பூனையாரை கண்டு கொண்டு மாதங்கள் கடந்துவிட்டன, பூனையார் அமைதியானவர் கோபப்படமாட்டார் என்று அலட்சியம் செய்து கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன், பூனையாரின் பரம விசிறிகள் பூனையாரின் தத்துவ மொழிகளைக் கேட்காமல் எங்களுக்கு வாழ்க்கை வரண்டுவிட்டது என்று கதறிக் கதறி என்னிடம் கேட்டதால், பூனையாரை நினைத்து கண்ணை மூடி அமர்ந்தேன், சில நிமிடங்களில் பூனையார் கண் முன் தோன்றினார்.
'அன்பரே என்ன வரம் வேண்டும், எதற்கான என்னை நினைத்தாய்' என்று அமைதியே வடிவாகக் கேட்டார்.
'எகிப்திய தெய்வமே ஏகாதிபத்திய இறைவா, தங்களை இதுகாறும் நினைக்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும்' என்றேன்.
'நீ என்னை நினைப்பதாலோ, நினைக்காமல் இருப்பதாலோ எனக்கு நட்டம் எதுவுமில்லை எனவே மன்னிக்க ஒன்றும் இல்லை அன்பரே' என்றார் பூனையார்
'பூனையாரே எனக்கு சில ஐயங்களை அதனை கேட்டுத் தெளிவுறலாம் என்றே தாங்களை நினைத்தேன், மேலும் பூனையார் பக்தர்களுக்கும் அதே ஐயங்கள் இருக்கின்றன' பூனையாரை கூர்ந்து நோக்கிக் கூச்சத்துடன் கேட்டேன்
'நீ எதற்கு கூச்சப்படுகிறாய், என்னிடம் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் கூச்சங்கள் தேவையற்றது எதுவேண்டுமானாலும் தயங்காமல் கேள்' என்றார்
'பூனையாரே... மேதகு கடவுளே தாங்கள் தத்துவங்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கி நமது மார்க்கத்திற்கு மார்க்க நூலாக ஆக்கலாம் என்று பக்தர்கள் எல்லோரும் முடிவு செய்துள்ளோம், அதற்கு தங்கள் அனுமதி வேண்டி.....'என்று நோக்க,,,,,,,,பூனையார் சங்கடத்தால் நெளிந்தார், கோபம் வருவது போல் இருந்தது......ஆனால் அமைதியாக என்னை உற்று நோக்கினார், நான் நடுங்கியபடி
'நான் ஒன்றும் தவறாகக் கேட்கவில்லையே உலக மதங்கள் அனைத்திலும் உள்ள நடைமுறை தானே ?' என்றேன்
'அவ்வாறான நடைமுறைகள் இருக்கலாம், ஆனால் அது பல எதிர்கால சிக்கல்களை ஏற்படுத்தும்....'
'எதிர்காலத்தில் அனைவருக்கும் புரியும் வண்ணம் நூலாக்கி வைப்பது நமது மார்க்கத்திற்கு நல்லதல்லவா ?'
'இப்ப பிரச்சனையே மத நூல்கள் தான் என்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்கிறாயே மானிடா ?'
'நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால் நடைமுறைகளை மாற்றுவது நமக்கும் நல்லது இல்லையே ?'
'ஏன் இல்லை, நம்மை பின்பற்றுவோரின் உடல் பொருள் ஆவி எல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டுமென்றால் நூல் பற்றிய யோசனைகளை கைவிடு, 6000 ஆண்டுகளாக இருந்துவரும் நம் மார்க்கம் சேதப்படாமல் இருப்பதற்கு நம்மிடையே எந்த நூலும் இல்லை என்பதே காரணம், அப்படி இருந்தால் மாற்று மதத்தினரால் நம் மத நூல்கள் கொளுத்தப்படலாம், கலவரம் வரும்.........அது தவிர....'
