காதல் வயப்படும் உணர்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்றாலும். ஆண் காதல் வயப்படுவதற்கும் பெண் காதல் வலையில் விழுவதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. ஆணுக்கு காதல் ஒரு பெண் அழகாக இருந்தால் போதும் 'முயற்சித்து' பார்க்கிறார்கள். பெண்களின் அழகு மட்டுமே அவர்களை ஈர்க்கிறதென்றால் எனக்கு தெரிந்த வரையில்ல் 'அழகு' என்பதும் ஒரு காரணம் என்றாலும் எந்த ஆணும் கண்டதும் காதல் என்று ஒரே தடலாடியாக காதலை சொல்வதில்லை. 90% சதவிகித காதலில் ஆண் தன் துணையை காதல் வழி தேடும் போது தன்னை விட உயர்ந்த சாதியில் அல்லது தனது சாதியில் உள்ள பெண்களைத் தான் தேர்ந்தெடுக்கிறான். சில ஆண்களுக்கு பெண் தன் சாதியை சேர்ந்தவள் அதுவும் அழகானவள் என்றால் உடனே காதல் வருவதற்கான வாய்ப்பு 90% ஆக இருக்கும்.
ஆனால் தன்னை காதலிக்கும் ஆணின் சாதியைப் பார்த்து காதலிக்கும் பெண்கள் 10%க்கும் குறைவு. 90% பெண்கள் ஒரு ஆண் தன்னை விரும்பும் போது அவன் அவளை கவர்ந்திருந்தாலே போதும் எந்த சாதியைச் சேர்ந்த ஆணையும் ஒரு பெண் விரும்பிவிடுவாள்.
சாதி மத வேற்றுமையை துணிந்து தாண்டுவது பெண்கள்தான். எந்த ஒரு ஆணும் தன்னைவிட தாழ்ந்த சாதி பெண்ணை அவள் அழகாக இருக்கிறாள் என்றாலும் கூட விரும்புவதில்லை. தற்போது உள்ள சாதி அடுக்குகளில் ஒரு ஆண் தன்சாதியை விட முற்பட்ட எந்த சாதியில் உள்ள பெண்ணாக இருந்தாலும் தயங்காமல் காதலிப்பான். ஆனால் எந்த ஒரு ஆணும் தன்னைவிட பிற்பட்ட சமூகத்தில் உள்ள பெண்ணைக் காதலிப்பது அத்திப் பூத்தது போல அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தால் உண்டு.
இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நடைமுறைதான் அது என்று நினைக்கிறேன். சிங்கப்பூரில் சீன ஆடவன் இந்திய பெண்களை விரும்பி திருமணம் செய்து கொள்வது குறைவு. ஆனால் இந்திய ஆடவர்கள் (சிங்கப்பூர் இந்தியர்) சீன பெண்களை விரும்பி மணம் செய்து கொள்வது அதிகம். அதாவது இந்திய ஆண் - சீனப்பெண் ஜோடி அதிகம். சமூக பொருளாதார அந்தஸ்தில் சீனர்கள் இந்தியர்களைவிட உயர்ந்து இருக்கிறார்கள். இதுபோல் வெளி நாடுகளில் பார்க்க முடிகிறது. கறுப்பின ஆண் - வெள்ளை இன பெண் ஜோடிகளின் எண்ணிக்கை கறுப்பின பெண் - வெள்ளை இன ஆண் ஜோடிகளை விட அதிகம். ஆசிய பெண்களை மணந்து கொள்ளும் ஐரோப்பிய ஆண்களின் எண்ணிக்கையைவிட ஆசிய ஆண் - ஐரோப்பிய பெண் ஜோடிகள் எண்ணிக்கை அதிகம்.
காதலனின் அந்தஸ்து பார்க்காமல், தன்னைவிட பிற்பட்ட வகுப்பா என்று பார்க்காமல் மனதை மட்டும் பார்த்து மணம் முடித்து உண்மையில் *காதல்* என்ற உணர்வுச் சொல்லை வாழவைப்பவர்கள் பெண்களே.
ஆண்கெலெள்ளாம் காதலிக்கிறார்கள் ஆனால் தனது சமூகத்தைவிட பிற்பட்ட வகுப்பில் உள்ள பெண்ணை காதலிப்பது மிக மிக குறைவே. தன் காதல் தன்னைச் சார்ந்த சமூகத்தை எந்தவிதத்திலும் பாதிக்கக் கூடாது என்று நினைக்கும் ஆண்களின் காதல் உண்மையிலே காதல் தானா என்று கூட சந்தேகப் படவேண்டி இருக்கிறது.
