கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் காதலிக்கிறார்களா ? காதலிப்பவர்கள் எல்லோரும் கவிதை எழுதுகிறார்களா?... என்னைப் போல் கவிதைகளை காதலிப்பவர்கள் உண்டு. கழுதைக்கு கூட காதல் பிடிக்கும் அது காகிதத்தில் எழுதப்பட்டிருந்தால். எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லை. யாரோ ஒருவர் சந்தர்ப வசத்தில் பிரியும் போது ... சில வேளைகளில் இப்படியும் நடந்துவிடுகிறது.
முன்னாள் காதலை எண்ணி...
என் காதலனாக
என்னை நீ காதலித்த போது,
எனக்கு அனுப்பிய கடிதங்கள் அனைத்தும்
ஏற்றுக்கொண்டு படித்தவுடன், பெண் என்ற
எச்சரிக்கை உணர்வுடன்,
எவருக்கும் தெரியாமல்,
எல்லா கடிதங்களையும், பெண்
என்பதால் எரித்துவிட்டேன் !
ஏதோ எதிர்பாரதவிதமாக, இது
எதுவும் தெரியாததால்,
என் சம்மதம் கேட்காமல்,
என் பெற்றோர் வேறொருவருடன்
எனக்கு திருமணம் செய்தார்கள்!
என் முதல்காதலை , நீ அனுப்பும்
என் பழைய கடிதங்கள் மூலம்
என் கணவர் தெரிந்துகொண்டும்,
எதற்கும் எதிர்க்காமல்,
என்னை ஏற்றுக் கொண்டு
என்னை தேற்றும்,
என் கணவன் கயவனல்ல !
என் பழைய காதலை எண்ணித் துணிந்தே,
என் எண்ணங்களை உனக்கு எழுதுகிறேன் !
என்னை காட்டிக் கொடுப்பதாக,
என் பழைய கடிதங்களை,
என் கணவருக்கு அனுப்பும் உன்னை,
என் நெஞ்சில் சுமந்த அசுத்தம்
எனத் துடைத்துவிட்டேன் !
என் முன்னாள் கடிதங்கள் எல்லாம்
என் கணவருக்கு நீ அனுப்பிமுடிந்ததும்,
என் கடைசி கடிதம் இதையும்
என் கணவருக்கு அனுப்பிவிடு !
8 கருத்துகள்:
//கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் காதலிக்கிறார்களா ? காதலிப்பவர்கள் எல்லோரும் கவிதை எழுதுகிறார்களா?... என்னைப் போல் கவிதைகளை காதலிப்பவர்கள் உண்டு. கழுதைக்கு கூட காதல் பிடிக்கும் அது காகிதத்தில் எழுதப்பட்டிருந்தால். எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லை. யாரோ ஒருவர் சந்தர்ப வசத்தில் பிரியும் போது ... சில வேளைகளில் இப்படியும் நடந்துவிடுகிறது.
//
அதெல்லாம் சரி! இவ்ளோ பெரிய டிஸ்கி அவசியமா?
//நாமக்கல் சிபி @15516963 said...
அதெல்லாம் சரி! இவ்ளோ பெரிய டிஸ்கி அவசியமா?
//
கவிதை பிடிக்காதவர்கள் எல்லாம் எதோ ... கட்டுரை என்று ஏமாந்து... சரி வந்ததே வந்துட்டோம்னு படிச்சி வைப்பார்கள் ... என்ற ந(ட்)ப்பு ஆசை தான். தொழில் ரகிசியம்... கைப்புள்ள ஆளுங்கிறதால சொல்லிட்டேன்.. நாமக்கல்லாரே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். ரகசியம் ... பரம ரகசியம் :)
இல்லையே! டிஸ்கி போட்டுட்டா படிக்கிற எல்லாரும் இதை அப்படியே நம்பு உங்க கவிதை இல்லைன்னு நினைச்சுக்குவாங்க அப்படிங்கற மாதிரி இருக்கே!
கடைசி கடிதம் இதையும் என் கணவருக்கு அனுப்பி விடு..
இது நக்கலப்போய், சரியானா நக்கல்.
//எல்லாரும் இதை அப்படியே நம்பு உங்க கவிதை இல்லைன்னு நினைச்சுக்குவாங்க அப்படிங்கற மாதிரி இருக்கே!//
எங் கவிதைதான் ... எங் கவிதை தான் பின்ன ? பட்டானி பொட்டலத்துல் இருந்தததையா நான் போட்டிருக்கேன் :)
//பாலசந்தர் கணேசன். said...
இது நக்கலப்போய், சரியானா நக்கல்.
//
பின்னூட்டம் இட்ட வலைபதிவர் மதிப்பிற்குரிய பாலசந்தர் கணேசன் அவருக்கு கோவி.கண்ணனின் மனமார்ந்த நன்றிகள்
நானும் சில தடவைகள் காதலித்து இருக்கிறேன். ஆனால் ஒரு கவிதை கூட எழுதியதில்லை. பிரிந்த போதும் கவி புனையவில்லை.
//என்னை காட்டிக் கொடுப்பதாக,
என் பழைய கடிதங்களை,
என் கணவருக்கு அனுப்பும் உன்னை,
என் நெஞ்சில் சுமந்த அசுத்தம்
எனத் துடைத்துவிட்டேன் !//
"எங்கிருந்தாலும் வாழ்க
உன் மஞ்சள் குங்குமம் வாழ்க
...
ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்"
இப்படியெல்லாம் நடக்கக் கூடிய நல்ல முன்னாள் காதலர்களைக் காண்பது அரிது தான்.
//வெற்றி said...
நானும் சில தடவைகள் காதலித்து இருக்கிறேன். ஆனால் ஒரு கவிதை கூட எழுதியதில்லை.
//
எனக்கு தெரிஞ்சு ஒரு தடவை காதலித்தவர்கள் கவிதை எழுதியிருக்கிறார்கள். சில தடவை காதலித்தவர்களால் அவ்வாறு எழுத முடியுமா என்பது தெரியவில்லை.
//இப்படியெல்லாம் நடக்கக் கூடிய நல்ல முன்னாள் காதலர்களைக் காண்பது அரிது தான். //
நீங்கள் சொல்வதை நான் வழிமொழிகிறேன்
கருத்துரையிடுக