பின்பற்றுபவர்கள்

15 ஜூலை, 2007

மொக்கை போட ஆரம்பித்து...

கவிதைகள் மீது எனக்கு ஈடுபாடு வந்ததற்கு முதன்மைக் காரணமாக நான் நினைப்பது கவிஞர் வாலி மற்றும் கவிஞர் வைரமுத்து சுற்றி வளைக்காது "நச்"சென்று எழுதுவதில் இருவரும் வல்லவர். பெரியவர் வாலி எதுகை மோனைக்காக ஆங்கில சொற்களை எடுத்தாளுவார், வைரமுத்து திரைப்படப் பாடல்களில் அதைச் செய்வார். இளமை என்பது பருவமே இல்லை அது மனம் சார்ந்த அகப்பொருள்.. அது என்றும் இருப்பது இதை நான் வாலியின் கவிதைகளை வாசிக்கும் பொழுது அவருடைய எழுத்தின் துள்ளல்கள் சொல்லிக் கொடுத்த பாடம். சில ஆபாசபாடல்களை எழுதி இருந்தாலும் என் ஆசாபாசத்துக்குள் என்றுமே இருப்பவர் கவிஞர் வாலி. கற்பனை என்ற விடயத்தில் எழுதும் பொழுது அது கவிதையானாலும் சரி ...கதை ஆனாலும் சரி அதை எழுதுபவரின் கற்பனை என்ற இடத்தில் நிறுத்திப் பார்ப்பது போதும், அதை தாண்டி இப்படி கீழ்தரமாக எழுதுபவரும் (ஒரு சிலர் தவிர்த்து) கீழ்தரமான ஆளாக இருப்பார் என்று அதீதமான கற்பனைகள் அவசியமற்றது என்றே சொல்வேன். ஏனென்றால் ரொம்பவுமே 'பாசிட்டீவ் திங்' எழுத்தாளர்களுக்கு இருந்தால் எந்த அவலத்தையும் எழுத்தில் கொண்டுவரமுடியாத கட்டுப்பாட்டை அது அவனுக்கு விதித்துவிடும்.

சொல்லவருவது இதுதான் கவிதையோ, கதையோ அதில் சொல்லவருபவை விமர்சனத்துக்கு வரலாம் ஆனால் அதை சொல்பவரின் மனமோ அல்லது அவரது தனிப்பட்ட குணமாக அவரது ஆக்கத்தை விமர்சனமாக்கக் கூடாது. 'எப்படி எப்படி...சமைஞ்சது எப்படி' என்று வாலி எழுதினால், அது அந்தப்படத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட சிக்சுவேசனுக்காக எழுதப்பட்ட பாடல், இயக்குனரின் விருப்பத்திற்காக எழுதப்பட்ட பாடல் என்று கொள்வது பொருத்தமாக இருக்கும். சுயவிருப்பங்களும் கற்பனையில் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும் அத்தகைய சுயவிருப்பத்தை ஒருவர் எழுதும் போது எல்லோரைப்போலவும் அவர்களும் சமூக பொருப்புணர்வுடன்தான் செயல்படுவார்கள் என்பதையும் நாம் நம்ப வேண்டும். விமர்சனமே இல்லாமல் ஒன்று எழுதவேண்டுமென்றால் அவை 'சுற்றுலா சென்று வந்ததைப்பற்றி சிறு குறிப்பு வரைக' என்று ஆசிரியர் தரும் அசைன்மெண்டுக்கு எழுதப்படும் கட்டுரைகள் மட்டுமே.

பதிவுலகம் போன்ற ஊடகத்தில் 'பாசிட்டிவ் திங்கிங்' என்ற எவரும் அறிவுறுத்தினால் அவர் பரிதாபத்துக்கு உரியவர்தான். குப்பனும் சுப்பனும் பதிவு எழுத வந்தால் அவர்களுக்கு எழுத்து வரமால் போகலாம், பொது இடத்தில் எப்படி பேசுவது என்று தெரியாமல் போகலாம், ஆனால் அவர்களுக்கு இருக்கும் கருத்தை அவர்கள் மொழியில் மட்டுமே அவர்களால் வெளிப்படுத்த முடியும் என்பதைப் புரிந்து கொண்டால், பதிவுலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எல்லைகள் உடைந்து ப்ரபஞ்சம் போல விரிந்து இருக்கும். முகம் சுளிக்க வைக்கும் ஆபாசங்கள் எப்பொழுதும் நம்மை சுற்றி நடப்பவையே, காதில் விழுந்தாலும் அவற்றில் நாம் கவனம் செலுத்துவதில்லை. பொருட்படுத்துவதில்லை. இணையத்திலும் இதே நிலையை வைத்துக் கொண்டால் போதும் அவரவர் எண்ணத்தை எழுதுவதற்கு வரும் எதிர்வினை ஆபாசங்கள் குறித்து ஐயப்படத்தேவை இல்லை.

