பின்பற்றுபவர்கள்

17 ஜனவரி, 2007

தமிழுக்கு தேவையா ?


தமிழ் என்பது ஒரு மொழிதானே அதன் மேல் பற்று என்ற பெயரில் புதுமைகளை ஏற்றுக் கொள்ள தயங்கவேண்டுமா ? மொழி வளர்ச்சிக்கு புதுமைகளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது தடையாகாதா ? என்ற கேள்வியை எனக்குள்ளே முன்பு கேட்டு இருக்கிறேன். பலருக்கும் இந்த கேள்வி இருக்கும்.

பல்வேறு காலகட்டங்களில் தமிழும் பல மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது. இலக்கிய வளம் நிறைந்த இந்திய மொழிகளில் தமிழே முதன்மையும் தொன்மையும் நிறைந்தது என்பதை கால்டு வெல்லுக்கு பிறகுதான் கண்டு கொண்டிருக்கிறோம்.

இயல் இசை நாடகம் என்று இருந்த தமிழ் இன்று அறிவியல் தமிழ், மருத்துவ தமிழ், இணையத் தமிழ் (இடுகை, பின்னூட்டம் இன்னபிற) என்று பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. சிலர் இது போதாது தமிழில் ba, bha,ga, gha,dha போன்ற ஒலி உடைய கிரந்த எழுத்துக்கள் போன்று தமிழில் இல்லை, அவற்றை ஏற்றுக் கொள்வதால் தமிழ் மேலும் வளரும் என்கிறார்கள். ஒரு மொழி சிதைந்து காணாமல் போவதற்கு அவை பிறமொழி சொற்களை ஏற்றுக் கொள்வது காரணியாக அமைவதில்லை. எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதாலேயே அவ்வாறு அமைந்துவிடுகிறது. கிரந்த எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதால் புதிய சொற்களையோ, அல்லது பழைய சொற்களையோ புதுப்பித்து பயன்படுத்த முடியாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் நிலை வந்துவிடும். கலப்பு அதிகம் ஆக ஆக மொழியின் வளர்ச்சி குன்றும் சில நூற்றாண்டுகளில் மொழி தன் உருவத்தை இழந்து முற்றிலும் அழியும். இது பல்வேறு மொழிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் நடந்துள்ளது. பிறமொழி எழுத்துக்களால் மொழி வளர்ச்சி என்பெதெல்லாம் வீண் வாதம்.
ஆங்கிலத்தை எடுத்துக் கொண்டால் கூட a(அ) இருக்கிறது aa (ஆ) இல்லை இது போல் இரண்டு மாத்திரைக்கு மேல் ஒலிக்கும் பல எழுத்துக்கள் ஆங்கிலத்திலும் இல்லை. ஆங்கிலத்தின் வளர்ச்சி குன்றவில்லையே. பல ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு அகராதியைப் பார்த்துதானே தெரிந்து கொள்கிறோம். நீள் ஒலி (நெடில்)எழுத்துக்கள் இல்லாதது ஆங்கிலத்தின் குறை என்று சொல்வதில்லை. ஆங்கிலம் பிறமொழி புதுச்சொற்களை இருபத்து ஆறு எழுத்துக்களை வைத்துக் கொண்டு தான் எழுதுகிறது.

மங்கோலிய மொழிகளான சீனம் மற்றும் ஜப்பான் மொழிகளில் R எழுத்து பயன்பாட்டில் இல்லை. பெயர் சொல்களில் வரும் R ஐ தவிர்த்துவிட்டுதான் சொற்கள் அமைத்து அதன்படியே எழுதுகிறார்கள். சீனர்களோ, ஜப்பானியர்களோ அது தங்களின் மொழியின் பெரும் குறை என்றெல்லாம் சொல்வதில்லை. மேலும் அவர்களின் மொழியில் புதிய எழுத்துக்களை சேர்க்காததால் அவர்களுடைய மொழியில் பெயர் சொற்களின் சிதைவு உச்சரிப்பு நீங்கலாக வினைச் சொற்களில் பிறமொழி கலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிங்கப்பூர் என்பதை சீனர்கள் சிஞ்சப்பூ(ர்), ஆஸ்திரேலியா என்பதை ஆடேலியா என்றுதான் எழுதுவார்கள் அதற்கு அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை தங்கள் மொழியின் குறை என்றெல்லாம் வீணாக கற்பனை செய்து கொள்வதில்லை.

எல்லா ஒலியையும் ஒலிக்கும் எழுத்துக்களை கொண்டிருக்கிறது என்று எந்த ஒரு மொழியும் இல்லவே இல்லை. சீன எழுத்துக்களில் பன்மாத்திரை (நெடில் நீள் ஒலி எழுத்து 'கூகூகூ' என மூன்று மாத்திரைக்கு மேல் ஒலிக்கும் ஒற்றை எழுத்துக்கள்)மற்றும் கால் மாத்திரை அளவுள்ள குறும் ஒலி எழுத்துக்கள் பிறன் மொழியில் இல்லை. சீன பெயர் சொற்கள் (ஊர், இடம்) பெயரை பிறமொழிகளில் எழுதும் போது அதே போன்ற உச்சரிப்பில் நிச்சயம் இருக்காது எழுத முடியாது. இதனால் சீன எழுத்துக்களை கடன் வாங்கினால் ஆங்கிலம் மேலும் சிறக்கும் என்று சொல்ல முடியுமா ?

