(பெண்ணிய குமுறல்)
உதிரப் போக்காய்
உதிர்ந்து இருக்கவேண்டிய நீ, என்
உதிரம் பெற்றுகொண்டு,
உதிரப் போக்குடையவள் என்பதால்,
உதிர்க்கிறாய் நான் தூய்மையற்றவள் என்று !
உதிரும் வெறும் வார்த்தைகள் அல்ல அவை,
உதிரத்தை நான்
உதிராமல் பொத்தியதால், என்
உதிரத்தில் ஊரினாலும்,
உதிராத அழுக்குகளை, உன்
உதிரப் போக்காய்
உதிர்ந்து இருக்கவேண்டிய நீ, என்
உதிரம் பெற்றுகொண்டு,
உதிரப் போக்குடையவள் என்பதால்,
உதிர்க்கிறாய் நான் தூய்மையற்றவள் என்று !
உதிரும் வெறும் வார்த்தைகள் அல்ல அவை,
உதிரத்தை நான்
உதிராமல் பொத்தியதால், என்
உதிரத்தில் ஊரினாலும்,
உதிராத அழுக்குகளை, உன்
உதிரத்தில் வைத்துக்கொண்டு,
உதிர்க்கும் எனக்கு எதிரான கெட்ட
உதிர வார்த்தைகள் அவை !
உதிர்க்கும் எனக்கு எதிரான கெட்ட
உதிர வார்த்தைகள் அவை !
10 கருத்துகள்:
உக்கிர உதிரமாய் உதிர்ந்திருக்கின்றன வார்த்தைகள்.
பெண்ணின் குமுறலை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் கோவி.
//ப்ரியன் said...
உக்கிர உதிரமாய் உதிர்ந்திருக்கின்றன வார்த்தைகள்.
பெண்ணின் குமுறலை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் கோவி.
//
நன்றி...ப்ரியன்,
பெண்களுக்கு எதிரான சில விடயங்களைப் படிக்க நேர்ந்ததில்
எழுந்த ஆக்கம்
உதிரத்தில் ஊற உதவி செய்தவனுக்கு சொல்ல மட்டும் உரிமை இல்லையோ!
இது என்னங்க நியாயம்!
தூய்மை இல்லாத நேரங்களை சொன்னதில் தப்பென்ன?
தாறுமாறாய்ப் பேசுபவர்களைப் பற்றி நான் சொல்லவில்லை.
உரிமையுடன் சொல்லுகிறேன்.
ஊரினாலும் : ஊறினாலும்
நன்றாக உள்ளது...
//At 10:07 AM, SK said…
உதிரத்தில் ஊற உதவி செய்தவனுக்கு சொல்ல மட்டும் உரிமை இல்லையோ!
இது என்னங்க நியாயம்!
தூய்மை இல்லாத நேரங்களை சொன்னதில் தப்பென்ன?
தாறுமாறாய்ப் பேசுபவர்களைப் பற்றி நான் சொல்லவில்லை.
உரிமையுடன் சொல்லுகிறேன்.
//
எப்போதும் தூய்மையற்றவர்களாக சித்தரிப்பவர்களுக்குத்தான் சொன்னது இது !
//செந்தழல் ரவி said...
நன்றாக உள்ளது...
9:23 PM
//
ரவி நன்றி !
கோவி. கண்ணன் நல்லா எழுதியிருக்கீங்க வார்த்தைகளின் விளையாட்டு நன்றாக இருக்கிறது.
// குமரன் எண்ணம் said... கோவி. கண்ணன் நல்லா எழுதியிருக்கீங்க வார்த்தைகளின் விளையாட்டு நன்றாக இருக்கிறது.//
ஆமாங்க குமரன் வார்த்தை விளையாட்டு அதை வைத்துத்தான் 'காலம்' தள்ளுகிறேன்
"உதிராத அழுக்குகளை, உன் உதிரத்தில் வைத்துக்கொண்டு,
உதிர்க்கும் ...... கெட்ட ... வார்த்தைகள்"
நல்ல வரிகள்.
உறைக்க வைக்கும் கருத்து.
கருத்துரையிடுக