பின்பற்றுபவர்கள்

22 மே, 2007

மதமாற்றம் என்றால் என்ன ?

தீண்டாமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு காரணங்களை விடுவோம். ஏனென்றால் அப்படிபட்ட குற்றச் சாட்டுகளை கூறிக் கொண்டுதான் (அவற்றில் உண்மையும் உண்டு) மதம் மாற்றம் பெரிய அளவில் நிகழ்கிறது. காதல் திருமணத்தால் ஒரு கட்டாயத்தின் பேரில் மதமாற்றம் நிகழ்கிறது.

இவ்விரண்டு முக்கிய காரணங்கள் இன்றி எவரேனும் தன்னுடைய மதத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு மாறுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் ? உங்களுக்கு தெரிந்து அவ்வாறு யாரும் மாறி இருக்கிறார்களா ?

தீண்டாமை கொடுமைகள் இல்லாத ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ், சீனா, கொரியா போன்ற பல நாடுகளில் கிறிஸ்துவத்தை மக்கள் தழுவியிருக்கிறார்கள், இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள். ஆனால் அப்படி மாறியவர்களில் எல்லோருமே புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. குறிப்பாக மங்கோலிய இன (ஆசிய மக்களிடம்) இன வேறுபாடும் குறைவு. சிங்களர்களில் வேற்று மதத்தினர் இருக்கிறார்களா ? என்று எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் தெரியபடுத்துங்கள்.

மதநம்பிக்கை என்பதை அந்த மதங்களைச் சேர்ந்த சடங்குகளின் நம்பிக்கையாகத் தான் பார்க்கிறேன். இறை நம்பிக்கை என்பது எல்லா மதத்திலும் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்க. மதமாற்றம் என்பது மன மாற்றம் என்று பலர் சொல்கின்றனர். அப்படி மாறுகிறவர்கள் முழுதும் அந்த மதத்தை (வேத புத்தகத்தைச் குறித்து சொல்லவில்லை) தெரிந்து கொண்டு மாறுகிறார்களா ? என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது முருகன் படங்களில் அதிகம் நடித்து பக்தி பழமாக இருந்த முன்னாள் நடிகர் ஏவிஎம் இராஜன் கிறிஸ்துவ மதத்தை தழுவியது. ஏனென்றால் இவர் வறுமையிலும் வாடியது போல தெரியவில்லை. அதே சமயத்தில் இந்துமத நம்பிக்கையில் இவருக்கு பிடிப்பு இல்லாமல் போனது ஏன் ? என்று தெரியவில்லை. அவர் பணத்துக்காக மாறினார் என்று எவரும் சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனது நண்பர் ஒருவர் (10 ஆண்டுகளுக்கு முன்) மாற்று மதத்தைப் பற்றி பேசும் போது 'அவுங்க சாமிக்கு சக்தி அதிகம் இருக்கும் போல இருக்கு ... அவங்களில் நிறைய பேரு பணக்காரனாக இருக்காங்க பாரேன்' - என்றார். இறை நம்பிக்கை உடையவர்கள் 'அந்த சாமிக்கு சக்தி அதிகம் இருக்கும்' என்று நம்புகிறார்கள் என நினைக்கிறேன் உதாரணத்துக்கு திருப்பதியில் கூடும் கூட்டத்தை குறிப்பிடலாம்.

பின்குறிப்பு : மதங்களை குறை சொல்லும் பின்னூட்டங்களை இடாதீர்கள். எல்லா மதத்திலும் குறைகள் இருக்கின்றன.

22 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

//மத மாற்றம் என்றால் என்ன?//

ஒரு இந்து கிறிஸ்தவனாக மாறினால் அது மத மாற்றம்.

ஒரு கிறிஸ்தவன் இந்துவாக மாறினால் அது 'தாய்மதம் திரும்புதல்'

பெயரில்லா சொன்னது…

kodikkaal cellappaa, murasoli adiyar போன்றவர்கள் ஆய்ந்து படித்து மதம்மாறியவர்கள். கேரள மாதவிக்குட்டியும்.

