பின்பற்றுபவர்கள்
11 ஜூலை, 2006
காதலி vs மனைவி (கவிதை)!
உன்,
ஒற்றை பின்னல் சடையின்
ஒற்றை ரோஜாவின்
ஓற்றை இதழ் விழுமா என்று ஏங்கி
ஒற்றை காலில் தவம் செய்து, விழுந்தவுடன்
ஒற்றிக் கொண்டேன் என் கண்களில் !
உன்னை,
ஒப்புவித்து பாட ஒரு
ஒப்பு தேட,
ஒப்புகள் யாவும் அஃறிணைதான் என்று
ஒப்புக்கொள்ள, உயர்திணை நீ
ஒப்பில்லாதாவள் என உணர்ந்து கொண்டேன்!
நான்,
ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு நாளும், விழித்திருந்தால் என்
ஒவ்வொரு எண்ணங்களிலும் நீ
ஒருவேளை நான் தூங்கிபோனால் கனவுகளில் நீ, என்
ஒவ்வொரு நொடியும்,
ஒரே பெயராக உன் பெயர் சொல்லியது !
என்றெல்லாம் எழுதிய உன் பேனா,
பதிவு திருமணத்தில் கணவன் என்ற இடத்தில்
பதிந்து கையெழுத்திட்டு காணாமல் போனதா ! அல்லது
மறைந்து போனதன் மாயம் நீ மறந்து போனாயா!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
17 கருத்துகள்:
ஒரு ஓ......... போடுங்கப்பா...
//manasu said...
ஒரு ஓ......... போடுங்கப்பா...
//
ஓ..... போடுவதற்கு உங்களை மாதிரி பெரிய 'மனசு' காரங்களாலத்தான் முடியும் :)
///
என்றெல்லாம் எழுதிய உன் பேனா,
பதிவு திருமணத்தில் கணவன் என்ற இடத்தில்
பதிந்து கையெழுத்திட்டு காணாமல் போனதா !
///
எக்ஸ்பிரசனிஸம் திருமணத்திற்கு பின் அருகி விடுகிறது அதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். :-)))
//குமரன் எண்ணம் said... எக்ஸ்பிரசனிஸம் திருமணத்திற்கு பின் அருகி விடுகிறது அதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். :-))) //
திரு குமரன், எமக்கு அதெல்லாம் தெரியாது ... ரெண்டு பக்கமும் ... பேசும் அல்லது வாரிவிடும் நடுநிலை வாதிங்க நானு :)
என்றெல்லாம் எழுதிய உன் பேனா,
பதிவு திருமணத்தில் கணவன் என்ற இடத்தில்
பதிந்து கையெழுத்திட்டு காணாமல் போனதா ! அல்லது
மறைந்து போனதன் மாயம் நீ மறந்து போனாயா!////
சூப்பர் சாரே!
//aaradhana said...
சூப்பர் சாரே!//
தாய் குல்ங்கள் கண்ணீர் வடித்தால் ... குடத்தோட ... சாரி கர்சிப்போடு முதல் ஆளா நான் தான் நிற்பேன் :)
இதில் தெரியும் ஒரு முரண் வேண்டுமென்றே கவனிப்பவர்கள் கவனத்துக்காக இடப்பட்டதா?
இல்லை..... மாறுபட்டதா?
சற்று விளக்குங்களேன்!
கோவி.கண்ணன் அய்யா
கவிதை அருமை.
கருத்தை ஏற்க முடியாது...
எண்ணங்கள் மாறலாம் ஆனால் உண்மையான அன்பு மாறாது அது உண்மை என்றால்...
//At 9:58 AM, SK said…
இதில் தெரியும் ஒரு முரண் வேண்டுமென்றே கவனிப்பவர்கள் கவனத்துக்காக இடப்பட்டதா?
இல்லை..... மாறுபட்டதா?
சற்று விளக்குங்களேன்!
//
முரண்பாடு ... எல்லாம் முடிந்ததும் தான் ஏற்படுகிறது அதற்கு முன்பு எல்லாம் உடன்பாடே.
பிகு : குறிப்பிட்டு எதையாவது சொல்கிறீர்களா ? புரியவில்லை.
காதலனுக்கு எந்த ஸ்டேட்டஸும் இல்லை ஆனால் கணவன் என்றானதும் ஸ்டேட்டஸ் வந்து மாறிவிடுகிறார்கள் அதைத்தான் சொல்லவந்தேன்
//Sivabalan said...
