பின்பற்றுபவர்கள்

8 டிசம்பர், 2009

கலவை 08/டிச/2009 !

கதை முடிந்தது : கச்சத்தீவு கைகழுவப்பட்டது பட்டது தான் என்பதாக காங்கிரசு வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அறிவித்துள்ளார். யார் வீட்டு சொத்தை யார் தானம் வழங்குவது, கடைத் தேங்காய் வழிப்பிள்ளையார் கதையாக இலங்கைக்கு தானம் வழங்கிவிட அந்த பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் நாள்தோறும் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டும், கொல்லப்பட்டும், மீன்கள் கொள்ளையடிக்கப்பட்டும், சிறை தண்டனைப் பெற்றும் மேலும் சொல்லவெண்ணா துயரையெல்லாம் அடைகிறார்கள். ஒரே நாளில் 'கச்சத் தீவு கதை முடிந்ததாக அறிவிக்கிறார்'. மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி போதும், மாநில நிர்வாகத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற எழுதாத ஒப்பந்ததில் இயங்கும் தமிழக தலைமைக்கு கச்சத்தீவு பற்றி கவலை என்ன வந்துவிடப் போகிறது. மற்றொமொரு மவுன கண்ணீர் கவிதை கிடைத்தாலே மிகுதி. அண்டை நாடுகள் (சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) அடுத்தவர் நிலங்களை ஆக்ரமிப்பு நடத்துகிறார்கள். இருந்ததை கைகழுவி விட்டதாக, காங்கிரஸினர் தமிழக மீனவரின் இரத்தத்தை இலங்கைக்கு தானம் செய்தததாகச் சொல்கிறார்கள். ஒக்கனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கைவிடப் பட்டதாக அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

மனத் தடை : அலிகார் : "இந்தியாவில் பிரதமராவதற்கு மதமும், ஜாதியும் ஒரு தடையே அல்ல. தகுதி வாய்ந்த முஸ்லிம், நாட்டின் பிரதமராக முடியும்' என காங்., பொதுச் செயலர் ராகுல் கூறினார். - இவரு ஏன் தனது பாட்டனார் பெரோஸ் காந்தி ஒரு முஸ்லிம், நான் கூட அடிப்படையில் முஸ்லிம் வம்சாவளி தான் என்று சொல்லவில்லை ? அப்படியெல்லாம் சொல்ல பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும், காந்தியின் பேரன்களைப் போல் அல்லது காந்தியின் நேரடி வம்சத்தினர் (வெளி நாட்டினர் அப்படித்தான் நினைக்கிறார்கள்) என்பது போல் பெயருக்குப் பின்னால் காந்தி போட்டுக் கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். தென்னிந்திய காங்கிரசு செய்தித்தாள்கள் பிரியங்கா வதோராவை இன்னும் கூட பிரியங்கா காந்தி என்றே எழுதி வருவது குறிப்பிடத் தக்கது.

புதிய மாநிலம் : முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் தனி மானிலம் கோரிக்கை தெலுங்கானா வலுப்பெற்றுள்ளது. முன்பெல்லாம் தேர்தல் தோறும் தெலுங்கானா கோரிக்கையை ஆதரிப்பதாகக் கூறி மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைதத்து காங்கிரஸ். காங்கிரஸ் ஆட்சியில் வந்ததும் அது கிடப்பில் போடப்படும். தற்பொழுது ஆந்திர மாநில பாஜகவும் தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், விரைவில் ஆந்திராவில் இருந்து தனி தெலுங்கு மாநிலம் தெலுங்கான பிரியும் நாள் விரைவில் இல்லை. அப்படி பிரிந்தாலும் ஹைதராபாத் எந்த மாநிலத்துக்கு என்பதெல்லாம் முடிவு எட்டிவிடுமா என்பது தெரியவில்லை. இந்தியாவிலேயே தொடரும் என்கிற நிலையில் மாநிலங்களைப் பிரிப்பதால் மத்திய அரசு என்ன நட்டம் ? மொழிப்பற்று என்பதை உணர்ச்சி வடிவில் வைத்திருப்பதில் ஆந்திராவும் கர்நாடகாவும் ஒன்று போல் தான்.

