பின்பற்றுபவர்கள்

7 ஏப்ரல், 2007

அமுக முதல் உலக (சிங்கை) மாநாட்டு வெள்ளை அறிக்கை !

சீரியஸ் பதிவுகளுக்கு மொக்கை பின்னூட்டம் போடும் அனானிகள் முன்னேற்றக் கழகத்தின் முதல் வெளிநாட்டு மாநாடு சிங்கையில் நடந்தேறியது.

அமுக வெளிநாட்டு அமைப்புத் தலைவர் திரு பொட்டீக்கடையாரின் வருகையை ஒட்டி முதல் அமுக வெளிநாட்டு மாநாட்டை சிங்கையில் நடத்த திட்டமிட்டு இருந்தார்களாம். இதனடிப்படையில் எனக்கும் அழைப்பு வந்தது. மாநாட்டை எங்கு நடத்தலாம் என்று திடீர் அமைப்பாளார் குழலி என்னிடம் ஆலோசனை கேட்க சிம்லிம்ஸ்கொயர் உணவு அங்கடியைக் குறிப்பிட்டேன். அதன்படி இன்று மாலை 4 மணிக்கு சந்திப்புக் குறித்து அனைத்து பதிவர்களுக்கும் தொலைபேசி வழி செய்தி அனுப்பிவிட்டு சரியான நேரத்துக்கு தலைவரை வரவேற்க ஏற்பாடுகளை செய்தார் நண்பர் குழலி.

நான் மாநாட்டுக்குச் செல்ல சற்று காலதாமதம் ஆகியது, நான் அங்கு சென்றபோது பதிவர்கள் ஒரு குடையின் கீழ் குழுமி இருந்தனர்( உண்மையான கடற்கரை குடைதான் :) ) . நண்பர் குழலி ஒவ்வொருவராக அறிமுகப் படுத்தினார். திரு ஜோ மில்டன், எல் எல் தாஸ், வடுவூர் குமார், மற்றும் பதிவு நண்பர்களின் நண்பர்கள், பிறகு விழா நாயகர் பொட்டிக்கடை சத்தியா. அறிமுகம் முடிந்ததும் தெரிந்தது ஏற்கனவே மாநாடு கலைகட்டி இருந்த விசயம். அனானி பின்னூட்டங்களில் வரும் சிரிப்புப் பின்னூட்டங்களை சொல்லி சொல்லி சிரித்தனர். அனானி பின்னூட்டம் போடுவது எப்படி என்று சிறப்பு பாடம் நடத்தினார் சத்தியா, ஒவ்வொன்றாகப் போடுவதைவிட நோட் பேடில் மொத்தமாக எழுதி ஒவ்வொன்றாக கட் அண்ட் பேஸ்ட் செய்ய 1 நிமிடத்திலேயே 10 பின்னூட்டங்களைப் போட்டுவிட முடியும் என்று அனானி பின்னூட்ட ரகசியங்களை கசிய விட்டார்.

ஆரம்பத்தில் பலர் பொட்டீக்கடையாரை போலி என்று சந்தேகப் பட்டதாக சொன்னார். அதன் பிறகு தீர்மானம் எதுவுமின்றி திடீர் அறிவிப்பாக 'பின்நவீனத்துவ பதிவர்' என்று பொட்டீக்கடையாருக்கு பதிவர் குழலி பட்டம் வழங்கினார். நானும் பொட்டிக்கடைக்காரர் 'குறி'களைக் குறிப்பிட்டு எழுதும் குறிப்பிட்ட பதிவர் என்பதால் அவருக்கு இந்தப் பட்டம் பொருத்தமானது என்று வழி மொழிந்தேன். பிறகு வடுவூர் குமாரின் சமீபத்திய மனவருத்தம் பற்றிப் பேசும் போது 'இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் உங்கள் எழுத்துப் பணியைத் தொடருங்கள்' என்று அவரை அனைவரும் உற்சாகப்படுத்தினார்கள். பிறகு பதிவர் தாஸ் விடைபெற அடுத்து ஒரு சிறப்பு பதிவர் வர இருப்பதாக குழலி போனுக்கு தகவல் வந்தது. இடைப்பட்ட நேரத்தில் சிங்கை நாதன் என்கிற பதிவு கண்காணிப்பு குழு செயல்வீரர் அதிரடியாக கலந்து கொண்டு பதிவர்களின் பதிவுகளைப் பற்றி விமர்சனம் செய்தார்.