புனிதர்பட்டம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் போது, நம்மை நம் செயல்களை புனிதமாக நினைத்து அல்லது முற்றிலும் மறந்துவிட்டு மற்றவர்கள் எல்லோரும் குறையுடவர்கள் போலவும் அவர்கள் எல்லோரும் அபத்தமாக நடந்து கொள்பவர்கள் என்று தெரிவது நம் மனவியாதியே அன்றி வேறொன்றும் இல்லை. அதற்காக கருத்துக்கு எதிர்கருத்து தேவை இல்லை என்ற சொல்லவரவில்லை. அவரவர் எண்ணத்தில் அவரவர் அறிந்துள்ள எல்லைக் குட்பட்டே எழுதுகிறார்கள் என்று புரிந்து கொண்டு மறுமொழிய முன்வரவேண்டும்.

பதிவுக்கும் தலைப்புக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது... என்ன செய்ய ? மொக்கைப் போடலாம் என்று எழுத ஆரம்பித்தேன்... மொக்கைப் போட விசயம் கிடைக்காமல் திண்டாடி திண்டாடி ... கடைசியில் சீரியஸ் ஆகிவிட்டது. :)))

9 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

Ada pavame!

//மொக்கைப் போடலாம் என்று எழுத ஆரம்பித்தேன்... மொக்கைப் போட விசயம் கிடைக்காமல் திண்டாடி திண்டாடி ... கடைசியில் சீரியஸ் ஆகிவிட்டது. :)))
//

Mokai Pathivu poda Tutuio Pgavum!

Contact Senthazhal Ravi, Bangalore!

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
Ada pavame!

Mokai Pathivu poda Tutuio Pgavum!

Contact Senthazhal Ravi, Bangalore!

9:18 PM, July 15, 2007
//

நான் சிபியிடம் தான் பயிற்சி எடுக்க இருந்தேன். இடம் எல்லாம் புக் ஆகிவிட்டதா ?

பிசியான ஆளு நீர் !
:)

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

//மொக்கைப் போட விசயம் கிடைக்காமல் திண்டாடி திண்டாடி ... கடைசியில் சீரியஸ் ஆகிவிட்டது. :)))
//

கோவி, மொக்கை போட விசயம் கிடைக்கவில்லை என்றா கவலை, விசயமில்லாமல் எழுதுவதுதானே ஓய் மொக்கையே! ஹி ஹி இது ஒரு பின்னூட்ட மொக்கைப் பயிற்சி.


//Mokai Pathivu poda Tutuio Pgavum!
Contact Senthazhal Ravi, Bangalore!
//

ஏனையா சிபியாரே, தாங்கள் எழுதுவதெல்லாம் உலகத்தரம் வாய்ந்த கட்டுரைகளாக்கும்?:)))

வாசகன் சொன்னது…

கடைசிப் பத்தி மொக்கை நீங்கலாக விவாதிக்கலாம். எனவே, கடைசிப்பத்தியை நீங்களாக நீக்கிவிடுங்கள்.

அப்புறம் விவாதிக்கலாம்,
சினிமா பாடலாசிரியர்களுக்கு சமூக பொறுப்பு வேணுமா? வேணாமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி, மொக்கை போட விசயம் கிடைக்கவில்லை என்றா கவலை, விசயமில்லாமல் எழுதுவதுதானே ஓய் மொக்கையே! ஹி ஹி இது ஒரு பின்னூட்ட மொக்கைப் பயிற்சி.//


சரா,

சரியாச் சொன்னிங்க... விசயமே இல்லாமல் எழுதத் தெரியும் அதை மொக்கை ஆக்குவது கைவந்த கலை, இன்னும் பயிற்சி கிடைக்கவில்லை.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வாசகன் said...
கடைசிப் பத்தி மொக்கை நீங்கலாக விவாதிக்கலாம். எனவே, கடைசிப்பத்தியை நீங்களாக நீக்கிவிடுங்கள்.

அப்புறம் விவாதிக்கலாம்,
சினிமா பாடலாசிரியர்களுக்கு சமூக பொறுப்பு வேணுமா? வேணாமா?
//

வாசகன்,

கசப்பு மருந்தை வாழைப்பழத்திற்குள் வைத்து தருவார்களாமே ? கடைசி பகுதி வாழைப்பழம் !
:)

நாமக்கல் சிபி சொன்னது…

//ஏனையா சிபியாரே, தாங்கள் எழுதுவதெல்லாம் உலகத்தரம் வாய்ந்த கட்டுரைகளாக்கும்?:))) //

Inge Seat Illai Sara! Thats Why I directed him to Blore!

And moreover he as to learn from there, and write an Entrance Exam To Join here!

:)

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

//Inge Seat Illai Sara! Thats Why I directed him to Blore!//

என்ன திடீர்னு பீட்டர், கலப்பை வேலை செய்யலையா, இல்லை விவ் ஆட்டயப் போட்டுட்டாரா?

//And moreover he as to learn from there, and write an Entrance Exam To Join here//

உம்ம என்ட்ரன்ஸ் பத்தி நேக்குத் தெரியாது, ஆனால் அங்கே சேரவேண்டுமெனில்...

1. நாய் கடித்திருக்க வேண்டும்,
2. மலையாளம் தெரிந்திருக்க வேண்டும்
(சரிதானே ரவி?)

கோவி.கண்ணன் சொன்னது…

//And moreover he as to learn from there, and write an Entrance Exam To Join here!

:) //

சிபியாரே,

மொக்கையில் entrance பெயில் என்றால் என்ன ? சின்ன பொருளாக புரிந்துவிட்டால் பெயிலா ?

விளக்குவீர்

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்