பின்பற்றுபவர்கள்

20 ஜூலை, 2007

தாழ்த்தி உயர்த்திச் சொல்லுதல் மட்டும் பாவமா ? பகுதி 2

இந்த நாட்டில் தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை புனிதராக காட்ட முயன்று கொண்டிருக்கும் வேளையில், திறந்த புத்தகமாக அனைத்தையும் எழுதிவைத்த ஒரு உத்தமர் காந்தியை நாகூசாமல் விமர்சித்திக் கொண்டிருக்கும் வேளையில் பாரதியின் கவிதை வரிகளில் ஐயம் தெரிவிப்பவர்கள் குறித்து 'போற்ற வேண்டிய அவசியம் இல்லை, தூற்றாது இருத்தல் நலம்' என்று சொல்ல வருகிறார்கள். தமிழ் கவிஞர், புரட்சிவரிகளுக்கு சொந்தக்காரார் என்று நன்நம்பிக்கையில் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழை செம்மொழியாக கண்டுகொண்டு, தமிழ் வடமொழியின் துணை இன்றி தனித்தியங்கும் செம்மொழி என்றும் வடமொழி எனப்படும் சமஸ்கிரதம் தேவபாடையல்ல, அது கிரேக்க மொழியில் இருந்து பிரிந்த கிளைமொழி என்று ஆதாரங்களுடன் விளக்கிய ஐயு போப் ஐயர் அவர்கள் கண்டு சொல்லிய, உண்மைகளை சகித்துக் கொள்ள முடியாமல் கிறித்துவ மிசனரி மற்றும் ஆங்கிலேயனின் கைக்கூலி என்று பலர் தூற்றியபோது.... பாரதி பற்று கொண்ட தமிழார்வலர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.


புனிதராகவே வாழ்ந்து புனிதராகவே போற்றப்படும் அன்னை தெராசவை... கிறித்துவராக மட்டுமே பார்த்து 'தொழுநோயாளிக்கு சேவை செய்வதாகச் சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் தானே..' என்று இந்துத்துவ வாதிகளால் வலைப்பக்கத்தில் தூற்றப்பட்டத்தையும் பார்த்துவந்தோம்.

தேசியம்... தேசியம்... என்று பேசி மாநில மக்களின் குரல் வளையை அறுத்து கொழித்து வந்த தேசியவாத கட்சிகளை தமிழ்நாட்டைவிட்டு துறத்தி சாதி ... மதவாதிகளின் உயர்வகுப்பு மனப்பாண்மையை கேலிக் குறியாக்கி, சுயமாரியாதையின் மாண்பை தமிழருக்கு ஊட்டிய தமிழகத்தில் தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் பெரியாரை 'மாமா' என்று காழ்புணர்வை காட்டி இழித்து கூறியும், சாதி என்பதே கொடுமையானதாக அறிவித்து அதற்கு எதிராக போராடிய பெரியாரை 'இராமசாமி நாயக்கர்' என்று சாதிப் பெயரால் அடையாளப்படுத்த முயலும் 'இழி பிறவிகளுக்கு' எதிராக இதே தமிழார்வளர்கள் குறைந்த அளவுக்கு கண்டனமாவது தெரிவித்தார்களா ? என்பதெ கேள்விக்குறியுடன் தான் நிற்கிறது.

இன்னும் சொல்லிக் கொண்டே போக முடியும்....

பாரதி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா ? அப்படி விமர்சனம் செய்வதால் அவர் பற்றாளர்கள் பலகீனமானவர்கள், பாரதியை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்களா ? பின் ஏன் பாரதியைப் பற்றிச் சொன்னால் கொதித்து எழுகிறார்கள் ?. இங்கு பாரதியே வேண்டாம் என்றதை அவனுக்கு ஆக்கி அவனையும் சாதி பிரதிநிதியாக்க முயல்வது என்பதும் மறைமுகமாகவே நடக்கிறது. 'பாரதி எங்கள் சாதிக்காரன்...சாதி ஒழிப்புக்குப் போராடி இருக்கிறான்...என்பது கூட அவன் நோக்கத்தையே கேலியாக்கும் செயல் தானே ?' இந்த அளவுக்கெல்லாம் எவரும் பாரதியை அவமானப்படுத்த முடியாது...இவர்களின் செயலால் அடுத்த தலைமுறைக்கு பாரதி ஒரு 'பார்பன கவி' என அடையாளமாக்கப் பட்டுவிடுவான்.
பாரதியின் தனிமனித செயல்களின் உயர்வை, திறமையை சாதியின் அடையாளமாகவும், சாதியின் புகழாகவும் காட்டமுயல்பவர்களுக்கு எனது கண்டனங்கள்.

