பின்பற்றுபவர்கள்

14 ஆகஸ்ட், 2007

கழுவுகிற கையால் சாப்பிடலாமா ?

தீண்டாமை வெளியில் வெளிப்படையாக இன்னும் கிராமங்களில் இருக்கிறது என்பது வேதனையான விஷ(ய)ம் தான். ஆனால் நாம் கடைபிடிக்கும் (மூட) நம்பிக்கைகளின் உச்சத்தில் நமது உடல் உறுப்புக்கள் மீதும் இத்தகையை தீண்டாமையை வைத்திருந்து போற்றுகிறோம் என்பதே தெரியாமல் நாம் இருக்கிறோம்.

முன்பு சென்னையில் ஒரு மலையாளி டீ கடைக்கு சாயா குடிக்கப் போயிருந்தேன். அங்கு டீக்கடையில் டீ குடித்துவிட்டு ஒருவர் 50 ரூபாயைக் கொடுத்துவிட்டு மீதம் பெற்றுக் கொள்ள பணத்தை நீட்டினார். கடையில் கல்லாவில் இருந்தது சின்ன பையன், அவன் மீதம் பணத்தைக் அவருக்கு கொடுத்தான். பணம் மீதம் பெற்ற நபருக்கு கோவம் தலைக்கு மேல் ஏறிவிட்டது. என்னவென்று உடனே புரிந்தது. ஏனென்றால் கடைக்கார பையன் 'இடது கையால்' மீதம் பணத்தைக் கொடுத்துவிட்டானாம்.

இதில் என்ன வேடிக்கை என்றால் டீ குடித்த நபர் மசால் வடையும் தின்றுகொண்டிருந்ததை நான் பார்த்தேன். இதில் என்ன வேடிக்கை என்கிறீர்களா ? மசால் வடையை ஒரு கையால் தட்ட முடியாது. நன்றாக உருண்டையாக மாவை உருட்டி 'இடது உள்ளங்கையில்' வைத்து தட்டிப் போடுவார்கள். சென்னையில் பல மலையாளி டீ கடைகளில் மசால் வடை சுவையாக இருக்கும். அதற்கு காரணம் இடது கையால் தட்டுவதா ? :). கடைக்கு வெளியில் தான் மசால் வடை செய்வார்கள். எனவே செய்முறையை நன்றாக கவனிக்க முடியும்.

அந்த நபர் டீக்கடைக்கார சிறுவனை எகிறிய போது நினைத்தேன். 'அடப்பாவிகளா இடது கையால் தட்டிய மசால் வடை இப்பதானே உள்ளே இறங்கியது, அதற்குகுள் இடதுகையால் பணம் பெற்றதை பிரச்சனை ஆக்குறானே' என்று நினைத்துக் கொண்டேன்.

நம்ம இந்தியர்கள் தான் சாப்பாட்டிற்கென ஒரு கையையையும் கழுவுவதற்கென்றே ஒரு கையை 'ஒதுக்கி' வைத்திருக்கிறார்கள்ள். சாப்பாடு சாப்பிடும் கை நல்ல கையாம். கழுவுகிற கை தாழ்ந்த கையாம் நல்ல காரியங்களுக்கு இடதுகையை பயன்படுத்தக் கூடாதாம்.

இரண்டு கை இருப்பதால் இப்படியெல்லாம் சொந்த கையிலேயே உயர்வு / தாழ்வு பார்க்கிறோம். ஒருகை இருந்தால் இதெல்லாம் செய்வோமோ ? இடதுகை ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எதாவது காரணம் இருக்கிறதா ? வலது காலை எடுத்து வைத்துச் செல்வதற்கும், இடது காலை எடுத்து வைத்து செல்வதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது ? பூனையை கட்டிப்போட்டு பாடம் நடத்திய கதைதான் நினைவுக்கு வருகிறது.

என்றோ ஒரு நாள் வலது கையில் காயம் பட்டு சாப்பிடுவதற்கு முடியாமல் போய்விட்டால் இடது கையால் சாப்பிடுவது இழிவா ? இடது கை செய்த பாவம் என்ன ? கழுவதற்கு உதவுவதா ? மற்ற எல்லாவற்றையும் குறிப்பாக (பிறப்பு உறுப்பை கழுவுவதற்கோ, மற்றும் பல பல) வலது கையும் செய்கிறதே ! இடதுகை சுத்தமாகத்தான் வைத்திருக்கிறோம். சாப்பிட்ட தட்டை கழுவிவிட்டு சாப்பிடும் போது இடது கையால் சாப்பிடுவதில் என்ன தவறு ?

