பின்பற்றுபவர்கள்

7 டிசம்பர், 2009

புனிதக் குளத்தின் மீது வீசப்படும் கல் !

மனித குலத்திற்கு இயல்புக்கு மாறாக கேடுவிளைவிப்பதை தீயது, விலக்கத்தக்கது, ஒதுக்கக் கூடியது என்றும், இயல்புக்கு மாறாக நன்மை விளைவிப்பது என்பதாக சொல்லப்படுபவை அல்லது காட்டப்படுபவை தெய்வீகம், புனிதம், போற்றத்தக்கது என்பதாக கட்டமைக்கப்பட்டு மக்கள் சமூகங்களில் உலவ விடப்படுகிறது, கேடுவிளைவைப்பவை மனித சமூகத்தின் அல்லது தனிப்பட்ட அல்லது குழுக்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட பாதிப்பு, உதாரணம் தனிமனித பேராசை, குழுவினர்களின் இனவெறி. குழுவினர்களின் ஒழுங்கீனம். இவைகளினால் சமூக ஒழுங்குகள் கேள்விக்குறியாகும் போது சமூகத்தின் சமச்சீர் தன்மை நலிவுறும். அங்கே புரட்சியாளன் அல்லது கலகக்காரன் உருவாகுவான். மதங்களின் அல்லது பகுத்தறிவு சிந்தாந்தங்களின் தோற்றப் பின்னனியைப் பார்த்தால் அக்காலத்தில் அவற்றின் தேவை இருந்திருக்கிறது என்பதாக விளங்குகிறது. அதாவது மதத்தீன், பகுத்தறிவாதத்தின் தேவை என்பது சமூகத்தின் சமச்சீர் தன்மை நோக்கிய நகர்வு என்று சொல்லலாம் என்றே தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

இப்படி தனிமனிதர்களால் உருவாக்கப்படும் மதங்கள், சமூக ஒழுக்கங்களை கட்டமைக்கும் போது அதனை வலிமையாக வழியுறுத்த, அச்சம் ஏற்படுத்தி பணிய வைக்க கடவுள் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்கின்றன. கடவுள் கோட்பாடுகளற்ற மதங்களே கிடையாது. புத்தர் மறைவுக்குப் பிறகு புத்தரை மனிதரில் மேன்மைமிக்கவர் என்பாதாகவே நினைத்து, புத்தரின் கருத்துகளை புத்தரிடமிருந்து நேரடியாகப் பெற்றதைப் பரப்பியவர்களுக்கு
மாற்றாக அவை வெளிநாடுகளில் பரவ வைக்கும் போது புத்தரின் அற்புதங்கள் என்று காட்டத் தேவை இருந்ததாக நினைத்தார்கள், அதனால் புத்த சங்கங்களில் பிளவு ஏற்பட்டு, புத்தரை மனிதராக நினைப்பவர்கள், புத்தரை அவதாரமாக நினைப்பவர்கள் என இரு சமயப் பிரிவுகள் ஏற்பட்டது, இவையே ஹீனயானம் மற்றும் மகாயானம் எனப்படும். மகாயானத்தில் புத்தரை அவதாரமாகக் காட்ட புத்த ஜாதகக் கதைகள் எழுதப்பட்டன, புத்தரின் பிறப்பே புனிதம் நிறைந்ததாகக் சொல்ல பல பின்னனி புனைவுகள் புனையப்பட்டன. இவை புனைவுகள் தான் என்பதை உணர புத்தர் ஏழைத்தாயின் வேண்டுகோள் படி அவளுடைய இறந்த மகனை உயிர்பிக்க மறுத்து, மரணம் பற்றிய உண்மையை உணர்த்த அந்த தாயை இறப்பு இல்லாத வீட்டிற்கு சென்று கடுகு பெற்றுவருமாறு பணித்ததைக் கூறலாம். பெரியாரை புனிதப்படுத்தும் முயற்சியாக 'பெரியாரின் தீர்க்க தரிசனம்' என்கிற பெயரில் அவரது கருத்துக்களுக்கு தலைப்பிடுபவர்களின் செயல்கள் கூட பெரியாருக்கு புனிதம் கற்பிக்கும் செயலே.

