பின்பற்றுபவர்கள்

24 மே, 2007

தீட்டு கழிக்கும் வைபவம் !

தீட்டு கழிப்பது ஒரு குறைந்த செலவு நிகழ்ச்சியாக இருந்தால் பல பதிவுகளை படித்தவுடன் உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிடலாம். குருவாயூர் பட்ஜெட் படி ஹூம் ... லட்சக்கணக்கில் ஆகுமாமே. அதனால் பதிவுகளை படிக்கும் பலர் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு தலையில் நீர் தெளித்துக் கொள்வது போதும் என முடிவு செய்து விடுகிறார்களோ ?

சிலை செதுக்க உளி செய்தவனும், சிலையை தொட்டு தொட்டு செதுக்கியவன் என இருவரும் தீண்டத்தகாதர் என்ற நிலையில் அப்படியே இருக்க அவர்கள் கற்பனைகளில் உருவான சிலைகளுக்கு மட்டும் தொட்டுவிட்டான், பார்த்துவிட்டான் என தீட்டுகள் கழிக்கப்படுகிறது.

சிலைக்கு தீட்டு ஆனால் அந்த சிலையில் தீட்டுகழிக்க பயன்படுத்தும் பாலில் தீட்டு இல்லையாம். பாலில் தீட்டு இல்லை என பழைய பஞ்சாங்காமே சொல்லி இருக்கிறது வேறு எவர் சொல்ல வேண்டும் ??? :)).

தீட்டுக் கழிக்கும் பொருள்களை விளைவித்தவர்கள், அறுவடை செய்தவர்கள் என தீண்டத்தகாதன் கைபட்டு அப்பொருள்களில் தீட்டுபட்டு இருக்காதா என தெரியவில்லை. தீட்டு கழிக்கும் பொருள்களில் உள்ள தீட்டை கழிப்பதற்கு கைபடாத பொருள்கள் எதும் இருக்கிறதா ? அறிந்தவர்கள் சொல்லுங்க. வெறும் மந்திரம் மட்டும் போதூமா ? சரி.

நாமெல்லாம் வம்சாவளி குறித்து பேசுகையில் இதுவரை வம்சம் என்பது ஆண்கள் உருவாக்கும் சமூகம் என்பதால் ஆணைச் சார்ந்தாக இருக்கிறது. அதாவது தாய் எந்த மதத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலூம் தந்தை எதைச் சேர்ந்தவரோ அதைத் தான் அவருடைய பிள்ளைகளும் சேருகிறார்கள் என்பது வழக்கம் மற்றும் வழக்கு.

ஆனால் வயலார் ரவி இந்துவாக இருந்தாலும் அவர் கிறித்துவரை மணந்திருக்கிறார் என்ற காரணத்தினால் அவருடைய பிள்ளைகள் குருவாயூரில் கிறித்துவராக பார்ப்பார்களாம். என்ன ஒரு தெளிவான சிந்தனை பாருங்கள். அவர் ஏற்கனவே அதே கோவிலில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்கீறார்கள். அப்போதும் அதே தீட்டுகழிக்கும் வைபவமும் நடந்து இருக்கிறது. இவ்வளவு தெரிந்தும் முதலில் அவரது மகனின் சடங்குகளுக்கு அனுமதித்து எல்லாம் முடிந்த பிறகு அவரது மகன் கிறித்துவன் என (சரி?)பார்க்கப்பட்டு தீட்டு கழிக்கிறார்களாம்.

இராஜிவ் 'காந்தி' இந்துவாக இருந்தாலும் அவர் மனைவி சோனியா 'காந்தி 'என்று குடும்ப பெயரை வைத்துக் கொண்டாலும் இந்துத்துவா வாதிகள் சோனியாவை கிறித்துவராக மட்டும் பார்க்காமல் அவருடைய வாரிசுகள் பிரியங்கா மற்றும் இராகுல் 'காந்தி' யும் கிறித்துவர்களாகப் பார்த்து அவர்களையும் கிறித்துவர் வெளிநாட்டினர் என்று நாக்காலி ஆசையில் நா குழறுகிறார்கள் அதாவது அந்நியருக்கு பிறந்தவர்கள் எப்படி இந்தியர்கள் என்று சொல்ல முடியும் என்கிறார்கள்.

உயர்சாதிக்காரன் என்று சொல்லப்படுகிறவர்கள் தன்னைவிட கீழ் உள்ள சாதியில் உள்ள பெண்ணை அல்லது வேற்று மத பெண்ணை மணந்தால் அவர்களுடைய வாரிசுகள் உயர்ந்த சாதியாகத் தானே தந்-தையை வைத்து இதுவரை பார்த்து இருக்கிறோம். நடைமுறையில் இருப்பது. அங்கெல்லாம் வாரிசுகள் தாழ்ந்த சாதியாக பார்க்கப்பட்டார்களா ?

