பின்பற்றுபவர்கள்

13 ஏப்ரல், 2006

கன்னட சிம்மம் ராஜ் குமார்

கன்னட திரைவுலகின் முடிசூட மன்னன் ராஜ் குமார் இறந்த செய்தி பெங்களூரிலும், ஒட்டு மொத்த கர்நாடகவிலும், கலவரங்களையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக ரசிகர்கள் போல் எம்ஜிஆர் விசுவாசிகள், சிவாஜி விசுவாசிகள் என்று பிரித்து அறியப்படாமல் ஒரே மாபெரும் திரைநாயகனாக அவர் கன்னடத் திரை உலகினத்தினரும், கன்னடர்களும் ஆழ்ந்த விசுவாசிகளாக இருந்தனர். அவர் தமிழ்னாட்டில் பிறந்த கன்னடர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புத்திரனில் கன்னட சிவாஜியாகவும், மக்களிடம் அபிமானம் பெற்றதில் எம்ஜிஆராகவும் விளங்கினார்.

வெறும் குரலசைவுக்கு வாயசைக்காமல் சிறந்தபாடகராகவும் விளங்கினார். கர்நாடக சங்கீதத்தில் ஊறித் திளைத்தவர் என்றும் சொல்கிறார்கள். டிஎம்எஸ்சை போன்ற நல்ல குரல்வளம் மிக்கவர், அவர் பாடிய கன்னடத் தத்துப்பாடல்கள் கண்ணதாசன் பாடல்கள் போன்று வரவேற்பை பெற்று இன்றும் போற்றப்படுகின்றன. அதுமட்டுமின்றி அவருடைய கன்னட பக்திப்பாடல்கள் மிகவும் பக்திரசத்துடன் பரவசம் செறிந்து காலத்தால் அழியாதவைகளாகவே கருதப்படுகிறது. அவர் எஸ்பி பாலசுப்ரமணியம் நடித்த சில கன்னடப் படங்களுக்கு அவருக்காக இரவல் குரல் கொடுத்திருக்கிறார் என்று தெரிய வருவதன் மூலம் அவருடைய குரல்வளத்தை அறியலாம். நடிகர் ரஜினிகாந்த் பெரிதும் மதிக்கும் கன்னடர்களில் ராஜ் குமார் அவருக்கு எல்லாவிதத்திலும் சிறந்த குருவாக திகழ்ந்தார்.

திரை உலகத்தை விட்டு ஓய்வு பெற்ற நிலையில் வீரப்பன் பிடியில் 108 நாட்கள் இருந்ததவுடன், அவருக்கு புகழ் மீண்டும் கூடியது. அந்த சமயத்தில் உணர்ச்சி பெருக்கான ரசிகர்களை ஓரளவிற்கு கட்டுப்படுத்தினார். சமீபத்தில் மெட்டிஒலி தொடரைப் மிகவும் பாராட்டி திருமுருகன் குழுவினருடன் புகைப்படும் எடுத்துக் கொண்டார்..

மொழிபற்று என்பதை விடுத்துப் பார்த்தால் அவர் சிறந்த மனிதர், தமிழ் மொழிப்பற்று நமக்கும் இருக்கிறது அது அவசியமானது கூட. முன்று மகன்களையும் தன் வாரிசாக திரைஉலகுக்கே விட்டுச் சென்றுள்ளார். ராஜ்குமார் கன்னட திரை உலகின் மாபெரும் சகாப்தம். அவர் சிவாஜி கனேசனின் மிகச்சிறந்த நண்பராகவும் விளங்கினார்.

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

அவர் குடும்பத்தினருக்கு மனமார்ந்த அனுதாபங்கள்.

ஆமாம், சோகம் சரி.

கலவரம் எதுக்கு?

அடுத்தவன் சொத்தை அழிச்சா அவர் ஆத்மா சாந்தி அடையுமா?

மகேஸ் சொன்னது…

அவரின் குடும்பத்தினருக்கும்,ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

//முன்று மகன்களையும் தன் வாரிசாக திரைஉலகுக்கே விட்டுச் சென்றுள்ளார்//

மூனுபேரும் பாக்க திருட வந்தவிங்க மாதிரியில்ல இருக்காங்க. ;-)

TBCD சொன்னது…

பெங்களூர் செய்தி எல்லாம் வருதே..பழைய பாசமா..

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
பெங்களூர் செய்தி எல்லாம் வருதே..பழைய பாசமா..
//

அஸ்டே !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்