மாலை 6.45 ஐத்தாண்டி மாநாடு நடந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் காஃபி வழங்கி அன்பாக கவணித்துக் கொண்டார் பதிவர் சத்தியா. சத்தியாவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் பதிவில் எழுதும் சீரியஸ் விசயங்களுக்கும் இவருக்கும் தொடர்பே இல்லாதது போல் முற்றிலும் கலகலப்பானர். கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும் மாணவரைப் போல் உற்சாகப் பேச்சு, நல்ல துடிப்பான இளைஞர். பதிவர் ஜோ பார்பதற்கு நடிகர் அருண்பாண்டியனை சிறிது ஞாபகப்படுத்தினார். பேச்சில் குறைவாக கன்யாகுமரி மாவட்ட வாசம், இனிமையான பேச்சு கனிவானவராக இருந்தார். இவர் சிங்கையில் இருந்தாலும் இன்று தான் முதல் முறையாகப் பார்த்தேன்.

மாலை 6.45 க்கு வலைப்பதிவில் லக்கியாருடன் இணைந்து எழுதும் 'உடன்பிறப்பு' என்ற பதிவர் வந்து சேர்ந்தார். அவரும் முப்பதுக்குள் உள்ள இளைஞர். ஆரம்பத்தில் சற்று மிரண்டவர் இரண்டு மடக்கு உள்ளே சென்றதும் ( தேநீர்) கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தார். இன்னும் சில மொக்கைப் பேச்சுக்களுடன் மாலை 7.30க்கு தலைவர் அடுத்த அப்பாய்ன்மெண்டுக்கு செல்ல இருப்பதால் மாநாடு அடுத்து இரு காஃபியுடன் முடிவடைந்துவிட்டது.

பிறகு நான் குழலி, ஜோ, உடன்பிறப்பு மற்றும் குழலியின் நண்பர் கண்ணன் ஆகியோர் இட்டலி கடைக்குச் சென்று 2 மணி நேரம் மொக்கைப் போட்டோம். திமுக - பாமக - இந்தி திணிப்பு என அரசியல்விவாதங்கள் அனல் பறந்தது. இரவு 9.30 மணிக்கு அனைவரும் விடைபெற்றோம்

44 கருத்துகள்:

Subbiah Veerappan சொன்னது…

உள்ளேன் ஐயா!

குழலி / Kuzhali சொன்னது…

இணையத்தமிழின் எதிர்காலம், இணையத்தில் இலக்கியம் வளர்ப்பது எப்படி, ஒவ்வொருவரின் எழுத்துகள் பற்றிய விமர்சனம், சூடான விவாதங்கள், எழுத்துக்களை எப்படி மேம்படுத்துவது என்றெல்லாம் பேசி மொக்கை போடாமல் சந்திப்பு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது....

வினையூக்கி சொன்னது…

:):) அமுக இரண்டாவது உலக மாநாடு அடுத்து சென்னையில்.

ஆவி அம்மணி சொன்னது…

உள்ளேன் ஐயா!

(எங்க எட்டாங்கிளாஸ் வாத்தியார் இந்தப் பக்கம் வந்தார். அதான் நானும் வந்தேன்.)

பெயரில்லா சொன்னது…

ஆசிரியரே 'உள்ளேன் ஐயா' சொல்லிவிட்டு கட் அடித்தால் மாணவர்களும் அப்படித்தான் இருப்பார்கள்

ராவணன் சொன்னது…

சிம்லிம் ஸ்கொயரா,அடடா..இன்று மாலை முழுதும் அங்கேதான் வட்டமிட்டு திரிந்தேன்.ஒன்றும் வாங்கவில்லை.ச்ச்ச்சும்மா ச்ச்சும்மா மட்டுமே வந்தேன்.சத்தியமாக நான் மட்டுமே வந்தேன்.காலர் வைத்த புளூ கலர் 'T'-Shirt போட்ட,
கோலிவுட்,பாலிவுட்,ஹாலிவுட் நடிகரைப்(அய்யா ஹீரோதான்) போன்ற இளம் சிங்கம்(வேறு யாரு)அந்தப் பகுதியில் உலவியதைப் பார்க்கவில்லையா?உங்களுக்கு..
அதிஷ்டம் இல்லைபோலும்........