சாதிகளை ஒழிக்கும் ஆயுதமான காதல் திருமணங்கள் பெண்கள் நினைத்தால் மட்டுமே சாத்தியம். பெண்களே உண்மையில் சாதிகளை / மதங்களை துணிந்து கடந்து காதலுக்கு மரியாதை செய்துவருகிறார்கள்.
சாதிகளைச் சாடி... சாதி குறித்து புரட்சிக்கவி பாரதி சொல்லுகையில்
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்கிறார். சாதிகள் இல்லையென்று பெண்களிடம் ஏன் சொல்கிறார் ? பையன்கள் தான் சாதி பார்க்கின்றனர்.
"சாதிகள் இல்லையடா பையா" என்று தான் சொல்லி இருக்கவேண்டும். ஆண்கள் திருந்தமாட்டார்கள் என்று நினைத்துதான்,
பெண்களிடம் சொல்வதுதான் சரி என்று உணர்ந்து சொன்னாரோ ?
பெண்கள் மட்டும் தான் பாரதி சொன்னதை கேட்டு நடக்கிறார்கள் !

8 கருத்துகள்:
இந்த கட்டுரை நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் நானும் இது மாதிரியான சூழலை பார்த்துள்ளேன்...
நன்றி
உங்கள் கருத்திலிருந்து நான் முற்றிலும் மாறுபடுகிறேன்.
பெண்களைவிட ஆண்கள் புற அழகினால் ஈர்க்கப்படுவது அதிகமென்றாலும் அவர்களின் காதல் சாதி பார்த்து வருவதில்லை. அவன் பார்க்கவேண்டிய அவசியமும் குறைவு.
ஆனால், பெண்களுக்கோ இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் இருக்கின்ற கட்டுப்பாடுகள் அதிகம். அவள் குடும்ப மானம் (பெண்ணை இப்படியா வளர்ப்பாங்க!, ஓடுகாலி), தன்னுடைய தங்கைகளின் திருமணம் முதலிய ஏராளமான காரணிகளை அவர்கள் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
காதலை சொன்னவனிடம் 'என்ன சாதி?' எனக்கேட்ட பெண்களை நானறிவேன்.
நன்றி.
"சாதிகள் இல்லையடி பாப்பா" அதுல பாப்பாங்குறது நான் தான்.
// குழலி / Kuzhali said...
இந்த கட்டுரை நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் நானும் இது மாதிரியான சூழலை பார்த்துள்ளேன்...
நன்றி
//
குழலி,
உங்கள் அனுபவத்தில் பார்த்திருக்கிறீர்கள். சரியாகத்தான் இருக்கும்.
GK,
உங்கள் கருத்து ஏற்புடையதாகவும் இருக்கு.. இல்லாமலும் இருக்கு..
எனக்கு என்னமோ இது தனி மனிதரைப் பொருத்து இருக்கும் என நினைக்கிறேன்!!
எனினும் நல்ல விவாதம்!!
நன்றி
//பெண் காதல் வலையில் விழுவதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது//
நீங்க சொன்னது எல்லாம் அப்படியே உல்டா பண்ணி பேசரவுங்களதான் பார்த்து இருக்கேன்...பெண்களுக்கு கொடுத்திருக்கிற பிளஸ்சுக்கு நன்றி...
ஆனா இது பெண்களுக்கு பெண்கள் மாறுபடும்னு தான் நினைக்கிறேன்..
//அதாவது இந்திய ஆண் - சீனப்பெண் ஜோடி அதிகம்//
ஜி.கே அய்யா,
நீங்க கொடுத்த உதாரணங்களை வச்சுப் பத்தா,சீனப் பெண்கள் சாதி பார்ப்பதில்லை (பொதுவா) என்று சொல்லலாமே தவிர,இந்திய பெண்களை பத்தி நீங்க கூறுவது தவறு என்று தோன்றுகிறது.இந்த ஆணாதிக்க சமுதாயத்தில்,ஆண்களுக்கு எக்ஸ்போஷர் அதிகம்,ஆதலால் ஓரளவுக்கேனும்,சாதி பார்க்காமல் இருப்பது,ஆண்கள் தான்.உங்க கருத்தை மாத்திக்குங்கய்யா.
பாலா
ஜாதி மதம் பார்த்துட்டு காதல் வந்தா அது காதலான்னே சந்தேகமா இருக்கே.:)
இத பொண்ணு தான் செய்வாங்க பையன் தான் செய்வாங்கன்னு சொல்றதுல என்னங்க இருக்கு .யார் செஞ்சாலும் காதலுக்கு அவமானம் தான்.
ஆனா ஏதோ பெண்கள் பக்கம் பேசணும்ன்னு நினைச்சுப்போட்டீங்களே பதிவு அதுக்கு நன்றி.
கருத்துரையிடுக