போர் தொடங்கிய போது பிராபகரன் போர் களத்தில் இருந்தார் என்பதே ஐயத்துக்குரியதாக இருக்கிறது. பிராபகரன் நீரிழிவு நோயாளி என்பதால் போர்களத்தில் இருந்து போரை வழிநடத்திச் சென்றிருப்பது ஐயமே. பிரபாகரன் போருக்கு முன்பே இயற்கை மரணம் அடைந்திருக்கலாம். இது உண்மையெனில்
இதை உளவுத்துறைகள் மூலம் அறிந்து கொண்ட சிங்கள அரசு போர் செய்து அந்த பகுதிகளை கைப்பெற்ற திட்டம் தீட்டி இருக்கலாம்
ஈழக்கனவு நிறைவேறத சூழலில் பிரபாகரன் மரணத்தை வெளியே கசியவிட வேண்டாம் என்று விடுதலை புலிகள் தரப்பு பொட்டு அம்மன் தலைமையில் செயல்பட்டு இருக்கலாம்
போரில் வெற்றி என்பதை வழியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை இராணுவத்திற்கு பிரபாகரன் 'உடல்' தேவைப்பட்டு இருக்கிறது, அதைக் காட்டியும் இருக்கிறார்கள். ஏற்கனவே பிராபகரன் மரணம் அடைந்திருந்தால் விடுதலைப் புலிகளின் அமைப்பு அதை வெளிப்படுத்த திணறும் என்பதைக் காரணமாக வைத்து பிரபாகரனின் 'உடலை'க் காட்டினார்கள் என்று ஊகிக்க முடிகிறது.
புலிகள் பிரபாகரனின் இறப்பை காலம் சென்று உறுதிப்படுத்துவது ஏன் ?
பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு தற்காலிக மறுக்கும் படி விடுதலைப் புலிகளின் வெளியுறவு அமைப்புகளிடம் கேட்டு கொள்ள ஆனது ஆயிற்று என்பதால் விடுதலைப் புலிகள் தரப்பு அந்த வேண்டுகோளை ஏற்றிருக்கக் கூடும்.
பிரபாகரன் போர்களத்தில் போரிடும் போது இறந்தார் என்று சொல்வது அவரை பெருமைப் படுத்தும் என்பதாலும் காலம் தாழ்த்திச் சொல்கிறார்கள் போலும்.
எது எப்படியோ போர் தொடங்கும் முன்பே பிராபகரன் மரணமடைந்திருக்கக் கூடும், ஏனெனில் போர் தொடங்கிய பிறகு பிரபாகரன் போர் களத்தில் இருந்தது போலவோ, வேறு நடவெடிக்கைக் குறித்தோ இதுவரை எந்தப்படமும் விடுதலைப் புலிகள் தரப்பில் வெளி இடப்படவில்லை.
இன்னும் சில விடுதலை புலிக்களின் குழுக்கள் பிரபாகரன் உத்தரவிற்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தப்பிவிட்டதாக சொல்லப்பட்ட இந்த ஒருவார காலம் உத்தரவிடவோ, இருப்பை வெளிப்படுத்தவோ போதாதா ?
நடப்புகளை எல்லாம் பார்க்கும் போது எனது ஊகம் பிரபாகரன் போருக்கு முன்பே மரணமடைந்திருக்கக் கூடும் என்பதே. இது தெரியாத இந்திய அரசை, இலங்கை அரசு பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் அழிக்கப் போவதாகச் சொல்லி இந்திய அரசின் உதவிகளைப் பெற்று அப்பாவி தமிழர்களை அழித்திருக்கிறார்கள்.
மற்றபடி பிரபாகரன் மீண்டும் வருவார் என்று எதிர்பார்ப்பது அவர் மீது வைத்திருக்கும், மதிப்பையும் நம்பிக்கையையும் பொருத்ததே. அப்படி நம்பிக்கை உடையவர்களில் நானும் ஒருவன்.
பின்பற்றுபவர்கள்
25 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
55 கருத்துகள்:
govi,
During war time have u seen the photo of praba taken with colombo sucide attack pilots?
I believe ur assumption of earliest dead of praba is less chance
அண்ணே...வேண்டாம்..வலிக்குது அழுதுடுவேன் !!
எக்கசக்க யூகங்கள் இருக்கின்றன..
எதையும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள் ஏதோ கொஞ்சம் தெரிந்தவர்களும்..
காலம் பதில் சொல்லப்போவதில்லை..
சுபாஸின் காலத்திலேயே அது கண்ணை மூடிவிட்டது..
//பிராபகரன் நீரிழிவு நோயாளி என்பதால் போர்களத்தில் இருந்து போரை வழிநடத்திச் சென்றிருப்பது ஐயமே. பிரபாகரன் போருக்கு முன்பே இயற்கை மரணம் அடைந்திருக்கலாம்.//
ஆமாங்க. இதுவரையான காலமும் நீரிழிவு நோயோடு இருந்து போரிட்டவர். இப்ப தான் இயற்கை மரணம் அடைந்திருப்பார்.
கடைசியாக விமானப்ப்டையினருடன் எடுத்த படமும் கிரபிக்ஸ் தான்.
படித்த உங்கள் போன்றவராலேயே ஈழ மக்களின் மனதை புரிந்து கொள்ளமுடியவில்லை. பிறகு...
முடிந்த அளவுக்கு குத்துங்கள். இன்னும் தாங்க எங்களிடம் உயிர் இருக்கிறது மிச்சமாக.
அத்தோடு சாலமன் பாப்பையாவை கூப்பிடுங்க.
இயற்கை மரணமா? இல்லையா என ஒரு பட்டிமன்றம் வைப்பம்.
உள்ளேன் ஐயா
ஏன் எங்களை இன்னும் இன்னும் வருத்துகிறீர்கள்..
அவர் எப்படி இறந்தால் உங்களுக்கென்ன?
அந்தந்த நேரத்துக்கு எதை எழுதினால் ஹிட்ஸ் வரும் என்று தான் எழுதுகிறீர்கள் நீங்கள்.. அதற்காக எங்கள் தலைவனை அவரது இறப்பை வைச்சு அலசாதீங்கள்..
எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுதாமல் பொத்திக் கொண்டு இருங்கள்...
நீங்கள் எழுதுவதற்குத் தான் உங்கள் கோமாளி அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களும் இருக்கிறார்களே..
அவர்களைப் பற்றி எழுதுங்கள்..
எங்களை எங்கள் தலைவனை வைத்துப் பிழைப்பு நடத்தாதீங்க...
உங்களுக்கெல்லாம் எங்கள் தலைவன் எப்படியோ எங்களுக்கு அவர் தலைவர் மட்டுமல்ல...
எங்கள் தலைவன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் அனாதைகளாப் போன நிலையில் இருக்கும் எங்களை வைத்து எங்கள் தலைவனை வைத்து கேவலமான பிழைப்பு நடத்திறிங்களே.. வெட்கமா இல்லை...
வேறு நாட்டுத் தலைவர்களைப் பற்றி தமிழில் எழுதினால் அவன் வந்து படிக்கப் போறதில்லை..
உங்கள் கருமாந்திரங்களையெல்லாம் நாங்கள் படித்துத் தொலைக்கிறோமே...
எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டீர்களா?
விஷ்ணு,
பிரபாகரன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் நான் எதையும் எழுதவில்லை, விடுதலைப் புலிகளின் தலைமைதான் பிரபாகரன் இறந்தார் என்று அறிக்கை கொடுத்து ஒருவார துக்கம் கடைபிடிக்க வேண்டும் என்று வழியுறுத்துக்கிறார்கள்,
தமிழுணர்வாளர்கள் மட்டும் தான் அதையெல்லாம் நம்பவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா ?
// பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு //
வைகோ, சுற்றி உட்கார்ந்து இருக்கும் சிப்பிப்பாறை மற்றும் கோஷ்டியிடம் - இந்த தேர்தல்ல ஊரே சேந்து நம்மோட நடு முதுக பிளந்து ரத்தம் கொட்ட கொட்ட அடிச்சாலும் ஊருக்குள்ள இப்பிடி நாலு பேரு இருந்துகிட்டு இன்னமும் நம்மள நம்புறாய்ங்களே... இவிங்க ரொம்ப நல்லவங்க போலருக்குடா ஊஊஊ...
//VJ 2:34 PM, May 25, 2009
govi,
During war time have u seen the photo of praba taken with colombo sucide attack pilots?
I believe ur assumption of earliest dead of praba is less chance
//
அது தீவிரமாக சண்டை நடந்த நேரமும் அல்ல.
//ஆமாங்க. இதுவரையான காலமும் நீரிழிவு நோயோடு இருந்து போரிட்டவர். இப்ப தான் இயற்கை மரணம் அடைந்திருப்பார்.
கடைசியாக விமானப்ப்டையினருடன் எடுத்த படமும் கிரபிக்ஸ் தான்.
படித்த உங்கள் போன்றவராலேயே ஈழ மக்களின் மனதை புரிந்து கொள்ளமுடியவில்லை. பிறகு...
முடிந்த அளவுக்கு குத்துங்கள். இன்னும் தாங்க எங்களிடம் உயிர் இருக்கிறது மிச்சமாக.
அத்தோடு சாலமன் பாப்பையாவை கூப்பிடுங்க.
இயற்கை மரணமா? இல்லையா என ஒரு பட்டிமன்றம் வைப்பம்.//
வெளி உறவுத்துறை விடுதலைப் புலிகள் சார்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்ற பெயரில் மரணத்தை உறுதிப்படுத்து துக்கம் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள். எல்லோரும் பிரபாகரன் இறக்கவில்லை என்று நம்பிக் கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் அந்த நம்பிக்கையை காக்க வேண்டிய அமைப்பே இப்படி ஒரு செய்தியை வெளி இடும் பொழுது பல சந்தேகங்கள் ஏற்படுகிறது.
பிரபாகரன் மரணம் நிகழ்ந்திருந்தால் அது எதிரிகளால் ஏற்பட்டிருக்கக் கூடாது என்பதே எனது எண்ணம், அதைத்தான் எழுதி இருக்கிறேன்.
//Amal said...
கோவி,
இந்த மாதிரி லூசுத்தனமான அலசல்களை நிறுத்துங்கள். உங்களுக்கு மட்டுமல்லாமல் (லக்கி, அதிஷா அனைவருக்கும்) இதே மாதிரி (எல்லாம் தெரிஞ்சமாதிரி) எழுதும் போக்கை கைவிடுங்கள். அதுவே அனைவரையும் (தலைவரையும் சேர்த்து) காப்பாற்றிய மாதிரிதான்!!!
//
தகவலை புலி அமைப்பினர் தானே உறுதிப்படுத்தி இருக்கின்றனர், அதை மறுப்பது யார் ? நெடுமாறன், திருமா, வைகோ உட்பட ஈழ ஆதரவாளர்களா ? வெளிநாடுகளில் இருக்கும் புலி அமைப்பின் பொருப்பாளர்கள் முதலில் இல்லை என்றும் பிறகு ஆம் என்று மாற்றி மாற்றிப் பேசவேண்டும். ஒருவேளை இந்த செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள் என்றாலும் கூட ஊடகங்களுக்கு புலிகள் தரும் செய்திகள் பொய்யானவை என்பதற்கு முன் உதாரணமாக அமைந்துவிடாதா ?
//முகமூடி said...
// பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு //
வைகோ, சுற்றி உட்கார்ந்து இருக்கும் சிப்பிப்பாறை மற்றும் கோஷ்டியிடம் - இந்த தேர்தல்ல ஊரே சேந்து நம்மோட நடு முதுக பிளந்து ரத்தம் கொட்ட கொட்ட அடிச்சாலும் ஊருக்குள்ள இப்பிடி நாலு பேரு இருந்துகிட்டு இன்னமும் நம்மள நம்புறாய்ங்களே... இவிங்க ரொம்ப நல்லவங்க போலருக்குடா ஊஊஊ...
//
அப்படிப் பார்க்காவிட்டாலும் கூட மணிசங்கர் ஐயரின் வேட்டியை உருவி இருக்கிறார்களே.
சரி.. அவர் இறந்து தான் விட்டார்.. அது உண்மை தான்..
அதுக்காக நீங்க கேவலப் பிழைப்பு நடத்தாதீங்க..
எதை வைச்சு எண்டாலும் அப்பிடி இருக்கலாமா இப்பிடி இருக்கலாமா என்று எழுதுங்கள்.. எங்கள் தலைவனை வைத்து எழுதாதீர்கள்..
இதை type பண்ணும் போதே அடுத்தவன் என்ன எழுத வேண்டும்.. வேண்டாம்.. என்று சொல்ல நான் யார் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது..
மன்னிச்சுகோங்க..
உங்கள் ஊகங்களையும் அரைகுறை அறிதல்களையும் வைச்சு நல்லா எங்களை காயப்படுத்துங்கள்..
நன்றி...
//Vishnu said...
சரி.. அவர் இறந்து தான் விட்டார்.. அது உண்மை தான்..
அதுக்காக நீங்க கேவலப் பிழைப்பு நடத்தாதீங்க..
//
இங்கே எழுத்துக்கு யாரும் சன்மானம் கொடுக்கவில்லை, தன்மானமும் நேரமும் தான் போகுது.
//எங்கள் தலைவனை வைத்து எழுதாதீர்கள்..
//
இது போல் தான் தமிழகத்தில் சுதந்திர போராட்ட பெரும் தலைவர்களையெல்லாம், அவர்களுக்கு பிறகும் இவர் எங்களுடைய சாதியை சேர்ந்தவர் என்று கூறி அவர்களுக்கு சொந்தமானவர்களாகும், பொதுமக்களிடம் இருந்தும் விலக்கி வைத்தார்கள்.
வீரகேசரி, ஈழமுரசு ஏன் லங்கசிறி வெப்தளத்தில் பிரபாகரன் பற்றி எழுதாத ஒன்றையா நான் எழுதிவிட்டேன் ?
இந்தப் போர் நடக்கும் முன்பே ஈழம் தொடர்பில் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஈழம், தமிழ் ஈழம் என்ற சொற்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது
//உங்கள் ஊகங்களையும் அரைகுறை அறிதல்களையும் வைச்சு நல்லா எங்களை காயப்படுத்துங்கள்..
நன்றி...
//
ஒருவேளை மரணம் ஏற்பட்டிருந்தாலும் கூட உண்மையிலேயே அஞ்சலி செலுத்த நினைத்தவர்களையும், நினைவைப் போற்றுபவர்களின் செயலை தடுக்கும் விதமாக மரணம் பற்றி முன்னுக்கு பின் தகவல்களைப் பரப்பி வரும் புலித்தலைமையின் மீது என் போன்றவர்களுக்கு நம்பிக்கை இழப்பு ஏற்படத்தான் செய்கிறது.
எழுத்துக்கு சன்மானம் கொடுக்கல தான்... ஹிட்ஸ் வேணுமே உங்களுக்கு,.. இந்தப் பதிவை பார்த்து மட்டும் நான் comment போடல.. நீங்கள் போடுற பதிவுகளை பார்த்துக் கொண்டு தான் வாறன்...
வலையுலகத்தில் எந்த நேரம் எதை எழுதினால் எங்க பதிவுக்கு வருவார்கள் என்று நல்லாக் காலம் கணிக்கிறிங்க.. சொன்னாலும் சொல்லாட்டியும் உங்களுக்கு அந்த cheap publicity தேவைப்படுது..