குடமுழுக்கு நிகழ்ச்சி : மனைவியின் விருப்பத்தின் பேரில் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டி இருந்தது. சிங்கையில் செட்டியார்களால் அமைக்கப்பட்டு நடத்தப்படும் தண்டாயுத பாணி முருகன் கோவிலில் சென்ற நவ 27 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. கோவில் பணியில் பார்பனர்களும் இருந்தாலும் மூலவர் முருகன் சிலைக்கான பூசை முதல் அனைத்தும் செட்டியார்களே செய்கிறார்கள். அங்கே இருக்கும் சிவலிங்கம் மற்றும் அம்மனுக்கு பார்பனர்கள் பூசைக்கு அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். செட்டியார்களுக்கு உரிமையான கோவில், அவர்களின் கட்டுபாட்டில் இருக்கும் கோவில் என்பதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் தமிழ் வழி வழிபாட்டிற்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பது பாராட்டத்தக்கது. வெளிப்படையாக தெரியாவிட்டாலும் கட்டுக் கோப்புடன் குழுவாக இயங்குவதில் செட்டியார் சமூகம் பார்பனர் சமூகம் போல் சாதி சார்ந்தே இயங்குகிறது. உயர்வு மனப்பான்மையில் பூணூல் அணியும் செட்டியார்களும் உண்டு. குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் எப்போது செட்டியாரின் குலதெய்வம் ஆனான் என்பது வரலாற்று ஆய்வுக்கு உட்பட்டது. தேவலோக இந்திரனின் மருமனாக்கி முருகனை பார்பனர்களும், அந்த கந்தபுராண கதையின் குறிஞ்சி நில குறவள்ளியின் மணாளன் என்பதால் நரிக்குறவர்களும் முருகன் மீது தனிப்பட்ட பக்தி வைத்துள்ளார்கள்.





கோவில் குடமுழுக்கை ஒட்டி நாள்தோறும் இசை நிகழ்சிகள் நடத்தப்படுகின்றன. இலவச அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

நேற்று வீரமணி இராஜு வந்திருந்தார், ஐயப்பன் பாடல்களையும் அதைத் தொடந்து அம்மன் பாடல்களையும் பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் கே.வீரமணி. வீரமணி பாடல்களில் அவர் குரல் வளம், இசை அனைத்தும் கேட்போரை உருக வைக்கும், சீர்காழி கோவிந்தராஜன், டிஎம்.எஸ் பாடல்களைவிட பக்தி இசையில் என்னை ஈர்த்தது கே.வீரமணி பாடிய பாடல்களே. வீரமணி தாசன் என்பவர் வீரமணியின் குரலில் கிட்டதட்ட அதே போன்றே பாடுவார். அந்த நினைப்பில் வீரமணி இராஜுவின் பாடல் இருக்கலாம் என்றே நினைத்தேன். மாறாக வீரமணி இராஜு கே.வீரமணியின் பாடல்களை சொதப்பலாகவே பாடினார். புதுமை செய்கிறேன் பேர்வழி என்று பாட்டுகளின் ஏற்ற இரக்கம், இராகங்களை மாற்றிப் பாடினார், கேட்க சலிப்பு அடைய வைத்துவிட்டது. நான்கு பாடல்களே கேட்டுவிட்டு திரும்பிவிட்டோம். பக்திப் பாடல்களில் ரீமிக்ஸ் கேட்கும் போது அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. ஆயிரம் பேர் எஸ்பிபி போல் பாடினாலும் எஸ்பிபியே பாடுவதற்கு ஈடாகுமா ? வீரமணியின் பாடல்களை பிறர் பாடும் போது அப்படித்தான் நினைக்க வைக்கிறது.

