பின்பற்றுபவர்கள்

22 ஜூலை, 2013

'சாதி'க்கலாம் வாங்க !

எப்படி இருந்த தமிழ் மணம் எப்படி ஆகிவிட்டது ? சாதி / மதம் சார்ந்த பதிவுகளை எழுதுவது தமிழ்மணம் விதிகளுக்கு முரணானது......ஆனால்.....வஹாபிகள் தங்கள் இடுகைகளில் மதம்சார்ந்து 9ம், 10 ஆவது வேற எதாவது எழுதி விலக்கு பெற்றுவிட்டார்கள், நம்ம 'ப..சுமை பக்கம் அருளாரும் மாற்றி மாற்றி எழுதி நான் சாதி சார்ந்து (மட்டுமே) எழுதுவதில்லைன்னு சத்தியம் செய்துவிடுவார்.

ஆனால் பச்சையாகவே சாதிப் பெயர் தாங்கி பதிவுகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

வன்னியர்களின் சாதிவெறிக்கு எதிரான வன்னியர்கள் !

இன்னும் ஒரு மாதம் சென்றால் இப்படியெல்லாம் வலைப் பதிவு தலைப்பு வைத்து பதிவு வருமோ ?
சாதிவெறி பார்பனர்களின் சாதிவெறிக்கு எதிரான நல்ல பார்பனர்கள் !
செட்டியாரின் சாதிவெறிக்கு எதிரான செட்டியார்கள் !
தேவர்களின் சாதிவெறிக்கு எதிராக தேவர்கள் !
கவுண்டர்களின் சாதிவெறிக்கு எதிராக கவுண்டர்கள் !
முதலியார்களின் சாதிவெறிக்கு எதிராக முதலியார்கள் !
சாதிவெறி பிள்ளைமார்களுக்கு எதிராக நல்ல பிள்ளைமார்கள் !
.
.
.
இந்துக்களின் மதவெறிக்கு எதிராக இந்துக்கள் !
இஸ்லாமியர்களின் மதவெறிக்கு எதிராக இஸ்லாமியர்கள் !
கிறித்துவர்களின் மதவெறிக்கு எதிராக கிறித்துவர்கள் !

இதையெல்லாம் நாம படிச்சி, அதை சூடான இடுகையாகவும் ஆக்கி எவ்வளவு தமிழ் சேவை செய்கிறோம்..........!

சாதி சங்கம் நடத்தவும், விளம்பரம் செய்யவும், முகநூல் இருக்கு, ஏன் வலைப்பதிவிலேயே கூட செய்யலாம், அதையெல்லாம் நூல்குறி (புக்மார்க்) செய்து விரும்பியவர்கள் படிக்கட்டும், ஆனால் பலரும் எட்டிப் பார்க்கும் திரட்டிகளில் இவை வருவது......எழுதும் ஆசையில் எழுதவருபவர்களுக்கு 'இதைத்தான் வலைப்பதிவில் எழுதுறானுங்களா ?' ன்னு நினைத்து தலை தெறிக்க ஓடமாட்டார்களா ?

11 கருத்துகள்:

தருமி சொன்னது…

இக்கருத்தை ஒட்டி ஒரு மயிலை தமிழ்மண அட்மின்னுக்கு அனுப்பினேன். சீண்டவில்லை அவர்கள்! அவ்வளவுதான் நமக்குள்ள மரியாதைன்னு நினச்சிக்கிட்டேன் ...

காமக்கிழத்தன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
காமக்கிழத்தன் சொன்னது…

தான் ‘இன்ன’ ஜாதி என்று சொல்லிக்கொண்டு, ”ஜாதியை ஒழிக்கப் போகிறேன்” என்பது கேட்பவரை முட்டாள் ஆக்கும் செயல்.

ப.கந்தசாமி சொன்னது…

//கவுண்டர்களின் சாதிவெறிக்கு எதிராக கவுண்டர்கள்!//

இந்தத் தலைப்புல எழுத எனக்குத்தான் முழு உரிமை இருக்கு. இப்பவே தலைப்பை ரிஜிஸ்டர் செய்துக்கறேன்.