குருவாயூருக்கு வாருங்கள் குழந்தை சிரிப்பதை பாருங்கள் ... !

கண்ணன் ஒரு வேளை இதை நினைத்துதான் சிரிக்கிறானோ என்னவோ ? கண்ணனுடன் சேர்ந்து நாமும் சிரிப்போம். வேடுவர் (தாழ்ந்த ?) குல வள்ளியை மணந்த குமரனும் குன்றம் ஏறிநின்று சிரிக்கிறான். திருப்பதியில் இருந்து வெங்கடேசன் - இஸ்லாம் நாச்சியார் தம்பதிகளின் சிரிப்பொலிகள் கொஞ்சம் பலமாகவே கேட்கிறது.

28 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

//கண்ணன் ஒரு வேளை இதை நினைத்துதான் சிரிக்கிறானோ என்னவோ ? /
Well Said Govi

சிவபாலன் சொன்னது…

வயலார் ரவி குடும்பத்தாருக்கு ஏற்பட்டிருப்பது அநீதி.

எனது கண்டனங்கள்..

கடவுள் முன் அனைவரும் சமம் என்று மதங்கள் கூறும் கூற்றுக்கு எதிரானது.

நாமக்கல் சிபி சொன்னது…

முதலில் மதத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பதே தவறு என்கிறேன்!

//குருவாயூருக்கு வாருங்கள் குழந்தை சிரிப்பதை பாருங்கள் ... !

கண்ணன் ஒரு வேளை இதை நினைத்துதான் சிரிக்கிறானோ என்னவோ ? கண்ணனுடன் சேர்ந்து நாமும் சிரிப்போம். வேடுவர் குல வள்ளியை மணந்த குமரனும் சிரிக்கிறான். திருப்பதியில் இருந்து வெங்கடேசன் - இஸ்லாம் நாச்சியார் தம்பதிகளின் சிரிப்பொலிகள் கொஞ்சம் பலமாகவே கேட்கிறது
//

சபாஷ் கோவியாரே!

பாராட்டுக்கள்!

Krishna (#24094743) சொன்னது…

ஒரு புறம் இதை கண்டிக்க வேண்டியது அவசியம் என்று தோன்றினாலும் சற்றே சிந்தித்தால் வேறொரு கோணமும் தென்படுகிறது.

ஹிந்து கோவில்களில் பிற மதத்தினர் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது (ஹிந்துக்களுள் ஜாதி பார்த்தல் கோவில்களில் கிடையாது).ஆகவே தீண்டாமை எனும் வாதம் இங்கு பொருந்தாது. எந்த இடத்திற்கு போனாலும், அந்தந்த இடங்களுக்குறிய விதிமுறைகளை நாம் பின்பற்றத்தான் வேண்டும். உ.ம். நூலகத்தில் அமைதி காத்தல், மருத்துவமனை வளாகத்தில் ஒலிப்பான் உபயோகிக்கத் தடை, தர்ஹாக்களில் நீரினால் சுத்திகரித்தல் இன்ன பிற. அதே போல் ஒரு கோவிலுக்கென உள்ள விதிகளை பின்பற்ற வேண்டியது ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமை. அதுவும், பொது வாழ்வில் உள்ளதாக கூறிக் கொள்ளும் ஒருவரின் பொறுப்பு மிகவும் அதிகம். ஏற்கனவே ஒருமுறை அனுபவப் பட்ட பின்னும், இவர் மறுபடியும் அதே தவற்றைச் செய்ய முற்படுவது சற்று அதிகார ஆணவம் என்று படுகிறது. இறைவன் முன் எல்லாரும் சமம் என்று இங்கு வாதிடும் நாத்திகவாதிகள், இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற தத்துவத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே? இவர் தன்னுடைய சடங்கை வீட்டினுள் வைத்துக் கொள்வது தானே? ஏன் வீம்பு பிடிக்க வேண்டும்? இவர் ஹிந்துவாக இருந்தாலும் இவர் மனைவி இன்னும் கிருத்துவராகவே வாழ்கிறார். இவர்களுடைய மகன் எந்த மதத்தை சேர்வான் என்பது அவன் வளர்ந்தபின் அவனே முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
கோவில் விதிப்படி ஒரு தவறு நிகழ்ந்திருந்தால், அதை சரி செய்ய அவர்கள் முறைப் படி அவர்கள் அதைச் செய்கிறார்கள். இதற்கு மேல் இதை பெரிது படுத்துவது அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றதாகும். அவ்வளவே.