கருணாநிதியை எதிர்த்ததாகட்டும்.. முந்தைய ஈழம் பற்றிய பதிவுகளாகட்டும்.. பெரும்பாலானவை இப்படித் தான்.. அந்த நேர trend எது என்று சட்டென பிடித்தக் கொள்கிறீர்கள்...
அதில் தப்பேதும் இல்லை.. அப்போதைய பிரச்சினைகளை விடயங்களை எழுதுவதில்.. கதைப்பதில்.. முழுசா தெரிஞ்சு கொண்டு எழுதுங்கள்..
அரைகுறையா ஊகங்களை வைச்சு எழுதாதீங்க..
இல்லையா.. பொத்திட்டு ஓரமா உக்காருங்க..
ஆமா.. தலைவன் எங்களவர் தான்.. எங்களுக்கு மட்டுமுரியவர் தான்.. என் தலைவனின் இன்றைய நிலைக்கு காரணமானவர்களை உங்கள் தலைவர்களாகக் கொள்ளும் நீங்கள் எங்கள் தலைவனைப் பற்றி பேச அருகதையில்லாதவர்கள்..
எங்கள் தலைவனும் சாதாரண மனிதகுலத்தில் பிறந்தவர் தான்.. ஆனால் எங்களுக்கு அவர் கடவுள்... மனிதனாக அவர் இறந்தாலும் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்...
நாங்கள் கடவுளைக் கண்டதில்லை... எங்கள் தலைவனையும் கண்டதில்லை... கடவுளை நம்புவோர் எவ்வளவோ பேர் இருக்கும் போது எங்கள் தலைவன் இறக்கவில்லை என்பது தான் எங்களுக்கு உரம்...
அவருக்குரிய மரியாதை மரியாதை செய்ய வேண்டியவர்கள் மனதில் எப்போதும் இருக்கும்..
சந்தர்ப்பவாதிகளான நீங்கள் எங்கள் தலைவனுக்கு மரியாதை செய்ய வேண்டாம்..
//வீரகேசரி, ஈழமுரசு ஏன் லங்கசிறி வெப்தளத்தில் பிரபாகரன் பற்றி எழுதாத ஒன்றையா நான் எழுதிவிட்டேன் ?
தகாத வார்த்தை பிரயோகம் செய்ய நான் விரும்பவில்லை.. தெரியவுமில்லை...
விதண்டாவாதம் புரியாமல் முடிந்தால் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்..
இல்லையா? நன்றி வணக்கம்.. உங்க முயலுக்கு ஒரே ஒரு கால் தான்.. போதுமா?
நானும் அஞ்சலி தெரிவிச்சேனாக்கும் ஒப்பாரி வைத்தேனாக்கும் என்ற பட்டியலில் இடம் பெற மட்டுமே இந்த பதிவு உதவியாக இருக்கும். தயவு செய்து உங்கள் சாவுக்கூத்துகளை நிறுத்திக் கொள்ளுங்கள்.
கோவி.கண்ணன்,
உங்கள் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெருக்கும் ஆசை எனக்கில்லை.
இப்போது பதிவர்கள் நடத்துகிற பிரபாகரன் பற்றிய ஆராய்ச்சிகள் சிறீலங்காவுக்கு உதவுவதை தவிர, ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையையும் தரப் போவதில்லை.
ஈழத்தமிழர்கள் மீது இந்தியாவும், இலங்கையும், உலக நாடுகளும் நடத்திய படுகொலையையும், வன்னியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளையும் நீதியின் முன் நிறுத்தி விட்டு அதற்கு பிறகு பிரபாகரனையோ, யாரையோ தேடுங்கள். இப்போதைய கவனம் எங்கே போக வேண்டுமென்று அண்ணன் சுந்தரமூர்த்தி பதிவொன்று எழுதியிருந்தார். முடிந்தால் வாசியுங்கள். அதற்காக எதாவது செய்வோம்.
மற்றது உங்கள் விருப்பம்.
//எழுத்துக்கு சன்மானம் கொடுக்கல தான்... ஹிட்ஸ் வேணுமே உங்களுக்கு,..//
ஹிட்சை வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது ஐயா.
// இந்தப் பதிவை பார்த்து மட்டும் நான் comment போடல.. நீங்கள் போடுற பதிவுகளை பார்த்துக் கொண்டு தான் வாறன்...
//
நல்லது.
//வலையுலகத்தில் எந்த நேரம் எதை எழுதினால் எங்க பதிவுக்கு வருவார்கள் என்று நல்லாக் காலம் கணிக்கிறிங்க.. சொன்னாலும் சொல்லாட்டியும் உங்களுக்கு அந்த cheap publicity தேவைப்படுது..
//
விரும்பாத கருத்துக்கள் எழுதும் போது எல்லோரும் மறுக்கருத்தென்ற பெயரில் இப்படித்தான் cheap publicity சொல்கிறார்கள்.
ஒத்த கருத்தென்றால் 10 ஜால்ராக்களுடன் வருவார்கள். நீங்கள் என்னுடைய மற்றப் பதிவுகளில் போட்டப் பின்னூட்டங்கள் எத்தகையது என இனிதான் நான் பார்க்க வேண்டும்.
//கருணாநிதியை எதிர்த்ததாகட்டும்.. முந்தைய ஈழம் பற்றிய பதிவுகளாகட்டும்.. பெரும்பாலானவை இப்படித் தான்.. அந்த நேர trend எது என்று சட்டென பிடித்தக் கொள்கிறீர்கள்...
அதில் தப்பேதும் இல்லை.. அப்போதைய பிரச்சினைகளை விடயங்களை எழுதுவதில்.. கதைப்பதில்.. முழுசா தெரிஞ்சு கொண்டு எழுதுங்கள்..
அரைகுறையா ஊகங்களை வைச்சு எழுதாதீங்க..
இல்லையா.. பொத்திட்டு ஓரமா உக்காருங்க.. //
முழுசா தெரிஞ்சு கொண்டு கதைக்க வேண்டுமெனில் ஒருத்தரும் எழுத முடியாது, பதிவில் யாரு முழுசா தெரிஞ்சு கொண்டு கதைக்கிறார்கள் என்று அறியத்தரனும். நெடுமாறன் அவர்களும் முழுசா தெரிஞ்சு கொண்டுதான் கதைக்கிறார்களா ? பத்மநாபனுக்கு தெரியாதது நெடுமாறன் ஐயாவுக்குத் தெரியுமா ?
நான் என்ன இங்கே கேவலமாகச் சொல்லிவிட்டேன் என்று சொல்லவும். மனிதன் மரணம், இது மகானாக இருந்தாலும் வரத்தான் செய்யும். நான் இங்கே எதிர்களின் கையில் சிக்கினார் அதனால் பலியானார் என்று சொல்லப்படும் எந்த கருத்தையும் ஆதரித்தோ, ஊகித்தோ எழுதவில்லையே.
//ஆமா.. தலைவன் எங்களவர் தான்.. எங்களுக்கு மட்டுமுரியவர் தான்.. என் தலைவனின் இன்றைய நிலைக்கு காரணமானவர்களை உங்கள் தலைவர்களாகக் கொள்ளும் நீங்கள் எங்கள் தலைவனைப் பற்றி பேச அருகதையில்லாதவர்கள்.. //
உங்கத்தலைவர் உங்களுக்குத்தான் என்று சொல்லுவது உங்கள் கருத்து, ஆனால் அவரைக் காட்டிக் கொடுத்ததும் எட்டப்பனாக மாறியதிலும் உங்களவர்களுக்கே முழுப் பங்கும் இருக்கிறது, என்பதற்கு வெட்கப்படுகிறீர்களா ?
