பின்பற்றுபவர்கள்

17 ஏப்ரல், 2006

ஒரு கடைசி தேர்தலும் ஒரு அனாதை பிரசாரமும்

கடந்த 2001ல் எதிர்கட்சியின் கூட்டணி பலத்தைப் பார்த்து நடுங்கியபடி, கருணாநிதி இதுதான் என் கடைசி தேர்தல் என்ற ஒரு பரிதாப தோற்றத்தை ஏற்படுத்த முயன்று முடிவில் அவரது கட்சி வீழ்ந்தது. 2001ல் மதிமுக பிரித்த ஓட்டுக்களும், காங்கிரஸ் கூட்டணி ஓட்டுக்களும் அப்போது ஜெயலலிதாவிற்கு அமோக வெற்றி ஏற்படுத்திக் கொடுத்தது. இது தனது தனிப்பட்ட வெற்றி என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும் ஜெயலலிதாவிற்கு இந்த தேர்தலில் தனக்கு எந்த ஒரு பலமும் இல்லை என்பது நன்றாக தெரியும்.

கதவு திறந்தே இருக்கிறது என்று தன் கட்சி காற்றுவாங்குவதை அவரே வெளிச்சம் போட்டு காட்டினார். அவரது தந்திரத்தில் மயங்கிய ம.தி.மு.க கூட்டணியால் அவருக்கு எந்த பயனும் இல்லை என்று உளவு துறையால் தெரியவருவதால் மிகவும் ஜெயலலிதா சோர்ந்து போய்விட்டார். அதற்கு மேலும் அடி கொடுப்பது போலவே, கருணாநிதியின் இலவச மேளாக்கள் பெரும் வரவேற்பைப் பெற, ஜெ வின் நிரந்த முதல்வர் கனவு கிட்டத்தட்ட முடியக் கூடிய நிலைக்கு வந்துவிட்டது.

2001ல் கருணாநிதிக்கு ஏற்பட்ட அதே பயம் இப்பொழுது ஜெ.வுக்கு வந்துவிட்டதால், தான் அனாதை என்றும் தான் தமிழக மக்களையே நம்பி இருப்பதாகவும் பரிதாபத்தை பெற முயற்சிப்பதைப் பார்க்கும் போது நமக்கு 'உச்' கொட்ட தோன்றுகிறது. அன்று கருணாநிதி ஒரு பல்லவியை பாடி தனக்கு வயதாகிவிட்டதாகவும், இதுவே தனது கடைசி தேர்தல் என்றும் கூறி அனுதாபம் பெறமுயன்றார். இந்த முறை கூட்டணி கட்சிகளின் பலம் இருப்பதால், அந்த பல்லவியை மறந்தும் போனார். பாவம் ஜெயலலிதா, ஒரு பக்கம் நடிகர் கார்த்திக் தேவரின ஓட்டுகளை பிரிக்கும் நிலையில் இருக்க, தன் பங்குக்கு விஜய காந்த் மதிமுகவின் தெலுங்கர் ஓட்டுகளையே குறிவைக்க தென்மாவட்டங்களில் அதிமுக கூட்டனி ஆட்டம் கண்டுள்ளதை தேர்தல் கவணிப்பாளர்கள் உணர்ந்துள்ளனர். இவற்றை உறுதி செய்வதாகவே ஜெயலலிதாவின் அனாதை பிரச்சாரமும் அமைந்திருக்கிறது.

இந்த தேர்தலை தனக்கும் கட்சிக்கும் சாதகமாக்கி கொண்டவர்கள் யாரென்றால் அது திருமாவளவன் தரப்பும், டாக்டர் தரப்பும் தான். கருணாநிதியினால் தனித்து ஆட்சி அமைக்க கூடிய சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. மாம்பழம் பழுத்தாலோ, 'கை' தூக்கிவிட்டலோ தான் திமுக ஆட்சி அமைக்க முடியும். ஒரு வேளை இழுபறி என்றால் டாக்டர் தரப்பு, அம்மாவிடம் துணை முதல்வர் பதவி கேட்டு கிடுக்கிபிடி போட்டு அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கும். கூர்ந்து கவணித்தால் அதிமுக, பாமகவையோ, பாமக அதிமுகவையோ அதிகம் அட்டாக் செய்வதில்லை என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் அதிமுக, பாமகவிற்கு எதிராக ஒரே ஒரு இடத்தை மட்டும் வி.சி கட்சிக்கு கொடுத்து பா.ம.கவிற்கு மறைமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//கூர்ந்து கவணித்தால் அதிமுக, பாமகவையோ, பாமக அதிமுகவையோ அதிகம் அட்டாக் செய்வதில்லை என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் அதிமுக, பாமகவிற்கு எதிராக ஒரே ஒரு இடத்தை மட்டும் வி.சி கட்சிக்கு கொடுத்து பா.ம.கவிற்கு மறைமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது //

அடேங்கப்பா! செம மேட்டருதான்! :-)

TBCD சொன்னது…

உங்களோட பெரிய காமெடி அண்ணாச்சி,

கார்த்திக் பின்னாடி அவங்க வீட்டுக்கார அம்மாவே நிக்கிறதில்லையாம்..

இது கார்த்திக் ஓட்டைப் பிரிக்கிறார் என்றுச் சொன்னால், காவல்துறை அவரைக் கைது பண்ணிடுவாங்கா..

///
ஒரு பக்கம் நடிகர் கார்த்திக் தேவரின ஓட்டுகளை பிரிக்கும் நிலையில் இருக்க
///

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
உங்களோட பெரிய காமெடி அண்ணாச்சி,

கார்த்திக் பின்னாடி அவங்க வீட்டுக்கார அம்மாவே நிக்கிறதில்லையாம்..

இது கார்த்திக் ஓட்டைப் பிரிக்கிறார் என்றுச் சொன்னால், காவல்துறை அவரைக் கைது பண்ணிடுவாங்கா..

//

நடிக்க வாய்ப்பில்லாததால் 'ஓடு' பிரிக்கிறார் என்று சொல்ல வந்தேன்.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்