சொல்லுங்கள் சொல்லுங்கள்
'நமது மார்க்கத்திலேயே பூனையாரின் நூல் சொல்வதைத்தான் செய்வோம், என்று அடம்பிடித்து அடிப்படைவாதிகள் தோன்றிவிடுவார்கள், பிறகு உலக மக்களின் அச்சுறுத்தலாக நமது மார்க்கத்தினரும் கூட அமைந்துவிடுவார்கள். ஒரு 1000 ஆண்டு சென்று நமது நூலை வைத்து எழும் சச்சரவுகளில் பலர் கொல்லப்பட நேரிடும், நூலும் வேண்டாம்.......எழுதுகோலும் வேண்டாம்' என்று ஆவேசமாக கூறிவிட்டு சற்று அமைதியானார் பூனையார்.
'இந்த மரமண்டைக்கு விளங்காமல் போய்விட்டது மன்னியுங்கள் பூனையாரே,,,,,,,'என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டேன், அதான் பூனையாருக்கு மன்னிப்பு கேட்பதும் கொடுப்பதும் வழக்கமில்லையே.
'பூனையாரே இன்னொரு ஐயம்.......'
'சும்மா கேளு கேளு 'என்றார்
நமது மார்க்கத்திலேயே பிரிவுகள் தோன்றிவிட்டதாக வெளியுலகில் பேசிக் கொள்கிறார்களே
'உண்மை தான், நான் எகிப்தியர்களுக்கு சொன்ன சில வாக்கியங்கள் தத்துவங்களை மட்டுமே எடுத்து வைத்துக் கொன்டு சிலர் பிரிவாக ஆகிவிட்டனர்..,'
'யார் அவர்கள் ?'
'அவர்கள் தான் வரகாப்பி இயக்கம்.........'
'என்ன பூனையாரே என்னென்னவோ புரியாதபடி சொல்கிறீர்கள்'
இதில் புரியாமல் இருக்க ஒன்றும் இல்லை, தமிழில் தான் அந்த பெயர் இருக்கிறது, பால் சேர்க்காத காப்பி வரகாப்பி.......அந்த அடிப்படை வரகாப்பி வாதிகளுக்கு காப்பியில் பால் சேர்ப்பது பிடிக்காது..... எகிப்திய காலத்தில் இல்லாத பால்காப்பியை நாங்கள் பருக மாட்டோம் என்று கூறி எங்கு பால் காப்பி கடை இருந்தாலும், யாராவது காப்பியில் பால் கலந்தாலும் அங்கு சென்று கோஷமிடுகின்றனர், பூனையாருக்கே சொந்தமான புனித பாலை காப்பியில் சேர்க்காதே, வேண்டுமென்றால் பால் கலக்காத காப்பியை குடியுங்கள் என்று போராட்ட ரோதனை செய்கிறார்கள். நமது மார்க்கப் பிரிவான வரகாப்பி இயக்கத்தினரின் வேறு சில அடிப்படை வாதக் கொள்கைகள் சிலவற்றையும் கூறுகிறேன் கேள்...
'வேண்டாம்,,,,,,,,,வரகாப்பி இயக்கத்தினரின் பெயர் காரணம் பற்றிய தகவலே தலையில் அடித்துக் கொள்ள வைக்கிறது அதற்கு மேல் கேட்டால் எனக்கு இரத்த அழுத்தமே கூடிவிடும்.....நீங்கள் மலையேரலாம்' என்று கூறி கண்ணை மூடித் திறந்தேன்
பூனையாரை பிறகு காண முடியவில்லை
18 கருத்துகள்:
:))))
'ஏன் இல்லை, நம்மை பின்பற்றுவோரின் உடல் பொருள் ஆவி எல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டுமென்றால் நூல் பற்றிய யோசனைகளை கைவிடு, 6000 ஆண்டுகளாக இருந்துவரும் நம் மார்க்கம் சேதப்படாமல் இருப்பதற்கு நம்மிடையே எந்த நூலும் இல்லை என்பதே காரணம், அப்படி இருந்தால் மாற்று மதத்தினரால் நம் மத நூல்கள் கொளுத்தப்படலாம், கலவரம் வரும்.........அது தவிர....
