பின்பற்றுபவர்கள்

25 ஏப்ரல், 2007

மொக்கை நன்றே! மொக்கை நன்றே !!

சர்சையை விட மொக்கைப் பதிவுகளே சிறந்தது எனவே நண்பர் நாமக்கல்லாரை மொக்கப் பதிவு ஒன்றை போட்டு அதன் பின் அவர் ஆவிகளை அழைத்து மொக்கைப் பதிவுகளை போடச் சொல்லவேண்டும் ...
மேலும் மொக்கை பதிவுகளின் புகழை பதிவு பின்னூட்டம் தோறும் பரப்பி ஆவன செய்ய வேண்டும்.

பதிவர் சந்திப்புக்கு சென்ற ஆவிகளில் சில நடேசன் பூங்காவின் மரத்தில் தங்கிவிட்டதாகவும் இன்று வரை கோவை திரும்பவில்லை என கேள்விப்பட்டேன். எதாவது ஒரு ஆவி தான் சந்திப்பு பற்றி பதிவு எழுதி எனது ஐயத்தை நீக்க வேண்டும்.

பட்டை போடச் சொல்கிறார்கள். நானும் போட்டு இருக்கிறேன். பட்டை போடவில்லை தமிழ் மணத்திற்கு பட்டைப் போட்டதாக சக பதிவர்கள் தவறாக நினைப்பார்கள் என யாரும் நினைக்க வேண்டாம். காலையில் நன்றாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று போட்டுக் கொள்ளுங்கள்.

பொன்ஸ் கூட பட்டை போட்டு இருக்காங்களாம்,

படம் இதோ !

9 கருத்துகள்:

VSK சொன்னது…

பொன்ஸ் மீது என்ன கோபம் கோவியாரே!

மொக்கையா நானும் ஒரு கேள்வி கேட்டு வைக்கிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

// VSK said...
பொன்ஸ் மீது என்ன கோபம் கோவியாரே!

மொக்கையா நானும் ஒரு கேள்வி கேட்டு வைக்கிறேன்!
//

மொக்கை பதிவுக்கு மொக்கை பின்னூட்டம் சரியாப் போச்சு... மொக்கை கேள்விக்கு மொக்கையான பதில் இதுதான்.

முதலில் வந்து மொக்கைப் போட்ட விஎஸ்கே ஐயாவிற்கு சிறப்பு நன்றி !

ஆதி சொன்னது…

ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.

சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.

நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.

எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.

ஜெய்ஹிந்த்!!!

கோவி.கண்ணன் சொன்னது…

ஆதி சார்,

மொக்கை பதிவில் வந்து 'சக்கைப்' போடுகிறீர்கள். உங்களுக்கே நல்லா இருந்தா சரி.

சென்ஷி சொன்னது…

//பொன்ஸ் கூட பட்டை போட்டு இருக்காங்களாம்.//

என்ன பொன்ஸக்காவ யானையாக்கிட்டீங்க. பட்டை போட்டு விட்டுருக்காங்கன்னு மாத்துங்க. :)

பி.கு. வழக்கம் போல இதுவும் ஒரு மொக்க பின்னூட்டம் :)

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

அவசரத்துல.. மொட்டை நன்றே! மொட்டைநன்றே!!-ன்னு வாசிச்சுட்டு உள்ளே வந்துட்டேன்.
சாரி... இது வேற மேட்டரா இருக்கு. :)

நமக்கு இது பத்தி ஒன்னும் தெரியாது சாமீ! :))))))

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//பட்டை போட்டு விட்டுருக்காங்கன்னு மாத்துங்க. :)//
சென்ஷி தம்பி சொல்றது ரொம்பச் சரி.. தனிமனித சுதந்திரத்துக்கு ஓரளவுக்கு மதிப்பு கொடுக்கிறவங்களையே பாசிசவாதி ஆக்கிட்டுத் தான் மறுவேலை பார்க்கிறாங்க இங்க, இதுல யானைக்குச் சுதந்திரம் ஏது.. எல்லாம் அவங்களா போட்டுவிடுறது தான் :))

கோவியாரே,
எல்லாரும் பட்டை போடத் தொடங்குமுன்னேயே
மொட்டை போட்ட எங்க
மொக்கை வேந்தனைப் பத்தி ஒருவார்த்தை கூட எழுதாம ஒரு மொக்கை போஸ்டா?!! இதைப் பாகச சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்... ;)

கோவி.கண்ணன் சொன்னது…

//
கோவியாரே,
எல்லாரும் பட்டை போடத் தொடங்குமுன்னேயே
மொட்டை போட்ட எங்க
மொக்கை வேந்தனைப் பத்தி
//
பொன்ஸ்,

லக்கி பதிவில் பட்டைப் போட விருப்பமில்லாதவர்கள் பாலபாரதியைப் பார்த்து மொட்டை போடலாம் என்று சொல்லி இருக்கேனே... லக்கி அண்ணாச்சி இன்னும் வெளி இடலை ன்னு நினெக்கிறேன்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
அவசரத்துல.. மொட்டை நன்றே! மொட்டைநன்றே!!-ன்னு வாசிச்சுட்டு உள்ளே வந்துட்டேன்.
சாரி... இது வேற மேட்டரா இருக்கு. :)

நமக்கு இது பத்தி ஒன்னும் தெரியாது சாமீ! :))))))
//

அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்... அமுக கண்ணுக்கு பார்பதெல்லாம் மொட்டையாத் தெரியுது போல...
:)

இன்னிக்கு சாப்பிடும் போது முட்டையைப் போடச் சொல்லி சாப்பிடுங்க.

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்