//எங்கள் தலைவனும் சாதாரண மனிதகுலத்தில் பிறந்தவர் தான்.. ஆனால் எங்களுக்கு அவர் கடவுள்... மனிதனாக அவர் இறந்தாலும் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்... //
நான் அதை இல்லை எண்டு சொல்லவில்லை.
//நாங்கள் கடவுளைக் கண்டதில்லை... எங்கள் தலைவனையும் கண்டதில்லை... கடவுளை நம்புவோர் எவ்வளவோ பேர் இருக்கும் போது எங்கள் தலைவன் இறக்கவில்லை என்பது தான் எங்களுக்கு உரம்... //
உரம் தான் அந்த உரத்தில் வெண்ணீர் ஊற்றியது யார் ? செல்வராசா பத்மனாபன், நீங்கள் நொந்து கொள்ள வேண்டுமென்றால், நானும் அந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு நொந்து போனேன்.
//அவருக்குரிய மரியாதை மரியாதை செய்ய வேண்டியவர்கள் மனதில் எப்போதும் இருக்கும்..
சந்தர்ப்பவாதிகளான நீங்கள் எங்கள் தலைவனுக்கு மரியாதை செய்ய வேண்டாம்...//
சந்தர்பவாதிகள் எண்டால் அரசியல் வாதிகளைச் சொல்லுங்கள் அப்படிப் பட்ட சந்தர்ப்பவாதிகள் இலங்கை அமைச்சரவையிலும் உண்டு. என்னைப் போன்றவர்கள் சந்தர்ப்பவாதியாக மாறினாலும் மாறாவிட்டாலும் ஒற்றைக் காசுக்குக் கூட பயனில்லை.
//விதண்டாவாதம் புரியாமல் முடிந்தால் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்..
//
உணர்வுகளுக்கு மதிப்புக் குறைவாக இங்கே அப்படி எதுவும் சொன்னது போல் தெரியவில்லை.
அண்ணே!
நீங்கள் எப்போதும் மத்தளமாக இருந்தே பழகிவிட்டீர்கள்! :-)
//திரு/Thiru said...
கோவி.கண்ணன்,
உங்கள் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெருக்கும் ஆசை எனக்கில்லை.
இப்போது பதிவர்கள் நடத்துகிற பிரபாகரன் பற்றிய ஆராய்ச்சிகள் சிறீலங்காவுக்கு உதவுவதை தவிர, ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையையும் தரப் போவதில்லை.
ஈழத்தமிழர்கள் மீது இந்தியாவும், இலங்கையும், உலக நாடுகளும் நடத்திய படுகொலையையும், வன்னியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளையும் நீதியின் முன் நிறுத்தி விட்டு அதற்கு பிறகு பிரபாகரனையோ, யாரையோ தேடுங்கள். இப்போதைய கவனம் எங்கே போக வேண்டுமென்று அண்ணன் சுந்தரமூர்த்தி பதிவொன்று எழுதியிருந்தார். முடிந்தால் வாசியுங்கள். அதற்காக எதாவது செய்வோம்.
மற்றது உங்கள் விருப்பம்.
//
நேற்றே அதுபற்றிய இடுகையை எழுதி இருக்கிறேன்.
//திரு/Thiru said...
ஈழத்தமிழர்கள் மீது இந்தியாவும், இலங்கையும், உலக நாடுகளும் நடத்திய படுகொலையையும், வன்னியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளையும் நீதியின் முன் நிறுத்தி விட்டு அதற்கு பிறகு பிரபாகரனையோ, யாரையோ தேடுங்கள். இப்போதைய கவனம் எங்கே போக வேண்டுமென்று அண்ணன் சுந்தரமூர்த்தி பதிவொன்று எழுதியிருந்தார். முடிந்தால் வாசியுங்கள். அதற்காக எதாவது செய்வோம்.
மற்றது உங்கள் விருப்பம்.
//
சூடான இடுகைகளை மட்டும் படித்துவிட்டு கருத்துக் கூறுபவர்கள் மற்றதில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்கவில்லை என்றால் யாருடைய தவறு ? பதிவு எழுதியவரா ? படிப்பவரா ? ஆர்வக் கோளாறு யாருக்கு.
குற்றம் சாட்டும் முன், அறிவுரைக் கூறும் முன் நமது செயலையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டும். நீங்கள் குறிப்பிட்ட பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய இடுகையை நேற்று படத்துடன் போட்டேன் எத்தனை பேர் எட்டிப் பார்த்தார்கள் என்றே தெரியவில்லை.
:(
// லக்கிலுக் said...
அண்ணே!
நீங்கள் எப்போதும் மத்தளமாக இருந்தே பழகிவிட்டீர்கள்! :-)
//
ஞானிக்கு பூணூல் போட்ட உங்களுடன் ஞானி அப்படி இல்லை என்று வாதம் செய்து அடிப்பட்ட நினைவு வருது.
:)
//ஞானிக்கு பூணூல் போட்ட உங்களுடன் ஞானி அப்படி இல்லை என்று வாதம் செய்து அடிப்பட்ட நினைவு வருது.
//
இதென்ன புதுக்கதை :-)
//பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு//
வைகோ: இந்த ஊரு இன்னுமாடா நம்மள நம்புது?
கைத்தடி: அது அவனுங்க விதி!
வைகோ: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்கப்பா...
பிரபாகரனுக்கு நீரிழிவு என்று யார் சொன்னது?
இன்றைய தேதியில் பிரபாகரன் சாவு/வாழ்வு என்பது நன்கு விலைபோகுமொரு சரக்கு. நக்கீரன் உச்சக்கட்டமென்றால் வலைப்பதிவுகள் அடுத்தகட்டம்.
இதற்குள் வை.கோவினதும் பழ.நெடுமாறனதும் அவசரக் குடுக்கைத் தனம் அருவருக்கிறது. ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரத்தில் பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு சில சக்திகள் தன்னிச்சையாகச் செயற்படுவது (இதற்குள் இதே அறிவுரையை இவர்கள் மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள்) வருந்தத் தக்கது.
வை.கோவும் நெடுமாறனும் எப்போது தொடக்கம் விடுதலைப் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரிகளானார்கள் என்பதை யாராவது சொல்லுங்கள், அல்லது அவர்களாவது சொல்லட்டும்.
//இதற்குள் வை.கோவினதும் பழ.நெடுமாறனதும் அவசரக் குடுக்கைத் தனம் அருவருக்கிறது. ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரத்தில் பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு சில சக்திகள் தன்னிச்சையாகச் செயற்படுவது (இதற்குள் இதே அறிவுரையை இவர்கள் மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள்) வருந்தத் தக்கது.
வை.கோவும் நெடுமாறனும் எப்போது தொடக்கம் விடுதலைப் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரிகளானார்கள் என்பதை யாராவது சொல்லுங்கள், அல்லது அவர்களாவது சொல்லட்டும்.//
இதுதான் எனக்கும் புரியவில்லை. அவர்கள் ஈழ ஆதரவாளர்கள் என்பது தான் தெரியும். பத்மனாபன் அறிக்கையை மறுக்கும் அளவுக்கு புலித்தலைமையின் அறிவிப்பாளர்கள் போல் பேசி இருப்பது வியப்பாக இருக்கிறது.
ஆனால் பிரபாகரன் குறித்து இவர்களாவது விரைவில் நல்ல , நம்பகத் தகவல்கள் சொல்லமாட்டார்களா என்று தான் என் போன்றோர்கள் எதிர்பார்க்கிறோம்.
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களுடன் ஒன்று சேருங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இணைத்து அதிக வாக்கு பெறுங்கள்
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்...
//பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு//
சும்மா தமாசு பண்ணாதிங்க கோவி, தமிழ்நாட்டுல உப்பு விலை குறைந்தது உங்களுக்கு தெரியாதா... அது அரசாங்கத்துக்குத்தான் புரியாதா..