பூனையாரின் கருத்து மிகச் சரி
தெளிவூட்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
//'நமது மார்க்கத்திலேயே பூனையாரின் நூல் சொல்வதைத்தான் செய்வோம், என்று (சிந்திக்கத்தெரியாமல்) அடம்பிடித்து அடிப்படைவாதிகள் தோன்றிவிடுவார்கள், பிறகு உலக மக்களின் அச்சுறுத்தலாக நமது மார்க்கத்தினரும் கூட அமைந்துவிடுவார்கள். ஒரு 1000 ஆண்டு சென்று நமது நூலை வைத்து எழும் சச்சரவுகளில் பலர் கொல்லப்பட நேரிடும், நூலும் வேண்டாம்.......எழுதுகோலும் வேண்டாம்' என்று ஆவேசமாக கூறிவிட்டு சற்று அமைதியானார் பூனையார்.//
அருமை
//'அவர்கள் தான் வரகாப்பி இயக்கம்.........//
ஹா ஹா
//இதில் புரியாமல் இருக்க ஒன்றும் இல்லை, தமிழில் தான் அந்த பெயர் இருக்கிறது, பால் சேர்க்காத காப்பி வரகாப்பி.......அந்த அடிப்படை வரகாப்பி வாதிகளுக்கு காப்பியில் பால் சேர்ப்பது பிடிக்காது..... எகிப்திய காலத்தில் இல்லாத பால்காப்பியை நாங்கள் பருக மாட்டோம் என்று கூறி எங்கு பால் காப்பி கடை இருந்தாலும், யாராவது காப்பியில் பால் கலந்தாலும் அங்கு சென்று கோஷமிடுகின்றனர், பூனையாருக்கே சொந்தமான புனித பாலை காப்பியில் சேர்க்காதே, வேண்டுமென்றால் பால் கலக்காத காப்பியை குடியுங்கள் என்று போராட்ட ரோதனை செய்கிறார்கள். நமது மார்க்கப் பிரிவான வரகாப்பி இயக்கத்தினரின் வேறு சில அடிப்படை வாதக் கொள்கைகள் சிலவற்றையும் கூறுகிறேன் கேள்...
///
அருமை அருமை....சிறப்பான சிந்தனை
சிரிப்பதற்கும் சிந்திப்பதற்க்குமான பதிவு (பூனையார் மார்க்கத்தின் நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல)
மிகவும் அருமையான பதிவு இறைதூதருக்கு மிக்க நன்றிகள்....தங்களுக்கு சுவனம் நிச்சயம் :)
அருமை .. அருமை .. எந்தை பூனையாருக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை .. அவனுக்கு இணையும் இல்லை துணையும் இல்லை .. ! அவனது சாயலிலேயே பூனைகள் படைக்கப்பட்டன.. பூனைகள் தும்மியதில் இருந்தே நாமும் உருவானோம் .. பூனையின் பாதம் படும் இடம் எல்லாம் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் .. மூளையற்ற மக்கள் பூனையை கண்டு அஞ்சி ஒழிவார்கள். மறுமை நாளில் அவர்களை எல்லாம் எமது பூனையார் பிராண்டியே நரகத்துக்கு தள்ளுவார்..
ஆமோன் !
இனிமேல் பூனையாரை அவமதித்து படங்களோ, திரைப்படங்களோ வெளியிட்டால் அந்தந்த நாட்டு தூதரகங்களை அடித்து நொறுக்குவோம் ..
~ பூனையார் சம்மேளனம், ஆர்ட்டிக் பிரிவு
பூனையாரின் அறிவுரை ஒவ்வொன்றும் தற்போதைய தேவை நானும் வரகாப்பி பிரிவு தான் உண்மையான பூனை மார்க்கம் என்று நினைத்து தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் புனித பாலை காப்பியில் சேர்ப்பதிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தேன். பூனையாரின் பொன் மொழிகளை தெரியபடுத்தி தெளிவை தந்தீர்கள் நன்றி.