கைகள் தசைகளால் ஆனவை ஒரே இரத்தம் தான் ஓடுகிறது. இதில் இடதுகையை மட்டும் ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும் ?

இரண்டு கையையும் சமமாக பயன்படுத்துபவர்களுக்கு மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது என்பது அறிவியலாளர்களின் கருத்து.

41 கருத்துகள்:

சிவபாலன் சொன்னது…

GK,

நல்ல கேள்வி!

அவனவனுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அதை செய்துவிட்ட போக வேண்டியதுதான். வலது கைக்கு சிறப்பிடம் என்பது வேடிக்கையாகத்தான் உள்ளது.

TBCD சொன்னது…

கோவி...கலக்குறீங்க போங்க..இத டைப் பண்ண இரண்டு கையுமே தான் உபயொகிச்சிருப்பீங்க....:))

அப்பறம்.. இடப்பக்கதை ஆளுமை செய்வது வலது மூளை...இந்த மூளை தான் மனிதனின், கற்பனை திறம், மொழிவளம், கலை சம்பந்தமான திறமைகள் கன்டுறோல் செய்கின்றது...அதனால், உங்கள் இடப்பக்கதிற்கு நீங்கள் அதிக வேலை தந்தால் அந்த மூளை நன்றாக வேலை செய்யும், அதனால் மேல் சொன்ன திறமைகளும் வளரும் என்பது விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயம்...இது தெரிந்தபின், நான் இடக்கையில் எழுதவும்..பழகினேன்...(அதை யாரலும் படிக்க முடியாது என்பது வேறு விசயம்..)
இதில் கூட நான் அரசியலை பார்க்கிறேன்...ஆரிய கூடுமிகள் செய்யும், புசை சம்பந்தமான விசயங்களில் இரண்டு கையுமே..உபயோகித்துக்கொண்டு, மற்றவர்களை..வலக்கையை மட்டும் உபயோகித்துக்கொள்ள அறிவுறுத்தி வந்திருக்கின்றனர்...இதனால், மற்றய மக்கள், மாக்கள் ஆக ஆவார்கள் என்பதே...அவர்கின் திட்டம்.. (இது எப்படி இருக்கு....?)

கருப்பு சொன்னது…

மறுபடியும் புல் பார்மில் இருக்கீங்க கோவி.கண்ணன்.

சிந்திக்க வைத்த பதிவு!

நாமக்கல் சிபி சொன்னது…

நல்ல பதிவு கோ.வி!

நான் கூட இடது கைப் பழக்கம் உடையவன்தான். ஆனாலும் சிரமப்பட்டு பொது இடங்களில் வலது கையால் கொடுப்பதும், பெறுவதும் பழகிவிட்டது.

வேற என்ன பண்ணுறது! கோவி-ச்சிக்குறாங்களே!

:(

நாமக்கல் சிபி சொன்னது…

//ஆரிய கூடுமிகள் செய்யும், புசை சம்பந்தமான விசயங்களில் இரண்டு கையுமே..உபயோகித்துக்கொண்டு, மற்றவர்களை..வலக்கையை மட்டும் உபயோகித்துக்கொள்ள அறிவுறுத்தி வந்திருக்கின்றனர்...இதனால், மற்றய மக்கள், மாக்கள் ஆக ஆவார்கள் என்பதே...அவர்கின் திட்டம்.. (இது எப்படி இருக்கு....?)
//

வேலிட் பாயிண்ட் டிபிசிடி -2!

மணியன் சொன்னது…

நல்ல பதிவு. இந்த உளவியல் தான் செய்யும் தொழிலிலும் ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்துகிறது. சரிசமனான நோக்கு இங்கிருந்தே தொடங்கவேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
GK,

நல்ல கேள்வி!

அவனவனுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அதை செய்துவிட்ட போக வேண்டியதுதான். வலது கைக்கு சிறப்பிடம் என்பது வேடிக்கையாகத்தான் உள்ளது.
//

நாம் வலதுகையையே பழகிக் கொள்வ்வதற்கும் நமக்கு சொல்லித்தருவதும் கூட காரணமாக அமைந்துவிடுகிறது சிபா,

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD-2 said... நான் அரசியலை பார்க்கிறேன்...ஆரிய கூடுமிகள் செய்யும், புசை சம்பந்தமான விசயங்களில் இரண்டு கையுமே..உபயோகித்துக்கொண்டு, மற்றவர்களை..வலக்கையை மட்டும் உபயோகித்துக்கொள்ள அறிவுறுத்தி வந்திருக்கின்றனர்...இதனால், மற்றய மக்கள், மாக்கள் ஆக ஆவார்கள் என்பதே...அவர்கின் திட்டம்.. (இது எப்படி இருக்கு....?)
//

ஓ !!! புதிய தகவலாக இருக்கிறது.
அப்படியும் கூட ஒரு காரணம் இருக்கிறதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
மறுபடியும் புல் பார்மில் இருக்கீங்க கோவி.கண்ணன்.

சிந்திக்க வைத்த பதிவு!
//

வாங்க கருப்பு,

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீகள். மகிழ்ச்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

///நாமக்கல் சிபி said...
நல்ல பதிவு கோ.வி!

நான் கூட இடது கைப் பழக்கம் உடையவன்தான். ஆனாலும் சிரமப்பட்டு பொது இடங்களில் வலது கையால் கொடுப்பதும், பெறுவதும் பழகிவிட்டது.

வேற என்ன பண்ணுறது! கோவி-ச்சிக்குறாங்களே!

:(
//

சிபி,

உங்களுக்கு இடது கை செயல்பாடுகளா ? கவனிக்கவில்லை.

உங்களுக்கு மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது.

Unknown சொன்னது…

:)

இப்படி வெறும் ஸ்மைலி மட்டும் போட்டால் அது பின்னூட்ட க்க்யமைத் தனமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
:)

இப்படி வெறும் ஸ்மைலி மட்டும் போட்டால் அது பின்னூட்ட க்க்யமைத் தனமா?
//

இல்லை,

மிக லேட்டாக பின்னூட்டத்திற்கு மறுமொழி போடுவதுதான் கயமைத்தனம்.

யாரோ இன்னிக்கு இந்த பதிவை திறந்து பார்த்திருக்கிறார்கள் "Kodaikanal, Tamil Nadu arrived from google.co.in on "காலம்: கழுவுகிற கையால் சாப்பிடலாமா ?" feedjit காட்டுது, என்ன வென்று பார்த்தேன். ஒரு பின்னூட்டத்திற்கு மறுமொழி மிஸ் ஆகி இருந்தது.

வவ்வால் சொன்னது…

கோவி,
நல்லா திறனாய்வு செய்து இருக்கிங்க, நான் பள்ளிப்பருவத்திலேயே இதை எல்லாம் கண்டுப்பிடித்துவிட்டேன் :-), இடது கையால் தான் கிரிக்கெட் ஆடுவேன், , நாம் இரண்டு கையையும் பயன்படுத்துவது இரு பக்க மூளையும் ஆக்டிவேட் செய்யும் என்பதும் அறிவியல் பூர்வமான உண்மையே.

மிகப்பெரிய திறமை சாலிகள் எல்லாம் இருக்கையிம் சமமாக பயன்படுத்தக்கூடியவர்கள், உதாரணம் லியோனார்டோ டாவின்சி, ஒரே நேரத்தில் இரண்டு கையாலும் எழுதுவார், படம் கூட போடுவாராம்.

அப்படி சிறப்பாக காட்ட வேண்டும் என்று தான் சிவாஜி படத்தில் ரஜினி இரண்டு கையாலும் எழுதுவதாக காட்டுவார்கள்.அப்படி திறமைஉள்ளவர்களை "ambidextrus" என்பார்கள்.

நீங்களும் இரு கைகளையும் பயன்படுத்துங்கள்! அப்புறம் இன்னும் மேல போய்டுவிங்க :-))

ஆனாலும் இந்த இடது கைனா கேவலம்னு ரொம்ப காலமா இருக்கு, எவனையாவது கேவலமா திட்டனும்னா கூட போடாங்கோ உன் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்கோனு சென்னைல திட்டுறாங்க :-))

bala சொன்னது…

//கழுவுகிற கையால் சாப்பிடலாமா?//
ஜிகே அய்யா,

தாரளமா சாப்பிடலாம்.ஆனா கழிவைத் தான் சாப்பிடக்கூடாது.ஆனா என்ன பண்ணுவது நீங்க சாப்பிடறீங்களே?பரவாயில்லை, கழிவை சாப்பிட்டாலும் நீங்க ஒரிஜினல் வந்தேறிய திராவிடப் பன்னி என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
தாரளமா சாப்பிடலாம்.ஆனா கழிவைத் தான் சாப்பிடக்கூடாது.ஆனா என்ன பண்ணுவது நீங்க சாப்பிடறீங்களே?பரவாயில்லை, கழிவை சாப்பிட்டாலும் நீங்க ஒரிஜினல் வந்தேறிய திராவிடப் பன்னி என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.