//பிரபாகரன் மீண்டும் வருவார் என்று எதிர்பார்ப்பது அவர் மீது வைத்திருக்கும், மதிப்பையும் நம்பிக்கையையும் பொருத்ததே//
நம்பிக்கைமட்டும் இல்ல, நூத்துக்கு தொநூருபேருக்கு மனசு ஒத்துக்காது... அவர் இறந்துட்டாருன்னு எத்துக்குரதுக்கு மூளைக்கே மனசு தடை விதிக்குது..
நம்பிக்கையுடன் இருப்போம்
நிகழ்வுகளைக் கண்டு மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்ததால் சற்று கடுமையான வார்த்தைகளை பின்னூட்டத்தில் பயன்படுத்திவிட்டேன். அதனால் அதை நீக்கிவிட்டேன். மன்னிக்கவும்.
//Amal said...
நிகழ்வுகளைக் கண்டு மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்ததால் சற்று கடுமையான வார்த்தைகளை பின்னூட்டத்தில் பயன்படுத்திவிட்டேன். அதனால் அதை நீக்கிவிட்டேன். மன்னிக்கவும்.
4:33 AM, May 28, 2009
//
நீங்களும், விஷ்ணு ஐயாவும் உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமிட்டது புரிந்தது. அதனால் தான் தக்க பதில் சொல்வதைவிட உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
நன்றி !
ற்போதுதான் திடீர் எனக் கண்டுபிடித்தது போல
சில ஜனநாயக இலக்கிய வாதிகளின் பேனா
ஈழப் போர்ராட்ட முறையே தவறு எனும்போதுதான்
புலிகளை இழந்தது , இதயத்தில் சுடுகின்றது
இதயத்தில் சுடுகின்றது
என்று பிரபாகரன் சக போரளிகளை தனது ஆயுதபலத்தால் அழித்தான் அன்றெ பிரபாகரன் செத்து விட்டான் இன்று செத்தது புலியிசம்
ஏல்லாருக்கும் சயனட் குடுத்து வாழ்த்தி படம் எடுத்து அனுப்பி வைத்த மேதகு தனது முறை வரும் பொது மேலைத்தேச நாடுகளின் காலில் விழுந்து காப்பாத்த சொல்லி கதறல், நடெசனை வெள்ளைகொடியுடன் வெள்ளோட்டம் பார்த்தல்,கடைசியாக தன்னுடன் இருந்த 5 சிங்கள இராணுவத்தையும் விடுவித்து மண்டியிட்டது,கடைசியாக சரனடைய எல்லா நாடுகள்,ஐ நா ,வெக்கம் இல்லாமல் இந்தியாவிடம்,மானம் இல்லாமல் கடைசியாக epdp ம் மும் கேட்டதை எப்படி ஏற்பது..
உண்மையில் பிரபாகரன் அவர்கள் மேல் உங்களுக்கு மதிப்பு இருந்தால் இந்த MOSHE போன்ற நாய்கள் சொல்லும் பொய்யை அனுமதித்திருக்கமாட்டீர்கள். சரணடைய விரும்பி கேட்டவர்களிடம் நீங்கள் விரும்பினால் போங்கள் எனது துப்பாக்கி ஓயாது என்று கூறி நின்ற தலைவரை இப்படி கேவலப்படுத்த மாட்டீர்கள்.
//போர் தொடங்கிய போது பிராபகரன் போர் களத்தில் இருந்தார் என்பதே ஐயத்துக்குரியதாக இருக்கிறது.பிராபகரன் நீரிழிவு நோயாளி என்பதால் போர்களத்தில் இருந்து போரை வழிநடத்திச் சென்றிருப்பது ஐயமே. பிரபாகரன் போருக்கு முன்பே இயற்கை மரணம் அடைந்திருக்கலாம். இது உண்மையெனில்//
அவருக்கு நீரிழிவு நோய் இருக்கு என்று யாருப்பா உனக்கு சொன்னது. அவரோட பெர்சனல் டாக்டரா நீ?
//பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு தற்காலிக மறுக்கும் படி விடுதலைப் புலிகளின் வெளியுறவு அமைப்புகளிடம் கேட்டு கொள்ள ஆனது ஆயிற்று என்பதால் விடுதலைப் புலிகள் தரப்பு அந்த வேண்டுகோளை ஏற்றிருக்கக் கூடும்.//
இப்படி எல்லாம் கூட கற்பனை செய்யும் அளவுக்கு நீ சரியான கூமுட்டை தான்
//பிரபாகரன் போர்களத்தில் போரிடும் போது இறந்தார் என்று சொல்வது அவரை பெருமைப் படுத்தும் என்பதாலும் காலம் தாழ்த்திச் சொல்கிறார்கள் போலும்.//
தூ.
//எது எப்படியோ போர் தொடங்கும் முன்பே பிராபகரன் மரணமடைந்திருக்கக் கூடும், ஏனெனில் போர் தொடங்கிய பிறகு பிரபாகரன் போர் களத்தில் இருந்தது போலவோ, வேறு நடவெடிக்கைக் குறித்தோ இதுவரை எந்தப்படமும் விடுதலைப் புலிகள் தரப்பில் வெளி இடப்படவில்லை.//
மூத்திரம் இருக்க நேரமில்லாமல் சண்டை பிடிக்கும் நேரத்தில் படம் எடுக்க அவங்களுக்கு டம் கிடைக்குமா கூமுட்ட.
//தப்பிவிட்டதாக சொல்லப்பட்ட இந்த ஒருவார காலம் உத்தரவிடவோ, இருப்பை வெளிப்படுத்தவோ போதாதா ?//
இருப்பை காட்டிக்கொள்வதற்குப் பதிலாக தானே சுருக்கு மாட்டிக்கொள்ளலாமே. நீ சரியான கூமுட்ட தான்
//நடப்புகளை எல்லாம் பார்க்கும் போது எனது ஊகம் பிரபாகரன் போருக்கு முன்பே மரணமடைந்திருக்கக் கூடும் என்பதே. இது தெரியாத இந்திய அரசை, இலங்கை அரசு பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் அழிக்கப் போவதாகச் சொல்லி இந்திய அரசின் உதவிகளைப் பெற்று அப்பாவி தமிழர்களை அழித்திருக்கிறார்கள்//
ஏய் கூமுட்ட. அப்படி இலங்கை அரசு ஏமாற்ற ஏமாறும் கூமுட்டகளா இந்திய அரசாங்கம். நீ ஒருத்தன் போதுமே உங்க நாடு எப்படி இருக்கும்னு சொல்ல.
சரியான கூமுட்ட. எங்க தலைவரைப்பத்தி பேசாத.
@ எம் ஓ எஸ் எச் ஈ, பிரபாகரன் பற்றி பேச எந்த பன்னிக்கும் அருகதை இல்லை. எந்த தலைவன் தான் தன் இரண்டு பிள்ளைகளையும் தன்னுடன் களத்தில் நிறுத்துவான்.
@ கோவி.கண்ணன், அவருக்கு நீரிழிவு நோய் இருக்கு என்று யாருப்பா உமக்கு சொன்னது. தெரியாமல் தான் கேட்கிறேன். நீங்க தான் அவருக்கு வைத்தியம் பாத்தீங்களா? இல்லை உங்க வீட்ல தான் யாராவது வைத்தியம் பார்த்தார்களா? அவர் 15ம் திகதி மோட்டர் பைக்கில் போனதை சிலர் பாத்திருக்கிறார்கள். அது தெரியுமா உங்களுக்கு. போய் வேலையப்பாருங்க. அவர எப்படி செத்தார்னு யாராவது உங்க கிட்ட கேட்டாங்களா. தூ. உமக்கும் டோண்டு ராகவனுக்கும் என்ன வித்தியாசம். அவரோட பார்வதி அம்மாவை தடுத்தற்காக காரணங்களைப் படிச்ச அதே வெறுப்புத்தான் இதைப் படிச்ச போதும் வருது. எல்லாத்தையும் சொல்லிட்டு அப்புறம் நீலிக்கண்ணீர் வேற. அவர் வரணும்னு இவரும் பாத்திட்டிருக்காராம். வந்தா அது அவரோட டூப்புன்னு சொல்லுவீங்க. விஷ்ணு சொன்ன மாதிரி, எங்களுக்கு உதவலேன்னா கூட பரவாயில்லை எங்களை நோகடிக்காதீங்க.