தாண்டாயுதபாணி முருகன் கோவில் நிகழ்ச்சிகள் குறித்த இணையதளம் இங்கே

*****

தேவநாதன் புண்ணியத்தில் இரு நகைச்சுவை :

மனைவி : என்னங்க சாயங்காலம் சீக்கிரம் வந்திடுறிங்களா, எனக்கு தனியாகப் போக பயமாக இருக்கு
கணவன் : எங்கேடி ?
மனைவி : கோவிலுக்குத்தான்

நண்பர் 1 : வரவர என் மனைவியின் போக்கே சரி இல்லை, எப்படி கேட்கிறதுன்னு தெரியாமல் தவிக்கிறேன்
நண்பர் 2 : என்ன ஆச்சு ?
நண்பர் 1 : அடிக்கடி கோவிலுக்குப் போறாள்

21 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நகைசுவை..... சுவை!

பூங்குன்றன்.வே சொன்னது…

//ஒக்கனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கைவிடப் பட்டதாக அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.//

ஆச்சர்யம் இல்லை .

//இவரு ஏன் தனது பாட்டனார் பெரோஸ் காந்தி ஒரு முஸ்லிம், நான் கூட அடிப்படையில் முஸ்லிம் வம்சாவளி தான் என்று சொல்லவில்லை ? அப்படியெல்லாம் சொல்ல பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும்//

கேள்வி சரிதான்.பதில் கிடைக்காது.

//மொழிப்பற்று என்பதை உணர்ச்சி வடிவில் வைத்திருப்பதில் ஆந்திராவும் கர்நாடகாவும் ஒன்று போல் தான்.//

நூற்றுக்கு நூறு உண்மைதான்.

//நண்பர் 1 : வரவர என் மனைவியின் போக்கே சரி இல்லை, எப்படி கேட்கிறதுன்னு தெரியாமல் தவிக்கிறேன்
நண்பர் 2 : என்ன ஆச்சு ?
நண்பர் 1 : அடிக்கடி கோவிலுக்குப் போறாள்//

ஓஹோ..புரியுது பாஸ்.

Sanjai Gandhi சொன்னது…

//மனைவி : என்னங்க சாயங்காலம் சீக்கிரம் வந்திடுறிங்களா, எனக்கு தனியாகப் போக பயமாக இருக்கு
கணவன் : எங்கேடி ?
மனைவி : கோவிலுக்குத்தான்//

உங்க குடும்ப ரகசியம் தேவநாதனுக்கும் தெரிஞ்சிடிச்சா? :))

முருகனை மறைமுகமா வணங்கியாச்சா? அதானே திராவிடனுக்கு அழகு. :)

Unknown சொன்னது…

//இவரு ஏன் தனது பாட்டனார் பெரோஸ் காந்தி ஒரு முஸ்லிம், நான் கூட அடிப்படையில் முஸ்லிம் வம்சாவளி தான் என்று சொல்லவில்லை ? அப்படியெல்லாம் சொல்ல பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும்//

Feroze Gandhi is a "Parsi" not a Muslim.

கோவி.கண்ணன் சொன்னது…

/// Subbu said...

//இவரு ஏன் தனது பாட்டனார் பெரோஸ் காந்தி ஒரு முஸ்லிம், நான் கூட அடிப்படையில் முஸ்லிம் வம்சாவளி தான் என்று சொல்லவில்லை ? அப்படியெல்லாம் சொல்ல பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும்//

Feroze Gandhi is a "Parsi" not a Muslim.//

சுப்பு,

இதன் தொடர்பில் முன்பு வந்திருந்த தகவல் ஒன்றை அளிக்கிறேன்.

வவ்வால் Said...

கோவி,

கல்வெட்டு பெரோஸ் கான் பெயரில் இருந்து எப்படி இந்திரா காந்தி ஆனார் என்பதற்கு ஒரு விளக்கம் அளித்துள்ளார் அது சரி அல்ல என்றே நினைக்கிறேன்,

//Indira Priyadarshini Nehru. She fell in love and decided to marry Feroze Khan, a family friend. Feroze Khan’s father, Nawab Khan, was a Muslim, and mother was a Persian Muslim.//

பெரோஸ் கானின் தாய் பெர்சியான் முஸ்லீம் அல்ல அவர் ஒரு பார்சி , பார்சிக்களின் தாயகம் பெர்சியா என்பதால் அப்படி சொல்லிவிட்டார்களா எனத்தெரியவில்லை.

