பின்பற்றுபவர்கள்

17 மே, 2007

பார'தீய' ஜெகதால கட்சி !

மக்கள் ஆட்சியை முடக்கிப் போடவேண்டும் என்பதற்கு ஒரு கட்சி இருக்கிறதென்றால் அது தேசிய(திற்கே) 'வாத' கட்சியான பாஜக தான். நாட்டு நலன் குறித்த பிரச்சனைகள் நதிகள் இணைப்பு, நீர் நிலை மேம்படுத்துதல் போன்ற ஆயிரம் அவசியமான பிரச்சனைகள் இருக்கின்ற போது இராமர் பிறந்த இடம் என்று கூறி சங்கர் பரிவார கும்பலுடன் சேர்ந்து பாபர் மசூதிக்கு வேட்டு வைத்தனர். அன்று முதல் டிசம்பர் 6 என்றாலே பயணம் செல்வோர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்லும் நிலைக்கு அது இந்து வெறி - இஸ்லாமிய வெறி என்ற அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

இந்துக்கள் என்று வெளியில் சொல்வதற்கே கூச்சப்பட வைக்கும் நிலைக்கு மதவாதத்தினால் மற்ற மதங்களை சேர்ந்தவர்களை எரித்தும் கொலை செய்தும் கொடுமைகள் இந்து வெறியர்களால் நடந்து வருகிறது. பிரச்சனைகளுக்கு இவர்களே மூலகாரணம். அதைத் தொடர்ந்து தான் இஸ்லாம் பெயரில் தீவிரவாதிகள் இந்தியாவை குறிவைத்து மும்பை மற்றும் பாராளுமன்ற வெடி குண்டு போன்ற கோர தாண்டவங்களை நடத்திக் காட்டினர்.

கடந்த நூற்றாண்டுகளில் எல்லா மதமும் சேர்ந்து ஒற்றுமையாகத்தான் இருந்தனர். அன்றையபரந்துவிரிந்த இஸ்லாமிய ஆட்சியில் கூட இந்து முஸ்லிம் மோதல்கள் இன்றைக்கு நடக்கின்ற அளவுக்கு நடந்ததாக தெரியவில்லை. இந்துக்கள் பட்டியலில் தலித்துக்களை இணைத்தைத் தவிர மதவாத சக்திகள் இந்துமதம் என்ற பெயரில் தலித்துக்களுக்காக பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. மதப்பற்றைவிட மதவெறியையே அதிகம் வளர்த்து இருக்கின்றனர்.

இன்றைக்கு இராமர் பாலம் என்ற பெயரில் ஒரு ந(ல்)லத்திட்டத்துக்கு பெரிய ராமமாக போட பாராளுமன்றத்தில் தினம் அமளி ... மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. கால ஓட்டத்தில் கண்டங்கள் பிரிந்ததற்கு அடையாளமாகவே சிலபகுதிகளின் தொடர்ச்சிகள் அதை காட்டுகிறது. அதை வெட்டி எடுத்துவிட்டுதான் ஜலசந்திகள் அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படுத்தி கடலில் சுற்றிவரும் தூரத்தைக் குறைத்து வியாபாரத்தை பெருக்கி இருக்கின்றன. இலங்கையும் இந்தியாவில் இணைந்த பகுதியாக இருந்து பிரிந்ததற்கு அடையாளமாக கடற்பாறை தொடர்சி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருக்கிறது. கற்பனைக்கு பஞ்சமில்லாத 'இழிகாச'வியாதிகள் நாசா புகைப்படத்தைக் காட்டி இராமர் பாலம் என்று சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். இந்தியாவை பின்னோக்கி அழைத்துச் செல்வதே இவர்கள் கொள்கையாக இருக்கிறது.

அது இராமர் பாலம் என்று நம்பினால் அதில் ஒரு பகுதியை உடைத்து எடுத்துச் சென்று இராமர் பாதம் என்று சொல்லி பூஜை செய்வதைப் போல் செய்யலாமே. பூஜை எதுவுமே நடத்த முடியாத ஒருபாலத்தைக் காட்டி மாராடிப்பதால் நாட்டுக்கோ, இந்துக்களுக்கோ என்ன பயன் ? நல்லாட்ட்சி நடத்தாவிட்டால் அரசை அகற்றும் ஜனாதிபதி அதிகாரம் போல் பாராளுமன்றத்தை முடக்கும் எதிர்கட்சிகளின் எம்.பி பதவியை ரத்து செய்யும் சட்டம் இயற்றப்படவேண்டும்.