ஒலி அதிர்வு அலையின் வேகம் 4hz - 4000 hz வரை இருக்கிறது இதில் தான் நாம் கேட்கும் அத்தனை ஒலிகளும் அடக்கம். குயில் கூவலை அப்படியே எழுத்தின் ஒலிமூலம் சொற்களில் கொண்டு வரும் தன்மை எந்த ஒரு மொழிக்கும் இல்லை. இரைச்சல், சத்தம் என்று எழுதத்தான் முடியும். இரைச்சல் காதின் கேட்கும் திறனால் கேட்கிறது ஆனால் எழுத்தில் அதே போன்று ஒலியை ஏற்படுத்தி நாவை ஒலிக்கவைக்க எழுத்துக்கள் எந்த மொழியிலும் இல்லை.

பிறமொழி எழுத்துக்கள் என்பது அவர்கள் எவ்வாறு சொற்களை உச்சரிக்கிறார்கள் என்ற அளவில் அந்த மொழிகளில் அமைந்திருக்கிறது. பாம்பே என்று எழுதி BOMBAY என்று ஆங்கில உச்சரிப்பில் பலுக்கினால் தவறு ஒன்றுமில்லை. அப்படித்தான் உச்சரிக்கிறோம் பாம்பில் வரும் 'பா' ஒலியில் உச்சரிப்பதில்லை. அதற்கு வெட்கப் படத்தேவையில்லை. ஆங்கிலத்திலும் CAR என்பதை யாரும் 'கர்' என்றோ BUS என்பதை புஸ் என்றோ படிப்பது இல்லை. தமிழ் இறை இலக்கியத்தில் வடமொழி சொற்கள் அதிகம் கலந்ததால் கடந்த காலத்தில் சில கிரந்த எழுத்துக்கள் தமிழில் நுழைக்கப்பட்டது. அதற்கு புணர்சி விதிகளும் அமைக்கப்பட்டது. சில ஆங்கில சொற்களையும் கூட சில புணர்ச்சி விதிகளின் படி பயன் படுத்துகிறோம் (எடுத்துக்காட்டு பஸ்சினுள், பஸ்சின் மேல்) இன்றளவிலும் பெயர் சொற்களில் (ஊர், பெயர், இடம்) பயன்படுத்தப்படுகிறது. அப்படியே இருந்துவிட்டு போகட்டும். அவை நீங்கி மற்ற கிரந்த எழுத்துக்கள் தமிழுக்குத் தேவையற்றது. அவற்றை பயன்படுத்துவதால் தமிழில் உள்ள வினைச்சொற்களும் திரிவதற்கு வாய்பு இருக்கிறது. நாம் நம் மொழிப் பற்றுடன் பிறமொழி வினைச் சொற்களை கலந்து பேசுவதை தவிர்க்காதவரை பெயர் சொற்களை அப்படியே எழுதக் கூட புதிய எழுத்துக்கள் வேண்டும் என்பது வீண் வேலை. 'அழகன்' என்ற பெயரை அப்படியே எழுதி ஒலிக்க தங்களிடம் 'ழ' போன்ற ஒலி உடைய எழுத்து இல்லையே என நினைத்து எந்த ஒரு மொழியாவது ஏன் (மலையாளம் தவிர்த்து) இந்திய மொழிகள் வெட்கப்பட்டு இருக்கிறதா அல்லது உச்சரிப்பில் கொண்டுவரவாவது முயல்கிறார்களா ?

எல்லா சொல்வளமும், எழுத்தும் இருப்பதுதான் மொழியின் சிறப்பு, மொழி வளரும் என்று சொல்லவே முடியாது. எல்லா சொல்வளமும், எழுத்தும் இருந்து பேசப்படாமல் மறைக்கவோ, முடக்கியோ வைக்கப்பட்டு பயன்பாடு அற்று இருந்ததால் நம் இந்திய மொழிகள் பல அழிந்து போன வரலாறுகளைக் காண்கிறோம். ஆயிரம் கால்கள் இருக்கிறது என்பதற்காக காலே இல்லாத பாம்பை பூரானோ, மரவட்டையோ முந்தியது இல்லை. அதிகமான எழுத்துக்களை வைத்திருப்பதைவிட அதிகமாக பேசப்படும் மொழியே வளரும் என்பது இணைய ஊடகத்தில் இந்திய மொழிகளில் நம் தமிழே நன்றாக வளர்ந்து கொண்டு இருப்பதை வைத்து அறியமுடிகிறது.

தாய்மொழியை தொலைத்ததால் பண்பாடு கலாச்சாரம் எல்லாமே தொலைந்து போன பிறநாட்டு மக்கள் அடிமையாகத்தான் நடத்தப்படுகின்றனர். இனப்பெருமை என்பது தாய் மொழிப்பற்றில் இருக்கிறது அதனை அழியவிடாது காப்பது அதனைப் பேசுபவர்களின் கடமை. பெயர் சொற்களை முடிந்தவரையில் பயன்படுத்தி, முற்றிலும் வினைச்சொற்களை தாய்மொழி தமிழில் மட்டுமே பயன்படுத்த பழகிக் கொள்ளவேண்டும். 'கட்' பண்ணினான் என்பதற்கு பதில் வெட்டினான் என்று பயன்படுத்துவதன் மூலம் இது போன்ற 'பண்ணி' பயன்படுத்தப்படும் நிறைய பிறமொழி வினைச்சொற்களைச் களையலாம். பெயர் சொற்களில் ஒருவர் விரும்பாவிட்டால் ஜெயராஜ் என்ற அவரது பெயரை செயராசு என்று அழைத்தோ, எழுதியோ தமிழ்படுத்தத் தேவையில்லை. பெயர் என்பது பெற்றோர் வைப்பது அதனை பிறர் கொச்சைப்படுத்துவதை எவரும் விரும்பமாட்டார்கள். நம் தாய்மொழி தமிழுக்கு எதையாவது பரிந்துரைக்கையில் பொறுப்புணர்ந்து அது நம் மொழி வளர்ச்சிக்கு எந்தவகையில் பயன்படும் என்று முதலில் அறிய வேண்டியது நன்று.

