கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கேலிக் கூத்து நடத்திய சன் டிவி குழுமம் அதற்கான நற்பலனை அனுபவித்து இருக்கிறது. மதுரை தினகரனின் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதை தூண்டிவிட்டதாக பகிரங்கமாக முக அழகிரி மீது குற்றம் சுமத்தி இருக்கிறது சன் டிவி. இன்றுதான் முதன்முதலாக ...தற்பொழுது அழகிரியைப் பற்றி சன் செய்தியில் சன் டிவி குற்றப் பத்திரிக்கை வாசித்து வருகிறது.
அதாவது த.கி கொலையில் அழகிரியின் பங்கு, மதுரை இட்லி கடையை உடைத்தது, மேலும் பேருந்துகளைக் கொளுத்தியது குறித்து தற்பொழுது தான் சன் டிவி திருவாய் மலர்ந்திருக்கிறது. வாரிசு அரசியல் கருத்துக் கணிப்பில் சிலர் தங்கள் வாரிசுகள் மூவரை இழந்தது தான் சன் டிவியின் கைங்கரியம்.
இதுபோன்ற சர்சைகளைக் (கருத்துக் கணிப்பு ?) கிளப்பி வன்முறை நடப்பதற்கு காரணமான சன் டிவி நிருவனத்தின் மீதும், தூண்டிவிட்டவராக சன் டிவியால் சொல்லப் படுகின்ற அழகிரிக்கும் கடுமையான தண்டனைகளை பெற்று தர அரசு முன்வரவேண்டும்.
வழக்கு முடியும் வரை சன் டிவியை தடை செய்ய அரசு வழக்கு தொடுக்க வேண்டும். ரவுடிகள் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் விரோத தொலைக்காட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மதுரை எரிந்துக் கொண்டிருக்கும் போது பீடி தொழிலாளர்களின் போராட்டம் பற்றி எதுவும் நடக்காதது போல சட்டமன்றத்தில் முதல்வர் பேசுகிறார்.
பின்பற்றுபவர்கள்
9 மே, 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
13 கருத்துகள்:
நண்டு கொழுத்தா வலையில தங்காதுன்னு சொல்வாங்க. அது மாதிரிதான் இது. நண்டு கொழுத்திருச்சு. வலையும் சிறிசு. அடுத்த வலைய நோண்ட வேண்டியதுதானே. நோண்டீருச்சு. பலனை அனுபவிக்குது. ஆனா பாவம். இறந்து போனது வேற குடும்பத்துக்காரங்க. அதுதான் வயித்தெரிச்சல். உட்கட்சி ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைச்சிட்டு வாரிசு அரசியல் நடத்துனா இப்படித்தான் இருக்கும். அடுத்த கட்சியக் கிண்டல் அடிக்கும் போது இனிச்சது. இப்ப கசக்குது.
தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும்......... என்ற நிலைமையில் கருணாநிதியும், அவரது குடும்பங்களும்........
அய்யய்யோ!
அழகிரியா செய்தது. அப்ப புலி செய்யெல்லையா? தமிழ்நாடு பொலிஸ் கமிஷனரிடம் இன்னும் அஞ்சு நாள் கொடுங்கப்பா திடுக்கிடும் தகவலோட வருவார்!!!!!
திமுகவால் அரகேற்ற்ப்பட்ட இந்த வன்முரைக்கும், அஇஅதிமுகவால் அரகேற்ற்ப்பட்ட கிரிஷ்னகிரி பேருந்து எரிப்பு சம்பவத்துகும் எந்த வித்தியாசமும் இல்லை.
தனி மனித ஒழ்க்கம் இல்லாத ஒருவர் தலைவன் ஆனால் இப்படி தான் ந்டக்கும்(இது JJ விற்கும் பொருந்தும்). இவர்களீன் சுயந்லதிற்க்காக் பலியாகபோவது இன்னும் எத்தனை உயிர்களோ?
