பின்பற்றுபவர்கள்

30 ஏப்ரல், 2007

ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா (2) ?

எனது முந்தைய இடுகைக்கான பின்னூட்டமாக அனானி ஒருவர் இட்ட பின்னூட்டம் பின்வருமாறு

//பல நல்லுரைகளும், நல்லெண்ணங்களுமே ஒருவனை பக்திமான் ஆக்குகிறது. அப்படிபட்டவன் எதற்காக தவறுகள் செய்வான். அப்படியே அவன் தவறான பாதையை பார்க்கும் போதே, அவன் நம்பும் சக்தியே அவனை தடுத்தாட்கொண்டுவிடும். உண்மையான பக்திமான் மனமறிந்து ஒருபோதும் தவறு செய்ய மாட்டான். //

நல்லது. நாத்திகன் என்பவன் யார் ? சமூக விரோதியா ? அறை'குறை'களாக சொல்லும் அறை'குறை' பக்திமான்கள் கூட எதையும் ஆராயாமல் நாத்திகம் என்பது ஒரு ஒழுங்கீனமான குறியீட்டுச் சொல் என்பது போலவே 'இறை நம்பிக்கை' அற்றவர்களைப் பார்த்து செய்யும் அவதூறே பாவ-புண்ணியத்துக்கு பயந்தவர்கள் பக்தியாளர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம். நம்பிக்கையாளர்களே பாவ-புண்ணியத்திற்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்வது தான் சரி. அதை விடுத்து நம்பிக்கையாளர்கள் பாவ-புண்ணியத்திற்கு அஞ்சுபவர்கள் என்பது எவ்விதத்தில் ஏற்புடையது. கேடுகளான பல நிகழ்வுகள் அதை உறுதிப்ப்டுத்திக் கொண்டிருக்கிறது. எவன் நாத்திகன் என்று முன்பு ஆத்திகர்களால் பழிக்கப்பட்டானோ அவனையே வணங்கும் நிலைக்குத் தான் ஆத்திகர்கள் ஆனார்கள் என்ற பேருண்மை புத்தர் மற்றும் சமணர் வாழ்க்கை வரலாறுகள் மூலம் தெரிவது கண்கூடு. நாளைக்கு பெரியார் ஈ.வெ.ரா க்கும் அதே போல் மரியாதை அவரே விரும்பாவிட்டாலும் அவருக்கு கிடைகலாம். :) அவர் வாழ்த்த காலங்களிலேயே ராஜாஜி அவர்களால் 'பெரியாழ்வார்' என்று அழைக்கமுற்பட்டார் என்பது இங்கே நினைவு கொள்ளத் தக்கது.

குரு என்று சொல்லிக் கொள்பவர்களே கூலிப்படையை நாடும் போது. -என்று சொல்லி இருந்தேன்//
அதற்கு திருவாளர் அனானி இட்ட மறுமொழி...

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். அடுத்தவர்கள் சொல்வதெல்லாம் மெய் என்று நம்புகிறேம். ஆசான் சொல்வதை அப்பால் தள்ளுகிறேம்.நல்லார் ஒருவருக்காக பெய்யும் மழையில் தானே நாமும் நர்த்தனமாடுகிறேம்.

இதுவும் நல்ல கருத்தே.... ஆனால் தீரவிசாரித்து குற்றவாளிகள் என்று நிருபித்துவிட்டால் மட்டும் போதுமா ? உடனே சொல்லிவிடுவார்கள் 'தவறு செய்வது மனித இயல்பு' என்ற ஒற்றை வரியை பதிலாக. இங்கு கண்ணால் கண்டது காதால் கேட்டது எல்லாவற்றையும் தாண்டி மெய்பொருளால் கண்ட அறிவையும் கூட அந்த ஒற்றை வரி பதிலால் முடக்கிவிடமுடியுமா ? அதாவது மனிதன் தவறு செய்வது என்பது இயல்பு என்றால் நல்லது செய்வது மட்டும் இறைநம்பிக்கை என்ற ஒன்றால் கிடைப்பது என்றாகிவிடுமா ?

பழிபாவாத்துக்கு அஞ்சவேண்டும் என்ற அறிவுரைகள் அரைகுறை பக்தியாளர்களுக்குத் தான் சொல்லப்பட வேண்டுமேயன்றி எல்லோருக்கும் அல்ல. சமூக அக்கரை ஆத்திகன் என்ன நாத்திகன் என்ன ? அனைவருக்குமே இருக்கிறது. மேலும் சொல்ல விரும்பியது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பாவ-புண்ணியத்துக்கு அஞ்சுபவர்களாம் ? என்ன ஒரு அபத்தமான செய்தி !!! நாம் அனைவரும் தகவல் தொடர்பு சாதனங்களைப் அறியாதவர்களா ? பி.சி சோர்கார் ஒரு ரயிலையே மேஜிக் வித்தையினால் மறைத்தாராம்...இங்கு சாவர்காரின் பக்தர்கள் கோத்ரா ரயிலையே மறைக்கிறார்கள். அந்த திட்டமிட்ட சதியும் அதன் பின்னால் பல இஸ்லாமிய குடும்பங்கள் சிதைந்ததையும், ஒரிசாவில் பாதிரியார் அன்பு மகன்களுடன் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களையெல்லாம் சாவர்கார் வித்தையால் மறைந்துவிட்டது என நினைக்கிறார் போலும். இந்த சம்பவத்தில் கோர தாண்டவமாடியவர்கள் எல்லோரும் நாத்திகர்களா ? அல்லது அந்த சம்பவம் வரலாற்று சிறப்புமிக்க இன்பமான ஒரு நிகழ்வு எனவே அதை பாவ-புண்ணியம் என்ற வகைப்படுத்தலுக்கே இட்டுச் செல்லக் கூடாதா ?