இதன் மூலம் சொல்ல வருவது பிறமொழியில் உள்ள தமிழில் தற்போது இல்லாத (ba, bha,ga, gha,dha ) ஒலியை உடைய எழுத்துக்கள் தேவையில்லை என்பது என்கருத்து.


மேலும் இது தொடர்பான இராமகி ஐயாவின் விவாவதம் இங்கே

29 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

இன்று காலை வானொலியில் "வெளிச்சம் " நிகழ்ச்சியில் நமது நச்ரத் ஹசன் பாலியல் என்பதை "Bha லியல் என்று உச்சரித்தார்.ஒரு வேளை ஆங்கிலத்தில் எழுதி படிக்கிறாரோ என்னவோ?
பேசுகிற மொழி கட்டாயம் வளரும்.
கணினி சம்பந்தப்பட்ட வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை கண்டுபிடித்து மக்களிடம் கொண்டு செல்வதற்குள் ஆங்கில வார்த்தையே வசதியாக இருக்கும் என்று அதையே உபயோகப்படுத்த ஆரம்பித்துவிடுகிறோம்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

எனக்கு இது குறித்து பல நாட்களாக பல சந்தேகங்கள் உண்டு. இது போன்ற சொற்கள் முன்பு இருந்தே இல்லையா? இல்லை நடுவில் காணாமல் போய் விட்டதா என்று.

மற்றபடி உங்கள் சிந்தனையுடன் ஒத்துப் போகிறேன்.

வெற்றி சொன்னது…

கோ.க,

/* கிரந்த எழுத்துக்களை */

கிரந்த எழுத்துக்கள் என்றால் என்ன என்று தயவு செய்து சொல்ல முடியுமா?

G.Ragavan சொன்னது…

இந்தக் கனமான எழுத்துகள் தமிழுக்குத் தேவையே இல்லை. ஏற்கனவே சிலபல இடங்களில் இந்த ஒலிகளை நாம் பயன்படுத்தித்தான் வருகிறோம். எடுத்துக்காட்டாக தங்கை என்ற சொல்லை எடுத்தால் அதை உச்சரிக்கும் பொழுது thankai என்று உச்சரிப்பதில்லை. thangai என்றுதான் உச்சரிக்கிறோம். ங்கோடு க சேருகையில் அப்படிப் பலுக்கிறோம். அதே போல ஞ்சோடு ச் சேருகையில் ஜகரம் வரும்.

வாரியார் சொல்வார். முந்துதமிழ் என்று சொல்கிறார்கள் தெரியுமா? தமிழ் முந்துமாம். எங்கே? போட்டியில். கனமான எழுத்துகள் உள்ள வடமொழி இன்று பேச்சுப் பயன்பாட்டிலிருந்தே போன நிலை. ஆனால் பழைய மொழியான தமிழ்..இன்னமும் முடிந்தவரையில் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு பேச்சு வழக்கிலும் உள்ளது. எப்படியென்றால் ஒல்லியானவனும் கனமானவனும் ஓடினால் கனமில்லாத ஒல்லியானவன் முந்துவான் அல்லவா. அதுபோல முந்தும் தமிழ்மாலை முழங்கும் வடிவேலை என்று தொடர்வார் வாரியார்.

கோவி.கண்ணன் சொன்னது…

குமரன் மற்றும் வெற்றி,

கிரந்த எழுத்துக்கள் என்றால் வடமொழியை எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துக்கள்,
ஜ்,ஷ்,ஸ்,ஹ,ஸ்ரீ மற்றும் சில எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களின் ஒலியில் இருந்து தமிழுக்காக அமைக்கப்பட்ட தமிழ் வடிவ எழுத்துக்கள்.

இவையெல்லாம் சங்க காலதமிழில் இல்லை. ஏனில்லை என்றால் அப்பொழுது பிறமொழிச் சொற்கள் கலக்கவில்லை எனவே அவசியமும் இல்லாமல் இருந்தது.

கிரந்த எழுத்துக்கள் 51, தமிழ் எழுத்துக்கள் 12 உயிர் + 18 மெய் + 1 ஆய்த எழுத்து சேர்ந்தது. இந்த 31ல் 'ந','ழ','ற' தவிர்த்து ஏனைய ஒலி உடைய எழுத்துக்கள் கிரந்த எழுத்திலும் பொதுவாக உண்டு.

நம் தமிழில் ka, kha, ga, gha ஆகிய ஒலிகளுக்கு 'க' வை மட்டும் பயன் படுத்துகிறோம். கிரந்த எழுத்துக்களில் தனித்தனி எழுத்துக்கள் உண்டு.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

இது போன்ற எழுத்துக்கள் தமிழுக்குத் தேவையே இல்லை. எதுவும் இல்லாமலே தமிழ் வளமாகத் தான் உள்ளது..

நல்ல கட்டுரை கோவி.

//தாய்மொழியை தொலைத்ததால் பண்பாடு கலாச்சாரம் எல்லாமே தொலைந்து போன பிறநாட்டு மக்கள் அடிமையாகத்தான் நடத்தப்படுகின்றனர். //
நியாயமான கருத்து. இதைத் தான் தேடிக் கொண்டிருந்தேன், தனித் தமிழ் பேசி எல்லாம் தமிழை வளர்க்க வேண்டுமா என்று கேட்ட நண்பர் ஒருவருக்குச் சொல்ல வேண்டியிருந்தது.. ரொம்ப நன்றி :)

வெற்றி சொன்னது…

கோ.க,
விளக்கத்திற்கு மிக்க நன்றி.

நல்ல சுவாரசியமான கருத்து. மற்ற தமிழ் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

Sivabalan சொன்னது…

GK,

மிக அருமையான பதிவு!

பல தகவல்கள் தெரிந்துகொண்டேன்..

