Paaர்த்தேன் : பச்சன்கள் நடித்த Paa படம் பார்த்தேன். இந்திக்காரர்களால் திரையரங்கு நிறைந்திருந்தது. இளையராஜாவின் இளையோடும் இசை. சிறுவன் மருத்துவமனையில் மரணப் படுக்கையாக படுத்திருக்கும் காட்சியில் அவனைப் பார்க்க அவனுடைய தாத்தா வருகிறார், சிறுவன் "டைம் ஓவர்" என்று சொல்ல, அவனைத் தேற்றும் விதமாக, "அதெல்லாம் ஒன்றும் இல்லை, நாம ஐரோப்பா போறோம், அமெரிக்கப் போகப் போறோம்...." என்று அளந்து கொண்டே போக, சிறுவன் "விசிடிங்க் டைம் ஓவர்" என்று சொல்ல அரங்கே சிரிப்பொலியில் அதிர்ந்தது. படம் நன்றாக இருந்தது.
பேராண்மை : படம் வெளியான ஒரு மாதம் சென்றே பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது, அதே போல் மலைசாதியினர் இன்னல் குறித்து சுகாசினி நடித்த 'ஓர் இந்தியக் கனவு' படம் 80 களில் வெளியானது. கம்யூனிச சிந்தாந்த பின்னனியில் எடுக்கப்பட்ட பேராண்மைப் படத்தில் ஜெயம் ரவி சிறப்பாகச் செய்திருந்தார். பெண்களால் எதுவும் முடியும் என எழுச்சி ஊட்டும் படம், சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பதியவைத்துள்ளப் படம், இப்பெல்லாம் யாருங்க சாதிப் பார்க்கிறாங்க என்று சமுகம் சமத்துவம் அடைந்துவிட்டதாக நினைப்பவர்கள் பார்க்கலாம். ஆண்களின் சாதி வெறிகள் பலப்படங்களில் படமாக்கப்பட்டுள்ளது. பெண்களின் சாதிய ரிதியிலான ஆதரவு மென்மையாக இந்தப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.
நான் அவனில்லை 2 : கதைக் களத்தை நம்பி படம் எடுப்பதைவிட சதைக் கோளத்தை நம்பி எடுக்கலாம் என்று இறங்கி இருப்பார்கள் போலும், இல்லத்தினரோடு செல்பவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் அயல் தேசங்களிலும் பெண்களின் உடல் தேசங்களிலும் படக்கருவி சுழல்கிறது. பணக்காரப் பெண்களை ஏமாற்றி பறித்தப் பணத்தை இலங்கையில் இருக்கும் உள்நாட்டு அகதிகள் மறு வாழ்வுக்கு அனுப்புகிறாராம் கதாநாயகன் - குப்பை கான்செப்ட். நேரடியாக தொண்டு நிறுவனங்கள் வழியாக செய்யும் உதவிகளே போய் சேராத நிலையில், இலங்கைத் தமிழர்களின் நிலையை படத்தின் கதாநாயகனின் திருட்டுத் தொழிலுக்கு ஞாயமாகக் காட்டப் பயன்படுத்திக் கொள்வது அருவெறுப்பாக இருக்கிறது. நான் அவனில்லை முதல் பகுதி போல் இருக்கும் என்று நினைத்து செல்பவர்களுக்கு 99 விழுக்காடு ஏமாற்றத்தை தரும் படம். நான் சென்று வந்த சில ஸ்விஸ் பகுதிகளில் படமாக்கி இருந்தார்கள் என்பது தவிர்த்து படம் எனக்கு எந்த விததிலும் பாராட்டும் வண்ணம் தெரியவில்லை. விரைவில் உலகத் தொலைகாட்சிகளில் முதல் முறையில் என இடம் பிடிக்கும் படங்களின் முந்தைய சாதனைகளை முறியடிக்கப் போகும் மற்றொரு பப்படம்.
கோலங்கள் தொலைக்காட்சித் தொடர் : பாலச்சந்தர் பாணி கதாநாயகி, குடும்பத்துக்கு ஓடி ஓடி உழைப்பதுடன், தனது பெயரையும் வளர்த்துக் கொள்ளும் படம். ஒரு பெண்ணின் சிறப்பைக் காட்ட அவர்கள் குடும்பத்தில் இருப்பவர் அனைவரையும் குற்றவாளிகள், பேராசைக்காரர்கள் ஆக்கி அதைச் செய்கிறார் திருச் செல்வம், குடும்பத் தொல்லைகளில் இருந்து ஆண்கள் சன்யாசம் வாங்கிச் செல்வது போல் தொடரில் தேவயானி உடல்குறையுற்றோர்களுக்கு சேவை செய்யப் புறப்படுவதாக கதை முடிந்திருக்கிறது. நமக்கு தெரிந்த குடும்பங்களின் கதைகள், அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள், ஒரு சில புதிய வரவு என்பது தவிர்த்து ஆண்டுகள் மாறினாலும் பெரிதாக ஒன்றும் மாறியிருக்காது, மெகா தொடர்களும் அப்படித்தான் போலும், பாத்திரங்களை முதல் 10 பகுதிகளில் தெரிந்து கொண்டுவிட்டால் 1000 ஆவது தொடர் பகுதி பார்க்கும் போது கதையின் போக்கு புரிந்துவிடும். :) அபி ஒரு மணிமேகலையாம் !