பெயரில்லா சொன்னது…

அன்புள்ள நண்பருக்கு,

நீங்கள் எங்களை தவறாக புரிந்து கொண்டீர்கள் என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். சாதியை தூக்கிப் பிடிக்க நிச்சயமாக நாங்கள் இதனை தொடங்க வில்லை. தற்போதைய சூழலில் வன்னியர்களுக்கும், தலித்களுக்கும் மோதல் நடந்து வரும் சூழலில், அப்படியான மோதலை தூண்டி விட்டு வன்னியர் சங்கம், பாமக போன்ற அமைப்புகள் சாதிவெறியை தூண்டும் சூழலில், ஒட்டுமொத்த வன்னியர் சமூகமும் சாதிவெறியர்களாக பார்க்கப்படும் சூழலில் அந்த சமுதாயத்திற்குள் இருந்து நாங்கள் சாதிவெறியை எதிர்க்கிறோம். அதற்கான அடையாளமாகவே "வன்னியர்: என்பதை பயன்படுத்துகிறோம். நிச்சயமாக நாங்கள் சாதிவெறியை தூக்கிப் பிடிக்க முனையவில்லை என்பதை கூறுகிறோம்.

எங்கள் தளத்தில் எழுதப்பட்டுள்ள பலக் கட்டுரைகள் சாதிவெறியை தூக்கிப் பிடிக்கும் கட்டுரைகள் அல்ல. மாறாக சாதிவெறியை எதிர்க்கும் கட்டுரைகள் என்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். முகநூலில் எங்கள் நோக்கம் சரியாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நிறைய நண்பர்கள் எங்களை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள் - https://www.facebook.com/pages/Vanniyarsagainstcasteism/175698392604888?hc_location=timeline

ஒரு புறம் முகநூலில் வன்னியர்களின் எதிர்ப்பினை நாங்கள் சந்தித்து வருகிறோம். மற்றொரு புறம் உங்களைப் போன்றவர்கள் இவ்வாறு எழுதும் பொழுது எங்களுடைய முயற்சியில் ஏற்கனவே தொய்வடைந்திருக்கிற நாங்கள் மேலும் தொய்வு அடைவோம். எனவே எங்களுடைய அனைத்துக் கட்டுரைகளையும் வாசியுங்கள் அதன் பிறகு எங்களுடைய நோக்கம் உங்களுக்கு புரியும்.

எங்களுடைய அறிமுக கட்டுரை இங்கே தருகிறோம்....

நாங்கள் சாதி அமைப்பை முழுவதுமாக வெறுக்கிறோம். மனிதருக்குள் உயிர்வு தாழ்வு கற்பிக்கும் சாதீய அமைப்பினை எதிர்ப்பதே எங்களுடைய குறிக்கோள்.

அதே நேரத்தில் பாமக ராமதாஸ் சாதி வெறிக் கும்பலை பிற சாதியினர் எதிர்ப்பதை விட வன்னியர்கள் அதிகளவில் எதிர்க்க வேண்டியது அவசியம். வன்னியர்கள் ராமதாசை புறக்கணிப்பதே வன்னியர்களை சாதிவெறி பிடியில் இருந்து வெளியேற்றும். அந்த நோக்கத்தினுடனே "சாதிவெறிக்கு எதிரான வன்னியர்கள்" என்ற இந்த இணையக் குழுமத்தை முகநூலில் (பேஸ்புக்) தொடங்கியிருக்கிறோம்.

இங்கே "வன்னியர்கள்" என்பது பாமகவின் சாதிவெறிக்கு எதிரான அடையாளப்பூர்வமான அணி திரட்டுதலே தவிர சாதி ரீதியிலாக அணிதிரள்வது அல்ல. சாதியைத் தூக்கிப் பிடிக்க நிச்சயமாக நாங்கள் இதனை தொடங்கவில்லை.

சாதிவெறியை எதிர்க்கும் அனைவரையும் எங்களது முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

நன்றி...