பெரோஸ் கானின் தந்தை முஸ்லிம், தாயார் பார்சி , அவர்கள் குடும்ப பெயர் தான் காந்தி ஆனால் அது காந்தி அல்ல "gandhy" அதனை காந்தே எனப்படிக்க வேண்டும்.

பெரும்பாலும் தந்தை பெயரை தான் குடும்ப பெயராக பயன்படுத்துவார்கள். இந்திராவுக்கு அரசியலில் எதிர்காலம் இருப்பதால் கான் என்று பெயர் பின்னால் சேர்த்தால் பாதிப்பு வரும் என இந்திரா , பெரோஸ் கான் திருமணத்தின் போதே காந்தி சொன்னதன் பெயரில் கெசட்டில் பெரோஸ் தனது அம்மாவின் குடும்ப பெயரைக்கொடுத்து பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

காந்தியே தத்து எடுத்துக்கொண்டார் என்பது போல யாரோ இணையத்தில் கதையே எழுதிவிட்டார்கள்!

இதில் கூடுதல் சுவாரசியம் இருக்கிறது ,
பெரோஸ் கானுடன் முதலில் இந்திராவுக்கு முஸ்லீம் முறைப்படி தான் திருமணம் நடந்தது , அதற்காக இந்திராவும் முஸ்லீமாக மதம் மாறினார். இது பெரோஸ்கானின் குடும்பத்தினருக்காக. பின்னர் ஊர் அறிய இந்து முறைப்படி ஒரு திருமணம் , அக்காலத்தில் கலப்பு திருமணங்கள் வைதீக முறையில் செல்லாது என்பதால் ரிஜிஸ்தர் கல்யாணம் வேறு நடந்தது, அப்பொழுது தான் காந்தி எனப்பெயர் வருமாறு ஏற்பாடூ செய்ய வைத்தார் மகாத்மா காந்தி!

http://govikannan.blogspot.com/2007/10/blog-post_04.html

Unknown சொன்னது…

" சுப்பு,

இதன் தொடர்பில் முன்பு வந்திருந்த தகவல் ஒன்றை அளிக்கிறேன்.
'

Thanks Govi for this info.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்க குடும்ப ரகசியம் தேவநாதனுக்கும் தெரிஞ்சிடிச்சா? :))

முருகனை மறைமுகமா வணங்கியாச்சா? அதானே திராவிடனுக்கு அழகு. :)//

சஞ்செய்,
காந்தி ரகசியம் பற்றி எதுவும் சொல்லக் காணும் !!!

கோவி.கண்ணன் சொன்னது…

//பூங்குன்றன்.வே said...//

மிக்க நன்றி நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆ.ஞானசேகரன் said...

நகைசுவை..... சுவை!//

நன்றியோ நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// Subbu said...

" சுப்பு,

இதன் தொடர்பில் முன்பு வந்திருந்த தகவல் ஒன்றை அளிக்கிறேன்.
'

Thanks Govi for this info.//

மறுவருகைக்கும் நன்றி !

Barari சொன்னது…

firoz khan puthiya thakaval nandri koviyare.

priyamudanprabu சொன்னது…

////
கச்சத்தீவு கைகழுவப்பட்டது பட்டது தான் என்பதாக காங்கிரசு வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அறிவித்துள்ளார்
////


கவலைபடாதிங்க தேர்தல் நேரத்தில் திருமாவளவன் , ராமதாஸ் எல்லாம் மூடிய கண்ணையும் காதையும் திறந்து போராட்டம் செய்வார்கள்
கலைஞரும் கடிதம் எழுதுவார்,தேர்தல் அறிக்கையில் கட்சதீவு மீட்பு முக்கிய இடம் பிடிக்கும்

Sanjai Gandhi சொன்னது…

காந்தியிடம் ரகசியம் எதுவும் இல்லாததால் எதுவும் சொல்லவில்லை. ராகுல்கந்தி பற்றிய உங்கள் கருத்து சிரிப்பைத்தான் வரவழைத்தது. அதுக்கு என்னத்த கருத்து சொல்ல? :)

உங்களுக்காக,
//இவரு ஏன் தனது பாட்டனார் பெரோஸ் காந்தி ஒரு முஸ்லிம், நான் கூட அடிப்படையில் முஸ்லிம் வம்சாவளி தான் என்று சொல்லவில்லை ? //
ஏன் சொல்லனும்? அவர் எந்த மதத்தையும் பிடித்து தொங்கவில்லையே.

