பின்பற்றுபவர்கள்

16 ஜூன், 2007

தமிழக நடிகர்களால் ஒரு போதும் சூப்பர் ஸ்டார் ஆகமுடியாது !

மனித மனங்களில் அழுக்கு சேர்ந்துவிட்டாலும், நேர்மையை மனது ரசிக்கவே செய்கிறது, இது எவ்வளவுதான் கெட்டவனாக இருந்தாலும் அவர்களுக்கும் பொருந்தும், ரவுடிகள் கூட தொழில் தர்மம் என்று நேர்மை குறித்து பேசுவார்கள். தமிழன் கலைக்கு முதன்மைத்துவம் கொடுப்பவன். கலைகள் இல்லாமல் தமிழன் வாழ்ந்ததே இல்லை. வில்லுப்பாட்டு, பொம்மலாட்டாம், நாடக வரிசையில் கலைகளின் உச்சத்தை தொட்டு இருக்கிறது திரைப்படங்கள் இன்றைக்கு மற்றவை அழிவதற்கு அதுவே காரணம். சினிமா இல்லை என்றால் பொழுது போக்கே இல்லை என்ற ஒரு மாய பிம்பம் தோற்றுவிக்கப்பட்டு தொலைக்காட்சி ஊடகங்களும் திரையிலேயே முகம் புதைத்திருப்பதற்கு இதுவே காரணம்.

ஒரு படம் வெற்றி அடைந்தால் அந்த நடிகரும், இயக்குனரும் 90 விழுக்காடு தமிழர்களுக்கும் அறிமுகமானவர்கள் ஆகின்றனர். திரைப்படங்களில் பெரும்பாலும் மிகைப்படுத்துதல் இருந்தாலும் பாத்திரபடைப்புகள் மூலம் திரையுலகம் தொடர்ந்து புகழடைந்தே வருகிறது. நிஜவாழ்கையில் ஏமாற்றம், துக்கம்,
மகிழ்ச்சி என தனக்கு நேர்ந்த அனைத்தையும் திரையின் மூலம் தெரியவரும் போது மனிதன் நெகிழ்ந்து போகிறான். பொழுதுபோக்கு என்ற ஒரு ஊடகம் வாழ்வாதாரமாக உருவகப்பட்டு போவதற்கு இதுவே மூல காரணம்.

இங்கு தான் படத்தின் பாத்திரம் பரிணமிக்கிறது. பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும், அல்லது பணக்காரர்களின் திமிரை அடக்கவேண்டும் என்ற ஏழைகளின் ஏக்கத்தை திரைப்படத்தின் கதாநாயக பாத்திரம் தீர்த்து வைக்கும் போது அதில் அந்தபாத்திரத்தின் தாக்கம் அந்த பாத்திரத்தின் புகழாக விஷ்வரூபம் எடுக்கிறது, இதைத்தான் இளம் நடிகர்கள் கூட தனக்கென ஒரு 'இமேஜ்' இருப்பதாக சொல்கிறார்கள். இதுபோன்ற நடுத்தர வர்கத்தின் ஏக்கமான ஊழலற்ற நாடு, நிம்மதியான வாழ்க்கை என்ற ஏக்கத்தையும் ஒரு படம் பிரதிபலிக்கிறது.

இதைத்தவிர நேர்மை, உண்மை என்ற பெயரில் எதார்த்த திரைப்படங்களும் நன்றாக ரசிக்கப்படுகிறது, உதாரணம் சேது, பருத்திவீரன் போன்ற படங்கள்.

பெரும்பாலும் நமது தமிழ்சினிமாவின் ஹீரோக்கள் என்றால் அது நேர்மையாகவும், நீதிக்கு போராடுபவனாகத்தான் காட்டப்படும். நெகடிவ் பாத்திரங்களை வளரும் நடிகர்களும் தேர்ந்தெடுப்பது மிக மிக அரிதே.

திட்டமிடுதல் இல்லாவிட்டாலும் ஒரு 10 வருட தமிழ்சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கும் நன்கு அறிமுகமான நடிகர் என்றால் அவர் மேலும் வளருவார் என்ற சூழல் எம்ஜிஆர் காலத்துக்கு பிறகு மிகவும் குறைவு. அதாவது ரசிகர் வெறியர் ஆகும் அளவிற்கு வளரும் நடிகர்கள் மிக மிக குறைவு. நலல் நடிப்பில், நகைச்சுவையில், வித்தியாசமான பாத்திரங்களில் சத்தியராஜ் போன்றவர்கள் தொடர்ந்து நல்ல நடிகர்களாக இருக்கிறார்கள் அன்றி சூப்பர் அந்தஸ்தெல்லாம் எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பது இல்லை. கமல் படங்களில் நடிப்பும் எதார்த்தமும் இருப்பதால் அவருடைய மார்கெட் சரிவை சந்தித்தது இல்லை என்று கூறலாம்.

