சென்னை ஜூலை 22, தீவுத்திடல் அருகே 10 கோடி செலவில் அமைக்கப்பட்ட மேடையில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது, விழாவில் மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கவுரவித்தனர்.
முன்னதாக இந்தப் பாராட்டுவிழா ஏன் என்பதை தொடங்கி வைத்த பேசிய கவிஞர் வைரமுத்து,
கட்டுமரம் தராத மீனை, இவர்
காட்டும் வீரம் தருகிறது,
நாங்கள் வலைபோட்டு மீன் பிடிக்கிறோம், இவர்
மத்திய அரசிற்கு தூண்டில் போட்டே அதை பிடித்து தருகிறார் - என்பதாக பல மொக்கைகளைப் பேசி அப்ளாஸ் வாங்கினார்.
இந்த உலகத்திலேயே பாராட்டுவிழாக்கள் கண்டதில் வரலாறு படைத்த சாதனையாளர்களைத் தேடினால், அதில் கலைஞர்.மு.கருணாநிதி என்கிற பெயர் தவிர்த்து வெறெதுவும் இடம் பெறாது, கின்னஸும் கின்னஸ் அடித்தது போல் மயங்கும் செய்திக்குச் சொந்தக்காரர் எங்கள் கலைஞர், என்றார்.
மூன்றே நிமிடத்தில் மைய அரசுடன் தொலைபேசி மீனவ பிரச்சனையை முடித்ததைப் பார்த்து ஐஸ்லாந்து எரிமலையும் மூச்சை அடக்கிக் கொள்கிறது, இமயமலையும் உயரத்தைக் குறைத்துக் கூனிக் குறுக் கொள்கிறது. அன்று மூன்றெழுத்தை பேசினாய், இன்று மூன்றே நிமிடத்தில் அனைத்தையும் பேசி முடித்தாய். இந்த ஒரு வீரம் உள்ளவர் நாட்டின் தலைவனாக இருப்பது தெரிந்ததால் நானுறு ஜென்மங்களாகக் கூட நான் இலங்கை இராணவத்திடம் சுடப்பட்டு சாக தாயார் என்கிறாரானே இராம்ஸ்வர மீனவன், அங்கே இருக்கிறதையா உங்கள் வெற்றி. (பலத்தை கைதட்டல்)
****
பின்னர் பேசவந்த தொல்.திருமாவளவன் (மீசையை முறுக்கியபடி)
இராஜபக்சேவையும், ஜெயலலிதாவையும் ஒரு பிடி பிடித்தார், கருணாநிதிக்கு அவப் பெயர் ஏற்படுத்த ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து மீனவர்கள் கொலை செய்யப்படுவதாகவும், அதைத் சாதுர்யமாக தெரிந்து கொண்ட கருணாநிதி மத்திய அரசிடம் மூன்றே நிமிடத்தில் பிரச்சனைகளை எடுத்துக் கூறி முறியடித்ததாகவும், இந்த அரசும், கலைஞர் அவர்களும் தான், தலித்துகள் மற்றும் மீனவர்களின் நம்பிக்கை நட்சத்திரம், இந்த ஆட்சி தொடரவேண்டும் என்று கூறிஅமர்ந்தார்
வாழ்த்திப் பேசவந்த திரு பா.சிதம்பரம், அன்னை சோனியா ஆட்சியில் அன்னியர்கள் எவரும் இந்த நாட்டிற்கு எந்த சோதமும் ஏற்படுத்திவிட முடியாது (அதையெல்லாம் நாங்களே செய்துவிடுவோம்). எல்லைப் பிரச்சனைகள் குறித்து மத்திய அரசு அனுக்கமாக கவனித்து வருகிறது, இவை மேலும் விரைவாக செயல்பட திரு கலைஞர் அவர்களின் தொலைபேசி எங்களுக்கு உற்சாகம் அளித்தது இதோ ஓரிரு ஆண்டுகளில் இராமேஸ்வரம் பகுதியில் கடற்படை தளம் அமைத்து கண்காணிக்க உள்ளோம். மத்தியில் நல்ல அரசும் மாநிலத்தில் பொறுப்பான அரசும் வீற்றிருப்பது தமிழகத்தின் பொற்காலம், மான்புமிகு முதல்வர் அவர்களை நான் மனதாரப்பாராட்டுகிறேன். நான் டெல்லி சென்றதும் அன்னை சோனியாவிடம் ஆலோசித்து டெல்லியிலும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டுவிழா ஏற்பாடு செய்து தமிழர்களை டெல்லியில் தலை நிமிரச் செய்கிறேன்., தமிழனாகப் பிறந்ததற்கு இதைக் கூட கலைஞருக்குச் செய்யாவிட்டால் நாமெல்லாம் பதவியில் இருப்பது வீன். என்ற போது வின்னதிர கைத்தட்டினர் உடன்பிறப்புகள்.