பாலா
//
வந்துட்டான்யா .......வந்துட்டான்....

பாலாப்போன ஐயா...உங்களுக்கு டிபிசிடி ஐயா போட்டிருக்கும் பின்னூட்டம் புரியும்னு நெனக்கேன்...ஹிஹி...நினைக்கிறேன்

மங்களூர் சிவா சொன்னது…

நல்லாத்தேன் இருக்கு கேள்வி ஆனா என்னத்த செய்ய??

அம்மணமா திரியறவன் ஊருல கோவணம் கட்டினவன் கோமாளின்னு அம்மணமாவே திரியறேன்!!

(குசும்பன் பின்னூட்ட டெம்ப்ளேட் பதிவு போட்டதிலிருந்து பின்னூட்டம் போடறது ரொம்ப சிரமமா இருக்கே!!)

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
நல்லாத்தேன் இருக்கு கேள்வி ஆனா என்னத்த செய்ய??

அம்மணமா திரியறவன் ஊருல கோவணம் கட்டினவன் கோமாளின்னு அம்மணமாவே திரியறேன்!!

(குசும்பன் பின்னூட்ட டெம்ப்ளேட் பதிவு போட்டதிலிருந்து பின்னூட்டம் போடறது ரொம்ப சிரமமா இருக்கே!!)
//


சிவா,
கூடவே நல்லா செண்ட் அடிச்சிக்கிட்டு மணமாகவே திரியுங்கள்.
:))

குசும்பன் டெம்ளேட் சூப்பர், நட்புக்காக பின்னூட்டம் போட அவ்வபோது பயன்படுத்திக்கொள்ளலாம்.

RATHNESH சொன்னது…

நண்பரே,

1. அந்த டீக்கடைச் சிறுவன் விஷயத்தில் பெரியவர் கோபப்பட்டது இடது கையால் தருவதை அறுவெறுப்பாக நினைத்து இருக்கும் என்று நான் எண்ணவில்லை. வலக்கைப் பழக்கம் உள்ளவர்களின் இடக்கை உபயோகம் அலட்சியத்தின் வெளிப்பாடு என்கிற பொதுவான எண்ணம் தான் காரணமாக இருக்கும். இன்றும் பெரியவர்களிடம் எதையும் கொடுக்கும் போது இடது கையால் கொடுப்பதைத் தவிர்க்கும்படிக் குழந்தைகளிடம் வலியுறுத்துவதன் காரணம் அதுவே.

2. தமிழ்நாட்டை விட வட மாநிலங்களில் இடக்கைப் பழக்கமுள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள். இதற்கு புவியியல் ரீதியான காரணங்கள் ஏதும் உள்ளதா என்று அறிந்தவர்கள் சொன்னால் நல்லது. ஒப்பீட்டில், வடக்கே இடக்கை உபயோகம் மரியாதைக் குறைவாக எண்ணப்படுவதில்லை - கோவில்களில் கூட.

3. ரூஸ்வெல்ட், இரண்டு கைகளிலும் இரண்டு வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார் என்று எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
நண்பரே,

1. அந்த டீக்கடைச் சிறுவன் விஷயத்தில் பெரியவர் கோபப்பட்டது இடது கையால் தருவதை அறுவெறுப்பாக நினைத்து இருக்கும் என்று நான் எண்ணவில்லை. வலக்கைப் பழக்கம் உள்ளவர்களின் இடக்கை உபயோகம் அலட்சியத்தின் வெளிப்பாடு என்கிற பொதுவான எண்ணம் தான் காரணமாக இருக்கும். இன்றும் பெரியவர்களிடம் எதையும் கொடுக்கும் போது இடது கையால் கொடுப்பதைத் தவிர்க்கும்படிக் குழந்தைகளிடம் வலியுறுத்துவதன் காரணம் அதுவே.//

சிறுவன் அலட்சியமாக செய்யவில்லை. நான் நேரடியாக அங்கு சம்பவத்தைப் பார்த்த போது உணர்ந்தே.. இது நினைவாக பதிந்துவிட்டதை இங்கு எழுதினேன். பிரச்சனை கிளப்பியவர் பெரியவரும் இல்லை. நடுத்தரவயது காரர்தான். நீங்கள் சொல்வது போல் என்றால் இந்த இடுகை எழுதி இருக்கவே மாட்டேன். இடது கை மறுப்பிற்கு முக்கிய காரணமாக தூய்மையற்றது, புனிதமல்லாதது என்று கருதுவதுதான். குறிப்பாக காசை இடது கையால் தொடுவது புனிதமற்ற செயலாகவே பலர் கருதுகிறார்கள்.