சினிமாவில் ஒருவர் சூப்பர் ஸ்டார் அந்தெஸ்துக்கு உயரவேண்டுமென்றால் நல்ல நடிப்பு மட்டும் போதுமா ?
நிச்சயமாக பத்தாது. ஏழைகளின், நடுத்தரவர்கத்தினரின் ஏக்கங்கள் தீர்க்கப்பட வேண்டும். அதை எந்த நடிகர் செய்தாலும் ஏற்றுக் கொள்வார்களா ? இளைய நடிகர்களாக விஜய், அஜித் போன்றவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒருநடிகர் சூப்பர் ஸ்டாராக உயர்வு பெற முக்கியமாக இருக்க வேண்டியது அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற ஒரு தோற்றம் இருக்கவேண்டும். இந்த தோற்றம் எம்ஜிஆருக்கும், ரஜினிக்கும் இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் தமிழர்களாக பிறக்கவில்லை. தமிழகத்தின் எந்த சாதியையும் சேர்ந்தவர்கள் இல்லை. அதனால் இவர்களை பொதுவானவராக எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் திறமை இல்லை என்று சொல்லமுடியாது. அதுவும் இருக்கிறது. சமுகத்தில் எவை எவையெல்லாம் எதிர்பார்க்கப் படுகிறதோ அவையெல்லாம் இவர்கள் பாத்திரத்தின் மூலம் திரையில் தீர்த்து வைக்கபடுகிறது. தங்களுக்கு ரசிகர் கூட்டம் இருந்தாலும், படம் தங்கள் பெயருக்காக ஓடுவதாக தயாரிப்பாளரிடம் சொனனலும், வயது குறைந்த நாயகிகளுடன் ஜோடி போட்டு கொள்வதற்கு முக்கிய காரணம், ரசிகன். ரசிகரகளுக்கு கவர்ச்சியில் பஞ்சம் வைக்கக் கூடாது என்று அக்கரையுடனே அவ்வாறு செயல்படுகின்றனர். குறிப்பாக ரஜினியில் கடந்த 10 படத்தில், குஷ்பு,மீனா,ரோஜா,சவுந்தர்யா போன்றவர்களுக்கு இருபடங்களுக்கு மேல் வாய்பு வழங்கப்படவில்லை.

எம்ஜிஆரைவிட ரஜினிக்கு ரசிகர்கள் மிகுந்து இருப்பதற்கு காரணம் வெளிப்படையான நேர்மையாக ரஜினி திரையில் சிகெரெட் பிடிப்பதும், மது அருந்துவதும் பார்க்கப்படுகிறது. இவர் எதையும் மறைப்பதில்லை என்ற ஒரு தோற்றமும் உருவாகிவிட்டதால் ரஜினியின் கொடி உயரமாகவே பறக்கிறது.

தமிழக மற்ற நடிகர்கள் சூப்பர் ஸ்டார் என்னும் மாய தோற்றத்தை பெற முடியாது. 10 - 15 வருடங்களிலேயே எந்த நடிகரின் சாதியும் பரவலாக தெரிந்துவிடும். சமூகத்தின் சாதிபற்று குறிப்பிட்ட அளவு வளர்ச்சியை தாண்டி மற்ற நடிகர்களை வளர்க்க முன்வராது. நல்ல நடிகர் என்று எவராலும் பெயர் எடுக்க முடியும்! ஆனால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு ஒரு நடிகர் உயர தமிழர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கவேண்டும். ரஜினியும் எம்ஜிஆரும் தமிழர்களைப் பொருத்தவரை பொதுவானவர்கள். இதைப் புரிந்து கொண்ட ரஜினி 'தமிழ்நாட்டுக்கு சொந்தக்காரன், தமிழ்பாலும், தமிழைத்தேனாகவும் குடிப்பதாக' பாட்டுப் பாடி வெற்றிகரமாக வலம் வருகிறார். வயதானாலும் இவர்களை ரசிகர்கள் விரும்புவதற்கு இதுமட்டும் தான் காரணம்.


இன்னும் எழுதலாம் பதிவிம் நீளம் அயற்சியை ஏற்படுத்தும்.


இது தொடர்பில் முன்பு எழுதியது : புரட்சித் தலைவர், சூப்பர் ஸ்டார் எங்கள் ஜாதி ...!

13 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//
சீக்கிரமே உன் பொட்டி படுக்கை எல்லாம் தயார் செய்யவும்

உன்ன மாதிரி கிறுக்குகளை எல்லாம் சிங்கையில் அதுவும் நீ வேலை பார்க்கும் இடத்தில் அனுமதிக்க மாட்டார்களாம்

//

அரிப்பெடுத்த அனானி,

பெட்டர் லக் நெக்ஸ்டைம் !

