பின்பற்றுபவர்கள்

23 ஜூலை, 2010

கலவை 23 ஜூலை 2010 !

மூன்றரை வயது சிறுவனைக் கொலை செய்து பெட்டியில் அடைத்து நாகைக்கு பேருந்து வழியாக அனுப்பப்பட்டதை சன் டிவியில் காட்டிய போது அதிர்ந்தேன். தொலைக்காட்சிகளுக்கு சென்சார் மிக மிகத் தேவை. வீட்டின் கூடத்தில் தொலைக்காட்சி இருப்பதால் குழந்தைகள் பார்வையில் இது போன்ற காட்சிகள் அவர்களது மனதை பெரிதும் பாதிக்கும், செய்தியைச் சொல்வதில் தவறு இல்லை, ஒரு குழந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பதை பெரியோர்களாலும் பார்க்க இயலாது என்பதை செய்தி விபச்சாரம் செய்யும் தொலைகாட்சிகள் எப்போது தான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ. கொலைகாரி, அவளது கள்ளக் காதலன் ஆகியோர் இருவருக்குமே கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். குழந்தையின் அம்மா மீது எரிச்சலும் வந்தது. கணவன் என்ன தொழில் செய்கிறான், யாரோடு பழகுகிறான் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது தனக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற மனநிலையில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற சூழலை சந்தித்தே விடுகிறார்கள். :(

ஜெவின் இறுதி கால ஆட்சியில் பலிவாங்கும் நடவடிக்கை துவங்கியது போலவே தற்போது திமுக ஆட்சியில் துவங்கி நடைபெறுகிறது. 'வினாச கால விபரீத புத்தி' என்கிற வடமொழிப் பழமொழிக்கு ஏற்ப, காட்சிகள் அரங்கேறிவருகின்றன. கருணாநிதி இதுவரை பெற்ற புகழ் அனைத்தையும் கடைசி காலத்தில் இழக்கும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது அவர்களது ஆட்சி, தோழர் வலைப்பதிவர் சவுக்கு மற்றும் சீமான் கைதுகள் இதைத்தான் காட்டுகின்றன. மனித உரிமைக்கு போராடியவர்களை தீவிரவாதியாக சித்தரித்து வைகோ, நக்கீரன் கோபால் உள்ளிட்டோரை பொடோ சட்டத்தில் உள்ளே தள்ளி பலி தீர்த்துக் கொண்டார் ஜெ. தற்போது கருணாநிதியும் அதே வழியில் தொடர்கிறார். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதை தமிழக மக்கள் எப்போது புரிந்து கொள்கிறார்களோ அப்போது தான் இவைகள் மாறும். ஆள் பலம், அதிகார பலம், பண பலம் இவையெல்லாம் நிலைப்பதில்லை என்பதை 'அய்யோ கொல்றாங்களே...' என்று அலறி தெரிந்து கொண்ட பின்பும் திமுக ஆட்சியாளர்கள் அதையே பிறருக்கும் செய்வது வியப்பு, பணமும் பதவியும் கண்களை மறைக்கும் என்பது இது தானோ.

சீமான் கைதுக்கு மீனவர்கள் கொந்தளிக்கவில்லை என்று கொக்கறித்தார் ஒரு காங்கிரசு வலைப்பதிவாளர் (சஞ்ஜெய்யா ன்னு கேட்கப்படாது). மீனவர்கள் அந்த அளவுக்கு உணர்ச்சி உடையவர்கள் என்றால் அவர்கள் ஏன் குண்டடிப்பட்டு சாகவேண்டும் ? தமிழகத்தில் நக்சல்களை, தமிழ் தேசிய (தீவிர)வாதிகளை ஏற்படுத்தாமல் காங்கிரஸ் / இந்திய அரசு ஓயாது போலும், தீவிரவாதிகள் தோன்றுவது இல்லை, உருவாக்கப்படுகிறார்கள். தமிழக மீனவன் இந்தியன் இல்லை, அவர்கள் சாவுக்கு இந்திய அரசு பொறுப்பு கிடையாது என்று வட நாட்டு அரசியல்வாதிகள் மறைமுகமாகாச் சொல்லி வருவதை நாம் தான் புரிந்து கொள்வதில்லை ? மீனவர்கள் விழிப்படையாமல் இருப்பது தான் நாட்டுக்கு நல்லதோ.

