இன்றைய முதன்மைச் செய்திகள், தமிழக தலைவர் முன்னூறாவது முறையாக மூச்சும் பேச்சும் தமிழுக்கே என்றார். வெற்றிமுரசு கொட்டும் சேட்டைக்காரன் சிறப்பு செய்திகள், பிற்பட்டவர் வீட்டில் பூரி கிழங்கு சாப்பிட்டார் ராகுல் காந்தி.....இன்னும் பக்கத்துக்கு பக்கம் (சாரி...இது குங்குமம் வெளம்பரம் இல்லை, செய்தி .....செய்தி தடங்களுக்கு வருந்துகிறோம்)
நேபாள நாட்டில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கலைமகன் விருது பெற்றுக் கொண்ட தமிழினவேந்தன் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். தனக்கு இந்த விருது பெரும் தகுதி இல்லை என்றாலும் விருது கொடுப்பவர்களின் மனம் கோணாமல் இருக்க இந்த விருதை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். தனது மூச்சும் பேச்சும் முன்னூறாவது முறையாக தமிழுக்கும் தமிழனுக்கு அற்பணிக்கப் போவதாகக் கூறினார். பேச்சின் இடையே தலைவா இது 301 ஆவது முறை எண்ணிக்கை தவறு என்று கத்திய தொண்டரின் ஆர்வக் கோளாறு வேந்தனை முகம் சுளிக்க வைத்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு சிற்றுரை ஆற்றி முடித்தார். வேந்தனுக்கு நடத்திய பாராட்டுவிழாவின் மகிழ்ச்சியில் எழுந்த ஆனந்த கண்ணீர் மீண்டும் ஒரு மழை வெள்ளமோ என்று வியக்க வைத்தது (இது பற்றிய செய்தித் தொகுப்பில் சென்னை அரங்க நாயகம் சுரங்கப் பாதையின் சூழ்ந்திருந்த நீரில் பேருந்து ஒன்று நகரமுடியாமல் நின்று கொண்டிருப்பதையும் அதை கிரேன் மூலம் இழுப்பதும் காட்டப்பட்டது)
மூன் பிக்சர் வெளியீடாக வெளியான சேட்டைக்காரன் தமிழக மற்றும் இந்திய உலக வரலாறு திரைப்படங்களின் சாதனைகளை ஒன்றும் இல்லாமல் செய்திருக்கிறது. இங்கே நீங்கள் பார்பவர்கள் ரேசனுக்கு காத்திருப்பவர்கள் அல்ல, அடுத்தவராம் சேட்டைக்காரன் டிக்கெட்டுக்கு சென்ற வாரம் முதல் வரிசையில் நிற்பவர்கள் தான், அடுத்தவன் உயிர் கூட தலைவனுக்கே சொந்தம் என்று கூறி உணர்ச்சி வசப்பட்ட ரசிகர்களை சமாதானப் படுத்தி அழைத்துச் செல்லும் காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உணவையும் மறந்து 6 நாட்களாக வரிசையில் காத்திருக்க வைக்கிறதென்றால் சேட்டைக்காரன் உலக சாதனைச் செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்பதை டிடிவி சானலும் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தில் வரும் 'நாய் கடிச்சா தூங்க மாட்டே....' பாட்டு பட்டையைக் கிளப்புவதாகவும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர், டுஸ்மோர்....சில இடத்தில் த்ரைஸ்மோரெல்லாம் கேட்டது திரையரங்கு வளாகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது
(வெளம்பர இடைவேளை.....சேட்டைக்காரன்.........'நாய் கடிச்சா தூங்க மாட்டே....')
உத்திர பிரதேசம் ஜான்சி மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு பிற்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுய உதவிக் குழுவினர் ஒருவர் வீட்டில் பூரி கிழங்கு சாப்பிட்டார். பூரி கிழங்கு சுவையாக இருந்ததாகவும், இளைஞர்கள் பூரி கிழங்கு சாப்பிடுவதால் கேஸ் ட்ரபிள் எதுவும் வராது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தவே தாம் துணிந்து பூரி கிழங்கு சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். பூரி கிழங்கு சாப்பிட்டதற்கு காசு கொடுத்தீர்களா ? என்று கேட்ட செய்தியாளர் ஒருவரிடம் சிரித்து மழுப்பிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாக வட்டார செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
நன்றி வணக்கம்...
இது ஒரு காலம் தொலைக்காட்சியின் தயாரிப்பு
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
8 கருத்துகள்:
பூரி செம ஜூடு
செய்தி செம சேட்டை ...
:)
பூரி சாப்பிட ராகுல் காசு கொடுத்தாரோ இல்லையோ, நம்மூருஅசாமின்களா இருந்தாக்க காசு வாங்கிக்கிட்டுத்தான், அப்புறம் அந்தச் செய்தியை முழுப்பக்க விளம்பரமாக, தொலைகாட்சி செய்தியாகவும் காட்ட ஏற்பாடு செய்திருந்தால் தான் ஒப்புக் கொண்டிருப்பார்கள்!
அடுத்தவன் காசில் மஞ்சக் குளிக்காம சாரி கோவியார் ஸ்டைலில், மஞ்சத்துண்டு போத்தாமலேயே செய்தியை விமரிசிப்பது மருதைக்கார வாசகனுங்கோ!
பயங்கர ஸ்பீடு:-)))))
சிசிசிசிரிச்சுகிட்டே இருக்கேன் ஜி..
(ஆமா தொலைக்காட்சி-ல ‘க்’விட்டதுல ஏதாவது உள்ளரசியல் இருக்கா?)
சேட்டைக்காரன நீங்களும் விடலியா?
அன்புடன்
செய்தி செம சேட்டை ...
ஆனாலும் சேட்டைகாரனை அரங்கம் சென்று பார்த்த உங்கள் துணிச்சலை பாராட்டாமல் விட கூடாது
//.செய்தி தடங்களுக்கு வருந்துகிறோம்//
அரசியல், சினிமா அப்படிங்கற வழமையான தடத்துலயே நடந்துட்டு நட’ தடங்களுக்கு எதுக்கு வருந்தணும்
வேட்டைக்காரான் பார்த்த பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடலையா.
கருத்துரையிடுக