ஒருவர் சொல்லிய கருத்துக்களை வேறுறொரு காலத்தில் ஆராய்ந்தால் காலத்துக்கு பொருந்தாது என்பது ஒரு விதப் புரிதல். மற்றொன்று அவர் ஒரு கருத்தை எந்த சூழலில் சொன்னார் என்பதைப் புரிந்து கொண்டால் மட்டுமே அந்த கருத்தை சரியா ? தவறா ? என்று சொல்ல முடியும்.

'அச்சமில்லை அச்சமில்லை' முரசு கொட்டிய பாரதி ஏன் பின்னாளில் வெள்ளைக் காரனிடம் மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்துவிட்டு சிறையில் இருந்து மீள முயன்றான் ?

புத்தக வெளியீட்டில் சிக்கலாகி.... பல பிரச்சனைகளை சந்தித்த போது....'ஒளிபடைத்த கண்ணினாய் வா வா, உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா' - தனக்கே சொல்லிக் கொள்ளாமல் ...கஞ்சா அபினுக்கு அடிமையாக சாவை சந்தித்தது எவ்வாறு ? நாமெல்லாம் யானை மிதித்துக் கொன்றதாக மட்டுமே வாசித்திருக்கிறோம். பாரதி போதை அடிமையானதையும் அதிலிருந்து மீளாமலேயே சாவை சந்தித்தார் என்றும் வரலாற்றில் கருப்புப் பக்கங்களாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை எவரும் மறுக்க இயலாது.

- இதற்கெல்லாம் கூட தெளிவான விளங்கங்களை பாரதி பற்றாளர்கள் கொடுக்கலாம்...எனக்குத் தேவை இல்லை...எனெனில் அன்று அவன் இருந்த சூழலை நான் புரிந்து கொண்டுள்ளதால் அவை முரண்பாடுகள் போல தெரியவில்லை.

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் -- இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும் -- உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.
- பாரதியின் வரிகள்

இங்கே நந்தனரின் உயர்வைச் சொல்ல ஏன் 'பார்பன்' என்பதைப் அடைமொழியாக கொள்ளவேண்டும் ?

பாரதியைப் பொறுத்தவரை ''ப்ராமனன்", என்பவன் உயர்ந்த பண்புடையவன், பார்பான்' என்பவன் உயர்ந்தவன் என்ற பொருளில் சொல்கிறார் என்று தான் எனக்கு புரிகிறது. எனவே நந்தனுக்கு 'பார்பனன்' பட்டம் கொடுத்து அவனைப் போன்று ஒரு பார்பன் நாட்டில் இல்லை என்கிறார். நந்தனைப் போல் ஒரு பார்பான் இல்லை என்பதை 'பார்னரில் ஒருவர் கூட நந்தன் போல் இல்லை' என பொருள் கொள்ள முடியாது... எனெனில் பாரதி திருஞானசம்பந்தர் முதல் பல பக்தியில் சிறந்த பார்பனர்களை பாரதி அறிந்து வைத்திருக்கிறார்.

பார்பனரை உயர்வாக நினைத்தாலும் அந்த காலத்தில் பார்பனர்கள் தெண்டச்சோறு உண்டார்கள் என்று மனம் வெதும்பியும், பார்பனர்களின் மனுநீதியில் பேதம் தவறானது என்றும் சாடி இருக்கிறார்.

"சூத்திரனுக்கு ஓர் நீதி, தண்டச்சோறு உண்ணும் பார்பனுக்கு ஓர் நீதி"

நீதிகள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கவேண்டும் என்றும் பார்பனர் உழைத்து சாப்பிடவேண்டும் என்று சாடி இருக்கிறார் என்று தான் எனக்கு புரிகிறது. மேற்கண்ட நந்தானாரைப் போன்று பார்பன் இல்லை என்றதில் 'பார்ப்பான்' என்பதை அவன் பக்தியின் உயர்வாக கிடைத்த தகுதி போன்று சொல்கிறார் என்றும் அவர்களின் நடவடிக்கையை மட்டும் அவருக்கு பிடிக்கவில்லை என்றே புரிந்து கொள்கிறேன். தற்காலத்தில் இசைஞானியை 'நவபிராமனர்' என ஒரு கூட்டம் சொல்ல முயல்வதையும் ஒப்பு நோக்குக.