மிக மிக நன்றி

VSK சொன்னது…

ஜிரா சொன்னது போல, இதெல்லாம் எழுத்தெல்லாம் இல்லாமலேயே, தமிழில் இருக்கிறது.
//thangai என்றுதான் உச்சரிக்கிறோம். ங்கோடு க சேருகையில் அப்படிப் பலுக்கிறோம். அதே போல ஞ்சோடு ச் சேருகையில் ஜகரம் வரும்.//

இந்த உதாரணங்களே போதும்!

தமிழ் அப்படியே இருக்கட்டும்!
அதனால் நாம் வளர்வோம்!
நாம் அதை அழிக்காமல், மறக்காமல் இருந்தாலே போதும்!

ஒரே ஒரு சிறு மாற்றுக் கருத்து!

//தாய்மொழியை தொலைத்ததால் பண்பாடு கலாச்சாரம் எல்லாமே தொலைந்து போன பிறநாட்டு மக்கள் அடிமையாகத்தான் நடத்தப்படுகின்றனர். //

மொரீஷியஸில் தமிழன் என்ன அடிமையாகவா இருக்கிறான்?

ஒரு பக்கம் மாற்றம் என்பது "காலத்தின்" கட்டாயம் என்கிறீர்கள்!

இன்னொரு பக்கம் ஏண் மாற்ற வேண்டும் என்கிறீர்கள்!

உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை!
:))

எல்லாம் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே!
நாம் மட்டும் நம் பார்வையை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாமே!

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

ஜிரா சொன்னது போல, இதெல்லாம் எழுத்தெல்லாம் இல்லாமலேயே, தமிழில் இருக்கிறது. //thangai என்றுதான் உச்சரிக்கிறோம். ங்கோடு க சேருகையில் அப்படிப் பலுக்கிறோம். அதே போல ஞ்சோடு ச் சேருகையில் ஜகரம் வரும்.// இந்த உதாரணங்களே போதும்! தமிழ் அப்படியே இருக்கட்டும்! அதனால் நாம் வளர்வோம்! நாம் அதை அழிக்காமல், மறக்காமல் இருந்தாலே போதும்! ஒரே ஒரு சிறு மாற்றுக் கருத்து! //தாய்மொழியை தொலைத்ததால் பண்பாடு கலாச்சாரம் எல்லாமே தொலைந்து போன பிறநாட்டு மக்கள் அடிமையாகத்தான் நடத்தப்படுகின்றனர். // மொரீஷியஸில் தமிழன் என்ன அடிமையாகவா இருக்கிறான்? ஒரு பக்கம் மாற்றம் என்பது "காலத்தின்" கட்டாயம் என்கிறீர்கள்! இன்னொரு பக்கம் ஏண் மாற்ற வேண்டும் என்கிறீர்கள்! உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை! :)) எல்லாம் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே! நாம் மட்டும் நம் பார்வையை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாமே!

எஸ்கே ஐயா,
மொரீசியஸ் தமிழர்கள் தாய்மொழியை பயன்படுத்தவில்லை, அதனால் அதைவைத்து தமிழ் தொலைந்துவிட்டது, அவர்கள் அடிமையாகிவிட்டார்கள் என்று சொல்லவில்லை. புலம்பெயர்ந்தவர்கள் அந்தபகுதியில் அதிகம் பயன்படுத்தும் மொழியை பயன்படுத்துக்கிறார்கள். மேலும் மொரீசியஸ் தீவு உருவான நாடு. வெளிநாட்டில் குறைந்த அளவு தமிழர்கள் தமிழை பேசாமல் இருக்கிறார்கள் என்பதற்கும் பயன்பாட்டில் தமிழை பேசிக்கொண்டிருக்கும் நாம் தமிழை பாதுகாக்க வேண்டும் என்று சொல்வதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. நான் முற்றிலும் தொலைந்த அல்லது தொலைந்து போய்கொண்டிருக்கிற மொழியைப் பற்றித்தான் சொல்கிறேன். நான் சொன்னது எவ்வளவு உண்மை என்பது *இறந்து போன மொழியை* நினைத்து ஏங்கும் அந்த மொழிக்குரியவர்களுக்கு நன்கு புரியும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பிய நாடுகளில் சில நாட்டு மக்கள் தங்கள் மொழியை இழந்ததால் தங்கள் இனத்திற்கின்றே எந்த பெருமையுமின்றி அடிமையாக நடத்தப்படுவதாக படித்தேன். அதுபற்றிய செய்தியை தேடிப் பிடித்து பதிவிடுகிறேன். மேலும் மொழியை பாதுகாக்க *காலமாற்றங்களில்* நடக்கும் வரலாற்று உண்மைகளில் படித்தவற்றை சுட்டினேன்.

காலத்தின் கட்டாயம் *மாற வேண்டியவைகளில்* மாறத்தான் வேண்டும். அதற்காக கால மாற்றத்தினால் அம்மாவை அப்பா என்று கூப்பிட முடியாது. மாறவேண்டியது என்றால் இந்த காலத்தில் முற்றிலும் பயனளிக்கதவற்றை, எதோ ஒருசிலருக்கு மட்டும் பயனளிப்பது போலவும் மற்றவர்களுக்கும் கெடுதலாக இருப்பவற்றை எல்லோருக்கும் பயனளிப்பதாக மாற்றித்தான் ஆகவேண்டும். மாற்றம் வேண்டுமென்றால் *எல்லாவற்றிலுமா ?* என்று ஒரு கருத்தைப் பிடித்து 'தொங்கி'க் கொண்டிருப்பதையும் மாற்றவேண்டும்.