****
சென்னை: சென்னை யில் நடந்த இந்திய - ஜப்பான் வர்த்தக தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கின்போது குத்துவிளக்கேற்ற மத்திய ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது மறுப்பு தெரிவித்ததால் அதற்குக் கண்டனம் தெரிவித்து பிரபல பாடகர் ஜேசுதாஸ் விழாவிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பம் என்றாலும் பொதுவாழ்வில் நுழைந்தவர்கள் அதில் அவ்வளவு இறுக்கம் காட்ட விரும்பினால் பொதுச் சேவைக்கு வரத் தேவை இல்லை என்பது என் கருத்து.
"வணக்குத்துக்கு உரியவன் இறைவன் ஒருவனே " என்பதை இருகை சேர்த்து கும்பிட்டபடி மேடைகளிலும், வாக்குச் சாவடி ஊர்வலங்களிலும் பொது மக்களை நோக்கி வாக்கு கேட்கும் போது மறந்துவிடும் இஸ்லாமிய வேட்பாளர்கள், பதவி பெற்ற பிறகு விளக்கு ஏற்றுவது இஸ்லாமிற்கு எதிரானது என்று நினைத்து மேடையில் குழப்பம் ஏற்படுத்துவது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.
எந்த ஒரு நிகழ்வையும் விளக்கேற்றி துவங்குவது இந்தியர்களின் வழக்கமாக இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் வண்ண நாடாவை (ரிப்பன்) வெட்டி, அல்லது அது தொடர்பான படங்களைத் திறந்து துவங்குவார்கள். நிகழ்வின் துவக்கம் ஒளியேற்றி துவங்குவதன் மூலம் அந்நிகழ்ச்சி வெளிச்சத்திற்கு வருவதாக அறிமுகம் கொடுக்கப்படுகிறது. விளக்கு ஏற்றுவதற்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை, இறைமறுபபளர்களும் மேடையில் விளக்கேற்ற மறுப்பது இல்லை. எக்ஸ்ட்ரீமிசமாக போகும் எதுவுமே பொதுமக்களால் விமர்சனம் செய்யப்படும்.
*****
தொண்டர் 1: நம்ம தலைவருக்கும் பிரிவினையில் உடன் பாடு இல்லை போல இருக்கே
தொண்டர் 2 : ஆமாம் எல்லாம் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக இருக்கனும் என்றே விரும்புகிறார்
தொண்டர் 1 : அவ்வளவு நாட்டுப்பற்றா ?
தொண்டர் 2 : வீட்டுப்பற்று, தனது குடும்ப ஒற்றுமையைக் குறித்து தான் அப்படி நினைக்கிறார்
38 கருத்துகள்:
அதெப்படிங்க காமுகன் தேவநாதனப் பத்தி எழுதும்போது மட்டும் எல்லா பார்ப்பும் அப்படியில்லன்னு எழுதறீங்க, ஆனா அகமது பத்தி எழுதும்போது மட்டும் இஸ்லாமிய வேட்பாளர்கள்னு பொதுப்படையா எழுதறீங்க?. உங்க பகுத்தறிவ ஏதாவது ஷாகாவுல அடகு வெச்சிட்டீங்களா?
//லெமூரியன் said...
அதெப்படிங்க காமுகன் தேவநாதனப் பத்தி எழுதும்போது மட்டும் எல்லா பார்ப்பும் அப்படியில்லன்னு எழுதறீங்க, ஆனா அகமது பத்தி எழுதும்போது மட்டும் இஸ்லாமிய வேட்பாளர்கள்னு பொதுப்படையா எழுதறீங்க?. உங்க பகுத்தறிவ ஏதாவது ஷாகாவுல அடகு வெச்சிட்டீங்களா?//
அவிங்களும் நாங்களும் அடிப்படைவாதக் கொள்கை அளவில் ஒண்ணுன்னு நீங்கள் ஒப்புதல் கொடுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ?
சரி, விளக்கேற்றும் இஸ்லாமிய வேட்பாளர்கள் யார் யார் என்று சொல்லுங்க, நான் இடுகையில் சரி செய்கிறேன்.
//அவிங்களும் நாங்களும் அடிப்படைவாதக் கொள்கை அளவில் ஒண்ணுன்னு நீங்கள் ஒப்புதல் கொடுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ?//
"நாங்க" என்பது யாரை குறிக்குதுன்னு தெரியல. ஒருவேளை நான் முஸ்லிம் என்பது உங்கள் யூகம்னா அதுக்கு நான் பொறுப்பில்ல. அகமது பொதுமேடையில் தனது மத உணர்வுகளை கொண்டு வந்தது தவறு என்பதில் மாற்று கருத்து ஏதுமில்லை. ஆனால் இங்கு பொதுமை படுத்துதல் என்பதில்தான் பிரச்சினை.
//சரி, விளக்கேற்றும் இஸ்லாமிய வேட்பாளர்கள் யார் யார் என்று சொல்லுங்க, நான் இடுகையில் சரி செய்கிறேன்.//
விளக்கேத்துறது இருக்கட்டும். காஞ்சி மடாதிபதி கால்ல விழுந்த ஒரு முஸ்லிம் ஜனாதிபதி பத்தி படிச்சிருக்கீங்களா. உங்கள் பதிவு தலித்களும், முஸ்லிம்களும் உயர்ஜாதி இந்துக்களுக்கு அடிமையாக வாழ்வதென்றால் இந்தியாவில் இருங்கள் இல்லையென்றால் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்கிற அரை டவுசர்களின் கூற்றை ஒட்டியே இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன் சிங்கப்பூரில் ஏதாவது ஷாகாவில் இணைந்துவிட்டீர்களா?