பெயரில்லா சொன்னது…

1) கொள்கைகளுக்காக
(அப்துல்லா அடியார் போன்றோர்
இஸ்லாத்தில் இணைந்தது)

2) பணத்திற்காக
(கிறித்தவ மிஷினரி)

3) வேலை வாய்ப்புக்காக
(அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் கிறித்தவனாக,முஸ்லிமாக
மதம் மாறுவோர் ஏராளம்)

4) உயிரைக்காக்க
(பாகிஸ்தான் பிரிவினையின் போது
பஞ்சாப் மற்றும் பஞ்சாபைச் சுற்றி
ஆயிரக் கணக்கானோர் இஸ்லாத்தை விட்டது)

5)சூழ்நிலை
(வட/தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் வாழச் சென்ற லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நாளடைவில் கிறித்துவத்தை தழுவியது)

and etc.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்களுக்கு தெரிந்து அவ்வாறு யாரும் மாறி இருக்கிறார்களா//

ஜிகே அய்யா,

ஓ இருக்காங்களே.
நம்ம அண்ணா, கனவுல வந்து சொன்னாக்க நம்ம மஞ்ச துண்டு...//

அனானி அண்ணா... உங்க பின்னூட்டத்தில் அரசியலே இருப்பதால் முழுதும் வெளியிட முடியவில்லை.

ஜோ/Joe சொன்னது…

/சிங்களர்களில் வேற்று மதத்தினர் இருக்கிறார்களா ? என்று எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் தெரியபடுத்துங்கள்.//
சிங்களர்களில் பெரிய எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் . சந்திரிகாவின் குடும்பமே மூன்பு கிறிஸ்தவர்களாக இருந்து பின்னர் புத்த மதத்துக்கு (அரசியல் காரனங்காளுக்காக) மாறியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா கிறிஸ்தவர் தானே.

பெயரில்லா சொன்னது…

//அனானி அண்ணா... உங்க பின்னூட்டத்தில் அரசியலே இருப்பதால் முழுதும் வெளியிட முடியவில்லை//

ஜிகே அய்யா,

சந்தர்ப்பவாத மத மாற்றத்துக்கு,அரசியல் காரணம் இருக்க முடியாது என்று நீங்கள் சொல்வது, சரியான வாதமாக எனக்குப் படவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ / Joe said...
சிங்களர்களில் பெரிய எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் . சந்திரிகாவின் குடும்பமே மூன்பு கிறிஸ்தவர்களாக இருந்து பின்னர் புத்த மதத்துக்கு (அரசியல் காரனங்காளுக்காக) மாறியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா கிறிஸ்தவர் தானே. //

ஜோ,

எனக்கு இது புதிய தகவல். மலாய்காரார்கள் எல்லோரும் இஸ்லாமியர் என்பது போல சிங்களர்கள் எல்லோரும் புத்தமதத்தினர் என்று நினைத்து இருந்தேன்.

நன்றி ஜோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜிகே அய்யா,

சந்தர்ப்பவாத மத மாற்றத்துக்கு,அரசியல் காரணம் இருக்க முடியாது என்று நீங்கள் சொல்வது, சரியான வாதமாக எனக்குப் படவில்லை. //

அனானி அண்ணா,

நீங்க முன்பு சொன்ன மஞ்சள் துண்டும், வெள்ளை தாடியும் யாரையும் மதம் மாறச் சொன்னதாக தெரியவில்லை. மதவெறியர்கள் மனம் மாறனும் என்று சொன்னதுதான் தெரியும்.

ஜோ/Joe சொன்னது…

//மலாய்காரார்கள் எல்லோரும் இஸ்லாமியர் என்பது போல சிங்களர்கள் எல்லோரும் புத்தமதத்தினர் என்று நினைத்து இருந்தேன்.//
ஹி..ஹி ..

சிங்களர்களில் முஸ்லிம்கள்,இந்து கிட்டதட்ட கிடையாது .இலங்கை முஸ்லிம்கள் தனி இனமாக கருதப்பட்டாலும் அவர்கள் பேச்சுமொழி தமிழே.

ஆக சிங்களர்களில் பவுத்தர்களும் கிறிஸ்தவர்களும் மட்டுமே .தமிழ் பேசுபவர்களில் இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் .பவுத்தர்க்ள் கிடையாது

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...

//

ஜோ,
மறுமுறை வந்து மேலும் தெளிவு படுத்தியதற்கு நன்றி ஜோ !