கோவி.கண்ணன் சொன்னது…

வாங்க கிருஷ்ணா சார்,

//ஹிந்து கோவில்களில் பிற மதத்தினர் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது (ஹிந்துக்களுள் ஜாதி பார்த்தல் கோவில்களில் கிடையாது).ஆகவே தீண்டாமை எனும் வாதம் இங்கு பொருந்தாது.//

வள்ளலார் சித்தாந்த சபை, இராக கிருஷ்ண மிசன் போன்ற பல இடங்களில் எல்லாம் இந்து மதத்திற்குள் வராதா ? அங்கெல்லாம் வேற்று மதத்தினருக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறதே.அவ்வாறு முற்போக்கு சிந்தனைகள் கொண்ட இராமகிருஷ்ணர், வள்ளலார் போன்றோர்களெல்லாம் இந்துமத விரோதிகளா ?

வாபர் சன்னதி என்ற இஸ்லாமிய மசூதிக்கு ஐயப்ப பக்தர்கள் செல்லும் போது என்ன வகையான இந்துக் கொள்கை அங்கே கடைபிடிக்கப்பட்டு தடை தளர்த்தப்பட்டு இருக்கிறது ?

//உ.ம். நூலகத்தில் அமைதி காத்தல், மருத்துவமனை வளாகத்தில் ஒலிப்பான் உபயோகிக்கத் தடை//

இதெல்லாம் தொல்லை, சுகாதரம் தொடர்புடையது இங்கு பொருந்தாத காட்டு.

//அதே போல் ஒரு கோவிலுக்கென உள்ள விதிகளை பின்பற்ற வேண்டியது ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமை. அதுவும், பொது வாழ்வில் உள்ளதாக கூறிக் கொள்ளும் ஒருவரின் பொறுப்பு மிகவும் அதிகம். ஏற்கனவே ஒருமுறை அனுபவப் பட்ட பின்னும், இவர் மறுபடியும் அதே தவற்றைச் செய்ய முற்படுவது சற்று அதிகார ஆணவம் என்று படுகிறது. இறைவன் முன் எல்லாரும் சமம் என்று இங்கு வாதிடும் நாத்திகவாதிகள், இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற தத்துவத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே? இவர் தன்னுடைய சடங்கை வீட்டினுள் வைத்துக் கொள்வது தானே? ஏன் வீம்பு பிடிக்க வேண்டும்? //

அடடே அந்த விதிகளை ஏற்றுக் கொண்டு வருபவர்களுக்கும் கருவறை கதவுகள் திறந்து இருக்கிறதா ?

ஏற்கனவே அனுபவபட்டவர் என்று கோவில் நிர்வாகிகளுக்கு தெரியாத என்ன ? ஊருக்கே தெரிந்தது ! சப்பைக் கட்டு ஆனாலும் ரொம்ப தளர்வான கட்டு.

இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற தத்துவத்தை ஆத்திகர்களே ஏற்றுக் கொள்ளாமல் தானே கோவிலுக்கு தீட்டு கழிக்கிறார்கள் ? :))

//இவர் ஹிந்துவாக இருந்தாலும் இவர் மனைவி இன்னும் கிருத்துவராகவே வாழ்கிறார். இவர்களுடைய மகன் எந்த மதத்தை சேர்வான் என்பது அவன் வளர்ந்தபின் அவனே முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
கோவில் விதிப்படி ஒரு தவறு நிகழ்ந்திருந்தால், அதை சரி செய்ய அவர்கள் முறைப் படி அவர்கள் அதைச் செய்கிறார்கள். இதற்கு மேல் இதை பெரிது படுத்துவது அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றதாகும். அவ்வளவே. //

மிக மிக தளர்வான வாதம். இன்னும் கொஞ்சம் முயன்று இருக்கலாம். அதாவது அவர் பையன் வளர்நத்தும் முடிவு செய்ய வேண்டியதை... ?

ஏன் இப்போதே கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தார்கள் ?

//கோவில் விதிப்படி ஒரு தவறு நிகழ்ந்திருந்தால், அதை சரி செய்ய அவர்கள் முறைப் படி அவர்கள் அதைச் செய்கிறார்கள். இதற்கு மேல் இதை பெரிது படுத்துவது அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றதாகும். அவ்வளவே.
//

முறைப்படியைத்தான் பார்த்தோமே அதுதான் தலைப்பே ! அடுத்தவர் சுதந்திரம் ? உங்களுக்கு மட்டும் எங்களுக்காக சப்பைக் கட்டுங்கள் என்ற சுதந்திரத்தை கோவில் நிர்வாகத்தினர் கொடுத்தார்களா ?

வைக்கம் விசயத்திலும் இப்படித்தான் சொல்லப்பட்டதாம். அதாவது அவரவர்களே சரி செய்து கொள்வார்கள் என்று. இன்றைய தேதிக்கு சரியானது எதுவுமே அவரவர் (கோவில் நிர்வாகத்தினரே) உணர்ந்து செய்து கொண்டது இல்லை மிஸ்டர் கிருஷ்ணா.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
வயலார் ரவி குடும்பத்தாருக்கு ஏற்பட்டிருப்பது அநீதி.