//அப்படியெல்லாம் சொல்ல பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும், //
செம காமெடி. தன் அடிபப்டை மதத்தை சொல்வதில் என்ன பெருமை? அது மத வெறியர்களுக்கு மட்டுமே உரியது. நீங்கள் இந்து என்று சொல்லிக் கொள்வதை பெருந்தன்மையாக நினைக்கிறீர்களா? மேலும் பாட்டன் முப்பாட்டன் கதை எல்லாம் கிளறினால் நாம் கூட வேறு மதத்தினரா இருக்கலாம்.

//காந்தியின் பேரன்களைப் போல் அல்லது காந்தியின் நேரடி வம்சத்தினர் (வெளி நாட்டினர் அப்படித்தான் நினைக்கிறார்கள்) என்பது போல் பெயருக்குப் பின்னால் காந்தி போட்டுக் கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.//

வெளிநாட்டினர்னா யாரு? சிங்கப்பூர்காரங்களா? மேலும் காந்தி என்பது மஹாத்மா காந்தியின் குடும்பத்தால் தனிப் பயன்பாட்டுக்கு பதிவு செய்யப் பட்ட பெயரல்லவே. காந்தியின் மீதுள்ள அபிமானத்தால் பிரியதர்ஷினி, இந்திராகாந்தியானார்/ஆக்கப்பட்டார்.
அதன்பிறகு அது அவர்கள் குடும்பப் பெயராக தொடர்கிறது.

என் பெயர் சஞ்சய்காந்தி என்பதால் நான் எந்த காந்திக்கும் பேரன் இல்லையே. இனி எங்கள் குடும்பங்களில் காந்தி என்பது தொடரலாம். இது எங்கள் குடும்பப் பெயராகலாம். எனக்கு இந்த பெயர் வைத்தது, மஹாத்மா காந்தியின் குடும்பத்தை சேர்ந்தவன் என்று பிறர் நினைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அதுபோல் தான் நேரு குடும்பத்தில் இருக்கும் காந்தி பெயர்களும். எனக்கு இந்தப் பெயர் வைக்கக் காரணமும் இந்திராகாந்தி குடும்பத்தின் மீதுள்ள அபிமானத்தால் தான். மனசிலாயோ?

//தென்னிந்திய காங்கிரசு செய்தித்தாள்கள் பிரியங்கா வதோராவை இன்னும் கூட பிரியங்கா காந்தி என்றே எழுதி வருவது குறிப்பிடத் தக்கது.//

இது செய்திதாள்களின் முடிவு. இதற்கு பிரியங்கா காந்தி ஒன்னும் செய்ய முடியாது. நான் கூட பிடியங்கா காந்தி என்றே குறிப்பிட விரும்புகிறேன். தென்னக காங்கிரஸ் செய்திதாள்களா? சொல்லவே இல்ல.. :))

சிங்கக்குட்டி சொன்னது…

நல்ல பகிர்வு.

//மனைவியின் விருப்பத்தின் பேரில் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டி இருந்தது//

சிலருக்கு கடவுளை பிடிக்காவிட்டாலும், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும், ஆக மொத்தத்தில் சந்திப்பு நிகழ்ந்து விடும் :-).

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கலவை எல்லாமே கலந்திருக்கா .. அண்ணே !

நகைச்சுவையிலும் உங்க கொடி பறக்குது போல ...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கலவை நல்லா வந்திருக்கு.

//ஒக்கனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கைவிடப் பட்டதாக அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.//

என்ன பண்ணலாம்?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ராகுல் தனது முன்னோர்களின் மதத்தை அறிவித்திருக்க வேண்டும் என ஏன் எதிர்பார்கின்றீர்கள்?

