பின்பற்றுபவர்கள்

22 மே, 2009

சிங்கை பதிவர் சந்திப்பு (நாளை) !

நாளை சனிக்கிழமை மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சிங்கைப் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

இடம் : பாசரிஸ் கடற்கரை (சிறுவர் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள கடற்கரைப் பகுதி)



பேருந்து : பாசரிஸ் மையம் பேருந்து மாற்று நிலையத்தில் (Pasir Ris Central, Bus Interchange) இருந்து

88, 359 (Berth 7) , 15, 58 (எலியாஸ் மாலில் இருந்து 10 நிமிட நடைத் தொலைவு)

403, பாசரிஸ் கடற்கறைப் பூங்காவிற்கே வரும்.

சிங்கைப் பதிவர்கள் அனைவரும் வருக !

தொடர்பு கொள்ள,

ஜோசப் பால்ராஜ் : 93372775
முகவை இராம் : 90526257
கோவி.கண்ணன் : 98767586

28 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

என்னா அண்ணே திடீர்ன்னு - எதுனா மேட்டரா

ஜெகதீசன் சொன்னது…

என்னா அண்ணே திடீர்ன்னு - எதுனா மேட்டரா

லக்கிலுக் சொன்னது…

சந்திப்புக்கு வாழ்த்துகள்!

சந்திப்பில் கோவி அண்ணன் தலைமையில் சிங்கள பாசிஸ்ட் கருணாநிதியை எதிர்த்து தீர்மானம் போடுவீர்கள் என்று நம்புகிறேன் :-)

கிஷோர் சொன்னது…

//சந்திப்பில் கோவி அண்ணன் தலைமையில் சிங்கள பாசிஸ்ட் கருணாநிதியை எதிர்த்து தீர்மானம் போடுவீர்கள் என்று நம்புகிறேன் :-)
//

தலைவர் குடும்பத்திற்கு அமைச்சர் பதவிகள் கிடைக்க சிறப்பு வழிபாடு நடத்த‌ப்படும்

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

நாளை 23-05-09 மற்றும் 24-05-09 சிங்கையில் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது.

ஜெகதீசன் சொன்னது…

//
சந்திப்பில் கோவி அண்ணன் தலைமையில் சிங்கள பாசிஸ்ட் கருணாநிதியை எதிர்த்து தீர்மானம் போடுவீர்கள் என்று நம்புகிறேன் :-)
//
அமைச்சரவை பதவியேற்புவிழாவைப் புறக்கணித்த கலைஞருக்குக் கண்டனம் தெரிவித்து சஞ்சய் ஆதரவுப் பதிவர்களும்,

திமுக வுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை எதிர்த்து காங்கிரஸுக்குக் கண்டனம் தெரிவித்து லக்கிலுக் ஆதரவுப் பதிவர்களும்

தீர்மானம் கொண்டுவருவார்கள் அப்படின்னு உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்னு சொல்லுது..
:P

அக்னி பார்வை சொன்னது…

ப்சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...சந்திப்பை பற்றிய கவரேஜ் பதிவிற்க்காக காத்திருக்கிறேன்

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

முகவை மைந்தன் சொன்னது…

//நாளை 23-05-09 மற்றும் 24-05-09 சிங்கையில் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது.//

உணவு துறப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அண்ணன் பாரி.அரசு காலை 10 மணிக்கெல்லாம் வர இருக்கிறார். நாம் எண்ணிக்கைக்கு அவருடன் செல்ல வேண்டும் என்பதை நினைவுறுத்துகிறேன்.

ராசு எனபவர் அரசு அனுமதியோடு பேச்சாளர் முனையில் 48 மணி நேர அறப் போராட்டத்தில் இறங்குகிறார். உடல் திறனோடு இருப்பவர்கள் அவருடன் இணைந்து கொள்ளலாம். இல்லையெனினும், அங்கே சென்று அவருக்கு நம் ஆதரவையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

Venkatesh சொன்னது…

சந்திப்புக்கு வாழ்த்துகள்!