இடது கையால் கொடுக்கிறோம் என்று அத்தகைய நபர்கள் தப்பாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காக எப்போதும்,
நான் வாங்கும் போது இடது கையை நீட்டி வாங்கிக் கொண்டு.. கொடுக்கும் போது வலது கையாலும் தான் கொடுக்கிறேன்.

//
2. தமிழ்நாட்டை விட வட மாநிலங்களில் இடக்கைப் பழக்கமுள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள். இதற்கு புவியியல் ரீதியான காரணங்கள் ஏதும் உள்ளதா என்று அறிந்தவர்கள் சொன்னால் நல்லது. ஒப்பீட்டில், வடக்கே இடக்கை உபயோகம் மரியாதைக் குறைவாக எண்ணப்படுவதில்லை - கோவில்களில் கூட.

3. ரூஸ்வெல்ட், இரண்டு கைகளிலும் இரண்டு வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார் என்று எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது.
//

புதிய தகவல்கள். மிக்க நன்றி !

வவ்வால் சொன்னது…

//ரூஸ்வெல்ட், இரண்டு கைகளிலும் இரண்டு வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார் என்று எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது.//

ரத்னேஷ்,

எந்த ரூஸ்வெல்ட்,தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன். ஏன் எனில் ஒரே பெயரில் இரண்டு பேர் உண்டு இருவரும் அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்,

முதலாமவர், தியோடர் ரூஸ்வெல்ட், அவருக்கு பின்னர் வந்தவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட், இவருக்கு இரண்டு கால்களும் செயல்படாது,சிறுவயதிலே பாரலைசிஸ் வந்துவிட்டது. வீல் சேரில் இருந்துக்கொண்டே ஜனாதிபதி ஆகி சாதித்தவர்.இரண்டாம் உலகப்போரையும் சந்தித்தவர்.

இரு கைகளிலும் எழுதும் ஆற்றல் கொண்டவர் எனில் கண்டிப்பாக திறமையானவராக தான் இருக்க வேண்டும்.
ஒரு அரசியல் தலைவராக இருந்து அப்படி ஆற்றல் பெற்றவர் எனில் ஆச்சரியம் தான், நம்ம ஊர் அரசியல்வாதிகள் இரு கையாலும் லஞ்சம் வாங்க மட்டும் தெரிந்தவர்கள் :-))

பாச மலர் / Paasa Malar சொன்னது…

சிந்திக்க வைத்த பதிவு...ஏன் என்று கேள்வி கேட்காமலேயே வந்த பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்று..

செல்லி சொன்னது…

நல்ல பதிவு கோவி கண்ணன்.வலதாயிருந்தா என்ன இடதாயிருந்தா என்ன கை கைதானே!
வடை தட்ட 2 கையும் வேணுமே என்பதை இப்படிப்பட்டவங்க சிந்திக்க மாட்டார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படி சிறப்பாக காட்ட வேண்டும் என்று தான் சிவாஜி படத்தில் ரஜினி இரண்டு கையாலும் எழுதுவதாக காட்டுவார்கள்.அப்படி திறமைஉள்ளவர்களை "ambidextrus" என்பார்கள்.//

வவ்வால் சார்..word power made easy norman lewis - புத்தகத்தில் படித்திருக்கிறேன் அந்த சொல்லை.

//நீங்களும் இரு கைகளையும் பயன்படுத்துங்கள்! அப்புறம் இன்னும் மேல போய்டுவிங்க :-))//

முயற்சி செய்கிறேன்... ஆனால் இயல்பாக வரவில்லை. இடது கையால் சாப்பிட்டு பழக ஆசைதான்... எல்லாம் ஒருமாதிரியாக பார்பாங்கன்னு கூச்சமாக இருக்கு. :)

//ஆனாலும் இந்த இடது கைனா கேவலம்னு ரொம்ப காலமா இருக்கு, எவனையாவது கேவலமா திட்டனும்னா கூட போடாங்கோ உன் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்கோனு சென்னைல திட்டுறாங்க :-))//