குலமே இல்லை என்று சொல்லும் பாரதி ஏன் 'பார்ப்பான்' என்ற சொல்லை உயர்வுக்கு 'உவமையாக' சொல்ல வேண்டும். எனக்கு புரியவில்லை. மற்றவர்களுக்கு தெளிவாக புரிந்தால், ஏற்புடையதாக இருந்தால் மகிழ்ச்சி.

என்னுடைய புரிதலில் பாரதி சாதிகளை எதிர்த்திருக்கிறார் என்பதில் எள்ளளவு ஐயமும் இல்லை... நான்கு வருணங்கள் (குலங்கள்) தவறல்ல...அவற்றில் பேதம் மட்டுமே கூடாது என்றும் விரும்பி இருக்க்கிறார் என்று தெரிகிறது.... சாதிகள் வேறு ...குலம் வேறு...சாதிகள் குலத்தின் உட்பிரிவுகள்...

சாதிகள் இல்லையடி பாப்பா - சாதி ஒழிக !
குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் - குலங்களுக்கு இடையே பேதம் பார்காதே
என்று பாரதி சொல்கிறார் என்றே கருதுகிறேன்.

பாரதி சாதியை ஆதரிக்கவில்லை...அதே சமயத்தில் இந்துத்துவா பாணியில் அவர் கருத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார் - இது எனது புரிதல் மட்டுமே.


பகுதி 1

16 கருத்துகள்:

சிவபாலன் சொன்னது…

GK,

இங்கே நீங்க பல கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் எதேனும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கூறி இருட்டடிப்பு நடக்கலாம்.

முதலில் பாரதியை விமர்ச்சிக்க கூடாது என்பதே தவறான பார்வை. அதற்கு காரணம் ஊடகங்கள் மற்றும் பிற சாதனங்கள்.

அதே பெரியாரை வேறுமாதிரி சித்தரித்துவிட்டன. அதனால் தான் அவரைப் பற்றிய விமர்சனம் கண்டுக்கொள்ளாமல் விடப்படுகிறது.

சிவபாலன் சொன்னது…

இன்னொன்றும் சொல்ல மறந்துவிட்டேன். பெரியார் நிறைய பு.பிகளை பந்தாடினார் என்ற எரிச்சலும் கூட

Unknown சொன்னது…

//முதலில் பாரதியை விமர்ச்சிக்க கூடாது என்பதே தவறான பார்வை.//

பாரதியை விமர்சிப்பது தவறல்ல. இத்தகைய விமர்சனங்களின் மூலம் அவர் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படுகிறார் என்பதே கோவி. கண்ணனின் கவலை. நிராகரிக்கப்படுவதற்காகவே இத்தகைய விமர்சனங்கள் வைக்கப்படுவதுபோல் தோன்றுகிறது.

ILA (a) இளா சொன்னது…

//பாரதி போதை அடிமையானதையும் அதிலிருந்து மீளாமலேயே சாவை சந்தித்தார்//

என்னமோ சொல்றீங்க,எங்க பொஸ்தகத்துல வேற மாதிரிதான் சொல்லி குடுத்தாங்க. நான் வேற ஸ்கூலில படிச்சேன், அதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// ILA(a)இளா said...

என்னமோ சொல்றீங்க,எங்க பொஸ்தகத்துல வேற மாதிரிதான் சொல்லி குடுத்தாங்க. நான் வேற ஸ்கூலில படிச்சேன், அதான்.

12:20 PM, July 20, 2007
//

இளா,
நானும் வேற ஸ்கூலில் படித்தாலும் படிக்கிற காலத்தில் நீங்க படித்ததைத்தான் படித்தேன்.
:)

சாலிசம்பர் சொன்னது…

பெரியாரை கேவலமாக பேசுபவர்கள் இனிமேல் சிறிது யோசித்து தான் பேசுவார்கள்.
கோவியாரே , ஆப்பு வலுவா வச்சுட்டீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜாலிஜம்பர் said...
பெரியாரை கேவலமாக பேசுபவர்கள் இனிமேல் சிறிது யோசித்து தான் பேசுவார்கள்.
கோவியாரே , ஆப்பு வலுவா வச்சுட்டீங்க.
//

பாரதி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லுபவர்கள்...அது போல் விமர்சனத்துக்கு அப்பற்பட்டவர்கள் என்று பலரும் சொல்லுபவர்களை நோக்கி எதுவும் பேசமால் இருந்துவிடுவதில்லை.