SurveySan சொன்னது…

ஏதாவது புதிய தீர்மானங்கள் ஏற்றப்பட்டதா?

வடுவூர் குமார் சொன்னது…

நிஜ முகங்களுக்கும் வலைப்பதிவு மூலம் நாமே வைத்துக்கொள்கிற முகங்களுக்கும் "சந்தியமாக்" கொஞ்சமும் சம்பந்தமில்லை எனபதை இந்த மாநாட்டின் மூலம் தெரிந்து கொண்டேன்.
பலரிடம் நகைச்சுவை மிதமிஞ்சி உள்ளது.
அதனால் மொக்கை பின்னூட்டம் வரும் பதிவுகளே அதற்காக கவலைப்படவேண்டாம்,எல்லாமே சந்தோஷத்துக்குத்தான்.கொஞ்சம் கூட தனி மனித தாக்குதல் அல்ல.
என்னை,குழலி "கருப்பாக்கியதை"
சொல்ல மறந்திட்டீஙக?
இப்போதும் நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.:-))
மொத்தத்தில் செம கலக்கல்.
இன்னும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்துவிட்டார் போலும்.

நாமக்கல் சிபி சொன்னது…

//ஏதாவது புதிய தீர்மானங்கள் ஏற்றப்பட்டதா? //

ஆமாம்! எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பெயரில்லா சொன்னது…

வாத்தியாருக்கு அ.மு.க கூட்டத்தில் என்ன வேலை?

சிங்கை மன்னரின் கூட்டம் என்பதால் சிறப்பு விருந்தினராக உள்ளே வந்தவர்
வருகையை மட்டுமும் பதிந்து விட்டுப் போய் விட்டார்!

கட் அடித்து விட்டுப் போய் விட்டார் என்று அநியாயத்திற்குக் குறை சொல்லாதீர்கள்!

அப்புறம் தவித்த வாய்க்குத் த்ண்ணீர்கூடக் கிடைக்காது!

ஜோ/Joe சொன்னது…

//பதிவர் ஜோ பார்பதற்கு நடிகர் அருண்பாண்டியனை சிறிது ஞாபகப்படுத்தினார்//

அட..இது என்ன கலாட்டா :))

பெயரில்லா சொன்னது…

//ஆசிரியரே 'உள்ளேன் ஐயா' சொல்லிவிட்டு கட் அடித்தால் மாணவர்களும் அப்படித்தான் இருப்பார்கள்//

எங்க வாத்தியாரை யாராச்சும் கலாட்டா பண்ணுணீங்க! கீசிடுவேன் கீசி!
சொல்லி வெக்குறேன்! முகரை பேர்ந்துடும் ஆமா!

ஜோ/Joe சொன்னது…

கோவியாரே!
உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ..முதல் ரவுண்டு சந்திப்பில் அறிமுகம் மற்றும் நக்கலிலேயே சென்று விட்டதால் அதிகமாக பிறரை அறிந்து கொள்ள முடியவில்லை .இட்லி கடையில் நடந்த இரண்டாவது ரவுண்டு ரொம்பவே சுவாரஸ்யம் .முதலிலேயே இட்லி கடைக்கு வந்திருக்கலாமோ ?

கோவி.கண்ணன் சொன்னது…

//குழலி / Kuzhali said...
இணையத்தமிழின் எதிர்காலம், இணையத்தில் இலக்கியம் வளர்ப்பது எப்படி, ஒவ்வொருவரின் எழுத்துகள் பற்றிய விமர்சனம், சூடான விவாதங்கள், எழுத்துக்களை எப்படி மேம்படுத்துவது என்றெல்லாம் பேசி மொக்கை போடாமல் சந்திப்பு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது....
//

குழலி,
மாநாடு நடக்கும் முன்பே மாநாட்டில் தீர்மானம் எதுவும் இருக்கக் கூடாது என்று தீர்மானித்திருந்ததால் மாநாடு அமைதியாக நடந்தேறியது !
:))))))

பெயரில்லா சொன்னது…

கழகத்தின் கொள்கைக்குன்று, 330 போர்வாள், ப்ரிஸ்பேன் கொண்ட நாயகன், பூச்சாண்டி பொட்'டீ'க்கடையார் தலைமையில் நடைபெற்ற அ.மு.க அகில உலக மாநாடு பற்றி அருமையாக எழுதியதுக்கு நன்றி...