எனது கண்டனங்கள்..

கடவுள் முன் அனைவரும் சமம் என்று மதங்கள் கூறும் கூற்றுக்கு எதிரானது.//

சிபா,

மதங்களில் அழகான தத்துவம் இருக்கிறது என்று மேடையில் பேசுவது தான் நீங்கள் சொன்ன 'சமம்'
:))

இந்த பதிவிலும் ஒருவர் மைனஸ் போட்டு இருக்கிறார் என்றால் பாருங்கள் முற்போக்கு சிந்தனையின் மகத்துவத்தை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...

Well Said Govi
//

இளா,

கோவிக்கு பாராட்டா ?

எச்சரிக்கப்படலாம். உங்கள் துணிவுக்கு பாராட்டுக்கள்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// நாமக்கல் சிபி said...
முதலில் மதத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பதே தவறு என்கிறேன்!

சபாஷ் கோவியாரே!

பாராட்டுக்கள்!
//

சிபி,

இளாவுக்குச் சொன்னதையே படிச்சுக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி

Krishna (#24094743) சொன்னது…

//வள்ளலார் சித்தாந்த சபை, இராக கிருஷ்ண மிசன் போன்ற பல இடங்களில் எல்லாம் இந்து மதத்திற்குள் வராதா ?//
இதுதான் பிரச்சினை. நான் எங்கே இதைப் பற்றியெல்லாம் பேசினேன். ஆகம விதிப்படி நடக்கும் கோவில்களுக்கெல்லாம் சில விதிகள் உள்ளன. வட இந்தியாவில் யார் வேண்டுமானாலும் மூலவரைத் தொட்டு வணங்க முடியும் - அதெல்லாம் இந்து கோவில் இல்லை என்றா இங்கு வாதிடுகிறேன். விதிகள் சரியா, தவறா என்றும் இங்கு வாதிடவில்லை. ஒரு விதி என்று இருக்கும் போது அதை தெரிந்தே மீறுவது அதிகார மமதை என்கிறேன். நீங்களோ, நானோ ஒரு சாலை விதியையோ இல்லை இப்படி ஒரு சூழ்நிலையிலோ இருந்திருந்தால் எப்படி நடந்திருப்போம் என்று யோசித்தால் புரியும்.

//இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற தத்துவத்தை ஆத்திகர்களே ஏற்றுக் கொள்ளாமல் தானே கோவிலுக்கு தீட்டு கழிக்கிறார்கள் //
இல்லை. தீட்டு கடவுளுக்கு கிடையாது. இதைப் புரிந்து கொள்ள ஆத்திகத்தில் நம்பிக்கை சிறிதாவது இருக்க வேண்டும். சமய நம்பிக்கை விஷயங்கள் நம்புவோருக்கு உண்மை; நம்பிக்கையில்லாதோருக்கு பொய்;

// ஏன் இப்போதே கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தார்கள் ?//
கோவில் நிர்வாகிகள் அவர்கள் விதிப்படி நடந்தார்கள் அவ்வளவே. இதில் ரவியின் மகன் என்ன இனமென்று கோவில் நிர்வாகத்தினர் கூறவில்லையே. அப்படியே கூறியிருந்தாலும் அதனால் ரவியின் குடும்பத்தினருக்கு என்ன பாதிப்பு?

//முறைப்படியைத்தான் பார்த்தோமே அதுதான் தலைப்பே ! //
என்ன செய்யப் பட்டதோ அது எந்த விதத்திலும் ரவி குடும்பத்தினரின் சுதந்திரத்தில் தலையிடவில்லையே. பிறகு ஏன் இந்த ஆர்பாட்டம்?

Unknown சொன்னது…

Sir,
I can not understand what all this fuss is about . in all hindu temples in north including puri jaganath temple we can even hug the diety and pray no one stops anyone from going near the diety.


we cannot say northindian temples are less holy than southindia temples .i find devotees are as involved and as sincere as in southindian temples
in maharashtrian temples all devotees join in singing the evening arti in marati which is very good not just some mumbojumbo in sanskrit.it is a very emotional experience to join in this group bhajan or prayer when everyone participates.

south temples and those who run these institutions in south should learn from north