தமிழகம் தொழில் நகரமாகிவருகிறதாம், மகிழ்ச்சியான தகவல் தானே. இதற்குகாரணமாக காங், திமுக அரசு மார்தட்டிக் கொள்கிறார்கள், உலக பொருளியல் சூழல் மாற்றத்தால் மனித வளம், இயற்கை வளம் மிக்க சீனாவிலும், இந்தியாவிலும் உலகின் கண் திரும்பியது, ஏற்கனவே நலிந்த பொருளியலை மீட்க சீனா அவற்றை மிகவும் வேகமாகப் பயன்படுத்திக் கொண்டது, சீனாவை ஒப்பிடுகையில் இந்தியாவின் வேகம் மிக மிகக் குறைவு. இவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் சீனாவை இந்தியா மிஞ்சி இருக்கும், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தின் நில அமைப்பு (ஏற்றுமதிக்கு ஏற்ப துறைமுகம், விமான நிலையம்), மனித வளம் இருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்களில் பல தமிழகத்திற்கு இடம் பெயர்ந்ததில் வியப்பு எதுவும் இல்லை. இதையெல்லாம் அரசின் தனிப்பட்ட சாதனை என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. இந்தியாவில் காங் மற்றும் தமிழகத்தில் திமுக ஆட்சி ஆகிய இவை இல்லாவிட்டாலும் தற்போதைய சூழல் அல்லது இதற்கு மேற்பட்டு கூட பொருளியல் வளர்ச்சி அடைந்திருக்கலாம். பண்ணாட்டு நிருவனங்களுக்கு கதவை திறந்துவிட தாராளம் காட்டினார்கள் என்பது தான் சாதனையா ? அது உண்மை என்றாலும் கூட நசிந்து போன இந்தியம் சார்ந்த பிற தொழில்களுக்கு இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா ?

25 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

கணவனிடம் ஏற்படும் சின்ன மாற்றங்களை ஒரு மனைவியால் புரிஞ்சுக்க முடியும். ஆனால் நிரைய மனைவிகள் நெடுங்காலத்துக்கு புரிஞ்சுக்காமலேயே இருக்காங்க.

எனக்குத் தெரிஞ்ச தோழிக்கு இப்படி ஒரு நிலமை இருக்கு. ஒருவேளை குடும்ப அமைப்பு தொலைஞ்சுருமோ என்ர பயத்தில் தெரியாத மாதிரி இருக்காங்களான்னு தெரியலை.
தொலைக்'காட்டி'கள் வரவர ரொம்ப மோசமாப்போய்க்கிட்டுதான் இருக்குங்க.

இவர்கள் கூவும் தமிழ்ப்பண்பாடு, தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளிலே,எங்கேயுமே இல்லை:(

அரசியல் வியாதிகளின் போக்கு.....

நல்லதுக்கெல்லாம் காரணம் நான். கெட்டதுக்கெல்லாம் காரனம் நீ என்ற சிம்பிள் கொளுகை.

என்னவோ போங்க.....