அ.மு.க தலைமை நிலையம்.
பெங்களூர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வினையூக்கி said...
:):) அமுக இரண்டாவது உலக மாநாடு அடுத்து சென்னையில்.
//

வினையூக்கி,
லக்கியார் தலைமை ஏற்கிறார், பாலபாரதி வழிநடத்துகிறார் என்றால் சென்னை மாநாட்டிற்கு வேறென்ன சிறப்பு ?
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. சுப்பையா said...
உள்ளேன் ஐயா!

12:12 AM, April 08, 2007
//

அட்டெண்டன்ஸ் போட்டாச்சு !

வாத்தியாருக்கே அட்டெண்டன்சா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆவி அம்மணி said...
உள்ளேன் ஐயா!

(எங்க எட்டாங்கிளாஸ் வாத்தியார் இந்தப் பக்கம் வந்தார். அதான் நானும் வந்தேன்.)
//

ஆவி அம்மணி உங்களெக்கெல்லாம் பாடம் எடுக்க கேரள மந்திரவாதியையும் கூடவே வைச்சிருக்க வேண்டுமே, வாத்தியார் தனி ஆளாக எப்படி சமாளிக்கிறாரோ !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அடங்காத மாணவன் said...
ஆசிரியரே 'உள்ளேன் ஐயா' சொல்லிவிட்டு கட் அடித்தால் மாணவர்களும் அப்படித்தான் இருப்பார்கள்
//

எங்க வாத்தியாரைப் பற்றி எங்களிடமே புகாரா ?
கண்டிக்கிறோம் !

-வகுப்பறை மாணவர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...
சிம்லிம் ஸ்கொயரா,அடடா..இன்று மாலை முழுதும் அங்கேதான் வட்டமிட்டு திரிந்தேன்.ஒன்றும் வாங்கவில்லை.ச்ச்ச்சும்மா ச்ச்சும்மா மட்டுமே வந்தேன்.சத்தியமாக நான் மட்டுமே வந்தேன்.காலர் வைத்த புளூ கலர் 'T'-Shirt போட்ட,
கோலிவுட்,பாலிவுட்,ஹாலிவுட் நடிகரைப்(அய்யா ஹீரோதான்) போன்ற இளம் சிங்கம்(வேறு யாரு)அந்தப் பகுதியில் உலவியதைப் பார்க்கவில்லையா?உங்களுக்கு..
அதிஷ்டம் இல்லைபோலும்........
//

பத்து தலையில் ஒரு தலையாவது காட்டி இருக்கலாமே இராவணன் !
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
ஏதாவது புதிய தீர்மானங்கள் ஏற்றப்பட்டதா?
//

சர்வேசா,
ம் மாநாட்டுக்கு முன்பே தீர்மானம் போட்டாச்சு, இது போல் பதிவர் மாநாட்டில் தீர்மானம் எதுவும் போடக் கூடாது என்று
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வகுப்பறை சட்டாம்பிள்ளை said...
வாத்தியாருக்கு அ.மு.க கூட்டத்தில் என்ன வேலை?

சிங்கை மன்னரின் கூட்டம் என்பதால் சிறப்பு விருந்தினராக உள்ளே வந்தவர்
வருகையை மட்டுமும் பதிந்து விட்டுப் போய் விட்டார்!

கட் அடித்து விட்டுப் போய் விட்டார் என்று அநியாயத்திற்குக் குறை சொல்லாதீர்கள்!

