பின்பற்றுபவர்கள்

20 ஜூலை, 2006

pk - தொடரும் இந்திய ஊடுறுவல் !

பாக்கிஸ்தானிலிருந்து செயல்படும் பல்வேறு ஊடுருவல்கள் தடைசெய்யப்பட்டும், ஒரு புதிய ஊடுறுவல் வெற்றிகரமாக தடைகளை தாண்டி வருகிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. குண்டு வெடிப்பிற்கு முன்பு இப்படி ஒரு ஊடுறுவல் பாக்கிஸ்தானில் இருப்பதே இந்தியாவுக்கும், ஊடக பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தெரியவில்லை.

தடைகளை நாங்கள் வெற்றிகரமாக தாண்டுவோம் என்று சவால்விட்டு வெற்றிகரமாக செயல்பட்டும் வருகிறது. நம் இந்தியர்களும் அது விரித்த வலையில் விழுந்துவிட்டார்கள் என்று சொல்லத்தான் வேண்டும்.
இதை நம் இந்தியர்களும் தங்கள் சுயநாலனுக்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிகிறது.

இந்திய அரசு பல்வேறு அடித்தளங்களை தடைசெய்தாலும், இந்த அடித்தளம் எல்லாவற்றையும் விஞ்சும் அளவிலும், தடைசெய்யப்பட தளங்களை தன்னுள் இணைத்து இந்தியாவுக்குள் அனுப்புவதில் வெற்றி கண்டுருப்பதைப் பார்க்கும் போது. இந்திய அரசு கண்மூடிக்கிடக்கிறதா என்று தெரியவில்லை.

பொது இடத்தில் இந்த தள அமைப்பை நம்போன்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு கொக்கறிக்கிறார்கள். நாங்கள் நினைத்ததை சாதிப்போம் தடா, பொடா எதுவோண்டுமானலும் போட்டுக்கொள் எங்கள் குரல்வளையை நெறிக்கமுடியாது என்று முழங்குகிறார்கள்.
ஆனாலும் இதன் ஆட்டமெல்லாம் இன்னும் இரண்டொரு நாளைக்குத்தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது.


நமக்கு நெருக்கமாக தமிழ்மணத்திலேயே இந்த ஊடுறுவலைப் பார்த்தும், கண்டும் காணமல் எல்லோரும் இருக்கிறோம்.


ரொம்ப குழப்பமாக இருக்கிறதா ? அது pk ...pk என்று தமிழ்மண இடுகைகளின் முகப்பிலும் மறுமொழி இடுகைகளின் முகப்பிலும் தெரியும் 'pk' ..... என்ற pkblog தான் :)))

pkblog பாகிஸ்தானிலிருந்து இயங்கி blogspot சேவைகளை இணைத்துத் தருகிறது. இது தான் நியூஸ். இது ஜோக்குக்காக எழுதின பதிவு யாரும் சீரியஸ் ஆக எடுத்துக்காதீர்கள். ஆனால் செய்தி உண்மை :))))

pk என்றாலே இந்தியாவிற்கு தலைவலிதான் போலும்.

pk ஐ உபயோகப்படுத்தி இன்றைக்கு அதிகம் குழப்பத்துக்கு ஆளானவர்கள் நானும் திரு டிபிஆர் ஜோசப் ஐயாவும் தான். :)))))


அவர் pkவைப் புகழ்ந்து அவர் எழுதிய பதிவே காணமல் போய்விட்டது, அதற்கு போட்ட பின்னூடமெல்லாம்
திரும்பிப் பார்கிறேன் 175 போய் சேர்ந்து இருவரும் குழம்பி... ஒரே தமாஸ் ஆகிவிட்டது :)))

பி.கு : இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கு நான் தடைசெய்துள்ள சொற்கள்... மதம் ... தேசபக்தி ... மற்றும் உகு, வெகு



7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆஹா..அப்படியா,,,,,
அப்ப pk க்கு உடனே தடை விதித்து நம்ம தேசப்பக்தி நிலை நிறுத்த வேண்டும்.
வேற எதாவது பக்கத்தின் வழியாக வாங்கப்பா...

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
ஆஹா..அப்படியா,,,,,
அப்ப pk க்கு உடனே தடை விதித்து நம்ம தேசப்பக்தி நிலை நிறுத்த வேண்டும்.
வேற எதாவது பக்கத்தின் வழியாக வாங்கப்பா...
//
உங்க பின்னூட்டத்திற்கு பிறகு பதிவில் நான் ஒரு பின்குறிப்பி போடவேண்டியதாகிவிட்டது. :)))

பெயரில்லா சொன்னது…

உங்களது பதிவை நான் பிகே வழியாகப் பார்த்துப் பின்னூட்டம் இடவில்லை என்று உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ஹி ஹி

பெயரில்லா சொன்னது…

விட மாட்டீங்களே....
சரி, உங்க இஷ்டம்
உகு, வெகு எங்க தடை செஞ்சிங்க...
அது இல்லாமல் பின்னூட்டம் போடுவதற்கு நம்ம மக்களால் முடியாதே

பெயரில்லா சொன்னது…

கெக்கே பிக்கே(PK) என்று சிரிப்பவர்கள் சிரிக்கலாமோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
உங்களது பதிவை நான் பிகே வழியாகப் பார்த்துப் பின்னூட்டம் இடவில்லை என்று உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ஹி ஹி
//
G.Ragavan ...
pk வழியா பார்க்கவில்லை என்பது உறுதியாக தெரிகிறது, pk வழியாக போட்டிருந்தால் பின்னூட்டம் எங்காவது சென்றிருக்கும் :))

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
கெக்கே பிக்கே(PK) என்று சிரிப்பவர்கள் சிரிக்கலாமோ? //
kk :))) pk :)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்