//பிரபாகரன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் நான் எதையும் எழுதவில்லை, விடுதலைப் புலிகளின் தலைமைதான் பிரபாகரன் இறந்தார் என்று அறிக்கை கொடுத்து ஒருவார துக்கம் கடைபிடிக்க வேண்டும் என்று வழியுறுத்துக்கிறார்கள்,//
யோவ், புலிகளின் தலைமை பிரபாகரன் தான். மத்தவனை எல்லாம் தலைமைன்னு சொல்லி எரிச்சல் படுத்தாதே.
//govi,
During war time have u seen the photo of praba taken with colombo sucide attack pilots?
I believe ur assumption of earliest dead of praba is less chance
//
அது தீவிரமாக சண்டை நடந்த நேரமும் அல்ல//
உங்களுக்கு எப்படி தெரியும். அந்த நேரம் தான் கடைசி கட்ட நடவடிக்கையாக அந்த இரு போராளிகளும் பிளேன் எடுத்திட்டு போனாங்க. அவங்க லெட்டர் படிச்சீரா இல்லையா? அப்பத் தான் விசுவமடு என்ற ஊரை விட்டு மக்கள் இடம் பெயர்ந்தார்கள். ஓரளவு கடைசிச் சண்டை அது என்று சொல்லலாம். அதை 3 மாதம் எப்படி தாக்கிப்பிடித்தார்கள் புலிகள் என்று இன்னும் ஆச்சரியமாகத் தான் இருக்கு.
விஷ்ணு, வாசுகி மாதிரி எல்லாம் என்னால் நாகரிகமாக எழுதத் தெரியல. அப்படி பேசாததுக்கு மன்னிப்பும் கேட்கப்போவதில்லை. ஒரு வகையில் சிறு குரூர சந்தோசம்.
//வெளிநாடுகளில் இருக்கும் புலி அமைப்பின் பொருப்பாளர்கள் முதலில் இல்லை என்றும் பிறகு ஆம் என்று மாற்றி மாற்றிப் பேசவேண்டும். ஒருவேளை இந்த செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள் என்றாலும் கூட ஊடகங்களுக்கு புலிகள் தரும் செய்திகள் பொய்யானவை என்பதற்கு முன் உதாரணமாக அமைந்துவிடாதா ?///
யோவ், பொய்யானவையா இருந்தா என்ன. இல்லாட்டி என்ன. அவரோட உயிரை காப்பாத்தறது முக்கியம்ன்னா எப்படி வேணும் என்றாலும் பொய் சொல்லலாம். பெரிய அரிச்சந்திரன் இவரு.
//உங்கத்தலைவர் உங்களுக்குத்தான் என்று சொல்லுவது உங்கள் கருத்து, ஆனால் அவரைக் காட்டிக் கொடுத்ததும் எட்டப்பனாக மாறியதிலும் உங்களவர்களுக்கே முழுப் பங்கும் இருக்கிறது, என்பதற்கு வெட்கப்படுகிறீர்களா ?//
ச்சீய். எவ்வளவு கொரூரமான பேச்சு இது. பத்பநாபன் நாய் தான் இப்போ யாருன்னு தெரிஞ்சுடுச்சே. அப்புறமாவது இவர்களிடம் மன்னிப்பு கேட்டீரா?
//ஒருவேளை மரணம் ஏற்பட்டிருந்தாலும் கூட உண்மையிலேயே அஞ்சலி செலுத்த நினைத்தவர்களையும், நினைவைப் போற்றுபவர்களின் செயலை தடுக்கும் விதமாக //
ஆமாம் உங்கள் அஞ்சலி கிடக்கலனேன்னா அவரு சொர்க்கத்துக்கு போகமாட்டார். ஐயே. ஆளப்பாரு. அவர் படத்துக்கு மாலை போடுவதில் தான் எவ்வளவு ஆசை உங்களுக்கு. சை.
வைக்கோ பத்தி எனக்குத் தெரியாது. ஆனால், நெடுமாறன் ஐயா தங்கம். எங்களை விட ஒரு படி மேலாக அவர் எங்கள் தலைவர் மேல்அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார். அவருக்கு உண்மை தெரிந்திருக்கும்.
இனிமேலும் புலித் தலைமை எவனையாவது சொல்லி எங்களை வெறுப்பேற்றாதீர்கள். அவருக்கு மதிப்பு கொடுப்பதால் இருந்தால் இந்த குப்பையை எழுதியதற்கு மன்னிப்பு கேளுங்கள்.
(இவ்வளவும் நான் சொன்னதை கேடு கொஞ்சமாவது உங்கள் மனம் மாறி இருக்கும் என்று நினைக்கிறேன். நர்சிம் பத்தின உங்கள் இடுகையை வைத்து நீங்கள் நேர்மையாக நடப்பீர்கள் என்று எண்ணுகிறேன்).
Hope you will post all my comments. I forgot to put Moshe's name. I instead typed it in Tamil
//Blogger அனாமிகா துவாரகன் said...
யோவ், பொய்யானவையா இருந்தா என்ன.
Hope you will post all my comments. I forgot to put Moshe's name. I instead typed it in Tamil
(இவ்வளவும் நான் சொன்னதை கேடு கொஞ்சமாவது உங்கள் மனம் மாறி இருக்கும் என்று நினைக்கிறேன். நர்சிம் பத்தின உங்கள் இடுகையை வைத்து நீங்கள் நேர்மையாக நடப்பீர்கள் என்று எண்ணுகிறேன்).
//
மாற்றுக்கருத்து என்று எழுதினாலே படித்துவிட்டு மரியாதை குறைக்கும் நீங்களெல்லாம் 'நேர்மைகளைப் பற்றி ஜட்ஜ் செய்வது புல்லறிக்கிறது. கருத்து சுதந்திரம் என்பதற்காக உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்தேன்.
முள்ளி வாய்க்கால் ஓர் ஆண்டு நிகழ்வை மனதில் சுமந்து கொண்டு அன்றை ஆண்டு நினைவின் போது உண்ணா நோன்பு இருந்த கொழும்பு தமிழர்கள் எத்தனைபேர், யாழ்பாணத் தமிழர்கள் எத்தனைப் பேர் என்று பட்டியல் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டு தமிழன் பற்றிய விமர்சனம் வையுங்கள் ஐயா.
பிரபாகரனுக்கு நீரிழிவு என்பது எனது ஆரய்ச்சி இல்லை. கூகுளில் தேடினாலே கிடைக்கும், அங்கெல்லாம் போய் மறுப்பு போட்டுவாருங்கள். நான் எழுதியது நக்கீரனில் இருந்த தகவல் அடிப்படையில் தான். இதில் என் சொந்தகற்பனை என்று எதுவும் இல்லை. அந்த அளவுக்கு நான் ஒர்த் இல்லிங்க
//அனாமிகா துவாரகன் has left a new comment on your post "பிரபாகரன் மீண்டும் வருவாரா ?":
//மாற்றுக்கருத்து என்று எழுதினாலே படித்துவிட்டு மரியாதை குறைக்கும் நீங்களெல்லாம் 'நேர்மைகளைப் பற்றி ஜட்ஜ் செய்வது புல்லறிக்கிறது. கருத்து சுதந்திரம் என்பதற்காக உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்தேன்.//
அவருக்கு நீரிழிவு, எப்படி செத்தார்னு எல்லாம் போட்டு உங்கள் மனவக்கிரத்தை தீர்த்துக்கிறதுக்கு பெயர் மாற்றுகருத்து இல்லை.