அதற்காகவே நான் இங்கு பாரதியை விமர்சனம் செய்யவில்லை...இங்கு சொல்ல வந்தது பாரதியார் குறித்த மற்றொரு புரிதல் மட்டுமே...

நன்றி ஜாலி ஜம்பர் அவர்களே

spiritual and siththargal சொன்னது…

barathi had "ganja". The statement has any evidences like somepersons speeches or research works carried out or books, kindly refer, i am unable to write in tamil due to non availbility of tamil scripts here in mypc
thillairaj
bangalore

கோவி.கண்ணன் சொன்னது…

//thillai said...
barathi had "ganja". The statement has any evidences like somepersons speeches or research works carried out or books, kindly refer, i am unable to write in tamil due to non availbility of tamil scripts here in mypc
thillairaj
bangalore
//

பாரதி படத்தில் நாசுக்காக காட்டி இருப்பதாக சொல்கிறார்கள். மற்றபடி சில புத்தகங்களிலும் இருக்கிறது...நேரம் கிடைக்கும் போது ஸ்கேன் பண்ணி போடுகிறேன்.

இதில் அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை. பாரதி அவதாரம் இல்லை...அறிவாளி

கோவி.கண்ணன் சொன்னது…

//thillai said...
barathi had "ganja". The statement has any evidences like somepersons speeches or research works carried out or books, kindly refer, i am unable to write in tamil due to non availbility of tamil scripts here in mypc
thillairaj
bangalore
//

ஆவணப்படத்தில் பாரதியாருக்கு அபின் அருந்தும் பழக்கம் இருந்தது பற்றிய குறிப்பு இடம் பெற்றிருந்தது அனாவசியம் என்று இல. கணேசன் அம்ஷன் குமாரிடம் வருந்தினார். ஆனால் நான் அதில் ஒரு தவறும் இல்லை எனத் தெரிவித்தேன். பாரதியார் போன்ற ஒரு வரைப் பற்றிய தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவது சரிதான்; அபின் அருந்தும் பழக்கம் இருந்ததாலேயே அவரது ஆளுமையோ அவரது பங்களிப்போ பங்கம் அடைந்துவிடாது என்றுசொன்னேன். பொதுவாக நம் மக்களுக்கு எதிர்மறையான விஷயங்கள்தாம் உடனடியாக மனதில் பதிந்துவிடுகின்றன. இப்போதுகூடப் பார்த்தோம் அல்லவா, கலந்துரையாடலில் உத்சாகத்துடன் பேசப்பட்டது எதிர்மறையானவைதாமே, என்றார், இல. கணேசன். - தின்னையில் மலர் மன்னன்

மேலும்...
பாலபாரதியின் பதிவில் வேறு சில செய்திகள்.

தில்லை என்பவர் கேட்டார் என்பதற்காக கொடுக்கப்பட்ட சுட்டி இது

உடன்பிறப்பு சொன்னது…

பாரதியை ஓரளவுக்காக சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் பல மத, சாதி தலைவர்கள் எல்லாம் தேச தலைவர்களாக தான் புத்தகங்களில் அறியப்படுகிறார்கள்