இது பேமஸ் ஆன சொல்தான்.
;)

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
சிந்திக்க வைத்த பதிவு...ஏன் என்று கேள்வி கேட்காமலேயே வந்த பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்று..
//

பாசமலர்...
சரிதான். பெரியவங்க சொன்னாங்க என்று வழிவழிவருதுங்க எல்லாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//செல்லி said...
நல்ல பதிவு கோவி கண்ணன்.வலதாயிருந்தா என்ன இடதாயிருந்தா என்ன கை கைதானே!
வடை தட்ட 2 கையும் வேணுமே என்பதை இப்படிப்பட்டவங்க சிந்திக்க மாட்டார்கள்.
//

வணக்கம் செல்லி,

வடை மட்டுமில்லிங்க, சாமி கும்பிட்டாலும் இரண்டு கைகளும் சேர்ந்தால் தான் முடியும்.
:(

கோவி.கண்ணன் சொன்னது…

பாலா உன்னோட ஆபாச கமெண்டை சரோஜா தேவி கதையாக மாற்றி ஆதரவு கிடைக்கும் இடத்தில் பார்ட்னர் பிஸ்னஸ் பண்ணிக் கொள்...இங்கு வேண்டாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆபாசமா?இது என்ன ரீல்?டிபிசிடி மாறி முன்ன பின்ன மாறி இருக்குமே தவிர ஆபாசம் இருக்காதே?பதில் சொல்ல தெரியவில்லை என்றால் ஆபாசம்னு சொல்லி ஓடிப்போவது தானே உன்னோட பழக்கம்.ஓடிப்போ.
//


பாலாப் போன பாலா,

நீ பின்னூட்டம் போடவில்லை என்று யாரும் இங்கே அழலை. உனக்கு என்று பெரிசா ஒன்னும் இமேஜ் எதுவும் இல்லை. அதனால கோவப்பட்டு டென்சன் ஆக ஒண்ணுமில்லை. 'அந்த' கதை எழுதுவது தான் உனக்கு கைவந்த கலை ஆச்சே. நீர் யார் என்பது பதிவுலகே அறிந்த ரகசியம் தான். நோ டென்சன் ப்ளீஸ்....! ஜெயராமா இராமாயண ஆன்மிக கதையை பச்சையாக அங்கே தொடரவும்.

koothanalluran சொன்னது…

புரோட்டா, தந்தூரி, சப்பாத்தி போன்ற அழுத்தமான உணவுகளை நாம் (குறிப்பாக தமிழர்கள்) ஒரு கையால் பிய்த்து தின்பதை பாக்கிஸ்தனியர்கள்,அரபிகள் அதிசய்மாக பார்ப்பார்கள். அரபிகளின் 'குப்ஸ்' அழுத்தமாக இருக்கும் இரு கையாலே பிய்த்து சாப்பிடுவார்கள்.

bala சொன்னது…

//நீ பின்னூட்டம் போடவில்லை என்று யாரும் இங்கே அழலை. உனக்கு என்று பெரிசா ஒன்னும் இமேஜ் எதுவும் இல்லை.//

கோவி.முண்டம்.கண்ணன்,

ஆமா, நீ பதிவு போடணும்னு மட்டும் யாராவது இங்க அழுதாங்களா என்ன?மூஞ்சியைப் பாத்தா half witted imbecile மாறி இருக்கு.இந்த அழகுல உனக்கு அகம்பாவம் வேறு?போடா பொறிக்கி முண்டம்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
கோவி.முண்டம்.கண்ணன்,

ஆமா, நீ பதிவு போடணும்னு மட்டும் யாராவது இங்க அழுதாங்களா என்ன?மூஞ்சியைப் பாத்தா half witted imbecile மாறி இருக்கு.இந்த அழகுல உனக்கு அகம்பாவம் வேறு?போடா பொறிக்கி முண்டம்.

பாலா
//

நீ பலராலும் பலமுறை செருப்பால் அடிக்கப்பட்டவன் தான். நானும் செருப்பால் அடிக்க வேண்டாம் என்று தான் இருந்தேன். மானம் உள்ளவன் மாதிரி பேசும் உன்னால் என் பதிவை படிக்காமலோ, பின்னூட்டம் போடாமலோ இருக்க முடியாது.

சொன்னது போல் நடந்து கொள்ள முயற்சி செய்.