வணக்கம் சகோ,
நாம் இறை மறுப்பாளர் என்றாலும் பூனையாரின் பூதமொழிகளை விரும்பாமல் இருக்க முடியவில்லை!!
முதலில் உறுதிமொழி
பூனைக்கு மிக்கார் எவருளர் பேரண்டத்தில்,
பூனைக்குட்டியே பூனையின் (இறுதி)வாரிசு!!!
பூனையாரின் வரக்காப்பி மார்க்கத்தின் மீதான விமர்சனம் கடவுளென இருந்தால் இவர் மட்டுமே உண்மை கடவுள் என்பதை ஐயந்திரிபர விளக்குகிறது.
பூனையார் தேநீர் குடித்ததாக ஒரு விஷமக்கார சுண்டெலி ஒன்று படம் எடுத்து இணையத்தில் பகிர அதனை வாய்ப்பாக் கொண்டு வரக்காப்பி இயக்கத்தினர் அன்பு,அமைதி வழியில் கிடைத்த கண்ணில் படும் எலி வளைகளை தாக்கி வருகிறார்கள்.
பூனையார் வரக்காப்பி ஆட்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கவும்!!.
நன்றி!!!
நல்ல அருமையான கற்பனை சகோ,
நீர் எம்மை இழிவு படுத்திவிட்டீர்!எப்படி எனக்கு உருவம் கொடுக்கலாம்? எதிர்காலத்தில் புலிக்குட்டியை காண்பித்து இதுதான் பூணையார் என என்னை ஏமாற்றி இணை,துணை கற்பித்துவிடுவார்களே!எனவே புலிக்குட்டிகள் எல்லாம் பூணையார்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. இணை வைப்போரில் நீயும் இணைந்துவிடாதே!
அற்ப மானிடர்களே கேளுங்கள்!நான் எலிகளை பிடித்து கால்களால் மிதித்து தண்டனை வழங்குபவன்! கால்கள் என என் உச்சரிப்பைக் கேட்டு அது கால்கள்தான் என தவறாக புரிந்து கொண்டுவிடுவார்கள் எனவே என் குட்டியை விளக்கம் கொடுப்பதற்காகவே அனுப்பி வைக்கிறேன். இதற்கு நன்றி செலுத்துவதற்காகவே நீங்கள் என்னையும் என் குட்டியையும் மட்டுமே வணங்க வேண்டும். போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள் வேறெங்கும் எங்களுக்கு கிளைகள் இல்லை! இதில் புரிந்து கொண்டோர்க்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன;சொரிந்து கொண்டோர்க்கு நிறைய சிரங்குகள் உள்ளன எச்சரிக்கை!!!!
இனியவன்...
இனியவன்...
உங்கள் பின்னூட்டத்தில் போதிய அடைப்புக் குறிகள் இல்லை, பயிற்சிப் போதாது, எனவே செல்லாது என்று சார்வாகனோ, இக்பால் செல்வனோ சொல்லக் கூடும்.
:)
எனக்கும் (வர)காஃபி ரொம்பவும் பிடிக்கும். (பசும்)பால் இல்லாத (வர)காஃபி அதன் மணத்தோடு குடித்தலே அலாதியானது. (பசும்)பால் இரவில்(படுக்கும் முன்) குடிப்பதும் எனது வழக்கம் என்பதை (கோவி கண்ணனுக்கு) சொல்லிக் கொள்(ல்)கிறேன். :-)))))))
சுவன்,
நீங்க வெறும் வகாபி என்றே நினைத்தேன், வரகாப்பியும் நீங்கள் தான் என்பதை அறிந்தேன்.
பூனையார் நாடினால் எல்லோரும் வரகாப்பி மார்க்கத்திற்கு திரும்பிவிடுவார்கள்.