ஏன் மாறினார்கள் என்ற கேள்விக்கு இன்னும் எனக்கு விடை தெரியவில்லை. சிங்களர் அனைவரும் ஓர் இனம் ... சாதிகள் இல்லை என நினைக்கிறேன்... அவ்வாறு இருந்தாலும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு நிச்சயம் இருக்காது. அவர்கள் மாறியதற்கு நிச்சயம் ஏற்றத் தாழ்வுகள் காரணமாக இருக்காது என நினைக்கிறேன்.

இன்னும் எனக்கு புரியவில்லை. மதமாற்றத்திற்கு காரணம் மாற்றுமத சடங்குகளினால் ஈர்கப்படுவதா ? அல்லது சக்தி உள்ள கடவுள் அங்கு தான் இருக்கிறது என்று நம்புவதா ?
மதம் மாறுபவர்கள் நிச்சயம் இறைமறுப்பாளர்கள் அல்ல என்பதை நம்புகிறேன்.

ஜோ/Joe சொன்னது…

//சிங்களர் அனைவரும் ஓர் இனம் ... சாதிகள் இல்லை என நினைக்கிறேன்... //
இருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன். கேள்வியும் பட்டிருக்கிறேன்.

ஜோ/Joe சொன்னது…

http://www.lankalibrary.com/cul.html

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...

//
ஜோ,

மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்ட சுட்டியைப் பார்க்கிறேன்

பெயரில்லா சொன்னது…

அறியாமையம், அப்பாவித்தனமும் சாதாரணமான மக்களின்
சமய மாற்றத்திற்றிகு முக்கிய காரணமாகும்.
முதலிலே இருந்த சமயத்தின் உண்மையான தத்துவத்தை அறியாத அறியாமையும்,
மாற்றுமதத்தவர் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பிய அப்பாவித்தனமும்.

மங்கை சொன்னது…

கோவி கண்ணன்

திருமணத்துல காட்டாயத்தின் பேர்ல மத மாற்றம் பத்தி சொன்னீங்க... வேறொரு கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக மதமாற்றம் பண்றவங்களும் உண்டு இல்ல?... ஏதாவது ஒரு காரணம் சொல்லி வேறொரு மதத்துக்கு மாறி..அதற்கு பின் வேறொரு பெண்ணை திருமணம் செய்த ஆண்களும் இருக்கிறார்கள்.... இங்க மதமாற்றத்துக்கு காரணம் மாறின மதத்தினுடைய கொள்கையின் மேல் உள்ள ஈர்ப்போ, பற்றோ அல்ல.. இரண்டாவது திறுமணம் செய்ய அந்த மதம் இடம் கொடுப்பதினால் தான்..

நம்ம ஹிந்து திருமண சட்டத்தின் படி (HMA, 1955) கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டும் மதம் மாறி வேறு திருமணம் செய்து கொண்டால்,அந்த இரண்டாவது திருமணம் செல்லுபடியாகாது என்று ஒரு முறை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது....

இதற்காகவும் மதம் மாறுகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்துல்லாஹ் said...
1) கொள்கைகளுக்காக
(அப்துல்லா அடியார் போன்றோர்
இஸ்லாத்தில் இணைந்தது)

2) பணத்திற்காக
(கிறித்தவ மிஷினரி)//

ஒரு இஸ்லாமியர் பெயரில் இதைச் சொல்வதால் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இந்தியாவில் வேண்டுமென்றால் பணத்திற்காக என்று சொல்வது பொருத்தமாக இருக்கலாம் அவ்வாறும் சில நடக்கிறது. ஆசிய நாடுகளில் அவ்வாறு சொல்ல முடியாது.

//
3) வேலை வாய்ப்புக்காக
(அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் கிறித்தவனாக,முஸ்லிமாக
மதம் மாறுவோர் ஏராளம்)
//

மதம் மாறினால் தான் வேலை என்பது போல் அமெரிக்காவில் இருப்பது போல் தெரியவில்லை. வளை குடாவில் ?

//
4) உயிரைக்காக்க
(பாகிஸ்தான் பிரிவினையின் போது
பஞ்சாப் மற்றும் பஞ்சாபைச் சுற்றி
ஆயிரக் கணக்கானோர் இஸ்லாத்தை விட்டது)
//

சூழல் அல்லது நிர்பந்தம் காரணமாக என்று இதை எடுத்துக் கொள்கிறேன். புதிய தகவல்
//
5)சூழ்நிலை
(வட/தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் வாழச் சென்ற லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நாளடைவில் கிறித்துவத்தை தழுவியது)

and etc.
//

முஸ்லிம்கள் கிறித்துவர்களாக அதுவும் குறிப்பிட்ட தக்க அளவில் மாறி இருக்கிறார்கள் என்பது எனக்கு புதிய தகவல்

நன்றி அப்துல்லா அவர்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
kodikkaal cellappaa, murasoli adiyar போன்றவர்கள் ஆய்ந்து படித்து மதம்மாறியவர்கள். கேரள மாதவிக்குட்டியும்.
//

கொடிக்கால் செல்லப்பா கேள்விபட்டு இருக்கிறேன். மாதவி குட்டி கேள்விபட்டதில்லை. தகவலுக்கு நன்றி.