13 கருத்துகள்:

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் ஜிகே வர வர அடிச்சு ஆடற மாதிரி இருக்கு அடிங்க அடிங்க :)

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
வாழ்த்துக்கள் ஜிகே வர வர அடிச்சு ஆடற மாதிரி இருக்கு அடிங்க அடிங்க :)
//

மகி,

சங்கர்பரிவார கும்பல் பிறகு அத்வானி பிறந்த இடம் என்று சொல்லி பாகிஸ்தானுக்கு மண்வெட்டியை தூக்கிட்டுபோய் மண்டபம் எழுப்பதயாராகிடுவாங்க !

Unknown சொன்னது…

//சங்கர்பரிவார கும்பல் பிறகு அத்வானி பிறந்த இடம் என்று சொல்லி பாகிஸ்தானுக்கு மண்வெட்டியை தூக்கிட்டுபோய் மண்டபம் எழுப்பதயாராகிடுவாங்க //

அதுக்கெல்லாம் வேலை யிருக்காது போல முஸ்ரப் பிறந்தது இந்தியாவுல தானே அவரு அங்கயே போகட்டுமின்னு சவுத்த்ரி இப்பவே போராட்டம் நடத்துவதா காற்றில் சேதி ? ஆமா அத்வானி பாகிஸ்தான்லயே இருந்தா என்ன கேடு?

பெயரில்லா சொன்னது…

மகேந்திரன்.பெ said...

இது சமீபத்தில் அதாவது கி.மு 254367 இல் நடந்தது ராமர் அந்த பாலத்தை கட்டியபோது நான் அதற்கு ஆதரவளித்து கடிதமெல்லாம் போட்டிருக்கிறேன் அது அப்போதே ராமாயணத்தின் கடைசி பக்கத்தில் கால் பக்கம் வந்தது. சோ கூட அதில் இன்னும் கற்களை அதிகம் போட்டால் காலத்துக்கும் வரும் என கார்டூண் போட்டார் , ராஜாஜியும் இதற்கு பெரும் ஆதரவு திரட்டி அதற்க்காக அப்போதே மவுண்ட் பேட்டனிடம் பல்லக்கு தூக்கினார் இன்னும் சொல்லப்போனால ராமர் பாலத்தை இடிக்க கருணாநிதி நடத்தும் போலி நாடகம் இந்துக்கள் மனசை புன்படுத்துவது ஆகும் இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த ஜாட்டான்கள் செய்யும் வேலைகளை உடனே நிருத்த வேண்டும் இல்லாவிட்டாம் தமிழகம் பொங்கி ரத்த ஆறு ஓடும்

வாசகன் சொன்னது…

இப்படியெல்லாம் எழுதினா அழுதுருவேன் ன்னு ...கே' ஐயாக்கள் வந்து பம்முவாய்ங்களே சார்.. என்னா செய்வீங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
அதுக்கெல்லாம் வேலை யிருக்காது போல முஸ்ரப் பிறந்தது இந்தியாவுல தானே அவரு அங்கயே போகட்டுமின்னு சவுத்த்ரி இப்பவே போராட்டம் நடத்துவதா காற்றில் சேதி ? ஆமா அத்வானி பாகிஸ்தான்லயே இருந்தா என்ன கேடு?
//

இதுவேறயா ... இராமர் பிறந்த மண் மேல் பற்று இருப்பது போல் பாகிஸ்தான் மேலேயேயும் அத்வானி ஜீ க்கு பற்று இருக்கு. ஜின்னாவுக்கு சமீபத்தில் சலாம் போட்டாரே !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பங்களாதேஷ் கிரிக்கெட் டீம் said...
மகேந்திரன்.பெ said...

இது சமீபத்தில் அதாவது கி.மு 254367 இல் நடந்தது ராமர் அந்த பாலத்தை
//

நல்லா அடிச்சு ஆடுறேள் ! நீங்க யாரை சொல்றேள்ன்னு நேக்கு புரியல ஸெத்த வந்து சொல்லிட்டு போறேளா ?
:)

வடுவூர் குமார் சொன்னது…

பெரிய ராமமாக
நாமம்?
நாமம் போடுவது என்பது ஏமாற்றுவதா?
உங்கள் எழுத்தில் இப்படியா?
ஒருவனை திட்டுவதற்கு அடுத்தவனை எதற்கு மிதிக்கவேண்டும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
பெரிய ராமமாக
நாமம்?
நாமம் போடுவது என்பது ஏமாற்றுவதா?
உங்கள் எழுத்தில் இப்படியா?
ஒருவனை திட்டுவதற்கு அடுத்தவனை எதற்கு மிதிக்கவேண்டும்?
//

குமார்,

நாமம் போடுவது என்பது வழக்கில் ஏமாற்றுப் பேர்வழிகளை குறித்து சொல்லும் சொல் தானே.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்துக்கு இராமர் பெயரில் முட்டுக்கட்டைப் போடுவதை வேறு எப்படி சொல்வது ?

