சொல்லும் செயலும் வேறு வேறாக இருக்கும் போது சிலவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது. இதில் சிலருக்கு வருத்தம். இருந்தாலும் மனமாற்றம் என்பது ஒரே நாளில் ஏற்படுவதில்லை. அல்லது புரியாமல் பேசுகிறார்கள் ? சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் சொல்வதற்கு தயக்கமில்லாமல் சொல்கிறேன்.
அது டிஸ்கி :)))
பதிவுக்கு வருவோம்.
நான்கு வருண அமைப்பில் சூத்திரன் காலில் இருந்து பிறந்தவன் என்று சொல்லப்படுகிறது. மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ளதாகவும் , மேலும் பகவத் கீதை போன்ற நூல்களில் 4 வருண அமைப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றைப் படித்த வேத பண்டிதர்கள் சொல்கிறார்கள்.
சமூகத்தில் நிதர்சனமாக (நேரிடையாக) தெரிவது சூத்திரன் என்று சொல்லப்பட்டவர்களின் வாழ்வியல் நிலை கேள்விக்கு உறியதாகவும், இழிந்தவர்கள் என்று மற்ற பிரிவினர்கள் ( மற்ற மூவர்ணத்தினர்) அவர்களை தீண்டத்தகாதவர்களாகவே பார்கின்றனர், நடத்துகின்றனர். இன்னும் நிலை அப்படியே இருக்கிறது என்பதை அண்மையில் திரு ரோசா வசந்த் அவர்கள் சுட்டிக்காட்டியெ எய்ம்ஸ் தீண்டாமை குறித்துப் படித்தவர்கள் ஒப்புக் கொள்ளும் விசயம்.
நண்பர் ஹரிகரன் சூத்திரன் காலில் இருந்து பிறந்தவன் என்று சொல்வது இழிவல்ல, உடம்பில் காலையே நாம் போற்றி வணங்குகிறோம், அதன்படியே பெரியவர்களையும் இறைவனையும் காலில் விழுந்து வணங்குகிறோம் காலில் இருந்து பிறந்ததால் இழிவு என்று சொல்வது புறந்தள்ளக் கூடியது என்று மிக விரிவாக எழுதி இருந்தார். பாராட்ட வேண்டிய இடுகை.
மிக சமீபத்தில் மாயாவதி அம்மையார் பதவி ஏற்றதும் அவர் காலில் பல்வேறு வகுப்பு எம்.எல்.ஏக்கள் காலில் விழுந்ததாகவும் சிலருக்கு அவ்வாறு செய்ய மனம் இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
எனக்கு புரியாதது இது,
சூத்திரர்கள் தாழ்ந்தவர் அல்ல ஏனென்றால் நாம் பகவானின் காலில் விழுந்து (சூத்திரனை) வணங்குகிறோம் என்கிறார்கள்.
மாயாவதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிகிறது. மாயாவதியின் காலில் விழுவது தவாறா ?
பெரியார் சொன்ன சுயமரியாதைப் படி எவர் காலிலும் விழுவது தவறு... அதை சிலர் சில நேரங்களில் மட்டும் கடைபிடிப்பது முரண்பாடாக இருக்கிறது. மாயாவதியின் காலில் விழ தயங்கியவர்கள் வேறு எவருடைய காலிலும் விழாதவர்கள் அல்லர்.
தனிப்பட்ட முறையில் நானும் பெரியவர்களின் காலில் விழ தயங்கியதே இல்லை. எனது அன்புக்குரிய நண்பர் (விஎஸ்கே அவர்களின்) காலில் நான் விழுந்திருக்கிறேன். அவரும் தயக்கமின்றி இசைஞானியின் காலை தொட்டு வணங்கியதாக என்னிடம் தெரிவித்து இருக்கிறார்.
அதில் ஒரு குறிப்பிட்ட பின்னோட்டம் என்னை மிகவும் கவர்ந்தது.