//முள்ளி வாய்க்கால் ஓர் ஆண்டு நிகழ்வை மனதில் சுமந்து கொண்டு அன்றை ஆண்டு நினைவின் போது உண்ணா நோன்பு இருந்த கொழும்பு தமிழர்கள் எத்தனைபேர், யாழ்பாணத் தமிழர்கள் எத்தனைப் பேர் என்று பட்டியல் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டு தமிழன் பற்றிய விமர்சனம் வையுங்கள் ஐயா.//
ஹல்லோ. உம்மைப் பத்தி சொன்னா எல்லா தமிழ் நாட்டு தமிழனைப் பத்தியும் சொல்றதுன்னு அர்த்தமா? கறுமமே. இப்படி போட்டு இந்திய தமிழர்களையும் இலங்கைத்தமிழர்களையும் பிரிக்கிற உம்மை எல்லாம் கல்லால் அடிச்சு கொல்லனும்.
வேதனையை காட்ட உண்ணா நோன்புன்னு இருக்கத்தேவையில்லை. இரண்டு நாளுக்கு முன்னரே சாப்பாடு இறங்கிறது கொறஞ்சிடுச்சு. அன்று மட்டும் நோன்புன்னுட்ட அடுத்த நாள் பார்ட்டி வைக்கிறவங்களுக்கு மத்தியில் நோன்பு இருக்காதவங்க எவ்வளவோ மேல். நோன்பு இருந்தாப் போல எல்லாம் சரியாயிடுமா? 18ம் திகதி மட்டும் தான் முள்ளிவாய்க்கால் பிரச்சினை பத்தி யோசிச்சு அழவேணுமா?
எவ்வளவு குரூர புத்தி உமக்கு. ச்சீய்.சரியான ஈனப்பிறவி. //
அனாமிகா துவாரகன்,
உங்களின் மற்ற பின்னூட்டங்களை அனானி என்றால் வெளி இட்டு இருக்கவே மாட்டேன்.
உங்க மனவக்கிரத்தையெல்லாம் பின்னூட்டமாக போட்டால் வெளி இட முடியாது, அதான் பதிவு வைத்திருக்கிறீர்களே, அதில எழுதி கண்டனம் தெரிவித்துக் கொள்ளலாம்.
இவிங்களெல்லாம் அழுகிறார்களாம்,
இங்கே முடிந்த அளவு தமிழனெல்லாம் எவனும் போகக் கூடாதுன்னு சொல்லி வைத்திருக்கிறோம், அதையும் மீறி மும்பை வந்த மும்பை நடிகர்களை பார்க்கச் சென்ற கூட்டத்திடம் போய் சொல்லுங்க சார்.
கருத்தினை திசை மாற்றுவதில் ரொம்பவே வல்லவராக இருக்கிறீர். யாரிடமாவது கேட்டுப்பாரும், பிரபாகரன் எப்படி செத்தார் என்று ஆராய்ச்சி செய்வதில் மனவக்கிரமா அதை எதிர்பதில் மனவக்கிரமா என்று. உம் மனவக்கிரத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மற்றவர்களை எதற்கு இழுக்கிறீர்கள். மினியின் பின்னூட்டத்திற்கு அவருக்கு பதில் சொல்லும். என்னக்கு சொல்லாதீர். நான் எங்கே தமிழ் நாட்டினரைப்பத்தி கதைத்தேன்.
நொந்து போய் இருக்கும் மக்களைப் பார்த்து உன் நாட்டினன் உண்ணா நோன்பு இருந்தானா? அவன் தானே காட்டிக் கொடுத்தான்? அவன் தானே ஐப்பாக்கு போனான் என்று கூறும் மனவக்கிரம் பிடித்த ஈனப்பிறப்புடன் பேசுவதே கேவலம். பத்து நாய் போனால் மத்த 90 நொந்து போனவர்களையும் பார்த்து சிரிப்பீரோ. வாயில வருது.
உமக்கும் எனக்குமான வித்தியாசத்துக்கு போய் கொஞ்சம் ரௌத்திரம் கொஞ்சம ஆதங்கம் # 1 ஐப் போய்ப் பாரும்.அனாமிகான்னு உங்க வீட்டில பையனுப் பேரு வைப்பாங்களா? நல்ல வீடு தான்.
//அனாமிகா துவாரகன் said...
உமக்கும் எனக்குமான வித்தியாசத்துக்கு போய் கொஞ்சம் ரௌத்திரம் கொஞ்சம ஆதங்கம் # 1 ஐப் போய்ப் பாரும்.அனாமிகான்னு உங்க வீட்டில பையனுப் பேரு வைப்பாங்களா? நல்ல வீடு தான்.//
புனைப்பெயர் பூனைப் பெயர் யாரெல்லாம் வச்சு எழுதுகிறார்கள் என்று ஆராய்ச்சி நடத்த முடியாது. இந்திரா பார்த்தசாரதி, சாரு நிவேதிதா இவை கூட பெண் பெயர் மாதிரி தான் தெரிகிறது மேடம்.
//
நொந்து போய் இருக்கும் மக்களைப் பார்த்து உன் நாட்டினன் உண்ணா நோன்பு இருந்தானா? அவன் தானே காட்டிக் கொடுத்தான்? அவன் தானே ஐப்பாக்கு போனான் என்று கூறும் மனவக்கிரம் பிடித்த ஈனப்பிறப்புடன் பேசுவதே கேவலம். பத்து நாய் போனால் மத்த 90 நொந்து போனவர்களையும் பார்த்து சிரிப்பீரோ. வாயில வருது.//
சாருக்கானுடன் நான், சல்மான்கானுடன் நான் என்று படங்கள் பதிவுகளில் வரும் போது நாங்களும் தான் நொந்து போகிறோம், எங்களுக்கு யார் ஆறுதல் சொல்வது, குறைந்த பட்சம் அது போன்ற படங்களை வெளியிட்டு வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதீர்கள் என்று கண்டிக்க துப்பு இல்லாத உங்களுக்கு, பத்திரிக்கை அடிப்படையில் எழுதிய தகவல் என்று நான் இங்கே பின்னூட்டத்தில் தெரிவித்த பிறகும் தொடர்ந்து அது பற்றியே பேசும் உங்களுக்கு தமிழ்நாட்டு தமிழர்களை (நான் தமிழ்நாட்டு தமிழன் தான்) கண்டிக்க காரணம் என்ன இருக்கிறது ?
//புனைப்பெயர் பூனைப் பெயர் யாரெல்லாம் வச்சு எழுதுகிறார்கள் என்று ஆராய்ச்சி நடத்த முடியாது. இந்திரா பார்த்தசாரதி, சாரு நிவேதிதா இவை கூட பெண் பெயர் மாதிரி தான் தெரிகிறது மேடம்.//
என்னோட புளொக்ல ஃஃபீமேலுன்னு போட்டு இருக்கு. பார்க்க டைமில்லாதவங்கன சார் போடாமல் எழுதி இருக்கலாம்.
உங்கள குத்தம் சொன்னா தமிழ் நாட்டு தமிழர்களையே குத்தம் சொன்னதுன்னு அர்த்தமா? வீணாக தமிழ் நாட்டு தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்றேன்னு தட்டை பிரட்டாதீர்கள்.
