
ஷங்கர் படம் என்பதற்கு : ஜென்டில் மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் வகையறா கதைகளான லஞ்சம், ஊழல், பொறுப்பின்மை, போன்ற சமுக அவலங்களை ஹைலைட் பண்ணி எடுப்பது போன்று இங்கே 'ஏழெங்கே...இலவசக் கல்வி' கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்' என்று ஆரம்பித்து முடிகிறது கதை. மேற்சொன்ன படங்களில் ப்ளாஷ் பேக் காட்சிகள் இருக்கும். சிவாஜியில் 90 விழுக்காடு பிளாஸ் பேக். அதாவது சிவாஜி எம்ஜிஆராக (மொட்டைதலை) ரஜினியாக மாறும் வரை ப்ளாஸ் பேக்தான்.
வழக்கமான பிராமாண்ட செட்டுகளில் எடுக்கப்பட்ட கலர்புஃல் பாடல்காட்சிகள். அதைத்தவிர ப்ரேம் பை பேரம் ஷங்கரின் கைவண்ணம் என்றுபார்த்தால் ஷங்கர் படம். சமூக அவலம் என்ற சொறி இருக்கும் வரை அரிப்பு இருக்கவே செய்யும். ஷங்கர் நன்றாக தன் படங்கள் மூலம் சொறிந்துவிடுவதை சிவாஜியில் சற்று குறைவாக சொறிந்து இருக்கிறார். அதற்கு காரணம் படத்தில் ரஜினி பார்முலா இடம் பெற வேண்டும் என்பதற்காக என நினைக்கிறேன். கதாநாயகிகளை இளமையாகக் காட்டுவதுடன், இந்த படத்தின் மூலம் ரஜினி ஒரு இளைஞராக காட்டி இருக்கிறார். தலைமுடிகளில் நல்ல கருப்பாக அடர்த்தியாக இருப்பது கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது. ஆனால் ரஜினியின் முகத்தில் தெரியவில்லை.
காதல், வெயில் போன்ற தன் சொந்த தயாரிப்பு என்றால் ரொமாண்டிக் ரெமோவாக இருக்கும் ஷங்கர் ... தான் இயக்கும் படங்களில் சமூக அவலத்திற்கு எதிராக ஆயுதம் எடுக்கும் வழக்கமான அந்நியானாக மாறி இருக்கிறார்.
திரைக்கதை + பிரமாண்டம் என்று பார்த்தால் - இது 50 விழுக்காடு ஷங்கர் படம்.
ரஜினி படம் என்பதற்கு : தனது ரசிகர்களுக்கு குறைவைக்காத ஹீரோயிசத்தில் ரஜினி சிவவஜியிலும் குறைவைக்கவில்லை. வழக்கமான அப்பாவித்தனமான காமடி காட்சிகள். குறிப்பாக ஷ்ரேயா ரஜினியின் நிறத்தை வெளுப்பபக மாற்றிக் கொள்ள சொல்ல ... அதற்கு ரஜினி செய்வது நல்ல நகைச்சுவை. மேலும் இது ரஜினி படம் தான் என்பதற்கு ... நிராயுதபாணி ஹீரோ, சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்பவர், வில்லன் துவைத்து எடுக்கும் போது அடியை வாங்கிக்கொண்டு எதுவும் செய்யமுடியாமல் ரசிகர்களை உச் கொட்ட வைக்கும் காட்சிகள் போன்றவை அண்ணாமலை, அருணாசலம்,முத்து,படையப்பா படங்களை நினைவு படுத்துகிறது. மொட்டைத்தலை எம்ஜிஆராக வரும் போது தலையில் விரலால் படபடவென்று தட்டிக் கொண்டு வசனம் பேசுவது புது ஸ்டைல்...(சந்திரமுகி லக்க லக்க போல ரசிக்க வைக்கிறது) மற்றபடீ ஸ்டைலாக சுவிங்கம் தூக்கிபோட்டு பிடிப்பது சந்திரமுகியில் வந்ததுதான்.
