நீங்கள் எழுதும் ஒவ்வொரு இடுகையும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் அடங்கும். எடுத்துக்காட்டு இந்த பதிவை நான் 'ப்ளாக்கர் உதவி', 'கட்டுரைகள்' என்று வகைப்படுத்த முடியும். 'ப்ளாக்கர் உதவி' என்று குறி சொல்லைத் தேடும் போதும் இந்த பக்கத்தைக் காட்டும், 'கட்டுரைகள்' என்று தேடினால் இதுவரை எழுதியுள்ள 'கட்டுரைகள்' சார்ந்த பதிவுகளுடன் பட்டியலில் இதுவும் இருக்கும்.
பதிவுகள் காலவதியான போது பெட்டகத்தில் (Archive Folder) சேர்ந்துவிடும். எனவே குறிப்பிட்ட இடுகையை தேடுவதென்பது அயற்சியை தரும். நாம் ஒவ்வொரு இடுகைக்கும் குறிசொற்களை சேர்த்து பதிந்து கொண்டால் குறிப்ப்ட்ட குறிசொல் உள்ள இடுகையை அடைவது எளிது.
குறிசொற்களை பதிவில் சேர்ப்பது எவ்வாறு ?
வெளியிடும் முன் தலைப்பு மற்றும் பதிவின் உட்பொருளை முன்னேற்பாடு (தயார்) செய்து கொள்ளுங்கள். கீழே Labels for this post: என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் இடதுபக்கம் குறிசொற்களுக்கான பெட்டி இருக்கும் (கீழே படம் காண்க). அதில் உங்களுக்குத் தேவையான குறிசொற்களை கமா (,) சேர்த்து எழுதிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு பதித்தால் (Publish) குறி சொற்கள் பதிவில் சேர்ந்துவிடும். ஆனால் பயன்படுத்தப்படும் மொத்த குறிசொற்களின் பட்டியல் (Label List) இல்லாவிட்டால் பயனில்லை.
குறிசொற்கள் பட்டியலை (Label List) பதிவின் பக்கத்தின் சேர்ப்பது எப்படி ?
(ஓருமுறை செய்தால் போதும்)
1. ப்ளாக்கரின் கணக்கு வழியாக உள்ளே சென்று கீழே படத்தில் உள்ளது போல் Template -> Page Elements பக்கத்திற்கு செல்ல வேண்டும்
2. உங்கள் கருவிபட்டைக்கு (Template) ஏற்றார்போல் உங்கள் பக்க அமைப்பு காணப்படும், அதில் 'Add a Page Element' மேல் மவுஸ் பட்டனை அழுத்துக்கள், கிழ்கண்ட புதிய பக்கம் திறக்கும்.
அதில் படத்தில் காட்டிய படி 'Labels' என்ற இடத்தில் உள்ள 'ADD TO BLOG' பட்டனை அழுத்துக்கள். அதன் பிறகு வரும் புதிய பக்கத்தில் (பின் வரும் படம்) குறிசொல் தலைப்பை இட்டுக் சேமிக்கவும் (Save Changs).
3. குறி சொல் பட்டை வலைப்பக்க கருவிப் பட்டையில் சேர்ந்துவிடும். உங்களுக்கு தேவையான் இடத்தில் (DRAG) குறிசொல் பட்டையை பொறுத்தி அதன் பிறகு (Template ஐ) சேமிக்க (SAVE) . பதிவின் முகப்பில் நீங்கள் பொறுத்திய இடத்தில் குறி சொற்கள் தொகுப்பட்டு இருக்கும்.
பின்குறிப்பு : எல்லா இடுகைக்கும் ஒரு பொது குறிசொல்லையும் சேர்த்துக் கொண்டால் நல்லது. நான் 'அனைத்தும்' என்று ஒரு பொது சொல் எல்லா இடுகைகளின் குறிசொற்களுடன் மேலும் ஒன்றாக (Additional) சேர்க்கிறேன். இப்படிச் சேர்ப்பதால். 'அனைத்தும்' குறிசொற்கள் உள்ள அனைத்து இடுகைகளையும் பெட்டக (Method of Archive)அமைப்பை மாற்றாமல் எந்த தேதியில் எழுதி இருந்தாலும் வரிசையாக ஒரே பக்கத்தில் கண்பிக்க வைக்க முடியும். அனைத்தையும் ஒன்றாக வேறெரு இடத்தில் சேமிக்கவோ. அச்சு எடுக்கவோ வசதியாக இருக்கும்.
எந்த ஒரு இடுகையின் குறிசொற்களையும் நீங்கள் எப்போதுவேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதற்கு ஏற்றார்போல் பதிவின் முகப்பில் உள்ள குறிசொற்கள் தொகுப்பு மாறிவிடும்.
2 கருத்துகள்:
நன்றி, கண்ணன்.
எளிமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
பயன்படுத்திய பின்,
(சுலபமாக, என்னால் எதையும் சீக்கிரம் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம் என்பதால்)
நேரம் எடுக்கும்.
செய்துவிடுகிறேன்.
வல்லியம்மா,
பொறுமையாக படிங்க.
நன்றி!
கருத்துரையிடுக