//முதல்வர் காலில் விழுந்த மந்திரிகள் கண்டனத்துக்குறியவர்கள். விழாதவர்கள் பாராட்டுக்குறியவர்கள். பொது வாழ்கையில், மக்கள் தொண்டாற்ற வரும் பிரதிநிதிகள் ஒரு தலைவனின் காலில் விழுந்தால், அவருடைய பிடிப்பு தலைவன் மட்டுமே என்று பொருள்படும். தனிப்பட்ட சந்திப்புகளின் போது காலில் விழுவது என்ன? பாத பூஜை செய்த நீரையே பருகிக் கொள்ளட்டும். இவர்களனைவரும் சேர்ந்து நாட்டிற்காக உழைக்கப் போவதாக எடுக்கும் உறுதிமொழிக்கு பங்கம் வராமல் நடந்து கொண்டாலே போதும்.//
இதை எழுதியவர் எவர் என்பது எனக்கு தெரியாது... அது ஒரு அனானி பின்னூட்டம். காலை நாம் தாழ்வாக நினைப்பதில்லை என்று நண்பர் ஹரிஹரன் அறிந்து வைத்திருப்பதை மாயாவதியின் காலில் விழத் தயங்கியவர்களுக்கும் அவர்கள் செய்தது சரியே என்று சொல்பவர்களுக்கும் தெரியாமல் இருந்திருக்குமோ ?
முரண்பாடுகளை வைத்துக் கொண்டு சமத்துவம் பேசமுடியும் ? ஆனாலும் பலர் பேசுகிறார்கள். :)))
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
22 கருத்துகள்:
முதல் அமைச்சர் ஆனாலும் கலெக்டர் ஆனாலும் அவன் தலித்தே. அதைத் தான் இது காட்டுகிறது. சாதி வாரி இடஒதுக்கீட்டின் அவசியமே இதன் காரணம்தான். ம்ம்ம்ம்ம்
//எவர் காலிலும் விழுவது தவறு//
இது பெரியார் சொன்னதுங்க. தமிழ்நாட்டுக்காரர். ஆனா பெரியவங்களைப் பார்த்த மரியாதை நிமித்தமா காலில் விழறது வடக்கத்திய காரங்க பழக்கம். ஒரு வேளை மாயாவதி சிலருக்கு பெரியவங்களாகவும்/மரியாதைக்குரியவங்களாகவும் தெரிஞ்சு இருக்கலாம். சிலருக்கு அப்படி தெரியாமல் போயிருக்கலாம். எல்லாத்தையும் தமிழ்நாட்டு (அவிங்க) மந்திரிங்க மாதிரியே நினைச்சா எப்படிங்க?
//எல்லாத்தையும் தமிழ்நாட்டு (அவிங்க) மந்திரிங்க மாதிரியே நினைச்சா எப்படிங்க?
//
இளா,
அப்படி நான் நினைக்கவில்லை ! ஆனால் விழாதவர்கள் சுயமரியாதைக் காத்தார்களோ என்னவோ. பெரியார் படம் பார்த்திருப்பாங்க போல !
:)
//
சிவபாலன் said...
முதல் அமைச்சர் ஆனாலும் கலெக்டர் ஆனாலும் அவன் தலித்தே. அதைத் தான் இது காட்டுகிறது. சாதி வாரி இடஒதுக்கீட்டின் அவசியமே இதன் காரணம்தான். ம்ம்ம்ம்ம்
//
சிபா,
முதல் பின்னூட்ட போனிக்கு நன்றி !
:))))
நாங்க செயலலிதா பாப்பாத்தி என்பதால் மட்டும் அவர் காலில் விழவில்லை அவர் எல்லா உயர்சாதி இந்துக்களுக்கும் தெய்வம் போல அதனால்தான் விழுகிறோம்
அதிமுக.காலில் விழுவோர் கழகம்
துபாய் கிளை
அம்மா காலில் விழுவதற்கும் கழகம் கண்டவர் என்பதால் இனி அவர் கழகம் கண்ட கா(வ)ல் தெய்வம் என எல்லோறாலும் அழைக்கப் படுவார்
இம்சை அரசனின் புலவர்
கால்ல விழுந்தா தப்பா ?
நாயகனின் பேரன்
தெரியலியேப்பா தெரியலியே
நாயகன்
//அதிமுக.காலில் விழுவோர் கழகம்
துபாய் கிளை //
இது அதிமுக பின்னூட்டம் இல்லை. எலிகுட்டி சோதனையில் எலி சிக்காததால் அமுக பின்னூட்டம் என்றூ தெரிகிறது.
:))))
அப்ப நீங்க ஏன் விழறீங்க?