ஜீவி சொன்னது…

'பார்ப்பனன்' என்னும் சொல்லுக்கு
அண்ணல் அம்பேத்கார் அவர்கள்
கொடுக்கும் விளக்கத்தைப் பிரிதொரு
பதிவில் பார்க்கவும். தெரிந்தால், பாரதியைப்புரிந்து கொள்வீர்கள். .உருப்படியான காரியம்,
அண்ணல் அவர்களின் நூலொன்றினைக் காசு கொடுத்து(!)
வாங்கிப் படித்து, புரிந்து, இப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் தெளிதல்.
வீட்டில் அண்ணலின் புத்தகங்களடங்கிய
நூல் நிலையம் ஒன்றினை ஏற்படுத்தி
மற்றவர்களையும் படிக்க வைத்தல்.
அண்ணலின் நூல் ஆளுக்கொன்று
வாங்கிக்கொடுத்தால் மிகச்சுலபமாக
நூல் நிலையம் தொடங்கிவிடலாம்.
இரவுப்பள்ளிகளைத்( இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரை) துவங்கி, நம் பகுதிக்குழந்தைகளுக்கு
பள்ளிப்பாடங்களைப் புரியவைத்தல்.
--இந்த மாதிரியான புனிதச்செயல்களை பல இடங்களிலும்
பலர் செய்துவருவதால் உங்களுக்கும்
பரிந்துரைத்தேன். அதனால் பலன் பல உண்டு. உண்மை. பாரதியும் மகாகவியாக மனத்தில் குடிகொள்வான். சமூகப்புரட்சி செய்ய பலங்கொடுப்பான்.

மாசிலா சொன்னது…

கோவி. கண்ணன், என்ன ஆச்சு உங்களுக்கு? விமரிசிக்கறதுக்கு உரிமை இருக்கிறது, மேலும் கேக்கறதுக்கு ஆள் இல்லை என்பதற்காக இப்படி எல்லாம் அபத்தமாக எழுதுவதா?

அவருடைய காலத்தில் பார்ப்பனா இருந்து கொண்டே கீழ் சாதி மக்களுக்காக குரல் கொடுத்தது மிகப்பெரிய விடயமய்யா! கிரகிக்க வேண்டிய முக்கிய விடயங்களை விட்டு விட்டு சுற்றி இருக்கும் சில்லரை பிரச்சினைகளில் ரொம்பவும் கவனம் செலுத்தி இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது கோ.வி.

கவிஞன் எப்போதுமே கனவுலகத்தில் வாழும் ஒரு பைத்தியக்காரனை போன்றவன். உண்மை உலகத்திற்கும் கனவு உலகத்திற்கும் சரியான வித்தியாசங்களை கண்டுபிடிக்கத் தெரியாத எப்போதுமே காதல் வயப்பட்ட இளைஞர்களை போல் அந்தரத்தில் வாழ்பவன். கண்ணதாசனும் ஒரு பெரிய குடிகாரர் எனபதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இக்காரணத்திலால்தான், பாரதி தன் குடும்பத்தை சரி வர பாதுகாத்து பராமரிக்க தவறி இருப்பார். அவர் அபின் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் உபயோகப் படுத்தியது புரிந்துகொள்ள முடியாத இம்மண் உலகை விட்டு சுதந்திரம் அடையவே. பாண்டிச்சேரி பாரதிதாசன் குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்தானாம். சரக்கு உள்ளே இரங்கினால்தான் கவிதைகள் சுரக்குமாம்.

//இங்கே நந்தனரின் உயர்வைச் சொல்ல ஏன் 'பார்பன்' என்பதைப் அடைமொழியாக கொள்ளவேண்டும் //

நந்தனார் மீது தனக்குள்ள மதிப்பீட்டை வெளிப்படுத்த தான் அறிந்த உயர் பார்ப்பன குலத்தை ஒரு அளவீடாகவே பயன் படுத்தி இருப்பார்.

//பாரதி சாதியை ஆதரிக்கவில்லை...அதே சமயத்தில் இந்துத்துவா பாணியில் அவர் கருத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார் - இது எனது புரிதல் மட்டுமே.// இது சரியான அபத்தம். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடும் கலையோ?

என்னவோ போங்க... ஏதாச்சும் செய்யுங்க...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவி said...
'பார்ப்பனன்' என்னும் சொல்லுக்கு
அண்ணல் அம்பேத்கார் அவர்கள்
கொடுக்கும் விளக்கத்தைப் பிரிதொரு
பதிவில் பார்க்கவும். தெரிந்தால், பாரதியைப்புரிந்து கொள்வீர்கள். .உருப்படியான காரியம்,
அண்ணல் அவர்களின் நூலொன்றினைக் காசு கொடுத்து(!)
வாங்கிப் படித்து, புரிந்து, இப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் தெளிதல்.
வீட்டில் அண்ணலின் புத்தகங்களடங்கிய
நூல் நிலையம் ஒன்றினை ஏற்படுத்தி
மற்றவர்களையும் படிக்க வைத்தல்.
அண்ணலின் நூல் ஆளுக்கொன்று
வாங்கிக்கொடுத்தால் மிகச்சுலபமாக
நூல் நிலையம் தொடங்கிவிடலாம்.
இரவுப்பள்ளிகளைத்( இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரை) துவங்கி, நம் பகுதிக்குழந்தைகளுக்கு
பள்ளிப்பாடங்களைப் புரியவைத்தல்.
--இந்த மாதிரியான புனிதச்செயல்களை பல இடங்களிலும்
பலர் செய்துவருவதால் உங்களுக்கும்
பரிந்துரைத்தேன். அதனால் பலன் பல உண்டு. உண்மை. பாரதியும் மகாகவியாக மனத்தில் குடிகொள்வான். சமூகப்புரட்சி செய்ய பலங்கொடுப்பான்.