மங்கை சொன்னது…

அதெப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் நினைக்கத்தோனுது..:-))

வட மாநிலங்களில் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்குவது அன்றாடம் நடக்கும் ஒரு விஷ்யம்
நாம நல்ல நாள் பொல்லாத நாள்ல தான் இது பண்ணுவோம்..அவங்க அப்பிடி கும்பிடும்போது இடது கையால் தான் பெரியவர்களின் காலை தொட்டு வணங்குவதை பார்த்திருக்கிறேன்..

மகேந்திரன் பின்னூட்டம் ரொம்ப சரி..

மூளையின் right hemisphere அதிகமான ஆற்றல் பெற்றிருப்பவர்கள் இடது கை பழக்கம் உள்ளவர்களா இருப்பாங்க..இந்த ஏரியாதான் நம் மொழி, கைப்பழக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது..

இது மாதிரி மற்றவர்களிடம் தேவையில்லாம, ஓவரா மரியாதை எதிர்பார்ப்பவர்களின் நடவடிக்கை பெரும்பாலும் அடாவடியாத்தான் இருக்கு..எரிச்சல்ல சொல்றேன்..ம்ம்ம்

கோவி.கண்ணன் சொன்னது…

//koothanalluran said...
புரோட்டா, தந்தூரி, சப்பாத்தி போன்ற அழுத்தமான உணவுகளை நாம் (குறிப்பாக தமிழர்கள்) ஒரு கையால் பிய்த்து தின்பதை பாக்கிஸ்தனியர்கள்,அரபிகள் அதிசய்மாக பார்ப்பார்கள். அரபிகளின் 'குப்ஸ்' அழுத்தமாக இருக்கும் இரு கையாலே பிய்த்து சாப்பிடுவார்கள்.
//

koothanalluran ஐயா,

தகவலுக்கு நன்றி. நம்ம ஊரில் தான் இப்படியெல்லாம் நடக்கிறது. சீனர்களும் இரண்டு கையை சமமாகவே பயன்படுத்துகிறார்கள்.

TBCD சொன்னது…

பாலா,

இது வரைக்கும் இரண்டு வழிகள் சொல்லியிருக்கேன்..நீ மாறவதற்கு..

1. நல்ல மருத்துவரை அனுகவும்
2. குறுக்கே கிடப்பதை கழற்றிவிட்டு உறுதி எடுப்பது..

இரண்டும் சரி வரவில்லை என்றால், பலர் கையால் செருப்படி வாங்கிக் கொண்டே தான் இருப்பாய்..

அப்பறம்..நீர் வீராதி வீரன் (பின்னுட்டத்திலே) ..சூராதி சூரன்..ஆம்பிளை (அ)சிங்கம் சுப்பிரமணிக்கு சொந்தக்காரன்..

மானம் உள்ளவன், ரோசம் உள்ளவன்..(எவ்வளோ அடிச்சாலும் வலிக்கிறதில்லை..)

வராக அவதாரம் போன்றவன்..(குப்பைய கிளருவதிலே..)


அப்படி இருக்கும் போது, உம்ம முகத்தை காட்ட ஏன் தயக்கம்..


//ஆபாசமா?இது என்ன ரீல்?டிபிசிடி மாறி முன்ன பின்ன மாறி இருக்குமே தவிர ஆபாசம் இருக்காதே?
//

TBCD சொன்னது…

எதுங்க :) போட்டதா...அவ்வ்வ்வ்வ்வ்

//*மங்கை said...

மகேந்திரன் பின்னூட்டம் ரொம்ப சரி..*//

//*மகேந்திரன்.பெ said...

:)

இப்படி வெறும் ஸ்மைலி மட்டும் போட்டால் அது பின்னூட்ட க்க்யமைத் தனமா?*//

மங்கை சொன்னது…

ஆஹா மங்களூர் சிவாவின் பின்னூட்டத்தை சொன்னேன்..ஷ்மால் மிஷ்டேக் ஆயிடுத்து...:-))

enRenRum-anbudan.BALA சொன்னது…

கோ.க,

டாபிக் எல்லாம் சூப்பரா பிடிக்கறீங்க :) நல்ல பதிவு !

என்னளவில், இடது கை பழக்கம் கொண்டவர்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமை கூட ஏற்படும் :)

என்ன, என் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்து மட்டும் சொல்லிட்டு அப்பீட் ஆகி விட்டீர்கள் ? ;-)

enRenRum-anbudan.BALA சொன்னது…

மேலும், எந்தக் கையாக இருந்தாலும், நல்லா கழுவிட்டு சாப்பாடு செய்யணும், இல்லையா :))))

கோவி.கண்ணன் சொன்னது…

//enRenRum-anbudan.BALA said...
கோ.க,

டாபிக் எல்லாம் சூப்பரா பிடிக்கறீங்க :) நல்ல பதிவு !

