வினவு பதிவு தவறு என்றால் தவறைச் சுட்டிக்காட்டினால் அவர் உங்களைத் தடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். அவை தகவல் பிழைகள் என்றால் சுட்டிக்காட்டுங்கள், பொத்தாம் பொதுவாக அப்படி இல்லை என்று மறைப்பது பூனைக் கண்ணை மூடிக் கொண்டு.....

//என்னாச்சு கோவி உங்களுக்கு? நலமாகத்தானே இருக்கிறீர்கள்?//

எனக்கெல்லாம் ஒன்றும் இல்லை, நன்றி

//இந்தியாவில் உள்ள பதினெட்டு கோடி பேருக்கு தங்கள் சாதி மறந்து போச்சாம்... தெரிந்தால் அறிந்தால் முடிந்தால் நியாபகப்படுத்தவும்.//

பிறநாடுகளில் இன அடையாளம் என்பது இந்தியாவில் சாதிய அடையாளமாக இருக்கிறது, ஆக மொத்தம் மக்கள் கூட்டம் எப்படியோ ஒரு பலக் குழுக்கலாக குழுவிற்குள் இணைந்து கொள்கிறது, பிற நாடுகளில் இனவேறுபாடுகளால் நடக்கும் கொடுமை இந்தியாவில் சாதியின் பெயரில், இதில் ஒன்றை சந்தனம் என்றும் மற்றதை சாக்கடை என்றும் சொல்ல முடியாது, அனைத்து விதமான மனித பிரிவினைகளும் சாக்கடைதான். இனவேறுபாடுகளால் பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய சமூகம் அதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தபோது சாதியை நாங்கள் ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டுவது எதற்காக ? நீங்கள் ஒரு இந்திய இஸ்லாமியராக இருந்து கொண்டு அரபி இன இஸ்லாமிய பெண்ணை மணக்க மதம் தடை சொல்லாது என்பது உண்மை தான், பின்பற்றுபவர்கள் சம்மதிப்பார்களா ? ஏட்டளவில் எல்லாக் மதக் கொள்கையும் சிறந்ததே என்றாலும் கூட அதைப் பின்பற்றாதவர்கள் அதற்கு வடிவம் கொடுக்காதவரை, இல்லாதவரை அதற்கென்று தனிச்சிறப்பு எதுவும் கிடையாது. யாதும் ஊரே யாவரும் கேளிர், சாதி இரண்டொழிய வேறில்லை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இவை அனைத்தும் தமிழ்வரிகள் தான், ஆனால் இதனைப் பெருமையாகக் கூறிக் கொண்டு ஒரு தமிழன் தமிழகத்தில் சாதி இல்லை என்று சொல்ல முடியுமா ? இவை போன்று தான் மதங்கள் காட்டும் உயர்ந்த தத்துவங்கள், வாழ்க்கை முறைகள் பின்ப்ற்றாதவர்கள் இல்லாதவரை அவற்றைப் பெருமையாகக் கூறிக் கொள்ள ஒன்றுமே இல்லை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்