'பதிவை ஒழுங்கபடிடா வெண்ணை!' என்று அறிவுறுத்துகிறேன்

Unknown சொன்னது…

யாருடா நீ பேமானி அம்மாம் தெகிரியம் இருந்தா நேரா வாடா வெண்ணை அடரஸ் வேனுமா ஜிகே வூட்டு போட்டோ வேனுமானாலும் நான் தரேன் போய் கிழிச்சு பாரு

VSK சொன்னது…

புதிய கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்.

உண்மையாகக் கூட இருக்கலாம்.

சிவபாலன் சொன்னது…

GK,

நல்ல பதிவு! நல்ல கருத்து. ஏற்புடையதே.

உண்மையில் அந்த அனானி பதிவை முழுமையாக படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ம்ம்ம்ம்

கோவி.கண்ணன் சொன்னது…

//பெமானி சீக்கிரமே எல்லாவற்றையும் தயார் செய்யவும்..உன்னை பற்றி ஏற்கனவே உன் வேலை இடத்துக்கு மடல் செய்தற்க்கு வந்த பதில் உன்னை கண்காணித்து கொண்டு இருப்பதாகவும் சந்தேகம் இருப்பதாகவும் ..//

சொறிநாய்க்கு பிறந்தவனே...உன்னால் ஒரு மயிரையும் புடுங்க முடியாதுடா. முடிந்தால் உதிர்ந்து கிடப்பதை பொறுக்கிக் கொள்.

SurveySan சொன்னது…

///சொறிநாய்க்கு பிறந்தவனே...உன்னால் ஒரு.....//////////

:))))))))) repeatuuuu!

கோவி.கண்ணன் சொன்னது…

ஒரு அனானி நாய் தன் குடும்பத்தார் "போய் வந்த" இடங்களையும் அனுபவங்களையும் பற்றி இங்கு கதை எழுதுவதால்...
சொறிநாயின் பைத்தியம் முற்றிவிட்டதாக தெரிகிறது..அந்த நாய் முனிசிபாலிட்டி வண்டி பிடித்து செல்லும் வரை அனானி பெட்டி தற்காலிகமாக மூடப்படுகிறது

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

உண்மை!
எம் ஜி ஆர், ரஜனி தமிழக சாதிக்கு அப்பாற்பட்டவர்களாக தான் கணிக்கப்படுகிறார்கள்.
மிக நன்கு ஆய்ந்துள்ளீர்கள்.

Ravi சொன்னது…

சிந்திக்க வேன்டிய விஷயம். நல்ல ஆராய்ச்சி.

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
புதிய கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்.

உண்மையாகக் கூட இருக்கலாம்.
//

எஸ்கே ஐயா,

இதைத்தவிர பெரிய காரணம் இருப்பது போல் தெரியவில்லை.

பாராட்டுக்கு நன்றி

Unknown சொன்னது…

மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவேன்ன்னு அனானி பொட்டிய மூடுனதை அமுக சார்பில் கண்டிக்கிரேன்

கருப்பு சொன்னது…

//ரஜினியும் எம்ஜிஆரும் தமிழர்களைப் பொருத்தவரை பொதுவானவர்கள். இதைப் புரிந்து கொண்ட ரஜினி 'தமிழ்நாட்டுக்கு சொந்தக்காரன், தமிழ்பாலும், தமிழைத்தேனாகவும் குடிப்பதாக' பாட்டுப் பாடி வெற்றிகரமாக வலம் வருகிறார்.//

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் கோவி.கண்ணன்.

மற்றபடி ஏதோ ஒரு திருட்டு நாய் உங்கள் பதிவிலும் வந்து கழிந்து போயிருக்கிறது. பிய்ந்த விளக்குமாறை எடுத்து அடித்துத் துரத்துங்கள்.

மாயக்குரலோன் சொன்னது…

உண்மை! உண்மை! மக்களின் உணர்ச்சிகளோடு நேரடித்தொடர்புடைய திரையில் அவர்களின் ஏக்கங்கள் அந்த திரையில் வரும் நாயகனால் தீரும் பொழுது, அந்நடிகர் ஒரு தீர்க்கதரிசியாக அறியாமையில் சிக்கித் தவிக்கும் மக்களாலும், மற்றவர்களாலும் போற்றப்படுகிறார். அதுவே அவர்கள் சாதிமதத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும் போது மேலும் சாதகமாகிறது.
அதை நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்..
இன்னொரு சூப்பர்ஸ்டார் வராமலிருப்பது தமிழகத்திற்கு நல்லது.........

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்