பழங்காலத்தில் நாட்டை ஆளும் ராஜாக்கு வயதானாலோ அல்லது தீடீர் என்று நோய்வாய்ப் பட்டாலோ வாரிசுகளுக்குள் போர் மூழும் என்று சில கதைல படிச்சதை இப்ப நேர்ல பார்க்கும் பாக்கியம் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.. :)
//வழக்கு முடியும் வரை சன் டிவியை தடை செய்ய அரசு வழக்கு தொடுக்க வேண்டும்//
சன் டி.வி மேல் உங்களுக்கு ஏன் இந்த காண்டு. தினகரன் அன்புமணி இராமதாசுக்கு 2% ஆதரவு தான் உள்ளது என்றும் கூட சர்வே வெளியிட்டது. அதை பா.ம.க கையாண்ட விதம் மெச்சத்தக்கது. இங்கே ஒரு சர்வேயை கூட சரியான முறையில் அனுக தெரியாத அழகிரி மீது தானே தவறு அதற்கு சன் எப்படி பொறுப்பாகும். அழகிரி தான் தினகரனை படிப்பதே இல்லை என்று சொல்லிவிட்டு இன்று செய்திகள் முழுவது தினகரன் இடம் பெறச் செய்துவிட்டார். எப்படி இருந்தாலும் உயிரிழப்புகள் மிகவும் வேதனை தான் தருகிறது
சன் டிவி சிரீயல் பார்த்துச் சரியான சித்திரவதை அனுபவிச்சு இருப்பீங்கப் போலிருக்கு.. கருத்துக் கணிப்பு நடத்தியது தினகரன் நாளிதழ்.. ஆனா சன் டிவியைப் போய் தடைப் பண்ணச் சொல்லுறீங்க...
அப்படி தடைப் பண்ண பல வீட்டுல்ல வன்முறை வெடிக்கும்... ஆல் தங்கமணிஸ் டென்ஷந்ச் ஆப் தமிழ் நாடு ஆயிடும்..சட்டம் ஒழுங்கு சிதறிடும்.... ஆமா
மருதநாயகம்,
கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற சர்வேயில் குடும்ப வாரிசுகளை மட்டும் சர்வேயில் எடுத்துக் கொண்டு சென்றது சன் டிவி தானே ?
குடும்பத்துக்குள்ள பூசல்களை வீட்டுக் குள்ளேயே பேசி தீர்த்துவைக்க வக்கில்லாத சன் டிவி, இதை ஒரு பொதுப் பிரச்சனை போல் மக்கள் மன்றத்திற்கு கருத்து கணிப்பு என்ற போர்வையில் கொண்டு சென்றது ஏன் ?
இதனால் தானே இவ்வளவு பிரச்சனையும். சன் டிவியின் செயலால், கருணாநிதி குடும்பத்துக்கும், கட்சிக்கும் கூட களங்கம் ஆகிவிட்டது. அதாவது கட்சி ஒரு சமஸ்தானம் போல காட்டப்பட்டுவிட்டது. மூல காரணம் சன் டிவிதானே ?
//தேவ் | Dev said...
சன் டிவி சிரீயல் பார்த்துச் சரியான சித்திரவதை அனுபவிச்சு இருப்பீங்கப் போலிருக்கு.. கருத்துக் கணிப்பு நடத்தியது தினகரன் நாளிதழ்.. ஆனா சன் டிவியைப் போய் தடைப் பண்ணச் சொல்லுறீங்க...
//
சன் டிவி, தினகரன் நாளிதழ் இணைந்து நடத்தும் சர்வே தான் என்று சன் செய்திகளில் குறிப்பிட்டார்கள். சன் டிவி இதுநாள் வரைக்கும் அழகிரிபற்றி செய்திகள் எதையும் சொல்லாமல் அடக்கி வாசித்தது நேற்று வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. திடிரென்று அழகிரியின் மீது உள்ள பழைய குற்றச் செயல்களை பட்டியல் இட்டது. வன்முறை எழுவதற்கு காரணமாக இருந்தது சன் டிவியின் கருத்துக் கணிப்புதான்.