//"நாங்க" என்பது யாரை குறிக்குதுன்னு தெரியல. ஒருவேளை நான் முஸ்லிம் என்பது உங்கள் யூகம்னா அதுக்கு நான் பொறுப்பில்ல. அகமது பொதுமேடையில் தனது மத உணர்வுகளை கொண்டு வந்தது தவறு என்பதில் மாற்று கருத்து ஏதுமில்லை. ஆனால் இங்கு பொதுமை படுத்துதல் என்பதில்தான் பிரச்சினை.//
பொதுமைப் படுத்துவது என்றால் என்ன ? உங்கள் பதிவுகளில் அடிப்படை வாத இந்துத்துவாவை விமர்சனம் செய்யும் அளவுக்கு பிற மத விமர்சனம் எதுவும் இல்லையே ? உங்களுக்கு பொதுமைப் படுத்துவது எது என்பதில் இருக்கும் அனுகுமுறையே எனக்கும் இருக்க வேண்டும் என்கிற பொதுத் தேவை எதுவும் இல்லை
//விளக்கேத்துறது இருக்கட்டும். காஞ்சி மடாதிபதி கால்ல விழுந்த ஒரு முஸ்லிம் ஜனாதிபதி பத்தி படிச்சிருக்கீங்களா. //
ஒருவர் காலில் விழுகிறார் என்பதால் அவர் இஸ்லாமில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்கிற புரிதல் எனக்கு இல்லை.
//உங்கள் பதிவு தலித்களும், முஸ்லிம்களும் உயர்ஜாதி இந்துக்களுக்கு அடிமையாக வாழ்வதென்றால் இந்தியாவில் இருங்கள் இல்லையென்றால் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்கிற அரை டவுசர்களின் கூற்றை ஒட்டியே இருக்கிறது.//
எங்கள் ஊரிலும் நாகூரிலும் இஸ்லாமியர் வீட்டில் தலித்துகள் தான் இன்றும் சேவகம் செய்து வருகின்றனர்.
// அதனால்தான் கேட்கிறேன் சிங்கப்பூரில் ஏதாவது ஷாகாவில் இணைந்துவிட்டீர்களா?//
நான் எங்கு இணைவது நீங்கள் இணைவது என்பது பற்றி அவரவர் தான் முடிவு செய்ய முடியும். தெரிந்தும் எதுவும் ஆகப் போவதில்லை
அரசு விழாக்களில் இது போன்ற மத சம்பந்தமான (விளக்கேற்றுதல்,பூஜை செய்தல் ...)போன்றவற்றை தடை செய்ய வேண்டும் .
விளக்கேற்ற மறுத்த அகமதுவை பாராட்டுகின்றேன் .
நமது கருத்தை அடுத்தவர் மீது திணிக்கும் பொது தான் மதக்கலவரங்கள் தோன்றுகின்றன
// raja said...
அரசு விழாக்களில் இது போன்ற மத சம்பந்தமான (விளக்கேற்றுதல்,பூஜை செய்தல் ...)போன்றவற்றை தடை செய்ய வேண்டும் .
விளக்கேற்ற மறுத்த அகமதுவை பாராட்டுகின்றேன் .
நமது கருத்தை அடுத்தவர் மீது திணிக்கும் பொது தான் மதக்கலவரங்கள் தோன்றுகின்றன//
நல்லது ! இஸ்லாமிய அடைப்பட வாதப்படி, மாற்று மதத்தினரின் மதம் சார்ந்த (தீபாவளி, பொங்கல் போன்ற) பண்டிகைகளுக்குக் கூட வாழ்த்து சொல்வதும் வாழ்த்து பெறுவதும் கூடத் தவறாமே. அதையும் அரசியல் ரீதியாக தடைச் செய்யச் சொல்லலாம்.
நோம்புக் கஞ்சி குடிக்க அரசியல் தலைவர்களை கூப்பிடுவது கூட நம்பிக்கையை அடுத்த மதத்தினர் மீது திணிப்பது போன்றது தானே ?
கோவியாரே அந்தச் செய்தியை நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன். அகமதை ஏற்றச் சொன்ன குத்து விளக்கு பஞ்ச முக திரி கொண்ட, விளக்கின் மேல் கூம்புப் பகுதியில் லெஷ்மி உருவம் கொண்ட விளக்கு. கடவுளர் உருவம் அற்ற சாதாரண பஞ்சமுக குத்து விளக்கை ஏற்றுவதில் அவருக்குத் தயக்கம் இல்லை என்பதையும்,கடவுள் உருவம் இருப்பதால் இது வழிபாடு தொடர்புடையதாக இருப்பதால் ஏற்றவில்லை என்பதையும் அவர் தெளிவு படுத்தியபின் என்ன பிரச்சனை??
//நல்லது ! இஸ்லாமிய அடைப்பட வாதப்படி, மாற்று மதத்தினரின் மதம் சார்ந்த (தீபாவளி, பொங்கல் போன்ற) பண்டிகைகளுக்குக் கூட வாழ்த்து சொல்வதும் வாழ்த்து பெறுவதும் கூடத் தவறாமே.
//
கோவி அண்ணா இந்தச் செய்தி தவறு என்பதனை ஆதாரப்பூர்வமாக நான் முன்பே உங்களிடம் நிரூபித்த பின்பும் மீண்டும் மீண்டும் நீங்கள் அதைச் சொல்வதன் காரணத்தை நான் எவ்வாறு புரிந்து கொள்ள?? :))
பா - எங்கே பார்த்தீர்கள்...ஜீசுனில் சனமே இல்லை....20 பேர்தான்..இந்த வாரம் வரப் போகும் ஒரு டெரர் படத்துக்கு சனம் திருவிழாக்கனக்கா குவியும் :-)
அருமையான படம்...:-)
// எம்.எம்.அப்துல்லா said...