பட்டைப் போடுவது என்று சொல்வது இங்கு பொருந்ததே !

:)

கோவித்துக் கொள்ளாதிங்க குமார்.
பழமைவாதங்களினால் எந்தபயனும் இல்லை என்பது என்கருத்து !

:)

வடுவூர் குமார் சொன்னது…

கோபம் இல்லை கோவியாரே,ஆதங்கம்.

பெயரில்லா சொன்னது…

அன்பு கோவி: ஜெ ஆட்சியின் போது இந்த திட்டத்திற்கு முழுவதுமாக முட்டுக் கட்டை போட்டது கலைஞர் தான் என்பது தெரியும் தானே? சுற்றுப்புற சூழல் அது, இது என்று பாலு மூலமாக தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிறையதிட்டங்களை கிடப்பில் போட்டார். இப்போது ஜெ தன் நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார். ஆகவே இவர்கள் முழு மூச்சாக இதில் இறங்கி இருக்கிறார்கள். இதில் பாஜக வை குறை சொல்வது மடத்தனம். மேலும் இவர்களுடைய அரசியல் அரக்கத்தனங்களுக்கு நீங்களாகவே ஒரு அர்த்தம் கற்பித்துக்கொண்டு அவர்களை நம்புவது பரிதாபத்திற்குறியது. எல்லாருமே அரசியலில் ஒரே குறிக்கோளோடு தான் உள்ளனர். பணம் பண்ணுவது என்பது தான் அது. அதைப் புரிந்து கொள்ளாமல், தேசியம், திராவிடம் என்ற இல்லாத வார்த்தை விளையாட்டில் மயங்கித் தான் தமிழன் இன்று இந்த நிலமையிலிருக்கிறான். அடுத்த மேலடுக்கில் யோசிக்கவே மாட்டீர்களா? இது வந்தவுடன் நீங்கள் நினைப்பது போல் ஒரு நன்மையும் வரப்போவதில்லை. அது இல்லாததால் ஒன்றும் குடிமுழுகப் போவதும் இல்லை. காசு மட்டும் போக வேண்டிய பைகளுக்கு போய் கொண்டே இருக்கும். நீங்களும் பேப்பரும், டீவீயும் பார்த்துவிட்டு இந்த மாதிரி பதிவு போட்டு யாரையாவது திட்டுவீர்கள். அவ்வளவு தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
அன்பு கோவி: ஜெ ஆட்சியின் போது இந்த திட்டத்திற்கு முழுவதுமாக முட்டுக் கட்டை போட்டது கலைஞர் தான் என்பது தெரியும் தானே? சுற்றுப்புற சூழல் அது, இது என்று பாலு மூலமாக
//

அன்பு அனானி நண்பரே, தினம் தினம் பாராளுமன்றத்தில் இது குறித்து நடக்கும் அமளிகளாலேயே இது குறித்து எழுதினேன். திட்டம் பயனா இல்லையா ? என்று எவரும் விவாதம் செய்வது போல் தெரியவில்லை. இராமர் பாலம் என்ற பெயரில் இந்த திட்டத்தைக் கிடப்பில் போட சொல்வதற்கு தான் எதிர்ப்பு. பாஜக காலத்தில் இந்த திட்டம் வரையெறுக்கப் பட்டதாக டி.ஆர் பாலு சொல்கிறாரே. அப்போது எதிர்க்காத பாஜக ஏன் தற்போது எதிர்க்கவேண்டும். அறுபது ஆண்டுகாலமாக ஏன் பாரதி கூட கோடிட்டு சொன்ன சேது சமுத்திர திட்டத்தில் ஆதாயம் (அரசியல் ஆதயம் பற்றி அல்ல) இல்லை இருக்காது என்றா இவ்வளவு நாளும் அதைப் பற்றி பேசி செயல்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