நீங்க ஒட்டு மொத்த தமிழ் நாட்டு தமிழர்களையும் பிரதிநிதிப்படுத்துபவர் இல்லை. நான் ஒட்டு மொத்த இலங்கையரையும் பிரதிநிதிப்படுத்துபவர் இல்லை. என்னை வேதனைப்படுத்திய பதிவு இது. எழுதியவர் நீங்கள். எரிச்சல்பட்டது (இது பொறாமையை குறிக்கும் எரிச்சல் அல்ல. அனோயிங், வேதனைப்பட்டது நான். உங்களுக்கு எனக்குமான பேச்சில் எதுக்கு ஜெனரலைஸ் பண்ணுறீங்க. You are Govikannan. I am talking to you. Not to the entire community. If I need to talk to them, I would rather write on my blog than talking to you here.
இந்திய இராணுவம் செய்த கொடுமைக்குப் பிறகும் இந்திய இராணுவத்தை வெறுக்கிறோம் என்று சொன்னதில்லை. காரணம் அதில் மக்களுக்கு உதவிய வீரர்களும் இருந்தார்கள் என்பதற்காக.
//சாருக்கானுடன் நான், சல்மான்கானுடன் நான் என்று படங்கள் பதிவுகளில் வரும் போது நாங்களும் தான் நொந்து போகிறோம், எங்களுக்கு யார் ஆறுதல் சொல்வது, குறைந்த பட்சம் அது போன்ற படங்களை வெளியிட்டு வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதீர்கள்//
அப்படி நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் தூ என்று அங்கேயும் போய் சொல்லி இருப்பேன். இன்னும் ஒன்றையும் நான் பார்க்கவில்லை. அந்த ஈனப்பிறப்புகளுக்கும் பத்பநாபனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனாலும், கண்டனத்தை பதியாமல் விடபோவதில்லை.
அதுக்காக நீங்கள் இங்கே எப்படி செத்தார்னு ஆராய்ச்சி செய்தது நியாயமில்லை.
//என்னோட புளொக்ல ஃஃபீமேலுன்னு போட்டு இருக்கு. பார்க்க டைமில்லாதவங்கன சார் போடாமல் எழுதி இருக்கலாம்.//
தவறு என்றால் திருத்திக் கொள்ளப் போகிறேன். இது ஒன்றும் மாபெரும் சதி இல்லிங்க மேடம்.
//உங்கள குத்தம் சொன்னா தமிழ் நாட்டு தமிழர்களையே குத்தம் சொன்னதுன்னு அர்த்தமா? வீணாக தமிழ் நாட்டு தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்றேன்னு தட்டை பிரட்டாதீர்கள்.
நீங்க ஒட்டு மொத்த தமிழ் நாட்டு தமிழர்களையும் பிரதிநிதிப்படுத்துபவர் இல்லை. நான் ஒட்டு மொத்த இலங்கையரையும் பிரதிநிதிப்படுத்துபவர் இல்லை.//
அப்படி என்றால் நீங்கள் மேலே மினி என்ற பெயரில் பின்னூட்டம் இட்டிருக்கும் நபருக்குத்தான் பதில் சொல்லி இருக்க வேண்டும். நீங்கள் உட்பட இருக்கும் புலி ஆதரவாளர்களில் யார் தமிழ்நாட்டு தமிழன் மீது காண்டாக இருக்கிறார்கள் என்று என்னால் பட்டியல் இட்டுச் சொல்லமுடியாது, ஆனால் இருக்கிறார்கள் என்பதற்கு மினி போன்ற ஆட்கள் சாட்சி.
//அதுக்காக நீங்கள் இங்கே எப்படி செத்தார்னு ஆராய்ச்சி செய்தது நியாயமில்லை.//
திரும்ப திரும்ப இது பற்றி நான் கூறிக் கொண்டு இருக்க முடியாது, எழுதியவை அனைத்தும் பத்திரிக்கை செய்தி அடிப்படை எழுதியவை என்று ஏற்கனவே கூறிவிட்டேன்.
//வேதனையை காட்ட உண்ணா நோன்புன்னு இருக்கத்தேவையில்லை. இரண்டு நாளுக்கு முன்னரே சாப்பாடு இறங்கிறது கொறஞ்சிடுச்சு. அன்று மட்டும் நோன்புன்னுட்ட அடுத்த நாள் பார்ட்டி வைக்கிறவங்களுக்கு மத்தியில் நோன்பு இருக்காதவங்க எவ்வளவோ மேல். நோன்பு இருந்தாப் போல எல்லாம் சரியாயிடுமா? 18ம் திகதி மட்டும் தான் முள்ளிவாய்க்கால் பிரச்சினை பத்தி யோசிச்சு அழவேணுமா?//
ஆமாம். அப்பறம் இராஜபக்சே அமைச்சரவையில் இருக்கும் தமிழர்களுக்கு மட்டும் தமிழன் மீது பாசம் இல்லையா ? அவனெல்லாம் தமிழன் இல்லையான்னு கூட நீங்க கேள்விகளை (கேட்டு) வைத்திருக்கலாம் மேடம்.
Can you stop using madam. My name is Anamika and I prefer to be addressed as Anamika.
I have no sayings about those Tamil ministers. சிலர் தமிழர்களை கொல்றதுக்குன்னு ரொம்பவே ஹெல்ப் பண்ணி இருக்காங்க. உ+ம்: லக்ஸ்மன் கதிர்காமர். சிலர் தமிழர்களுக்கு உதவி இருக்கிறார்கள். அது தான் சொன்னேன்ன. ஜெனரலைஸ் பண்ணுவதில் எனக்கு உடன்பாடில்லை. பத்திரிகையில் வந்த செய்தி என்பதற்காக நீங்கள் ஆராய்ந்து எழுதி இருக்கத்தேவை இல்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர் எப்படி செத்தார் என்று பத்திரிகைகள் தான் எழுதி தொலைத்தால், அவர் மேல் அபிமானம் வைத்திருக்கிறேன் என்று கூறும் நீங்கள அதை எழுதி இருக்கத் தேவை இல்லை. சில விடயங்களை எழுதித் தான் மனவக்கிரத்தை தீர்க்க வேணும் என்றில்லை.
மினியின் கோவத்தை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், எழுதத் தூண்டியது நீங்கள் எனபதால் பிழையில் உங்களுக்கும் பங்குண்டு.
இனியும் பதில் சொல்ல முதல், கொஞ்சம் ரௌத்திரம் கொஞ்சம் ஆதங்கத்தையும், தாழ்மையான வேண்டுகோள் என்ற ஆக்கத்தையும் படிச்சுட்டு பதில் சொல்லுங்க.
(சார் என்று கூப்பிட்டது சதின்னு சொல்லவில்லை. ஆனால், அது என்னை மிகவும் எரிச்சல்படுத்தியது.)
//I have no sayings about those Tamil ministers. சிலர் தமிழர்களை கொல்றதுக்குன்னு ரொம்பவே ஹெல்ப் பண்ணி இருக்காங்க. உ+ம்: லக்ஸ்மன் கதிர்காமர். சிலர் தமிழர்களுக்கு உதவி இருக்கிறார்கள்.//
லக்ஷ்மன் கதிர்காமனா ? அவ்வ்...
"பொய்காரன், பொய்காரன்" என்று கூகுளில் தேடினால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு எதிரான ஆர்பாட்ட சுட்டிக் கிடைக்கலாம்.
//சிலர் தமிழர்களை கொல்றதுக்குன்னு ரொம்பவே ஹெல்ப் பண்ணி இருக்காங்க. உ+ம்: லக்ஸ்மன் கதிர்காமர்.//
ஒரு ஸ்டேட்மென்ட் சொன்னப்புறம் தான் உதாரணம் சொல்லுவோம். அதுக்கு முதல்ல அல்ல. சோ, நான் சொன்னது தமிழரை கொன்றதுக்கு உதவினதுக்கு உதாரணம். கொஞ்சம் ஒழுங்கா படியுங்க.
கருத்துரையிடுக