இந்த தகவல் படி எனக்கு மேலும் புரிவது கடவுள் நம்பிக்கை என்பது மதச்சடங்குகளும் அதைச் சார்ந்த வேத நூல்களில் கூறப்பட்டபடி நடப்பதும் தான் !

சரியா ?

நன்றி அனானி அவர்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
அறியாமையம், அப்பாவித்தனமும் சாதாரணமான மக்களின்
சமய மாற்றத்திற்றிகு முக்கிய காரணமாகும்.
முதலிலே இருந்த சமயத்தின் உண்மையான தத்துவத்தை அறியாத அறியாமையும்,
மாற்றுமதத்தவர் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பிய அப்பாவித்தனமும்.
//

நீங்கள் சொல்வது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் சம்மதம் கேட்காமலேயே மதம் மாற்றப்பட்ட நிகழ்வுகள் நடந்து இருக்கிறது. அப்படி மாற்றப்பட்டவர்கள் தலித்துக்கள்... அவர்கள் ஒட்டுமொத்தமாக இந்துமதத்தை சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டார்கள். இவர்கள் எல்லோரும் தத்துவத்தை அறிந்ததும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்று உங்களால் உறுதிபட சொல்ல முடியுமா ?

பின்னூட்டத்திற்கு நன்றி அனானி அவர்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

// மங்கை said...
கோவி கண்ணன்

திருமணத்துல காட்டாயத்தின் பேர்ல மத மாற்றம் பத்தி சொன்னீங்க... வேறொரு கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக மதமாற்றம் பண்றவங்களும் உண்டு இல்ல?... ஏதாவது ஒரு காரணம் சொல்லி வேறொரு மதத்துக்கு மாறி..அதற்கு பின் வேறொரு பெண்ணை திருமணம் செய்த ஆண்களும் இருக்கிறார்கள்.... இங்க மதமாற்றத்துக்கு காரணம் மாறின மதத்தினுடைய கொள்கையின் மேல் உள்ள ஈர்ப்போ, பற்றோ அல்ல.. இரண்டாவது திறுமணம் செய்ய அந்த மதம் இடம் கொடுப்பதினால் தான்..

நம்ம ஹிந்து திருமண சட்டத்தின் படி (HMA, 1955) கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டும் மதம் மாறி வேறு திருமணம் செய்து கொண்டால்,அந்த இரண்டாவது திருமணம் செல்லுபடியாகாது என்று ஒரு முறை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது....

இதற்காகவும் மதம் மாறுகிறார்கள்

12:12 AM, May 23, 2007
//

மங்கை அவர்களே,

சுயநலம் கூட ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது மற்றபடி பற்று கொள்கை பிடிப்பு அப்படி எதுவும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுடனும் சட்டம் பற்றியும் தெளிவாக சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு பாராட்டுக்கள்.

இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள மதம்மாறுகிறார்கள் என்பது புதிய தகவலாக இருந்தாலும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

எத தின்னா பித்தம் தெளியும்-கிற மனநிலையோட மதம் மாறுகிறவர்களும் உண்டு.

பெயரில்லா சொன்னது…

எத தின்னா பித்தம் தெளியும்-கிற மனநிலையால மதம் மாறுகிறவர்களும் உண்டு.

பெயரில்லா சொன்னது…

// ஜோ / Joe said...
சிங்களர்களில் பெரிய எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் . சந்திரிகாவின் குடும்பமே மூன்பு கிறிஸ்தவர்களாக இருந்து பின்னர் புத்த மதத்துக்கு (அரசியல் காரனங்காளுக்காக) மாறியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா கிறிஸ்தவர் தானே. //

FYI Chandirka's ancestors are tamils, from Nilaperumal root.

http://www.rootsweb.com/~lkawgw/gen1001.htm

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்