நிழல்கள் ரவி
முதல்ல அவனை நிருத்த சொல்லு நான் நிறுத்தறேன்
நாயகன்
உங்கள் கவனத்தை ஈர்த்த பின்னூட்டமிட்ட அதே அனானி எழுதுகிறேன்:
நான் சொல்ல வந்தது காலில் விழும் மகத்துவம் பற்றி அல்ல. அதை செய்யும் இடம் பற்றியது. இவர்கள் அனைவரையும் மக்கள் தெரிந்தெடுத்தது (அல்லது தெரியாமல் எடுத்தது:-)), மக்கள் பணியாற்ற. தலைவன் பாதம் தொழ அல்ல. பதவியேற்பு மேடை ஒரு அரசு விழா. தனிப்பட்ட விழா அல்ல. ஒரு அலுவலகத்தில் நமக்கு பதவி உயர்வு கிடைத்தால், உடனே நம்முடைய மேலாளரின் காலில் அலுவலகத்திலுள்ள அனைத்துப் பணியாளர்கள் முன்னாலும் விழுவது எப்படிப்பட்ட எண்ணத்தை மற்றவர்கள் மனதில் விதைக்கும் என்பதைத் தான் நான் சுட்டுகிறேன். பெரியவர்களிடமும், மற்ற நாம் மதிக்கும் மனிதர்கள் (வயது வித்தியாசமின்றி), காலில் விழுவது நமது பண்பாடு - தனிப்பட்ட முறையில். ஆனால் பொதுவிடத்தில், ஒரு பொதுவான பணிக்காக உறுதிமொழி ஏற்கும் போது அதை செய்வது கண்டிக்கத்தக்கது.
ஹரிஹரனின் பதிவை நீங்கள் சொன்னபிறகு தேடிப் படித்தேன். அதனுடன் நான் உடன்படுகிறேன். நாம் நம்முடைய உடலின் பாகங்களை வேறுபடுத்திப் பார்பதில்லை. நம்முடைய கால் நம்மை அவமானப் படுத்த முடியாது. அதே போல், அண்ட சராசரங்களின் உருவமாகிய இறைவனின் உறுப்புக்கள் நாம் யாருக்கும் என்ற வேற்றுமையையும் ஏற்படுத்த முடியாது. 'முகம்' எனும் வடமொழிச் சொல்லுக்கு 'நாக்கு' என்பதும் பொருள். சிலருக்கு நாக்கு என்பது பிறரின் எச்சில் என்கிற பொருளில் அருவருப்பை ஏற்படுத்தும். ஆகவே சிலர் முகத்திலிருந்து பிறந்தார்கள் எனக் கூறுமிடத்து, அவர்கள் உயர்ந்தவர்கள் என்பதும் பிறர் தாழ்ந்தவர்கள் என்பதும் நம் அறியாமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இறைவன் படைப்பில் யாவரும் சமம் என்பதை மனதிலிருத்தி பதிவுகளிலும் அதே எண்ணத்தைப் பரப்புமாறு வேண்டுகிறேன்.
அதே அனானி அண்ணா,
காலில் விழுவது தவறென்பதில் உங்கள் கருத்தில் ஏன் தலைவர்கள் காலில் விழுவது மட்டும் தவறு என்கிறீர்கள். இந்தியாவியல் சாமியாகள் காலில் கூட்டம் கூட்டமாக பொதுவில் விழுகிறார்களேஎ அதைப் பற்றி என்ன நினைக்கீறீர்கள்.
மக்கள் நலனுக்காக பாடுபடும் ஒரு தலைவரும், மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என்று நினைக்கும் சாமியார்களின் காலில் விழுவதற்கும் ஒரே அளவுகோல் கிடையாதா ?
கோவி சகோதரரே(நீங்கள் அண்ணனா, தம்பியா என்று தெரியவில்லை):
மத போதகர்கள் காலில் விழுவதும், அரசியல்வாதிகள் காலில் விழுவதும் ஒன்றாக முடியாது. மத போதகர்கள் காலில் விழுவது ஒரு சமய நம்பிக்கையின்பாற் பெற்றது. அவர்கள் வாழ்வது ஆன்மிக பொது வாழ்வு.
