புதுக் கட்சிகளின் தொடக்கத்தை எப்பொழுதும் 'கிளாப்' அடித்து தொடக்கு வதற்காக இந்த 'குடும்ப அரசியல்' என்ற சொல்லே பெரிதும் பயன்படுகிறது. அண்மை காலமாக அதாவது தேர்தல் நேரத்தில் அணிமாறுவதற்கு தலைவர்களுக்கு இந்த சொல்லே முதலில் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாவற்றிலும் வாரிசுகள் அரியணை ஏறுவதும் அதற்கு மக்கள் ஆதரவும் கொடுப்பது ஒன்றும் புதித்தல்ல.
காலம் காலமாக மன்னர் ஆட்சி முறையில் வாழ்ந்த மக்கள், மன்னர் பரம்பரை என்னும் மரபனு உணர்வு இன்றும் இருப்பதால் தான் இன்றும் பல்வேறு போராட்டங்கள், சாதனைகள் மூலம் அறியணை யேறுபவர்களை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகளும் அத்தகைய தகுதிகள் இருப்பதாக நம்புகிறார்கள். தகுதியில்லாதா வாரிசுகள் வீழ்ச்சி கண்டதையும் வரலாறுகள் பதித்தி வைத்திருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.
நமக்கு ஒரு அரசியல் கட்சி முதன் முதலில் அறிமுகமானால் அது 90% சதவிகிதம் நம் குடும்பத்தினர் போற்றிய ஒரு கட்சியாகத் தான் இருக்கும். அதாவது என்னுடைய அப்பா திராவிட கட்சிகளை ஆதரித்து வந்திருந்தால் என்னுடைய நாட்டமும் அதைச் சார்ந்தே இருக்கும். திராவிட கட்சி ஆதரவு நிலையில் வளர்ந்த நாம் காங்கிரசோ, இடது சாரிகளோ ஏன் பிஜேபி யே நல்ல செயல் திட்டங்களை தீட்டினாலும் அவைகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவு நிலையை எடுப்போர் நம்மில் 20% சதவிகிதம் கூட இல்லை. இதையும் மீறி கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவது ஏனென்றால் அது அந்த 20% சகிதத்திற்கும் குறைவான மக்கள், எதிர்கட்சி செயல்பாடுகளை கவர்ந்தோ அல்லது ஆளும் கட்சிக்கு எதிராகவோ வாக்களிப்பதால் தான்.
40% விகிதம் பேர் எந்த நிலையில் இருந்தாலும் ஓட்டு போடுவதில்லை.
மீதம் 40% சதவிகிதம் என்பது தான் குடும்ப அரசியல். எப்படி 40% விகிதம் குடும்ப அரசியல் ?. அதாவது
'எங்க ஓட்டு எப்பவும் இரட்டை இலைக்கு தான், எங்க குடும்பமே எம்ஜிஆர் ரசிகர்கள்'
'எங்கப்பாவுக்கு கலைஞரின் பேச்சும் தமிழும் மிகவும் பிடிக்கும், நாங்க எப்பவும் சூரியனுக்கு தான் போடுவோம்'
'எங்க தாத்தா காங்ரஸ்காரர், எங்க குடும்பமே கை சின்னத்துக்கு தான் ஓட்டு போடும்'
'எங்க சாதிகாரர் ராமதாஸ் அவருக்கு போடாம யாருக்கு போடரதாம் ?'
'இந்தியாவை இந்துக்கள் ஆளாம வேற யாரு ஆள்வது, என் வீட்டுகாரர் இந்து ஆதரவாளர் அதனால் பி.ஜே.பி தான் எங்கள் சாய்ஸ்'
இன்னும் சில பேர்
சித்தாந்தம் பேசிகொண்டு காலம் காலமாக அறிவாள், சுத்தியலை பிடித்துக் கொண்டு நிற்பவர்கள்.
பெரியாரையும், கருணா நிதியையும் பரம்பரை பகைவர் களாகவே நினைப்பவர்கள்.
இந்த குடும்ப அரசியல் சார்பு நிலைப்பாடுகள் வாக்கு வங்கிகள் எனப்படுகிறது.
பெறும்பாலும் நம் அரசியல் நிலைப்பாடு நம் குடும்பத்தினரால் ஏற்படுத்தப் பட்டதாக இருக்கிறது.
எம்ஜிஆருக்கு நேரடி வாரிசுகள் இருந்திருந்தால் ஜெயலலிதா வந்திருக்க மாட்டார். அண்ணா, காமராஜர் அவர்களுக்கு பின்பும் நடந்தது இதுதான். இந்த வாரிசுகள் இல்லாத பொழுது மட்டுமே அடுத்தவர்களுக்கு வாய்பு கிடைக்கிறது.
முன்பு குடும்ப அரசியலை சாடிய மருத்துவர் ராமதாஸ், தன் மகன் அன்புமணி நுழைந்ததும் சைலன்ட் ஆகிவிட்டார்
மூப்பனாருக்கு வாசன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
திமுக அரசியலில் தவிர்க முடியாத ஒரு அங்கம் ஸ்டாலின்.
சமீப வரவு கார்திக் சிதம்பரம்
காங்கிரஸ் கட்சியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
இந்த கட்சிகளிலிருந்து வெளியேறி எதிரணியில் சேருபவர்கள் சொல்லும் முதல் குற்றச்சாட்டு வாரிசு அரசியல். இவர்கள் நினைத்துப் பார்பதில்லை ஜெயலலிதாவிற்கு வாரிசு இருந்திருந்தால், இதே குற்றச் சாட்டுகள் அங்கு எடுபடாது என்பது.