கோவி.கண்ணன் சொன்னது…

//இதுதான் பிரச்சினை. நான் எங்கே இதைப் பற்றியெல்லாம் பேசினேன். ஆகம விதிப்படி நடக்கும் கோவில்களுக்கெல்லாம் சில விதிகள் உள்ளன. வட இந்தியாவில் யார் வேண்டுமானாலும் மூலவரைத் தொட்டு வணங்க முடியும் - அதெல்லாம் இந்து கோவில் இல்லை என்றா இங்கு வாதிடுகிறேன். விதிகள் சரியா, தவறா என்றும் இங்கு வாதிடவில்லை. ஒரு விதி என்று இருக்கும் போது அதை தெரிந்தே மீறுவது அதிகார மமதை என்கிறேன். நீங்களோ, நானோ ஒரு சாலை விதியையோ இல்லை இப்படி ஒரு சூழ்நிலையிலோ இருந்திருந்தால் எப்படி நடந்திருப்போம் என்று யோசித்தால் புரியும்.//

வாங்க சார்,

விதிகள் இருக்கின்றன .. சரி அப்படியே இருக்கட்டும் ... அதற்கு பரிகாரமும் இருக்கிறதல்லவா ? அதைத்தான் பைபாஸ் பண்ணிட்டு ஓப்பனாகவே இருக்கலாமே. எதற்காக ஒரு விதி என்று வைத்து அதை பரிகாரத்தால் மீறவதற்கு இடம் கொடுக்கனும் ?

பரிகாரம் இல்லாத விதி இருந்தால் தான் அதன்பெயர் கட்டுப்பாடு. கோவிலில் இருப்பது என்ன சாலை விதியா ? மீறினால் பைன் கட்டிவிடலாம் என்பதற்கு ? மறுபடியும் ஒரு சொத்தை வாதம்.

அப்போ விதிமீறலுக்கு முன்பே பரிகார முன்பதிவு செய்து கொள்ள முடியுமா ?

மீறினால் பரிகாரம் செய்து சரி பண்ணிவிட முடியும் என்று செய்வது ஆன்மிக மமதையா ?

அடுத்ததாக காலில் அழுக்கு பட்டுவிட்டால் கழுவுகிறேமே அது போலத்தான் இது என்று எவராவது அழகான உதராணங்கள் கூட சொல்லுவார்கள் என நினைக்கிறேன்
:))

//கோவில் நிர்வாகிகள் அவர்கள் விதிப்படி நடந்தார்கள் அவ்வளவே. இதில் ரவியின் மகன் என்ன இனமென்று கோவில் நிர்வாகத்தினர் கூறவில்லையே. அப்படியே கூறியிருந்தாலும் அதனால் ரவியின் குடும்பத்தினருக்கு என்ன பாதிப்பு? //

திரும்பவும் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. இராவியின் மகன் என்ன இனம் என்று கூறவில்லை என்கிறீர்கள்.அதே சமயத்தில் அவ்வாறு முடிவு செய்து பரிகாரம் செய்தபின் கோவில் மரபு என்கிறீர்கள்.

அவன் வருங்காலத்தில் தான் இந்து என்று சொன்னால் பரிகாரம் செய்ததற்கு மாற்று பரிகாரம் செய்ய முடியுமா ?

அதாவது ஒருவர் இறந்துவிட்டார் என்று கருமாதி செய்த பின் ஒருவேளை உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தால் மீள் பரிகாரம் செய்வார்களாமே ? அது போல் கோவிலில் பரிகாரத்துக்கு மாற்று பரிகாரம் எதாவது இருக்கிறதா ?அல்லது பரிகாரத்துக்கு ஆன சிலவுகளை திருப்பி கொடுப்பாங்களா ?

ரவி குடும்பத்தினர் தலையிட வில்லை என்றால் ஏன் பேட்டி டிவியில் எல்லாம் வந்தது ? இதை பெருசு படுத்தாதிங்கன்னு சொல்லிட்டு போயிருக்கலாமே அவர்.

நந்தா சொன்னது…

//இதுதான் பிரச்சினை. நான் எங்கே இதைப் பற்றியெல்லாம் பேசினேன். ஆகம விதிப்படி நடக்கும் கோவில்களுக்கெல்லாம் சில விதிகள் உள்ளன. வட இந்தியாவில் யார் வேண்டுமானாலும் மூலவரைத் தொட்டு வணங்க முடியும் - அதெல்லாம் இந்து கோவில் இல்லை என்றா இங்கு வாதிடுகிறேன். விதிகள் சரியா, தவறா என்றும் இங்கு வாதிடவில்லை. ஒரு விதி என்று இருக்கும் போது அதை தெரிந்தே மீறுவது அதிகார மமதை என்கிறேன். நீங்களோ, நானோ ஒரு சாலை விதியையோ இல்லை இப்படி ஒரு சூழ்நிலையிலோ இருந்திருந்தால் எப்படி நடந்திருப்போம் என்று யோசித்தால் புரியும்.//

இங்கு விதியே தவறு என்றுதான் சொல்கிறோம். அவ்வாறு அவரது மகனின் சடங்குகள் செய்வது பாவம் என்று கருதினால் அந்த சடஙுகளை செய்யவே விட்டிருக்கக் கூடாது.

