பின்பற்றுபவர்கள்

20 மே, 2009

பாரதிராஜா சூடு : 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள்'

தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற (இடைத்?) தேர்தல் முடிவுக்கு பிறகு,
இயக்குனர் பாரதிராஜாம் ஜூனியர் விகடன் பேட்டியில் ஐயத்திற்கிடமின்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில்,

''ஈழத் தமிழர் பிரச்னையைக் காரணம் காட்டி, காங்கிரஸாருக்கு எதிராகப் பிரசாரத்துக்குப் போனீர்கள். ஆனாலும், காங்கிரஸ் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் ஜெயித்துவிட்டதே..?''

''தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். தமிழர்களிடம் வாக்கு வாங்கி அமைச்சரான ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோர் அதை வேடிக்கை பார்த்தார்கள். அவர் களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் எங்களுடைய தமிழீழ திரைப்பட ஆதரவு இயக்கத்தின் சார்பில் பிரசாரத்துக்குப் போனோம். அதை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டோம். இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோருக்கு எதிராக மக்கள் தீர்ப்புகள் வந்திருக்கிறது. ப.சிதம்பரம் கணக்கே வேறு. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பின்தங்கியிருந்தார். கடைசி நேரத்தில் எப்படி ஜெயித்தாரோ, அது தெரிய வில்லை..! 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள். அதன் பிறகு, ஆகவேண்டியதைப் பார்த்துக்கொள்ளலாம்...' என்று டெல்லியிலிருந்து உத்தரவு வந்ததாகச் சொல்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது அவருக்கும் தோல்விதான்!''




பசிக்கு பிச்சை இட்டது இப்படித்தானா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ஆளும் கட்சியின் கூட்டணியின் இணைந்த "கைகள்" தேர்தல் பதிவு அலுவலகம் அனைத்திலும் கனிசமான அளவுக்கு செயல்பட்டுள்ளதால், 40(39+1) தொகுதியிலும் நடந்த தேர்தல், இடைத்தேர்தல் போல் இருந்தது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது உண்மையான வெற்றி என்றும் பெரும் சாதனை என்றும் சொல்கிறார்கள்.

25 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

//அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது உண்மையான வெற்றி என்றும் பெரும் சாதனை என்றும் சொல்கிறார்கள்.//

யார் சொல்கிறார்கள்?

நீங்கள்தான் சொல்கிறீர்கள். அதாவது அதிமுகவினர்தான் சொல்கிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// லக்கிலுக் said...
//அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது உண்மையான வெற்றி என்றும் பெரும் சாதனை என்றும் சொல்கிறார்கள்.//

யார் சொல்கிறார்கள்?

நீங்கள்தான் சொல்கிறீர்கள். அதாவது அதிமுகவினர்தான் சொல்கிறீர்கள்.
//

:)

'செய்தி கசிந்தது', 'மக்கள் பேசிக் கொண்டார்கள்', 'வெளி நாட்டு தகவல்' என்று செய்தித்தாள்கள், குறிப்பாக தினமலர் வகையறா 'சோ'க்கு காட்டும் போது கேள்வி கேட்க மாடிங்களா ?

லக்கிலுக் சொன்னது…

//'செய்தி கசிந்தது', 'மக்கள் பேசிக் கொண்டார்கள்', 'வெளி நாட்டு தகவல்' என்று செய்தித்தாள்கள், குறிப்பாக தினமலர் வகையறா 'சோ'க்கு காட்டும் போது கேள்வி கேட்க மாடிங்களா ?//

அப்படி ‘சோ’க்கு காட்டுற வேலையை செயா டிவி கையில் எடுத்துக்கிச்சி. இப்போ உங்களை மாதிரி ஆட்களும் எடுத்துக்கிட்டீங்க. நடத்துங்க.. நடத்துங்க...

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...