Collapse comments
// G.Ragavan said...
நண்டு கொழுத்தா வலையில தங்காதுன்னு சொல்வாங்க. அது மாதிரிதான் இது. நண்டு கொழுத்திருச்சு. வலையும் சிறிசு. அடுத்த வலைய நோண்ட வேண்டியதுதானே. நோண்டீருச்சு. பலனை அனுபவிக்குது. ஆனா பாவம். இறந்து போனது வேற குடும்பத்துக்காரங்க. அதுதான் வயித்தெரிச்சல். உட்கட்சி ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைச்சிட்டு வாரிசு அரசியல் நடத்துனா இப்படித்தான் இருக்கும். அடுத்த கட்சியக் கிண்டல் அடிக்கும் போது இனிச்சது. இப்ப கசக்குது.
11:16 PM, May
//
ஜிரா, நம்ம மனுநீதி சோழன் மகனை பலியிடுகிறாரா பார்ப்போம்.
பத்திரிகைச் சுதந்திரம் என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் இருட்டடிப்பு, பொய், மிகைப்படுத்தல், அவமானப்படுத்துதல் போன்ற மிகவும் கேவலமான செயல்களைச் செய்து வருகின்றார்கள். அவர்கள் பேனாவை ஆயுதமாக எடுத்தால் பாதிக்கப்பட்டவர்களும் கிடைக்கின்ற ஆயுதங்களை எடுக்கின்றார்கள்.
1.கருத்துக் கணிப்புக்கு என்ன அவசியம்?
2.மு.க அரசியல் வாரிசு என்றால் குடும்ப அங்கத்தவரைத் தவிர தி.மு.க
கட்சி அங்கத்தவர் யாரையும் ஏன் சேர்க்கவில்லை?
3. அரசியல் போட்டியில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் ஒரு மனிதனை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்.
பத்திரிகைக்காறர்கள் தங்கள் பலத்தால் மற்றவர்களை காயப்படுத்தினால், பத்திரிகைக்காறர்களைக் காயப்படுதுவதும் நியாயமானதே!
பத்திரிகைக்காறர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கு?
pullirajaa
If the jerks cannot handle freedom of press (be as biased as it has been) then they don't deserve to be in power - except when the subjects are impotent enough to accept their fate spinelessly.
///குடும்பத்துக்குள்ள பூசல்களை வீட்டுக் குள்ளேயே பேசி தீர்த்துவைக்க வக்கில்லாத சன் டிவி, இதை ஒரு பொதுப் பிரச்சனை போல் மக்கள் மன்றத்திற்கு கருத்து கணிப்பு என்ற போர்வையில் கொண்டு சென்றது ஏன் ?///
கோவியாரே...
அதுல காமேடி என்னான்னா, "உலகப்புகழ்பெற்ற" ஏ.சி.நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு அது...
ஏண்டா அவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா ? ஏசி நீல்சனின் பல கருத்துக்கணிப்புகளை பார்த்தவன் என்ற முறையில்...
ஆயாவீட்ல அடுப்பு எரியாததுக்கு காரணம் நமத்துப்போன குச்சியா / இத்துப்போன மரக்கட்டையா / இல்லை கலப்பட மண்ணெண்ணையா என்று லூசுத்தனமான டாப்பிக் எல்லாம் எடுத்து சர்வே போடமாட்டார்கள்...
இவனுங்க குடும்ப பிரச்சினையை வைத்து இஷ்டத்துக்கு சர்வே போடுறதுக்கு ஏ.சி.நீல்சன் என்ன கலாநிதியோட கஞ்சா அடிக்கற தோஸ்தா ?
அடப்போங்கடா !!!!!!!
கருத்துரையிடுக