அதை விட்டுட்டு அந்த சடங்கையும் செய்ய விட்டுட்டு அதை தீட்டுன்னும் சொல்றது கேவலமா தெரியலையா.

ஏங்க அந்த சின்னப் பையனை கூட ஆகம விதிகள் விட்டு வைக்காதா? எதை சொல்லியாவது காசு சம்பாதிக்கணும்ங்கறதைத் தவிர வேற என்ன இருக்கு இதுல.

கோவி.கண்ணன் சொன்னது…

//நந்தா ...
அதை விட்டுட்டு அந்த சடங்கையும் செய்ய விட்டுட்டு அதை தீட்டுன்னும் சொல்றது கேவலமா தெரியலையா.//

ஐயா,

குருவாயூர் கோவிலுக்கு மனம் உவந்து அல்லது பக்தியினாலோ ( ஜேசுதாஸ் போல)ஒரு கிறித்துவன் 1 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கிறேன் என்றால், கிறித்துவனிடம் இருந்து பணம் வாங்க ஆகமம் இடங்கொடுவில்லை என்று சொல்லுவாங்களா ?

பணம் சம்பாதிக்க, கோவில் வரவு செலவுக்கும் ஆகமம் என்ற பெயரில் விதி என்று வைத்திருக்கிறோம் என்று ஓப்பனாக எவரும் சொல்லிவிட்டாலே போதும். தேவையற்ற சப்பைக் கட்டுகள் அவிழ்ந்து போகாமல் இருக்கும்.

நன்றி !

பெயரில்லா சொன்னது…

I cannot understand what all this fuss is about
In all north Indian temples for example puri jagannath anyone can walk up to deity and even hug the deity .no one stops you
Does it mean north Indian temples are less holy than south Indian temples?



Temple administrators in south should learn from north

நந்தா சொன்னது…

//குருவாயூர் கோவிலுக்கு மனம் உவந்து அல்லது பக்தியினாலோ ( ஜேசுதாஸ் போல)ஒரு கிறித்துவன் 1 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கிறேன் என்றால், கிறித்துவனிடம் இருந்து பணம் வாங்க ஆகமம் இடங்கொடுவில்லை என்று சொல்லுவாங்களா ?//

இல்லை. இல்லை. அந்தப் பணத்தையும் வாங்கிக் கொண்டு, அது கிறிஸ்துவப் பணம் னு சொல்லி அதுக்கு தீட்டு கழிக்கணும்னு சொல்லி அதை வெச்சும் காசு பார்ப்பாங்க.

உண்மைத்தமிழன் சொன்னது…

அன்பு கோவியாரே,

வயலார் ரவி என்பவர் யார்? அவருடைய குலம் என்ன? கோத்திரம் என்ன? என்பது அந்த மாநிலத்தில் வயநாடு பகுதியில் மலையை விட்டே இறங்காத மலைவாழ் மக்களுக்குக்கூடத் தெரியும். அவருடைய பிராப்தம் அந்த மாநிலத்தில் அப்படி..

அவருடைய மனைவி ஒரு கிறிஸ்தவர் என்பது நன்கு தெரிந்துதான் வயலார் ரவியின் மகன் கல்யாணத்தை குருவாயூர் கோவிலைப் பயன்படுத்த அனுமதி கொடுத்தனர். இந்தத் திருமணம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே கேரள பத்திரிகைகளில் இந்தச் செய்திகள் படபடத்தன. அத்தனைக்கும் வயலார் ரவி சொன்ன பதில், குருவாயூரப்பன் "எல்லாத்தையும் பார்த்துக் கொள்வான்" என்பதுதான். வயலாரும் தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கோவிலில் திருமணத்தையும் முடித்துவிட்டார். கோவில் பூசாரிகள் மறுநாள் அதற்காகத் தீட்டையும் நடத்தி விட்டார்கள். இதுவும் ஒரு வகையில் வயலார் குடும்பத்தாரும், கோவில் அதிகாரிகள், பூசாரிகள் மூவரும் சேர்ந்து மக்களுக்கு நாமம் போட்ட நாடகம்தான்.

பத்திரிகைகள் வழக்கம்போல அப்போது கத்தி ஓய்ந்தன. இப்போது கே.ஜே.ஜேசுதாஸை கோவிலுக்குள் அனுமதிக்கலாமா என்று கருத்துக் கணிப்பு நடத்துகின்ற அளவுக்கு கோவில் நிர்வாகத்தினர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்கள். ஜேசுதாஸ் கேட்ட கேள்வியும் அதுதான்.. மற்ற மதத்தினர் தங்களது குடும்ப நிகழ்ச்சிகளையே அங்கே நடத்தியிருக்கிறார்கள். காலம் முழுவதும் கண்ணனையே என் குரலால் தாலாட்டியிருக்கிறேன்.. எனக்கில்லையா அனுமதி என்று உருகினார். கோவில் நிர்வாகம், பூசாரிகளைக் கை காட்டியது. பூசாரிகள் உள்ளே சிலையாய் இருக்கும் கண்ணனைக் கை காட்டினார்கள்.