அப்புறம் தவித்த வாய்க்குத் த்ண்ணீர்கூடக் கிடைக்காது!
//

தவிச்ச வாய்க்கு புலிப்பால் குடிக்கலாம் என்று மனப்பால் குடித்துவிட்டு அப்படி சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன் , விட்டுவிடுங்கள் சட்டாம்பிள்ளை சார்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
நிஜ முகங்களுக்கும் வலைப்பதிவு மூலம் நாமே வைத்துக்கொள்கிற முகங்களுக்கும் "சந்தியமாக்" கொஞ்சமும் சம்பந்தமில்லை எனபதை இந்த மாநாட்டின் மூலம் தெரிந்து கொண்டேன்.
பலரிடம் நகைச்சுவை மிதமிஞ்சி உள்ளது.
அதனால் மொக்கை பின்னூட்டம் வரும் பதிவுகளே அதற்காக கவலைப்படவேண்டாம்,எல்லாமே சந்தோஷத்துக்குத்தான்.கொஞ்சம் கூட தனி மனித தாக்குதல் அல்ல.
என்னை,குழலி "கருப்பாக்கியதை"
சொல்ல மறந்திட்டீஙக?
இப்போதும் நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.:-))
மொத்தத்தில் செம கலக்கல்.
இன்னும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்துவிட்டார் போலும்.
//

குமார்,

பதிவின் நீளம் கருதி எல்லாவற்றையும் எழுத முடிவதில்லை. 3 நிமிடத்திற்கு மேல் ஒரு இடுகையைப் படித்தால் எனக்கும் அயற்ச்சி ஏற்படும், அதே அளவுகோலில் பதிவுகளை சுறுக்கியே எழுதுகிறேன்.

உங்களை மீண்டும் ( மூன்றாம் முறை) சந்தித்தற்கு மிக்க மகிழ்ச்சி.

கோவி.கண்ணன் சொன்னது…

// நாமக்கல் சிபி said...
//ஏதாவது புதிய தீர்மானங்கள் ஏற்றப்பட்டதா? //

ஆமாம்! எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
//

அதே அதே கரெக்டாக சொல்லிட்டிங்க, எங்க வாத்தியாரின் மாணவன் என்றால் சும்மாவா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
//பதிவர் ஜோ பார்பதற்கு நடிகர் அருண்பாண்டியனை சிறிது ஞாபகப்படுத்தினார்//

அட..இது என்ன கலாட்டா :))
//

ஆமாம் ஜோ,

உங்களிடம் அப்போதே சொல்லலாம் என்றிருந்தேன். தற்போது உள்ள அருண்பாண்டியன் தோற்றத்திற்கு பொருந்தாது. உங்கள் நெற்றியும், மேலாக தலை வாரி சீவி இருந்ததும் எனக்கு அப்படி தோன்றியது.
:)

சொன்னதே சொன்னே ஒரு சிவாஜி ரேஞ்சுக்கு சொல்லப்படாதான்னு மறுபடியும் கேட்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
கோவியாரே!
உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ..முதல் ரவுண்டு சந்திப்பில் அறிமுகம் மற்றும் நக்கலிலேயே சென்று விட்டதால் அதிகமாக பிறரை அறிந்து கொள்ள முடியவில்லை .இட்லி கடையில் நடந்த இரண்டாவது ரவுண்டு ரொம்பவே சுவாரஸ்யம் .முதலிலேயே இட்லி கடைக்கு வந்திருக்கலாமோ ?
//

ஜோ,

இட்டிலி கடை - அப்படி ஒரு மொக்கை உற்பத்தி தொழிற்சாலை அங்கு இருப்பது எனக்கு தெரியவே தெரியாது.
:)

ஜோ/Joe சொன்னது…

//சொன்னதே சொன்னே ஒரு சிவாஜி ரேஞ்சுக்கு சொல்லப்படாதான்னு மறுபடியும் கேட்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.//

அப்படியே சொன்னாலும் பராசக்தி சிவாஜி இல்லை .படையப்பா சிவாஜி மாதிரி -ன்னு சொன்னாலும் சொல்லுவீங்க .அதுக்கு இதுவே பெட்டர் :))

உடன்பிறப்பு சொன்னது…

கோவி.கண்ணனை பார்த்தால் என் கல்லூரி சீனியர் போலவே இருந்தார்

லக்கிலுக் சொன்னது…

நன்றி கோவி!

நான் சொன்னபடியே உடன்பிறப்பு என்று ஒருவர் உண்மையிலேயே இருப்பதாக 'அலிபி' செட் செய்து விட்டீர்கள்!

முத்துகுமரன் சொன்னது…

//நான் சொன்னபடியே உடன்பிறப்பு என்று ஒருவர் உண்மையிலேயே இருப்பதாக 'அலிபி' செட் செய்து விட்டீர்கள்!//
அக்மார்க் அ.மு.க. பின்னூட்டம், :-)

மண்டல மாநாடுகள் போல் தொடர்ந்த கண்டங்கள் தோறூம் மாநாடுகள் நடக்க வாழ்த்துகள்.