//

ஜீவி,

இன்னும் கூட சொல்லலாம்...பீமராவ் என்ற தன் பெயரை துறந்து பார்பனிய பற்றினால் அம்பேத்கார் என்ற நாமகரணத்தை சூட்டிக் கொண்டார் என்று அம்பேத்கார் மீது பழியை போட முடியும். சூத்திரன் காலில் இருந்து பிறந்தான் அதனால் நாம் இறைவனின் காலில் விழுகிறோம் என்று திரித்து கூறுகிறார்கள். சூத்திரன் காலில் எவன் விழுகிறான். காஞ்சிக்கு சென்று பாருங்கள் ஜெ மற்றும் அவர்கள் கூட்டத்தை தவிட மற்றவர்கள் தரையில் தான் உட்காரவேண்டும். தத்துவ புத்தகங்கள், புராணம் இதிகாசம் எல்லாம் பெயரளவுக்கு புனிதம் என்று புரிந்து கொண்டு புறக்கணிக்கப்படும் போது நிஜமாகவே சமூகம் விழித்துக் கொள்ளூம். ஏனென்றால் அதை உயர்வென்று சொல்லுபவர்கள் செய்யும் கீழான செயல்களால் தத்துவ புத்தகங்கள், புராணம் இதிகாசம் எல்லாம் பெயரளவுக்கு வெறும் பெயரளவுக்கே என்பது கண்கூடு. நானும் 'நூல்களை' அறிந்து வைத்திருக்கிறேன் நண்பரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//மாசிலா said...
கோவி. கண்ணன், என்ன ஆச்சு உங்களுக்கு? விமரிசிக்கறதுக்கு உரிமை இருக்கிறது, மேலும் கேக்கறதுக்கு ஆள் இல்லை என்பதற்காக இப்படி எல்லாம் அபத்தமாக எழுதுவதா?

அவருடைய காலத்தில் பார்ப்பனா இருந்து கொண்டே கீழ் சாதி மக்களுக்காக குரல் கொடுத்தது மிகப்பெரிய விடயமய்யா! கிரகிக்க வேண்டிய முக்கிய விடயங்களை விட்டு விட்டு சுற்றி இருக்கும் சில்லரை பிரச்சினைகளில் ரொம்பவும் கவனம் செலுத்தி இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது கோ.வி.

கவிஞன் எப்போதுமே கனவுலகத்தில் வாழும் ஒரு பைத்தியக்காரனை போன்றவன். உண்மை உலகத்திற்கும் கனவு உலகத்திற்கும் சரியான வித்தியாசங்களை கண்டுபிடிக்கத் தெரியாத எப்போதுமே காதல் வயப்பட்ட இளைஞர்களை போல் அந்தரத்தில் வாழ்பவன். கண்ணதாசனும் ஒரு பெரிய குடிகாரர் எனபதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இக்காரணத்திலால்தான், பாரதி தன் குடும்பத்தை சரி வர பாதுகாத்து பராமரிக்க தவறி இருப்பார். அவர் அபின் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் உபயோகப் படுத்தியது புரிந்துகொள்ள முடியாத இம்மண் உலகை விட்டு சுதந்திரம் அடையவே. பாண்டிச்சேரி பாரதிதாசன் குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்தானாம். சரக்கு உள்ளே இரங்கினால்தான் கவிதைகள் சுரக்குமாம்.

இது சரியான அபத்தம். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடும் கலையோ?