என்னளவில், இடது கை பழக்கம் கொண்டவர்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமை கூட ஏற்படும் :)

என்ன, என் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்து மட்டும் சொல்லிட்டு அப்பீட் ஆகி விட்டீர்கள் ? ;-)
//

enRenRum-anbudan.BALA,

உங்கள் நட்சத்திர இடுகைகளில் 50 விழுக்காட்டு பதிவுகளை படித்துவிட்டேன். குறிப்பாக பதிவுலகம் பற்றிய கருத்துக்கள்..பாபாவின் பேட்டி மற்றும் பல. பின்னூட்டம் போடுவதற்குத்தான் கொஞ்சல் அலுப்பு. இங்கே கூட நிறைய பின்னூட்டத்திற்கு மறுமொழி இடாமல் வைத்திருக்கிறேன். இந்த பதிவு 3 மாதத்திற்கு எழுதிய பதிவு.

பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இடது கையை பழக்கிக் கொள்வோம்.

//enRenRum-anbudan.BALA said...
மேலும், எந்தக் கையாக இருந்தாலும், நல்லா கழுவிட்டு சாப்பாடு செய்யணும், இல்லையா :))))
//

:)) கையை மட்டும் கழுவிட்டு அல்ல.. பல்லையும் விளக்கிட்டு தான் சாப்பிடனும்.

புருனோ Bruno சொன்னது…

வாசிம் அகரமும் பந்து வீச்சாளர் தான்
கபில் தேவும் பந்து வீச்சாளர்தான்

புருனோ Bruno சொன்னது…

//இரு கைகளிலும் எழுதும் ஆற்றல் கொண்டவர் எனில் கண்டிப்பாக திறமையானவராக தான் இருக்க வேண்டும்.
ஒரு அரசியல் தலைவராக இருந்து அப்படி ஆற்றல் பெற்றவர் எனில் ஆச்சரியம் தான், நம்ம ஊர் அரசியல்வாதிகள்//

டஜன் மொழி தெரிந்தவர், பொருளாதார மேதை, வசனகார்த்தா, மிகப்பெரிய வழக்கறிஞர்கள் எல்லாம் இந்திய அரசியல்வாதிகள் தலைவரே

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\ஏனென்றால் கடைக்கார பையன் 'இடது கையால்' மீதம் பணத்தைக் கொடுத்துவிட்டானாம்.\\

கோவியாரே, பணம் வாங்கியவர், சுத்தம் செய்ய பயன்படுத்தும் கையில் பணம் கொடுத்ததற்காக
அறிவார்த்தமாக கோபப்பட்டதாக நான் நினைக்கவில்லை.

எப்படி வளர்க்கப்பட்டாரோ, அதன் அடிப்படையில்
செண்டிமெண்ட் ஆக ’இடதுகை ஆகாது’ என்றுதான்
கோபப்பட்டு இருக்கிறார். அவ்வளவுதான்.

ஆக சுகாதார அடிப்படையில் விளக்கம் இந்த இடத்திற்கு பொருந்தாது.

செண்டிமெண்ட் அடிப்படையில் அறிவியலோடு இணைந்த ஆன்மீகரீதியாக முன்னோர்கள் சொன்னது என்ன?,அதை காலப்போக்கில் எப்படி மூட நம்பிக்கையாக மாற்றிவிட்டனர்? என தாங்கள் விளக்கியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

இரு கட்டுரைகளிலும் அப்படி இல்லை.ஆகவே சுட்டிக்காட்ட வேண்டியதாயிற்று.

என்னுடைய கணிப்பில் தாங்கள் ஆன்மீகத்தில் உள்ள
அறிவியலை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்.
அதை பதிவுலக முன்னேற்றத்திற்கு,ஆக்கபூர்வமாக
எழுத வேண்டும்.

அடிப்படை தெரியாமல் மற்றவர்கள் நாத்திகம் பேசுவது தவறில்லை. தங்களுக்கு தெரிந்தவற்றை
உங்கள் நோக்கில் சொல்வதைவிட, எப்படி சொன்னால் பிறருக்கு உபயோகமாயிருக்கும் என்று சொன்னால் அதுவே சமுதாயப்பணி.

வாழ்த்துக்களுடன்...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்