//சகோ.கோ.வி
//உங்கள் பின்னூட்டத்தில் போதிய அடைப்புக் குறிகள் இல்லை, பயிற்சிப் போதாது, எனவே செல்லாது என்று சார்வாகனோ, இக்பால் செல்வனோ சொல்லக் கூடும்.//
இன்னும் போலியான அடைப்புக் குறிகள் இட்டு இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக போலியாக உருவாக்குபவர்களுக்கு பூணையார் பொறுப்பேற்க மாட்டார்,இருந்தாலும் அவர்களுக்கு வேதனை வரும்.... ஆனா வராது!!!!!!!!!! என்றே நினைக்கிறேன்!!!!என்று (நீர் கூறுவீராக....)
இனியவன்...
//சகோ.கோ.வி
//உங்கள் பின்னூட்டத்தில் போதிய அடைப்புக் குறிகள் இல்லை, பயிற்சிப் போதாது, எனவே செல்லாது என்று சார்வாகனோ, இக்பால் செல்வனோ சொல்லக் கூடும்.//
இன்னும் போலியான அடைப்புக் குறிகள் இட்டு இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக போலியாக உருவாக்குபவர்களுக்கு பூணையார் பொறுப்பேற்க மாட்டார்,இருந்தாலும் அவர்களுக்கு வேதனை வரும்.... ஆனா வராது!!!!!!!!!! என்றே நினைக்கிறேன்!!!!என்று (நீர் கூறுவீராக....)
இனியவன்...
கோவி(மறை தூதர்)
வவ்வாலார் மார்க்கத்தின் தூதர்(ஒரே மற்றும் இறுதி) ஆகிய நான் உங்களது மார்க்கம் எனது மார்க்கத்தினை விட பின்னால் உருவானது என சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், ஏன் எனில் வரக்காப்பி போடுவது எப்படி, ஹேங் ஓவர்(தலைகீழாக தொங்குதல்) வந்தால் சரி செய்வது எப்படி என அறிய(தொழில் நுட்ப) குறிப்பினை முன்னரே எனது பதிவில் இறக்கி வைத்துள்ளேன்.
சந்தேகம் இருந்தால் கொள்கை பரப்பாளர் இராச நடையரை கேட்கவும் ,அவரும் வரக்காப்பி அருமை என சொன்னார் :-))
எனக்கு எழுத(படிக்கவும்) தெரியாது ,இணையம்,கணினி இல்லை, எல்லாம் வவ்வாலாரின் அருளால் தானாக இறங்கியதை எனது தொண்டர்கள் இங்கு வெளியுட்டுள்ளார்கள் என்பதை அழுத்தமாக கூற விரும்புகிறேன்.(வரலாறு முக்கியம்)
//6000 ஆண்டுகளாக இருந்துவரும் நம் மார்க்கம் சேதப்படாமல் இருப்பதற்கு நம்மிடையே எந்த நூலும் இல்லை என்பதே காரணம், அப்படி இருந்தால் மாற்று மதத்தினரால் நம் மத நூல்கள் கொளுத்தப்படலாம், கலவரம் வரும்.....//.
//'நமது மார்க்கத்திலேயே பூனையாரின் நூல் சொல்வதைத்தான் செய்வோம், என்று அடம்பிடித்து அடிப்படைவாதிகள் தோன்றிவிடுவார்கள், பிறகு உலக மக்களின் அச்சுறுத்தலாக நமது மார்க்கத்தினரும் கூட அமைந்துவிடுவார்கள். ஒரு 1000 ஆண்டு சென்று நமது நூலை வைத்து எழும் சச்சரவுகளில் பலர் கொல்லப்பட நேரிடும், நூலும் வேண்டாம்.......எழுதுகோலும் வேண்டாம்' //இதுவும் ஒரு காரணம் கோவி.
எனது கருத்தும் இது தான்.
அருமையா சொன்னீங்க.
அமைதி மார்க்கத்திற்கு போட்டியாக எழுந்திருக்கும் இந்த பூனை மார்க்கம் யூதர்களின் சதியாகவே தெரிகிறது.
தாடிக்கரர்கள் தடி எடுத்து மீசைக்காரர்களை (பூனையாரின் மார்க்கத்தை) அடிக்க வருவாங்களோ? #அமெரிக்காவில் லிபிய தூதர் கற்பழித்து கொலை.
கருத்துரையிடுக