வெங்கடேஷ்

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

சிங்கை பதிவர் சந்திப்பு தூள் கிளப்ப வாழ்த்துக்கள்..:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
சந்திப்புக்கு வாழ்த்துகள்!

சந்திப்பில் கோவி அண்ணன் தலைமையில் சிங்கள பாசிஸ்ட் கருணாநிதியை எதிர்த்து தீர்மானம் போடுவீர்கள் என்று நம்புகிறேன் :-)
//

ஏன் இந்த இரசாயண குண்டு ?
:)

சிங்கை பதிவர்களிடையில் இதுவரை கோஷ்டி கானங்கள் எதுவும் கிடையாது.
:)))))

லக்கிலுக் சொன்னது…

//சிங்கை பதிவர்களிடையில் இதுவரை கோஷ்டி கானங்கள் எதுவும் கிடையாது.
:)))))//

இனிமேல் உங்கள் தலைமையில் “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” என்று கோஷ்டிகானம் பாடுவார்கள் என்று நம்பலாம் :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
//சிங்கை பதிவர்களிடையில் இதுவரை கோஷ்டி கானங்கள் எதுவும் கிடையாது.
:)))))//

இனிமேல் உங்கள் தலைமையில் “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” என்று கோஷ்டிகானம் பாடுவார்கள் என்று நம்பலாம் :-)

5:32 PM, May 22, 2009
//

"ஐயா" என்று அழைக்க உயிரி(ல்)லையே, (உண்மையிலேயே உயிரில்லை, ஐ மீன் உயிரோட பலரை சாகடிச்சிட்டுரே !) என்று பாட முடியவில்லையே என்ன செய்வது :)

கோவி.கண்ணன் சொன்னது…

"ஐயா" என்று சொன்னது கருணாநிதி ஐயாவைத்தான்.

லக்கிலுக் சொன்னது…

//"ஐயா" என்று சொன்னது கருணாநிதி ஐயாவைத்தான்.
//

கு. உள்ள நெஞ்சி குறுகுறுக்கும்!

கு. = குற்றம்

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
//"ஐயா" என்று சொன்னது கருணாநிதி ஐயாவைத்தான்.
//

கு. உள்ள நெஞ்சி குறுகுறுக்கும்!

கு. = குற்றம்
//

சில நேரங்களில் பின்னூட்டத்திற்கு பதில் என்ன வரும் என்று ஊகிப்பதால் எக்ஸ்டாராவாக விளக்கம் சொல்ல வேண்டி இருக்கு. ஏனென்றால் ஒருவருடன் தனிப்பட்ட பழகத்தைவீட, அவரைப் பற்றி நம் (பரப்பும்) கருத்துகள் பலரை சென்று சேர்ந்து அடையவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமா ? என்பதை மனசாட்சியிடம் தான் கேட்க வேண்டும்.

கு. க்கு விளக்கம் எழுதத் தேவை இல்லையே, நீங்கள் அதிஷா இல்லை என்பதால் அதை விளக்கமின்றி நான் 'குற்றமாகவே' கருதுவேன்

லக்கிலுக் சொன்னது…

//சில நேரங்களில் பின்னூட்டத்திற்கு பதில் என்ன வரும் என்று ஊகிப்பதால் எக்ஸ்டாராவாக விளக்கம் சொல்ல வேண்டி இருக்கு. ஏனென்றால் ஒருவருடன் தனிப்பட்ட பழகத்தைவீட, அவரைப் பற்றி நம் (பரப்பும்) கருத்துகள் பலரை சென்று சேர்ந்து அடையவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமா ? என்பதை மனசாட்சியிடம் தான் கேட்க வேண்டும்.//

அண்ணே!