சொல்லப் போனா தாத்தா வழியில முஸ்லிம், பாட்டி வழியில இந்து, அம்மா வழியில கிறிஸ்தவர்னு எல்லா மதமும் இணைஞ்சுருக்கதால அவர் எல்லாருக்கும் பொதுவானவருன்னு வேணும்ணா சொல்லல்லாம்.

அறிவிலி சொன்னது…

கலவை நல்லா இருக்கு.

தமிழ் உதயம் சொன்னது…

////
கச்சத்தீவு கைகழுவப்பட்டது பட்டது தான் என்பதாக காங்கிரசு வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அறிவித்துள்ளார்
////


கவலைபடாதிங்க தேர்தல் நேரத்தில் திருமாவளவன் , ராமதாஸ் எல்லாம் மூடிய கண்ணையும் காதையும் திறந்து போராட்டம் செய்வார்கள்
கலைஞரும் கடிதம் எழுதுவார்,தேர்தல் அறிக்கையில் கட்சதீவு மீட்பு முக்கிய இடம் பிடிக்கும்

cheena (சீனா) சொன்னது…

நல்ல நகைச்சுவை இறுதியில் - கோவிலுக்குச் செல்லப் பயபடும் மனைவியும் - செல்வதால் பயப்படும் கணவனும்

கச்சத்தீவா - அது எங்க இருக்கு - அப்பப்ப தமிழ் நாட்டில் கச்சத்தீவினை மீட்டே தீருவோம்னு கொஞ்ச நாளைக்கு சத்தம் போடுவாங்க - அப்புறம் ....

புதிய தெலுங்கானா உதயமாகி விடும் சூழ்நிலைகள் தெரிகின்றன

குடமுழுக்குச் சென்றது பற்றி மிக்க மகிழ்ச்சி - அதையும் வெளிப்படையாக இடுகையாக இட்டதும் மகிழ்ச்சி

இந்திரனுக்கு மருமகன் என்பதால் பார்ப்பனர்களும் குறமகளை மணந்தவர்கள் என்பதால் குறவர்களும் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டனர் என்றும் நகரத்தார் ( செட்டியார்கள் ) ஏன் ஏற்றுக்கொண்டனர் என்று கேட்கும் கேள்வி புரியவில்லை. நகரத்தார் தொண்டு தொட்டே சிவனை வணங்குபவர்கள். அப்படியே முருகபபெருமானையும் வனங்கினார்கள் - ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்கள் - படிப்பிற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் அதிகம் செலவு செய்பவர்கள் - ஆதரவு காட்டுபவர்கள்.

நல்ல விளக்கமான இடுகை

நல்வாழ்த்துகள் கோவி

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்திரனுக்கு மருமகன் என்பதால் பார்ப்பனர்களும் குறமகளை மணந்தவர்கள் என்பதால் குறவர்களும் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டனர் என்றும் நகரத்தார் ( செட்டியார்கள் ) ஏன் ஏற்றுக்கொண்டனர் என்று கேட்கும் கேள்வி புரியவில்லை. நகரத்தார் தொண்டு தொட்டே சிவனை வணங்குபவர்கள்.//

முருகன் குறிஞ்சி திணைக்கடவுள் என்பது சங்கச் செய்யுள் குறிப்பு. செட்டியார்கள், வணிகம் செய்பவர்கள் குறிஞ்சி நிலம் சார்த்தவர்கள் அல்ல, நெய்தல் அல்லது முல்லை நிலத்தைச் சார்ந்தவர்கள். சிலப்பதிகார வணிகர்கள் முருகனை கும்பிட்டதாக இளங்கோவடிகள் எழுதி இருக்க வில்லை என்றே நினைக்கிறேன். முருகனுக்கும் செட்டியார்களுக்கும் கந்த புராணம் கதைகள் தோன்றிய பிறகு ஏற்பட்டு இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் முருகனை சிவனின் மைந்தனாக சுட்டுவது கந்த புராணக் கதைகளே. சங்க காலச் செய்யுள்களில் அப்படி இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்