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் நிரைய மனைவிகள் நெடுங்காலத்துக்கு புரிஞ்சுக்காமலேயே இருக்காங்க.
//

கணவன் கைநிறைய வருமானம் ஈட்டினால் அவன் என்ன செய்தாலும் ஒரு சில மனைவிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். சாரயக்கடை, மதுக்கடை, சீட்டுக்கடை, அதிக வட்டி பைனான்ஸ் (மூட்டிவிட்டு ஓடுவது), கந்து வட்டிக்கடை நடத்துபவர்களெல்லாம் திருமணம் ஆகாதவர்களா என்ன ?

priyamudanprabu சொன்னது…

சீமான் கைதுக்கு மீனவர்கள் கொந்தளிக்கவில்லை என்று கொக்கறித்தார் ஒரு காங்கிரசு வலைப்பதிவாளர் (சஞ்ஜெய்யா ன்னு கேட்கப்படாது).
////////


HA HA ENAKKU THERIYUM ENAKKU THERIYUM...........

துளசி கோபால் சொன்னது…

oops.........


நிரைய= நிறைய

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...

oops.........


நிரைய= நிறைய//

நானும் பார்த்தேன். நிறையில் சற்றுக் குறைந்தாலும் நிறை நிறை தானே.

:)

துளசி கோபால் சொன்னது…

அ...து:-)))

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ???????


ஆமாம். இப்ப யோசிச்சால்...... இது என்ன விளக்கமுன்னு புரியலை:(

ஜோதிஜி சொன்னது…

தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று நண்பர் சொன்ன போது இதை அடிப்படையாக நினைத்து தான் கருத்து தெரிவித்தேன்.

அடுத்த தேர்தல்ல இந்த மின்சார பிரச்சனையே நம்மள படுத்தி எடுக்கப்போகுதுன்னு ஆற்காட்டார் பேசியதற்கு கலைஞர் சொன்னது என்ன தெரியுமா?

வாயை வச்சுக்கிட்டு சும்மா இருய்யா? மக்களை நான் பார்த்துக்கிறேன்.

இது படித்த செய்தி.

நம்ம மக்களை எந்த தலைவரும் புரிஞ்சுக்காத அளவிற்கு கலைஞர் புரிந்து வைத்துள்ளார்.

அவர் திட்டும் வார்த்தைகளும் தீட்டும் நோக்கமும் போய்க்கிட்டு இருக்றத பார்த்தா நீங்க சொன்ன பழமொழி தான் சரியாகப் போகுது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

:(((

a சொன்னது…

//
தொலைக்காட்சிகளுக்கு சென்சார் மிக மிகத் தேவை
//
ஆமாங்க. தங்களை தக்க வைத்துக்கொள்ள ஊடக தார்மீகம் என்ற ஒரு விசயத்தை தங்கள்
வசதிக்கேர்ப்ப வளைத்துக்கொள்கிறார்கள்.

நித்திய- ரஞ்சித பிரச்சினையின்போது பல பெற்றோர்கள் இதுபோல் அவஸ்தை பட்டார்கள்.

பரிசல் அண்ணன் ஆபீஸ் கிளம்பும்முன் வீட்டு டிவியில் "Child lock" செய்துவிட்டு சென்றதை அவருடைய பதிவில் படித்ததாய் ஞாபகம்.

Karthick Chidambaram சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தேவன் மாயம் சொன்னது…

உலக பொருளியல் சூழல் மாற்றத்தால் மனித வளம், இயற்கை வளம் மிக்க சீனாவிலும், இந்தியாவிலும் உலகின் கண் திரும்பியது, ஏற்கனவே நலிந்த பொருளியலை மீட்க சீனா அவற்றை மிகவும் வேகமாகப் பயன்படுத்திக் கொண்டது, சீனாவை ஒப்பிடுகையில் இந்தியாவின் வேகம் மிக மிகக் குறைவு.//

சரியான கருத்து!!

IKrishs சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
IKrishs சொன்னது…

கோவி.கண்ணன் said...
//
கணவன் கைநிறைய வருமானம் ஈட்டினால் அவன் என்ன செய்தாலும் ஒரு சில மனைவிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். சாரயக்கடை, மதுக்கடை, சீட்டுக்கடை, அதிக வட்டி பைனான்ஸ் (மூட்டிவிட்டு ஓடுவது), கந்து வட்டிக்கடை நடத்துபவர்களெல்லாம் திருமணம் ஆகாதவர்களா என்ன ?