கோவியாரே அந்தச் செய்தியை நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன். அகமதை ஏற்றச் சொன்ன குத்து விளக்கு பஞ்ச முக திரி கொண்ட, விளக்கின் மேல் கூம்புப் பகுதியில் லெஷ்மி உருவம் கொண்ட விளக்கு. கடவுளர் உருவம் அற்ற சாதாரண பஞ்சமுக குத்து விளக்கை ஏற்றுவதில் அவருக்குத் தயக்கம் இல்லை என்பதையும்,கடவுள் உருவம் இருப்பதால் இது வழிபாடு தொடர்புடையதாக இருப்பதால் ஏற்றவில்லை என்பதையும் அவர் தெளிவு படுத்தியபின் என்ன பிரச்சனை??//
பொது நிகழ்ச்சியில் இதுவெல்லாம் பிரச்சனை ஆகுமா ? எப்படிப் பார்த்தால் எல்லா பஞ்ச முக விளக்கும் இந்துக்கள் வழிபாட்டுச் சின்னம் தான். இந்தோனிசா இஸ்லாமிய நாடு, அங்கு புழங்கும் ரூபாய் நோட்டில் பிள்ளையார் படம் இருக்கு. மத்திய அமைச்சர் முகமது வாக்கு கேட்க வாக்காளர்களிடம் கும்பிட்டு இருக்க மாட்டார் என்று நினைக்கிறீர்களா ?
//நோம்புக் கஞ்சி குடிக்க அரசியல் தலைவர்களை கூப்பிடுவது கூட நம்பிக்கையை அடுத்த மதத்தினர் மீது திணிப்பது போன்றது தானே ?
//
அவர் சொல்வது அரசு விழா பற்றி. நீங்கள் சொல்லும் நோன்பு திறக்கும் விழா அரசு விழா அல்ல. நோன்புக் கஞ்சி குடிக்கக் கூப்பிடுவதும்கூட இணக்கம் உள்ள நண்பர்களைத்தான். ராமகோபாலனை அல்ல.
//எப்படிப் பார்த்தால் எல்லா பஞ்ச முக விளக்கும் இந்துக்கள் வழிபாட்டுச் சின்னம் தான். //
மன்னிக்கவும். கடவுளர் உருவமற்ற விளக்குகள் தர்ஹாக்களிலும்,மாதா கோவில்களிலும் உண்டு.
// எம்.எம்.அப்துல்லா said...
//எப்படிப் பார்த்தால் எல்லா பஞ்ச முக விளக்கும் இந்துக்கள் வழிபாட்டுச் சின்னம் தான். //
மன்னிக்கவும். கடவுளர் உருவமற்ற விளக்குகள் தர்ஹாக்களிலும்,மாதா கோவில்களிலும் உண்டு.//
விளக்கேற்ற வரும் இஸ்லாமியர் அடிப்படை வாதியா இல்லையா ? அவர்கள் கொள்கை என்ன இதெல்லாம் பார்த்து தான் பொது மேடைக்கு அதற்கு ஏற்றார்போல் விளக்கு கொண்டு வரவேண்டுமா ? அவர் பெருந்தன்மையாக வேறொரு விளக்கைக் கொண்டுவாருங்கள் ஏற்றுகிறேன் என்று சொல்லி இருக்கலாமே ?
//அவர் பெருந்தன்மையாக வேறொரு விளக்கைக் கொண்டுவாருங்கள் ஏற்றுகிறேன் என்று சொல்லி இருக்கலாமே ?
//
லாம் :)
// ’டொன்’ லீ said...
பா - எங்கே பார்த்தீர்கள்...ஜீசுனில் சனமே இல்லை....20 பேர்தான்..இந்த வாரம் வரப் போகும் ஒரு டெரர் படத்துக்கு சனம் திருவிழாக்கனக்கா குவியும் :-)
அருமையான படம்...:-)//
தம்பி,
பீச் சாலை, 'ஷா' திரையரங்கம் ! (பூகிஸுக்கு பின் பக்கமாக செல்லனும்)
//எம்.எம்.அப்துல்லா said...
//அவர் பெருந்தன்மையாக வேறொரு விளக்கைக் கொண்டுவாருங்கள் ஏற்றுகிறேன் என்று சொல்லி இருக்கலாமே ?
//
லாம் :)//
தம்பி அப்துல்லா, இந்தியாவில் விளையும் 90 விழுக்காடு விளை பொருள்கள் விதையும் அறுவடையும் பூசை போட்டுத்தான் வெளியே விற்பனைக்கு வருகிறது ! அதையெல்லாம் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தால் வயிறு காயும்.
\\மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பம் என்றாலும் பொதுவாழ்வில் நுழைந்தவர்கள் அதில் அவ்வளவு இறுக்கம் காட்ட விரும்பினால் பொதுச் சேவைக்கு வரத் தேவை இல்லை என்பது என் கருத்து.\\
முழுக்க முழுக்க உடன்படுகிறேன்.
சட்டத்திற்கு புறம்பானதாக எதுவும் செய்யச் சொல்ல வில்லையே..
விளக்கேற்றி இருந்தால் மாற்று மதத்தினரை மதித்ததாக பொருள் வருமே ஒழிய தன் மதத்தினை பின்பற்றாததாக பொருள் அல்ல.