எல்லாம் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், மொழியைக் கூட விட்டுவைக்காமல் உயர்வு தாழ்வு சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் அப்படியே விட்டுவைக்கவேண்டுமா ? அவர்கள் சொல்ல்வது சரியாக இருக்கும் என்பது போல் பார்வையை மாற்றிக் கொள்ளவேண்டுமா ? என்ன சொல்ல வருகிறீகள் என்று தெளிவாக சொல்ல முடியுமா ? இங்கு மொழியைப் பற்றி பேசுகிறோம்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பிய நாடுகளில் சில நாட்டு மக்கள் தங்கள் மொழியை இழந்ததால் தங்கள் இனத்திற்கின்றே எந்த பெருமையுமின்றி அடிமையாக நடத்தப்படுவதாக படித்தேன்.//
தங்கள் எழுத்து வடிவம் இல்லாமல் ஆங்கில வடிவத்தில் தம் மொழியை எழுதி வைத்துக் கொண்டு இப்போது சீரழிந்து கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளையும் இதில் சேர்க்கலாம் அல்லவா?

அவர்களின் மொழிக்கு எழுத்துவடிவமே இல்லை என்று கேள்விப்பட்டுள்ளேன். இப்போதும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு ஆங்கில மொழியில் பேசவும் தேர்ந்து விட்டனர் என்றும்... இது முற்றிலும் கேள்விப்பட்ட செய்தியே. நானும் விவரங்கள் கிடைத்தால் இடுகிறேன்.

இலவசக்கொத்தனார் சொன்னது…

சரிங்க. எனக்கு ஒரு கேள்வி. சரியோ தவறோ இன்றைக்கு ஜ்,ஷ்,ஸ்,ஹ,ஸ்ரீ போன்ற எழுத்துகள் தமிழில் இருக்கின்றன. இவைகள் இடைச்செருகல்கள் எனப் புறக்கணிக்க வேண்டுமா? அல்லது இன்று இவை தமிழ் மொழிக்குள் வந்துவிட்டன என்பதால் இவைகளை உபயோக்கிக்கலாமா? உங்கள் கருத்து என்ன?

கோவி.கண்ணன் சொன்னது…

//இலவசக்கொத்தனார் said...
சரிங்க. எனக்கு ஒரு கேள்வி. சரியோ தவறோ இன்றைக்கு ஜ்,ஷ்,ஸ்,ஹ,ஸ்ரீ போன்ற எழுத்துகள் தமிழில் இருக்கின்றன. இவைகள் இடைச்செருகல்கள் எனப் புறக்கணிக்க வேண்டுமா? அல்லது இன்று இவை தமிழ் மொழிக்குள் வந்துவிட்டன என்பதால் இவைகளை உபயோக்கிக்கலாமா? உங்கள் கருத்து என்ன?
//

கொத்ஸ்,

முன்னமே சொல்லிவிட்டேன், பதிவை திரும்ப படிங்க. இதெல்லாம் இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், புதிய எழுத்துக்கள் தேவையில்லை என்றேன்.

பழசைப்பற்றி பேசவில்லைங்க எடுக்கச் சொல்லவில்லைங்அ, புதிதாக வேண்டாம் என்றேன்.

இலவசக்கொத்தனார் சொன்னது…

சரி. இன்று ஒருத்தர் என்னிடம் கர்நாடக சங்கீதம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு நான் Bhaavam என்ற சொல்லைப் பத்தி சொல்ல வேண்டி இருந்தது. பாவம் என எழுதினேன். அவரும் ஆமாம் அந்த பாடகர் பாவம் என பதிலுரைத்தார்.

Paavaththukkum Bhaavathukkum எப்படி வித்தியாசம் காமிக்கறது? இதுக்காக கர்நாடக சங்கீதத்தில் மாற்றம் கொண்டு வாங்கன்னு சொல்லாதீங்க. நான் ஒருவரிடம் எழுதும் பொழுது இந்த மாதிரி பல முறை தட்டு தடுமாற வேண்டி இருக்கிறது.

இதுக்கு புது எழுத்துக்கள் கொண்டு வரச்சொல்லலை. ஆனா இருக்கற எழுத்துகளைக் கொண்டு சுலபமாக வித்தியாசம் காட்ட வழி இருக்கிறதா?

நான் உண்மையிலேயே கேட்கறேன். வெறும் எதிர்வினைக்காக இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

கொத்ஸ்,

நான் கடைசியில் ஒரு வரி சேர்கலாம் என்றே நினைத்தேன் தவறாக புரிந்து கொள்ளப்படும் என்று நினைத்தேன்.

அதாவது கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்த்துக் கொள்வதால் அதன் வழி வடமொழி சுலோகத்தை எழுதிவைத்து அட்சரம் பிசகாமல் படிக்க முடியும் வேறொன்றும் பயனில்லை என்பது.

நீங்களும் கேட்டுவிட்டீர்கள்.

நம்ம உடித் நாராயணன் தமிழில் உள்ளதை அப்படியே ஹிந்தியில் எழுதி வைத்துத்தான் படிக்கிறார். ஆனால் உச்சரிக்கும் போது * பிரியாமான பெண்ணை ரசிக்கலாம் * என்பதற்கு பதில் பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம் * என்று பாடிவிட்டார். அதாவது அவருக்கு தமிழ் சொல்லை அப்படியே எழுதியும் படிக்கும்போது அவரால் முடியவில்லை. எனவே சரியான எழுத்து உச்சரிப்பு குறைபாட்டை நீக்கும் என்று நினைப்பது தவறு என்று நினைக்கிறேன்.