அந்த ஆர்.எஸ்.எஸ் அனானி மேலும் பின்னூட்டத்தில் சொல்கிறார்,

//நீங்க ஒரு நாத்திகராக இருப்பதால் இதுபற்றி உங்களுக்கு பேச அருகதையும் இல்லை. இனி பதில் தரும் எண்ணமும் எனக்கில்லை. //

அதாவது இவர்களைப் பொறுத்தவரையில் தொடர்பு உடையவர்கள் மட்டுமே ஒரு செய்தியைப் பற்றி பேசவேண்டுமாம். ஆத்திகவாதிகள் சாதிகளைப் பிரித்து ஒருபிரிவினர் அள்ளுவதே சரி என்பார்களாம் அதை நாத்திகன் ஏன் என்று கேட்கக்கூடாதாம். நண்பரே பெரியார் என்ற நாத்திகன் கேள்வி கேட்டதால் தான் கோட்டை கதவுகள் போல் பலமாக திறக்காத கோவில் கதவுகள் இன்று அனைவருக்காகவும் திறக்கிறது. முதலில் நீங்கள் ஆத்திகனாக இருந்தாலும் அதற்கு உள்ள உரிமையைப் பெற்று தந்தவன் ஒரு நாத்திகனே என்று நினைவு கொள்க. அநியாயம், அக்கிரமம் நடக்காவிட்டால் தொடர்பு இல்லாதவர்கள் மட்டுமல்ல தொடர்பு உள்ளவர்கள் கூட அது பற்றிப்பேசப்போவதில்லை. சாலையில் ஒருவன் உயிருக்குப் போராடினால் உனக்கு தொடர்பு இல்லையென்றால் கண்டும் காணாதது போல் ஓடிவிடு என்பது போன்ற பொறுப்பற்ற பேச்சு எனவே அதை தள்ளுகிறேன்.

5 கருத்துகள்:

Subbiah Veerappan சொன்னது…

ஆத்திகர்கள் சாதுவானவர்கள்.
அவர்களைவிட நாத்திகர்கள் மிகவும் சாதுவானவர்கள்!
எல்லோரையும்விட கோவிகண்ணன் மிகவும் சாதுவானவர்!

இதை நான் தமிழ்மணப் பதிவர்கள் (மொத்தம் சுமார் 400 பேர்கள்) அனைவருக்கும்
தெரிவித்துக் கொள்கிறேன்

வாத்தியாரின் பேச்சிற்கு மதிப்பு உண்டு என்பதால் இதை நான் இங்கே
பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

பெயரில்லா சொன்னது…

வாத்தியாரின் மார்க்குகளை அன்புடன்
ஏற்றுக் கொள்கிறேன்.

வாழ்க ஆன்மீகம்! ஓங்குக தெய்வீகம்.

Haran சொன்னது…

நல்ல ஒரு பதிவு நண்பரே,
நான் ஒரு ஆத்திகன். ஆனால் பெரியாரின் இரசிகன். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எம்மதமும் சம்மதமே... சிலர் ஒரு சக்தி உள்ளது, அதனை வழிபடுகின்றோம் என்கிறார்கள்... அதனாலேயெ.. அச் சக்திக்குப் பயந்தோ அல்லது (மனச் சாட்சிக்குப் பயந்தோ) கோட்பாட்டினையும், கொள்கைகளையும் உருவாக்குகின்றனர்.

மதம் என்பது ஒருவனை நல்லவனாக வழி நடத்த உதவ வேண்டுமே தவிர, ஒருவரைப் புண்படூத்தி... துன்புறுத்தும் விடயமாக இருக்கக் கூடாது... சாதியம் என்பதனை நான் அறவே வெறுப்பவன்... அதே போல் சிலரின் போலியான வழிபாட்டு முறைகள்... ஏன் எனின் மானிதன் பிறந்த பின் தான் "மதம்" பிறந்தது.. கடவுள் என்று நான் இங்கு கூறவில்லை.. மாதம் என்றே கூறுகிறேன்... ஆகவே... நம்மால் உருவாக்கப் பட்டி விடயங்களே இவை யாவும்... ஆகவே மனிதனை நெறிப்படுத்தும் விடயமாக மதம் இருக்க வேண்டும்...

குட்டிபிசாசு சொன்னது…

நல்ல கருத்துக்கள்

வாழ்த்துக்கள்.

G.Ragavan சொன்னது…

கோவி, ஏற்கனவே சொன்னதுதான். உண்மையான ஆத்திகனும் உண்மையான நாத்திகனும் சாதுவானவர்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவு. கடவுளைக் கும்பிடுகிறவர்கள் எல்லாம் ஆத்திகர்களும் இல்ல. கடவுளைக் கும்பிடாதவர்கள் எல்லாம் நாத்திகர்களும் அல்ல.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்