என்ன செய்ய மாற்று மதத்தினரின் ஓட்டு தேவை..ஆனால் அதை மதிப்பதென்றால்.. ஹீம்ம்ம்ம்...
உள்ளேன் அய்யா
பொது விழாவிற்கு வரும்பொழுது பொது மணிதனாக இருக்க வேண்டுமே தவிர இன்ன மதம் என்று முத்திரை குத்தப்பட்டு வரக்கூடாது என்று ஒரு மத்திய இணை அமைச்சருக்கு தெரியவில்லையே. இதேமனதுடன்தானே இவர் தன் பனியைச் செய்வார்...
ரொம்ப சிரமம்... :-((((((
வேளாண் விளை பொருட்களில்(அரிசி, தேங்காய், காய் கறி, எண்ணெய் மற்றும் அதன் மூல வித்துகள்) 90 சதவீதம் இந்துசாமிகளுக்கு படைக்கப்பட்ட பின்னே அல்லது இந்து சாமிகளை வணங்கிவிட்டே பின்னே ஆரம்பிக்கப்படுகிறது.
உழுதல், களை எடுத்தல், கதிர் அறுத்தல் என்று வயல்களில் பூசை..
சாமி படம் தாங்கிய லாரிகளில் அவை ஏற்றப்பட்டு கடைகளுக்கு...
கடை திறக்கும்போதே பத்தி, பூசை காட்டி வியாபாரம்...
என்று நீக்கமற இந்துசாமிகள் நிறைதுள்ளது.
இதையெல்லம் தாண்டி அல்லாவிற்கு மட்டும் பயந்து எப்படி வாழ்வது இந்தியாவில்?
**
குத்து விளக்கு இந்தியாவின் சம்பிரதாயம் என்றால் அதில் எந்த சாமிகளும் இல்லாமல் இருக்க வேண்டும். இதை விழா ஏற்பாட்டளர்கள் கவனித்துக் கொள்ளவேண்டும்.
இஸ்லாமியரை அழைக்கும்போது மேலும் கவனமாக இருக்கவேண்டும் அவர்களின் மதநம்பிக்கை மிகவும் தீவிரமானது. அதை அறிந்து மதிக்கவேண்டும்.
வணங்குவதுதான் பிரச்சனை , பூசை செய்யப்பட்டு விளைவித்த அல்லது அறுவடை செய்த பொருட்களை சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை சால்ஜாப்பு சொல்லலாம்.
**
தகவலுக்காக அல்லாவின் பயம் தாண்டிய நிச வாழ்க்கையின் உண்மைகள்...
கடா எப்படி வெட்டப்படுகிறது என்பது மிகவும் முக்கியம் இஸ்லாத்தில்.
ஆனால், பூசை செய்யப்பட்டு விளைவித்த அல்லது அறுவடை செய்த பொருட்களை சாப்பிடுவது குறித்தான குரான் விளக்கங்கள் இல்லை.
அதுபோலவே வணங்குவதுதான் தடையே தவிர, விளக்கு ஏற்றி வைப்பது தடை அல்ல. இஸ்லாமியர் வழங்கிய மின்சார விளக்குகள் கோவில்களில் உண்டு. " அன்பளிப்பு: அல்லா பிச்சை" என்று பொறிக்கப்பட்ட ட்யூப் லைட்டுகள் தினமும் இந்து சாமிக்கு விளக்கேற்றி வைக்கின்றன.
//"வணக்குத்துக்கு உரியவன் இறைவன் ஒருவனே " என்பதை இருகை சேர்த்து கும்பிட்டபடி மேடைகளிலும், வாக்குச் சாவடி ஊர்வலங்களிலும் பொது மக்களை நோக்கி வாக்கு கேட்கும் போது மறந்துவிடும் இஸ்லாமிய வேட்பாளர்கள், பதவி பெற்ற பிறகு விளக்கு ஏற்றுவது இஸ்லாமிற்கு எதிரானது என்று நினைத்து மேடையில் குழப்பம் ஏற்படுத்துவது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.//
நியாயமான கேள்வி தான்!
வணக்கம் : ஒருவருக்கு ஒருவர் முகமன் கூறிக்கொள்வது. சலாம் அலைக்கும் என்னப்து போல ஒரு சாதரணச் செயல்.
பிரார்த்தனை: கடவுளை நோக்கிய வழிபாடு.
"பிரார்தனைக்கு உரியவன் இறைவனே " என்று இருந்திருக்க வேண்டும். இப்படி "வணக்குத்துக்கு உரியவன் இறைவன் ஒருவனே " என்று சிதைந்து வணக்கம் செய்வதே தவறாகப்போய்விட்டது. :-(((((
**
பஞ்சமுகமாக இருந்தாலும், பக்கிரி முகமாக இருந்தாலும் அதை நம்புபர்களுக்குததான் அது கடவுள். கடவுளுக்கு உருவமே இல்லை என்று நம்பும் இஸ்லாமியர் எப்படி ஒரு உலோகத்தில் செதுக்கப்பட்ட மனித உருவை கடவுள் உருவமாக பார்த்தார்? அவருக்கு அது சாதரணாமான படமாகவே / சிற்பமாகவே தெரிந்திருக்க வேண்டும். இது அவரின் சொந்தமதப் பழக்கத்தில் அவர் வைத்துள்ள நம்பிக்கையின் குறைபாடு.
மேலும் , விளக்கு ஏறுவதையும் , ஏற்றிய விளக்கை இறையாக நினைத்து பிரார்த்தனை செய்வதும் இரண்டு வேறுபட்ட செயல்கள். இரண்டையும் குழப்பிகொண்டுள்ளார்.