தகுதியில்லாத வாரிசுகளை மக்கள் புறக்கணிதிருக்கிறார்கள். தகுதி உள்ள வாரிசுகள், இந்த வாரிசு எதிர்ப்பு போராட்டங்களை தாண்டி வளர்ந்தே வந்திருக்கிறார்கள். ஸ்டாலின் அதற்கு நல்ல உதாரணம்.
வாரிசுகளை விரும்புவர்கள் நாம் தான், அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாரிசுகளை நல்ல முறையில் உட்புகுத்தும் கட்சித்தலைவர்கள் கருணாநிதி போன்றோர் சிலரே, தங்கள் வழியில் ஈடுபாடு உள்ள சில வாரிசுகளை அதே வழியில் வளர்த்து வெற்றி பெறுகிறார்கள்.
ஆக குடும்ப அரசியல் என்பது நம் வீட்டிலிருந்து அதாவது ஆதரவோ, எதிரோ ஒரு நிலையில், நம் தாத்தா காலம் முதலோ, அப்பா காலம் முதலோ ஆரம்பித்த அரசியல் சார்பு நிலை நமக்கு பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த குடும்ப அரசியல் கோசம் அரசியல் வாதிகளுக்கு அவ்வப்போது தங்கள் சார்பு நிலையை மாற்றிக்கொள்ளக் கிடைத்த நொன்டிச் சாக்குதான். இதனால் உடனடியாக குறைந்தபட்ச பலன்கள் அவர்களால் பெறமுடியும். நீண்ட கால பலன் பெறமுடியாது, ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து இதே குற்றச் சாட்டுக்ளை கூறிக்கொண்டு இருக்க முடியாது, அதற்குள் அவர்களது வாரிசுகள் அதே வழியில் அவர்களுக்கு வாரிசாக வளர்ந்து விடுகிறார்கள்.

9 கருத்துகள்:
ஒரு விதத்தில் ஒற்றுக்கொள்ள கூறியதுதான் -- சிட்டுக்குருவி
ஒரு + போட்டாச்சு!
ஸ்டாலின் ஒரு பரிதாபத்திற்குரிய வாரிசு...வேறு யாராவது அல்லது வேறு கட்சியினராக இருந்திருந்தால் இந்நேரம் முதல்வராக ஆகியிருக்கலாம். அவர் முகவின் மகனாகப் பிறந்தது தான் அவர் செய்த பாவம்.
தத்தி வந்த சிட்டுக் குருவிக்கும், பொட்டிக்கடையின் மசால் வடைக்கும் நன்றி
அரசியல் அப்பாக்களிலேயே, மோசமான அப்பா கலைஞர்தான்னு நினைக்கிறேன். ஒரு கஷ்டமும் படாமல், தேர்தல்ல கூட நிக்காமல், அன்புமணி, வாசனெல்லாம் மத்திய மந்திரி ஆகும்போது, அங்கே குமாரசாமி திடீர்னு முதல்வர் ஆகும்போது, இவர் மட்டும், இன்னும் மாநில மந்திரியாகக்கூட ஆகாமல் இருப்பது, முகவின் தவறென்றே சொல்லலாம். ஒருவேளை, அடுத்த வருஷம், மகனை முதல்வராக்கிட்டு, தான் ஜனாதிபதியாகிறதுதான் அவருடைய பொறுமைக்கு பரிசோ???!!! ( கொஞ்சம் நம்ம நண்பர்கள் பொருமலை, வயிற்றெரிசலை வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆசைதான்....)
கோவி அருமையன நடையில் அட்டகாசமாக எழுதி இருக்கிறீர்கள்....
ஆமாம்...இவர் ஜனாதிபதி ஆகவேண்டியது தான் பாக்கி...
// போதுமா கிருஷ்னா ??
தயாநிதி மாறன், அன்புமணியெல்லாம் அமைச்சர் - அதுவும் சர்வ வல்லமை படைத்த மத்திய அமைச்சர் - ஆகும் போது ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆவதற்கு முழு தகுதியும் படைத்தவர் தான். இப்படி ஒரு (மோசமான) முன்னுதாரணத்தை காட்டி ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் ஓ.கே. வாங்குவதற்காக தான் தயாநிதிக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்திருக்கிறாரோ தாத்தா. தப்பித்தவறி தி.மு.க. ஜெயித்து ஆறு மாத காலத்துக்குள் ஸ்டாலினுக்கு முடி சூட்டப்பட்டால், கலாநிதி மாறன் "என்ன நைனா ஒண்டிக்கு ஒண்டி வர்றியா" என்று போட்டிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
I'm so sad to read this article, i can't even believe while reading it. I thought, I should post my strong abjection against the abstract of this article. The abstract, which is projecting a wrong action as a common phenomenon, and goes to the extend of stating it's the right thing and praising it. The action which is *absolute wrong* in/for a democratic system, but which been projected as *nothing wrong* in this article. I'm not against Stalin or Mr.X, but to the notion of this article, especially praising anyone instrumenting it, and using manipulative as well speculative statements about Anna and Kamaraj in favor of this article. A wrong is wrong no matter what, it can't be right just because everyone is doing it. Again, I'm not personally against you or anyone, but strongly against the notion of this article ... even now I can't believe the abstract of this article.
Regards.
மாறுபடுகிறேன்..
வாரிசுகள் அரசியலில் வலம் வர, அவர் தம் பெற்றோர் பின் புலம் இல்லாமல் வரவே முடியாது.
இப்படி ஒவ்வொரு பதவியும் குடும்ப சொத்தா ஆக்குவதற்கு மன்னராட்சி என்று அறிவித்துவிட்டு போய்விடலாம்.
கருத்துரையிடுக