//

//நந்தனார் மீது தனக்குள்ள மதிப்பீட்டை வெளிப்படுத்த தான் அறிந்த உயர் பார்ப்பன குலத்தை ஒரு அளவீடாகவே பயன் படுத்தி இருப்பார். //

மாசிலா,

பாரதி சொல்லிவிட்டான் என்பதற்காக அவன் சொல்வதெல்லாம் சரி என்று பற்றாளர் நீங்கள் வேண்டுமானால் 'பார்பனன்' என்பதை உயர்வென்று பெருமையாக கொள்ளுங்கள் யார் வேண்டாம் என்றது ?

// இது சரியான அபத்தம். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடும் கலையோ? //

பத்திரிக்கை துறை கையில் இருக்கிறதே என்று வரலாற்றை திரித்த கதைகளை நானும் பார்த்திருக்கிறேன் நண்பரே...அங்கு மொட்டை தலையோ முழங்காலோ இருக்காது... காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் என் போன்ற முட்டாள்கள் தான் இருந்திருக்கிறார்கள்

பாரதியாரோ, கண்ணதாசனோ அவர்களின் தனிப்பட்ட பழக்கவழக்கத்தை நான் விமர்சிக்கவில்லை. பொது வாழ்க்கையில் பேசப்படும் பாரதியின் கவிதைகள் குறித்து தான் என்கருத்து.

//அவருடைய காலத்தில் பார்ப்பனா இருந்து கொண்டே கீழ் சாதி மக்களுக்காக குரல் கொடுத்தது மிகப்பெரிய விடயமய்யா! கிரகிக்க வேண்டிய முக்கிய விடயங்களை விட்டு விட்டு சுற்றி இருக்கும் சில்லரை பிரச்சினைகளில் ரொம்பவும் கவனம் செலுத்தி இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது கோ.வி. //

இதெல்லாம் எனக்கும் தெரியும் மாசிலா...பாரதி வாழ்ந்தகாலத்தில் அவருடைய சாதியை சேர்ந்தவர்களே அவருக்கு இன்னல் கொடுத்தார்கள் என்று நன்கு தெரியும். பாரதியின் புகழை சாதியின் புகழாக மாற்ற முயறிசித்து வெளியில் சொல்வதைத்தான் நான் எதிர்கிறேன். பாரதியின் மீது குறை சொல்வதை நான் சாதியின் மீது சொல்லும் தாக்குதலாக நினைத்து ஏன் வரிந்து கட்டவேண்டும்.

நான் சொல்வது வேறு...உங்களுக்கு சாதிக்கும், குலத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை என்றால் மீண்டும் கட்டுரையை படிங்கள்.

Unknown சொன்னது…

இந்தி பேசும் OBC 'தமிழர்கள்'!!!!

பார்ப்பான் ன்னு சொல்லறவங்க இந்தி ஜாதிகளுக்கு தமிழகத்துல இடஒதுக்கீடு கொடுக்கறத நியாப்படுத்தறாங்க!!!

தமிழ் நாட்டுல பீஹார் போன்ற மாழிலத்திலிந்து சாலை போன்ற பணிக்கு வந்து பெருகிவறாங்க..

பார்ப்பான் பார்ப்பான் கூவுற நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக இந்தி இந்திக்காரங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கறது …அதுக்கு என்ன சொல்லுவீங்க!!!

தமிழ் பேசற பார்ப்பான் இல்லேனா தமிழ்நாடு நல்லா இருக்கும் சொல்லிறீங்க….இந்தி பேசுறவங்க வந்தா தமிழ்நாடு உருப்பிடுமோ??
உன்ன வந்து ஆட்டிப்படைக்கிறவன் பாப்பான் இல்ல…இந்திக்கார..10 வருஷம் பொறுங்க…மஹாரஷ்டிரா ல நடக்குறுது வரும் தமிழ் நாட்டில…அப்பவும் பாப்பான் பாப்பான் ன்னு கூவினா, உன்ன இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க இந்திக்காரங்க… தமிழ் ன்னு சொல்லி இடஒதுக்கீடு வாங்கிடுவாங்க…

இப்பவே 10 இந்தி ஜாதிகள் தமிழ் நாட்டுல இடஒதுக்கீடு வாங்கறாங்க…

உத்தப்புரத்து பாப்பான் வரல…இரட்டை தம்ளர் முறைல பார்ப்பான் வரல…’தமிழ்’ கட்சிக ஏற்பாடு…இந்திகாரன் கூப்பிட்டு வேல தர்றாங்க நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக…Madras Airportக்கு போய் பார்!!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்