பெயரில்லா சொன்னது…

//
தான் ‘இன்ன’ ஜாதி என்று சொல்லிக்கொண்டு, ”ஜாதியை ஒழிக்கப் போகிறேன்” என்பது கேட்பவரை முட்டாள் ஆக்கும் செயல்.
//

வன்னியர்கள் எல்லோரும் எங்கள் பின் நிற்கிறார்கள் என்று "சிலர்" சொல்லும் பொழுது, வன்னியர்கள் எல்லோரும் தலித்களை எதிர்க்கிறார்கள் என்று சொல்லும் பொழுது, அப்படி இல்லை நாங்களும் வன்னியர்கள் தான். ஆனால் நாங்கள் தலித்களை எங்கள் சகோதரர்களாக பார்க்கிறோம், இளவரசன் - திவ்யா காதலையொட்டி சாதிவெறியர்கள் நடத்திய சாதீய வெறியாட்டத்தை எதிர்க்கிறோம், தலித்களுக்கும் வன்னியர்களுக்கும் இடையே இணக்கத்தை வேண்டுகிறோம் என்பது சொல்வது ஜாதியை வளர்ப்பது என்று எப்படி புரிந்து கொள்கிறீர்கள் ?

நாங்கள் எழுதியக் கட்டுரைகளை தயவு செய்து முழுமையாக வாசித்து விட்டு பிறகு முடிவுக்கு வாருங்கள்

தயவு செய்து புரளிகளைக் கிளப்பி விடாதீர்கள்.

காமக்கிழத்தான் என்ற உங்கள் பெயரை வேறு யாராவது தவறாக புரிந்து கொண்டால் எப்படியிருக்கும் ?

பெயரில்லா சொன்னது…

இறுதியாக ஒரு விசயத்தை தெரிவிக்க விரும்புகிறோம். எங்களுடைய நோக்கத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. என்றாலும் எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்பது சாத்தியமில்லை.

முடிந்தவரைக்கும் எங்கள் நோக்கங்களில் தெளிவாக இருக்கிறோம்.

Sify இணையத்தளத்தில் வெளியான எங்களது அமைப்பின் பேட்டியிலும் இதனை தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

We have just begun and we have a long way to go. Whenever you start something there will always be some who doubt you. We are trying to be positive in both our actions and our attitude. Our immediate goal is to raise awareness. We are planning a number of ground level initiatives as well, and we would be glad to take on volunteers. Just get on to our Facebook page and post.

நன்றி...

காமக்கிழத்தன் சொன்னது…

//காமக்கிழத்தன் என்ற உங்கள் பெயரை வேறு யாராவது தவறாகப் புரிந்துகொண்டால் எப்படியிருக்கும்...//

நான் தனி மனிதன். என்னை யார் எப்படிப் புரிந்துகொண்டாலும் எவருக்கும் எந்தவிதப் பாதிப்பும் இல்லை.[போலியான பெயரில் ஒளிந்துகொண்டிருக்கிறேன்]

’கிழத்தன்’ என்பது ’தலைவன்’, ‘உரிமையாளன்’என்னும் பொருள் தரும் சொல். ’காம உணர்ச்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்று விளக்கமும் தரலாம். இந்த ஆராய்ச்சி இங்கு தேவையற்றது.

“வன்னியர்கள் எல்லோரும் எங்கள் பின் நிற்கிறார்கள்; தலித்களை எதிர்க்கிறார்கள்” என்று ‘சிலர்’ சொல்வதாகச் சொல்கிறீர்கள். அது உண்மையாயின் அவர்கள் சிறுபான்மையினர்தானே?

சிலர்தானே?

அந்தச் சிலர் சொல்வது தவறு என்பதைப் புரிய வைக்கச் சில ’பதிவுகள்’ போட்டால் போதாதா?

உங்கள் வலைப்பதிவின் தலைப்பு, இது ஒரு ’இயக்கம்’ என்றல்லவா நினைக்க வைக்கிறது.