கர்நாடக சங்கீதம் படிக்கிறவர்கள் பாவ'த்தை சரியாக சொல்லாமால் தவாறாக சொல்லி ஒன்றும் பாவம் செய்துவிடமாட்டார்கள், சங்கீதமே படிக்கையில் பாவம் என்று சரியாக சொல்லத் தெரியாமல் தடுமாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. ஒரே சொல் இடத்துக்கு ஏற்றார் போல் பொருளைரைக்கும் என்பது எல்லா மொழிகளிலிம் உள்ள பொதுவானவை தான். பாவம் என்று சங்கீதத்தில் எழுதி இருக்கும் இடத்தில் பாவம் என்றால் பாவனை என்று பொருள் (உச்சரிப்பு) கொள்வதில் சிக்கல் இருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு சிலர் கர்நாடக சங்கீதம் தமிழில் அட்சரம் பிசகாமல் எழுத படிக்க வேண்டுமென்பதற்காக தமிழுக்கு *பாவத்தை* சேர்க்க புதிய எழுத்துக்கள் சேர்க்க வேண்டியதில்லை வேண்டியதில்லை என்பது என்கருத்து.

இலவசக்கொத்தனார் சொன்னது…

கோவி, மீண்டும் சொல்கிறேன், நான் நடைமுறையில் சுத்த தமிழில் எழுதுவதில்லை. (சாட் செய்யும் பொழுது ஒரு காட்டு) அப்பொழுது பாவிக்கும் ஆங்கில /ஹிந்தி சொற்கள் தவறாகப் புரிந்து கொள்ளல் வேண்டாமே என்பதற்காகத்தான் கேட்டது.

ப. என்றால் bha, க. என்றால் gha என்பது போல சில விதிமுறைகளை நாமே கொண்டு வரலாமா என்பதாகத்தான் கேட்டேன்.

வெற்றி சொன்னது…

பொன்ஸ்,

/* தங்கள் எழுத்து வடிவம் இல்லாமல் ஆங்கில வடிவத்தில் தம் மொழியை எழுதி வைத்துக் கொண்டு இப்போது சீரழிந்து கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளையும் இதில் சேர்க்கலாம் அல்லவா?
அவர்களின் மொழிக்கு எழுத்துவடிவமே இல்லை என்று கேள்விப்பட்டுள்ளேன். இப்போதும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு ஆங்கில மொழியில் பேசவும் தேர்ந்து விட்டனர் என்றும்... இது முற்றிலும் கேள்விப்பட்ட செய்தியே. நானும் விவரங்கள் கிடைத்தால் இடுகிறேன். */

நீங்கள் சொல்லியுள்ளது போல், "தங்கள் எழுத்து வடிவம் இல்லாமல் ஆங்கில வடிவத்தில் தம் மொழியை எழுதி வைத்துக் கொண்டு இப்போது சீரழிந்து கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளையும் இதில் சேர்க்கலாம் அல்லவா" என்பது தவறான கூற்று என நினைக்கிறேன்.

பல ஆபிரிக்க மொழிகளுக்கு என்றுமே எழுத்து வடிவம் இருந்ததில்லை. பல ஆபிரிக்க மொழிகள் பேச்சு வழக்கு மொழியாகவே இருந்து வந்துள்ளன.அவர்களது வரலாறுகளும் வாய்மொழியாகவே அடுத்த சந்ததிக்குச் சொல்லப்பட்டு வருகிறது. அங்கு ஒரு நாட்டிலேயே பல நூற்றுக்கணக்கான dialect உண்டு. வெள்ளையர்கள் இந் நாடுகளை அடிமைப்படுத்திய பின் பல dialect அழிந்து போனது உண்மைதான்.

எடுத்துக்காட்டாக, சோமாலி மொழிக்கு 1950 கள் வரை எழுத்து வடிவமே இருக்கவில்லை. 1950 களில் சோமாலியர் ஆங்கில alphabet ஐத் தமது சோமாலி alphabet ஆகப் புழங்கத் தொடங்கினார்கள். ஆனால் சோமாலி alphabetக்கு ஆங்கில alphabet உச்சரிப்புக்கள் இல்லை. குறிப்பாக A என்ற ஆங்கில எழுத்தை சோமாலியில் A என்று சொல்வதில்லை. ஆக இதை எப்படிச் சீரழிவு என்று சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இருந்த ஒன்றைத் தொலைத்து வேறொன்றைப் புழங்கினால் சீரழிவு என்று சொல்லலாம், ஆனால் எழுத்தே இல்லாமல் இருந்த மொழி, அதன் உணர்வுகளை எழுத்திலும் வெளிப்படுத்த ஆங்கில alphabet ஐ உள்வாங்கிக் கொண்டு, அந்த[சோமாலி] மொழியைச் செழுமைப் படுத்தியது முன்னேற்றமன்றோ?!

பொன்ஸ், இன்னொன்று, ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டும் தான் ஆங்கில எழுத்துக்களை தங்கள் மொழி எழுத்து வடிவமாகப் புழங்குகிறார்கள் என்றில்லை. எடுத்துக்காட்டாக, வியற்னாம் மொழியும் ஆங்கில எழுத்துக்களைத்தான் தமது எழுத்தாகப் புழங்குகிறார்கள்.