//மேலும் , விளக்கு ஏறுவதையும் , ஏற்றிய விளக்கை இறையாக நினைத்து பிரார்த்தனை செய்வதும் இரண்டு வேறுபட்ட செயல்கள். இரண்டையும் குழப்பிகொண்டுள்ளார்
//
:)
.
அப்துல்லா,
புன்னகை மட்டும் ஏனோ? :-))))
//அகமதை ஏற்றச் சொன்ன குத்து விளக்கு பஞ்ச முக திரி கொண்ட, விளக்கின் மேல் கூம்புப் பகுதியில் லெஷ்மி உருவம் கொண்ட விளக்கு. கடவுளர் உருவம் அற்ற சாதாரண பஞ்சமுக குத்து விளக்கை ஏற்றுவதில் அவருக்குத் தயக்கம் இல்லை//
மேலே உள்ளது நீங்கள் சொன்னதுதானே? :-))
1. லட்சுமி என்பது பெயர். அப்படி ஒரு பெயர் உள்ள பெண் உங்கள் அலுவலகத்தில் இருந்தால் அது இந்துக் கடவுளின் பெயர் என்று அப்பெண்ணிடம் பேசாமல் விலகி ஒதுக்கி விடுவீர்களா?
2. "பஞ்ச முக திரி கொண்ட, விளக்கின் மேல் கூம்புப் பகுதியில் இருக்கும் பெண் உருவம்" ஏன் அகமதிற்கு லெஷ்மியாகத் தெரிகிறது?
அதுவும் ஏதோ ஒரு பெண் லட்சுமியாகத் தெரியாமல் இந்துக் கடவுள் லட்சுமியாகத் தெரிகிறது?
ஒரு உலோக உருவத்தைப் உலோக உருவமாகப் பார்க்காமல் கடவுளாகப் பார்த்து ஓடும் இவர் எப்படி இஸ்லாமியராவார்? இஸ்லாத்தில்தான் இறைக்கு உருவம் இல்லையே?
*********************
உங்கள் தகவலுக்காக..
3.குரானில் இறைவனுக்கு இணையாக யாரையும் கருதக்கூடாது என்று பொருள்படும் வசனங்கள் தான் உள்ளதே தவிர,......
"கூம்புப் பகுதியில் இருக்கும் பெண் உருவம் " உள்ள விளக்கில் தீபம் ஏற்றக்கூடாது என்று வசனம் இல்லை. அப்படி இருந்தால் வசன எண் தரவும் .
4. அதுபோல "பிராத்தனைக்கு , வழிபாட்டுக்கு" உரியவன் இறைவன் " என்று பொருள்படும் வசனங்கள் தான் உள்ளதே தவிர ஒருவருக்கு ஒருவர் வணக்கம் சொல்லுதல் தடை செய்யப்படவில்லை. எனவே இந்துக் கடவுளே நேரில் முகமதுவின் முன் வந்தாலும் , குரான் விதிகள்படி அவர் அதை இறையாக நினைத்து பிராத்தனைக்கு, வழிபாடு செய்யக்கூடாதுதான். மற்றபடி "ஹலோ இந்து லட்சுமி , ஹவ் ஆர் யூ ?" என்று கேட்பதை குரான் தடை செய்யவில்லை.
அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு, முகம்மது அதை கடவுளாக ஏன் எண்ண வேண்டும்?
இந்த சுட்டியில் சொல்லப்பட்டுள்ள அகமது அலி இஸ்லாமிய சரியத் சட்டங்களைப் பின்பற்றுபவர் அல்ல. குரானை மட்டுமே பின்பற்றுபவர் என்று நினைக்கிறேன். அதனால்தான் பதிவர் அப்துல்லாவுக்கும், அமைச்சர் அகமதுக்கும் உள்ள புரிதல் இவரிடம் இல்லை. :-)))
M. Ahmad Ali lighting `the kuthuvilakku' to inaugurate a laboratory at a school in Dindigul on Wednesday.
http://www.hindu.com/2006/09/14/stories/2006091416380300.htm
**
ஸ்டேண்டர்டு பின்னூட்ட டெம்பிளேட்:
ஒரு சிலர் இப்படி குத்துவிளக்கு ஏற்றுவதால் அது இஸ்லாத்தின் குற்றம் அல்ல. இஸ்லாத்தைப் நன்றாகப் புரிந்தவர்கள் இப்படி குத்துவிளக்கு ஏற்றமாட்டார்கள். தயவு செய்து இப்படி ஒருசிலரின் தவறான செயலை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமியரையும் எடைபோட வேண்டாம். இது போன்றவர்களை நாங்கள் இஸ்லாமியராக நினைப்பது இல்லை.
//அதனால்தான் பதிவர் அப்துல்லாவுக்கும், அமைச்சர் அகமதுக்கும் உள்ள புரிதல் இவரிடம் இல்லை. :-)))
//
இல்லை கல்வெட்டு அண்ணா. என் புரிதல் வேறு, அமைச்சரின் புரிதல் வேறு.