காசு கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு முதலில் காலை காட்டி வணங்க வைத்த காட்சி ஏற்கனவே சந்திரமுகியில் வந்தாலும்...இங்கே காலை காட்டுவார் வேறு சூழல்.
மற்றபடி எனக்கு பிடித்த காட்சிகள் : திருகுறள் (அன்பும் அறமும் உடைத்தாயின்..) சொல்லி தமிழ்முறை திருமணம்...சுஜாதாவில் டைமிங் சென்ஸ் வசனம் ரசிக்கும் படி இருந்தது. மொட்டை தலை ரஜினி...ரஜினி எம்ஜிஆர்..சிவாஜி..கமல் பாணியில் உள்ள பாடல் காட்சி...விவேக் நகைச்சுவை. 'என்னது பஞ்ச் டயலாக் பேசப் போறியா ?...உன்னைப் போல பேசி விடலை பசங்களும் வெரலை தூக்குறானுங்க...' என்று சிம்புவுக்கு அம்பு விட்டு இருப்பார். ஒரு காட்சியில் வந்தாலும் போலிஸ் அதிகாரியாக வரும் லிவிங்ஸ்டனின் 'லக்க லக்க' நல்ல டைமிங் காட்சி... மயில்சாமி...சின்னி ஜெயந்த்...தாமு ஆகியோரின் ரஜினி மிமிக்கிரி நன்றாக இருந்தது.
ஷ்ராயா இதற்கு மேல் மற்ற படங்களில் தனது முழுத்திறமையையும் (?) காட்டமுடியாது அந்த 'அளவுக்கு' நன்றாக செய்து இருக்கிறார்.
மொத்தத்தில் சிவாஜி = ரஜினி பாதி + ஷங்கர் பாதி கலந்து செய்த கலவை !
அடுத்து நான் சிவாஜி விமர்சனம் எழுத அழைப்பது
1. நாமக்கல் சிபி
2. இளா
3. செந்தழல் ரவி
4. மகேந்திரன்
5. நாகைசிவா
6. கோ.இராகவன்
டென்சன் ஆகாதிங்க ப்ளீஸ்...........
:))
22 கருத்துகள்:
யோவ் ஜிகே ஒங்க நக்கலுக்கு அளவே இல்லாம போகுது திருட்டு விசிடி வர வரிக்கும் நான் படம் பாக்க மாட்டேன்:))
நல்ல விமரிசனம் கோவியாரே!
அடுத்த ஆறா!
:))
தாங்காது சாமி!
ச்ச்ச்ச்ச்சும்மா அ...தி..ரு..தில்ல!
:)
அடுத்து நான் சிவாஜி விமர்சனம் எழுத அழைப்பது
1. நாமக்கல் சிபி
2. இளா
3. செந்தழல் ரவி
4. மகேந்திரன்
5. நாகைசிவா
6. கோ.இராகவன்
டென்சன் ஆகாதிங்க ப்ளீஸ்...........
:))
///
போடாம இருப்பாங்கலா....:)
7.ராம்
:)
//1. நாமக்கல் சிபி
//
kooviyaaree!
en meela ungalukku ambuttu kolai veriya?
மொத்தத்துல நல்லா இருக்கு. ஓ.கே.
60 கோடி செலவு செஞ்சு, 100 கோடி சம்பாதிச்சு, அதுல பாதி கறுப்பு பணமா சேர உதவியிருக்காங்க.
ஷங்கர், அப்பப்ப சமூக அக்கரையுடன் படம் எடுத்து சொறிஞ்சு விட்டுக்கரதும் நல்லதுதான். அந்நியன் அம்பி பாத்து, நெறைய பேர், ட்ராபிக் ரூல்ஸ மீறாம ஓட்ட ஆரம்பிச்சாங்களாமே. நல்லதுதான்.
நீங்க படம் பாத்துட்டீங்க...விமர்சனம் எழுதீட்டீங்க. நான் பாக்கலையே கோவி! இங்க வந்திருக்கு. வெளியூர் போய்ப் பாக்கனும். அதான் போலாமா வேண்டாமான்னு யோசனையா இருக்கு.