மந்திரிகளும், இதர அரசு பிரதிநிதிகளும் கூட தங்கள் சமய நம்பிக்கையின்பாற் எந்த பழக்கத்தையும் பின்பற்றலாம்.
அரசு மேடையில், மக்கள் சேவைக்காக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தங்கள் தலைவனின் காலில் விழுவது ஒத்துக் கொள்ளமுடியாது. அப்படியும் அவர்கள் யார் காலிலாவது விழுந்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால், அவர்களுக்கு ஓட்டுப் போட்டு பதவி கொடுத்த மக்களின் காலில் தான் விழ வேண்டும். பணம் வாங்கிக் கொண்டு சீட்டு கொடுத்த இன்னொரு அரசியல்வியாதியிடம் அல்ல.
கருத்துக்கள் பகிற வாய்ப்பளித்த சகோதரருக்கு நன்றி!
//அவர்களுக்கு ஓட்டுப் போட்டு பதவி கொடுத்த மக்களின் காலில் தான் விழ வேண்டும். பணம் வாங்கிக் கொண்டு சீட்டு கொடுத்த இன்னொரு அரசியல்வியாதியிடம் அல்ல.
கருத்துக்கள் பகிற வாய்ப்பளித்த சகோதரருக்கு நன்றி! //
அனானி அவர்களே நல்லது ! உங்களுக்கும் எனக்கும் வேண்டுமானால் அரசியல்வாதிகள் காலில் விழுவது இழிவாக இருக்கலாம். அவர்களின் தயவில் எம்.எல்.ஏ பதவி பெற்றவர்கள் அவர்களுடைய தலைவர்களை உயர்வாக நினைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா ?
காலில் விழாத அந்த எம்.எல்.ஏக்கள் அத்வானி மற்றும் வாஜ்பாயை சந்தித்தால் விழமாட்டார்கள் சுயமரியாதை செம்மல்களாகவே இருப்பார்கள் என நினைக்கிறீர்களா ?
அப்படி ஒருவேளை அவர்கள் விழுந்தால் அதையும் கண்டிப்பீர்களா ?
விளக்கம் ப்ளீஸ்... இதுதான் கடைசி மறுமொழி உங்கள் பின்னூட்டத்திற்கு... இதன் பிறகு இந்த லாவனியை தொடர எனக்கும் விருப்பம் இல்லை.
வணக்கம் அன்பரே...
http://www.vanjoor-vanjoor.blogspot.com இந்த பதிவர் மற்ற மதத்தை பற்றி மட்டும் இழிவாக கருதியும் எழுதியும் வருகிறார்! தயவு செய்து இவரது எல்லா இடுகைகளையும் படித்து பாருங்கள், பிறகு (சரியென்றால்!) இதனை தமிழ் மனத்திலிருந்து நீக்க சொல்லி அறிவுறுத்துங்கள்!
//Anonymous said...
வணக்கம் அன்பரே...
http://www.vanjoor-vanjoor.blogspot.com இந்த பதிவர் மற்ற மதத்தை பற்றி மட்டும் இழிவாக கருதியும் எழுதியும் வருகிறார்! தயவு செய்து இவரது எல்லா இடுகைகளையும் படித்து பாருங்கள், பிறகு (சரியென்றால்!) இதனை தமிழ் மனத்திலிருந்து நீக்க சொல்லி அறிவுறுத்துங்கள்!
//
அனானி அவர்களே,
அவர் இஸ்லாமியர் என்று அவருடைய பதிவைப் பார்த்ததும் தெரிகிறது. இந்துமத சீர்கேட்டை சரிசெய்ய இந்துமத்தில் உள்ள நற்சிந்தனையாளர்களே போதும் என்பது என் கருத்து.
அவர் தொடர்ந்து இவ்வாறு எழுதுவதை இஸ்லாம் அன்பர்கள் கண்டும் காணாது இருந்தால் ... இஸ்லாம் பற்றி இழிவாக எழுதும் இந்துபதிவர்களை எவரும் கண்டிக்க முன் வரமாட்டார்கள் என நினைக்கிறேன்.
பதிவுக்கு தொடர்பில்லாத் இதுபோன்ற பின்னூட்டங்கள் ஏற்புடையது அல்ல.