உங்கள் எதிர்ப்பின் காரணமாக, அந்தச் சிலர், இனியும் இப்படிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டால், நீங்கள் தொடர்ந்து பதிவிடுவதும் தேவையற்றுப் போகும்.

சரிதானே?

உங்கள் வலைப்பதிவிற்கு [ஜாதி வெறி வன்னியர்களுக்கு எதிரான வன்னியர்கள்]வேறு தலைப்பு வைத்துக்கொள்ளலாம்.

சரிதானே?

நல்ல நோக்கத்துடன் வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறீர்கள். அதை முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்; மனப்பூர்வமாய்ப் பாராட்டுகிறேன்.

தலைப்பு மட்டுமே உறுத்துகிறது!

உங்கள் நோக்கத்தைக் கொச்சைப்படுத்தும் எண்ணம் எனக்குக் கொஞ்சமும் இல்லை. நம்புங்கள்.

உங்கள் ஜாதி என்றில்லை, எந்த ஜாதியாக இருந்தாலும், தீய நோக்கங்களுடன் செயல்படும் வெறியர்கள் எதிர்க்கப்பட வேண்டும்; ஒதுக்கப்பட வேண்டும்.

பண்பாடு பிறழாமல் விளக்கம் தந்திருக்கிறீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

சில காரணங்களால், என் உண்மைப் பெயரையே வெளியிடாமல், பொய்ப் பெயரில் எழுதுபவன் நான். பிரபலம் ஆகும் எண்ணத்துடன் என் கருத்தை வெளியிடவில்லை.

நான் புரளி கிளப்புவதாகத் தாங்கள் குறிப்பிட்டிருப்பது சரியல்ல என்பதை மீண்டும் யோசித்தால் புரிந்து கொள்வீர்கள்.

சாதிப் பூசல்கள் அறவே களையப்பட்டு, மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ, தொடர்ந்து எழுதுங்கள்.

தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

என் கருத்துகளுக்கு இடமளித்த நண்பர் கோவி. கண்ணனுக்கு என் நன்றி.




பெயரில்லா சொன்னது…

//
நல்ல நோக்கத்துடன் வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறீர்கள். அதை முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்; மனப்பூர்வமாய்ப் பாராட்டுகிறேன்.

தலைப்பு மட்டுமே உறுத்துகிறது!
//

அன்புள்ள நண்பருக்கு,

எங்கள் நோக்கத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி. ஆனால் தலைப்பு உறுத்துகிறது என்ற உங்களுடைய கருத்தில் இருந்து நாங்கள் மாறுபடுகிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சி என்று ஒட்டுமொத்த பாட்டாளிகளின் கட்சி என்று பெயர் வைத்து விட்டு சாதிவெறியை வளர்ப்பது, திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் வைத்து விட்டு குடும்பத்தை முன்னேற்றுவது, பாரதீய ஜனதா கட்சி என பெயர் வைத்து விட்டு இந்துத்துவா வளர்ப்பது என தலைப்புக்கும் செய்யும் காரியத்திற்கும் வேறுபடும் அமைப்புகள் தான் நம் நாட்டில் உள்ளன.

அப்படி இல்லாமல் நாங்கள் சாதியால் வன்னியர்கள். ஆனால் எங்கள் சாதியில் நடக்கும் சாதிவெறியை எதிர்க்கிறோம் என்பது அடிப்படையில் நேர்மையான ஒன்று என்பது எங்களுடைய தாழ்மையான கருத்து. தலைப்பை விட செய்யும் காரியத்தை கவனியுங்கள். செய்யும் காரியத்தில் விமர்சனம் இருந்தால் சொல்லுங்கள். கேட்க கடமைப்பட்டிருக்கிறோம்.

நாங்கள் சாதியை ஒழிக்க கிளம்பிய போராளிகள் அல்ல. பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் செய்ய முடியாததையா நாங்கள் செய்யப் போகிறோம்.