போய்ப் பாத்தா கண்டிப்பா விமர்சனம் எழுதுறேன். அழைப்பிற்கு மிக்க நன்றி.
ஆஹா கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு. படம் தியேட்டர்லேயே போய் பார்த்தாச்சு. இப்பவரைக்கு ஒரு 100 விமர்சனம் வந்து இருக்குமா? ஆனாலும் குசும்பு புடிச்ச ஆளுங்க நீங்க. 6, 6னு கூப்பிட்டு எல்லாப்பதிவர்களையும் சிவாஜி விமர்சனம் மட்டுமே எழுதினா? நான் தசாவதாரம் படம்-முதல் பார்வை எழுதிட்டு இருக்கேன். சிவாஜி - வந்தாச்சு, வெற்றி அடைஞ்சுருச்சு. அம்புட்டுதேன். சரி, சின்னபுள்ள ஆசைப்படுது, சிவாஜி விமர்சனம் இல்லாம ,சிவாஜியும்-என் என்சாய்மெண்டும் ஒரு பதிவு எழுதிடறேன்.
//மகேந்திரன்.பெ said...
யோவ் ஜிகே ஒங்க நக்கலுக்கு அளவே இல்லாம போகுது திருட்டு விசிடி வர வரிக்கும் நான் படம் பாக்க மாட்டேன்:))
//
திருட்டு டிவிடி வந்தால் பார்க்க மாட்டிங்களோ ? நல்ல கொளுகை.
2 நாளில் வசூல் ஆகிவிட்டதாம்...திருட்டு விசிடியில் பார்த்தால் தப்பில்லைன்னு தான் நினைக்கிறேன்.
:))
//VSK said...
நல்ல விமரிசனம் கோவியாரே!
அடுத்த ஆறா!
:))
தாங்காது சாமி!
ச்ச்ச்ச்ச்சும்மா அ...தி..ரு..தில்ல!
:)
12:07 AM
//
எஸ்கே ஐயா,,
அது ச்சும்மா...கிண்டல் அடிப்பதற்காக ..சிவாஜி பதிவாக போட்டு பலரும் தாக்குவதால் யாரும் டின் கட்டிடக் கூடாதில்லே.
:)
//மின்னுது மின்னல் said...
அடுத்து நான் சிவாஜி விமர்சனம் எழுத அழைப்பது
1. நாமக்கல் சிபி
2. இளா
3. செந்தழல் ரவி
4. மகேந்திரன்
5. நாகைசிவா
6. கோ.இராகவன்
டென்சன் ஆகாதிங்க ப்ளீஸ்...........
:))
///
போடாம இருப்பாங்கலா....:)
7.ராம்
:)
//
உங்கள் பெயர் சட்டென்று மின்னல் அடிக்கலை ... அடித்திருந்தால் பட்டியலில் மகேந்திரனுக்கு பதில் உங்களை சேர்ந்திருந்திருப்பேன்.
:)
//நாமக்கல் சிபி said...
//1. நாமக்கல் சிபி
//
kooviyaaree!
en meela ungalukku ambuttu kolai veriya?
//
கொலை வெறி மட்டுமா ?
ஜன்ம பகை கூட... மிமிக்கிரி மன்னா ... எங்கே வம்புல மாட்டிவிடப் போறியோன்னு பயந்துண்டு இருக்கேன்.
:)
//SurveySan said...
மொத்தத்துல நல்லா இருக்கு. ஓ.கே.
60 கோடி செலவு செஞ்சு, 100 கோடி சம்பாதிச்சு, அதுல பாதி கறுப்பு பணமா சேர உதவியிருக்காங்க.
ஷங்கர், அப்பப்ப சமூக அக்கரையுடன் படம் எடுத்து சொறிஞ்சு விட்டுக்கரதும் நல்லதுதான். அந்நியன் அம்பி பாத்து, நெறைய பேர், ட்ராபிக் ரூல்ஸ மீறாம ஓட்ட ஆரம்பிச்சாங்களாமே. நல்லதுதான்.
//
சர்வேஷ்,
ஷங்கர் படங்கள் சொல்வது என்ன ?