அப்படி ‘சோ’க்கு காட்டுற வேலையை செயா டிவி கையில் எடுத்துக்கிச்சி. இப்போ உங்களை மாதிரி ஆட்களும் எடுத்துக்கிட்டீங்க. நடத்துங்க.. நடத்துங்க...//

அப்ப நடந்தது பாராளுமன்ற இடைத்தேர்தல் இல்லையா ?
:))))))))

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

விடுங்க கோவி, இந்தத் திமுக காரன்லாம் அப்படித்தான் :) பாருங்க அதிமுக எவ்வளவு நல்லவங்க... கஷ்டப்பட்டு, விதிமுறைகளுக்குட்பட்டு, நாணயமா 12 தொகுதில ஜெயிச்சிருக்காங்க :) :)

Sanjai Gandhi சொன்னது…

//பசிக்கு பிச்சை இட்டது இப்படித்தானா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//

இது சரியாத் தெரியலை. ஆனா, உங்க பதிவுக்கு மேட்டர் பிச்சை எப்டி எல்லாம் கிடைக்குதுன்னு தெரியுது. ஹாஹாஹா..

டில்லியில் இருந்து உத்தரவு வந்தால் போதும், வெற்றியாளர் அறிவிக்கப் படுவர் என்றால் என்ன ---க்கு எண்ணிக்கை நடந்ததாம்? அதிமுக கூட்டணில சிலர் ஜெயிச்சிருக்காங்களே அந்தத் தொகுதி அதிகாரி டில்லி உத்தரவை மீறிட்டாரா? இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இன்னும் இவனை பேட்டி எல்லாம் எடுக்கிரானுங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

இவன் காமெடி தாங்கலையே கோவியாரே.. எதை திண்ணாப் பித்தம் தெளியும்னு இருக்கிங்க போல...:))

Sanjai Gandhi சொன்னது…

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

விடுங்க கோவி, இந்தத் திமுக காரன்லாம் அப்படித்தான் :) பாருங்க அதிமுக எவ்வளவு நல்லவங்க... கஷ்டப்பட்டு, விதிமுறைகளுக்குட்பட்டு, நாணயமா 12 தொகுதில ஜெயிச்சிருக்காங்க :) :)//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. :))

Sanjai Gandhi சொன்னது…

திருச்சில வெறும் 1000 ஓட்டுல அதிமுக ஜெயிச்சதே அது யாரோட உத்தரவு சாமி? :))

வால்பையன் சொன்னது…

அதிகாரமையத்தின் எல்லைமீறல்கள் தெரிந்தது தானே!

இதுவே அதிமுக ஆட்சியாக இருந்தாலும் இப்படி தானே நடந்திருக்கும்!

மக்கள் ஓட்டுக்கு இருக்கும் மரியாதை அவ்வளவு தான்!

கோவி.கண்ணன் சொன்னது…

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
திருச்சில வெறும் 1000 ஓட்டுல அதிமுக ஜெயிச்சதே அது யாரோட உத்தரவு சாமி? :))
//

கடைசிவரை பின் தங்கியவர் திடிரென்று வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கப்பட்டது 'சிதம்பர' ரகசியம்.

வாழ்க ஜெனநாயகம்.

வால் சரியாகச் சொல்லி இருக்கிறார் பாருங்கள். ஜெ ஆட்சியில் இருந்தாலும், அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்கும். நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஒப்புக் கொள்ளுங்கள் பாஸ்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இவன் காமெடி தாங்கலையே கோவியாரே.. எதை திண்ணாப் பித்தம் தெளியும்னு இருக்கிங்க போல...:))

4:23 PM, May 20, 2009
//

அவரு காமடி என்றால் தேர்தல் முடிவு வந்ததும் அவரது அலுவலகத்தை சிதம்பரம் கார்திக் அடித்து நொறுக்கியது ஏன் ? (அப்படித்தான் அவர் சொல்லி இருக்கார், ஜூவியில் மேட்டர் இருக்கு)