சாதிவெறியை எதிர்க்கிறோம். சமூக அமைதியை நாடுகிறோம். அது மட்டுமே எங்களது முயற்சி

நன்றி...

வேகநரி சொன்னது…

இஸ்லாமியர்களின் மதவெறிக்கு எதிரான இஸ்லாமியர்கள் குறைந்தளவில் என்றாலும் இருந்தார்கள். இருக்க வேண்டும். மனித விரோதிகள் தலிபானின் கொடூரத்தைபற்றி உண்மையின் சிறு பகுதி விஷ்பரூபம் திரைபடத்தில்சொல்லபட்டதிற்காக இஸ்லாமியர் மதவெறியர்கள் போர் கொடி தூக்கினார்கள். அதற்கு எதிராக நல்ல இஸ்லாமியர்களும் இருந்தார்கள். அதே போல் ஜாதி வெறியர்களுக்கெதிராக நல்லவர்கள் இருக்கலாம். ஜாதி கற்பனைக்கு எதிரான Vanniyars Against Casteism நண்பர்களுக்கு பாராட்டுகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் எங்களை தவறாக புரிந்து கொண்டீர்கள் என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். //

சாதிகள் புதிய கண்டுபிடிப்பு அல்ல ஏற்கனவே இருந்து தொலைவதால் திருமணம் மற்றும் பிற சடங்குகள் சாதிக்கு ஏற்றவாறு இருந்துவந்துள்ளது, குலதெய்வம் உள்ளிட்டவை சாதி சார்ந்தவையாக இருப்பதால், சாதி என்பது திருமண உறவு என்பதைத் தாண்டி பொது இடத்தில் அவிழ்த்து தாம் இந்த சாதி என்று தம்பட்டம் அடிக்கத் தேவை இல்லை.

தாழ்ந்த சாதிக்காரன் அறுத்த நெல்லையும், கரந்த பாலையும் நாங்கள் பயன்படுத்தமாட்டோம் என்று ஒரு சாதிக்காரப் பயலும் சொல்வதில்லை, வக்கனையாக வாங்கித் திங்கிறார்கள்.

நான் இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றேன், என் சாதிக்கு நான் கடமைபட்டு இருக்கிறேன், என்போர் அந்தந்த சாதி அமைப்புகளில் உள்ள ஏழை எளியவருக்கு உதவலாம், மற்றோருக்கு உதவலாம், இதைத் தாண்டி பொது இடத்தில் சாதிப்பற்றை வெளிப்படுத்துவதும், ஒட்டுமொத்தமாக தூற்றுகிறார்கள் என்று புலம்புவதும் பொருளற்றது.

100 பேர் வசிக்கும் கிராமத்தில் 4 பேர் திருடனாக இருந்து, அக்கம் பக்கம் கிராமங்களில் கொள்ளையடித்து வந்தால் கொள்ளையர்கள் இருக்கும் ஊரைக் கொள்ளைக்கார கிராமம் என்று தான் சொல்லுவார்கள், அந்த அவப் பெயர் வேண்டாம் என்போர் கொள்ளைக்காரர்களை வெளியேற்றனும், அதைவிட்டு ஒட்டுமொத்தமாக குறை சொல்கிறார்கள் என்றால், சாதி / மத வெறியை குறிப்பிட்ட சாதி / மதப் பெயரைக் சொல்லாமல் கண்டிப்பது எப்படி என்று பாடம் நடத்துங்கள்.

தமிழகத்தில் பொது இடத்தில் சாதியை வெளிப்படுத்திக் கொள்பவர்கள் எத்தனை பேர், ஒவ்வொரு சாதிக்காரனுக்காகவும் அந்ததந்த சாதிக்காரனும் வக்காலத்து வாங்கி அல்லது எங்களை மொத்தமாக சொல்லாதீர்கள் என்றால். எல்லோருமே சாதிவெறியர்களாகத்தான் உலாவருவார்கள். சாதிபற்று மதப்பற்று இவையெல்லாம் வீட்டைத் தாண்டி வெளியே வந்தால் விமர்சிக்கப்படும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்