புத்தர் மட்டும் அல்ல, புத்தரின் சூனிய வாதமான 'ஏதுமற்றது' என்கிற கொள்கைக்கு மாற்றாக அதன் எதிர் (0 அல்லது 1 நன்றி திரு ஸ்வாமி ஓம்கார்) சித்தாந்ததில் ஆதிசங்கரர் எல்லாமும் அது, அனைத்தும் பிரம்மம் என்று கூறி 'நீயே அது' என்கிற அத்வைத தத்துவத்தை உருவாக்கினார். புத்தமதத்தின் வைதீக வடிவம் தான் ஆதிசங்கரரின் அத்வைதம் அல்லது அதை வலுப்படுத்த விதமாக வைதிகத்தின் ஒரு பிரிவாகிய சார்வாகம் மற்றும் லோகாயத்தின் புதிய வடிவம் தான் அத்வைதம் என்று மத ஆய்வளர்கள் சொல்லுகிறார்கள். புத்தரைப் புனிதர் ஆகியதைப் போலவே ஆதிசங்கரர் சிவ(னின்) அம்சம் என்றெல்லாம் பின்னாளில் அவரைப் பின்பற்றுபவர்கள் கதை எழுதிக் கொண்டார்கள். ஏசு நாதர் புனிதர் ஆக்கப்பட்டதும் கூட மதப் பரவல் என்கிற செயலுக்கு இணைத்துக் கொண்ட பின்னனிக் கதைகளால் ஆனதும் என்றே மத ஆய்வளர்கள் கூறுகிறார்கள். இதற்குச் சான்றாக கிருஷ்ணன் மற்றும் ஏசு நாதர் ஆகிய இருவரும் ஆடுமேய்பது உட்பட பிறப்பு முதல் இறப்பு வரை நடந்ததாகக் கூறப்படும் ஒற்றுமைக் கதைகளைக் காட்டுகிறார்கள். அது பற்றி பிரிதொரு பதிவில் எழுதுகிறேன்.

கிருஷ்ணன், புத்தர், ஏசு, முகமது நபி ஆகியோர் அருள் பெற்றது கதையா ? கட்டுக்கதையா ? என்பதைவிட ஆய்வுக்குரியது மிகைப்படுத்தப்படும் புனிதத் தன்மையே. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விசம் என்பது உணவுக்கு பொருந்துமோ இல்லையோ மதப் புனிதத் தன்மைக்கு இவை பொருத்தமகாவே இருக்கிறது. அண்மையில் கன்னியாஸ்திரி ஒருவர் கிறித்துவர்கள் கட்டமைக்கும் பிரம்மச்சாரியம் என்னும் புனிதத்துவத்தின் மீது கல்வீசினார், தேவனுக்கு அற்பணிப்பு என்கிற பெயரில் காமம் துறந்து கடமை ஆற்றுபவர்களாக பாதிரியார், மதர் என்றெல்லாம் அறிவித்துக் கொண்டவர்களின் பாலியல் நடவடிக்கைகள், முறைகேடுகள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டினார். கேரளாவில் நூலாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நூலின் வழியாக பலர் ஞானஸ்தானம் பெற்று தங்களது மகள்களை கன்னிகஸ்திரி வேடம் வேண்டாம் என்று மீட்டுக்கொண்டார்கள் என்று செய்திகள் வெளியானது. இஸ்லாம் என்றால் அன்பு என்று கூறிக் கொள்ளும் இஸ்லாம் சமூகத்தின் மீது கல்வீச்சாக இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாதிகள் நடத்தும் தொடர் கல்வீச்சு, கருவறை புனிதம் நிறைந்தது என்று கூறும் இந்துக்கள் மீதான கல்வீச்சாக காஞ்சிபுரம் வரதராஜன் கோவில் படுகொலை மற்றும் மச்சேஸ்வர கோவில் நடந்த பாலியல் ஆபாச கூத்துகள். அமைதி, அன்பு எனும் புத்தமதத்தினர் மீதான கல்வீச்சு அதைப் பின்பற்றுபவர்கள் இலங்கையில் நடத்தும் இனவெறி ஆட்டம்.

இவையெல்லாம் கேள்விப்படும் பொழுது உண்மையான இறை நம்பிக்கையாளர்களை மிகவும் வேதனைக்கு உட்படுத்தும். கடவுள் எங்கே போனார் ? கடவுள் இருக்கிறாரா இல்லையா ? என்று நினைக்க வைக்கும். காரணம் மதங்கள் இறை நம்பிக்கை கட்டுமானத்தில் அடித்தளமாக புனித இடைச் சொருகல்களை மிகுதியாகவே சொருகி வைத்திருக்கிறது, அவையே ஒருவருக்கு குழந்தை முதல் முதுமை வரை மாறி மாறிச் சொல்லிக் கொடுக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகிறது. அந்த இடைச் சொருகல்கள் ஒவ்வொன்றாக உருவப்படும் போது எந்த ஒரு கட்டுமானமும் ஆட்டம் காணவே செய்யும்.

இறை நம்பிக்கைகளில் நுழைக்கப்படும் புனிதம் என்பவை மேல்பூச்சு தான் என்று புரிந்து கொள்வோர் இதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இல்லை இல்லை அவை என்றுமே புனிதம் என்போரே சஞ்சலத்திற்கும், அமைதி இன்மைக்கும் ஆளாகுகிறார்கள். பெண்களின் மீதான கற்பு போல் மதங்களில் புனிதம் என்பவை வெறும் கட்டமைப்புகள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

பிற பதிவுகள் :

புனிதக் குற்றங்கள்
புனித (நூற்) போர்

19 கருத்துகள்:

iniyavan சொன்னது…

ஆன்மீக கட்டுரைக்கு உங்களை விட்டால் இனி ஆளே இல்லை போலிருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//என். உலகநாதன் said...