காங்கிரஸ் (கோஷ்டித்) தலைவர்கள் தனித்தனியாக தோற்றதற்கு பாரதி ராஜ பிரச்சாரம் தான் காரணம் என்பதால் தான் அவரது அலுவலகம் டார்கெட் செய்யப்பட்டது. உண்மையை காங்கிரஸ் தலைகளே ஒப்புக் கொண்டு அதைச் செய்த பிறகு போது உங்களுக்கு ஏன் தயக்கம் ? (ஓ ஆதாரம் இல்லாமல் பேசுகிறேன் என்கிறீர்களா ?) அவ்வ்வ்வ்வ்வ் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
அதிகாரமையத்தின் எல்லைமீறல்கள் தெரிந்தது தானே!

இதுவே அதிமுக ஆட்சியாக இருந்தாலும் இப்படி தானே நடந்திருக்கும்!

மக்கள் ஓட்டுக்கு இருக்கும் மரியாதை அவ்வளவு தான்!
//

உண்மை,
ஜெ ஆட்சியிலும் இடைத்தேர்தல்கள் இப்படித்தான் நடந்தேறின.

லக்கிலுக் சொன்னது…

//உண்மை,
ஜெ ஆட்சியிலும் இடைத்தேர்தல்கள் இப்படித்தான் நடந்தேறின.
//

கோவி அண்ணனும் நடுநிலையாளர்தான். சொன்னா நம்புங்கப்பூ! :-)

Sanjai Gandhi சொன்னது…

நடுநிலை அரசியல் விமர்சகர் அண்ணன் கோவியார் வாழ்க!

கோவி.கண்ணன் சொன்னது…

// லக்கிலுக் said...
//உண்மை,
ஜெ ஆட்சியிலும் இடைத்தேர்தல்கள் இப்படித்தான் நடந்தேறின.
//

கோவி அண்ணனும் நடுநிலையாளர்தான். சொன்னா நம்புங்கப்பூ! :-)
//

லக்கி,
நிலைப்பாடு உடையவர்கள் அதைத் தாற்காத்து மட்டுமே பேசவேண்டுமென்றால் தொண்டரடி ஆழ்வார்களால்தான் அவ்வாறு முடியும். நான் எந்த கட்சிக்கும் 'தொண்டன்' இல்லை

:)

நடுநிலைவியாதி பட்டம் 'மனநோய்' மருத்துவர் கொடுப்பது, நீங்க அப்படி இல்லை என்றே நினைக்கிறேன்.

லக்கிலுக் சொன்னது…

//நிலைப்பாடு உடையவர்கள் அதைத் தாற்காத்து மட்டுமே பேசவேண்டுமென்றால் தொண்டரடி ஆழ்வார்களால்தான் அவ்வாறு முடியும். நான் எந்த கட்சிக்கும் 'தொண்டன்' இல்லை//

தொண்டன் இல்லை. ஆனா அதிமுக தொண்டன் மாதிரி பேசுவீர்கள். உங்களை நான் புரிந்துகொள்கிறேன் அண்ணாச்சி. இந்த சஞ்சய் தான் புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலை :-)

Sanjai Gandhi சொன்னது…

////நிலைப்பாடு உடையவர்கள் அதைத் தாற்காத்து மட்டுமே பேசவேண்டுமென்றால் தொண்டரடி ஆழ்வார்களால்தான் அவ்வாறு முடியும். நான் எந்த கட்சிக்கும் 'தொண்டன்' இல்லை//

தொண்டன் இல்லை. ஆனா அதிமுக தொண்டன் மாதிரி பேசுவீர்கள். உங்களை நான் புரிந்துகொள்கிறேன் அண்ணாச்சி. இந்த சஞ்சய் தான் புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலை :-)//