என்னை அழைத்தால் நான் நிச்சயம் செய்வேன். நான் தனிநபர்.என் நிலைப்பாட்டை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. உரிமையும் கிடையாது. அகமது என்பவர் லீக் என்ற ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர். அவர் கேள்விகளுக்கு உட்பட்டவர்.நிச்சயம் அடிப்படைவாதிகள் அவரை நோக்கி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர். அவரது நிலைப்பாட்டின் பக்கம் உள்ள நியாயத்தைதான் நான் சொல்ல விரும்பினேனே தவிர அதுவே என் நிலைப்பாடு என்று நான் எங்கு சொன்னேன்?? “ லாம் :) “ என்று ஒரு பின்னூட்டமிட்டு இருக்கின்றேன். வெறும் ”ஸ்மைலி” மட்டும் இட்டு ஒரு பின்னூட்டம் இட்டு இருக்கின்றேன். அதன் சரியான காரணங்களை சற்று உட்கார்ந்து யோசித்தால் நான் சொல்ல வந்தது புரியும் என்று நம்புகின்றேன்.
//*
ஸ்டேண்டர்டு பின்னூட்ட டெம்பிளேட்:
ஒரு சிலர் இப்படி குத்துவிளக்கு ஏற்றுவதால் அது இஸ்லாத்தின் குற்றம் அல்ல. இஸ்லாத்தைப் நன்றாகப் புரிந்தவர்கள் இப்படி குத்துவிளக்கு ஏற்றமாட்டார்கள். தயவு செய்து இப்படி ஒருசிலரின் தவறான செயலை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமியரையும் எடைபோட வேண்டாம். இது போன்றவர்களை நாங்கள் இஸ்லாமியராக நினைப்பது இல்லை.//
கல்வெட்டு,
வெகுவாக ரசிக்கப்பட்டது !
//அதன் சரியான காரணங்களை சற்று உட்கார்ந்து யோசித்தால் நான் சொல்ல வந்தது புரியும் என்று நம்புகின்றேன்.//
தம்பி, உட்கார்ந்து யோசிக்கனுமா ? அவ்வ்வ்வ்வ்வ்
இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் ஒவ்வொரு தனி மனிதனின் மத உரிமையையும் மதிக்கிறது.(ஜீவாதார உரிமைகள்). அமைச்சர் செய்தது சட்டப் பூர்வமாக தவறில்லை. பொது இடத்தில் இப்படி நடப்பது ரசக் குறைவானது என்றால், விழா அமைப்பாளர்களைத்தான் குறை சொல்ல வேண்டும். அவர்கள் அமைச்சருக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் தருவதற்கு பதில் முன்னமே சொல்லி அவரது ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். இதை ஆட்சேபித்து ஒருவர் வெளிநடப்பு செய்வதும் ரசக் குறைவானதே.
http://kgjawarlal.wordpress.com
அப்துல்லா,
//
என்னை அழைத்தால் நான் நிச்சயம் செய்வேன். நான் தனிநபர்.என் நிலைப்பாட்டை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. உரிமையும் கிடையாது. அகமது என்பவர் லீக் என்ற ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர். அவர் கேள்விகளுக்கு உட்பட்டவர்.நிச்சயம் அடிப்படைவாதிகள் அவரை நோக்கி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்.
//
மதம் என்பது சில அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டது.
தனி நபரானாலும் அவர் இஸ்லாமியரே. அல்லது இயக்கமானாலும் அது இஸ்லாமிய இயக்கமே. இரண்டுக்கும் அடிப்படை இஸ்லாம். இஸ்லாத்தின் அடிப்படி குரான்.
குரானில் மறுக்காததை ஏன் செய்யப்பயப்பட வேண்டும் என்பதே எனது கேள்வி.
நோக்கியா போனில் இருந்து SMS செய்யக்கூடது என்றோ அல்லது செய்யலாம் என்றோ குரானில் இல்லை. (எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் அறிவியல் வாழிவியல் நூல் குரான் என்ற அடிப்படையில்)
இந்த நிலையில் ஒரு இஸ்லாமியர் அவருக்கு பிடித்த எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம் either SMS ok or SMS not ok சரியா?
அவர் எடுக்கும் எந்த முடிவிற்கும் குரான் பொறுப்பல்ல. குரானில்தான் நோக்கியா SMS பற்றி ஏதும் இல்லையே?
அப்படி இருக்கையில் தனிமனித செயல்களுக்கு குரானையோ அல்லது மதத்தையோ சுட்ட வேண்டாம்.
மதத்தைவிட அது இஸ்லாமாக இருந்தாலும் மனிதம் பெரிது.
ரோட்டில் அய்யப்பசாமிக்கு மாலை போட்டவர் அடிப்பட்டுக்கிடந்தால் ஒருவிதமாகவும் ஹஜ்பயணி அடிப்பட்டுக்கிடந்தால் ஒருவிதமாகவும் அந்த எம்பி பார்ப்பாரா?
.
அப்துல்லா,
//நான் தனிநபர்.என் நிலைப்பாட்டை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. உரிமையும் கிடையாது. அகமது என்பவர் லீக் என்ற ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்.//
நீங்கள் ஏற்றலாம் நான் இந்த் சுட்டியில் குறிப்பிட்ட
http://www.hindu.com/2006/09/14/stories/2006091416380300.htm
அகமது அலியும் ஏற்றலாம். ஆனால் நீங்களும் இந்த அகமது அலியும் செய்யும் செயல்கள் அவ்வளவாக தெரியாது. ஆனால் ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் இஸ்லாத்தின்படி நடக்கவேண்டும். சரியா?
"பஞ்சமுக லட்சுமி குத்துவிளக்கு ஏற்றுவதோ அல்லது பஞ்சமுக லட்சுமி நேரில் வந்தால் ஹலோ சொல்வதோ தவறல்ல அதை இறையாக நினைத்து பிரார்த்தனை செய்வதுதான் தவறு" என்று சொல்லி அதன்படி செய்து இவர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டாமா?