ஏற்புரையாற்றிய முதல்வர் கருணாநிதி,
உடன்பிறப்புகளே, பெரியோர்களே, நாளைக்கு நான்கு மணி நேரமே தூங்கும் எனது 20 மணி நேர உழைப்பு உங்களுக்குத்தான், கடலில் மீனவன் உழைப்பின் உப்பு வியர்வை நீர் சேரலாம், உவர்ப்புக் குறுதி சேரக்கூடாது என்பதில் உறுதி கொண்டவன் நான். எதிரிகளும் விசமிகளும் இந்த ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கும் போது இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிடுகிறது, அன்புள்ளம் கொண்ட மத்திய அரசை நான் அழைத்துப் பேசிய அடுத்த நிமிடமே உறுதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக கடிதம் அனுப்பினார்கள், (அனைவரிடமும் கடிதத்தைக் மேலே தூக்கிப் பிடித்துக் காட்டுகிறார்). கழக ஆட்சி இருக்கும் வரை கண்கள் கூட பாலைவனம் தான் (ஒரு நிமிடம் கூட்டத்தில் அமைதி), கண்ணீரே வராது என்பதைத்தான் அப்படிக் குறிப்பிடேன் (என்றதும் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு தலைவர் வாழ்க, கலைஞர் வாழ்க என்றனர்)
மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது : முதல்வர் கருணாநிதி ஆவேசம் - தினமலர்
சிங்கள கடற்படை அட்டூழியம் : ப.சிதம்பரம், எஸ்.எம். கிருஷ்ணா,
ஏ.கே.அந்தோணிக்கும் கலைஞர் கடிதம் - நக்கீரன்
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
6 கருத்துகள்:
//
கட்டுமரம் தராத மீனை, இவர்
காட்டும் வீரம் தருகிறது,
நாங்கள் வலைபோட்டு மீன் பிடிக்கிறோம், இவர்
மத்திய அரசிற்கு தூண்டில் போட்டே அதை பிடித்து தருகிறார்
//
அரசவைக் கவிஞர் பாட்டு எழுதுவதை விட புகழ்ச்சி கவிதையை நன்றாக எழுதுகிறார்...
மான்புமிகு முதல்வர்//
இது சரி!
மயில்புமிகு யாரு சாமியோவ்!
மான் சதி(ர்) ஆடும்!
மயில் சதுரம் ஆடும்!
மானாட மயிலாட!
வாழ்த்திப் பேசவந்த திரு பா.சிதம்பரம், அன்னை சோனியா ஆட்சியில் அன்னியர்கள் எவரும் இந்த நாட்டிற்கு எந்த சோதமும் ஏற்படுத்திவிட முடியாது (அதையெல்லாம் நாங்களே செய்துவிடுவோம்).
//////////
ha ha
வாழ்த்திப் பேசவந்த திரு பா.சிதம்பரம், அன்னை சோனியா ஆட்சியில் அன்னியர்கள் எவரும் இந்த நாட்டிற்கு எந்த சோதமும் ஏற்படுத்திவிட முடியாது
//
பாம்பேல நடந்தது.கசாப் கைது....
ஆமா..இவங்க இந்தியாவை பற்றி பேசுகிறார்களா..இல்ல இத்தாலியையா... கோவி?
கழக ஆட்சி இருக்கும் வரை கண்கள் கூட பாலைவனம் தான்
வாழ்த்திப் பேசவந்த திரு பா.சிதம்பரம், அன்னை சோனியா ஆட்சியில் அன்னியர்கள் எவரும் இந்த நாட்டிற்கு எந்த சோதமும் ஏற்படுத்திவிட முடியாது (அதையெல்லாம் நாங்களே செய்துவிடுவோம்).
கருத்துரையிடுக