இப்போது யமேக்கா நாட்டில் வாழும் கறுப்பின மக்கள் வெள்ளையர்களால் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட போது தமெக்கனெ ஒரு பேச்சு மொழியைக் கொண்டிருந்தனர். ஆனால் பின் யமேகா கொண்டுவரப்பட்டதும், அடிமை வாழ்வால் தம் மொழியைத் துப்பரவாக இழந்துவிட்டனர். இருப்பினும் இன்றும் அவர்கள் ஆங்கில மொழியைப் பேசும் போது தமது தொலைந்த மொழியின் பாணியில் தான் பேசுகிறார்கள் என்பது மிகவும் சுவாரசியமானது. அவர்கள் ஆங்கிலத்தில் கதைத்தால்[பேசினால்] எனக்கு ஒரு கோதாரியும்[இழவும்] விளங்காது.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி, மீண்டும் சொல்கிறேன், நான் நடைமுறையில் சுத்த தமிழில் எழுதுவதில்லை. (சாட் செய்யும் பொழுது ஒரு காட்டு) அப்பொழுது பாவிக்கும் ஆங்கில /ஹிந்தி சொற்கள் தவறாகப் புரிந்து கொள்ளல் வேண்டாமே என்பதற்காகத்தான் கேட்டது. ப. என்றால் bha, க. என்றால் gha என்பது போல சில விதிமுறைகளை நாமே கொண்டு வரலாமா என்பதாகத்தான் கேட்டேன். //

கொத்ஸ்,
நடைமுறையில் தமிழ் மட்டுமில்லிங்க... எல்லோரும் அவரவர் மொழிகளில் பேச்சு மொழியும், உரைநடையும் வேறாகத்தான் இருக்கிறது. செல்போன், chat [IRC - asl please ?] எல்லாவற்றிலும் குறுஞ்சொற்களை பயன்படுத்துகிறோம். இவற்றை மொழி என்று விதிமுறைக்குள் இட்டுச்செல்ல முடியாது முறைப்படுத்தவும் முடியாது. குழுவாக செயல்படுபவர் இது போல் சங்கேத வார்த்தைகள் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ! இந்தி கற்றுக் கொடுக்கும் புத்தங்களில் வேறுபாட்டைக் காட்ட ba-பா1, bha-பா2 என போட்டிருக்கும். அதுவும் வேற்றுமொழியின் உச்சரிப்பை சரியாக புரிந்து கொள்வதற்கு மட்டும் தான், அதே வார்த்தையை தமிழில் சேர்த்துக் கொள்ள அல்ல. வேற்றுமொழி சொற்பதங்களுக்கு ஆங்கில செல்லையே (bhaவம்) சாட் பண்ணும் போது போடுங்க உடனே புரியும். நாம் தனிப்பட்டு நமக்குள் புரிந்துகொள்ள ஆங்கிலத்தில் எழுதினால் என்ன ஹிந்தியில் எழுதினால் என்ன யார் கேட்கப் போகிறார்கள். விதிமுறைகளெல்லாம் பொதுப் பயன்பாட்டிற்குத்தான்

VSK சொன்னது…

//வேற்றுமொழி சொற்பதங்களுக்கு ஆங்கில செல்லையே (bhaவம்) சாட் பண்ணும் போது போடுங்க உடனே புரியும். நாம் தனிப்பட்டு நமக்குள் புரிந்துகொள்ள ஆங்கிலத்தில் எழுதினால் என்ன ஹிந்தியில் எழுதினால் என்ன யார் கேட்கப் போகிறார்கள். விதிமுறைகளெல்லாம் பொதுப் பயன்பாட்டிற்குத்தான் //

இந்தப் பொதுப் பயன்பாட்டிற்காக உள்நுழையும் சில எழுத்துகளால் நாளை ஒன்றும் தீமை விளையாது என்று சொல்கிறீர்களா, கோவியாரே!

பதிவின் மூலக்கருத்தையே இது சிதைக்கிறதே!

வீட்டில் ஒரு நியாயம்; வெளியில் ஒரு நியாயம் எனத் திரியும் ஒரு சில வீணர்களுக்கும் இதற்கும் அதிக வேறுபாடில்லை!

இதற்கு என் கருத்து இதோ!

"bhaவம் என்னும் சொல் தமிழ்ச் சொல் இல்லை!
அந்தப் பாடகர் மிகவும் குரல் உருக்கத்துடன்தான்[bhaவம்] பாடினார்! ஆனாலும் கச்சேரி சிறக்கவில்லை! பாவம் அந்தப் பாடகர்!"

இதைச் சொல்லிப் பாருங்கள்!

bhaவம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமலேயே தமிழில் எழுத முடியும்.

"குரல் உருக்கம், குரல் நெகிழ்வு" என எவ்வளவோ சொற்கள் தமிழில் உண்டு!

இது போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனச் சொவதை விடுத்து, கிரந்த எழுத்துகளை சேர்க்கலாம் என கடைசியில் சேர்க்க இருந்து தவிர்த்தேன் என சொல்லியிருக்கிறீர்களே!

உங்கள் பதிவின் கடைசி வரிகளுடன் இது பொருந்தி வராதே!

தமிழ் வாழ்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
இன்று காலை வானொலியில் "வெளிச்சம் " நிகழ்ச்சியில் நமது நச்ரத் ஹசன் பாலியல் என்பதை "Bha லியல் என்று உச்சரித்தார்.ஒரு வேளை ஆங்கிலத்தில் எழுதி படிக்கிறாரோ என்னவோ?
பேசுகிற மொழி கட்டாயம் வளரும்.
கணினி சம்பந்தப்பட்ட வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை கண்டுபிடித்து மக்களிடம் கொண்டு செல்வதற்குள் ஆங்கில வார்த்தையே வசதியாக இருக்கும் என்று அதையே உபயோகப்படுத்த ஆரம்பித்துவிடுகிறோம்.

//

வாருங்கள் குமார்,
நீங்கள் சொல்வது சரி. பேசுகின்ற மொழி வளரும். நாமும் பிறரின் மொழியை பயன்படுத்தும் போது அவர்களிடம் கேட்டு சரியான முறையில் உச்சரிக்க வேண்டும்.

பிறமொழி பேசும் மக்கள் தமிழில் உள்ள 'ற்' படிக்கும் போது தடுமாறி போய்விடுகிறார்கள். வெற்றி என்பதை வெ-ற்-றி அதாவது வெர்ரி என்பது போல் படிப்பார்கள் !
சிரித்துவிட்டு சரியான உச்சரிப்பை சொல்லிக் கொடுப்பதுதான் நல்லது.