கோவி.கண்ணன் அய்யா
கவிதை அருமை.
கருத்தை ஏற்க முடியாது...
//
காதலனுக்கு எந்த ஸ்டேட்டஸும் இல்லை ஆனால் கணவன் என்றானதும் ஸ்டேட்டஸ் வந்து மாறிவிடுகிறார்கள் அதைத்தான் சொல்லவந்தேன்
திரு சிவபாலன்... சட்டங்களை மீறுபவர் எத்தனைபேர் ஒரு 10% இருக்குமா ? ஆனால் சட்டத்திட்டங்களும் போலிஸ்காரர்களும் அவர்களுக்காக மட்டுமா இருக்கிறார்கள் ... எல்லோருமே அதனால் துன்பபடுகிறோமே. காதலிப்பவர்கள் அனைவரையும் சொல்லவில்லை... ஒரு சிலர் இருக்கிறார்கள் .. நானே நேரிடையாக பார்த்திருக்கிறேன்
//பிகு : குறிப்பிட்டு எதையாவது சொல்கிறீர்களா ? புரியவில்லை.//
'உன் பேனா' எப்படி 'கணவன்' எனக் கையெழுத்துப் போடும்?
மனைவி என்றுதானே போட்டிருக்கும்!
அதைத்தான் முரண் எனச் சொன்னேன்!
ஒருவேளை அவன் பேனா இவனிடம் இருந்ததோ!?
// SK said...
'உன் பேனா' எப்படி 'கணவன்' எனக் கையெழுத்துப் போடும்?
மனைவி என்றுதானே போட்டிருக்கும்!
அதைத்தான் முரண் எனச் சொன்னேன்.//
SK Sir...முரண் ஒன்றும் இல்லை ... 'ஓ' போட்டு கவிதை எழுதியது கனவனான காதலன் . கவிதை எழுதிய காதலனின் பேனா தானே பதிவுத்திருமணத்தில் கணவன் என்ற இடத்தில் கையெழுத்துப் போடும். கடைசி நான்கு வரியில் கேள்வி கேட்பது மனைவி. காதலித்தபோது இருந்த அன்பு திருமணத்திற்கு பிறகு இல்லை என்று மனைவி கேள்வி எழுப்புவது தான் அது. 'என்றெல்லாம்' என்ற வரியை கவனிக்க :)))))
சூப்பர்...(ஏதோ கொஞ்சம் தான் புரிந்தது...கடைசியில் கொஞ்சம் புரியாமல் இருந்தது...பின்னூட்டங்களை பார்த்து தான் புரிஞ்சுக்கிட்டென்)
முதலிலும், 'உன் பெயர் சொல்லியது'க்குப் பின்னும் ஒரு " " போட்டிருந்தால், குழப்பம் வந்திருக்காது....எனக்கு!! :(
நல்ல விளக்கம்!
இப்போது புரிந்தது!
//முதலிலும், 'உன் பெயர் சொல்லியது'க்குப் பின்னும் ஒரு " " போட்டிருந்தால், குழப்பம் வந்திருக்காது....எனக்கு!! :(
நல்ல விளக்கம்!
இப்போது புரிந்தது!//
என் நண்பர் ஒருவரும் 'என் பேனா' என்ற இடத்தில் ஏன் 'உன் பேனா' என்று போட்டிருக்கிறாய் என்று கேட்டார். பின்னர் விளக்கியதும் புறிந்து கொண்டார். இது ஒரு உள்குத்து கவிதை :)))
போங்க கோவி.கண்ணன்,
இந்த மாதிரி கவிதையெல்லாம் நிறைய பாத்தாச்சு.
வேற மாதிரி மாத்துங்க,
கணவன் காதலன் என்று கவிதை போட்டிருந்தால் இந்த மாதிரி இரண்டு மடங்கு பின்னூட்டம் வாங்கி இருக்கலாம்.
//At 11:30 AM, பாலசந்தர் கணேசன். said…
போங்க கோவி.கண்ணன்,
இந்த மாதிரி கவிதையெல்லாம் நிறைய பாத்தாச்சு.
வேற மாதிரி மாத்துங்க,
//
ம் உங்க அனுபவத்தை வைத்துச் சொல்கிறீர்கள். புதியவர்கள் பாடம் கற்கவேண்டாமா ?
கருத்துரையிடுக