ஜேசுதாஸ¤ம் முப்பது வருஷமாக செய்வது போல் அடக்கமாக கோவிலுக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் தனது கண்ணன் பாடல்களைப் பாடிவிட்டுச் சென்றுவிட்டார். இப்போது ஜேசுதாஸ் அடக்கமானவர், புரிந்து கொள்ளக்கூடியவர் என்று சர்டிபிகேட் கிடைத்தது கோவில் நிர்வாகத்தினரால்..

இப்போது வயலார் ரவி தன் பேரனுக்கு கல்வி கற்பிக்கத் துவங்கும் முதல் நிகழ்ச்சியை குருவாயூர் கோவிலில் வெற்றிகரமாக நடத்திவிட்டார். இப்போதும் கோவில் நிர்வாகமும், பூசாரிகளும் ஒருவர் மாற்றி ஒருவர் கை காட்டுகிறார்கள். அவர்கள் வந்ததே எனக்குத் தெரியாது என்றார்கள். அடுத்த நாள் தண்ணீர் தெளித்து தீட்டை கழித்துவிட்டார்கள். மக்களும் தீட்டுப் போயிருச்சே என்று நம்பிவிட்டார்கள்.

அடுத்து வயலார் ரவியின் இன்னொரு மகளைப் பெற்றெடுப்பார். அந்தக் குழந்தைக்கும் யாருக்கும் தெரியாமல் குருவாயூர் கோவிலேயே இதேபோல் கல்வி கற்பிக்கும் விழா நடக்கும். அப்போதும் தீட்டு என்பார்கள். தண்ணீர் தெளிப்பார்கள். தீட்டு போய்விடும். அவ்வளவுதான்..

ஜேசுதாஸ¤க்கு அனுமதி இல்லை என்றால் ஒரே காரணம் அவர் அரசியல்வாதியல்ல. பாராளுமன்ற உறுப்பினரல்ல. ஒரேயரு போன் தகவலில் கோவில் நிர்வாகிகளை நியமிக்கும் அளவுக்கு அவருக்கு அங்கே செல்வாக்கு இல்லை.. வேறென்ன செய்வது? அவர் பாடல்களை மட்டும் வெட்கமில்லாமல் நாம் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.. வேறென்ன செய்வது?

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அன்பு கோவியாரே,

ஜேசுதாஸ¤க்கு அனுமதி இல்லை என்றால் ஒரே காரணம் அவர் அரசியல்வாதியல்ல. பாராளுமன்ற உறுப்பினரல்ல. ஒரேயரு போன் தகவலில் கோவில் நிர்வாகிகளை நியமிக்கும் அளவுக்கு அவருக்கு அங்கே செல்வாக்கு இல்லை.. வேறென்ன செய்வது? அவர் பாடல்களை மட்டும் வெட்கமில்லாமல் நாம் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.. வேறென்ன செய்வது?
//

உண்மைத் தமிழன்,

அருமையான கருத்துக்கள், தனிப்பதிவாகவும் இடுங்கள்.

பாராட்டுக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மை தமிழன் said...மற்ற மதத்தினர் தங்களது குடும்ப நிகழ்ச்சிகளையே அங்கே நடத்தியிருக்கிறார்கள். காலம் முழுவதும் கண்ணனையே என் குரலால் தாலாட்டியிருக்கிறேன்.. எனக்கில்லையா அனுமதி என்று உருகினார். கோவில் நிர்வாகம், பூசாரிகளைக் கை காட்டியது. பூசாரிகள் உள்ளே சிலையாய் இருக்கும் கண்ணனைக் கை காட்டினார்கள்.
//

ம், என்போன்றவர்கள் இது குறித்துக் கேட்டால் அவர்களாகவே எனக்கு நாத்திக முத்திரை குத்தி ... உனக்கேன் அக்கரை நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தான் அக்கரை இருக்க வேண்டும் என்கிறார்கள்.

உங்களைப் போன்றவர்கள் கேட்டால் தெய்வநிந்தனை என்று சொல்லுவார்கள்.

:)

கருப்பு சொன்னது…

சூப்பரான அலசல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
சூப்பரான அலசல்.
//

கருப்பு சார், பாராட்டுக்கு நன்றி. தமிழ்மணத்தில் உங்கள் இடுகைகள் வராததால் படிக்க முடியவில்லை.