//


சுருக்கமா "அரசியல்வாதிகளுக்கு " மனைவிகள் இல்லையா என கேட்டிருக்கலாம் !

Indian சொன்னது…

//மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தின் நில அமைப்பு (ஏற்றுமதிக்கு ஏற்ப துறைமுகம், விமான நிலையம்), மனித வளம் இருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்களில் பல தமிழகத்திற்கு இடம் பெயர்ந்ததில் வியப்பு எதுவும் இல்லை. இதையெல்லாம் அரசின் தனிப்பட்ட சாதனை என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை.//

அதாவது தானாகவே வருகிறவர்களை துரத்தி விடாமல் இருப்பதே ஆள்வோர்க்கு சாதனையோ என்னவோ?

ITPL எவ்வாறு பெங்களூருக்கு சென்றது என்பது நினைவுக்கு வருகிறதா?

Indian சொன்னது…

//கணவன் கைநிறைய வருமானம் ஈட்டினால் அவன் என்ன செய்தாலும் ஒரு சில மனைவிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். சாரயக்கடை, மதுக்கடை, சீட்டுக்கடை, அதிக வட்டி பைனான்ஸ் (மூட்டிவிட்டு ஓடுவது), கந்து வட்டிக்கடை நடத்துபவர்களெல்லாம் திருமணம் ஆகாதவர்களா என்ன ?//

அகப்படாத/அடிபடாத வரைக்கும் அப்படிப்பட்டவர்களெல்லாம் திறமைசாலிகளாக இச்சமூகமே கருதும்வரை மனைவிகள் மட்டும் வேறு மாதிரியா சிந்திப்பார்கள்?

Indian சொன்னது…

//பரிசல் அண்ணன் ஆபீஸ் கிளம்பும்முன் வீட்டு டிவியில் "Child lock" செய்துவிட்டு சென்றதை அவருடைய பதிவில் படித்ததாய் ஞாபகம்.//

நம்மூரில் "Child lock" வேலை செய்வதாக நான் நினைக்கவில்லை.
சேனலில் வரும் டிஜிட்டல் சிக்னலில் ரேட்டிங் கொடு இருந்தால் மட்டுமே "Child lock" வேலை செய்யும் என நினைக்கிறேன். இந்தியாவில் இப்படி சேன்சார் ரேட்டிங் கட்டாயமாகத் தர சட்டம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஜோதிஜி சொன்னது…

அதாவது தானாகவே வருகிறவர்களை துரத்தி விடாமல் இருப்பதே ஆள்வோர்க்கு சாதனையோ என்னவோ?

super

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்!

தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு யாரும் காரணம் இல்லை என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை.

மனித வளம், விமானநிலையம், துறைமுகம் இந்த மூன்றும் முக்கிய காரணங்கள் என்கிறீர்கள். நான் இல்லை என்கிறேன்.

ஏன் கொல்கொட்டவிலோ, கொவாவிலோ அல்லது கொச்சின்லோ, ஒரு கோடி வேலை வாய்ப்பு உண்டானால் தமிழ்நாட்டில் உள்ள மனிதவளம் அங்கு போகாதோ? இல்லை வழி தான் தெரியாதா? Best connected cities in India by train are Cochin and Calcutta. All are broad gauge. 90% of goods and raw materials are transported through train.

இந்தியாவின் சொத்து அதன் நீண்ட கடற்கரை (peninsula). அப்படிப் பார்த்தால் கொசசினை விட ஒரு நல்ல துறைமுகம் (மேலை நாடுகளுக்கு ஏற்ற்றுமதி செய்வதற்கு) கிடையாது. அடுத்தது விமானநிலையம. ஒரு நாளைக்கு மூணு ராக்கெட் (சிவகாசி ராக்கெட் அல்ல) உடரானுங்க. பணம் ஒரு பொருட்டே அல்ல, ஏன் ஒரு மிக சிறந்த விமான நிலையத்தை கட்டுவது தானே? இப்ப கொச்சினில் இருக்கிற அதே "Table Top " runway உள்ள ஏற்போர்ட்டையே என் நீட்டி நீட்டி இழுத்க்கிட்டு இருக்கிறீர்கள்? இந்த்யாவில் எந்த மாநிலத்திலும் ஒரு நல்ல விமான நிலையம் கட்ட முடியும்.