பாபர் மசூதியை இடித்தால் இராமர் கோவில் கட்டிவிடலாம் என்று நினைத்தார்களே இடித்ததும் அது போல் எதுவும் நடந்ததா ? மத்திய அரசு பாதுக்காப்புக்காக கோடிக்கணக்கில் அந்த இடத்திற்கு செலவு செய்துவருவது மட்டுமே நடக்கிறது. பாபர் மசூதியில் கைவைக்காவிட்டால் நாம் டிச 6ல் பயமில்லாமல் வெளியில் சென்று வர முடியும். எத்தனையோ கோவில்கள் பாலடைந்து கிடப்பதெல்லாம் பாஜகவுக்கு கண்ணுக்கு தெரியாது அவற்றை சீர்படுத்த என்ன முயற்சி செய்கிறார்கள். இராமர் பாலம் என்ற பெயரில் அரசியல் பரபரப்புக்காக பொய்கதைகளை கூறிவருகின்றனர். பாரம்படியம் பார்த்து மலைக் கோவில்க்களில் இருக்கும் மலைகளை உடைக்காமல் இருக்கிறோமா ? சாலை அமைக்கிறோமே, இழுவை இரயில் அமைக்கிறோம் எல்லாம் பக்தர்கள் வசதிக்காக... ஒரு வேளை அது இராமர் பாலமாக இருக்கும் போது மக்கள் வசதிக்காக அதை உடைத்தால் என்ன தவறு ?

பெயரில்லா சொன்னது…

அன்பு கோவி:டிச். 6ல் இன்றும் நாம் நடமாட முடியாததற்குக் காரணம் நம் முஸ்லிம் சகோதரர்களே. சுதந்திர இந்தியாவில் இன்றும் ஆயிரக்கணக்கான கோவில்கள், சிலைகள் இடிக்கப்பட்டு மசூதிகள், மாதா கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றுக்கும் இந்து சகோதரர்கள் ஒரு நாள் குறித்து அன்று நாடு முழுவதும் கருப்பு நாளாக அனுஷ்டிக்க ஆரம்பித்தால் நாடு தாங்குமா? நடந்தது ஒரு தவறு - அதையே சாக்காக வைத்து காலத்துக்கும் கலகம் செய்யும் இஸ்லாமிய சகோதரர்கள் சற்றே நிதானித்து சிந்தித்தால் இந்த பிரச்சினை என்றோ ஓய்ந்திருக்கும்.

அதே போல், சேது சமுத்திர திட்டத்தால் நாம் பாதுகாப்பிற்காக செலவிடப் போகும் தொகை அந்தத் திட்டத்தால் வரும் வருமானத்தை மிஞ்சி விடும் என்பது நிபுணர்களின் கருத்து. ஏற்கனவே தமிழக கடற்கரைகள் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாகவே இருந்து வருகிறது. என் கருத்து என்னவெனில், ராமர் பாலம் இருந்தாலும், இல்லாவிடிலும் ஒரு பயனும் இல்லை. நாசா புகைப்படம் காண்பிக்காவிருந்தால், இப்படி ஒரு அமைப்பு இருப்பதே நம்மில் பலருக்கு தெரியாது போயிருக்கும். அதேபோல் இந்த திட்டம் வந்தாலும், வராவிடிலும் ஒரு நஷ்டமும் இல்லை. மேலும் அது வந்தால் நமக்கு மேலும் பல threats மற்றும் risks அதிகமாகும் என்கையில் இதில் இவ்வளவு முனைப்பு தேவைதானா என்பது விவாதத்திற்குறியது. மற்றுமொரு ஆய்வு மேற்கொள்வதால் ஒன்றும் குடி முழுகிவிடாது.
ஆட்சிக்கு வந்து இன்னும் உருப்படியாக ஒரு கிமீ தார் ரோடு போடப்படவில்லை. சென்னையை அடுத்த IT corridor எனப்படும் சாலை வேயும் 'flagship' திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரு inch நகரவில்லை. கடலை நோண்டுவதற்கு மக்கள் பணம் வீணடிப்பதில் இவ்வளவு வீராப்பு எதற்கு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கையூட்ட எதில் வாய்ப்பு அதிகமோ அதில் முதலில் முனைவது 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள மட்டுமே'. அந்த அம்மா வேறு 'மைனாரிட்டி அரசு' என்று வரிக்கு வரி வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். :-).
நானும் நீங்களும் என்ன பேசிக் கொண்டிருந்தாலும், அங்கு அவர்கள் பைகள் நிரம்பிக் கொண்டுதான் இருக்கும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்