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்ஸ் எழுதியது...
அவர்களின் மொழிக்கு எழுத்துவடிவமே இல்லை என்று கேள்விப்பட்டுள்ளேன். இப்போதும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு ஆங்கில மொழியில் பேசவும் தேர்ந்து விட்டனர் என்றும்... இது முற்றிலும் கேள்விப்பட்ட செய்தியே. நானும் விவரங்கள் கிடைத்தால் இடுகிறேன்.
//
எழுத்தில்லாத மொழிகள் எத்தனையோ இருக்கிறது. தெற்காசிய மொழிகள் அப்படித்தான் மலேசியா, இந்தோனேசிய, பிலிப்பைன்ஸ் மற்றும் புரூனே ஆகிய நாடுகளில் பேசப்படும் மொழிகள் (மலாய் மற்றும் மாலாய் மொழியை ஒத்த) மொழிகளுக்கு எழுத்துக்கள் கிடையாது. ஆங்கில எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அம்மொழியில் இல்லாத சொற்களை அவர்களுடைய உச்சரிப்புக்கு தகுந்தது போல் மாற்றிக் கொள்கிறார்கள். Clinic, Doctor, Taxi என்று ஆங்கிலதில் உள்ள மாலாய் மொழியில் இல்லாத சொற்கள் klinik, Dokter, Tekxi என்று மாலேசிய மொழிகளில் எழுதப்படுகிறது. அவர்கள் மொழி காப்பற்றப்பட எழுத்தில் எழுதி புழங்குவதே சரி என்பதால் ஆங்கில எழுத்துக்களை மட்டும் மலாய் மொழியை எழுத அரசாங்கம் முதல் அனைத்திலும் பயன்படுத்துகிறார்கள். ஆங்கில எழுத்துக்களில் இருக்கும் மலாய் செய்தித்தாள்களை நாம் படித்தால் நிச்சயம் ஒரு வரி கூட புரியாது. அவர்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள். நமது தமிழில் சொல்வளம் நிறைய இருக்கிறது எனவே நமக்கு புதிய கலைச்சொற்கள் வினைச் சொல்லுக்காக தேவைப்படாது. கலைச் சொற்கள் பெயர் சொல்லுக்குத் தேவைப்படும் அவற்றை தமிழ் இருந்தால் அதுவும் எளிதாக இருந்தால் அவற்றையே பயண்படுத்தலாம் (உ.ம் கணனி, குறும் தகடு) இல்லையென்றால் தற்போது உள்ள தமிழ் எழுத்துக்கள் வழி அம்மொழி உச்சரிப்பை அப்படியே பயன்படுத்தலாம் (உ.ம் இ.சி.ஜி)

ரவி சொன்னது…

அருமையான பதிவு...இந்த யுனிகோர்டை இணைய தமிழின் பொதுமொழி ஆக்கினால் என்ன ? ( தங்கிலீஷை)

Machi சொன்னது…

நன்றாக சொன்னிர்கள் கோவி கண்ணன். ராம் என்பதை ஆங்கிலத்தில் Ram என்று எழுதுவார்கள் இதை சரியாக சொன்னால் Raam என்று தான் இருக்க வேண்டும். Arnold schwarzenegger
என்பதை தமிழில் அப்படியே உச்சரிப்பு பிசகாமல் எழுதவேண்டும் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்ல?.

suvanappiriyan சொன்னது…

மிக அருமையான பதிவு!

பல தகவல்கள் தெரிந்துகொண்டேன்..

jeevagv சொன்னது…

உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன். தமிழ் மீதான அதீத பற்றால், தமிழ் இனி வளரவே வேண்டாம் என்று நினைப்பவர்களைப் பார்த்தால், வருத்தப்பட வேண்டியிருக்கிறது. :-(

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
அருமையான பதிவு...இந்த யுனிகோர்டை இணைய தமிழின் பொதுமொழி ஆக்கினால் என்ன ? ( தங்கிலீஷை)
//

ரவி,

ஆங்கில விசைப்பலகை மூலம் தங்கிலீசில் தட்டச்சுவது எனக்கும் இலகுவாக இருக்கிறது. நடைமுறையில் உள்ள யூனிக் கோட் ல் நிறைய குறைகள் இருக்கின்றன களையப்பட வேண்டும். உதாரணத்திற்கு துணைக்காலையும், ஒற்றை கொம்பி இரட்றை கொம்பு ஆகியவற்றை தனியாக போட முடியவில்லை !
:(

பதிவை பாராட்டியதற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//குறும்பன் said...
நன்றாக சொன்னிர்கள் கோவி கண்ணன். ராம் என்பதை ஆங்கிலத்தில் Ram என்று எழுதுவார்கள் இதை சரியாக சொன்னால் Raam என்று தான் இருக்க வேண்டும். Arnold schwarzenegger
என்பதை தமிழில் அப்படியே உச்சரிப்பு பிசகாமல் எழுதவேண்டும் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்ல?.
//

குறும்பன்,
நல்ல கருத்து சொல்லி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

மிக்க் நன்றி !

ஐந்திணை சொன்னது…

படித்ததும் புரிந்தது:

"மெல்லத் தமிழினிச் சாகும்" - என்று சொன்னவர் பொய் சொன்னாரென்று.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகில் said...
படித்ததும் புரிந்தது:

"மெல்லத் தமிழினிச் சாகும்" - என்று சொன்னவர் பொய் சொன்னாரென்று.
//

முகில்,
கருத்துக்கு நன்றி, இதெல்லாம் சிலருக்கு ஞாபகம் வராது ஆனால் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது மட்டுமே நினைவுக்கு வந்து யாரும் சட்டை செய்யாவிட்டாலும் பெரியார் தமிழை இழிவுபடுத்தினார் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருப்பார்கள்
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்