ஏன் நல்ல ஒரு துறைமுகத்தை இந்தியாவில் உருவாக்க முடியாதா? ஆங்கிலேயர் ஆண்ட போது அப்போதுல்ல விஞ்ஞான அறிவுப்படி சென்னையை ஒரு துறைமுகமாகினர் (It is a natural harbor). ஏன் அதையே மேலும் மேலும் நோண்டிக் கொண்டு இருக்க வேண்டும். இந்திய கடற்கரையில் நமது அறிவை உபயோகபடுத்தி ஒரு நல்ல இடம் தேர்வு செய்யலாமே. அதை யார் தடுத்தது?

இவை எல்லாம் கட்ட முடியும். ஏன் கட்டவில்லை? எல்லாம் கட்டி வச்சுக்கிட்டு ஒரு ஓரமா போய் குந்திக்கொண்டு தான் உக்காரணும். ஆள் வரணுமே?

என் கூற்றுப்படி தமிழ்நாடு மேலும் முன்னேறி இருக்கும் சென்னை தமிழ் நாட்டின் தலை நகரமாக் இல்லாமல் இருந்தால். சென்னை ஒரு சாபக்கேடு. திருச்சிக்கும் தஞ்சாவூருக்கும் நடுவில் தமிழ் நாட்டின் தலை நகரம் இருந்தால் தமிழ் நாடு முழுவதும் முன்னேறி இருக்கும். சோழர்கள் உபயோகித்த துறைமுகதையே (natural harbor) விரிவு படுத்தலாம். இல்லை தூத்துக்குடியை ஒரு சிறந்த துறைமுகமாக்கி இருக்கலாம்.

மறுபடியும் சொல்கிறேன், தமிழ்நாடு மேலும் முன்னேறி இருக்கும் சென்னை தமிழ் நாட்டின் தலை நகரமாக் இல்லாமல் இருந்தால்.

இப்பொழுதும் ஒன்றும் குடி முழுகிப்போய்விட வில்லை. இந்தியாவில் சின்ன சின்ன மாநிலங்கள் எல்லாம் வசதிக்காக (administrative reasons) மேலும் பிரிந்து போகிறது.

அது மாதிரி தமிழ் நாட்டை இரண்டாக பிரித்து தென் மாவட்டங்களுக்கு மதுரையை தலை நகரம் ஆக்கலாமே

கோவி.கண்ணன் சொன்னது…

//அது மாதிரி தமிழ் நாட்டை இரண்டாக பிரித்து தென் மாவட்டங்களுக்கு மதுரையை தலை நகரம் ஆக்கலாமே//

:) ஓஹோ அந்தக் கட்சி ஆதரவாளரா நீங்க ?

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

///:) ஓஹோ அந்தக் கட்சி ஆதரவாளரா நீங்க ?///

It is in the Eye of the Beholder!

இவ்வளவு கருதுக்ககளை சொல்லி இருக்கிறேன். அதை எல்லாம் விட்டு விட்டு அந்த வாலைப் (tail piece) பிடித்து தொங்குகிரீர்களே? அனாலும் அங்க தான் நம்ம தமிழன் நிக்கறான்!

மதுரை ஒரு மையம். எல்லா ஊருக்கும் ஒரு 100 அல்லது 125 மைல்கள் தான். அங்கு High Court -உம உள்ளது. அதனால் தான். சரி அது வேண்டாம் தமிழ் நாட்டை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதிக்கு திண்டிவனமும், ஒரு பகுதிக்கு கொவில்பட்டியையும், ஒரு பகுதிக்கு கொட நாட்டையும் தலைநகரம் ஆக்குவோம். தமிழ்நாடு நன்றாக முன்னேறும்! இப்பொழுது மகிழ்ச்சியா?