:(

ஜோ/Joe சொன்னது…

கோவியாரே,
ஒரு 'உள்ளேன் ஐயா' சொல்லிகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
கோவியாரே,
ஒரு 'உள்ளேன் ஐயா' சொல்லிகிறேன்.
//

ஜோ...!

:))

அதுக்கு மேல உள்ளேயும் உள்ளதைச் சொன்னீர்கள் அப்பறம் உங்க பக்கம் திரும்பிடுவாங்க.

இந்த பதிவுக்கு 'உள்ளேன் ஐயா' மட்டும் தானே ? உசாரானவர் தான்.

:))

ஜோ/Joe சொன்னது…

//அதுக்கு மேல உள்ளேயும் உள்ளதைச் சொன்னீர்கள் அப்பறம் உங்க பக்கம் திரும்பிடுவாங்க.

இந்த பதிவுக்கு 'உள்ளேன் ஐயா' மட்டும் தானே ? உசாரானவர் தான்//

ஹி.ஹி ..அப்படில்லாம் இல்ல!

முன்பு நான் 'இந்து மதம் -சில சந்தேகங்கள்'-னு ஒரு பதிவு போட்டு அதில் இந்த தீட்டு விவகாரத்தையும் கேட்டிருந்தேன் .நீண்ட நெடிய விவாதம் நடந்தது .முடிந்தால் படித்துப் பாருங்கள்.

http://cdjm.blogspot.com/2006/07/blog-post.html

Unknown சொன்னது…

கோவி கண்ணன்,

திரு.கிருஷ்ணாவின் பின்னூட்டத்திற்கு பதில் பின்னூட்டம் போட நினைத்தால் நான் நினைத்ததை அதைவிட சிறப்பாக நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள். எனது பின்னூட்டம் இங்கு தேவைப்படவில்லை.
உங்கள் சிறப்பான இடுகையையும் பின்னூட்டங்களின் மூலம் நீங்கள் சிறப்பாக வாதம் செய்ததையும் படிக்க கிடைத்ததில் மகிழ்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

//இவர் ஹிந்துவாக இருந்தாலும் இவர் மனைவி இன்னும் கிருத்துவராகவே வாழ்கிறார். இவர்களுடைய மகன் எந்த மதத்தை சேர்வான் என்பது அவன் வளர்ந்தபின் அவனே முடிவு செய்ய வேண்டிய விஷயம். //

பையனை இந்துவாக்கலாம்ன்னு வயலார் நினைக்கிறாரு. முடியாது கிறிஸ்தவரா தான் மாற்றுவேன்னு குருவாயூர் நினைக்குது !!
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ / Joe said...

ஹி.ஹி ..அப்படில்லாம் இல்ல!

முன்பு நான் 'இந்து மதம் -சில சந்தேகங்கள்'-னு ஒரு பதிவு போட்டு அதில் இந்த தீட்டு விவகாரத்தையும் கேட்டிருந்தேன் .நீண்ட நெடிய விவாதம் நடந்தது .முடிந்தால் படித்துப் பாருங்கள்.

http://cdjm.blogspot.com/2006/07/blog-post.html
//

நன்றி ஜோ,

ஏறகனவே பார்த்து இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை படிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Xavier said...
பையனை இந்துவாக்கலாம்ன்னு வயலார் நினைக்கிறாரு. முடியாது கிறிஸ்தவரா தான் மாற்றுவேன்னு குருவாயூர் நினைக்குது !!
:)
//
சேவியர்,

பையனுக்கு பிடிக்குதா இல்லையான்னு பார்க்காமல் அந்த பையன் பாவம் குருவார் கோவில் கட்டாய மதமாற்றம் செய்துவிட்டது.
:)))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//உமையணன்(10278117489250974595) said...
கோவி கண்ணன்,

திரு.கிருஷ்ணாவின் பின்னூட்டத்திற்கு பதில் பின்னூட்டம் போட நினைத்தால் நான் நினைத்ததை அதைவிட சிறப்பாக நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள். எனது பின்னூட்டம் இங்கு தேவைப்படவில்லை.
உங்கள் சிறப்பான இடுகையையும் பின்னூட்டங்களின் மூலம் நீங்கள் சிறப்பாக வாதம் செய்ததையும் படிக்க கிடைத்ததில் மகிழ்கிறேன்.
//

உமையனன் சார்,

உங்கள் பின்னூட்ட பாராட்டில் ஒன்றும் பேச முடியாத ஊமையனானேன்.
:))


திரு கிருஷ்ணனுக்கான என் மறுமொழியில் என்ன தான் உங்களுக்கு உடன்பாடு இருந்தாலும் உங்களுக்கு என சில கருத்துக்கள் இருக்கும் அதையும் சொல்லி இருந்தாலும் சிறப்பாக இருக்கும்.

நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்