லக்கி, சமீபகால அரசியல் ட்ரெண்டின் படி திமுக மற்றும் காங்கிரசை ”மட்டும்” விமர்சிக்கும் யாவரும் எந்தக் கட்சிக்கும் “ தொண்டர்கள்” கிடையாது. அவர்கள் எல்லாம் நடுநிலையாளர்கள். குறிப்பாக அதிமுகவிற்கு “ மட்டும்” வாக்களிக்க சொல்லி வெளிப்படையாக கேட்கும் யாவருமே எந்தக் கட்சிக்கும் தொண்டர்கள் இல்லை. இந்த சமன்பாட்டின் படி கோவியார் எந்தக் கட்சிக்கும் “தொண்டர்” இல்லை. இதை நான் நன்றாகவே புரிந்துக் கொண்டிருகிறேன். அதனால் தான் பாரதிராஜாவை மட்டுமே விமர்சித்தேன். கோவியாரின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்கவில்லை..:))

சுந்தர் சொன்னது…

/காங்கிரஸ் (கோஷ்டித்) தலைவர்கள் தனித்தனியாக தோற்றதற்கு பாரதி ராஜ பிரச்சாரம் தான் காரணம் // பாரதிராசா அவ்வளவு விழிப்புணர்ச்சி ஏற்படுதிட்டாரா? ??

Samuel | சாமுவேல் சொன்னது…

அப்படியே பாரதிராஜா விருதுநகர் சென்று வை கோ வுக்கு ஆதரவாக பிரசாரம் பண்ணியிருக்கலாம் ....பாராளுமன்றத்தில் ஒரு குரல் இருந்திருக்கும் ...###

அப்படியே சகோதரர்கள் யாராவது வை.கோ எப்படி தோற்றார் என்று சொல்ல முடியுமா ???????????

ILA (a) இளா சொன்னது…

உங்க கணக்குக்கே வரலாம்.

//அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது //
இதுல கொங்கு முன்னேற்ற பேரவை பிரிச்ச ஓட்டை திமுக பக்கம் சேர்த்தா 7 தொகுதியில அதிமுக செயிச்சிருக்கும். 7 தொகுதியில ஜெயிச்சதே சாதனைதானே.

ILA (a) இளா சொன்னது…

//கோவி அண்ணனும் நடுநிலையாளர்தான். சொன்னா நம்புங்கப்பூ! :-)//
நம்பிட்டோம். நம்பிட்டோம்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கோவி,

இந்த தேர்தல் ஒரு மிராக்கில் {mirracle}.

குப்பன்.யாஹூ சொன்னது…

கோவியாரே, ஒரு ரகசியம் சொல்றேன். நம்ம லக்கியோட உள் குத்து வேலை மற்றும் அகில இந்திய வலைபதிவர் கழகமும் சேர்ந்து தான் தென் சென்னைல திமுக வேட்பாளரை தோல்வி அடைய செய்து விட்டார்கள்.

குப்பன்_யாஹூ

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA 3:22 AM, May 21, 2009
உங்க கணக்குக்கே வரலாம்.

//அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது //
இதுல கொங்கு முன்னேற்ற பேரவை பிரிச்ச ஓட்டை திமுக பக்கம் சேர்த்தா 7 தொகுதியில அதிமுக செயிச்சிருக்கும். 7 தொகுதியில ஜெயிச்சதே சாதனைதானே.
//

நல்ல கணக்கு, கொங்கு முன்னேற்றப் பேரவையில் வாக்களித்தவர்கள் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியவர் போல் சொல்கிறீர்கள். இன்னும் பலர் தேமுதிக தனித்து நிற்காவிட்டால் அதிமுக கூட்டணி கொழிச்சிருக்கும் என்கிறார்கள்.

நல்ல கூத்து தான். இந்த தேர்தலில் எந்த அலையும் பெரிதாக எழவில்லை அல்லது எழுந்த அலை பணத்தைப் பார்த்து பம்மிவிட்டது எனலாம்.
:)

Suresh Kumar சொன்னது…

திருமங்கலம் மட்டுமில்லை தமிழகத்தையும் விளைக்கும் வங்க முடியும் என கருணாநிதி குடும கொள்ளையடித்த பணம் சொல்லி விட்டது .

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்