கோவி அவர்களே: மீண்டும் கூறுகிறேன். யாராக இருந்தாலும், மக்கள் தொண்டாற்ற உறுதிமொழி எடுக்கும் அரசு மேடையில், தன் தலைவனின் காலில் விழுந்தால் அது கண்டிக்கத்தக்கது. அது வாஜ்பாய், அத்வானியாக இருந்தாலும் சரி, சோனியா, மாயாவதி, ஜெ ஆக இருந்தாலும் சரி. அவர்கள் ஆசை அதுவானால், அவர்களது வீட்டில் போய் விழுந்து ஆசி வாங்கிக் கொள்ளட்டும். மக்கள் மன்றத்தில் அல்ல.
நன்றி.
//அவர்களது வீட்டில் போய் விழுந்து ஆசி வாங்கிக் கொள்ளட்டும். மக்கள் மன்றத்தில் அல்ல.
நன்றி.//
அனானி அய்யா,
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.ரகசியமா நடந்ததுன்னா,இந்த
கண் கொள்ளா காட்சியை நாம எப்படி பார்த்து ரசிக்க முடியும?
//கோவி அவர்களே: மீண்டும் கூறுகிறேன். யாராக இருந்தாலும், மக்கள் தொண்டாற்ற உறுதிமொழி எடுக்கும் அரசு மேடையில், தன் தலைவனின் காலில் விழுந்தால் அது கண்டிக்கத்தக்கது. அது வாஜ்பாய், அத்வானியாக இருந்தாலும் சரி, சோனியா, மாயாவதி, ஜெ ஆக இருந்தாலும் சரி. அவர்கள் ஆசை அதுவானால், அவர்களது வீட்டில் போய் விழுந்து ஆசி வாங்கிக் கொள்ளட்டும். மக்கள் மன்றத்தில் அல்ல.
நன்றி.//
நல்லது அணானி நண்பரே !
களத்தில் இறங்கி (கொள்ளை அடிப்பதை விடுங்கள் ) மக்கள் பணிக்காக வேலை செய்வதில் சாமியார்களை விட உயர்ந்தபதவிக்கு முயற்சியால் வந்த அரசியல் வாதிகள் காலில் விழுவது தவறு அல்ல என நினைக்கிறேன். ( நான் விழச்சொல்லவில்லை ) ஒரு ஒப்பீட்டிற்காக சொன்னேன். மற்றபடி அத்வானி, வாஜ்பாய் பெயரைச் சொல்லியும் பல்டி அடிக்காத உங்களைப் பாராட்டுகிறேன்.
கண்டிப்பாக நீங்கள் நினைப்பது போல் நினைத்து அவர்கள் விழாமல் இருந்துவிட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. மாயாவதி இடத்தில் அத்வானி, வாஜ்பாய் இருந்தால் விழுந்திருப்பார்களா ? என்று அவர்கள் சார்பில் பேசும் (உங்களைத் தவிர்த்து) மற்றவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் !
:))
வேறு எவரும் சொல்லாததால் இன்னும் மேற்கண்ட கேள்விக்கு விடை தெரியவில்லை.
மனிதர்கள் சக மனிதர்களின் காலில் விழுவதைத் தவிர்ப்பது நல்லது என்றே எனக்குத் தோன்றுகிறது.
மதிப்பைத் தெரிவிக்கக் கையைக் குவித்து மார்பருகில் வணங்கினாலே எதிராளியினுள் இருக்கும் பிரம்மத்தை வணங்கியதாகி விடும்.
யாரும் யாரை விட உயர்ந்தவரும் இல்லை, யாரும் யாரை விடவும் தாழ்ந்தவரும் இல்லை. அதைக் கொண்டாடும், வணக்கம் தெரிவிக்கும் முறை, மனிதனை மனிதன் மதிப்பதாக அமையும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
என்னத்த சொல்ல.... அது அவர் அவர்களின் சுய மரியாதையை பொருத்த விசயம் ... அரசியலில் இருப்பர்வர்களுகு அது எல்லாம் இருக்கா என்பது வேற விசயம்
மாயாவதி காலில் விழ மறுத்தவர்கள் யாரு... அவருடைய கட்சிக்காரர்கள் என்றால் பதவியை விட சாதி பெரிதாக இருக்காது என்பது என் எண்ணம். வேற ஏதும் காரணமாக இருக்கலாம்.
கருத்துரையிடுக