உங்களிடம் நான் கண்ட பிரச்சினை என்னவென்றால் காண்பது, கேட்பது, படிப்பது எல்லாவற்றையுமே பதிவாகவோ, அல்லது பின்னூட்டமாகவோ பார்க்கிறீர்கள்.

இணையம், பதிவு மாதிரியான கருமாந்திரங்களுக்கும் நட்புக்கும் எந்த தொடர்புமில்லை. நீங்கள் இரண்டையும் போட்டு குழம்பி, அந்த கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லி குழம்பவும் செய்கிறீர்கள்.

இதேபோல தொடர்ந்தீர்களேயானால் உங்களுக்கு இருக்கும் கருத்து கந்தசாமி என்ற பட்டம் போய், குழப்பம் குப்புசாமி என்ற பட்டம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கிறது :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//இதேபோல தொடர்ந்தீர்களேயானால் உங்களுக்கு இருக்கும் கருத்து கந்தசாமி என்ற பட்டம் போய், குழப்பம் குப்புசாமி என்ற பட்டம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கிறது :-)

5:50 PM, May 22, 2009
//

உங்களுக்கும் அவதூறு சொல்வது தொற்றி இருக்குமோ என்று நினைத்தேன். மற்றபடி ஒன்றும் இல்லை.
:)

லக்கிலுக் சொன்னது…

//உங்களுக்கும் அவதூறு சொல்வது தொற்றி இருக்குமோ என்று நினைத்தேன். மற்றபடி ஒன்றும் இல்லை.
:)//

உங்களை பற்றி அவதூறு சொல்வதை தவிர்த்து பிறருக்கு வேறு வேலையே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? :-)

வேத்தியன் சொன்னது…

சந்திப்பு இனிதாக நடந்தேற வாழ்த்துகள்...

வடுவூர் குமார் சொன்னது…

முடிந்தால் வருகிறேன்.

வால்பையன் சொன்னது…

போட்டோ புடிச்சி போடுங்க!

அப்பாவி முரு சொன்னது…

சந்திப்பில் ஏதேனும் முக்கிய முடிவெடுத்தால் தெரிவிக்கவும்.

வாழ்த்துக்கள்

சுந்தர் சொன்னது…

வாழ்த்துக்கள்

வேடிக்கை மனிதன் சொன்னது…

நிச்சயம் வருவேன்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

திடீர்ன்னு - எதுனா மேட்டரா
முயற்சிக்கின்றேன்..

மதிபாலா சொன்னது…

[manage]
ஈழப்பிரச்சனைக்காக சிங்கபூரில் உண்ணாநிலை போராட்டம்!
சிங்கையை சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜ சேகர் என்பவர் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை வரும் 23-05-2009 (சனிக் கிழமை) காலை பத்து மணி அளவில் தொடங்கி 26-05-2009 (திங்கள் கிழமை) காலை பத்து மணி வரை நம் உலகத் தமிழ் மக்கள் அரங்க அறக்கட்டளை ஆதரவுடன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க இருக்கிறார். அலைகடலென தமிழர்கள் வந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும்.

சர்வதேச சமூகம்கத்தின் கவன ஈர்ப்பிர்க்காவும் உலக மக்களின் ஆதரவு வேண்டியும் இந்த உண்ணாவிரதத்தை அவர் மேற்கொள்கிறார்
-

இடம் ஹாங் லிம் பார்க் hong lim park (speakers corner).

கிளார்க் கீ ரயில் வண்டி நிலையம் அருகில்


தொடர்புக்கு
-
தமிழ் மறையான் 92702429,
-
சத்யா-83984444

சிங்கபூரில் இருக்கும் நம் அரங்க உறுப்பினர்களும் ,தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவும்.

நிர்வாக குழு
-
உலகத் தமிழ் மக்கள் அரங்கம்

http://s176.photobucket.com/albums/w195/sasikumark/?action=view&current=SingaiPorattam.jpg

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்