நீங்கள் சொல்வது நன்றாகப் புரிகிறது. நான் அந்தக் கட்சிக்காரன் இல்லை. என்னுடைய கட்சி சோத்துக்கட்சி மட்டும் தான்.

என் மீது கோபம இருந்தாலும் என்னை இதுமாதிரி விசயகாந்து கட்சிக்காரனா ஆக்கியிருக்க வேண்டாம்...

ராஜரத்தினம் சொன்னது…

கும்பகோண பள்ளி எரிந்து இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூட அந்த நாளை துக்க நாளை பலர் மறந்து விட்டார்கள்.சிலர் அடுத்த குழந்தைகள் மூலம். ஆனால் அதை கேடுகெட்ட சன் டீவியில் தொடந்து காட்டி அதை பார்த்த என் நண்பனின் தாய் இன்றும் கூட மனநலம் பாதிக்க பட்டுதான் இருக்கிறார். இதில் வேடிக்கை என்ன வென்றால் அவர் குடும்பம் திமுக ஆதரவு குடும்பம்.நண்பனின் தந்தையும் இப்போது இல்லை. அதனால் அவரின் தாயார் இப்போதும் சிரம பட்டுக் கொண்டுதான் இருக்கிறார். உங்கள் கருத்து நிச்சயம் உண்மை.

ராஜரத்தினம் சொன்னது…

//ஜெவின் இறுதி கால ஆட்சியில் //

தவறான சொற்றொடர் (கடவுள் அருளால்) அவர் ஆட்சி கால இறுதியே தவிர அவரின் இறுதி கால ஆட்சி அல்ல ( நான் நம்பும் கடவுளும், நீங்கள் நம்பும் நேரமும் அந்த கிழவன் பின்புதான் ஜெ என்று அருள் புரிய வேண்டும்).

கோவி.கண்ணன் சொன்னது…

// ராஜரத்தினம் said...

//ஜெவின் இறுதி கால ஆட்சியில் //

தவறான சொற்றொடர் (கடவுள் அருளால்) அவர் ஆட்சி கால இறுதியே தவிர அவரின் இறுதி கால ஆட்சி அல்ல ( நான் நம்பும் கடவுளும், நீங்கள் நம்பும் நேரமும் அந்த கிழவன் பின்புதான் ஜெ என்று அருள் புரிய வேண்டும்).//

அதை திமுகவிற்கும் தான் சொல்லி இருக்கிறேன். இனியும் வாய்ப்பில்லை என்பதால் வாஜ்பாயின் இறுதிகால ஆட்சின்னு எழுதினால் கோவிச்சிக்க மாட்டேளா ?
:)

ராஜரத்தினம் சொன்னது…

//வாஜ்பாயின் இறுதிகால ஆட்சின்னு எழுதினால் கோவிச்சிக்க மாட்டேளா ?//

வாச்சோ பாயோ? தலகாணியோ? எனக்கு தெரியாது. ஜெ வை ஆதரித்தால் என்னிடம் ஐயர் பாஷையா? அப்போ உங்க கிட்ட கன்னடத்திலதான் கேள்வி கேக்கனுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//வாச்சோ பாயோ? தலகாணியோ? எனக்கு தெரியாது. ஜெ வை ஆதரித்தால் என்னிடம் ஐயர் பாஷையா? அப்போ உங்க கிட்ட கன்னடத்திலதான் கேள்வி கேக்கனுமா?//

என்ன அப்படி கேட்டுட்டேள்,
மலையாளம், தெலுங்கில் கூட கேட்கலாம் திராவிட மொழிகள் என்றால் கொள்ளை விருப்பம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்