ஏன் ஒரு சர்வே எடுக்கக் கூடாது ?
//G.Ragavan said...
நீங்க படம் பாத்துட்டீங்க...விமர்சனம் எழுதீட்டீங்க. நான் பாக்கலையே கோவி! இங்க வந்திருக்கு. வெளியூர் போய்ப் பாக்கனும். அதான் போலாமா வேண்டாமான்னு யோசனையா இருக்கு.
போய்ப் பாத்தா கண்டிப்பா விமர்சனம் எழுதுறேன். அழைப்பிற்கு மிக்க நன்றி.
//
ஜிரா,
ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக்காதிங்க.... எனக்கு மட்டும் உதை விழுந்துடக் கூடாதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை அழைப்பு...சப்போர்ட் வேண்டுமே !
//ILA(a)இளா said...
சிவாஜி விமர்சனம் இல்லாம ,சிவாஜியும்-என் என்சாய்மெண்டும் ஒரு பதிவு எழுதிடறேன். //
அது !!ருதுல்ல !
நம்ம பெயரையும் ஆட்டல சேர்த்து வுட்டீங்களே கண்ணன்... அது போகட்டும் அது என்ன இந்த குறிப்பிட்ட ஆறு பேர்... ஏதும் கொல வெறில இருக்கீங்கல... எதா இருந்தால் பேசி தீர்த்துக்கலாம் நாம் எல்லாம் ஒரே மண்ணை சேர்ந்தவர்கள்....
//போடாம இருப்பாங்கலா....:)//
மின்னல் கண்டிப்பா எதிர்பாக்குறீயா...
நீ கேட்டு நான் இல்லனு சொல்ல முடியாது... ஆமாம்னு ஒரு வார்த்தை சொல்லு அடுத்த நாளே ஒரு பதிவு போடுறேன்...
//திருட்டு விசிடி வர வரிக்கும் நான் படம் பாக்க மாட்டேன்:)) //
மகி,இது எல்லாம் இந்தியாவில் தான் முதலில் வரும்..அங்க வந்து பிறகு இங்க வந்து இது எல்லாம் ஆவுறது இல்ல...
இன்னும் சில நாளில் நெட்ல வந்துடும்.... லிங்க் வேணும்னா சொல்லுங்க... தரேன்...
//சிவாஜி விமர்சனம் இல்லாம ,சிவாஜியும்-என் என்சாய்மெண்டும் ஒரு பதிவு எழுதிடறேன். //
இளா ஒரு முடிவோட இருக்கீங்க போல... அந்த அக்கிரமத்தை பதிவா வேற போட போறீங்களா.... உங்களுக்கு விசில் அடிச்சான் குஞ்சு பட்டம் கிடைக்க வாழ்த்துக்கள்...
சிவா,
நீண்ட நாட்களாக போடாத பின்னூட்டங்களை ஒரே பதிவில் போடுறிங்க தானே ?
:)
உங்க கிட்ட எனக்கு பிடிச்ச விசயமே இதான்...
சட்னு பிடிச்சிங்க...அதை நச்சுனு சொன்னீங்க....
//'ஏழெங்கே...இலவசக் கல்வி' கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்' //
GK,
தலைவர் வசன உச்சரிப்பை நக்கல் அடிக்கறீங்களா...இருங்க...அதிரப் போகுது பாருங்க!
//ஷ்ராயா இதற்கு மேல் மற்ற படங்களில் தனது முழுத் திறமையையும் (?) காட்டமுடியாது //
:-)))
நண்பர்களோட போனீங்களா?
இல்லாக்காட்டி உங்கள வூட்டுல கூட்டிக்கிட்டு போனாங்களா? :-)
GK,
Athu yenna... release aahum munne sivajiya akku vera aani vera pichi pottuttu, motha aalaa poi paarthutu vanthuttu dialog vudureenga sir. Machaan adangave maatiyaa. Seri athu yenna Shriyaa nadippu puhazhaaram. Ava nadippu paathu romba mayangitiyo? Voottule pesavaa?
கருத்துரையிடுக