ஆன்மீக கட்டுரைக்கு உங்களை விட்டால் இனி ஆளே இல்லை போலிருக்கிறது.//

புனிதப்படுத்தலுக்கு எதிரானது தான் இந்தக் கட்டுரை. நீங்களும் ஒரு உயர்வை கற்பித்து செல்கிறீர்கள்.
:(

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

என்ன கேவலமான கட்டுரை...

(புனிதம் கற்பிக்க கூடாதாம் :) )

துளசி கோபால் சொன்னது…

தசாவதாரத்தில் புத்தர் ஒரு அவதாரமுன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க(-:
இந்தக் கணக்குலே பார்த்தால் தசாவதாரம் ஒரு கோடி அவதாரமாக ஆயிரும்.

அகம் ப்ரமாஸ்மிக் கணக்குலே உலகம் பூராவும் இருக்கும்/ இருந்த ஜீவராசிகள் அத்தனையும் அவதாரங்களே!

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

தசாவதாரத்தில் புத்தர் ஒரு அவதாரமுன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க(-:
இந்தக் கணக்குலே பார்த்தால் தசாவதாரம் ஒரு கோடி அவதாரமாக ஆயிரும்.//

சயன புத்தரும், நாரயணனும் ஒரே மாதிரி தான் படுத்து இருப்பார்கள்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...

என்ன கேவலமான கட்டுரை...

(புனிதம் கற்பிக்க கூடாதாம் :) )//

:) புனிதம் கட்டமைக்க் கூடா(த)து

TBCD சொன்னது…

இந்த கல்லெறிதல் காலம் காலமாக இருந்துக்கொண்டு தான் இருந்திருக்கும்.

எல்லாரும் கண் அயர்ந்த வேளையில், அதைச் சுற்றி ஒரு கதையெழுப்பி, அதை மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்லி,மாற்றிவிடுவார்கள்.

அப்பாவி முரு சொன்னது…

எல்லா மதங்களிலும் (பெரியார் மதம் உட்பட) நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தால் புதிதாய் ஒரு மதம் தோன்றும் என்றே தோன்றுகிறது.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

திரு கோவி.கண்ணன்,
இங்கே உண்மையான பிரச்சினை, புனிதம் அல்லது புனிதம் அல்லாதது என்பதைப் பற்றியதே அல்ல!

எந்த ஒரு விஷயமும் நிறுவனப்படுத்தப் படும்போது. இயற்கையாகவே எழுகிற சிக்கல்தான்! Momentum, Velocity என்று பௌதீகத்தில் படித்திருக்கிறோம் இல்லையா, அதுபோலவே ஒரு நம்பிக்கை கூட,(நாத்திகமும் ஒரு நம்பிக்கையே) அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு முன்னெடுத்துச் செல்பவர்களால் மட்டுமே உயிர்த்திருக்கிறது.

வெறுமனே பின்பற்றுகிறவர்கள் நிறுவனமாக்கும் போது அது எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அதற்கு எதிராகவே செயல் படுவதையுமே காண முடியும்.

இந்தப்பதிவில் இன்னும் கொஞ்சம் விரிவாக:

http://consenttobenothing.blogspot.com/2009/08/blog-post_11.html

Sanjai Gandhi சொன்னது…

//புனிதப்படுத்தலுக்கு எதிரானது தான் இந்தக் கட்டுரை. நீங்களும் ஒரு உயர்வை கற்பித்து செல்கிறீர்கள்.
:(//

நீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல கட்டுரை.

priyamudanprabu சொன்னது…

நீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதங்கள் தேவையா ? ... என்பது தானே உங்க கேள்வி ...

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதங்கள் தேவையா ? ... என்பது தானே உங்க கேள்வி ...
//

புனித கட்டமைப்புகளே மதங்கள் நீர்த்துப் போவதற்கான காரணம்

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...
நீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..
//

அடப்பாவி அலுவலகத்துக்கு மிக அருகில் இருந்து கொண்டு......
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...
நல்ல கட்டுரை.
//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...
//புனிதப்படுத்தலுக்கு எதிரானது தான் இந்தக் கட்டுரை. நீங்களும் ஒரு உயர்வை கற்பித்து செல்கிறீர்கள்.
:(//

நீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..
//

நான் சொல்ல வேண்டியது. கோவை மாவட்டம் இளைஞர் அணி தலைவர்னு நீங்க எங்கேயோ.....

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
எல்லா மதங்களிலும் (பெரியார் மதம் உட்பட) நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தால் புதிதாய் ஒரு மதம் தோன்றும் என்றே தோன்றுகிறது.
//

புதுமதமாவது ஒண்ணாவது இப்ப இருக்கும் சூழலில் எந்த மதமானாலும் பஞ்சர் ஆகிவிடும்

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இந்த கல்லெறிதல் காலம் காலமாக இருந்துக்கொண்டு தான் இருந்திருக்கும்.

எல்லாரும் கண் அயர்ந்த வேளையில், அதைச் சுற்றி ஒரு கதையெழுப்பி, அதை மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்லி,மாற்றிவிடுவார்கள்.
///

அதென்னவோ சரி தான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்