ஜோ/Joe சொன்னது…

//நான் சொன்னபடியே உடன்பிறப்பு என்று ஒருவர் உண்மையிலேயே இருப்பதாக //

அடப்பாவிகளா! இத்தனை நாள் ஏதோ ஆவி கூட கூட்டு வலைப்பதிவு வச்சிருக்குறதா நினைச்சுட்டிருந்தீங்களோ!

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
நன்றி கோவி!

நான் சொன்னபடியே உடன்பிறப்பு என்று ஒருவர் உண்மையிலேயே இருப்பதாக 'அலிபி' செட் செய்து விட்டீர்கள்!
//

லக்கி,
குழலி தான் உடன்பிறப்பு என்று யாரிடமும் சொல்லிடாதிங்க.

உஸ்ஸ்ஸ்ஸ்....!!
:)

கோவி.கண்ணன் சொன்னது…

///முத்துகுமரன் said...

மண்டல மாநாடுகள் போல் தொடர்ந்த கண்டங்கள் தோறூம் மாநாடுகள் நடக்க வாழ்த்துகள். //

முத்துகுமரன்,

அடுத்த மாநாட்டில் சிங்கை (க)கொண்ட அமுக என்று அமுகவிற்கு பட்டம்வழங்க வேண்டுமாய் கோரிக்கை விடுகிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ / Joe said...
அப்படியே சொன்னாலும் பராசக்தி சிவாஜி இல்லை .படையப்பா சிவாஜி மாதிரி -ன்னு சொன்னாலும் சொல்லுவீங்க .அதுக்கு இதுவே பெட்டர் :))
//

ஜோ,
படையப்பா சிவாஜின்னு சொன்னாலும் தப்பில்லை. கர்ஜிக்கும் வரை சிங்கம்.. சிங்கம் தான் !
:)

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

நானும் ஆட்டத்துக்கு வரலாமா?

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

சந்திப்பு பற்றி ஜோ வும் தனியாக ஒரு பதிவு போடவும்..

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

/ ஜோ / Joe said...
//பதிவர் ஜோ பார்பதற்கு நடிகர் அருண்பாண்டியனை சிறிது ஞாபகப்படுத்தினார்//

அட..இது என்ன கலாட்டா :))
//

அது சரி...
அது நாளதான் போற இடத்துல எல்லாம், எல்லோரையும் தல வம்புக்கு இழுக்குறாரா..?

;-) )))))

கோவி.கண்ணன் சொன்னது…

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
நானும் ஆட்டத்துக்கு வரலாமா?
//

பாலா, என்ன அப்படீ கேட்டுவிட்டீரு,

அமுகவில் நீங்க தான் ஆட்ட நாயகராக அடிக்கடி செலக்ட் ஆகுறிங்க. நீங்கள் இல்லாமலா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
சந்திப்பு பற்றி ஜோ வும் தனியாக ஒரு பதிவு போடவும்..
//

பாலா,

ஜோ அவரது பார்வையில் எப்படி மாநாட்டு நிகழ்ச்சிகளை விவரிக்கிறார் என்று நானும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

உயர எல்லை 40 ஐ தொட்டுவிட்டது. அடுத்து பின்னூட்டமிடுபவர்கள் இங்கு சென்று தான் பார்க்க வேண்டும் !

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

41 போட்டால் தான் வெளியே போகுமாம்.. :)

லக்கிலுக் சொன்னது…

உயரெல்லை முடிஞ்சிடுச்சி. இனிமே என்னாத்தை கும்மி அடிக்கிறது? அதிருக்கட்டும் அனானி-அதர் ஆப்ஷனை எப்போ தொறந்தீங்க?

ப்ரசன்னா (குறைகுடம்) சொன்னது…

தங்களை 'அழகு' விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன். உங்களுக்குப் பிடித்த அழகுகளைப் பட்டியலிடவும் :-)

பெயரில்லா சொன்னது…

கோவியாரே

நாற்பதுக்கும் மேலே இங்கே தெரிகிறதே...என்ன உயரெல்லை உயரெல்லை என்று பினாத்துகிறீர் ?

எந்த இடத்தில் இந்த கட்டுப்பாடு ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்