:-(((((
கல்வெட்டு,
இந்தப் பதிவுக்கும் உங்கள் கருத்தை எதிர்ப்பார்த்து இருந்தேன்
//மதத்தைவிட அது இஸ்லாமாக இருந்தாலும் மனிதம் பெரிது
//
பல இடங்களில் நான் போட்ட பின்னூட்டத்தை எனக்கே போட்டு இருக்கின்றீர்கள்.
ஆதாரம் :
http://vediceye.blogspot.com/2009/06/blog-post_10.html
அப்புறம்
//ரோட்டில் அய்யப்பசாமிக்கு மாலை போட்டவர் அடிப்பட்டுக்கிடந்தால் ஒருவிதமாகவும் ஹஜ்பயணி அடிப்பட்டுக்கிடந்தால் ஒருவிதமாகவும் அந்த எம்பி பார்ப்பாரா? //
பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள் என்பதுதான் குரான் சொல்வது. அது பக்கத்து வீட்டு கிருத்துவனா, ஹிந்துவா,யூதனா என்பது அல்ல. எந்த மதத்தவராக இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரர் பக்கத்து வீட்டுக்காரரே. ஆனால் கடவுளர் உருவம் என்று ஒருசாராரால் நம்பப்படும் ஒரு வழிபாட்டு முறையை ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் எவ்வாறு செய்ய முடியும் என்று எனக்குப் புரியவில்லை. எந்த ஹிந்து மத புத்தகங்களிலும் ஐந்து வேளை தொழுகாதீர்கள் என்று சொல்லவில்லை. அதனால் திரு.அத்வானி அவர்களால் இஸ்லாமியர்களின் அந்தச் செயலைச் செய்யமுடியுமா?? செய்வாரா?? அதே நிலைதானே அகமதிற்கும். நீங்கள் தொழுகலாம். நான் விளக்கேற்றலாம். நாம் தனிநபர். ஆனால் அத்வானியாலும்,அகமதாலும் தங்கள் இயக்கத்தின் கொள்கை தாண்டி எதுவும் செய்ய முடியாது என்று நான் சொல்வதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?
//பஞ்சமுக லட்சுமி குத்துவிளக்கு ஏற்றுவதோ அல்லது பஞ்சமுக லட்சுமி நேரில் வந்தால் ஹலோ சொல்வதோ தவறல்ல அதை இறையாக நினைத்து பிரார்த்தனை செய்வதுதான் தவறு //
இதற்கு என்னுடய பதில்
:)
இந்த ஸ்மைலிக்கு அர்த்தம்...
accepted.
அப்துல்லா,
ஸ்மைல் என்றால் ஏற்றுக் கொண்டதா?
ஆஹா! நான் சொல்லும் விசயங்களை நீங்கள் ஏற்கவேண்டும் என்று நினைக்கவே இல்லை.
மாறுபட்ட கருத்துகளுடன் இரயில் தண்டவாளம் போல பேசிக்கொண்டே இணையாக பயணிக்க முடியும்.
**
// எந்த ஹிந்து மத புத்தகங்களிலும் ஐந்து வேளை தொழுகாதீர்கள் என்று சொல்லவில்லை. அதனால் திரு.அத்வானி அவர்களால் இஸ்லாமியர்களின் அந்தச் செயலைச் செய்யமுடியுமா?? செய்வாரா??//
5 வேளை சாமி கும்பிடுவது என்பது இஸ்லாத்தில் இஸ்லாமியர்களுக்கு சொல்லப்பட்ட மத நெறி.
இதை யார் வேண்டுமானலும் அவர்கள் விரும்பும் இறையை நினைத்து செய்யலாம். கூடவோ குறைத்தோ செய்யும் சுதந்திரம் இஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கு உண்டு என்ரு நினைக்கிறேன்.
இஸ்லாமிலும் குறைந்தது 5 , அதற்குமேல் செய்தால் ஒன்றும் குற்றம் அல்ல. 5 தாண்டி தேர்விற்கு போகும்முன் ,முடித்து வந்தபின் தொழும் நண்பர்களைப் பார்த்துள்ளேன். மீனாட்சி கோவிலுக்கு வந்து சாமி கும்பிடும் நண்பர்களும் உண்டு.
**
//அதே நிலைதானே அகமதிற்கும். நீங்கள் தொழுகலாம். நான் விளக்கேற்றலாம். நாம் தனிநபர். ஆனால் அத்வானியாலும்,அகமதாலும் தங்கள் இயக்கத்தின் கொள்கை தாண்டி எதுவும் செய்ய முடியாது என்று நான் சொல்வதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?//
நிச்சயம் உணர்கிறேன் அப்துல்லா.
*
நாமே இப்படி இயல்பாக இருக்கும்போது, ஒரு இயக்கத்தின் தலைவர்கள் நம்மைவிட இயல்பாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. :-((((
இவர்கள் இப்படி முறுக்கிக்கொள்வதால்தான் இவர்கள் சுகமாய் இருந்துவிட்டு, மக்களைச் சாகடிக்கிறார்கள்.
அகமதுவும் அத்வானியும் தேவைப்பட்டால் ஆதரவு (கட்சி மேலிட முடிவு) கொடுத்து பரஸ்பரம் இலாபம் சம்பாதிக்கப் பார்ப்பார்கள். ஆனால் இது போன்ற விசயங்களில் முன்னுதாரணமாக இருக்க மாட்டார்கள். :-((((
கருத்துரையிடுக